• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 17

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 17

"அப்பா தான் கோபமா இருக்கார்.. பார்த்துக்கலாம்.. அவருக்கு சொன்னாலும் புரியாது!" அபி சக்தியிடம் கூற,

"அத்தை மேனேஜ் பண்ணிப்பாங்க அபி.. நீ ஒர்ரி பண்ணிக்காத.. மாமா பத்தி தான் உனக்கு தெரியுமே! அப்பா கூட நான் சொல்லிடுறேன்னு சொன்னார்.. அதனால தான் வந்தோம்!" என்றாள் சக்தியும்.

அபியின் தந்தை கணேசன் மட்டும் தன்னிடம் மகன் சொல்லிவிட்டு செல்லவில்லை என்று கோபமாய் அலைபேசியில் பேசி இருக்க, கொஞ்சம் வருத்தம் தான் அபிக்கு.

செண்பகவல்லி, சீதா, சக்தி என பெண்களிடம் மட்டுமே கூறிக் கொண்டு வந்திருந்தனர் சக்தியும் அபியும்.

சக்தியின் தந்தை தியாகராஜன் புரிந்து கொள்பவர்.. கணேசநான் இவர்கள் கிளம்பும் நேரம் வீட்டில் இல்லை. தாங்கள் சொல்லிக் கொள்வதாய் சொல்லி இருந்தார் செண்பகவல்லியும்.

இப்போது போனில் அத்தனை பேச்சு கணேசன் அபியிடம். தன்னை மதிக்கவில்லை என்பதை போல பேசி இருக்க அதை தான் சக்தியிடம் கூறிக் கொண்டு இருந்தான் அபி.

பாதியில் அவர்கள் பேச்சைக் கேட்டபடி அந்த இரவில் மொட்டை மாடிக்கு வந்தாள் சுபத்ரா.

"என்னாச்சு? எதாவது பிரச்சனையா?" சுபத்ரா.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை.. வீட்டுல பேசிட்டு இருந்தோம்.." என்ற சக்தி,

"அப்புறம்! மது என்ன சொல்றா?" என்றாள்.

"மதுவா? அக்கா கூட அக்கா ரூம்ல இருக்கா.. பேசறா.. பேசிட்டே இருக்கா.. அக்காவும் கேட்டு சிரிச்சிட்டே இருக்கா.. சக்தி! நீங்க அவளுக்கு ஐஸ் கிரீம் வாங்கிட்டு நீங்களே சாப்பிட்டீங்களாமே? அதை எல்லாம் சொன்னா.. இன்னும் உங்களை பத்தின டாபிக் தான் போய்ட்டு இருக்கு" என்று சுபத்ரா புன்னகையோடு கூற,

"அய்யய்ய! அதெல்லாமா சொன்னா? அக்கா என்னை என்னனு நினைப்பாங்க.. வரட்டும் இருக்கு அவளுக்கு.. இன்னும் என்னவெல்லாம் சொல்லி வச்சாளோ!" சக்தி.

"நீங்க என்ன சைலன்ட்டா இருக்கீங்க?" சுபா அபியிடம் கேட்க,

"ம்ம்! இல்ல.. ஆதியை தான் யோசிச்சுட்டு இருக்கேன்.. அவன் என்ன நினைக்குறான்னே தெரிலயே! அதான்.. அவன் நினைச்சா எல்லாம் சரியாக வாய்ப்பு இருக்கு.. பட் வாயை திறக்கவே மாட்டுறான்!" என்றான் அபி.

"இட்ஸ் ஓகே! நீங்க சொல்றது புரியுது.. ஆனா தேவா இவ்வளவு பண்ணினதே பெரிய விஷயம்.. அதுவே போதும்.. இனியும் அவங்களை கஷ்டப்படுத்த விரும்பல.. அக்காவை நான் பார்த்துப்பேன்.. நீங்க வந்த மாதிரியே சந்தோசமா நாளைக்கு ஊருக்கு கிளம்புங்க..ம்ம்" என்று புன்னகையோடு சுபத்ரா கேட்டாலும் உள்ளுக்குள் வலிக்கத் தான் செய்தது.

"ஆமா எங்க ஆதியை?" சக்தி கேட்க,

"தேவாக்கு இங்க பிரண்ட்ஸ் அதிகம்.. வீட்டுல இருக்கவே மாட்டாங்க.. பிரண்ட்ஸ் கூட தான் எப்பவும் இருப்பாங்க.. மே பி அவங்களைத் தேடி தான் போயிருப்பாங்க நினைக்குறேன்!" என்றாள் சுபத்ரா.

"நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க..நீங்க ஆதியை இப்பவும் விரும்புறீங்க தானே?" அபி சுபத்ராவிடம் கேட்க, திடீர் கேள்வியில் மௌனமானாள் சுபத்ரா.

"இதென்ன டா கேள்வி.. வார்த்தைக்கு வார்த்தை தேவா தேவானு சொல்லும் போதே தெரிலையா? லவ் எல்லாம் எக்கச்சக்கமா இருக்கும்.. இல்ல?" என்றாள் கிண்டலாய் சக்தி.

"ப்ச்! சக்தி! ஐம் சீரியஸ்!" அபி.

"ஹேய்! நிஜமா தான் சொல்றேன் டா.. எங்க இல்லைனு அவங்களை சொல்ல சொல்லு!"

"ப்ளீஸ்!" அபி சக்தி இருவரும் வாக்குவாதம் போல தொடர அதை பாதியில் நிறுத்தி விட்டாள் சுபத்ரா.

"தேவாவும் மதுவும் எங்க இருந்தாலும் ஹாப்பியா இருக்கனும்.. அது போதும் எனக்கு.. சாரி! வேற எதுவும் கேட்க வேண்டாமே!" என்றவள் அங்கிருந்து சென்றுவிட,

"இப்ப எதுக்கு அவங்களை மூடவுட் பண்ணின?" என்றாள் சக்தி அபியிடம்.

"லூசா டி நீ? அவங்க மனசுல இன்னும் ஆதி இருந்தா?" அபி கேட்க,

"இருந்தா? இருந்தா என்ன?" என்றாள் சக்தி.

"சக்தி!" என்றவனுக்கு நேராய் கேட்கவும் தயக்கம்.

"ஏன் டா இப்படி முழிக்குற? நீ எனக்காக தானே கேட்ட?" என்றதும் அபி அவளை கேள்வியாய் பார்க்க,

"நான் ஆதியை விரும்புறேன்.. இப்பவும் தான்.. அதுக்காக லவ் பர்ட்ஸ் பிரிஞ்சு போக எல்லாம் நான் காரணமா இருக்க விரும்பலை.."

"என்ன சொல்ற நீ?"

"அபி! ஆதி சிங்கிள்னு தான் இவ்வளவு நாளும் நான் நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா கல்லுக்குள் ஈரம்னு அவன் மனசுல கூட ஒரு பொண்ணு இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சு.. சோ சேட்!"

"சக்தி!"

"ரொம்ப பீல் பண்ணாத! எனக்கும் கவலையா தான் இருந்துச்சு.. ஹ்ம்! அஃப்ட்ரால் ஒன் சைட் லவ்.. எனக்கே இவ்வளவு கஷ்டம்னா அவங்க ரெண்டு பேரும் இத்தனை வருஷத்துல எவ்வளவு மிஸ் பண்ணிருப்பாங்க? நினச்சு பாரேன்.."

"நீ என்ன சொல்ல வர்ற சக்தி? ஆதி இன்னும் சுபாவை விரும்புறான்னு நினைக்கிறியா?"

"இல்லைனு நீ நினைக்கிறியா? சார்க்கு டன் டன்னா லவ் இருக்கு.. என்ன கொஞ்சம் கெத்து காட்டுறார்.. அவங்க சேருறது தான் சரி!" என்றவள் முகம் சாதாரணமாய் இருந்தது என்று கூற முடியாமல் ஒரு வித உணர்வு அதில் தெரிய,

"சக்தி!" என்ற அபி அத்தனை தவித்தான் தன் சக்தியின் ஒருதலை காதலை எண்ணி இந்த ஒருதலை காதலன்.

"அட விடு அபி! முடிஞ்சா நாமே கூட அவங்களை சேர்த்து வைப்போம்.. டீல்?" என்றவள், அதற்கு மேல் அவன் முன் பொய்யாய் நிற்க முடியாமல்,

"நான் போய் மது சாப்பிடுறாளானு பாக்குறேன்!" என்று கூறி சென்றுவிட, அத்தனை புரிந்தது சக்தியை அபிக்கு.

அதற்காகவே சக்தியை ஆதியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்க, சுபாவை நினைத்தால் அதுவும் ஒரு கவலையாய் இருக்க, ஆதியிடமே பேசுவது என்ற முடிவுக்கு வந்தான்.

"நிறைய பேசுறா சுபா.. என்கிட்ட இவ்வளவு பேசுவானு நான் நினைக்கவே இல்லை.. அவளுக்கு கதை கேட்டுட்டே தூங்குறது தான் பிடிக்குமாம்.. ஆதி கதை சொல்லி பழகி இருக்கும் போல.. இந்த புண்ணெல்லாம் எப்படி வந்ததுன்னு கேட்குறா.. அன்னைக்கு நான் எடுத்தது எவ்வளவு முட்டாள்தனமான முடிவுன்னு இன்னைக்கு தான் முழுசா புரியுது சுபா.. என் கைக்குள்ள அவளை வச்சுக்கணும்னு ஆசையா இருக்கு!" ஏக்கமும் தவிப்புமாய் மது பேசியதை எல்லாம் திக்கி திணறி வளர்மதி சுபாவிடம் கூற, புன்னகை முகமாய் கேட்டுக் கொண்டிருந்த சுபாவும் ஆறுதலாய் தலை கோதினாள்.

"இன்னைக்கு நான் கதை சொல்றேன்னு சொல்லி இருக்கேன்.." என்றும் கூற,

"சரி க்கா! அப்ப இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடு!" என்றாள் சுபா அவள் அதுகமாய் பேசுவதைக் கண்டு.

இரவு வெகு நேரம் கழித்து வந்த ஆதி மதுவை கண்களால் தேட,

"அவ அவ அம்மா கூட தூங்குறா!" என்ற சக்தியின் பதிலில் அபியை பார்க்க,

"சாப்பிட வாங்க!" என்று அழைத்தாள் சுபா.

"சாப்பிடலையா யாரும்?" என்றான் ஆதி.

"கூப்பிட்டது உங்களை தான்.. உங்களை மட்டும் தான்.. பேய் வர்ற நேரம் எல்லாம் நாங்க சாப்பிடுறது இல்ல" சக்தி.

"ப்ச்! சக்தி!" என்ற அபி,

"நாங்க சாப்பிட்டோம் டா.. நீ சாப்பிட்டு வா!" என்றான்.

"நானும் வெளில சாப்பிட்டேன்.." என்று கூற, அது பொய் என்று தெரிந்தாலும் யாரும் எதிர் கேள்வி கேட்கவில்லை.

"உங்க ரூம் உங்களுக்கு தயாரா இருக்கு தம்பி.. நீங்க போங்க" என்ற முருகன் வேலை முடிந்து கிளம்ப, அபியோடு அறைக்கு சென்றான் ஆதி.

"ஏன் டா இன்னும் தூங்காம இருக்கிங்க?" ஆதி அறைக்கு வந்ததும் கேட்க,

"உனக்கு என்ன ஆச்சு முதல்ல? நீ வராம நாங்க எப்படி தூங்குவோம் நினச்ச? டேய் நார்மல் ஆக பாரு டா.. முடிஞ்சதை மட்டும் நினைச்சுட்டு என்னவோ நானும் இருக்கேன்னு பேருக்கு சுத்தி வராத!" என்றான் கோபமாய் அபி.

"இப்ப என்ன? பிரண்ட்டை பார்க்க போனேன்.. லேட் ஆகிட்டு.." என்றான் சாதாரணமாய்.

"தூக்கம் வருதா ஆதி?" சம்மந்தம் இல்லாமல் அபி கேட்க,

"மதுவைப் பார்த்தா வர வாய்ப்பு இருக்கு" என்றான்.

"மது இன்னைக்கு அங்கேயே தூங்கட்டும்.. நான் கொஞ்சம் உன்கிட்ட பேசணும் பேசட்டுமா?" ஆதி கேட்க,

"தூக்கம் வர்ல.. பட் ஐம் டயர்ட்.. எதுவா இருந்தாலும் மார்னிங் கேளு!" என்றவனுக்கு இப்போது எந்த பேச்சிற்கும் பதில் கூற முடியாது என்று தோன்ற கட்டிலில் விழுந்துவிட, அவனை அழுத்தி கேட்கவும் முடியவில்லை அபிக்கு.

அடுத்த நாள் காலை சுபத்ரா வளர்மதியிடம் சென்று மதுவை அழைத்துக் கொண்டு ஆதி செல்ல இருப்பதை சொல்ல, முதலில் அதிர்ந்தாலும் பின் புரிந்து கொண்டவளால் ஏற்க மட்டும் மனம் வரவில்லை.

"சுபா! உனக்கு ஆதியை புடிச்சிருக்கு தானே?" என்று தங்கையிடம் கேட்டுவிட, கண்ணில் நின்ற நீர் இறங்கிவிட்டது சுபாவிற்கு.

"நீ பேசு சுபா ஆதிகிட்ட.. என் ஒருத்தியால நீங்க ஏன் கஷ்டப்படணும்? பேசு சுபா.. ஆதி தான் உனக்கு பொருத்தமான ஆள்.. ப்ளீஸ் சுபா.. மதுவை நீங்க நல்லா பார்த்துப்பிங்க.. ப்ளீஸ்!" என்று வளர்மதி கெஞ்ச,

"அக்கா! ப்ளீஸ்! அதெல்லாம் பழைய கதை.. இப்ப நீ நினைக்குற மாதிரி எதுவும் இல்லை.. ஆதிக்கு வேலை நிறைய இருக்கும்.. அவங்க கிளம்பட்டும்.. இனி ஆதி ஓகே சொன்னா அடுத்து எப்பவாச்சும் இப்படி மதுவை பார்த்துக்கலாம்!" என்று கூற, சுபாவின் பேச்சில் இருவருக்குள்ளும் ஏதோ என்று புரிந்து கொண்டவளால் சரி செய்வது எப்படி என்று தெரியவில்லை.

சொல்லியது போலவே அன்று மாலை ஆதி, சக்தி, அபி என மதுவுடன் கிளம்பிவிட, சுபத்ரா அன்று இரவு முழுவதும் கண்ணீரில் தான் கரைந்தால்.

வருகிறேன் என்று கூட அவளிடம் சொல்லிச் செல்லாத ஆதியின் மேல் அத்தனை கோபம் வர, அவன் யார் உனக்கு கோபம் கொள்ள என்று புத்தி எடுத்து சொல்ல, மொத்தமாய் வீழ்ந்தவள் அழுது அழுது தன்னையும் மறந்து தான் தூக்கத்திற்கு சென்றிருந்தாள்.

சக்தி அதன்பின் அதிகமாய் ஆதியிடம் பேசுவதில்லை.. சக்தியின் வீட்டிற்கு ஆதி சென்றாலும் தேவைக்கு என்று கூட சக்தி பேசாமல் ஒதுங்கி செல்ல,

"ஏன் சக்தி?" என்றான் அபி.

"ப்ச்! விலகுறதுன்னா முழுசா விலகிடணும் அபி.. அவங்க ரெண்டு பேரும் சேருறாங்களோ இல்லையோ.. ஆதி மனசுல துளி கூட நான் இல்ல.. இனியும் இருக்க போறதில்ல.. கொஞ்ச நாள் இப்படி விலகி இருந்துக்குறேன்.. ஒன்னு ஆதிக்கு கல்யாணம் ஆகட்டும்.. இல்ல எனக்கு ஆகட்டும்.. அப்புறமா பேசிக்குறேன்" என்றவளை,

"நிஜமாவா சொல்ற?" என்றான் அதிர்ச்சி, ஆராய்ச்சி, குழப்பம் என கலந்து அபி கேட்க,

"பின்ன! அவனை காதலிச்சதுக்காக நான் கல்யாணம் பண்ணாம இருக்கணுமா? இல்ல அவங்க ரெண்டு பேரையும் நான் சேர்த்து வைக்கணுமா? எனக்கு வேற வேலை இல்ல?" என்றவள் எப்போதும் போல இப்போதும் அபியை ரசிக்கவே வைத்தாள்.

தொடரும்..