அத்தியாயம் 18
"உனக்கெல்லாம் ஒரு டை, கோர்ட்டு.. என்ன தான் பண்ணுவ அப்படி அங்க போய்?" சக்தி மதுவின் டையை மாட்டியபடி கேட்க,
"ஸ்கூல் பக்கம் போனவங்களுக்கு தான் அது தெரியும்.. உனக்கெல்லாம் எப்படி தெரியும்? போ! போய் தை தா தா தைனு குதி.. அது தானே உனக்கு வரும்?" என்றாள் மது.
தியாகராஜன் இதை கேட்டவருக்கு அவ்வளவு சிரிப்பு.. சிரித்துக் கொண்டே இருந்தார்.
"ப்பா! இத்துனுண்டு இருந்துட்டு என்னை என்ன பேச்சு பேசுறா! நீங்க சிரிக்கிங்க?" என்று தந்தையிடம் சக்தி கோபம் கொள்ள,
"நீ என்ன டி பேசின? உன் வாய்க்கு தான் அவ பதில் பேசி இருப்பா.. வந்து அவளுக்கு ஊட்டி விட்டு நீயும் சாப்பிட்டு கிளம்புற வழியைப் பாரு!" என்று அதட்டினார் ஈஸ்வரி.
"அவளுக்கே நான் தான் ஊட்டி விடணும்.. மதுவுக்கு அவ ஊட்டுறதா?" என்ற சீதா இருவருக்கும் சேர்த்தே உணவை எடுத்து வைத்து கொடுக்க, அனைத்தையும் கேட்டபடி அமர்ந்திருந்தான் ஆதி.
"ரெடி! ரெடி டா போலாம்!" என்று அரக்க பறக்க ஓடி வந்தான் மேலிருந்து அபி நந்தன்.
ஆதி அவனை முறைக்க, "முறைக்கிறானே!" என நினைத்தாலும்,
"நைட்டு கொசு தொல்லை தாங்கல டா.. அதான் கொஞ்சம் தூங்கிட்டேன் மார்னிங்!" என்றவன் மதிய உணவை எடுத்துக் கொள்ள,
"என்னையே கொசுன்னு சொல்றியா?" என சண்டைக்கு வந்தாள் சக்தி.
சுபத்ரா வீட்டில் இருந்து வந்து ஒரு வாரம் ஓடி இருந்தது. அன்று இரவு வெகு நேரம் சக்தியுடன் பேசவிட்டு தூங்கவே அபிக்கு நள்ளிரவு ஆகி இருக்க, காலையில் எழுந்தது முதல் அனைத்தும் தாமதம் அபிக்கு.
இரண்டு நாட்களுக்கு முன் செண்பகவல்லி வேறு ஆதியை பிடிபிடியென பிடித்துவிட்டார்.
"நீ என்ன காரணம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.. பழையபடி மது இங்க தான் இருக்கனும்.. உனக்கு வேணும்னா நீயும் இருந்துட்டு போ.. பச்சபுள்ளைய உன் கூட தனியா விட முடியாது.." என்றுவிட,
சீதா தியாகராஜனுடன் ஈஸ்வரியும் கூட, "மது இங்க இருந்துட்டு இப்ப இல்லைனா வீடே அமைதியா இருக்கு.. எங்களுக்கும் என்னவோன்னு இருக்கு.." என்று கூற, அதற்கு மேல் அவர்களிடம் மறுக்க முடியாமல் மதுவை அங்கேயே விட்டிருந்தான் ஆதி.
காலையில் அவளைப் பார்க்க வந்த போது தான் அபி எழுந்து கொண்டதே.. பத்து நிமிடத்தில் கிளம்பி வருவதாய் கூற ஒரு மணி நேரமாய் கிளம்பி இருக்கிறான்.
"ஏய்! நேரமாகுதுன்னு சொல்லிட்டு இப்ப என்ன அவன்கூட சண்டை உனக்கு.. சாப்பிட்டன்னா கிளம்புற வழியைப் பாரு!" என்று ஈஸ்வரி கூறி, அன்றையை சண்டையை உடைத்தார்.
ஆதி சாப்பிட மறுக்க, அபியை சாப்பிட வைத்தே அனுப்பினார் சீதா.
சீதாவிடம் சுபத்ராவீட்டில் இருந்து வந்த முதல் நாளே அனைத்தையும் கூறிவிட்டான் அபி.
"இவ்வளவு நடந்திருக்கா? இப்ப யாரை தான் பாவம்னு சொல்ல? அம்மா அப்பாவா நினச்ச குடுபத்தையே வேண்டாம்னு சொல்லிட்டு வந்திருக்கான்னா ஆதி மனசு அங்க எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கணும்?" என்றவர்,
"அந்த பொண்ணும் பாவம் தான்.. எழுந்துக்க முடியாத அக்கா, அம்மா அப்பாவை இழந்ததுன்னு.. ப்ச்.. கடவுள் ரொம்ப சோதிச்சிருக்கார் அந்த மொத்த குடும்பத்தையும்" என்றார்.
ஆதி வரும் பொழுது அதை தெரிந்ததாய் சீதா காட்டிக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போல இருக்க, சக்தி மூலம் சுபத்ராவிற்கு இங்கே மதுவைப் பற்றிய அன்றாட நிகழ்வுகள் சென்று கொண்டிருந்தது.
தினமும் இருவரும் பேசிக் கொள்ள, மதுவும் அவ்வப்போது சுபத்ரா, வளர்மதியுடன் பேசவும் செய்வாள்.
இவை ஆதிக்கு தெரிந்தே தான் நடக்கும்.. தெரிய வேண்டும் என்றே அவன் முன்னேயே சக்தி அனைத்தையும் செய்ய, ஆதி பதிலுக்கு எந்த பாவமும் காட்ட மாட்டான்.
"சக்தி! நீயே மதுவை ட்ரோப் பண்ணிடு.. நாங்க கிளம்புறோம்!" எங்கே ஆதி நேரமாவதற்கு திட்டிவிடுவானோ என நினைத்து மதுவை சக்தியிடம் ஒப்படைக்க,
"நோ! நோ! நான் சக்தியோட போக மாட்டேன்.." உடனே மது மறுப்பு கூறினாள்.
பட்டென்று சிரித்தது சீதா மட்டும் இன்றி செண்பகவல்லி, ஈஸ்வரி, அபி, தியாகராஜன் அனைவரும் தான்.
"இங்க பாரு! இதுக்கு மேல நீ என்னை அசிங்கப்படுத்த முடியாதுன்ற அளவுக்கு பண்ணிட்ட.. மரியாதையா வந்து ஸ்கூட்டில ஏறிடு.. இல்ல ஒத்த கையில தூக்கி கையை காலை கட்டி கூட்டிட்டு போய்டுவேன்" என்றவளை மது முறைக்க,
"அப்பாக்கு டைம் ஆச்சு டா.. ஈவ்னிங் நான் பிக்கப் பண்ணிக்குறேன்!" என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தான் ஆதி.
"சரி சரி! அப்பா உங்களுக்காக.." என்றவள் லஞ்ச் பேகை எடுத்துக் கொண்டு முன்னே நடக்க,
"எம்புட்டு அழகா பேசிட்டு நடக்குறதை பாரு டி!" என்று ரசித்து பார்த்தார் செண்பகவல்லி.
"எத்தனை பேச்சு.. ஆனாலும் அழகு தான்.. சுத்தி போடணும் த்தை!" என்றார் ஈஸ்வரி கூட.
ஆதி அதில் மெல்லிதாய் புன்னகைக்க, "சரி நாங்க கிளம்புறோம்!" என்று வெளிவந்தான் அபி ஆதியுடன்.
இவர்கள் வெளியேறி சென்ற பின் கையில் கவருடன் அறையில் இருந்து வந்தா கணேசன் அந்த கவரை தன் மனைவியிடம் நீட்டினார்.
"என்னங்க இது?" என கேட்டபடி சீதா அதை பிரிக்க,
"பாரு தெரியும்!" என்றபடி நகர்ந்து உணவு இருக்குமிடம் வந்து அமர்ந்தார்.
"பொண்ணுங்க போட்டோ இருக்கு.." கேள்வியாய் சீதா புகைப்படங்களைப் பார்த்து கேட்க,
"அட! ஆமா! இப்ப தான் உன் வீட்டுக்காரர் உருப்படியா ஒரு விஷயம் பண்ணி இருக்கார்.." என்றதும் சீதா விழித்தார்.
"இன்னுமா புரியல? உனக்கு தான் மருமகளை தேடுறார் உன் வீட்டுக்காரர்" ஈஸ்வரி கூறியதும் அப்படியா என்று கணவனை சீதா பார்க்க,
"என்ன நான் அப்படி உருப்படி இல்லாம பண்ணிட்டேன்.. நான் எது பண்ணினாலும் யோசிச்சு தான் முடிவெடுப்பேன்.. உங்களை மாதிரியா?" என கணேசன்.
"நல்லது சொன்னாலும் இங்க பொல்லாப்பு தான்.." என்று முணுமுணுத்தாலும் ஈஸ்வரிக்கு சந்தோசம் தான்.
கணேசன் முடிவெடுத்துவிட்டால் பின்வாங்க மாட்டாரே! எங்கே அப்படி இப்படி என பேசி அப நந்தனுக்கு சக்தியை கட்ட முடிவெடுத்துவிட்டால் என்று அவ்வப்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது அவருக்கு.
கணேசனுக்கு அதில் விருப்பம் இல்லாமல் இருந்ததே போதுமானதாய் இருந்தது அவர் மகிழ்ச்சி.
"என்ன திடீர்னு பொண்ணு போட்டோவோட? பொண்ணு பாக்குறதை பத்தி வீட்டுல எதுவும் பேசவே இல்லையே நீங்க?" என்றார் செண்பகவல்லி.
வீட்டிற்கு பெரியவர் என அவர் இருக்க, அதைவிட அபிக்கு தாய்மாமனாய் தியாகராஜன் இருக்க, இப்படி யாரையும் கலந்து கொள்ளாமல் புகைப்படத்தோடு வந்து நிற்கிறாரே என்று அதிர்ச்சி.
"என் பையனுக்கு நான் தான பாக்கணும்.. வயசாகுது தானே? இப்பவும் நீங்க தான் பார்க்க போறீங்க.. இதுல எதாவது ஒன்னு நல்லதா பார்த்து எடுங்க" என்று கணேசன் சாப்பிட்டபடி கூற,
"கிளி ஜோசியம் பாக்குற மாதிரி என்னவோ ஒன்னை எடுங்கனு சொல்றிங்க? ஹ்ம்..!" என்ற செண்பகவல்லிக்கு அதை பார்க்கும் விருப்பம் கூட இல்லை.
"என்னம்மா சும்மா பேசிகிட்டு! மாப்பிள்ளை நல்ல காரியத்தை தானே தொடங்கி வச்சிருக்கார்! வீட்டுல ரெண்டு வயசு பசங்க இருக்குன்னு நியாபகப்படுத்துறார்.. நல்லது தானே?" என்றபடி தியாகராஜன் சீதாவிடம் போட்டோக்களை வாங்கிப் பார்த்தார்.
"ஆமா! ஆமா! அபிக்கு முடிச்சுட்டா அடுத்த ஆறு மாசத்துல சக்திக்கும் ஒரு நல்ல இடமா பார்த்து முடிச்சு வச்சுடலாம்!" ஈஸ்வரி தன் எண்ணப் போக்கில் பேசிக் கொண்டார்.
"நீங்களும் பாருங்க ம்மா!" என அன்னையிடம் கொண்டு வந்து தியாகு நீட்ட, அதை வாங்கியவர் பார்க்கும் எண்ணம் இல்லாமல் கைகளில் வாத்திருக்க,
"என்னவாம்? பிரிச்சு பாக்கத் தான?" ஈஸ்வரி.
"ம்ம்! பாக்கலாம் பாக்கலாம்.. நல்ல நாள், நேரம்னு எதுவும் பாக்காம உங்களை மாதிரி என்னால பாக்க முடியாது.. அப்புறமா பாத்து சொல்றேன்!" என்றவர் கவரை கீழே வைத்துவிட,
"எல்லாம் நல்ல நேரத்துல தான் வாங்கிட்டு வந்தேன்.. எதுக்கும் நீங்களும் நல்லா பார்த்துட்டே பிரிங்க.. பாத்து பாத்து நல்ல இடங்களா தான் வாங்கிட்டு வந்தேன்.. இனி உங்க பாடு!" என்ற கணேசன் சாப்பிட்டு முடித்து எழுந்து வெளியில் சென்றார்.
அபி நந்தனுக்கு சக்தியை திருமணம் செய்து வைத்தால் சொத்து வெளியில் செல்லாது என்ற நினைப்பு கணேசனுக்கு இல்லாமல் இல்லை..
ஆனாலும் ஈஸ்வரி முன் தாழ்ந்து நின்று பெண் கேட்கவும் விருப்பம் இல்லை.
மகனுக்கு என்ன குறை? இதைவிட பெரிய இடமாய் பார்த்துவிட்டால் என்ன? என்ற எண்ணம் தான் அவருக்கு.
ஈஸ்வரியும் பெரிய பாரம் அகன்றவராய் அறைக்குள் செல்ல, தியாகராஜன் இருக்கும் வரை அமைதியாய் அவரவர் எண்ணங்களில் இருந்தனர் செண்பகவல்லியும் சீதாவும்.
"அம்மாடி சீதா! உன் புருஷன் என்ன இப்படி சொல்லிட்டு போறாரு?" அன்னை கேட்க,
"எனக்கும் தெரியல ம்மா.. என்கிட்ட சொல்லவே இல்லை.. இந்த மனுஷன் எப்ப என்ன பண்ணுவார்னே தெரியமாட்டுது.."
"நீ என்ன நினைக்கிற?"
"என்ன நினைச்சு என்ன ஆக போகுது? பார்த்தீங்க இல்ல அண்ணி எவ்வளவு சந்தோசமா போறாங்கனு!" கவலையாய் கூறினார் சீதா.
"அபியை நல்லா தெரியும்.. அவனுக்கு புள்ளய குடுக்க உன் அண்ணிக்கு கசக்குது.. எங்கேருந்து இதுக்கு மேல நல்லவன பிடிப்பாளாம் நம்ம சக்திக்கு"
"ப்ச்! விடுங்க ம்மா.. என்ன நடக்கணும்னு இருக்கோ அது தானே நடக்கும்? எனக்கு இதுல எல்லாம் ஒன்னை பார்த்து சரியா இருக்கும்னு சொல்ல தெரியல ம்மா.. நீங்களே பாருங்க.. இல்லையா அண்ணனை பார்க்க சொல்லுங்க!" என்று கூறி சென்றுவிட்டார் சீதா.
அன்னையின் கவலை தான் சீதாவிற்கும்.. மகனுக்கு பொருத்தமாய் அவன் வளரும் வரை எந்தபெண்ணையும் நினைத்து பார்த்தது இல்லை என்றாலும் என்றோ ஒரு நாள் பேச்சுவாக்கில் மகனுக்கு பெண் பார்த்தால் எப்படி பார்க்க வேண்டும் என நினைத்தவருக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே இல்லாமல் சக்தி மட்டும் தான் முன் வந்து நின்றாள்..
ஈஸ்வரி முதலிலேயே அப்படி ஒரு எண்ணம் யாருக்கும் இருக்க கூடாது என்று கூறிவிட, வெளியில் அதைப் பற்றி கூறுவதில்லை சீதா.
இப்போது கணவன் திடீரென இப்படி புகைப்படத்தோடு வந்து நிற்க, அதில் எந்த பெண்ணுமே சீதாவின் கண் கருத்து என எதையும் எட்டுவதாய் இல்லை.
தொடரும்..