அத்தியாயம் 19
அபிக்கு அலைபேசியில் அழைத்து தானே மதுவை அழைத்து வந்துவிடுவதாய் கூறிய சக்தி,
மாலை பள்ளி முடியும் நேரம் வேண்டும் என்றே மதுவை அழைக்க செல்ல, அவளை முறைத்தபடி அவளுடன் வந்து சேர்ந்தாள் மது.
"ஏன் ஆட்டோல வந்த?" மது கேட்க,
"ஏன் அம்மணி ஆட்டோல வர மாட்டிங்களா? ஸ்கூட்டி பிரண்ட் எடுத்துட்டு போயிருக்கா" என்றாள்.
நேராய் ஆதியின் வீட்டிற்கு அழைத்து வர, ஆதி இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.
"இப்ப என்ன டி பண்றது.. வீடு பூட்டி இருக்கே!" சக்தி மதுவிடம் கூறினாள்.
"வேணும்னே என் அப்பாவை கோபப்பட வைக்குற இல்ல.. வெளில நின்னு காவல்காத்துட்டு இரு.." என்றாள் மது..
"கூடிப் போச்சு டி.. ரொம்பவே கூடிப் போச்சு.. நீயும் துணைக்கு இருக்கனு மறந்துட்டு பேசாத!"
"ஹெலோ! இது எங்க வீடு.. என்னை யாரும் ஒரு மாதிரி பார்க்க மாட்டாங்க.. உன்னை தான் பார்த்துட்டு போவாங்க" என்று மது கூற,
"ஆமா ஆமா! உன் வீடு தான்.. சொல்லிக்கிட்டாங்க!" என்றவள் படியில் அமர்ந்துவிட,
"பார்க்கவே டல்லா இருக்கியே! என்னாச்சு?" என்றாள் மது.
"அட போம்மா! காலெல்லாம் வலிக்குது.."
"கொஞ்சமா ஆடணும்!" மது சொல்ல, சக்தி முறைக்க,
"பாக்க பாவமா இருக்க.. அதனால..." என்று மது கூறவும் சக்தி என்னவென்று பார்க்க,
"என்னோட பேக் பிரான்ட்ல ஒரு கீ இருக்கும்.. எடுத்து வீட்டை திற!" என்று கூற, அடிப்பாவி என்று தான் வந்தது சக்திக்கு முதலில்.
"என் அப்பாவை பேசின இல்ல.. சரியா போச்சு.. போ!" என்று அதற்க்கும் ஒரு பதில்.
"உனக்கு படிக்குது தான?" சக்தி கேட்க,
"இல்லையே!" என்றாள் மது.
'ஆமானு சொல்லறாளா பாரு!' என பல்லைக் கடிtதவள்,
"எனக்கு பசிக்குது.. இரு எதாவது பண்றேன்!" என்று உள்ளே செல்ல,
"எனக்கு தூக்கம் வருது.. நீ என்ன வேணா செஞ்சிக்கோ!" என்று மது உறங்க செல்ல, வீட்டை பூட்டிய சக்தி கீயை மது பேக்கிலேயே வைத்தாள்.
"அடியேய்! ட்ரெஸ் சேஞ் பண்ணிடு!" என்று சக்தி சத்தமாய் கூற,
"அதெல்லாம் எனக்கு தெரியும்.. சைலன்ட்டா பண்ணு!"
"அவ்வ்வா! இதெல்லாம் குழந்தையா..." என்று நினைத்தபடி இருந்தவற்றை ஆராய்ந்தவள், பிரட்டை எடுத்துக் கொண்டு சாண்ட்விச் செய்ய ஆரம்பித்தாள்.
"ஏன் டா! இவ்வளவு சொல்றேன்.. என்னனு கேட்கவே மாட்டேன்ற!" அபி குரல் கேட்க, சக்தி செய்தவற்றை எல்லாம் மூடி வைத்துவிட்டு தனக்கானதுடன் உள்ளறைக்கு சென்றுவிட்டாள்.
மது சக்தியுடன் அவள் வீட்டிற்கு சென்றிருப்பதாய் தான் நினைத்திருந்தனர் இருவரும்..
"எனக்கு தேவை இல்லைனு சொல்றதை நீ திரும்ப திரும்ப பேசினா நான் என்ன சொல்றது?" என்ற ஆதி கதவை திறந்தவன் ஹாலில் அமர, அவனருகில் முறைத்தபடி அபி.
'என்னவோ சண்டை போடுறானுங்க போல' சாப்பிட்டபடி நினைத்துக் கொண்டாள் சக்தி.
"என்ன தேவை இல்லை? உன் தேவை இல்லாம இருக்கலாம்.. ஆனா மது? எப்படி மதுவை இப்படியே லாஸ்ட் வரை வச்சுக்கலாம்னு எண்ணமா?" அபி கேட்க,
"ஓஹ்! கல்யாணத்துக்கு கன்வின்ஸ் பன்றான் போல.. லவ் பண்ணின பொண்ணை கல்யாணம் பண்ணிக்க கசக்குதாமா' என நினைத்து கொண்டு சக்தி இருக்க,
"மதுவைப் பார்த்துக்க எனக்கு தெரியும்.. அவ கேட்டாளா உன்கிட்ட?" என ஆதி எகிற,
"சுபத்ரா உன் பாஸ்ட்னா அது பாஸ்டாவே இருந்துட்டு போகட்டும்.. சக்தியோட மனசுல எப்பவும் நீ மட்டும் தான்.." என்று அபி கூற, வாய் வரை கொண்டு சென்ற உணவுடன் திகைத்து அமர்ந்துவிட்டாள் சக்தி.
"லூசா டா நீ.. என்ன சாய்ஸ் குடுக்குறியா? என்னை பேச வைக்காத அபி.. நான் எப்பவாச்சும் உனக்கு ஹோப் குடுத்துருக்கேனா?" என்று ஆதி பேச,
"புரியுது ஆதி! பட் ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்.. சக்தி கேட்டு இதுவரை எதுவும் நடக்காம இருந்ததில்லை.. செல்லமா வளர்த்தோம்னு எல்லாம் சொல்ல வரல.. பட் ஷி பேட்லி மிஸ் யூ டா!" என்றான் அபி.
கேட்டுக் கொண்டிருந்த சக்திக்கு அத்தனை கோபம்.. நேற்று இரவு கூட இருவருமாய் பேசும் பொழுது தெளிவாய் தன் மனதில் இருப்பதை கூறி இருந்தாள் சக்தி.
காதலித்தாள் தான்.. வலி தான் என்றாலும் அவன் மனதில் தான் இல்லை என்றபின் கடந்து வர நினைக்க, இவன் கெஞ்சி நிற்பதில் கோபமுற்றவள் எழுந்து வர எத்தனிக்க, ஆதியின் அடுத்த வார்த்தைகள் அதிர்ந்து நிற்க வைத்தது சக்தியை.
"இதுக்கு மேல பேசின.... மனுஷனா இருக்க மாட்டேன்.. என்ன தியாகியா நீ? லவ் பண்ற பொண்ணு இன்னொருத்தனை லவ் பண்ணினா சேர்த்து வச்சு அழகு பாக்குறேனு சொல்ற.. இதுக்கு பேரு தியாகமா? சொல்லு டா.. நானும் உன்னோட பர்சனல்.. அதை பேச கூடாது பேச கூடாதுனு நினைக்கிறன்.. ரொம்ப ஓவரா போற.." என்று ஆதி கூற, அபிக்கும் அதிர்ச்சி தான்.
சக்தி கோபமாய் எழுந்தவள் எழுந்த வேகத்தில் சட்டென அமர்ந்துவிட்டாள் ஆதி பேசிய பேச்சில்.
'என்ன கூறுகிறான் இவன்? அபியை பற்றி இவனுக்கு என்ன தெரியும்?' என்று சக்தி ஆதி கூறுவது உண்மை இல்லை என்று நினைக்க,
"ஆதி! என்ன சொல்ற நீ?" என்று தடுமாறினான் அபி.
"இங்க பாரு அபி! லவ்ன்றது தானா வர்றது.. சக்திக்கு என் மேல எப்படி வந்துச்சுன்னு தெரியாது.. ஆனா நான் எப்பவும் அந்த மாதிரி நினைக்கல.. இனியும் நினைக்க மாட்டேன்.. அதை தெளிவா புரிஞ்சிக்கோ.
அண்ட் அதே மாதிரி.... உன் மனசை அவளுக்கு புரிய வை.. உனக்கு சக்தியை புடிக்கும்... நீ அவளை லவ் பண்றனு உன் டைரியை பார்த்த அன்னைக்கே தெரிஞ்சிகிட்டேன்.." என்று கூற, விழித்தபடி நின்றுவிட்டான் அபி.
கல்லென அமர்ந்த சக்தி மூச்சு கூட விடவில்லை.
"பயப்படாத! முழுசா ஒன்னும் பாக்கல.. ஃபிரன்ட் பேஜ்ல கவிதை பார்த்தேன்.. என் சக்தியானவள்னு.." குறுஞ்சிரிப்பு தெரிய ஆதி கூற, அவன் புன்னகையை பார்க்கும் நிலையில் எல்லாம் இல்லை அபி.
ஆனால் அதில் சுயம் வந்திருந்தான்.. "ப்ச்! என்ன உளர்ற நீ? நான் கவிதை எழுதுவேன்னு உனக்கு தெரியாதா? இப்படி எல்லாம் பேசாத!" என்றவன் திணறலை ஆதி கண்களால் பார்த்தான் என்றால் அபியின் குரல் பேதத்தை அப்பட்டமாய் உணர்ந்தாள் சக்தி.
"உண்மையை ஒத்துக்கோ அபி.. நீ சக்தியை லவ் பண்ற.. எனக்கு தெரியும்!" ஆதி சத்தமாய் கூற,
"ஆதி ப்ளீஸ்!" என்று அபி மறுக்க,
"நான் உன்கிட்ட ஆமாவானு எல்லாம் கேட்கல.. உன் காதல், குடும்பம் இதெல்லாம் தாண்டி சக்தி சந்தோசம் தான் உனக்கு முக்கியம்.. அதனால தானே அவளுக்காக என்கிட்ட இப்படி லூசு மாதிரி கெஞ்சிட்டு நிக்குற? அதுலயே தெரிலயா நீ அவளை எவ்வளவு விரும்புறன்னு.. ஆனா அது தான் என்னை ரொம்ப டென்ஷன் பண்ணுது.." ஆதி.
"ஆதி!" என்ற அபியின் குரல் உள்ளே போயிருந்தது.
"நல்லவனா இருக்கலாம்.. ரொம்ப நல்லவனா எல்லாம் இருக்க கூடாது.. அதனால உனக்கு என்ன லாபம்? நான் கூட லேட்டா தான் புரிஞ்சிகிட்டேன் சில விஷயங்கள்.. நீயும் அந்த மாதிரி இருக்காதனு சொல்றேன்.. உன் காதலை நீ தான் காப்பாத்திக்கணும்.. உன் மனசு வலிக்க வலிக்க தான் நீ உன் காதலி காதலுக்கு ஹெல்ப் பண்ற.."
ஆதி தெளிவாய் அபி காதலை அவனுக்கே கூற, அபி பேச்சச்சு நின்றான்.
"என்ன இன்னும் இல்ல.. பிரண்ட்டு, மாமா பொண்ணுனு கதை விட போறியா? நானும் எவ்வளவு நாள் தான் உன் லவ் தெரியாத மாதிரி நடிக்குறது? எனக்கு ஒரு மாசம் முன்னாடியே தெரியும்.. நானும் இப்ப சொல்லிடுவ.. அப்புறம் சொல்லுவனு பார்த்தேன்.. பட்!" என்று இரு கைகளையும் ஆதி விரித்தான்.
"போதும் இதோட நிறுத்து.. இதுக்கு மேல இந்த மாதிரி நான்சென்ஸ் பேச்சு என்கிட்ட வேண்..."
வேண்டாம் என்று சொல்ல வந்த ஆதி உள்ளறையில் இருந்து யாரோ வருவதை போல தெரியவும் பேச்சை நிறுத்தி இருக்க, கண்களை துடைத்தபடி வந்த சக்தி இருவரின் முகத்தையும் பாராமல் விறுவிறுவென வெளியே சென்றுவிட, இருவருமே அதிர்ந்து நின்றனர்.
"சக்தி!" என்று திடுக்கிட்ட அபி, அவள் பின்னே செல்ல இருந்தவன்,
"ஓஹ் ஷிட்! சக்தி எப்படி டா இங்க?" என்று ஆதியிடம் கேட்க, அவனுமே புரியாமல் விழித்து பின் உள்ளே சென்று பார்க்க, அங்கே உறக்கத்தில் மது.
"என்ன டா பண்ணி வச்சிருக்க.. இப்ப நான் அவ முகத்துல எப்படி முழிப்பேன்.. ஏன் டா இப்படி பண்ணின?" என்ற அபி அத்தனை தவித்துப் போனான் நிமிடத்தில்.
ஒரே வீட்டில் ஒன்றாய் வளர்ந்து ஒன்றாய் பழகி இத்தனை நாட்களும் ஒன்றாய் சுற்றி இருக்க, இப்படி ஒரே நாளில் அவள் முன் தன் பிம்பம் மாறி நின்றதை அவள் எவ்வாறு ஏற்றுக் கொள்வாள்? என்று நினைக்கவே பயமாய் இருந்தது அபிக்கு.
ஆதியுமே இதை எதிர்பார்க்கவே இல்லை என்பதாய் தான் சில நிமிடங்கள் நின்றான்.
அதன்பின் நடப்பது நடந்து தானே தீரும் என்ற முடிவிற்கு வந்தவன், "அபி! இதுவும் நல்லது தான்னு நினைச்சுக்கோ.. இப்ப தெரியலைன்னா எப்ப எப்படி தெரியும்? நீயா சொல்ற மாதிரியும் இல்லை.." என்று சாதாரணமாய் கூற,
அப்படி நினைக்கவே முடியவில்லை அபிக்கு.. அவளை எப்படி நேராய் சந்திக்க தன்னால் முடியும்? என்ற எண்ணம் முழுதாய் அவனை சிந்திக்கவும் விடவில்லை.
"பயமா இருக்கு ஆதி!" விளையாட்டாய் இருப்பவன் முகத்தில் ஏகத்திற்கும் கலக்கம் தெரிய, கிண்டலாய் ஒரு புன்னகை ஆதி முகத்தினில்.
"லவ் இல்லைனு சொன்ன? நான் சொன்ன எதுவும் உண்மை இல்லைனா எதுக்கு இவ்வளவு பயம், பதட்டம்?" என்று கேட்க, அவனை முறைத்தான் ஆதி.
ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவென ஆதியும் இன்னும் அதற்கு புன்னகையோடு நிற்க,
"அதான் எல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கியே!" என்று சலிப்பாய் கூறிய அபி,
"ப்ச்! என்னவோ போ டா!" என்றுவிட்டு வெளியே சென்றுவிட, அதே புன்னகையோடு எழுந்து மகளருகே சென்றான் ஆதி.
அதே நேரம் சுபத்ரா ஆதிக்கு அழைப்பு விடுக்க எண்ணி அலைபேசியை கையில் எடுத்து இருந்தாள்.
தொடரும்..