• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 21

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 21

"சுபத்ரா தான அந்த பொண்ணு ஆதி மனசுல இருக்குற பொண்ணு?" என்று சீதா கேட்க, அபி சொல்லி இருந்ததை அறிந்த சக்தி ஆம் என்று தலையாட்டினாள்.

"இப்ப உன் தலைவலிக்கு என்ன காரணம்?" என்றார் மகனையும் அண்ணன் மகளையும் பார்த்தபடி.

"இவன் தான்னு சொன்னேனே! பிறந்ததுல இருந்து கூடவே இருக்கான்.. ஆனா இவன் என்ன நினைக்குறான்.. என்ன பன்றான்னு நம்ம யாருக்குமே தெரியல.. மூணாவதா ஒருத்தன் வந்து சொல்றான்!" சக்தி விசும்பிக் கொண்டே கூறினாள்.

"சக்தி! தெளிவா சொல்லு.. என்னவோ நடந்திருக்கு.. கொஞ்சம் புரியுற மாதிரி யாராவது சொல்லுங்க.. எனக்கு பயமா இருக்கு!"

"அத்தை! ஆதியை எனக்கு ஏன் புடிச்சது.. எப்ப புடிச்சதுன்னு ஆரம்பமாகி சின்ன சின்ன விஷயத்தை கூட நான் இவன்கிட்ட தான் ஷேர் பண்ணிக்கிட்டேன்!" என்று சக்தி கூற, சீதா மகனை பார்த்தார்.

அதன் பொருள் உணர்ந்து தலை குனிந்தான் அபி.

"உங்ககிட்ட அவன் சொல்லலைன்னு தானே இப்படி அவனை பாக்குறீங்க? அவன் சொல்ல மாட்டான்.. அவனுக்கு நான்னா அவ்ளோ புடிக்கும்.. ஆனா நான் தான் அதை மிஸ்யூஸ் பண்ணிக்கிட்டேன்!" என்று கூறவும்,

"ப்ச்! சக்தி.. உளறாத!" என்றான் அபி அதட்டலாய்.

"நீ என்கிட்ட பேசாதன்னு சொன்னேன்.. நீயா என்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்ட.. நான் தானே உன்கிட்ட பண்ணினேன்.. அப்ப தப்பு நான் தான்.." அழுதபடி அவள் கூற, சுத்தமாய் புரியவில்லை சீதாவிற்கு.

கையிலிருந்த சாப்பாட்டை கீழே வைத்தவர் தலையை பிடித்துக் கொண்டார்.. அவருக்கே மாத்திரை தேவைப்படும் போல ஆனது.

"நான் இன்னைக்கு மதுவை கூட்டிட்டு ஆதி வீட்டுக்கு போயிருந்தேன் த்தை.." என்றவள் அங்கே நடந்ததை கூற ஆரம்பித்தாள்.

ஆரம்பித்தவள் முடிக்கும் பொழுது அழுகை அதிகமாக கேட்டுக் கொண்டிருந்த சீதாவிற்கு கண்கள் அகன்றது.

யாரை கவனிக்க, சொல்லிவிட்டு அழுபவள் என்ன நினைத்து அழுகிறாள் என்று புரியவில்லை.. விழி அகல கேட்டுக் கொண்டிருந்த அன்னை மனதில் தன்னை குறித்த எண்ணம் என்னவாகி இருக்கும் என்று தெரியவில்லை.

நடுவில் நின்றவன் நிலை பரிதாபத்துக்குறியதாய் இருக்க, சக்தியின் கேவல் சத்தம் மட்டுமே சில நிமிடங்களுக்கு அங்கே.

"ம்மா!" என்றவன் சீதாவின் தோளைத் தொட,

"சக்தி சொல்றது உண்மையா அபி?" என்றார் அதிர்ச்சியில் இருந்து மீண்டவராய்.

"நான் சொல்றதை நம்பலையா நீங்க?" சக்தி கேட்க,

"அய்யோ! என்ன நடக்குது இங்க? நீ முதல்ல அழுறதை நிறுத்து.." என சக்தியை கடிந்து கொண்டவர்,

"இப்ப எதுக்கு அழுவுற?" என்று கேட்க,

"பின்ன! உங்களுக்கு மகன் பண்ணினதுக்கு அழாம! அவன்கிட்ட நான் என்னவெல்லாம் பேசி இருக்கேன் தெரியுமா? அப்பல்லாம் அவன் தலையை தலையை ஆட்டிட்டு இருந்தான்.." என்றாள்.

"அபி! ஆதி சொன்னது இருக்கட்டும்.. நீ சொல்லு.. ஆதி சொன்னது உண்மையா?"

"ம்மா!"

"சொல்லு அபி!

"ம்மா ப்ளீஸ்! சக்தி சாரி! வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.. நான் பண்ணினது தப்பு தான்.. ஆனா எனக்கே தெரியாம எனக்குள்ள வந்த பீலிங்ஸ்க்கு நான் என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல.. இதை இப்ப இல்ல எப்பவுமே யாருக்குமே சொல்ற ஐடியா எனக்கு இல்ல.. இன்னைக்கு இப்படி எல்லாம் நடக்கும்னும் நான் நினைக்கல..."

"பாருங்க.. எவ்வளவு கிளீனா தலையை சுத்தி மூக்கை தொடுறான் பாருங்க!"

"அப்ப நீ மட்டும் என்ன செஞ்சியாம்?" சக்தியை சீதா கேட்க,

"ம்மா! இதை இப்படியே விடுங்க.. சக்தி இதை உங்ககிட்ட சொல்லி இருக்கவே வேண்டாம்.. என்னால எப்பவும் யாருக்கும் டிரபுள் வராது.. ஐம் சூர்! என்னை நம்பு சக்தி.. அவன் சொன்னது உண்மை தான்.. ஐ அக்ரீ.. பட் நான் எப்பவும் யாரையும் டிஸ்டர்ப் பண்ண போறதில்ல.. லைஃப் என்ன தருதோ அதை யாராலயும் மாத்த முடியாது"

"ஓஹ்! அப்ப என்ன டேஷ்க்கு டா அவன்கிட்ட போய் கெஞ்சிகிட்டு நின்ன..!" சக்தி கேட்டுவிட,

"சக்தி!" என அதிர்ந்துவிட்டான் அவள் வார்த்தைகளில்.

"எனக்காக பேசுறேன்னு இனி யாருகிட்டயும் நீ கெஞ்சுறதை பார்த்தேன்.. மனுஷயா இருக்க மாட்டேன்.."

"சக்தி! ஷ்ஷ்! ஏன் இவ்வளவு கத்துற? முதல்ல அமைதியாகு.." என்ற சீதா,

"இப்ப நீ கிளீயர் தானே? அதாவது ஆதி விஷயத்துல?" சீதா கேட்க,

"நான் எல்லா விஷயத்துலயும் கிளீயர் தான் த்தை.." என்றவளை சீதா ஆழ்ந்து பார்க்க, அபி புரியாமல் பார்த்தான்.

"ஆனா இவனை நான் மன்னிக்க மாட்டேன்.."

"சக்தி! அதான் நான் சொல்றேனே! எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்குது ஓகே.. அதுக்காக நான் எப்பவும் அதையே தான் நினைச்சுட்டு உன்னை பார்ப்பேன்னு நீயா நினைக்காத!" அபி சொல்ல,

"அவ அப்படி நினைக்குறதா அவ சொல்லவே இல்லையே! நீ நினைக்காதனு சொல்லி நீயே ஏன் நினைக்குற?" என அன்னை கேட்க, விழித்தவனாள் பதில் கூற முடியவில்லை.

"சக்தி! அபி பண்ணினது தப்புன்னு நினைக்குறியா?"

"அத்த! தப்பில்லயா? இவ்வளவு நாள் மறைச்சதும் தப்பு தான்.. அதை மறைச்சு நான் பேசுறதை எல்லாம் கேட்டுட்டு இருந்ததும் தப்பு தான்.. சுபா ஆதியை லவ் பண்றேன்னு சொன்னப்ப வராத ஒரு பீல் ஆதியும் சுபாவை லீவ் பண்ணினான்னு தெரிஞ்ச அப்ப வந்துச்சு.. எனக்கே அப்படினா இவன்கிட்ட நான் பீல் பண்ணி எல்லாம் பேசும் போது இவன் என்னை நினச்சு எவ்வளவு பீல் பண்ணி இருப்பான்?"

"தெளிவா குழப்புற சக்தி.. இப்ப உன் பிரச்சனை என்ன?"

"இவன் தான் பிரச்சனை.. இவன் என்கிட்ட இனி பேசாம இருந்தா போதும்!" என்றவள் சட்டென திரும்பிக் கொள்ள,

"சக்தி!" என்ற அபியை எதுவும் பேசுன வேண்டாம் என கண்ணசைத்தார் சீதா.

"ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க.. இந்த வீட்டுல ஈஸ்வரி அண்ணி, அபி அப்பாவை தவிர எல்லாருக்கும் உங்களுக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்ன்ற ஆசை தான் இருக்கு.. அதுக்காக உங்களை ஃபோர்ஸ் பண்ண போறதில்ல யாரும்.. நீங்க சந்தோசமா இருந்தா தான் நாங்க நிம்மதியா இருக்க முடியும்.. அபி மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு எனக்குமே இவ்வளவு நாள் தெரியல சக்தி.. எல்லாத்தையும் எங்கிட்ட சொல்ற என் பையன் அவன் காதலை மட்டும் என்கிட்ட மறச்சுட்டான்.. அதுக்கு காரணம் கூட இருக்கலாம்.." என்றவர்,

"அபி அப்பா அபிக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டார்!" என்றார்.

"ம்மா! நான் தான் இப்ப வேண்டாம்னு சொன்னேன்னே!"

"எப்பவும் வேண்டாம்னு சொல்லல இல்ல? நடக்கும் போது நடந்து தானே ஆகணும்?" என்ற பதிலில் அபி கோபமாய் நிற்க,

"உனக்கு அபி மேல கோபம் இல்ல.. நீ அவனுக்காக கவலைப்படுற.. என்னை லவ் பண்ணினவன்கிட்ட போய் என் லவ்வை சொல்லி கஷ்டப்படுத்தி வச்சிருக்கோமேனு தான் நீ பீல் பண்ற.." என்றார் சக்தியிடம்.

"தெரியல த்தை.. ஆனா எனக்கு இவன் மேல கோபமா வருது.. நான் எல்லாம் அவன்கிட்ட ஷேர் பண்ணேன்ல? அப்ப அவனும் என்கிட்ட இதை சொல்லி இருக்கனும் இல்ல?" என்றாள்.

"சொல்லி இருந்தா?" சீதா கேட்க,

"எனக்கு தெரியல.. சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்பேனோ.. ஆனா இவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்க மாட்டேன்.." என்றாள்.

"எனக்கு கல்யாணம் வேண்டாம் நான் லவ் ஃபெய்லியர்னு எல்லாம் சொல்லல.. ஆனா எனக்கு இப்ப அவனை நிமிர்ந்து பார்க்க முடியல.. எல்லாம் இவனால தான்.. என்னை எம்பரஸ்ஸிங்கா பீல் பண்ண வச்சுட்டான்.." என்றவள்,

"பொண்ணு பார்க்கங்களா? பாக்கட்டும்.. இவன் கல்யாணம் ஆகட்டும்.." என்ற பதிலில் அபி வாயடைத்து நிற்க,

"சக்தி! அவன் ஆசையை விடு.. என் ஆசை அம்மா ஆசையும் அது தான்.. கல்யாணம் பண்ணி உன்னை வேற வீட்டுக்கு அனுப்ப எங்களுக்கு இஷ்டம் இல்லை.. அபிக்கு கல்யாணம் பண்ணி புதுசா ஒரு பொண்ணு வீட்டுக்குள்ளனு நினச்சு பார்க்கவும் எங்களால முடியல" என்றார்.

"ம்மா! இது நீங்க அவளை ஃபோர்ஸ் பண்றீங்க.. எமோஷனல் பிளாக்மெயில்.. தயவு செஞ்சு இதை இப்படியே விடுங்க!" அபி கூற,

"பார்த்திங்களா பார்த்திங்களா? இவனும் பேச மாட்டான்.. பேச வர்றவங்களையும் பேச விடமாட்டான்!" என்றாள் சக்தி.

"என் மனசுல இருக்கறதை இந்த நிமிஷம் சொல்லணும் தோணுது அபி.. நான் சொல்லிடுறேன்" என்றவர்,

"நீ எங்களோடவே இருந்துடு சக்தி.. உன்னை நான் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன்.. அவன் பேசலைனா என்ன உனக்கு நான் இருக்கேனே! அதான் நீயே சொல்றியே! கல்யாணம் பண்ணிக்க தானே போறோம்? ஆதி உன் மனசுல இப்ப இல்லை.. அந்த இடத்துல என் புள்ளைய வச்சுக்கலாம் இல்ல.." என்றார்.

"அபியை என்னை விட உனக்கு தானே நல்லா தெரியும்? நீயே யோசிச்சு பாரேன்!" என்று கூற,

"எல்லாம் சரி தான் ஆனா உங்க புள்ளைக்கு அந்த எண்ணம் எல்லாம் இல்லை.. அதான் என்கிட்ட இப்ப இல்ல எப்பவும் பேச கூடாதுன்னு முடிவு பண்ணிட்டான்.. என்னை இப்பவும் நான் என்ன நினைக்குறேன்னு அவன் கேட்கவே இல்லைல?" என்றாள்.

"சக்தி! உன்னை ஹர்ட் பண்ண எனக்கு எப்பவும் இஷ்டம் இல்லை.. இப்பவும் சொல்றேன்.. இந்த ஆதி இல்லைனா நிஜமா உன்கிட்ட சொல்ற தைரியம் எனக்கு எப்பவும் இருக்காது.. நாம எப்பவும் பிரண்ட்ஸ்.. மத்ததெல்லாம் அப்புறம் தான்.. அம்மா பேசுறதை எல்லாம் விடு.. உனக்கு என்ன தோணுதோ அதை பேசு.. அதை பண்ணு போதும்.. நான் எப்பவும் உன்கூட தான் இருப்பேன் எல்லா சிட்டுவேஷன்லயும்.."

"அபி சொல்றது சரி தான்.. உன்னோட முடிவு தான் எங்களுக்கு முக்கியம்.. நீ எது சொன்னாலும் சரி தான்!" சீதா கூற,

"இதை முதல்லயே நீங்க சொல்லி இருக்கனும் ம்மா.. உங்களுக்கு ஆசை எல்லாம் அவ மேல திணிக்க பார்க்க கூடாது.." என்று அன்னையிடம் முறைப்பாய் கூற,

"ஆனாலும் உனக்கு கூட காதல் வருமா டா? நீ எல்லாம் அபியானந்தா தான் ஆக போறனு நான் நினச்சேன்" என்று கிண்டல் செய்தார் அன்னை.

"சேம் அத்தை! ஆனாலும் இவனுக்கு பனிஷ்மென்ட் கண்டிப்பா இருக்கு" என்றாள் சக்தி.

தொடரும்..