• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 22

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 22

சக்தி சென்ற சில நிமிடங்களில் அபியும் அவள் பின்னே சென்றிருக்க, மகள் அருகில் சென்று அமர்ந்திருந்தான் ஆதி.

மனதில் பல சிந்தனைகள் வலம் வர, அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு அழைப்பு வரவும் மொபைலை எடுத்துப் பார்த்தான்.

சுபத்ரா அழைத்திருந்தாள். சக்தி வாயிலாய் மது சுபத்ராவிடம் பேசுவது தெரியும் என்ற போதிலும் நேராய் ஆதிக்கு இதுவரை அழைக்காத சுபத்ரா இன்று அழைத்திருந்தாள்.

அந்த சிந்தனையுடன் அழைப்பை ஏற்று காதில் வைக்க,

"ஹெலோ! ஆதி தம்பிங்களா?" என்ற குரலை அடையாளம் கண்டு கொண்டவன்,

"முருகா! சொல்லுங்க.. நான் தான்!" என்றான் அவர் குரலில் தெரிந்த பதட்டம் பயம் கவலை என அறிந்து.

"தம்பி! நானும் சுபா பாப்பாவும் மார்க்கெட்டடுக்கு காய்கறி வாங்க வந்தோம்.. வந்த இடத்துல பாப்பா மேல ஒரு வண்டி மோதிட்டு போயிட்டு தம்பி.. ஆட்டோல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கேன்.. உங்களுக்கு போனப் போட்டு என் கையில குடுத்துட்டு பாப்பா மயங்கிட்டு.." என்றதும் ஆதி அதிர்ச்சியில் உறைந்து தான் போனான்.

சில நிமிடங்கள் கூட கடந்திருக்க, கையிலிருந்த அலைபேசியை காதில் இருந்து அப்போது தான் ஆதி எடுக்க, அழைப்பு எப்பொழுதோ நின்று போயிருந்தது.

அடுத்து நொடியும் தாமதிக்கவில்லை.. மீண்டும் சுபத்ரா எண்ணிற்கு அழைப்பு விடுக்க, அழைப்பு எடுக்கப்படவில்லை என்றதும் அபி நந்துனுக்கு அழைத்தான்.

அப்போது தான் சென்ற அபி சக்தியின் நினைவில் இருந்தவனுக்கு சைலன்ட் மோடில் இருந்த மொபைலின் அழைப்பு அவன் கவனத்தை ஈர்த்திடவில்லை.

சக்திக்கு அழைத்துப் பார்க்க, அவளும் எடுக்கவில்லை என்றதும் தியாகராஜனுக்கு அழைத்து எமெர்ஜென்சி என்று மட்டும் கூறியவன் மதுவை வந்து அங்கே அழைத்து செல்லுமாறு கூற, அவரும் அருகில் இருந்ததால் உடனே சென்றுவிட்டார்.

"சாரி அங்கிள் உங்களை டிஸ்டர்ப் பண்ற மாதிரி ஆகிடுச்சு.." ஆதி கூற,

"என்ன ஆதி நீ? காரணம் இல்லாம என்னை கூப்பிடுவியா நீ? அபி எங்க?" என்று கேட்க,

"அபி வீட்டுக்கு தான் போனான் கால் பண்ணினேன் எடுக்கல.. எனக்கு வந்து ட்ரோப் பண்ணவும் இப்ப டைம் இல்ல.." என்று கூற,

"அதனால ஒன்னும் இல்ல.. மது எழுந்ததும் நான் கூட்டிட்டு போறேன்.. நீ போய்ட்டு வா!" என்றுவிட,

"ஓகே அங்கிள்! அப்படியே அபிகிட்ட சுபாக்கு..." என்று சொல்ல வந்தவன்,

"எனக்கு கால் பண்ண சொல்லுங்க அங்கிள்!" என்று கூறி கிளம்பிவிட்டான்.

ஒன்றரை மணி நேரப் பயணம்.. செல்லும் வழியில் பலமுறை அழைத்த பின் தான் அழைப்பை ஏற்றிருந்தார் முருகன்.

"மருகா! சுபி எப்படி இருக்கா? எந்த ஹாஸ்பிடல்?" என்று கேட்க,

"உள்ள பாத்திட்டு இருக்காங்க தம்பி.. இன்னும் டாக்டர் வெளில வரல.. இந்த போனை எனக்கு எப்படி எடுக்கனும் தெரியல" என்றவர் மருத்துவமனை பெயரையும் சொல்லி இருக்க, வந்து கொண்டிருப்பதாய் கூறி வைத்தான்.

"சுபி!" என உதடசைத்தவன் கைகள் நடுங்க, இறுக்கமாய் பற்றிக் கொண்டான் வண்டியை.

இத்தனை நாட்களும் அவளைப் புறக்கணித்தவன் என்பதை அவனை இப்பொழுது கண்டால் நம்ப முடியாது என்பதை போல முகம் ரத்தப்பசை அற்றுப் போயிருந்தது.

தன்னை முறைத்தவள், தன்னிடம் சிரித்தவள், அவனுக்காக அவனிடமே கெஞ்சியவள் என அவளின் முகமே கண் முன் வர, விழியில் வழிய இருந்த நீரை உள்ளிழுத்தவன்,

"ஒன்னும் இல்லை.. ஒன்னும் ஆகாது.. வந்துடு சுபி!" என சொல்லிக் கொள்ள, இதயம் பல மடங்கு அதிகமாய் துடித்துக் கொண்டிருந்தது.

அவனே அறியான்.. அவளை இத்தனை பிடிக்கும் என அவனுக்கே தெரியாமல் இருக்க, அதை உணரக் கூட முடியாமல் வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான்.

மருத்துவமனை உள்ளே சென்றவன் அறையைக் கேட்டு அங்கே செல்ல, முருகன் வெளியே நின்றிருந்தார்.

ஆதியைப் பார்த்ததும் அவனருகே இவர் வர, அவருக்கு முன் ஓடி தான் வந்திருந்தான் ஆதி.

"தம்பி!" என்ற அழைப்புக்குள்,

"முருகா! சுபி.." என்றவன் அந்த அறையைப் பார்த்ததும் வேகமாய் சென்று திறக்க, கண்களை மூடி படுத்திருந்தவள் கைகளில் செலன் போடப்பட்டிருக்க, கால்களில் பெரிய கட்டு.

"நர்ஸ்!" என்று டாக்டர் அழைக்க,

"சார்! வெளில வெயிட் பண்ணுங்க!" என்ற நர்ஸ் ஆதி கைப்பிடித்து வெளியேவும் அழைத்து வந்து கதவை மூடிக் கொள்ள, அந்த அறையின் கதவின் முன் சென்று நின்றவன் பார்வை உள்ளே இருந்தவளிடம் தான்.

அப்பொழுது தான் சிகிச்சை முடிக்கப்பட்டு இருந்தது போலும்.

"பயப்பட வேண்டாம் பெரிய அடி இல்லைனு மட்டும் சொன்னாங்க தம்பி!" முருகன் கூற, பெரிதாய் மூச்சுக்கள் ஆதியிடம்.

"எப்படி ஆச்சு?" என்று அவன் கேட்க,

"ரோட்டை கடக்கும் போது ஒரு லாரி வேகமா வந்துது தம்பி.. நான் எதுத்த பக்கமா நின்னுட்டேன்.. பாப்பா பாத்து தான் வந்துது.. எப்படி நடந்ததுண்ணே தெரியல.. கண்ண மூடி திறக்குறதுக்குள்ள.." என்றவர் தலையசைக்க,

அடுத்த இரண்டு நிமிடங்களில் மருத்துவர் வெளியே வர, முன் வந்து நின்றான் ஆதி.

"தலையில, வேற உள் காயம் எதுவும் இல்லை.. கால்ல மட்டும் நல்ல அடி... எழுந்து நடக்க ஆறு மாசம் இல்ல அதுக்கு மேல கூட ஆகலாம்.. பயப்படற அளவுக்கு இல்லை.." என்றதும்,

"பாப்பா முழிக்கலைங்களா?" என்றார் முருகன்.

"அதிர்ச்சி, பயம், உடம்பு ஒத்துழையாமை எல்லாம் சேர்ந்து தான் மயங்கி இருக்காங்க.. டிரிப்ஸ்னால தான் இன்னும் மயக்கத்துல இருகாங்க.. இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. அவங்களா எழுந்து முழிச்சு வரட்டும்.. அது தான் அவங்களுக்கு நல்லது" என்று மருத்துவர் கூற, கவனமாய் கேட்டுக் கொண்டனர்.

"அச்சிடேன்ட்னா உடனே நாங்க போலீஸ்க்கு சொல்லிடுவோம்.. அது எங்க ப்ரோசீடர்" மருத்துவர் கூறி செல்ல, தெரிந்ததாய் தலைசைத்தான் ஆதி.

"இந்த பொண்ணுக்கு மட்டும் எதுக்கு கடவுள் இவ்வளவு கஷ்டத்தை குடுக்கானோ.. நான் போய் பெரிய பாப்பாட்ட என்னனு சொல்லுவேன்.." என்றவருக்கு கண்கள் கலங்கி இருந்தது.

மூன்று மணி நேரம் கடந்து சுபத்ரா கண் விழிக்க, அதுவரை பலமுறை மருத்துவரிடம் கேட்டு கேட்டு பயத்தில் தான் இருந்தான் ஆதி.

கண்களை அசைக்கும் பொழுதே அவளருகில் செல்ல இருந்தவன் கால்கள் நகராமல் நிற்க,

"பாப்பா!" என அருகில் சென்றார் முருகன். அவரை வீட்டிற்கு செல்ல ஆதி கூறி இருக்க, அங்கை பாட்டியிடம் சொல்லி விட்டதாகவும், அவர் வளர்மதியைப் பார்த்துக் கொள்வார் என்று கூறிவிட்டார்.

சுபத்ராவால் வாயை திறக்க முடியவில்லை. நாவெல்லாம் வறண்டு போய் இருக்க, சில நிமிடங்களில் நிதானம் வந்து அவள் வாய் திறக்கும் நேரம் அவளருகே தண்ணீர் பாட்டிலுடன் வந்திருந்தான் ஆதி.

சரியாய் காவல் துறையினர் இருவர் அதே நேரம் உள்ளே நுழைந்தனர்.

அசையாமல் பார்திருந்தவள் அருகே நீரை கொண்டு செல்ல, அதையும் வாங்கிக் கொண்டவள் பார்வை அவனிடம் தான் இருந்ததே தவிர பேசவில்லை.

ஆதியுமே அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. அருகில் சென்ற பின் தான் அவன் அங்கிருப்பதே அவளுக்கு தெரிந்திருக்க, சுற்றிப் பார்த்தவளின் கேள்வியை அறிந்தாலும் பதில் கூறவில்லை ஆதி.

வலியால் அவள் முகம் சுருங்க, "இப்ப எப்படி இருக்கு பாப்பா! பாத்து பாத்து தான் வண்டியே ஓட்டுவ.. இப்ப நடந்து வரும் நேரமா இப்படி நடந்து போச்சு.. Bஎல்லாம் நேரம்.." முருகன் பேச,

"நாங்க அவங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும்.. நீங்க வெளில இருங்க!" என்று காவல் துறையில் இருந்து வந்தவர்கள் கூற, வெளியில் சென்றார் முருகன்.

"மிஸ்டர்! நீங்களும் தான்!" என்றதும் ஆதி சென்றான்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து எப்படி ஏன் யார் என அவர்களுக்கான பதில்களை அனைத்தையும் தெளிவாய் வாங்கி கேட்டுக் கொண்டு கிளம்பினர்.

முருகன் முதலில் உள்ளே வர, "அக்கா!" என்றாள் மெல்லமாய் முனகல் கேட்க.

"அங்கை அம்மாவ கூட இருக்க சொல்லி இருக்கேன்.. இதெல்லாம் எதுவும் சொல்லல.. அதுவும் பயந்துருமே! அரங்கேத்தத்துக்கு போயிருக்கன்னு சொல்ல சொன்னேன்!" என்று சுபத்ரா மனம் அறிந்தவறாய் அவர் கூற, மெல்ல புன்னகைக்க முயன்றாள் சுபத்ரா.

"நீங்க கிளம்புங்க.. நான் பார்த்துக்குறேன்!" உள்ளே நுழைந்தவன் வந்ததும் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அசையாமல் ஆதி கூற, சுபத்ராவைப் பார்த்தார் அவர்.

முழுதாய் தெரியாவிட்டாலும் ஆதி கோபத்தில் இருப்பது நன்றாய் சென்றமுறை அவன் வந்து சென்றதிலேயே அவர் அறிந்திருக்க, என்ன செய்வது என்பதைப் போல பார்த்து வைத்தார் சுபத்ராவை.

அதில் ஆதிக்கு லேசான கோபம் வர, "வீட்டுக்கு கிளம்புங்க ண்ணா!" என்றாள் அவளுமே!.

அவர் சென்ற சில நிமிடங்கள் அமைதியாய் கழிய, மாத்திரையை எடுத்துக் கொண்டு அருகில் வந்தான் ஆதி.

அவன் கேட்காமலே இவள் வாயை திறக்க, தலையை மட்டும் உயர்த்தி தண்ணீரை கொடுத்தான்.

"தேங்க்ஸ்!" தண்ணீருடன் திரும்பியவன் அவள் குரலில் அப்படியே நிற்க,

"மது எங்கே?" என்றாள் அவளே.

"அபி வீட்டுல.." என்றவன் தண்ணீரை அதனிடத்தில் வைத்துவிட்டு அவளைப் பார்த்து திரும்பினான்.

நேராய் அவன் அவளைப் பார்திருக்க, அதில் பேச வராதவள் குனிந்து அமர்ந்து கொண்டாள்.

"பார்த்து வர மாட்ட? கண்ணு எங்க இருந்துச்சு?" என்ற கேள்வி ஆதியிடம் இருந்து.

சட்டென சுபத்ராவிற்கு கண்கள் கலங்கிவிட உடனே நிமிர்ந்திடவும் முடியவில்லை.

எத்தனை அக்கறை அந்த குரலில்.. அக்கறை மட்டுமா? அறிந்தவளுக்கு பேச்சு வரவில்லை.

இதை தானே இத்தனை நாட்களாய் தேடிக் கொண்டிருந்தாள்.. இந்த ஆதி தான் இவள் தேவா.. இவள் விரும்புபவன்.

அவள் பதில் பேசவில்லை. அதை கேட்கவும் இல்லை ஆதி. அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவர் வந்து மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு சென்றார்.

பத்து மணி அளவில் தான் அபி அழைத்தான் ஆதிக்கு.

அப்போது தான் சக்தி அறையில் இருந்து அபியும் சீதாவும் வெளிவர மது அங்கே செண்பகவல்லி மடியினில் அமர்ந்திருந்தாள்.

"மது எப்படி டா இங்க?" சீதா அபியிடம் கேட்க,

"தெரிலையே ம்மா..ஆதி வந்திருப்பானோ.." என்றபடி வந்து கேட்க, அவர் தியாகராஜன் கூறியதை சொன்னதும் அதிர்ந்தவன் உடனே தனது அலைபேசியை எடுக்க நான்கு அழைப்புகளில் இரண்டு ஆதியிடம் இருந்து.

தன்னையே திட்டிக் கொண்டு அழைத்தான் ஆதிக்கு. இன்னும் சக்திக்கு சொல்லி இருக்கவில்லை.

தொடரும்
 
  • Like
Reactions: Durka Janani