அத்தியாயம் 3
இன்று ஞாயிற்று கிழமை.. மதுவின் பிறந்தநாள் வேறு. மது இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அருகில் அவள் தலையை வருடியபடி எழுந்து கொள்ள மனம் இல்லாமல் இருந்தான் ஆதி.
அபி வீட்டிற்கு அழைப்பு கொடுத்திருந்தது நியாபகம் இருந்தாலும் செல்லவா வேண்டாமா என குழப்பத்தில் இருந்தான் ஆதி.
இன்று ஐந்து முடிந்து ஆறாம் வயதை தொடங்கி இருக்கிறாள் மது.
மூன்று வருடங்களுக்கு முன் இங்கே வரும் பொழுது ஆதிக்கும் மதுவிற்கும் அடைக்கலம் கொடுத்தவன் அபி. யார் என்ன என்றே தெரியாமல் தனக்கென ஒரு அடையாளத்தை கொடுத்தவன் அபி. தற்பொழுது வேலைபார்க்கும் இடம் முதல் ஆதி தங்கி இருக்கும் வீடு வரை என எல்லாம் அவனுடையது தான்.
அனைத்தும் பொய் எதுவும் உண்மை இல்லை என்று அனைத்தையும் உதறி தள்ளி வந்தபின்பும் எப்படி அவன்மீது நம்பிக்கை வைத்து நண்பனாய் ஏற்று இங்கே வந்தேன் என்று ஆதி யோசித்தால் அதில் பெரும்பங்கு அபியின் வேலையாய் தான் இருக்கும். என்னுடன் வந்தால் தான் ஆகிற்று என விடாமல் நின்று சாதித்து இருந்தான் அபி.
"குட் மார்னிங் ப்பா!" என்ற சத்தத்தில் தான் பழைய நினைவில் இருந்து மீண்டவன் மதுவைப் பார்த்தான்.
"ஹாப்பி பர்த்டே மை லிட்டில் எஞ்சேல்! வெரி குட் மார்னிங் டா.. எழுந்தாச்சா?" என்று ஆதி கேட்க,
"ஆமாப்பா! என்றவள் சோம்பல் முறித்து கவனமாய் அபி அழைத்ததையும் நினைவில் வைத்திருந்தாள்.
"ப்பா! நாம இன்னொரு நாள் அபி வீட்டுக்கு போலாம்!" மது கூற,
"நானும் அதை தான் டா நினச்சேன்!" என்று ஆதி கூறவும் அழைத்துவிட்டான் அபி.
"அபி தான்!" ஆதி சொல்ல,
"திங்க் ஆப் தி டெவிலா ப்பா?" என்று மகள் கேட்டதில் புன்னகைத்தவன் அதே புன்னகையோடு,
"சொல்லு டா!" என்று கூற,
"ஆதி பாட்டிம்மா எத்தனை மணிக்கு வர்றன்னு கேட்குறாங்க!" என்றான் அபி.
"நானா?" என்று பக்கத்தில் இருந்த செண்பகவல்லி விழிக்க, வாயை மூடி சிரித்தாள் சக்தி.
"டேய்! நான்..." என்று ஆதி கூற ஆரம்பிக்கவுமே,
"சரி மது எழுந்துக்க லேட் ஆகும் இல்ல? அர்ஜென்ட் எல்லாம் இல்ல.. நீ மெதுவா ஒரு பன்னிரண்டு மணிக்கு வா.. சரியா?" என்ற அபி,
"பாட்டிம்மா! மது மதியமா வந்துடுவா!" என்றான் சத்தமாய்.
"டேய் மணி இப்பவே பதினொன்னு டா!" ஆதி முறைப்பாய் கூற,
"சோ வாட்? கிளம்பி வா மேன்!" என்ற அபி,
"என்ன பாட்டிம்மா? பேச போறிங்களா?" என்று கேட்க,
"குடு!" என செண்பகவல்லி கூற,
"அதான் சொல்லிட்டியே! அம்மாகிட்ட வந்து பேசுறேன்னு சொல்லு!" என்று வைத்துவிட்டான் ஆதி.
ஆதி மொபைலை வைக்கவும் "ஹப்பா!" என நெஞ்சில் கைவைத்தான் அபி.
"என்ன டா பண்ணற?" புரியாமல் பாட்டி கேட்க,
"அதெல்லாம் உங்களுக்கு புரியாது பாட்டிம்மா.. அவன் சரியான கேடி! அதான் சின்ன ட்ராமா!" என்று கூற,
"என்னவாம்?" என்றாள் சக்தி.
"வரேன்னு சொல்லிட்டான்.." என்றான்.
"நான் கூப்பிட்டு வராம இருப்பானா அபி?" பாட்டி கேட்க,
"மத்த நாள் ஓகே பாட்டிம்மா! இன்னைக்கி மது பர்த்டே! எப்பவும் அப்பாவும் பொண்ணும் மட்டும் செலிப்ரட் பண்ணிக்குவாங்க.. அதான்!" என்று அபி கூற,
"ஆதிக்கும் எதுவும் இப்ப சொல்ல வேண்டாம்.. சோ வீட்டுலயே பர்த்டேய செலேபிரேட் பண்ணிடலாம்!" என்று சக்தி கூறவும்,
"டபுல் டன்!" என்றான் அபி.
"என்ன பிளான்? எனக்கும் சொல்லுங்களேன்!" என காலை உணவை டேபிளில் பரப்பியபடி கேட்டார் சீதா.
கூடவே ஈஸ்வரியும் எடுத்து வைக்க, கணேசன், தியாகராஜன் என அனைவரும் சாப்பிட வந்தமர்ந்தனர்.
"வேற என்னம்மா! எல்லாம் மது பர்த்டே ஸ்பெஷல் தான்.. வர மாட்டான்னு தோணுச்சு.. அதான் கால் பண்ணி வர்ற மாதிரி பேசிட்டேன்" என்று அபி கூற,
"எதுக்கு இந்த வேலை எல்லாம் உங்களுக்கு?" என்று பொதுவாய் கூறியபடி அமர்ந்தார் கணேசன் அபியின் தந்தை.
"பச்சபுள்ளன்ற நினைப்பு கூடவா இருக்காது.. இல்ல சொந்தபந்தம்னு தான் யாரும் இருக்காங்களா? தனியா ஒத்த புள்ளைய வளக்குறான்.. ஒரு நாள் இங்க வந்து கொண்டாடுனா நீங்க என்ன குறைஞ்சு போயிடுவீங்க?" என்று ஈஸ்வரி நேராய் கணேசனை பேச,
"யாருன்னே தெரியாம நம்ம இன்னொரு வீட்டுல நம்மகிட்ட கூட கேட்காம அவங்களை தங்க வச்சிட்டு வந்து சொன்னான்.. அப்பவும் சரின்னு சொன்னிங்க.. அந்த பாப்பாவை அடிக்கடி கூட்டிட்டு வந்து முறைவச்சு கூப்பிட சொன்னான்.. அப்பவும் சரின்னு சொன்னிங்க.. இப்ப இங்கேயே பிறந்தநாள கொண்டாட போறோம்னு சொல்றான் அதுக்கும் சரினு சொல்றிங்க.. எனக்கு என்னவோ எதுவும் சரியா படல!" என்றார் கணேசன்.
அந்த வீட்டை தன் பெயரில் எழுதி வாங்க நினைத்த போது தான் ஆதியை அந்த வீட்டில் தங்க வைத்திருந்தான் அபி.
அபிக்கும் சக்திக்கும் திருமணத்தை முடித்தால் சொத்து வெளியே செல்லாது என அவர் நினைத்திருக்க, அதற்கும் ஈஸ்வரி குறுக்கே நிற்கிறார்.
இதன் காரணங்களாலேயே பெரும்பாலான நேரங்களில் ஈஸ்வரிக்கும் கணேசனுக்கும் முட்டிக் கொள்ளும். வீட்டு மாப்பிள்ளை என்று செண்பகா பாட்டியும் தியாகராஜனும் அமைதி காப்பர். ஈஸ்வரி அப்படி எல்லாம் நினைக்கவே மாட்டார்.. யார் என்றாலும் நேருக்கு நேர் பேசி விடுவார். இப்போதும் அப்படி தான் நடந்தது.
பேச்சு பெரிதாகும் முன்பே, "விடுங்க மாப்பிள்ள! சின்ன பசங்க இவங்க ஆசையை ஏன் நாம கெடுக்கணும்.. குழந்தைக்கு தானே பண்ணிட்டு போகட்டும்!" அதிகாரம் இல்லை என்றாலும் இறுதியில் அழுத்தமாய் தியாகராஜன் கூறிவிட,
"என்ன சொன்னாலும் கேட்கவா போறீங்க?" என முணுமுணுப்போடு இருந்து கொண்டார் கணேசன்.
"அப்பா ஏன் தான் இப்படி இருக்காரோ!" அபி கோபமாய் சீதாவிடம் மெல்ல கூற,
"நான் கண்டுக்கல இல்ல? அப்ப நீயும் கண்டுக்காத! அவர் பேச்சை கேட்டா தான் மனுஷன் தலைகால் புரியாம ஆடுவார்.. கேட்காத மாதிரி இருந்து பாரு கோச்சிக்கிட்டு எழுந்து போயிடுவார்.. யாருக்கு நஷ்டம்?" என்று கேட்கவும்
"இப்படி தான் இத்தனை வருஷமா அப்ப்பாவை சமாளிக்குறீங்க அப்படி தானே?" என்று அபி சிரித்தான்.
"லாபம் வருதா இல்லையா? அதை மட்டும் பாரு!" என்று கூறி சீதா கண்ணடிக்க,
"சரி தான்!" என சிரித்தான் அபி.
***********
"என்னப்பா வர்றேன்னு சொல்லிட்டீங்க?" என்ற மது கேள்விக்கு,
"இந்த அபி இருக்கிறானே!" என்று ஆதி கூறவும் புரிந்து மது புன்னகைக்க,
"உனக்கு ஓகே தானே?" என்று ஆதி கேட்க,
"அப்பாக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே!" என்றாள் அவன் தேவதை.
"சரி போய் பிரெஷ் ஆகிட்டு வா டா.. டிபன் முடிச்சிட்டு கிளம்பலாம்!" என்றான் ஆதி.
இருவரும் கிளம்பி செல்ல அங்கே அபி அபியின் பெற்றோர், சக்தி சக்தியின் பெற்றோர் என மொத்த குடும்பமும் வீட்டில் தான் இருந்தனர்.
மதுவை அபி அடிக்கடி அழைத்துக் கொண்டு வருவது வழக்கம் என்பதால் அவள் எளிதாய் அங்கே இணைந்துவிட, ஆதி செண்பகவல்லி அருகே அமர்ந்து கொண்டான்.
"என்ன டா போனமுறைக்கு இந்த முறை கொஞ்சம் உள்ள போயிருக்க!" என்று பாட்டி கேட்க, ஆதி புன்னகையை தான் கொடுத்தான்.
கணேசன் தலை அசைத்ததோடு அவர் அறைக்கு சென்றுவிட, அது தான் தேவையாய் இருந்தது அங்கிருந்தவர்களுக்கு.
"ஜூஸ் எடுத்துக்கோ ஆதி!" என்று சீதா கொண்டு வந்து கொடுக்க,
"தேங்க்ஸ் சீதாம்மா!" என்று வாங்கிக் கொண்டான் ஆதி.
"பாட்டி! எனக்கு பெரிய கிளாஸ்ல வேணும்!" மது கூற,
"அப்படியே ஜக்கோட குடுங்க அத்தை!" என்றாள் சக்தி.
"ஏன் குடிக்க மாட்டேனா?" என சக்தியோடு மது சண்டைக்கு நிற்க, வீடு அமர்க்களமாய் மாறியது.
"அப்புறம் ஆதி!" என்று ஈஸ்வரி ஆரம்பிக்கவுமே அபி அங்கே அருகே வந்துவிட்டான்.
மது மேல் ஈஸ்வரிக்கு பாசம் தான் என்றாலும் எதாவது வில்லங்கமாய் பேசி வைத்து விடுவார்.
அதனாலேயே அவன் வர, "இன்னும் எவ்வளவு நாள் நீ மட்டும் தனியா கஷ்டப்பட போற?" என்று ஆரம்பிக்க,
"எனக்கு என்ன கஷ்டம் ம்மா?" என்று புன்னகை தான் செய்தான் ஆதி.
"நீ இல்லைனு சொன்னாலும் பொம்பள புள்ளய வச்சிருக்க.. அதுக்காகவாச்சும்.." என்று பேச வர,
"பாட்டிம்மா! ம்ம்ம்!" என்று அபி கண்ணை அசைக்க,
"இந்தா ஈஸ்வரி! என்னத்த பேசிகிட்டு இருக்க.. ரொம்ப நாள் கழிச்சி வந்த புள்ளைட்ட! இவளுக்கு எப்ப பேசணும்னும் தெரியாது.. எப்படி பேசணும்னும் தெரியாது.. போ போயி சக்தி பண்ணுன கேக் எப்படி வந்திருக்குன்னு பாரு.." என்று கூற, அப்போதும் மெல்லிய புன்னகையை சுமந்தபடி தான் இருந்தான் ஆதி.
"அவ போறா! அந்த வீட்டுக்குள்ளயே இவளை பூட்டி வச்சிருக்கியே டா.. லீவுன்னா இங்க கொண்டு வந்து விட வேண்டியது தானே? நான் ஒரு தனிக்கட்டை கிடக்கேன்.. எனக்கு பேச்சு துணையா இருக்கும்ல?" என்று ஆதியிடம் செண்பகா பாட்டி கேட்க,
"நானும் சொல்லி பார்த்துட்டேன்.. கேட்டா தானே?" என்றான் அபி.
"ஆச்சி! விடுங்க..சார் வரலைனா என்ன இனி நாம ஓடிடலாம் அந்த வீட்டுக்கு.." சக்தி கூற, ஆதி எதுவும் கூற முடியாமல் பல்லை கடித்ததோடு அபியையும் முறைக்க,
"மது! வா உன் பர்த்டேக்கு நீயே டெக்கரேட் பண்ணு!" என்று அபி அழைத்து செல்ல, சக்தியும் உடன் ஓடினாள்.
சக்தியை நினைத்தே ஆதி இங்கே வருவதை தவிர்த்து வருவது. தெரிந்தே அழைப்பு வைப்பவன் அபி.
அபி, சக்தி சொல்ல சொல்ல மதுவும் சேர்ந்து வீட்டின் ஒரு இடத்தினை அலங்கரிக்க, அரை மணி நேரத்தில் அழகாய் காட்சி தந்தது அந்த இடம்.
மதுவை சக்தி கிண்டல் செய்ய, மது சக்தியை பேச, அபி அவர்களை சமாதானம் செய்ய என இரண்டு மணி நேரம் சென்றதே தெரியாமல் இருக்க, ஆதி தன் மகளையும் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும் என செண்பகா பாட்டியுடன் பேசியபடி கவனித்துக் கொண்டு இருந்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு குடும்பத்துடன் அத்தனை மகிழ்ச்சியாய் மது தனது பிறந்தநாளை கொண்டாடி தீர்த்து களைத்து போயிருக்க, நெஞ்சில் எழுந்த வலியை விழுங்கிக் கொண்டு அமைதியாய் நின்றான் ஆதி.
அபியும் அதனை கவனித்தவனுக்கு மனம் தளாமால் போக கேட்கவும் முடியாமல் ஆதியை பார்த்து நின்றான்.
தொடரும்..