அத்தியாயம் 9
மூன்றரை வருடங்களுக்கு முன்:
"முருகா! எனக்கு டிபன் வேண்டாம்.. காபி மட்டும் கொண்டு வாங்க!" என்று கூறிய ஆதி ஷூ லேசை கட்டியபடி டைனிங் டேபிள் அருகே அமர்ந்திருக்க, அங்கிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள் சுபத்ரா.
"அண்ணா! டிபன் ரெடியா? கிளாஸ்க்கு டைம் ஆச்சு!" என்று சுபத்ரா குரல் கொடுக்க,
"வந்துட்டேன் பாப்பா! இந்தாங்க!" என முறுகலான தோசையை அவள் முன் வைத்துவிட்டு சென்றான் முருகன்.
"நான் கூட காபி கேட்டதா நியாபகம்!" சுபத்ராவிடம் பார்வை வைத்து கேள்வியை முருகனுக்கு கொடுக்க,
"பால் காய்ச்சுட்டேன் தம்பி! உங்களுக்கு சுண்ட காய்ச்சணுமே! அதான்.. ரெண்டு நிமிஷத்துல கொண்டு வர்றேன்!" என சொல்லிவிட்டு அவர் செல்ல,
"அதுவரை தோசையை ருசி பார்க்கலாமோ!" என்றவன் எழுந்து வந்து சுபத்ராவின் தோசையை பிய்த்து வாயில் வைக்க,
"ஆரம்பிச்சாச்சு? வேணும்னா அங்க கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே? கிளம்புற நேரத்துல டென்ஷன் தேவை தான் எனக்கு!" என்றவள்,
"எனக்கு இந்த தோசை வேண்டாம்!" என்று எழுந்து கொள்ள,
"அட இரு பாப்பா! காலையிலே சண்டையா? இந்தாங்க.. இதை நீங்க சாப்பிடுங்க!" என இன்னொன்றை கொண்டு வந்து வைக்க, அவனுக்கு எதிர்புறமாய் தோசையுடன் திரும்பிக் கொண்டாள் சுபத்ரா.
"தோசை கொஞ்சம் டேஸ்ட் கம்மி தான்.. காரம் தான் ஜாஸ்தி!" ஆதி குறும்புன்னகை மின்ன கூற,
"பிளைன் தோசையில காரமா? என்ன தம்பி சொல்லுதீங்க?" என்றபடி காபியுடன் வந்தான் முருகன்.
"சுபத்ரா கேட்காதவளாய் சாப்பிட்டபடி இருக்க, "இல்ல சட்னி காரம்னு சொல்ல வந்தேன்!" என்றான்.
"சரியா போச்சு போ! நான் எங்க சட்னி வச்சேன்.. பொடியும் சாம்பாரும் தானே வச்சுட்டு போனேன்!" என்றவர் அங்கிருந்தவற்றை திறந்து பார்த்துவிட்டு,
"என்னவோ ஆச்சு தம்பி! காபி கேட்டு தோசையை சாப்பிட்டீங்க.. இப்ப இல்லாத சட்னி காரம்னு வேற சொல்லுதீங்க!" என்று புலம்பி உள்ளே சென்றார்.
"சட்னிக்கும் பொடிக்கும் வித்யாசம் தெரில..!" சுபத்ரா முணங்கலை கேட்டவன்,
"உன்னால தான் எனக்கு எதுவுமே தெரியல சுபி!" என்றவன் பேச்சில் வாயை மூடிக் கொண்டவள் வேக வேகமாய் சாப்பிட,
"காபி நல்லா இருக்கு! டேஸ்ட் பாக்குறியா?" என்றான் அவளிடம்.
"மாமாவோட தம்பி ஆச்சேன்னு பாக்குறேன்! ஒரு நாள் இருக்கு!" என்றவள் தோள்பையை மாட்டிக் கொண்டு அவனை முறைத்துவிட்டு கிளம்ப,
"அவகிட்ட என்னடா எப்ப பாரு வம்பு?" என்று ஆதி தோள்களில் கைவைத்தான் உதயன். ஆதியின் அண்ணன்.
"சும்மா தான்!" என்றவன் புன்னகையை கண்டும் காணாதவனாய் உதய் சாப்பிட அமர,
"எங்க மது?" என்றான் ஆதி.
"தூங்குறா! முக்கியமான விஷயமா பெங்களூர் வரை போறேன்.. வர நாலு நாள் ஆகும்.. மதுவை பார்த்துக்கோ!" உதயன் கூற,
"ப்ச்! என்ன நீ? ஆவூன்னா பெங்களூரு ஊட்டினு கிளம்பிடுற? என்ன வேலைனு சொல்லு நான் சும்மா தானே இருக்கேன்.. நான் வேணா போய்ட்டு வர்றேன்!" எப்பொழுதும் போல ஆதி கேட்க,
"ஆஃபீஸ் விஷயம் டா.. உனக்கு அதெல்லாம் தெரியாது.. நீ எப்ப ஆபீஸ் வந்து எல்லாம் கத்துக்குறியோ அதுவரை நான் தானே பொறுப்பா பார்த்துக்கணும்?" என்றவன்,
"எதுவும்னா மெசேஜ் பண்ணு பார்த்துட்டு நானே கூப்பிடுறேன்!" என்றான்.
"அவ்ளோ பிஸி!" என்று உதட்டை வளைத்த ஆதி, ஓகே என்றும் கூறி அனுப்பி வைத்தான்.
"முருகா! நான் பசங்களோட வெளில போறேன்.. மது எழுந்து வந்ததும் எனக்கு ஒரு கால் பண்ணுங்க!" என்று கூறி ஆதி கிளம்பி சென்ற சில நிமிடங்களில் கிளம்பி தயாராகி வந்தாள் வளர்மதி. உதயனின் மனைவி.
சாப்பிட அமர்ந்ததும் சூடாய் இட்லியினை எடுத்து வந்து வைக்க, அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை நகரவே இல்லை முருகன்.
கொஞ்சம் அதிகாரப் பேர்வழி.. தான் சொல்லுவதை செய்ய வேண்டும் அதுவே நடக்க வேண்டும்..
"உதய் எங்க?" வளர்மதி கேட்க,
"வெளியூர் போறதா பேசிக்கிட்டாங்க பாப்பா!" என்று பணிவாய் கூறினான். அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.. சாப்பிட்டு எழுந்து கிளம்பிவிட வீடு அமைதியானது.
வளர்மதி, சுபத்ரா இருவரின் அன்னை தந்தை சந்திரா, ராஜசேகர். இருவரும் ராமேஸ்வரம் சென்றிருந்தனர்.
ராஜசேகர் வளமைக்கு அதிகமான சொத்துக்களோடு நிம்மதியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தனர்.
உதயன் வளர்மதியுடையது காதல் திருமணம்.. அதுவும் திருமணம் முடிந்து மூன்று வருடங்களே முடிந்திருக்க, ஒன்றரை வயதில் மது என்ற மகள் இவர்களுக்கு.
கல்லூரியில் ஒரே வகுப்பில் ஆரம்பித்த காதல் ஐந்தாம் வருடம் திருமணத்தை எட்டி இருக்க, உதய்க்கு பெரிதாய் சொந்தம் பந்தம் எதுவும் இல்லாமல் இருக்கவே வீட்டோடு மாப்பிள்ளையாய் சம்மதம் தெரிவித்து வந்திருந்தான்.
ராஜசேகர் தனது அலுவலகத்தை மருமகன் கைகளில் ஒப்படைத்தவர் தானுமே தினமும் அலுவகம் செல்வதை வாடிக்கையாக்கி வைத்திருந்தார்.
கூடவே வளர்மதியின் தாய் தந்தையின் பேச்சும் உரிமையாய் பேசும் உணர்வும் ஆதிக்கு அத்தனை பிடித்தம்.
அவ்வப்போது அவனும் இவர்களோடு வந்து தங்குவது இயல்பான ஒன்று தான் அங்கே!. கூடவே சுபத்ராவின் நாட்டியத்திற்கு பெரும் ரசிகன் ஆதி.
அதனைக் கொண்டே அவளின் மேல் காதல் வர, ரசிகனானவன் காதலனாகி அவள்பின் சுற்றி வருகிறான்.
தெரிந்தாலும் சுபத்ரா அதைப் பெரிதாய் நினைப்பது இல்லை. உதயனின் தம்பி என்ற எண்ணம் மட்டும் தான் அவளிடம்.
மது பிறந்த ஆறு மாதங்களில் எல்லாம் பல மாற்றங்கள் உதயன் வளர்மதி இருவருக்கும்.
இருவரும் பார்த்துக் கொள்வார்களா என்பதை போல தான் நடந்து கொண்டனர்.
தானாக சரியாகிவிடும் என நினைத்திருக்க, ஒரு வருடத்தில் அது பாதையை மாற்றி அமைத்து இருந்தது.
இதில் பெரிதும் பாதிக்கப்பட்டதும் பாதிக்கப் பட இருப்பதும் மகள் தான் என இருவருமே உணரவில்லை.
மாதத்தின் பாதி நாட்களுக்கு மேல் உதயனின் வெளியூர் பயணம் என்றால் வளர்மதியோ வீட்டிலேயே பிரச்சனையை ஆரம்பித்து வைப்பாள்.
"ம்மா! ம்மா!" என்ற வளர்மதி சத்தத்திற்கு,
"சொல்லு வளர்!" என வந்து நின்றார் சந்திரா.
"என்னம்மா இப்படி கத்திட்டே இருக்கு.. என் தூக்கமே போச்சு.. இனி உங்களோட தூங்க வச்சுக்கோங்க.. இரிடேட் ஆகுது!" பெற்ற மகளை வளர்மதி கூற,
"நீ ரொம்ப பேசுற வளர்! குழந்தை பிறந்ததும் தாய்பால் குடுக்க சொன்னா முடியாதுன்னு சொல்லிட்ட.. எவ்வளவு கெஞ்சினோம்? நீயா உனக்கும் காய்ச்சல் இழுத்து வச்சிக்கிட்டு பிள்ளையயையும் படுத்தின.. தாயோட அனைப்புல தான் குழந்தை இருக்கனும்.. இப்ப அதுவும் முடியாதா உனக்கு?" என்று ஆற்றாமையாய் அன்னை கேட்ட போது மதுவிற்கு வெறும் ஆறு மாதங்கள் தான்.
"அய்யோ ம்மா! என்கிட்ட இந்த பிலாசப்பி எல்லாம் பேசாதீங்க.. ஏன் டா கல்யாணம் பண்ணினோம்னு இருக்கு!" என்று முணுமுணுத்து வெளியே கிளம்பி செல்வாள்.
மேலும் அன்னை கேள்வி கேட்டால் "நான் இருக்கணுமா வேண்டாமா?" என்ற கேள்வி தான் வரும் அவளிடம் இருந்து.
எங்கே என்று கூட யாரும் கேட்டதில்லை. திருமணத்திற்கு முன் இருந்த அதே சுதந்திரமும் தனிமையும் என எதிர்பார்க்க தொடங்கிய வளர்மதிக்கு மதுவின் வருகைக்கு பின் அது குறைய ஆரம்பிக்க, மனம் அதில் பொருந்தவே இல்லை.
தன் வாழ்க்கை தன் கையில் இல்லாமல் இருப்பதா? என்ற எண்ணமே அதிகமாகிப் போக, தன்னை தனியே விட்டால் போதும் என்ற நினைவில் இருந்தவள் கணவனானவனையும் கவனிக்க மறந்து இருந்தாள்.
திருமணத்தின் முன் திருமணத்தின் பின் என வளர்மதியின் வாழ்க்கையை எளிதாய் பிரித்துவிடலாம்.
அத்தனை ஆடம்பர வாழ்க்கை. மூத்த மகள் என்ற பொழுதும் எந்தவித தலைபாரமும் இன்றி சுதந்திரப் பறவையாய் வளர்ந்த வளர்மதிக்கு தாய் தந்தை மேல் அதிகப் பிரியம் தான்.
அதுவும் தங்கை சுபத்ராவுடன் சேர்ந்து செய்யாத சேட்டைகளும் ரகளைகளும் ஏராளம்.
அதே வளர்மதியாய் இருக்கவே திருமணத்தின் பின்பும் விருப்பம். தாய் பேச்சு தந்தை பேச்சு எல்லாம் காதில் ஏறவில்லை.
கணவன் என்றவன் பேச்சை எப்போது தன்னிடம் நிறுத்தினான் என்பதும் நியாபகத்தில் இல்லை. அதை கவனிக்கவும் இல்லை.
தற்செயலாய் தான் இதை கவனித்தது ஆதியும் சுபாவும்.
ஆதி எதுவும் பேசாமல் சென்றுவிட சுபத்ரா நேராய் சகோதரியிடம் பலமுறை இதைப் பேசி சண்டை இட்டு வாதாடி, கெஞ்சி என இறுதியில் எல்லாம் வீண் என்றே ஆனது.
இப்பொழுது இதெல்லாம் சாதாரணம் என்பதை போல தான்.
மதுவிற்கு விடுமுறை என்றால் அன்று சுபத்ராவும் வீட்டில் தான். கூடவே ஆதியும்.
தாத்தா பாட்டியோடு சித்தி சித்தப்பா என்ற அணைப்பில் தான் வளர்ந்து வர ஆரம்பித்து இருந்தாள் மது.
மது எழுந்து வரவும் முருகன் அலைபேசியில் அழைத்து ஆதிக்கு கூற, அடுத்த பத்து நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்தான் ஆதி.
"குட் மார்னிங் மது!" என்று வந்தவனைப் பார்த்து புன்னகைத்தவள் கைகளை நெற்றியில் வைத்து மழலை மொழியில் பதில் கூற, ஆதிக்கு அடுத்து மதுவைப் பார்த்து கொள்வது தான் அன்றைய நாளின் பணி.
கல்லூரி முடித்திருந்த ஆதி வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறான்.
கிடைத்த வேலையை செய்ய விருப்பம் இல்லை. அவனை ஏன் வேலைக்கு செல்லவில்லை என யாரும் கேட்கவும் இல்லை. அதனாலேயே மிகப் பொறுமையாய் காத்திருக்கிறான்.
ஆதிக்கு ஏதேனும் வெளி வேலை இருப்பின் மதுவை அந்த தினம் தன்னுடன் இணைத்துக் கொள்வாள் சுபா.
தனிமை என்ற ஒன்று மதுவிற்கு இருக்க கூடாது என நினைத்த அனைவருமே மறந்த ஒன்றும் தாய் தந்தையர் பாசத்தையும் அவள் இழந்து அல்லவா வளர்கிறாள்?
"இன்னும் கொஞ்ச நாள் தான் மதும்மா! அப்புறம் மது, ஆதிப்பா எல்லாம் பிளைட்ல சொயிங்னு ஓடிடலாம்.." என்றவன்,
"சுபி ம்மாவையும் நம்மோட கூப்பிட்டுக்கலாம்" என மதுவின் காதில் ரகசியம் சொல்ல, தனக்கு மட்டுமாய் சொல்லப் பட்ட ரகசியம் என்பதில் ஏக பெருமை கொண்டு கைத்தட்டி புன்னகைத்து தலையாட்டுவாள் மது.
சுபத்ராவிற்கு ஆதியின் மேல் விருப்பம் என்பது வந்திருக்கவில்லையே தவிர, மதுவின் மேல் அவன் வைத்துள்ள பாசத்தில் அவன்மேல் மரியாதை அதிகம் உண்டு.
நேராய் காதலை சொல்லாமல் முதலில் இருந்தே அவளை சீண்டி சீண்டியே தன் விருப்பத்தை அவளுக்கு புரிய வைக்க முயற்சித்து, அதில் வெற்றி பெற்று இப்பொழுது அவள் காதலைப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
தொடரும்..