• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஜதி 8

Admin 02

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
320
54
63
Tamil nadu, India

மீசையில் மண் ஒட்டவில்லை கணக்காகக் கையை இழுத்து கொண்டவர், "வந்த உடனே பெரிய விஷயம் செய்திருக்கீங்க! ரொம்ப நல்லது தம்பி! இது போல நிறையப் பண்ணுங்க"

"கண்டிப்பா அதுக்குண்டே நேனு ஒச்சிஸ்தானு"

இவன் வாயை திறக்காமலே இருந்திருக்கலாம் போல் அவன் மொழி புரியாமல் அமைச்சர் விழிக்க, புகழ் கள்ள சிரிப்பு சிரிக்க, அருகில் நின்றிருந்த தீபனுக்கும் புன்னகை தான்.

"அடங்க மாட்டான் டா இவன்" என்றொரு பார்வை.

"சரி தம்பி நான் கிளம்புறேன். பிரஸ் வெயிட்டிங்! வரட்டுமா! அப்புறம் பார்ப்போம்"

"சீக்கிரமே ஏற்பாடு செய்துட்டா போச்சு " கண்களை மூடி திறந்து புகழ் சொன்ன பாவனையே, அவரை அடித்துப் பிடித்து ஓட சொன்னது.

வெளிவந்தவரை மைக்குகள் சூழ்ந்து விட,

"சர்" என மரியாதை நிமித்தம் சல்யூட் வைத்தவன் "என்ன ண்ணா! போன் லே பேசினது பாத்தாலேன்னு நேர்ல வந்துட்டானா" என்றான், பார்வையை அமைச்சர் மேல் வைத்து.

"நீ வேற அரண்டு போய் வந்நிருக்காரு, எங்க தன் பேர சொல்லிடுவானோ ன்னு மனுஷன்ட்டே ஜீவனே இல்லே! நீ வா " அவனை அழைத்து உள்ளே சென்றான் தீபன்.

புகழ் பணியில் சேருவதற்கான சம்பிரதாயங்கள் அமைதியாகப் போக, அது வரை மௌனமாக இருந்த தீபன்,

"அப்றம் வரும் போதே சரியான கவனிப்பை கொடுத்துட்டு தான் வந்த போல! ஏன் டா உனக்கு இவ்ளோ கோவம் " என்றான் புகழின் நலன் விரும்பியாக.

"சும்மா இருந்தவனை வர வெச்சிட்டு என்னைக் கேக்குறீங்களா நீங்க! பேரு தான் பெத்த பேரு டெபுடிஈஈஈ கமிஷனர்! ஹாயா சேர் ல உட்கார விட்டீங்களா! இன்னும் நான் யாரையும் மீட் பண்ண கூட இல்லே! யாரையும் எனக்குத் தெரியவும் இல்லே"

பெரிய குற்ற பத்திரிக்கை ஒன்றை வாசித்தான், சிரித்துக் கொண்டு தான்.

"ஒன்னே நாள்ல உன் பேரை ஆபீஸ் முழுக்கப் பேச வெச்சவன் பேசுற பேச்சா டா இது! அது சரி உயிர் இருக்கா அவனுங்களுக்கு" புகழை பற்றி நன்றாகத் தெரிந்தவனாகையால் கேட்க,

"பிராணம் மாத்ரம் உந்தி" என்றான் புகழ்.

"அப்ப நான் போன் விளிச்சது நல்லதா போச்சு"

"அவனை இத்தோட விட்டேன்னு சந்தோஷபட்டுக்கோங்க ண்ணா! அவன மாறி ஆளுங்கள எல்லாம் சும்மா எப்டி விட்றது"

"இந்துக்கோ மாரி ஆளுங்ள இன்னும் உயிரோட நடமாட விட்டிருக்குறதே போலீஸ் டிபார்ட்மென்ட் க்கு அசிங்கம் ண்ணா!

எத்தினி குழந்தைங்கள கடத்தி, எவ்வளவு பேர் பணத்தை அடிச்சு புடுங்கி இருக்கானுங்க! இவனுங்க பைல் படிக்கசொல்லோ! ச்சை இப்போ நினைச்சாலும் என் ரத்தம் கொதிக்குது!

"சரி விடு! இனிமே உனக்கு அந்தக் கஷ்டம் இருக்காது" தீபன் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து எதையோ சூசகமாகச் சொல்ல, சொல்ல வந்ததைப் புரிந்து கொண்ட புகழுக்கு அப்படியொரு கட்டுக்கடங்காத கோவம்.

"எனக்குத் தெரியும் ண்ணா! இப்படித்தா நடக்கும்னு! அதுக்குத் தான் சென்னைக்கு வர மாட்டேன் சொன்னேன் நானு! பிடிக்க மட்டும் நான் வேணும் மத்ததுக்கெல்லாம் வேற யாரோவா! அவன என்கிட்டேயே விட்டுடுங்க! ஒரே நாள்ல மொத்த டீடெயிலையும் சப்மிட் செய்றேன்" ஆற்றமையில் பொங்கினான்.

"டே நான் பரையுன்னதக் கேட்டுட்டு பர டா" தீபன் சொன்னதையும் கேட்டானில்லை. சொல்ல வருவதையும் கேட்டானில்லை.

"நான் பாட்டுக்கு என் வழிலே போய்ன்னு இருந்தேன்! வா.. வா சொல்லிட்டு இப்ப என்ன ண்ணா இது! போங்க ண்ணா! சும்மா என்னைத் தான் சமாதானம் செய்வீங்க!" சேரை தள்ளி விட்டுக் கொண்டு எழுந்தே விட்டிருந்த புகழ் வெளியேற போக,

அது வரை அமைதியாக இருந்த தீபன் "புகழ் டேக் யுவர் கேஸ் பைல்" எனக் குரல் கொடுக்க அவன் நடை தேங்கியது.

"எந்துக்கு நான் கஸ்டப்பட்டுக் கண்டுபுடிப்பேன்! நாளைக்கு இதையும் ஒருத்தனுக்குத் தூக்கி குடுப்பேங்கோ" என்றவன் நடக்கத் தொடங்கினான்.

"இட்ஸ் மை ஆர்டர் புகழ்" தீபனின் குரல் உத்தரவாக வர, தன் தவறின் அளவை உணர்ந்தவன்,

"சாரி சர்" பணிவோடு சொல்லி வந்து கோப்பை வாங்கிக் கொண்டான்.

"இந்தக் கேஸ்ல எந்தக் குறுக்கீடும் வராது புகழ், இட்ஸ் அப் பிராமிஸ், பிலீவ் மீ" அவன் கண்ணைப் பார்த்து சொன்ன தீபனுக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது.

புகழ் அவன் உயிரை பணயம் வைத்துச் செயலாற்றிய கேஸ் அது. அவன் இல்லையென்றால் நிச்சயம் பிடிக்க முடிந்திருக்காது.

ஆனால் இப்பொது கொடுக்கப்படிருக்கும் இந்தக் கேஸை வேறு ஒருவருக்குத் தர தீபனுக்கு விருப்பம் இல்லை. காரணத்தை வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை.

அவனுக்கே புரியவில்லை. இதில் எங்கிருந்து புகழிற்கு விளக்குவது. அதை விட அவனாகவே தெரிந்து கொள்ளட்டும். இனித்தாலும் சரி! வலித்தாலும் சரி! என்றே நினைத்துச் சொல்லியிருந்தான்.

'இத நான் நம்பணுமா' என்றொரு பார்வை மட்டுமே புகழ் தந்தவன் "அப்படியே வந்தாலும் ஒபே செய்றது தவிர்த்து என்னால என்ன செய்துட முடியும் சர்" என்றவன் சல்யூட் அடித்து விடை பெற்று போக,

"இதுக்காக நீ எனக்குத் தேங்க்ஸ் சொல்ற திவசம் ரொம்பச் சீக்ரம் வரும் டா! இப்ப போ"

தீபனின் வார்த்தையில் அவன் புருவம் சுருங்கினாலும் திரும்பவே இல்லை புகழ். அதனால் இளந்தீபனின் அர்த்தம் நிறைந்த புன்னகை அவன் பார்வையில் படவேயில்லை.

கையிலிருக்கும் கோப்பு அவன் வாழ்க்கையையே புரட்டி போட போகிறது என்ற விவரம் அறியாமல், அதிலிருந்த விவரங்களைப் புரட்டி கொண்டிருந்தான் புகழ்.

மனதில் எரிந்துகொண்டிருந்த ஜூவாலை அவனை ஒருமுகப்படுத்திக் கவனிக்க விடவில்லை. ஆனாலும் போலீஸ் மூளை விஷயத்தைக் கிரகித்திருந்தது.

படித்தவரையில் இவன் போய் விசாரிக்கவென விஷயம் இருப்பதாய், அப்படியொன்றும் தெரியவில்லை.

ஒரு மரணம். அதைப் பற்றின விவரம் அவ்வளவு தான் தர பட்டிருந்தது.

ஏற்கனவே அங்குப் போலீஸ் சென்று, ஒரு மரணத்தின் போது நிகழ வேண்டிய சாம்பிராதாயங்களைச் செய்து கொண்டிருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும்.

ஆனால் இதற்கு ஏன் தன்னை அனுப்பிப் பார்க்க சொல்ல வேண்டுமென்று தான் புரியவில்லை.

இடம் சற்று பெரிய தலை. ஊரறிந்த தொழில் சாம்ராஜ்யம் கொண்டுள்ள குடும்பம். அதற்காகவாக இருக்கலாம்!

ஆனாலும் தரப்படிருந்த விவரம் படு வீக். இதற்குத் தான் வர வேண்டிய அவசியமே இல்லாத ஒன்று என எண்ணம் வந்து அமர்ந்து கொள்ள, தன்னாலே சலிப்பொன்று வந்து விட,

வாகனம் வர வேண்டிய இடம் வந்து சேர்ந்திருந்தது.

"கண்ணப்பன் அப்டி ஒன்னும் நேரம் எடுக்காது நினைக்கிறேன். வண்டிய திருப்பி வெச்சிருங்க வந்துடுறேன்"

சொன்னவனுக்கு ஒரு நாள் முழுக்க இருந்தாலும், தீராத பிரச்சனைகள் வரிசை கட்ட போகிறதெனத் தெரிய நியாயமில்லை. இனி அடிக்கடி இங்கு விசாரணை என்ற பெயரில் வர போகிறான் என்றும் தெரியவில்லை

அங்கிருந்த ஒவ்வொரு இல்லமும் கிரௌண்ட் கணக்கில் சுற்றி வளைக்கப்பட்டு, கட்டப்பட்டு, அமைதியாக, ஆள் நடமாட்டங்கள் குறைவாக, வசதியானவர்கள் மட்டுமே குடியிருக்கும் வேளச்சேரியின் அந்த ஏரியா,

ஸ்ரீ பிரசாத் மரணம் அதிலும் தற்கொலையா, கொலையா தெரியவில்லை என்ற குழப்பதில் மிகுந்த பரபரப்போடு காட்சியளித்தது.

இரண்டு ஆட்கள் உயரத்திற்கு எழுப்பப்பட்டிருந்த சுற்று சுவருக்குள், இது நாள் வரை கம்பீரமாக வீற்றிருந்த அந்த மாளிகை,

வெளியே டிவி சேனல் ஆட்களின் வரவாலும், பத்திரிகை ஆட்களின் ஆக்கிரமிப்பாலும், பொது மக்களின் ஆர்வத்தாலும் தன் அமைதியை தொலைத்திருந்தது.

வினோதினி இல்லம்!

வண்டியை விட்டுப் புகழ் இறங்க "சர்" என வந்தான் கமல்.

"நீங்க வர்றதா இப்ப தான் கமிஷனர் சர் போன் பண்ணாரு" மூச்சிரைத்தது அவனுக்கு. ஓடி வந்திருப்பான் போல.

"ம்ம்" என்றவன் நின்று சூழ்நிலையைக் கிரகித்து, பின் நடக்க ஆரம்பிக்க,

புகழை பார்த்ததும் கேஸ் சீரியசோ என நினைத்து, மைக்குகள் அவன் முன் நீண்டு வர,

"எந்துக்கு யா இவ்ளோ கூட்டத்த சேர்த்து வெச்சிருக்க! யாரு இவங்களை எல்லாம் அலோவ் பண்ணது"

அவர்கள் காது படவே கேட்டவன், அவர்களின் முறைப்பை கடந்து உள்ளே சென்று விட,

காவலர்கள் இருவரை அழைத்து விலக்கி விடச் சொன்னான் கமல்.

"என்ன யா இப்டி பேசுறாரு! பிரஸ் நம்மகிட்டே இப்டி பிஹேவ் செய்றாரு" அவர்கள் தடுமாறி நிற்க, சிரிப்பு வந்தது கமலுக்கு.

சற்று நேரத்திற்கு முன் தான் கமலை உண்டு இல்லை ஆக்கி இருந்தனர். இதற்கும் எல்லாம் முடிந்த பிறகு விவரம் சொல்வதாகவும், கலைந்து செல்லுமாறும் சொல்லி இருந்தான். கேட்கவில்லை அவர்கள்.

"உங்க கடமையை நீங்க செய்ற போல எங்க கடமையை நாங்க செய்ய விடுங்க சர்" எனப் பேசி இருந்தனர்.

'உங்களுக்கெல்லாம் இவர் தான் சரி' நினைத்தவன் புகழ் பின்னால் ஓட, இருவரும் உள்ளே வந்ததும் அந்தக் கேட் இழுத்து சாற்ற பட்டது.

"என்னயா ஹிஸ்ட்ரி" புகழின் கேள்விகளுக்கு தனக்குத் தெரிந்த வரை பதில் சொல்லிக்கொண்டுவர, மாளிகை அலங்காரங்கள் புகழை இன்னும் கேள்வி கேட்க வைத்தது.

"முந்தின நாள் தான் சர் அவர் பிள்ளைக்குப் பர்த்டே கொண்டாடி இருக்கார். கையோட ரெண்டாவது மேரேஜ்க்கும் அனவுன்ஸ் செய்திருக்கார் அதுக்குள்ள இப்டி "

இல்லத்திற்குப் போகும் பாதையில் நின்று இருவரும் பேச, புகழுக்கு ஏதோ ஒரு உணர்வு உந்தியது முதுகு துளைக்கும் பார்வை என உணர்ந்தது காவலனின் உள்ளுணர்வு.

சட்டென நடையை நிறுத்தினான். பின் சந்தேகம் வராமல் சுற்றுப்புறத்தை அளவெடுப்பது போல நின்று கொண்டான். மெதுவாகக் கீழ் கண்ணால் பார்வையைச் சுழல விட, அங்கங்கு நின்றயிருக்கும் காக்கி சட்டைகள் தவிர்த்து யாரும் இல்லை.

அப்படியே போர்ட்டிகோ, பார்க்கிங் ஏரியா, இரண்டு பக்கமும் நன்றாகப் பராமறிக்கப்பட்டு அழகுற கிடக்கும் கார்டன், என அலசி ஆராய்ந்தான்.

பட்டெனக் கதவொன்று இழுத்துச் சாற்றப்படும் சத்தத்தில், கவனம் மொத்தம் அவனுக்கு மேலே போக, வலது பக்கமாக நன்றாகப் பெரிய பால்கனி. அங்கிருந்து தான் யாரோ தன்னைப் பார்த்திருக்கக் கூடும் எனத் தோன்றியது.

நடையை அந்தப் பக்கம் எட்டி போட தோன்றியதை "சர் இந்தப் பக்கம்" என அழைத்துக் கலைத்தான் கமல்.

உள்ளே செல்ல, அங்கே நின்றிருந்த ஒன்றிரண்டு காக்கி சட்டைகள் தவிர்த்து, வேறு நடமாட்டாங்கள் இருப்பதாய் தெரியவில்லை. புகழின் புருவம் சுருங்கி விரிந்தது. என்னவெனக் கமலை பார்க்க,

"சர் சீன் பார்ஸ்ட் ப்ளோர் " என்றான்.

வேகமாக இரண்டு படிகளாகத் தாவி ஏறியவனுக்கு, வெல் பர்னிஷ்ட் ஹாலில் மூவரின் புகைப்படம் பெரிய அளவில் மாட்டபட்டிருந்தது கண்களில் பட்டது.

"சர்.. அது ஸ்ரீபிரசாத் ஒய்ப் போட்டோ பக்கத்துல இருக்கறது பாதர் இன் லா, மதர் இன் லா"

ஓஹ் என்றவனுக்கு அடுத்துக் கண்களில் பட்டது, நினைத்ததை விடக் குவிக்கப் பட்டிருந்த காவலர்களும், இன்வெஸ்டிகேட்டிவ் ஆட்களும், பாரென்சிக் ஆட்களும் தான்.

டு நாட் கிராஸ் தடுப்புகள் போடப்பட்டு அவரவர்கள் வேலைகளைப் பார்த்தபடி இருக்க, நினைத்ததை விடச் சூழல் வேறு மாதிரி இருந்தது.

"எந்துக்கு யா சூசைட் கேஸ் க்கு இவ்ளோ ஆளுங்கள வர வெச்சிருக்கே" சற்று எரிச்சலாக வினவ,

அதற்குக் கமல் சொன்ன பதில் அவசியத்தைச் சொன்னது.

தீவிரம் புரிய, சம்பவம் நடந்த இடத்திற்கு எதையும் தொடாமல் உள் நுழைய போக, ஸ்ரீ பிரசாத் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதும், உடலை சுற்றி கோடு போட பட்டு தடயவியல் நிபுணர்கள் அதைச் சுற்றி ஆராய்ந்தபடி இருப்பதும் பார்வைக்குக் கிட்டியது.

இவனைப் பார்த்ததும், யூனிப்பார்ம் வைத்து அடையாளம் கண்டு, மற்றவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு வேலையைப் பார்க்க போக,

"எனி திங் இம்பார்டென்ட்" என விசாரணையின் அளவை கமலிடம் கேட்டான்.

"எஸ் சர்" என்றவன் கழுத்து அறுபட்டு உயிர் போயிருக்கு சர். பார்க்க சூசைட் போல இருந்தாலும் மர்டர் அட்டெம்ப்ட்டும் நடந்திருப்பதுக்கான அடையாளம் உடம்புல இருக்கு. வெளியருந்து புதுசா யாரும் வந்து போன மாதிரி தெரியல. எந்தப் பொருளும் திருடு போன மாதிரியும் தெரியல. மோட்டிவேஷன் ரொம்பக் குழப்பமா இருக்கு சர். முக்கியமா" எனக் கமல் இழுக்க..

'மேல சொல்லு' என்பது போல் புகழ் பார்க்க..

"நெக் கட் செய்த கத்தியில பிங்கர் பிரிண்ட்ஸ் இல்லை சர். இன்க்ளுடிங் விக்ட்டிம் பிங்கர் பிரிண்ட்ஸ்" என,

"வாட் " என்றான் புகழ். "என்ன யா சொல்றே"

"எஸ் சர் கத்தில இருக்க ரத்த கறை அதுல தான் கழுத்து அறுக்கப் பட்டுதுன்னு காட்டுது. ஆனா ஹேண்டில் மட்டும் வெரி கிளீன். யாரோ மாட்டிக்கக் கூடாதுனு மெனக்கெட்டிருக்காங்க சர். துப்பு கிடைக்குதா ன்னு மும்முரமா சரவுண்டிங் பிங்கர் பிரிண்ட்ஸ் ப்ராசஸ் சர்ச்சிங் ப்ராசஸ் போகுது சர்"

"பெரிய இடம் னாலே குழப்பம் தான் போல" மனதில் நினைத்தவன்,

"யாரு மொதல்லே பார்த்தது" எனக் கேட்க

அவன் கை காட்டிய இடத்தில் அழுது ஓய்ந்த முகத்துடன், அயர்ந்து போய்ச் சோபாவில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியும், அவரை ஒட்டி ஒரு பெண்ணும், ஒரு ஆணும் அவன் பார்வைக்குக் கிட்டினர். அவர்கள் பார்வையும் இவன் மேல் இருந்தது.

 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
வினோதினிய வீரட்டிக்கிட்டு போனவன் வீட்டுல செத்துக்கடக்கானே 🤔🤔🤔🤔🤔🤔🤔