• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தனிமை எனும் ஏழ்மை

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,097
543
113
Tirupur
*_தனிமையே மிகப் பெரும் ஏழ்மை என ஒரு பதிவினைக் கண்டேன்._*


என்னைப் பொருத்த வரையில் நம்மைச் சூழ நல்ல உறவுகள் அற்று இருப்பதே ஏழ்மை (தாய் தந்தை என இரு உறவு இருக்கும் வரையில் இங்கு எவரும் ஏழையல்ல).

Positive ஆன மக்கள் உங்களைச் சூழ இல்லை எனில் நீங்களே அவ்வாறான மக்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

தனிமை ஒன்றும் ஏழ்மை கிடையாது. தனிமையைத் தேர்ந்தெடுப்பவர்கள் நாமாகத் தான் இருக்க வேண்டுமே தவிர அது பிறரால் கொடுக்கப்பட்டதாக அமைந்து விடக் கூடாது. அதற்கு நீங்கள் இடமும் தரக் கூடாது.

தனிமை என்பதை உருவாக்கிக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு தனிநபரின் பலத்தையும் பலவீனத்தையும் தனிமையில் தான் உணர்ந்து கொள்ள முடியும்.

தனிமை உங்களுக்குக் கிடைக்கும் முதல் சுதந்திரம்; உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களில் ஒன்று; உங்களது எழுச்சிக்கான முயற்சிகளில் ஒன்று; நீங்கள் சிந்திப்பதற்காகத் தரப்பட்ட கால அவகாசத்தில் ஒன்று;

உங்கள் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு களம்; உங்களை நீங்கள் அறிந்து கொள்ள அவிழ்க்கும் முடிச்சுக்களில் ஒன்று; வெற்றிப் பாதையின் படிக் கற்களில் ஒன்று.

தனிமையைச் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ள நினைத்தால் தனிமையை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் அதுவே தன்னம்பிக்கையை அசுர வேகத்தில் தரக் கூடியது.


IMG_20220519_063731_009.jpg

🌷🌷