தனிமை கதவின் தாள் நீக்க வா பாகம் 7
"என்ன மாமா சொல்றீங்க? மறுபடியும் இன்னொரு லெவல் இன்டர்வியூவா"
என்றான் பிரணவ்ராஜ்.
"ஆமாம் பா, நீயும் இன்னொரு கேண்டிடேட்டும் ஒரே ஸ்கோர் எடுத்திருக்கீங்க. அதனால லாஸ்டா ஒரு ரவுண்டு இன்டர்வியூன்னு சொன்னாங்க பா"
"சரி மாமா, இன்னைக்கே உடம்பு சரியில்லை என்று சொல்லி ஆஃபீஸ்ல லீவு கேட்டேன். நாளைக்கு என்ன காரணம் சொல்றது?"
"உடம்பு இன்னும் சரி ஆகலைன்னு சொல்லு"
" ஓகே மாமா, அந்த இன்னொரு கேண்டிடேட் பேரு ஆதிராவா?"
" உனக்கு எப்படி தெரியும்? "
" அவங்க கிட்ட இன்னைக்கு பேசினேன் அதனால, ஒருவேளை அவங்களா இருப்பாங்களோ என்று நினைத்தேன் "
" அவங்களே தான். உன்னை போலவே அவங்களும் ரொம்ப திறமைசாலி "
" அப்போ எனக்கு நாளைக்கு டஃப் காம்படிஷன் இருக்குன்னு சொல்றீங்களா மாமா"
" கண்டிப்பாடா அதுல என்ன சந்தேகம்? "
" ஓகே மாமா, நாளைக்கு காலைல பார்க்கலாம். குட் நைட் "
"பை டா, குட் நைட்"
ஃபோனை வைத்த பிரணவ்ராஜ் 'மறுபடியும் நாம் ஆதிராவை பார்க்கப் போகிறோம்' என்று நினைத்து சந்தோஷமாக இருந்தான்.
அதே நிலைதான் ஆதிராவிற்கும்.
'நாளை பிரணவ் என்ன கலர்ல ஷர்ட் போடுவாரு? நாளைக்கு எப்படியாவது ஃபோன் நம்பர் வாங்கனும். அவருக்கும் இதே போல எண்ணம் இருக்குமா?' என்று பலவாறு யோசித்துக் கொண்டே பின்னர் உறங்கினாள்.
இன்டெர்வியூ என்பதை விட ஆதிராவை மறுபடியும் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது பிரணவ் ராஜூக்கு.
ஆதிரா தன் அப்பாவுக்கு முன்னால் கம்பனிக்கு வந்து விட்டாள். பிரணவ் ராஜின் வருகைக்காக காத்திருந்தாள்.
இன்டெர்வியூக்கு இரண்டு பேரையும் ஒன்றாக அழைத்து கேள்விகளை கேட்கச் சொன்னார் ராஜேந்திரன்.
ரெக்ரூட் செய்பவர்களுக்கு எதற்காக இந்த இன்டெர்வியூ என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் முந்தைய நாளே பிரணவ் ராஜை செலக்ட் செய்து ரிப்போர்ட் சப்மிட் செய்திருந்தனர்.
ஒருவேளை பெரிய ஆட்கள் யாராவது ஆதிரா என்ற கேண்டிடேட்டுக்கு ரெக்கமன்டேஷன் பண்ணிருப்பாங்க போல? என்று நினைத்து கொண்டு இன்டெர்வியூ எடுத்தார்கள்.
இருவருமே போட்டி போட்டுக் கொண்டு சரியான வேறுபட்ட இரண்டு பதில்களை கூறினார்கள்.
இருவரது டெஸ்ட் ரிப்போர்டையும் பிரபாகரனிடம் சப்மிட் செய்தார்கள் ரெக்ரூட்டர்ஸ்.
பிரபாகரன் ராஜேந்திரன் டேபிள் மீது அந்த ரிப்போர்ட்டை வைத்தார். பிறகு இருவரிடமும் வந்து,
" நீங்க ரெண்டு பேரும் ஒன் ஹவர் வெயிட் பண்ணீங்கன்னா, இப்போதே தெரிஞ்சிடும். சாரோட டேபிள்ல உங்க ஃபைல்ஸ் வச்சிருக்கேன். இன்னைக்கே அப்பாயிண்ட் பண்ணிடலாம்னு பாஸ் சொன்னாரு"
"ஓ, ஓகே சார்" என்றாள் ஆதிரா.
"சரிங்க மாமா" என்று ஆர்வத்தில் சொல்லிவிட்டான் பிரணவ் ராஜ்.
"என்ன? இவர் உங்க மாமாவா?" என்று தெரியாதது போல கேட்டாள் ஆதிரா.
"ஆமாம் மேடம்"
"தெரிஞ்சு போச்சு, எனக்கு இந்த வேலை கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு.
நேத்து ஃபர்ஸ்ட் லெவல்ல செலக்ட் ஆகி அப்பாயின்ட் ஆகற நேரத்துல மறுபடியும் இன்னைக்கு செகண்ட் லெவல்னு சொல்லி வர சொல்லும்போதே நெனச்சேன்.
வேற யாராவது ரெக்கமண்டேஷன்ல வந்து இருப்பாங்கன்னு. நீங்கதானா அது?"
"அய்யோ, அப்படி எல்லாம் இல்ல. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க" என்று ஆதிராவை பார்த்து சொல்லிவிட்டு தன் மாமாவிடம்,
"மாமா, நீங்க சொல்லுங்க" என்றான் பிரணவ்ராஜ்.
ஒரு நொடி ஏன் ஆதிரா இவ்வாறு எல்லாம் பேசுகிறாள் என்று புரியாமல் விழித்தவர், பின்னர் ஆதிராவை பார்த்து,
" எங்க கம்பெனியை அப்படியெல்லாம் நினைக்காதம்மா, எங்க பாஸ் ஓட பொண்ணாகவே இருந்தாலும் திறமை இருந்தா தான் இங்க வேலை. திறமை உள்ளவங்க யாரையும் மிஸ் பண்ண கூடாதுன்னு எங்க பாஸ் ஓட பொண்ணு சொல்லி இருக்காங்க" என்றார்.
அவர் சொல்வதின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ஆதிரா ஸ்மைல் செய்தாள்.
" எங்க சின்னம்மா பேரு கூட ஆதிரா தான் "
" தெரியுது சார் அதான் ஆதிரா இண்டஸ்ட்ரீஸ் என்று பெயர் இருக்கே? "
" உங்க ஃபுல் நேம் என்ன? " என்றான் பிரணவ்ராஜ் ஆதிராவை பார்த்து.
திடீரென்று அவன் அப்படி கேட்டதால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு நொடி யோசித்தாள்.
பின்னர்,
"நான் ஆதிரா இந்திரன்" என்றாள்.
"ஓ, ஓகே"
"ஓகே நீங்க வெயிட் பண்ணுங்க நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்" என்று சொல்லிவிட்டு சென்றார் பிரபாகரன்.
வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தனர் இருவரும்.
" பிரணவ், கேண்டின் போய் ஏதாவது குடிச்சுட்டு வரலாமா?"
" நானே கேட்கலாம்னு நினைச்சேன். நீங்க ஏதாவது தப்பா நினைச்சுப்பீங்களோன்னு தான் அமைதியா இருந்துட்டேன்"
" இதில் என்ன இருக்கு தப்பா நினைக்க? "
" இல்ல, நேத்து தான் பார்த்தோம். இன்னைக்கே காஃபி குடிக்க போகலாம் என்று கேட்டா? நீங்க ஏதாவது திட்டிட போறீங்க என்ன பயந்தேன் "
" என்னை பார்த்தா உங்களுக்கு திட்ற மாதிரியா இருக்கு? "
" சத்தியமா இல்ல, நேத்து நான் உங்க மேல குங்குமத்தை கொட்டுனதுக்கே நீங்க கோபப்படாமல் அமைதியா இருந்தீங்களே? அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன் நீங்க ஒரு சாந்தமான பொண்ணுன்னு"
ஸ்மைல் செய்தாள் ஆதிரா.
பிறகு இருவரும் கேண்டீனுக்கு சென்று காஃபி ஆர்டர் செய்து குடித்தனர்.
ஆதிராவிற்கு அவனுடைய போன் நம்பரை கேட்க சங்கடமாக இருந்தது.
' முதலில் பிரபாகரிடம் கேட்டுக் கொள்ளலாம்' என்றும் நினைத்தாள்.
பிறகு, 'வேண்டாம் அவர் தப்பாக நினைப்பாரோ?' என்று யோசித்து அமைதியாக இருந்தாள்.
இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது.
இருவருக்குமே மற்றவரிடம் நம்பரை கேட்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
முக்கால் மணி நேரத்திலேயே, இருவருக்கும் அழைப்பு வந்தது.
ஃபிரண்ட் டெஸ்கிற்கு வந்து பார்க்க சொல்லி கால் செய்தார் ரிசப்ஷனிஸ்ட்.
இருவரும் அங்கே சென்றபோது,
இருவருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்தார் பிரபாகரன்.
" எப்படி சார்? எங்க ரெண்டு பேரையுமே செலக்ட் பண்ணிட்டீங்களா? "
" ஆமாம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் டிசிஷன் மேக்கிங் ப்ராசஸ் எல்லாம் பண்ணனும் "
" ஓகே மாமா, தேங்க்ஸ் மாமா"
" தேங்க்யூ சார் "
என்று சொல்லிவிட்டு சந்தோஷமாக ஆஃபர் லெட்டரை வாங்கிக் கொண்டார்கள் இருவரும்.
பிரணவ்ராஜுக்கு மனதிற்குள் மகிழ்ச்சி. 'தனக்கு வேலை கிடைத்தால் அவளுக்கு வேலை கிடைக்காதே. அவளை இதோடு பார்க்க முடியாது' என்று நினைத்தான்.
பின்னர் 'அவளுக்கு வேலை கிடைத்தாலும், தனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காதே. கடவுளை இதற்கு ஏதாவது ஒரு நல்ல தீர்வை கொடு' என்று அவன் வேண்டிக் கொண்டதின் பலனாக இந்த ஆஃபர் லெட்டரை நினைத்தான்.
தினமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதற்காகவே வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். பின்னர் அவர்களின் பழக்கம் நெருக்கமானது.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் சொல்லிக் கொள்ளவில்லை.
ஒரு நாள் ஒருவர் வரவில்லை என்றால் மற்றொருவருக்கு அன்றைய நாள் முழுவதும் வேலையே ஓடாது.
ஃபோனில் மற்றவரிடம் பேசிய பிறகோ அல்லது வீடியோ காலில் பார்த்த பிறகு தான் ஆஃபீஸில் வேலையை செய்ய தொடங்குவார்கள்.
அதிராவை பற்றி கம்பெனியில் தெரியவில்லை என்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்று அறசல் புறசலாக பேசிக் கொண்டனர். இந்த விஷயம் ராஜேந்திரனுக்கு தெரிந்தது.
வீட்டில் தன் மகளை கூப்பிட்டு பேசினார்.
" என்னம்மா கம்பெனியில நீயும் பிரணவராஜும் லவ் பண்றதா பேசுறாங்க " என்றார் ராஜேந்திரன்.
" அப்பா நானே உங்ககிட்ட இத பத்தி பேசணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்" என்றாள் ஆதிரா.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.