• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாட்சாயணி தேவி ..2

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
71
28
Karur
அத்தியாயம் ..2


சக்திவேந்தனின் தோளில் சாய்ந்து நின்ற தாட்சாயணியை சில நிமிடங்கள் தோளோடு அணைத்து விடுவித்தவன், ''மேடம் அரசியல் களத்திலும் கலக்கப் போறீங்க.. எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அங்கே ஜெயித்து நிற்கும் என் யட்சணிக்கு இருக்கும் திறமை யாருக்கும் வராது'',…என்று சொன்னவன்..


''உன் பலம் எது? என்று உனக்குத் தெரியாது டா.. அனுமனுக்குள் இருக்கிற பலம் அனுமனே அறியாதைப் போல உனக்குள் இருக்கும் பலத்தை உன்னால் உணர முடியாது.. அது எனக்குத் தெரியும் .. இங்கே நீ தனித்துவமானவள்.. உன் அப்பா இக்கட்சியின் தலைவராக இருந்தாலும் நீ உன் திறமையாலும் அறிவாலும் இந்த வயதிலே கட்சியின் பொதுச் செயலாளராகப் பதிவு ஏற்பது என்பது சாதாரணமான விஷயமில்லை.. எதற்கும் பயப்படாமல் துணிவுடனும் உறுதியாக உன் பேச்சிலும் செயலிலும் இருந்தாலே நீ தான் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் ராணியாக இருக்க முடியும்'', என்று தெளிவாகச் சொல்லிய சக்திவேந்தனின் கண்களை உற்றுப் பார்த்தாள் தாட்சாயணி.


அக்கண்களில் கண்டது எல்லாம் கரை காணாத நேசமும் அன்பும் மட்டுமே நிறைந்திருக்க இதைத் தவிர வேறு எதுவும் தனக்குத் தேவையில்லை என்ற எண்ணம் மட்டுமே அவளுள் தோன்றியது.


ஆனால் தன் அப்பாவின் ஆசையும் தன்னவனின் கோரிக்கையால் இதை ஒத்துக் கொண்டாலும் இதனால் கட்சிக்குள் எழும் பூசல்களும் குழப்பங்களும் உண்டாகும்.. இதனால் கட்சிக்குள் பிளவுகளும் வரலாம்.. அப்படி எல்லாம் நடக்காமல் எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் தன் அப்பாவுக்கும் கட்சியில் இல்லாமல் அதற்காக துணை நிற்கும் சக்திக்கும் தன்னால் எந்த அவச்சொல்லும் வராமல் இருக்க வேண்டும் ..


நேர்மையும் எதற்கும் அஞ்சாத உறுதியான நெஞ்சோடு முகத்திற்கு நேராக பேசும் வஞ்சகப் புகழ்ச்சிகளை எல்லாம் கடக்கப் பழக வேண்டும் என்பதை நினைக்கும்போதே தாட்சாயணிக்கு மலைப்பாக இருந்தது.


அவளுக்குள் அவள் சுய அலசலில் மூழ்குவதற்குள் அதைத் தடுக்க ''யட்சணி'', என்று அழைத்துத் தன் பக்கம் திருப்பியவன் , ''இங்கே கட்சிக்குள் நுழைந்து விட்டால் நேர்மையை விட்டுக் கொடுக்காமல் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் செய்யும் காரியங்கள் அனைத்தும் மக்களின் நன்மைக்காக மட்டுமே இருக்கணும் என்று மட்டும் உறுதியாக இரு… நீ சம்பாதிக்கவோ ஊழல் பண்ணுவர்களை அனுசரித்துப் போவதோ வேண்டியதில்லை.. உன் திறமை மேல் நம்பிக்கை வைத்தால் ஜெயித்து விடுவாய் நீ'', என்று அவளுக்குத் தைரியத்தை அளித்தவன்..


''இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருந்தால் பூஜை நேரக் கரடியாக அத்தயம்மா வந்து விடுவாங்க .. வா கீழே போகலாம்'', என்று அழைத்தவனின் தோளில் அடித்தவள் ..


''எங்கம்மா உனக்குக் கரடியா இரு… கீழே போய் சொல்கிறேன்'',.. என்று அவனை விட்டு விலகி முன்னே நடக்க,


அவளை இழுத்துப் பிடித்த சக்தி அவளின் முகவடிவை விரல்களால் கோலமிட்டு நுதலில் அச்சராமாக முத்தமிட்டவன்… ''இது நீ கட்சியில் ஜெயித்தற்கான என்னுடைய பரிசு'', என்று சொல்லியவனின் அன்பில் உருகிக் கரைந்தவள்,


அவனிடம் கேலியாகச் ''செலவில்லாத பரிசு அப்படி தானே அத்தான்'', என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டவளை, முறைத்த சக்தி..


''உனக்குனு எவ்வளவு விலை கொடுத்து ஆயிரம் பொருட்கள் வாங்கினாலும் என்னால் கிடைக்கும் இந்த அன்பு முத்தத்தை யாராலும் தர முடியாது செல்லக்கிளி'', என்று அவள் மூக்கின் நுனியை கிள்ளியவன், ''வா கீழே போகலாம்'', என்று அழைத்து வந்தான்..


கிள்ளியை இடத்தைத் தேய்த்தப் படி வந்த தாட்சாயணி ''உன் கை நகத்தை வெட்டு அத்தான்'',.. என்று சொல்லிவிட்டு அவனை முந்திக் கொண்டு கீழே ஓடினாள் தாட்சாயணி.


செய்யப் போகிற பதவிக்கும் இப்ப ஓடுகிற குமரிக்கும் சம்பந்தமே இல்லாத உணர்வு தான் உண்டானது சக்திக்கு…


எவ்வளவு பெரிய பொறுப்பில் அமரப் போகிறவள்.. அதைவிட்டு சிறு பிள்ளையா துள்ளிக் கொடுத்து ஓடுகிறவளை இழுத்துப் பிடித்து நிறுத்தியவன் அவள் கண்களை ஊடுருவிச் சொன்ன வார்த்தைகளில் இருந்த மெய்யை உணர்ந்தவள் அதன்பின் நடையில் நிதானமும், முகத்தில் எந்தவித பாவனையின்றி மாடியிலிருந்து கீழே இறங்கினாள்..


அதைப் பார்த்தவனுக்கோ இதயம் சுருக்கென்று வலி கொடுக்க .. ''இனி எதிலும் கவனமில்லாமல் இருக்கக் கூடாது டா..உன்னைச் சுற்றிருக்கும் ஆயிரம் கண்களும் உன் மேல் தான் இருக்கும்.. சிறு பிசகு ஏற்பட்டாலும் அங்கே நீ வேறு விதமாய் சித்திரிக்கப்படுவாய்'', என்று சொன்னதால் அவள் சட்டென்று புரிந்து கொண்டு நிதானமானாள்..



ஆனால் சக்தியோ 'அவளின் மீது அளவுக்கு மீறிய பொறுப்பை திணித்து அவளின் இயல்பை தொலைக்க வைத்து விடப் போகிறோம் என்று நினைத்தபடி'', அவளின் பின்னே இறங்கினான் சக்திவேந்தன்.


கீழே வந்தவள் சாமியறையில் நின்று கும்பிட்டுவிட்டு திருநீறு பூசிக் கொண்டவள் அவளைத் தாண்டி செல்லும் சக்தியை இழுத்து வைத்து அவனின் நெற்றியிலும் பூசி விட்டாள்..


அதைத் தடுக்க முயன்றவனை முறைத்தவள், ''திருநீறை துடைச்சே அவ்வளவு தான் அத்தான்'', என்று மிரட்டிவிட்டு டைனிங் ஹாலில் நுழைய அங்கே இவர்களுக்காகக் காத்திருந்த மகேஷ்வரனும் உமாதேவியும் கண்டு ''குட்மார்னிங் பா.. மா'', என்றவளை ''வாடா தங்கம்'', என்று அழைத்துத் தன்னருகில் மகளை உட்கார வைக்க,


சக்தியோ மகேஷ்வரனை முறைத்து, ''மகளைக் கண்டதும் நான் தூரமாகப் போயிட்டேன்'', என்று வம்பிளத்தவனைக் கண்டு கடகடவென்று சிரித்தவர் ''நீங்க இருவரும் தான் என் இரு கண்கள் .. இரண்டில் எது பெரிது என்று கேட்க முடியுமா கண்ணு'', என்று சொல்லி சக்தியை அழைத்து தன்னில் இடதுப் பக்கமா அமர வைக்க,


உமாதேவியோ.. ''ஒஹோ அப்ப அவர்கள் இருவரும் உங்களுக்கு உசத்தி.. நான் என்ன தக்காளி தொக்கா உங்களுக்கு'', என்றவரை..


'' மா நீ தக்காளி தொக்கு அல்ல பச்சை மிளகாய் தொக்கு.. எப்பவும் காரமாகவே கடிச்சுக்கிட்டே இருக்க'', என்று மகளின் கிண்டலில் அவளை முறைக்க…


மகேஷ்வரனோ ''அவர்கள் கண்கள் என்றால் நீ அதுக்கு உயிர் கொடுக்கும் பரதேவதைடி .. என்னில் பாதி நீதானே தேவி '', என்று மகேஷ்வரனின் வசனம் பேச்சில் எல்லாரும் சிரிக்க..


''அப்பா இப்படியே பேசிப் பேசியே தானே மக்களை கவிழ்த்தது ,அப்படி தானே'', என்று கேலியாகக் கேட்க …


''உன் அம்மாவிடம் பேசணும் என்றால் அதுக்கு நான் தனியாக டியூசன் தான் செல்லணும்.. வார்த்தைக்கு வார்த்தை அதுக்கான பொருளை அகராதியில் தேடுவதுக்குள் எனக்கு வயசாகிரும்'', என்று சொல்லிச் சிரித்தார் மகேஷ்வரன் ..


''மாமா இப்பதான் உங்களுக்கு இளமை திரும்புதோ'' என்று சக்தி நய்யாண்டியாகக் கேட்க ..


''இப்ப எனக்கு என்ன வயசாச்சு'' .. என்று கேட்டவருக்கு ''ஏமிரா நீயே சொல்லு'', என்று மனைவியிடம் கேட்டவரை..


உமாதேவியோ ''இப்ப தான் இருபத்தைந்து ஆச்சாம்'', என்று நக்கலடித்தார்..


''எத்தனை வருடத்திற்கு முன் அது என்று சொல்லிருங்க அத்தை'', என்றவன் அவருடன் ஹைபைவ் கொடுக்க சில மணிதுளிகள் அங்கே சிரிப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது ..


பேசியபடி சாப்பிட்டு முடித்தவர் தன் மகளின் பக்கம் திரும்பி ''இன்று என் வாரிசாகக் கட்சிக்குச் செயலாளராக உன்னை நியமிக்கவில்லை.. உன் திறமைமீது இருக்கும் நம்பிக்கையில் தான் .. மக்களின் ஆதரவும் கூட கட்சியில் இருக்கும் சிலரின் ஆதரவில் தான் இக்கட்சியில் முக்கியமான பதவியை உனக்கு கொடுக்க எல்லாரும் முடிவெடுத்தோம்'',..


''இப்ப நீ ஏற்கும் பதவி மலை விளிம்பில் நின்றும் கொண்டு.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரி ரொம்பவும் ஜாக்கிரதையாக மற்றவர்களை கேண்டில் பண்ணனும்'', என்று சொல்லியவரைக் கண்டு..


தாட்சாயணி ''அப்பா நா உங்க பொண்ணு.. உங்களின் நேர்மையும் தலைமை தாங்கும் பண்பும் மன உறுதியும் பார்த்து வளர்ந்தவள்… எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை துணிவாக எதிர்க் கொள்வேன் .. அதற்குத் தான் நீங்களும் சக்தியும் இருக்கீங்களே அப்பறம் எதுக்கு இந்தப் பயமோ பதற்றமோ எனக்கில்லை'', என்று சொல்லியவளின் வார்த்தைகளிலிருந்த கம்பீரம் செயலில் இருக்கும் என்று நினைத்தவர் அவளின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.


உமாதேவியோ ''இங்கே பாரு தாட்சு… உங்க அப்பாவுக்குச் சொன்னது தான் உனக்கும் .. கேட்க்கு வெளியே தான் நீ கட்சியின் பொதுச் செயலாளர் .. வீட்டில் என் பொண்ணு.. அதுமாதிரி வீடு வேறு வெளியே பழக்க வழக்கம் வேறு அதை வாசல் தாண்டி உள்ளே வரக் கூடாது'' என்று கண்டிப்பான குரலில் சொல்லியவரைக் கண்டு ..


"அத்த மற்றதில் எப்படியோ குடும்பத்திற்குள் எந்த சலசலப்பு வந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்காங்க",என்று சொன்னவனை முறைத்த தாட்சாயணி .."என்ன உங்க அத்தைக்குச் சப்போர்ட்டா", என்று சொல்ல…


"ஆமாம் அம்மணி சப்போர்ட் தான்… வீட்டிலே அத்தைக்குச் சப்போர்டா இருந்தா தானே ருசியான சாப்பாடு கிடைக்கும்'', என்றவன்


''இப்ப நீங்க பெரிய பதவிக்குப் போறீங்க.. வெளியே எனக்குச் சப்போர்டா நீ இருப்பீயா மாட்டீயா .. அதுக்குதான் முன் எச்சரிக்கையாக கேட்டுகிறேன்… இந்த அடியேனை மறந்து விடாதீங்க தாயீ", என்று நக்கலடிக்க..அவளோ ''போ அத்தான்'', என்று சிணுங்கினாள்..


அதைப் பார்த்தவர்கள் சிரித்துவிட்டு ''இன்னும் சிறு பிள்ளைகளைப் போல விளையாடிக்கிட்டு'',.. என்று மகேஷ்வரன் சொல்லியவர்.

''நல்ல நேரம் முடியும் முன் பதவியேற்க வேண்டும் .. அப்பறம் உன்னோட அப்பாயிமென்ட் எல்லாம் பார்த்துக் கொள்ள ஒருவரை நியமித்து இருக்கான் சக்தி'',.. என்று சொல்ல..


அதைக் கேட்டு சரியென்று தலையாட்டியவள் ,தன் தாய் தந்தையை நிற்க வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவளைப் பார்த்தச் சக்தியோ ஒரு கையை தூக்கி ஆசீர்வாதம் பண்ணுகிறேன், காலில் விழு', என்று சைகை செய்ய..


''ம்ஹீம் அது நடக்காது'', என்று சிலுப்பியவள், அம்மாவிடம் தலையசைத்து விட்டு தந்தை மட்டும் சக்திவேந்தன் இருவரின் இடையில் நடுநாயகமாக வெளியே வந்தாள் …


அவள் முன் ஹாலில் நுழையும் போதே மக்களின் ஆரவாரம் காதில் ஒலிக்க, அதைக் கேட்டபடி அங்கிருந்த மயில்வாகனம் மற்ற அமைச்சர்களிடம் வணக்கமும் பெரியோர்வர்களிடம் ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டு வீட்டின் வெளியே காலடி எடுத்து வைத்தாள் தாட்சாயணி தேவி.


மக்கள் கூட்டமோ ஆரவாரமாக அவளை வரவேற்க.. அதில் உள்ளம் அதிர்ந்தாலும் திடமாக முன்னோக்கிக் காலை எடுத்து வைத்தாள் தாட்சாயணி தேவி தன் பொறுப்பை ஏற்க…..


தெளிவான தீட்சயணமான பார்வையில் எல்லாரையும் சுற்றி வலம் வந்த கண்கள் மக்களின் மகிழ்ச்சியும் பார்த்துவிட்ட ஆனந்தத்தையும் கண்டவள் தலைக்கு மேலே கைகளை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டு தலை வணங்கி ''உங்களுக்காக நான்.. எனக்காக நீங்கள்.. உங்களில் நானும் ஒருத்தி தான்'', என்று பேசியவளின் ஆளுமையில் அருகிலிருந்த சக்திவேந்தனுக்கு.. சந்தோஷத்தை விட சிறு சஞ்சலம் உண்டாகியது..


ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இதழ்களில் வளைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன்.. அவளுக்கான காரில் அவளை முன்னே ஏற்ற அவனைக் கேள்விக் குறியாகப் பார்த்தவளிடம்.. ''நான் என்னுடைய காரில் வருகிறேன் உனக்கு முன் அங்கு இருப்பேன்'', என்று மெதுவான குரலில் சொல்லிவிட்டு டிரைவரிடம் காரை எடுக்கச் சொல்லியவன் அவளைப் பாதுக்காக்கும் பாதுகாவலர்களிடம் கவனம் என்று கண்களாலே கண்டிப்பான முறையில் சொல்லிவிட்டு தன் காரை நோக்கி நடந்தான் ..


அவளுக்கு முன் கட்சி ஆபீஸ்க்குப் போனவன் அங்கே இருந்தவர்களிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது தாட்சாயணி வரவும் அவளுக்குப் பூங்கொத்து கொடுத்து மகேஷ்வரன் சக்ரவர்த்தி வரவேற்று மாலை மரியாதை என்றும்.. பதவியில் பொறுப்பேற்று எல்லாரும் வாழ்த்துகள் கேட்டு அலுத்துப் போனவள் அங்கே ஓரமாக இவளையே பார்த்துக் கொண்டிருந்தவனைப் பரிதாபமாக நோக்கினாள்..


அவள் நயணங்கள் கூறிய பாஷையில் 'இங்கிருந்து என்னைக் கூட்டிக்கிட்டுப் போய்விடேன்', என்றிருக்க அவனோ ''பொறுமை'', என்று சொல்லியவன் தன் மாமாவை தேட அவரோ அங்கே முக்கியமான சிலரிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டு யாரும் கவனிக்காத அளவிற்கு தன்னவளை நெருங்கி நின்று எல்லாரையும் பார்த்தவன் ''ஒரு முக்கியமான வேலை உங்கள் பொதுச் செயலாளருக்கு வந்துவிட்டது.. அவரின் அத்தையின் ஆசிரமம்த்தில் மதிய உணவை இவர்கள் கையால் குழந்தைகளுக்குக் கொடுக்கணும்'',.. என்று சொல்லியவன் மகேஷ்வரனிடம் கண்களால் ஜாடை காட்ட அவரும் மகளைக் கிளம்பச் சொல்லிவிட்டார்.


எல்லாருக்கும் மீண்டும் ஒரு வணக்கம் நன்றியை உதிர்த்துவிட்டு அவனோடு கிளம்பியவள் சக்திவேந்தனின் காரிலே ஏறியதும் அவ்வளவு நேரம் மற்றவர்களின் பார்வையில் இருந்துக் கொண்டு தவித்தவள் எப்படா தனித்து விடுவோம் என்று எண்ணிய நேரத்தில் சக்தி லாவகமாகப் பேசி அங்கே இருந்து தப்பித்து வந்தவளோ ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு லேசான மனத்தோடு அப்படியே காரின் சீட்டில் சாயந்து கொண்டவளைத் தன் தோளை இழுத்துச் சாய்த்து இதமாக வருடிக் கொடுக்க அந்த இதத்திலே கண் அயர்ந்தாள் தாட்சாயணி .


அவள் இமை மூடி உறங்கும் அழகினை பார்த்தபடியே வந்தவன்.. 'ஒரே நாளில் ஓய்ந்து விட்டாளே', என்று தோன்றியதும்.. இனி வரும் நாட்களின் வேலை நெருக்கடியை எப்படி சமாளிப்பாள் என்று தோன்றவும், அதைப் பற்றிய சிந்தனையிலே இருந்தபடியே …நீலவேணி நடத்தும் ஆசிரமம்த்திற்கு இருவரும் வந்தார்கள்..


அவளின் பாதுக்காவலர்களும் பின்னால் போலீஸ் அதிகாரிகள் என்று முழு பாதுகாப்பும் அங்கே இருக்கவும் ..


தன் தோளில் சாய்ந்து உறங்கியவளை எழுப்பினான்.. ''யட்சணி'', என்று கூப்பிட அவளோ ''போ அத்தான் இன்னும் கொஞ்சம் நேரம்'', என்று கண்ணைத் திறக்காமலே பதிலளிக்க.. ''ஆசிரமம் வந்திருச்சு மா இறங்கணும்'', என்றவன் முன்னால் அமர்ந்திருந்த நம்பிக்கையான டிரைவர் சேகர் கீழே இறங்கி அவளின் பக்கம் காரின் கதவைத் திறக்க .. அவளோ தன்னை நிலைப்படுத்திக் கொண்டே இறங்கினாள்.. மறுப்பக்கம் சக்தி இறங்க அவர்களை நோக்கி நீலவேணி வரவும் ''அத்த'', என்று அவரிடம் விரைந்தாள் தாட்சாயணி.


அவரோ அவளை லேசாகக் கட்டி அணைத்து விடுவித்தவர், ''வாம்மா'', என்று சொல்லிவிட்டு தன் மகனையும் தலையசைத்து வரச் சொல்ல அங்கே இருக்கும் குழந்தைகள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்று அதன் பின் அவர்களோடு அமர்ந்து உணவை உண்டவள், சக்தியையும் அத்தையும் தேடித் ஆபீஸ் அறைக்கு வந்தவள்


அங்கே சக்தியோ நீலவேணியிடம் டென்டஷனாகப் பேசுவதைக் கண்டு என்னவென்று தெரியாமல் ''என்னாச்சு அத்தை , எதுக்கு அத்தானுக்கு இவ்வளவு கோபம்'', என்று கேட்டு இருவரையும் மாறி மாறிப் பார்க்க…


அவரோ பட்னு விஷயத்தைப் போட்டு உடைத்தார்.. ''உங்கள் இருவருக்கும் அடுத்தவாரமே திருமணம் நடக்க வேண்டும்'', என்று உறுதியாகச் சொல்லியவரை அதிர்ச்சியுடன் பார்த்தாள் தாட்சாயணி தேவி.


தொடரும்..

ஹாய் மக்கா கதையின் அடுத்தப் பகுதி.. படித்துவிட்டு கருத்துக்களைக் கூறுங்கள்.. 😍 😍 😍
received_740239797338195.jpeg
























.
 
  • Love
Reactions: Vimala Ashokan