• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 04

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,173
602
113
Tirupur
தாமரை - 04

‘வேண்டாம் வேண்டாம்’ என திமிறியவளை இழுத்து பிடித்து தன் கையில் வைத்திருந்த தாலியை, தாமரையின் கழுத்தில் கட்டிiயிருந்தான் இளங்கோ.

வலுக்கட்டாயமாக தாலியை கட்டியபின், தன்னை பார்க்கும்படி நிறுத்தியவன், “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் குழந்தையை அழிக்கணும்னு நினச்சிருப்ப, உன்னை நான் எவ்வளவு நல்லவன்னு நெனச்சேன் தெரியுமா? ஆனா கருவில் இருக்கிற குழந்தையை கொல்ற அளவுக்கு ஈவிரக்கம் இல்லாதவன்னு இப்பதான் புரியுது. என் வாழ்க்கையை கெடுத்த உன்னை நான் சும்மா விடுவேன் மட்டும் நெனச்சிடாத. நான் ஆசை ஆசையா வாழனும்னு நெனச்ச வாழ்க்கை, இன்னைக்கு உன்னால என்னை விட்டுப் போயிடுச்சு, இதுக்கெல்லாம் நீ பதில் சொல்லித்தான் ஆகணும்.” என அவளுக்கு மட்டும் கேட்குமாறு, இறுகிய குரலில் பேசியவன், அவளையும் இழுத்துக் கொண்டு மகேஸ்வரியின் முன் நின்றான்.

அழுது சிவந்த விழிகளுடன், தனக்கு முன்னே நிற்கும் மகளை பரிதாபமாக பார்த்தார் மகேஸ்வரி.

“உன் அப்பா மாதிரிதான் நீ, உன் அப்பா மாதிரிதான் நீயினு, எல்லாத்துக்கும் சொல்லி சொல்லி காட்டினீங்க, நான் என் அப்பா மாதிரி தான் இருக்க முடியும், வேற யாரும் போல இருந்தா தப்பா பேசுவாங்க. எனக்கு அவர் மாதிரி இருக்கிறது ஒன்னும் தப்பா தெரியல.”

“உங்க பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டேன்னு நீங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்றீங்க. ஆனா உண்மையிலேயே என் வாழ்க்கையை கெடுத்தது உங்க பொண்ணுதான், அது உங்களுக்கு மட்டுமில்ல இங்க இருக்கிற எல்லாருக்குமே தெரியும். இனி நான் இதை பத்தி எப்பவும் பேச விரும்பல. உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதோட உங்க கடமை தீர்ந்துடுச்சு. இனி என் பொண்ணுன்னு சொல்லி நீங்க யாரும் வந்துடக்கூடாது. அப்படி வந்தா? என்ன பத்தி உங்களுக்கு நல்லா தெரியும், என்ன வேணும்னாலும் செய்வேன்.” என்றவன் தாமரையை இழுத்து காரில் ஏற்றினான்.

“அப்பா ப்ளீஸ்ப்பா நான் போகமாட்டேன், என்னை அனுப்பாதீங்க. எனக்கு அங்க போக வேண்டாம் நான் இங்கேயே இருந்துடுறேன். ப்ளீஸ் சொல்லுங்கப்பா. விடு என்னை விடு, நான் வரமாட்டேன்.” என தாமரையின் எந்த கதறலும் அவன் காதை சென்று அடையவில்லை.

“இளா.. இளா நான் சொல்றதை கேளு. வாயும் வயிறுமா இருக்குற பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கிற.? எங்க முன்னாடியே நீ இப்படி நடந்துக்கிட்டா நாங்க இல்லாத நேரம் நீ என்ன வேணாலும் செய்வ.? உன்ன நம்பி எப்படி என் பொண்ண நான் அனுப்புறது?” என மகேஸ்வரி இளங்கோவை மறித்து கேள்வி கேட்க,

“எந்த நம்பிக்கையில உங்க பொண்ண நான் பார்த்துக்குவேன் நினைச்சீங்களோ அந்த நம்பிக்கையை இப்பவும் பத்திரமா வச்சுக்கோங்க, நான் கிளம்பறேன்.” என்றவன் யாரையும் மதிக்காமல் காரில் ஏறிக் கிளம்பிவிட்டான்.

கார் கிளம்பியதில் இருந்து அழுது கொண்டே வந்தவளை, ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தான்.

பின் அலட்சியமாக தோளைக் குலுக்கியவன் கண்களில் சினத்துடன் வேகமாக காரை ஓட்டினான்.

மீனாட்சிபுரத்தில் இருந்து மதுரைக்கு வந்தவன், அங்கிருந்த தெரிந்தவர் மூலம், டிரைவரை வைத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பினான்.

தொடர்ந்த அலைச்சலும், மன அழுத்தமும் சேர, அவனின் உடலும் மனமுமே ஓய்வுக்கு கெஞ்சியது. மகேஸ்வரி அழைத்து பேசியதில் இருந்து மிகவும் பயத்திலும், கோபத்திலும் இருந்தவனுக்கு, தன் குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை என்ற பிறகுதான் மூச்சே சற்று சீரானது.

பின்னிருக்கையில் அவளுக்கு அருகில் அமர்ந்து வரக்கூட அவனுக்கு விருப்பமில்லை. டிரைவருக்கு அருகில் அமர்ந்தவன், அவரின் கேள்வியான பார்வையில், “என் வைஃப்க்கு ஹெல்த் இஸ்ஸு.. சோ ரெண்டு பேர் பின்னாடி இருந்தா கம்ஃபோர்ட்டா உட்கார முடியாது.” என பதில் கொடுக்க,

“ஓக்கே சார்..” என்றதுடன் அவர் வேலையைப் பார்க்க, இளங்கோவும் அடுத்து எதையும் யோசிக்காமல், கண்ணை மூடி சீட்டில் சாய்ந்துவிட்டான்.

வசந்தியிடம் ஏற்கனவே கூறிவிட்டதால் வீட்டில் உண்டாகும் பிரச்சினையை அவர் ஓரளவுக்கு தடுத்து விடுவார் என்று தெரியும்.

ப்ரீத்தாவைத்தான் எப்படி சமாதானம் செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் அதற்காக குழந்தையை விடும் எண்ணமும் இல்லை.

அவன் மேல் நம்பிக்கையோடு இருப்பவள், அவனையும் அவன் சூழலையும் புரிந்து கொள்வாள் என்று ப்ரீத்தாவின் மேல் இளங்கோவிற்கு நம்பிக்கை இருந்தது.

ஆனால் அத்தை மாமாவை எப்படி சாமாதானம் செய்வது என பல யோசனைகளிலேயே இருந்தவன் எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை.

கார் சட்டென்று நிற்க, அதில் அதிர்ந்து கண்ணைத் திறக்க, “ஸார் அவங்களுக்கு ரொம்ப முடியல போல, அனத்திக்கிட்டே இருக்காங்க. வாந்தி வேற எடுத்துட்டே வர்ராங்க..” என டிரைவர் கூற,

“ஓ… சாரி” என்றவன், வேகமாக திரும்பி பார்க்க, தாமரையோ தலையை பிடித்தபடி ஜன்னலோடு ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்தாள். உடல் ஒரு பக்கம் நடுங்கிக் கொண்டிருந்தது.

‘டேப்லட் இருந்தா போடலாம்ல, அதைவிட்டுட்டு இப்போ எதுக்கு சீனை போட்டுட்டு இருக்க.’ என அவளுக்கு மட்டும் கேட்கும் படி பேச, அவனையே ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவள், அப்படியே கண்ணை மூடிக் கொண்டாள்.

அவளுக்கு வாயை திறந்து பேசக்கூட தெம்பில்லை. உடலும், மனமும் மிகவும் பலவீனமாகியிருந்தது. இனி அங்கே என்ன நடக்குமோ என்ற பயமும் சேர்ந்து கொள்ள, உடல் தன்பாட்டுக்கு பயத்தில் நடுங்க ஆரம்பித்தது.

தான் கேட்டும் பதில் சொல்லாமல் கண்ணை மூடியவளின் மேல் ஆத்திரம் வந்தது. ஆனால் அதை காட்டும் இடம் இதுவல்ல என புரிந்தவன், அவள் அமர்ந்திருந்த இருக்கையை ஆராய, அப்போதுதான் அவள் எதுவுமே எடுத்து வரவில்லை என்று தெரிந்தது.

‘ஷிட்’ என தனக்குத்தானே புலம்பியவன், “இங்க பக்கத்துல 24 ஹவர்ஸ் ஹாஸ்பிடல் இருந்தா போங்க. சென்னை வரை இப்படியே போக முடியாது.” என்றவன் அவளுக்கு மறுபக்கம் வந்தமர்ந்தான்.

அவளருகில் அமரும் நேரம் தாமரையின் கையை இளங்கோவின் கை உரசிட, சட்டென்று உதறியவன் வேகமாக அவள் நெற்றியில் கைவைத்து பார்க்க, உடல் நெருப்பாக கொதித்தது.

“ட்ரைவர் ஏசியை ஆஃப் பண்ணிட்டு, ஹீட்டர் ஆன் பண்ணுங்க.” என பதட்டமாக அவன் கூற கூறவே, இங்கு மயக்கத்தில் அவன் மீதே சரிந்திருந்தாள் தாமரை.

“சீக்கிரம் போங்க.. மயக்கம் போட்டுட்டா..” என படபடப்புடன் கூறியவன், அவளை மொத்தமாக தன் மீது சாய்த்து குளிருக்கு இதமாக இறுக்கமாக அனைத்துக்கொண்டான்.

பைபாஸில் இருந்து சேலம் டவுனுக்குள் வர, அங்குதான் ஒரு 24 ஹவர்ஸ் ஹாஸ்பிடல் இருந்தது. ட்ரைவர் காரை நிறுத்திவிட்டு ஸ்ட்ரெச்சர் எடுக்க உள்ளே ஓட, அதற்குள் இளங்கோவே அவளைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தான்.

அடுத்த ஒரு மணி நேரம் அவனை பதட்டத்திலும் பயத்திலும் வைத்திருந்தவள் மெல்ல கண் விழித்தாள்.

மருத்துவர் ஏற்கனவே அவனை வைத்து வாங்கியிருந்தார். “ஏன் இப்படி செஞ்சீங்க சார். படிச்சவங்க தானே இந்த நேரத்துல அவங்க ட்ராவல் பண்ணக்கூடாதுன்னு தெரியாதா? எப்போ சாப்பிட்டாங்க என்னனு தெரியல. அவங்க பாடி டீஹைட்ரேஷன் ஆகிருக்கு. ரெண்டு பாட்டில் சலைன் போடுறேன். முழிச்சதும் சாப்பிட கொடுங்க.. உங்க குடும்ப பிரச்சினையை எல்லாம் இந்த நேரம் காட்டாதீங்க..” என்று திட்டியிருக்க, அவனுக்கு இதெல்லாம் தெரியாததால் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

டிரைவர் சென்று அவனுக்கு டீ வாங்கி வந்திருக்க, அவனுக்கும் அது அப்போது தேவையாக இருக்க, “தேங்க்ஸ்” என்றபடி வாங்கிக்கொண்டான்.

‘ஏன் இப்படி இருக்கா? என்னாச்சு இவளுக்கு? காய்ச்சல் கொதிக்குது, உடம்பு குளிர்ல நடுங்கி தூக்கிப்போடுது அப்போக்கூட ஏன் என்னை எழுப்பல?’ என யோசித்தபடியே இருந்தவனுக்கு, அவளுக்கு இந்த வாரத்தில் திருமணம் என மகேஸ் கூறியது அப்போதுதாஞாபகம் வர,

‘ஓ அவ வாழ்க்கையை கெடுத்துட்டேன்னு நினைச்சிருப்பா போல, அவ சுயநலத்துக்காக குழந்தையை அழிக்கப்போனவ தானே’ என யோசித்த நேரம் அவன் உடலும் மனமும் மீண்டும் இறுகிப்போனது.

சரியாக அதே நேரம் தாமரையும் கண் விழிக்க, சிந்தனையை எங்கோ வைத்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள் “ஸாரித்தான்” என்றாள் மெல்ல.

முதலில் அதை கவனிக்கவில்லை இளங்கோ. தாமரை சற்று அசையவும் தான் நிகழ்வுக்கு வந்து அவளை கூர்மையாக பார்த்தான்.

அறிமுகமில்லாத ஒருவரைப் பார்ப்பது போன்ற, உணர்ச்சிகளற்ற அவனுடைய பார்வை அவளுக்குள் ஊசியாய் உள்ளிறங்கியது.

இளங்கோவின் அந்த பார்வையில் தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளவே, சிறிது நேரம் பிடித்தது. ஏனோ மூச்சு வாங்கியது.

அவனின் தொடர்ந்த நேர்பார்வையில் “ஸாரித்தான்..” என்றாள் மீண்டும்.

“எதுக்கு.?” என்றவனின் புருவங்கள் நெரிந்திருந்தன.

“இல்ல.. இப்படி உங்களை அலையவச்சு கஷ்டப்படுத்திட்டேன் அதான்..” என்றவளின் குரல் உள்ளே சென்றது.

“ஓ.!” என்றவன் “நான் கூட என் வாழ்க்கையை கெடுத்து, பைத்தியக்காரனா ஆக்கி வச்சதுக்கு கேட்குறியோன்னு நினைச்சிட்டேன்..” என்று குத்தலாக கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

இளங்கோவின் வார்த்தைகள் அவளுக்கு மிகுந்த வலியைக் கொடுத்தது. மனதை சமன்படுத்த முயன்றாள். வேறுவழியில்லை. இனி இது தொடர்ந்து நடக்கும். இவனும் இவன் வீட்டு ஆட்களும் இதைவிட மோசமாகக்கூட நடந்து கொள்வார்கள். அனைத்தையும் கேட்டு, கடந்துதான் ஆகவேண்டும். அதற்கு முதலில் இப்படி எதற்கெடுத்தாலும் ஒடுங்கி போய்விடக்கூடாது என முடிவெடுத்துக்கொண்டாள்.

ஒரு கையில் சலைன் ஏறிக் கொண்டிருக்க, மற்றொரு கரமோ அவளது வயிற்றை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது.

விழிகளின் ஓரம் நீர் அதன்பாட்டிற்கு காதோரமாய் வலிந்து கொண்டிருந்தது.

உணவு பொட்டலத்துடன் உள்ளே வந்தவனின் கண்களில் தாமரையின் இந்த கோலம் விழ, அவனுக்கும் மனதை என்னவோ செய்தது.

வெளியில் சென்ற பின்தான், அவன் பேசியது தவறு என புரிந்தது. அவள் மீதான கோபத்தில் வார்த்தைகள் எவ்வளவோ தடுத்தும் சட்டென்று வந்துவிடுகிறது.

இனி சற்று கவனமாக பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன், பொட்டலத்தை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு “நர்ஸை வர சொல்றேன்” என்றுவிட்டு வெளியில் போய்விட்டான்.

அடுத்த நிமிடம் ஒரு நர்ஸ் வந்து அவளுக்கு உதவ, ரெஸ்ட் ரூம் சென்று வந்தவள், ஒரு இட்டிலியை சாப்பிடுவதற்குள் மூன்று முறை வாந்தியெடுத்திருந்தாள்.

ஒருவழியாக சாப்பிட்டு, தேவையான மாத்திரைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கிளம்ப விடியலும் வந்துவிட்டது.

“ட்ரைவரிடம் ஒரு பத்து நிமிசம் ப்ரோ, நான் கால் பன்றேன்” என அனுப்பிவிட்டு அவளுக்கு அருகில் அமர்ந்தான்.

தாமரை கேள்வியாக பார்க்க, “நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எனக்கு ப்ரீத்தாவை மறக்க முடியாது. அவளுக்கும் அப்படித்தான். இது சின்ன வயசுல இருந்து பேசி வச்சது. எங்களுக்குள்ள அந்த பாண்டிங்க்தான் இருக்கு..” என்று தாமரையை பார்க்க, அவள் மிகவும் சாதாரனமாகத்தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அதே நேரம் என் குழந்தையையும் விட முடியாது. அதனால குழந்தை பிறக்கிற வரை நீ என் மனைவியா என் வீட்டுல இருக்கலாம். குழந்தை பிறந்ததும் எங்கிட்ட கொடுத்துட்டு நீ டிவோர்ஸ் கொடுத்துட்டு போய்டனும். நானும் ரீத்துவும் குழந்தையை வளர்த்துப்போம்.” எனவும் அவள் அமைதியாக தலையை குனிந்து கொள்ள,

“நீ என்னை நெருங்கி வரும் போதே உங்கிட்ட சொல்லிட்டேன், ஆனா நீதான்..” என அடுத்து என்ன சொல்லியிருப்பானோ “கொடுத்துடுறேன்” என்றாள் அடிபட்ட குரலில்.

“உங்களுக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டு, குழந்தையையும் உங்ககிட்ட கொடுத்துடுறேன்..” என அமைதியாக கூற,

“தேங்க் காட்.. தேங்க்ஸ்.. எங்க நீ முரண்டு பிடிப்பியோன்னு பயந்துட்டேன். இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு. இனி இதை வச்சே ரீத்துவையும் மத்தவங்களையும் சமாளிச்சிடுவேன்.” என ஏதோ ஒரு சிக்கலில் இருந்து தப்பித்தவன் போல, ஒரு பெருமூச்சோடு கூற,

கணவனின் பேச்சைக் கேட்ட தாமரை உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தாள்.

ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

காதல் கொண்டு
அழுகிறேன் கண்ணின்
நீரில் எரிகிறேன் வாயில்லாத
குழந்தைபோல் வார்த்தையின்றி
கரைகிறேன்
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
132
43
Dindugal
இந்த லூசுப்பையலை நம்பி எப்படி தாமரையை அனுப்புறாங்க..
பாவம்டா அந்த பொண்ணு
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
117
43
Theni
இன்னும் அந்த வீட்டுல இருக்குற பைத்தியங்க என்ன என்ன பண்ணுங்களோ?
 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
330
110
43
Tanjur
தாமரையோட அம்மாவுக்கு ஏன் இந்த வேலை. முழுபைத்தியத்துக்கிட்ட தன் பொண்ணை தூக்கி கொடுத்துட்டாங்களே
 

Pavithra Shanmugam

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
32
7
8
Erode
செல்வம் நேத்து பேசினதை வச்சு தாமரையை அனுப்ப மாட்டார்னு நினைச்சேன். ஆனா இந்த லூசு கூட அனுப்பிட்டாரே
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
19
18
Ullagaram
தாமரையே, என் செந்தாமரையே !
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 4)


அடப்பாவி...! ரீத்துவை மறக்க முடியாதாம், ஆனா இவ கூட படுத்து வயித்துல புள்ளையையும் கொடுத்துடுவானாம்... அதுக்கு இந்த தாமரை சர்ரோகேட்டட் மதரா என்ன...?


இந்த லூசுப் பயலை நம்பி தங்களோட ஒரே செல்லத்தை அனுப்பி வைச்சிருக்காங்களே...
அந்த அயித்தைய சொல்லனும்.
ஏமாந்த இளிச்சவாய் கிடைச்சா
ஏக்குமாக்கா செய்யவும், கோக்குமாக்காவும் பேசத்தான் செய்வான் போல... இந்த கிறுக்குப் பைய மகன் இளங்கோ.


😀😀😀
CRVS (or) CRVS 2797