தாமரை - 08
“ப்பா..” என்று முணுமுணுத்தவள் வேகமாக தன்னருகில் நின்றிருந்த ஷ்யாமை பார்க்க, அவனோ சிறு சிரிப்புடன் அவளைத்தான் பார்த்திருந்தான்.
“இந்த பூனை இருக்குல்ல, அது கண்ணை மூடிட்டா உலகமே இருட்டுன்னு நினைச்சிக்குமாம்” என தாமரையின் தலையில் லேசாக தட்டி சிரித்தவன், “மாமாவைப் பார்க்கனும்னு உன் ஏக்கம் எனக்குத் தெரியாதா? ம்ம்” என தாமரையின் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்தவன் “நான்தான் நைட் கால் பண்ணி உடனே வரச் சொன்னேன்.. வா!” என உள்ளே கைப்பிடித்து அழைத்து வர, அதுவரை அவள் மனதிலும் உடலிலும் இருந்த சோர்வும், பயமும் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட, ஷ்யாமிடமிருந்த தன் கையை உருவி, அவனைத் தாண்டி வேகமாக தன் தந்தையிடம் சென்றாள்.
வேகமாக வந்து செல்வத்தின் கையைப் பிடித்துக்கொண்டு “ப்பா ப்பா..” என்ற பெண்ணவளுக்கு வேறு வார்த்தைகளே இல்லை.
செல்வத்திற்கும் அதே நிலைதான் என்பது, அவர் பனித்த விழிகள் கூறியது. இருவரும் அமைதியாக அந்த நிமிடத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
இருவரையும் ஒரு சிரிப்புடன் பார்த்திருந்த ஷ்யாம், “அத்தை எப்படியும் இவங்க நம்மளைக் கண்டுக்க மாட்டாங்க. நீங்க வரும்போது சாப்பிட்டுதானே வந்தீங்க. முத்து அண்ணாக்கிட்ட சொல்லிட்டுதான் வந்தேன். நான் அம்முவை கூப்பிட்டு வரனும்னு சீக்கிரம் கிளம்பிட்டேன்.” என்றான் வீட்டாளாய்.
ஊரில் நடந்த அனைத்தையும் சுமதி மூலம் கேட்டவனுக்கு அத்தனை ஆத்திரம் இளங்கோ மீது. ஆனால் அதை வெளிக்கட்ட இளங்கோ இங்கு இல்லையே. அதனாலே அமைதியாக இருக்கிறான்.
அதிலும் நேத்து இரு கன்னமும் அடிவாங்கியதில் சிவந்து, முகமெல்லாம் வீங்கிப்போய் இருந்ததைப் பார்த்ததில் இருந்து அவனால் இளங்கோவை மன்னிக்கவே முடியவில்லை..
எப்படியொரு சூழலில் அவளை விட்டுப் போயிருக்கிறான் என அவ்வளவு கோபம். அதிலும் ப்ரீத்தா அடித்ததைப் பார்த்தும் அமைதியாக இருந்திருக்கிறான் என நினைக்க நினைக்க கொலைவெறியே வந்தது.
அவனுக்கு தாமரையை பற்றித் தெரியும், அவளுக்கு இளங்கோ எவ்வளவு முக்கியம் என்றும் தெரியும். அதற்காக தவறான வழியில் சென்று அவனை அடைய வேண்டும் என்றெல்லாம் நினைக்கக்கூட மாட்டாள்.
அவளைப்போய் எப்படியெல்லாம் பேசியிருக்கிறான் என இளங்கோ பேசியதை நினைத்து நினைத்து தன் கோபத்தை உருவேற்றிக் கொண்டிருக்கிறான். அது எப்போது வெளிப்படுமோ, அப்போது இளங்கோவால் ஷ்யாமை எதிர்கொள்ள முடியுமா தெரியாது.
“உங்க மாமாதான் மகளைப் பார்க்க போறோம்னு ஒரே பரபரப்பு. அவரைப் பிடிச்சு சாப்பிட வைக்கத்தான் எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு.. சாப்பிட்டுதான் வந்தோம் ஷ்யாம். அப்படியே அம்முவுக்கு எல்லாம் எடுத்துட்டு வந்தோம்.” என மகளுக்கு இந்த நேரத்தில் சாப்பிட பிடிக்கும் சில உணவுப் பதார்த்தங்களையும் செய்து எடுத்து வந்திருந்தார்.
“ம்ம் சரி அத்தை நீங்க பேசிட்டு இருங்க. நான் ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வந்துடறேன்..” என ஷ்யாம் அறையை விட்டு வெளியில் செல்ல, மகேஸ்வரி எழுந்து மகளிடம் சென்றார்.
இன்னுமே கன்னங்கள் லேசான சிவப்புடன் வீங்கித்தான் இருந்தது.
“அம்மா மேல கோபமா அம்மு..?” என்றார் மகளின் கன்னத்தை வருடியடியே.
அதில் நிமிர்ந்து தாயைப் பார்த்த தாமரை ‘இல்லை’ எனும் விதமாக தலையசைத்தாலும், விழிகள் கலங்கிப் போயிருக்க, அதைப் பார்த்த பெற்றொரின் விழிகளும் கலங்கித்தான் போனது.
“எனக்கு எல்லாம் தெரியும் அம்மு. அங்க நீ எவ்வளவு கஷ்டப்படுறேன்னு நீ சொல்லாமலே எனக்கு புரியும், இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சே உன்னை அங்க அனுப்பிட்டேன்னு என் மேல உனக்கு கோபம் இருக்கும்னும் தெரியும். ஆனா உன்னோட விருப்பம் இளாதான்னு தெரிஞ்ச பிறகு, இந்த அம்மாவால வேற என்ன செஞ்சுட முடியும், எனக்கு என் பொண்ணோட வாழ்க்கைதான் முக்கியமா இருந்தது, ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும் போகப் போக எல்லாம் சரியாகிடும் அம்மு..” என மகேஸ்வரி மகளுக்கு தைரியம் சொன்னாரா? இல்லை தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டாரா தெரியவில்லை.
“ம்மா ப்ளீஸ் முடிஞ்சதை மறுபடியும் பேச வேண்டாம், நான் அங்க இருக்கேன், இருப்பேன். ஆனா எப்ப வேணும்னாலும் நம்ம வீட்டுக்கு வந்துடுவேன். அது தற்காலிகமாகவா, இல்லை நிரந்தரமாகவா என்பது சூழ்நிலையை பொறுத்து. அப்படி வந்துட்டா என் கூட நீங்க இருந்தா போதும்.” என திடமாக பேசிய மகளை அதிர்ந்து பார்த்தார் மகேஸ்வரி.
“என்ன அம்மு? என்ன பிரச்சனை? இளா எதுவும் உன்னை பேசிட்டானா.?” என பதட்டத்தில் கேட்க,
“ம்மா.. இதுக்குப் பிறகு என் சம்பந்தமா அத்தான்கிட்ட நீங்க எதுவும் பேச வேண்டாம். எனக்குத் தேவைன்னா நான் பேசிக்கிறேன்.” என பெற்றோர் இருவரும் மறுத்து பேச முடியாத அளவிற்கு உறுதியாக சொல்லிவிட்டாள் தாமரை.
மகளின் உறுதியான பேச்சில், மறுத்து பேச வந்த மனைவியை, கண்ணைக் காட்டி அமைதிப்படுத்தினார் செல்வம்.
“சரிம்மா ஆபீஸ்ல என்ன சொன்னாங்க, ஜாயின் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்காங்களா, இல்ல வேற ஆபீஸ் பார்க்குறியா..?” என பேச்சை மாற்றினார் செல்வம்.
“மண்டே ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க ப்பா.. டிரைவர் வேலை பார்க்க நம்ம ஷ்யாம் இருக்கும் போது என்ன கவலை..” என மெல்ல புன்னகைக்க,
“அதானே ஷ்யாம் இருக்கும் போது என்ன கவலை..” என செல்வமும் சொல்லி சிரிக்க, அதே நேரம் உள்ளே வந்தான் ஷ்யாம்.
“என்ன இது ரைஸ்மில் தாமரை வாயில, என் பெயர் அரைபடுது.” எனக் கேட்டுக் கொண்டே, அவர்களுக்கு எதிரில் அமர்ந்தான்.
“ஓய் நான் என்ன ரைஸ்மில்லா?” என தாமரை கண்ணை உருட்ட,
“பின்ன இல்லையா? எப்பவும் எதையாவது அரைச்சிக்கிட்டேதான இருப்ப, அதான் இப்ப எதுக்கு என்னை அரைக்கிறன்னு கேட்டேன்.” என பதிலுக்கு ஷ்யாமும் கிண்டலடிக்க, பெரியவர்கள் இருவரின் முகத்திலும் சிரிப்பு வந்துவிட்டது..
“என்ன மாமா சொல்றா உங்க பொண்ணு.?” என சிரித்தபடியே செல்வத்திடம் கேட்க,
“டேய் நீ மறுபடியும் ஆரம்பிக்காத.” என அந்த பேச்சுக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட்டாள் தாமரை.
அதனால் சட்டென்று அந்த பேச்சை விட்டவன் “சரி விடு! இப்போ செக்கப் முடிஞ்சதும் நேரா நம்ம வீட்டுக்கு போ. அத்தை மாமா டூ டேஸ் இங்கதான் இருப்பாங்க. அவங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணு. நான் டெய்லி மார்னிங் பிக்கப் பண்ணிட்டு, ஈவினிங் கொண்டு போய் விட்டுடுறேன். மண்டேயில இருந்து ஆபீஸ் கிளம்பு. அந்த பைத்தியக்காரங்க இருக்கிற வீட்டில நீ தனியா இருந்தா உனக்கு பைத்தியம்தான் பிடிக்கும்.” என்ற ஷ்யாமிடம், ‘அதெல்லாம் வேண்டாம்’ என மறுக்க நினைத்தவள் பெற்றோரின் முகத்தில் தெரிந்த ஆசையில் சரியென்று விட்டாள் தாமரை.
அடுத்து அவளுக்கு எடுக்க வேண்டிய டெஸ்ட்களை எடுத்து, தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு மூவரும் ஷ்யாமின் வீட்டிற்கு கிளம்பினர்.
இங்கு கல்லூரிக்கு வந்த பிரீத்தாவிற்கு வகுப்பில் கவனமே இல்லை. இப்போது அவளது எண்ணத்தில் இருப்பது இளங்கோ அல்ல, ஷ்யாம்தான். அவனை நினைக்கும் போதே உள்ளுக்குள் இதயம் தாறுமாறாக தடம்புரண்டது.
அவன் தாமரையின் மேல் காட்டிய அக்கறையை நினைத்து அவளுக்குள் பொறாமை பொங்கி வழிந்தது. இந்த இளங்கோ மாமா தன்னிடம் இப்படியெல்லாம் நடந்து கொண்டதே இல்லையே!
ஏன்? அவருக்கு என்னைப் பிடித்துதானே திருமணத்திற்கு சரியென்றார். பிறகு ஏன்? அவருக்கு என்னைப் பிடிக்குமா? இல்லை பாட்டியின் கட்டாயத்தின் பேரில் சரியென்றாரா? இப்படி எதை எதையோ யோசித்து மனதை குழப்பிக் கொண்டிருந்தாள்.
இப்படியான யோசனையில் இருந்தவளை கவனித்த, பிரீத்தாவின் தோழி அனிதா “என்ன ப்ரீ? என்ன யோசிச்சிட்டு இருக்க வர வர உன் முகமே ரொம்ப டல்லாயிருச்சு, என்ன பிரச்சனை என்கிட்ட சொல்ல முடியும்னா சொல்லு?” என ஆறுதலாக கேட்க, முதலில் தயங்கினாலும் பிறகு அவளுக்குமே யாரிடமாவது இதை சொல்ல வேண்டும் என்று தோன்ற, ஊருக்கு சென்று வந்ததிலிருந்து நடந்த அனைத்தையும் அனிதாவிடம் சொல்லி முடித்திருந்தாள்.
பிரீத்தா கூறியதை கேட்ட பிறகு சில நிமிடங்கள் அனிதா எதுவுமே பேசவில்லை.
“என்ன அனி.?” என்ற ப்ரீத்தாவிடம்
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ப்ரீ.” என்றுவிட்டாள் அனிதா.
“ம்ம்ம் மாமாவுக்கு அவங்க அத்தைன்னா ரொம்ப இஷ்டம். அதனால வேற வழி இல்லாம அந்த தாமரை கழுத்துல தாலியக்கட்டி கூப்பிட்டு வந்துருக்கார். குழந்தை பிறந்ததும் கொடுத்துட்டு போயிடுவேன்னு சொல்லிருக்கா. அதுக்குப் பிறகுதான் எங்க கல்யாணம் நடக்கும். அதுக்குள்ள லீகலா டிவோர்ஸ் வாங்குறதுக்கு எல்லா ஃபார்மாலிட்டிசும் முடிச்சிடுறேன்னு மாமா சொல்லிருக்கார்.” என செய்தி வாசிப்பது போல கடகடவென கூறியவளை அதிர்ச்சியாக பார்த்தாள் அனிதா.
“ப்ரீ என்ன பேசுற நீ? உனக்கு என்ன பைத்தியமா? நீ சின்ன பொண்ணுடி. உன்னால எப்படி ஒரு குழந்தையை வளர்க்க முடியும்? அதுவும் பெத்த தாய்கிட்ட இருந்து குழந்தையை பிரிச்சுடுறேன்னு சொல்ற? எனக்கு இதை ஜீரணிக்கவே முடியல. எப்போ இருந்து நீ இப்படி எல்லாம் மாறின ப்ரீ..” என அந்த அதிர்ச்சி குறையாமல் கேட்க, ஏற்கனவே குற்ற உணர்விலிருந்த பிரித்தாவிற்கு, தோழியின் இந்த வார்த்தைகள், மிகவும் வலியை கொடுத்தது.
அதனால் பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க, அவள் முகத்தை பிடித்து தன்புறம் திருப்பிய அனிதா, “உங்க மாமா சொல்ற மாதிரி நீ ரொம்ப சின்ன பொண்ணுடி, உன் ஸ்டடீஸ் இன்னும் முடியல. உனக்கு இன்னும் வயசு இருக்கு, ஒரு குழந்தையை வளர்க்கும் அளவுக்கு உனக்கு பக்குவம் இல்லை, நீயே ஒரு குழந்தை டி நீ எப்படி ஒரு குழந்தையை வளர்ப்ப, உன்னோட குழந்தைன்னா கூட நான் இவ்வளவு பேச மாட்டேன், ஆனா அது உங்க மாமாவோட குழந்தை. அதை எப்படி உன்னால எந்த ஒரு முகச்சுழிப்பும், வருத்தமும் இல்லாமல் வளர்க்க முடியும். நாளைக்கு இந்த குழந்தையை வச்சு பிரச்சனை வந்தா, அப்போ என்ன செய்வ? இதெல்லாம் யோசிச்சு பார்த்துருக்கியா? உன் அம்மாதான் உன்னைய கெடுக்கிறதே, உன் அம்மா பேச்சை கேட்டா, கண்டிப்பா உன்னோட இந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கேயோ காணாமல் போயிடும்.” என வருத்தமாக பேச, அப்போதும் ப்ரீத்தா பதிலேதும் சொல்லவில்லை.
“மாமாவுக்கும் அந்த தாமரையை பிடிக்கும்னு எனக்கு அடிக்கடி தோணுது, ஆனா அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உறுதியா சொல்லிருக்கார்.” என்ற ப்ரீத்தாவின் குரலில் வருத்தம் தென்பட்டது.
“பிரீத்தா உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? பிடிக்குதோ பிடிக்கலையோ ஒரு குழந்தைன்னு வரும்போது அவங்க பக்கம் மனசு சாயுறது இயற்கை. எனக்கு என்னவோ உன்னோட எண்ணத்தை மாத்திக்கிறது ரொம்ப நல்லது.” என தோழியின் கையைப் பிடித்து ஆறுதலாக நிதர்சனத்தை எடுத்து சொல்ல,
“என்ன சொல்ற அனி? நான்.. நான் எப்படி மாமாவை விட முடியும்.? நான் அவரை லவ் பண்ணிட்டு இருக்கேன்டா, அவர் இல்லாத லைஃப் எனக்கு யோசிக்ககூட முடில. ஆனா நீ அவரை வீட்டுக்கொடுக்க சொல்ற..” என திடீரென்று சத்தமாக பேசியவளை அமைதி படுத்தவே வெகுநேரம் ஆனது அனிதாவிற்கு.
“ம்ச் ப்ரீ.. நான் சொல்றதை புரிஞ்சிக்கோடி. நீ உங்க மாமாவை லவ்வே பண்ணல, முதல்ல அது லவ்வே கிடையாது. அதை நீ ரியலைஸ் பண்ணு. இப்போ நான் சொல்றது உனக்கு கோபம் வரலாம். ஆனா யோசிக்க ஆரம்பிச்சா உனக்கே எல்லாம் புரியும். அப்புறம் நீ சொல்றத எல்லாம் வெச்சு பார்க்கும்போது, அந்த தாமரை விரும்பி இதை செய்யலன்னு எனக்கு தோணுது. எங்கேயோ தப்பு நடந்திருக்கு. அதை நீதான் கண்டுபிடிக்கணும். இதுல யாரையோ காப்பாத்த போய் தாமரை மாட்டிக்கிட்டாங்கன்னு எனக்கு தோணுது.” என யோசனையாக சொல்ல,
“ம்ச் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை, அவ குடும்பமே பிளான் பண்ணி தான் என் மாமாவை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க..” என கத்த,
“ப்ரீத்து கத்தாத. எல்லாரும் நம்மளைத்தான் பார்க்குறாங்க. அமைதியா இருடா..” என அமைதிப்படுத்தியவளுக்கு ப்ரீத்தாவை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.
எப்படி தன் தோழியை இந்த பிரச்சினையிலிருந்து வெளியேக் கொண்டு வருவது என யோசிக்க ஆரம்பித்தவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை.