• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 18

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
தாமரை - 18

திடீரென்று வந்து நின்ற மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து யோசனையானார் கருப்பையா.

“வாங்க” என்று மரியாதையாக அழைத்து அமர வைத்து விட்டாலும், வந்தவர்கள் எதையும் பேசாமல் அமைதியாக இருப்பது பெற்றவரை கலங்க வைத்தது.

வந்த அனைவருக்கும் தங்கம் காபி கொடுக்க, “யோவ் நாம என்ன இங்க விருந்து சாப்பிடவா வந்தோம். முதல்ல வந்த விசயத்தை பேசுங்கைய்யா, ஆளாளுக்கு அமைதியா இருந்தா பொண்ண பெத்தவங்க என்ன நினைப்பாங்க..” என வந்ததில் ஒரு பெரியவர் ஆரம்பிக்க,

“பெருசு சொல்றதும் சரிதான். எதுவா இருந்தாலும் பொண்ண பெத்தவங்ககிட்ட நேரடியா பேசி முடிச்சிடுங்க. நாளைக்கு அந்த புள்ள கண்ண கசக்கிட்டு வந்து நின்னா பெத்தவங்க தாங்குவாங்களா?” என மற்றொருவர் பேச, உண்மையிலேயே இதைக் கேட்டு பெற்றவர்கள் கதிகலங்கித்தான் போயினர்.

அதேநேரம் மாப்பிள்ளை வீட்டார் வந்துருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு கந்தசாமியும், செல்வமும் வீட்டிற்குள் நுழைய, “சம்மந்தி நீங்க எங்களை தப்பா நினைச்சிடக்கூடாது. இது நம்ம புள்ளைங்க வாழ்க்கை. நாமதான் சரியான முடிவா எடுக்கனும்.” என இழுத்த மாப்பிள்ளையின் அப்பா, செல்வத்தைப் பார்த்துக் கொண்டே, “நேத்து நம்மூருக்கு ஒரு பையன் வந்திருந்தான். வந்தவன் சும்மா இல்லாம பொண்ணுக்கும், இந்த பையனுக்கும்” என செல்வத்தைக் காட்டி, “பழக்கம் இருக்கு, அதை மறைக்கத்தான் சொந்தத்துல கொடுக்காம வெளிய கொடுக்குறீங்கன்னு சொல்லிட்டு போயிருக்கான். ஏற்கனவே ரெண்டு மூனு சம்மந்தம் அப்படித்தான் விட்டுப்போனதா வேற சொல்லிருக்கான்..” என இழுக்க,

“என்னங்க என்ன பேசுறீங்க? யார் அது அப்படி பேசினது. பேசுன ஆள் இருக்கா?” என செல்வம் எகிற,

“செல்வம் அமைதியா இரு. கருப்பையா பேசட்டும்..” என கந்தசாமி மகனை அடக்க,

“விடுங்கப்பா.. என்னை ஏன் அடக்குறீங்க? யார் சொன்னது? என்ன சொன்னதுன்னு ஆள காமிக்காம யாரும் இங்க இருந்து போக முடியாது.” என செல்வம் மீசையை முறுக்கி, வேட்டியை மடித்துக்கட்டி இறங்க, கருப்பையா எனும் மனிதர் மிகவும் பரிதாபமாக அமர்ந்திருந்தார்.

“தம்பி கொஞ்சம் சும்மா இரு. அவங்க பேசி முடிக்கட்டும்..” என தங்கம் செல்வத்தை அடக்கிய பிறகே அமைதியாக் நின்றான். அவன் நின்ற தோரனையே அங்கிருந்தவர்களுக்கு பயத்தைக் கொடுக்க, இப்போது யாராலும் அடுத்து பேச முடியவில்லை.

ஆனால் மாப்பிள்ளையின் அப்பா பேசித்தானே ஆகவேண்டும். “அது சம்மந்தி முன்னக்கூடியே எல்லாம் தெளிவுபடுத்திக்கிட்டா புள்ளைங்க வாழ்க்கை நல்லாருக்கும் பாருங்க. அதுக்காகத்தான்.” என இழுக்க,

“நீங்க பேசினது ரொம்ப சரிங்க.. இதை நீங்க தெளிவுப்படுத்தாம கல்யாணம் செஞ்சிருந்தா எல்லாருக்கும் அது ஒரு நெருடலாவே போயிருக்கும்ங்க.. இப்போ நீங்க வந்து பேசினது, மனசுக்கு அம்புட்டு ஆறுதலா இருக்குங்க..” என கருப்பையா பேச, கந்தசாமியும், “ஆமாங்க.. நல்ல முடிவு பண்ணீங்க..” என சொல்ல, வந்தவர்களுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.

“எங்க வீட்டுல பொண்ணு எடுக்குறீங்கன்னா கண்டிப்பா நாலா பக்கமும் விசாரிக்காம எடுக்கமாட்டீங்க. கண்டிப்பா விசாரிக்கவும் செய்துருப்பீங்க. அப்படி இருந்தும் சந்தேகம் வந்தா தப்புதானுங்களே, எங்க ரெண்டு குடும்பமும் இன்னைக்கு நேத்து பழக்கமில்லங்க. மூனு தலைமுறையா இப்படித்தாங்க இருக்கோம். அது இந்த ஊருக்கே தெரியுமுங்க. அப்படி இருக்கும் போது யாரோ சொல்ற வார்த்தைய வச்சு எம் புள்ளைங்கள நான் சந்தேகப்பட முடியுங்களா சொல்லுங்க. என் பேச்சுக்கு கட்டுப்பட்டு என் பொண்ணு நிக்கிறான்னா அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு வாழ்க்கையை நான் அமைச்சுத் தரணும்ங்க. இப்படி ஆரம்பமே சந்தேகம்ன்னா அது சரி வராதுங்க. இனி இந்த கல்யாணம் வேண்டாமுங்க..” என கருப்பையா அமைதியாக அதே நேரம் அழுத்தமாக சொல்லிவிட, வந்தவர்கள் தங்களுக்குள்ளே முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

“மச்சான் என்ன இது சட்டுன்னு பேசிட்ட, புள்ள மனசு தெரியாம எதுவும் பேசக்கூடாது. அந்த புள்ள மனசுல ஆசையை வளர்த்திருந்தா என்ன செஞ்சிருப்ப..” என கந்தசாமி கருப்பையாவை கடிய,

“ப்பா.. மாமா சொல்றதுதான் சரி. ஆரம்பமே இந்தளவுக்குன்னா இனி வாழ்க்கை எங்க கிடக்கு. இது சரிப்படாது. இன்னும் பத்திரிக்கை வைக்க ஆரம்பிக்கல இல்ல.. விடுங்க பார்த்துக்கலாம்.” என செல்வம் பேச,

“ஏன் அப்போதான் உனக்கு சௌரியமா போகும்னு பார்க்குறியோ..” என கூட்டத்தில் ஒருவன் சத்தமாக பேச,

“டேய் எவண்டா அவன்..” என தனக்கு முன்னிருந்த சேரை எட்டி உதைத்து, பேசியவனை அடிக்க பாய்ந்த செல்வத்தை சமாளிப்பட்ஹே பெரும்பாடாகிப் போனது.

“இனி எங்க வீட்டுப்பொண்ணு உங்களுக்கு இல்ல. கிளம்புங்கடா..” என மேலும் கத்த, பெண்ணின் பெற்றோர் அமைதியாக இருந்து இவன் பேசுவது, வந்திருந்தவர்களுக்கு மரியாதைக் குறைவாக தோன்றியது.

“வீடு தேடி வந்தவங்களுக்கு நல்ல மரியாதை செஞ்சிபோட்டீங்க பெரிய மனுசங்க. ஒரு பொண்ணோட வாழ்க்கை கெட்டுடக்கூடாதுன்னு மதிச்சு வந்ததுக்கு நல்ல சன்மானம் கொடுத்தீங்க. பொண்ண பெத்த உங்களுக்கே அம்புட்டு அதக்கம்னா, சிங்கம்போல பையன பெத்த எங்களுக்கு எம்புட்டு இருக்கனும். டேய் வாங்கடே.. இனி இவனுங்களே வந்தாலும் நமக்கு வேனாம்..” என மாப்பிள்ளையின் அப்பா கிளம்ப, அவருக்கு பின்னே மற்றவர்களும் கிளம்ப, புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது அந்த இடம்.

தங்கம் ஒரு பக்கம் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க, கருப்பையா ஒருபக்கம் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார்.

நண்பரின் அருகே அமர்ந்து அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் கந்தசாமி. இவர்கள் மூவரையும் பார்த்தபடி அந்த வீட்டின் ஹாலில் நடந்து கொண்டிருந்தான் செல்வம்.

இவர்கள் அனைவரையும் பார்த்தபடி தன் அறைக் கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தாள் மகேஸ்வரி. அவளது மகிழ்ச்சியை வெளிக்காட்ட முடியாமல் அமைதியாக சிலை போலவே நின்றிருந்தாள்.

நொடிக்கு நொடி கூடிக்கொண்டே செல்லும் மகிழ்ச்சியின் அளவில் இதயம் இப்போதே வெடித்துவிடுவேன் என்று வேகமாக துடித்துக் காட்டிக் கொண்டிருந்தது.

இப்படியே நின்றாள் கண்டிப்பாக தன்னை யாரேனும் கண்டுகொள்வார்கள் என நினைத்த மகேஸ்வரி அறைக்குள் நுழையப்போக,

“எங்க போற..” என்ற செல்வத்தின் இறுகியக் குரலில் அப்படியே நின்றாள்.

“உன்னைத்தான் கேட்குறேன், எங்க போற?” என மீண்டும் அதட்ட,

“அது அது உள்ளதான். ரூமுக்கு..” என பெண்ணவள் திணற,

“உள்ளப்போய் என்ன செய்யப்போற? போ போய் பெரியவங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வா..” என அதட்ட, அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் விறுவிறுவென சமையலறைக்குள் ஓடினாள் மகேஸ்வரி.

“அத்தை எதுக்கு இப்போ உடைஞ்சி போய் உக்காந்துட்ட, இவன் இல்லன்னா நம்ம மகேஷுக்கு மாப்பிள்ளையே கிடைக்கமாட்டாங்களா? இப்பவே தெரிஞ்சதுன்னு சந்தோசப்படுறத விட்டுட்டு, மூலையில உக்காந்து கண்ண கசக்கிட்டு இருக்க..” என தங்கத்துக்கு எதிரில் அமர்ந்து, அவரின் கையைப் பிடித்துக்கொண்டு பேச,

“அடுத்து வர்ரவனும் இதையே பேசினா என்ன செய்ய செல்வம்?” என்றவரின் குரல் உடைந்து போனது.

“என்னத்த நீ? சரி சொல்லு என்ன செய்யலாம்? நீயே சொல்லு? நான் வேனும்னா இங்க வரப்போக இல்லாம இருக்கவா?” என கோபமாக கேட்க,

“ஏய் என்னயா பேசுற நீ? எவனோ ஒருத்தனுக்காக நீ வராம போவியா? முடிஞ்சது முடிஞ்சு போச்சு. கொஞ்சநாள் எல்லாம் அப்படியே போகட்டும். ஒரு ஆறு மாசம் கழிச்சு மறுபடியும் பார்க்க ஆரம்பிப்போம்..” என அந்த பேச்சை தங்கம் முடிக்க நினைக்க,

“மாமா இதுவரை நம்ம குடும்பத்துல நடக்காத ஒன்னை நாம நடத்திக்கிட்டா என்ன?” என கருப்பையா கந்தசாமியிடம் கேட்க,

“என்ன மச்சான் சொல்ற? என்ன நடத்தனும்? தெளிவா சொல்லு..” என கந்தசாமி பதட்டமாக கேட்க,

“மாமா என்ன பேசுறீங்க? அப்போ வந்தவனுங்க சொன்னது உண்மையாகிடாதா?” என கருப்பையா என்ன சொல்ல வருகிறார் என புரிந்து உடனே பேச,

“ஊருக்கு பயந்து நாம வாழ முடியாது செல்வம். அதோட ஊர் வாயையும் மூட முடியாது. அவர் சொல்றதும் சரிதான்..” என தங்கமும் சொல்ல,

“என்னத்த நீ..” என செல்வம் சலிப்பாக தலையை ஆட்டி கிச்சனைப் பார்க்க, மகேஸ்வரியின் கைகள் அதன்பாட்டிற்கு வேலைகள் செய்தாலும், காதை ஹாலுக்குத்தான் கொடுத்தபடிதான் இருந்தாள். அதைக் கவனித்த செல்வத்திற்கு கோபம் தாறுமாறாக ஏற, “ஏய் இன்னும் என்னடி பன்ற? ஒரு டீ போட்டு வர இவ்ளோ நேரமா?” என பல்லைக் கடிக்க,

“ஹான் டீ கொதிக்க வேண்டாமா? சும்மா கத்திக்கிட்டு.” என எரிச்சலாக பதில் சொன்னவள் எல்லாருக்கும் டீயைக் கொடுத்துவிட்டு அவனிடம் வர, “எனக்கு வேண்டாம்..?” என முகத்தை திருப்ப, “அதை முன்னாடியே சொல்லிருக்கனும்..” என அவனுக்கு முன்னே டீயை வைத்துவிட்டு தாயின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

வீட்டின் பெரியவர்கள் மூவரும் இதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். இதுவரை அப்படியொரு எண்ணம் யாருக்குமே இல்லை.

ஆனால் இப்போது இந்த நொடி மூவருக்கும் ஒன்றேதான் தோன்றியது. இவர்கள்தான் சரியான ஜோடி என.

இருவரும் ஆளுக்கொரு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு டீயைக் குடித்தபடி அமர்ந்திருக்க பெரியவர்களின் முடிவு மேலும் வலுப்பெற்றிருந்தது.

“மாமா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அத்தை சொல்ற மாதிரி கொஞ்ச நாள் இந்த பிரச்சினையை ஆறப்போடுங்க. அதுக்குப்பிறகு நிதானமா யோசிச்சு முடிவெடுப்போம்..” என சொல்லி, மூவரிடமும் விடைபெற்று கிளம்பிவிட, மகேஸ்வரியும் யார் கவனத்தையும் கவராதபடி வீட்டின் பின்பக்கம் சென்று, அங்கிருந்து மற்றொரு வழியாக செல்வத்தை நோக்கி வேகமாக நடந்தாள்.

“என்ன தங்கம் யோசனை? செல்வம் சொல்றது போல செய்யலாம். எதுக்கு அவசரம்?” என கந்தசாமியும் மகனை ஒத்தே பேச,

“இல்லண்ணே என் முடிவுல மாற்றம் இல்ல. இனி வெளிய இருந்து எல்லாம் மாப்பிள்ளை பார்க்குற வேலையே இல்ல. செல்வம்தான் என் வீட்டுக்கு மாப்பிள்ளை..” என தங்கம் முடித்துவிட,

“ஏன் மச்சான் உங்களுக்கு விருப்பமில்லயா? இல்ல செல்வத்துக்கு வேற விருப்பம் இருக்கா?” என கருப்பையா கேட்க,

“ச்சே ச்சே என்னப்பா பேசுற நீ? மகேசு என் வீட்டு குலசாமிய்யா? அது என் வீட்டுக்கு வந்தா என்னவிட யாரு சந்தோசப்படுவா சொல்லு? லட்சுமியைப் பத்தின கவலையே என்னை விட்டு போய்டும். செல்வத்தை நான் சரி கட்டிடுவேன். எனக்கு மகேசு என்ன நினைக்குமோன்னுதான் கவலை. வேற ஒன்னுமில்ல..” எனவும்,

“அண்ணே இதெல்லாம் ஒரு விசயமா? பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற மாதிரி பண்ணிக்கலாம். எப்படியும் கதிருக்கு இன்னும் ரெண்டு வருசம் கழிச்சுத்தான் பண்ணுவோம். லட்சுமிக்கும் அப்போ 20 வயசு ஆகிடும். பிரச்சினை இருக்காது பாருங்க..” என தங்கம் சுலபமாக தீர்வு சொல்ல

“தங்கம்.. கதிருகிட்ட கேட்காம எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மகேசு நாம என்ன சொன்னாலும் கேட்கும். கதிரு அப்படி இல்ல. அதனால இதைச் சொல்லி லட்சுமி மனச கெடுத்து விடாத. இப்போதைக்கு இந்தபேச்சு நம்மளோட போகட்டும். கதிர் சரின்னு சொன்னா பார்ப்போம்..” என கருப்பையா கூற,

“அதெல்லாம் என் பையன் நான் கிழிச்ச கோட்டத் தாண்டமாட்டான். நான் காட்டுற பொண்ணு கழுத்துல கண்ணை மூடி தாலியக் கட்டுவான்..” என தன் மகனைப் பற்றித் தெரியாமல் பெருமை பேசிக் கொண்டிருந்தார் தங்கம்.

அதே நேரம் சென்னையில் “ம்ச்… என்னடி பிரச்சினை? கொஞ்ச நேரம் கழிச்சு போகக்கூடாதா.?” என தன்மேல் இருந்து எழுந்தவளை, இழுத்து மீண்டும் தன்மேல் போட்டுக்கொண்டு விட்ட உறக்கத்தை தொடந்தார் கதிரவன்.

“ஹேய் விடுங்க கதிர்.. மணியைப் பாருங்க.. பன்னெண்டு ஆகிடுச்சு. அம்மா கத்த ஆரம்பிச்சிடுவாங்க. ஏற்கனவே வயித்துல பாப்பா இருக்கும் போது கவனமா இருன்னு என்னைத் திட்டிக்கிட்டே இருக்காங்க. இப்போ இன்னும் திட்டுவாங்க.. விடுங்க கதிர்..” என சினுங்கியபடியே அவனிடமிருந்து மெல்ல திமிறி விலகப் பார்க்க,

“ம்ச் உங்க அம்மா சொன்னா கேட்கனும்னு என்ன இருக்கு? வயசானவங்க அப்படித்தான் எஹ்டியாவது சொல்லிட்டு இருப்பாங்க. அதையேன் காதுல ஏத்திக்கிற? பொண்டாட்டியை பிரிஞ்ச புருசனுக்குத்தான் அவன் கவலை தெரியும். இவங்க எல்லாம் இந்த வயசைத் தாண்டித்தானே வந்துருப்பாங்க..” என கடுகடுவென பேசினாலும், மனைவி தன்னிடமிருந்து நகராமல் பார்த்துக்கொண்டான் கதிர்.

“இந்த தடவையாவது வீட்டுல சொல்லிட்டு வந்தீங்களான்னு அம்மா கேட்டாங்க.?” என மெல்ல முணுமுணுக்க,

“ம்ச் அப்படி ஒரு சூழ்நிலை அமைஞ்சிருந்தா சொல்லிருக்க மாட்டேனா? அங்கேயே ஏகப்பட்ட பிரச்சினை. அதுல இருந்து எப்படா வெளிய வருவோம்னு இருந்தது. அம்மாக்கிட்ட பேசுற சந்தர்ப்பமும் அமையல. பாப்பா பிறக்குறதுக்குள்ள கண்டிப்பா சொல்லிடுறேன்..” என்றவருக்கு அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை.
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
19
18
Ullagaram
செ
செந்தாமரை என் தாமரை..!
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 18)


அடப்பாவி உங்கக்கா மொக்கா..! மத்தவங்கன்னா உனக்கு எக்குத் தொக்கா...? அதுக்குள்ள புள்ளையை கூட கொடுத்துட்டானா...? அதெப்படி வீட்டுக்கு தெரியாமலே இம்புட்டு வேலை பண்ணி வைச்சிருக்கியா...? இது தெரியாம் உங்காத்தா அங்கே உனக்கு கொடி பிடிச்சிட்டிருக்கு பாரு. நல்லா இருப்பேடா கதிரு.


😀😀😀
CRVS (or) CRVS 2797
ந் தாமரை யே