தாமரை - 46
“செழியா என்ன வேலைடா பார்த்து வச்சிருக்க? இதெல்லாம் அந்த இளங்கோவுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னு கடல்ல எரிஞ்சிடுவான்டா.. ஏண்டா.. ஏண்டா.. உன் புத்தி இப்படி போச்சு..” என செழியனை போட்டு அடித்துக் கொண்டிருந்தார் அவனின் தந்தை.
“எதுக்கு இப்போ என்னை போட்டு அடிச்சிட்டு இருக்க..? என்னோட திட்டமே வேற. அதுல அந்த தாமரையா போய் மாட்டினா நான் என்ன செய்ய?” என்றான் அவரைத் தள்ளிவிட்டு,
“என்னடா சொல்ற? என்ன திட்டம்?” என அவர் அதிர்ந்து பார்க்க,
“நான் ஸ்கெட்ச் போட்டது, உன் மருமகளுக்கும் அந்த பரதேசி இளங்கோவுக்கும் தான். அந்த தாமரை என்னோட திட்டத்தை தெரிஞ்சிக்கிட்டு அவ அத்தானை காப்பாத்துறதா நினைச்சு அவளே போய் அதுல மாட்டிக்கிட்டா.. ஹான் இதுவும் ஒரு வகையில நல்லதுதான். அன்னைக்கு அந்த இடத்துல உன் மருமக இருந்திருந்தா அவனுக்குத்தான கல்யாணம் செஞ்சு வச்சிருப்பீங்க. இப்போ அவ தப்பிச்சிட்டா..” என நக்கலாக கூற,
“டேய் என்னடா இதெல்லாம்..” என்ற பெற்றவருக்கு, செழியன் சொன்னதை நம்பவே நெடும் நேரம் எடுத்தது.
“ஹான் எனக்கு பொண்டாட்டியா வர போறவளை, அந்த இளங்கோவுக்கு பேசி முடிச்சா நான் சும்மா இருக்கனுமா? ஹான்.. அவளும் என்னை விட்டுட்டு அந்த இளா கூட ‘மாமா மாமான்னு’ சுத்துவா அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கனுமா?” என ஆத்திரமாக கேட்க,
“செழியா நீ என்ன சொல்ற? நாங்கதான் கொஞ்ச நாள் பொறு.. ப்ரீத்தாவை உனக்கே கட்டி வைக்கிறோம்னு தானே சொல்லிருந்தோம்..” என மகனின் பேச்சில் புரியாமல் கூற,
“என்ன கொஞ்ச நாள் வெயிட் பண்ணனுமா? அவன் என் பொண்டாட்டிக்கிட்ட எல்லாத்தையும் முடிச்சிட்டு எனக்கு கொடுப்பான். அவளை வச்சு நான் சாமி கும்பிடனுமா?” என கோபத்தில் கத்த,
“டேய்.. டேய்.. செழியா.?” என்றவருக்கு மகனின் இந்த கோலத்தையும், கோபத்தையும் பார்க்கவே முடியவில்லை.
“ஒரு அப்பன்கிட்ட பேசுற மாதிரியாடா பேசுற. இதுதான் பிரச்சினைன்னு சொல்லிருந்தா, அதுக்கு தகுந்த மாதிரி நாம வேற ப்ளான் பண்ணிருக்கலாமேடா.. அதை விட்டுட்டு இது என்ன பழக்கம். இது மட்டும் அந்த இளங்கோவுக்கோ, செல்வத்துக்கோ தெரிஞ்சா உன்னை உயிரோட விடமாட்டாங்கடா..” என்றார் பயத்தில்.
“ஹான் அவனுங்களால என்னை ஒன்னும் பண்ண முடியாது. என் மேல கைவைக்க நினைச்சாலே அந்த வீடியோவை அப்லோட் பண்ணிடுவேன்..” என்றான் குரூரமாக..
“செழியா இது ரொம்ப தப்பு.. ஒரு பொண்ணோட மானத்துல விளையாடக்கூடாது. அது ரொம்ப பாவம். சொன்னா கேளுடா.. அதுதான் உன் பிரச்சினை தீர்ந்துடுச்சே, ப்ரீத்தாவுக்கும் உனக்கும் தானே கல்யாணம். அப்புறம் ஏன் அந்த வீடியோ வச்சிருக்க. அதை அழிச்சிடு..” என்று கெஞ்சினார் மகனிடம்.
“நீங்க அந்த பணத்துக்காக எவ்வளவோ பண்ணிருக்கீங்க.. அதையெல்லாம் நான் ஏன்னு கேட்டுருக்கேனா? இப்போ நீங்க மட்டும் எதுக்கு என்னை இத்தனை கேள்வி கேட்குறீங்க.. நான் என்ன செய்யனுமோ அதை செய்யாம விடமாட்டேன். அந்த இளங்கோவோட ஸ்டேட்டஸை மொத்தமா போட்டு அழிச்சாத்தான் எனக்கு நிம்மதி.” என்று கூறிவனின் குரலில் இருந்த குரூரத்தில் அந்த பெற்றவருக்கே உடல் நடுங்கிப் போனது.
“ஜஸ்ட் ஒரு சிங்கிள் கிளிப் தான் அனுப்பி வச்சேன். அதுக்கே ஆஸ்பிடல்ல போய் படுத்துட்டா அந்த தாமரை.. இனி முழுசா அனுப்பினா மேல போய் சேர்ந்துடுவாளா..?” என வெறிகொண்டு பேசிச் சிரித்தபடி அறைக்குள் செல்ல, அவனின் அப்பாவுக்கு அடுத்து என்ன நடக்குமோ என நினைக்கும் போது உயிரே வற்றிப் போனது.
இப்போது என்ன செய்ய வேண்டும்.. நாயகியிடம் சொல்ல வேண்டுமா? அவளுக்கு தெரிந்தால் இதை பெரிது படுத்தாமல், இதை வைத்தும் ஒரு திட்டம் போட்டு அந்த பெண்ணை முடிக்க யோசிப்பாள்.
வேண்டாம்.. இப்போது சொல்ல வேண்டாம். யோசிக்கலாம்.. என நினைத்தபடியே சோபாவில் சாய, அந்த அறையின் வெளியில் இருந்து அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த ப்ரீத்தாவோ அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்.
இங்கிருந்து முதலில் வெளியில் செல்ல வேண்டும். இந்த இடம் ஆபத்தானது என புத்திக்கு புரிகிறது. ஆனால் மனமோ அதற்கு ஒத்துழைக்க வில்லை.
அவளுக்கு அன்றைய நாள் கண் முன்னே வந்தது.
அவளும் இளங்கோவும் தோப்பு வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது தோட்டத்தில் வேலை செய்பவர் இருவருக்கும் இளநீர் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தாளைப் பார்த்து இளங்கோ கூட “உங்களை இதுக்கு முன்னாடி இங்க பார்க்கலையே..” என்று கேட்டான்.
அதற்கு அந்தாள் “நான் ஊருக்கு போயிட்டேன் தம்பி.. நேத்துதான் வந்தேன். மகேஸ் அம்மாதான் தேங்கா இறக்குறாங்க தோப்புக்கு போன்னு சொன்னாங்க..” என மகேஸ்வரியை இழுத்து சொல்ல,
இளங்கோவும் தன் அத்தையின் வேலையாள் என்று நினைத்து அமைதியாக நடந்தான்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவர்களை நோக்கி பரபரப்பாக வந்தாள் தாமரை. அந்த நேரமே இருவருக்கும் நிதானம் தப்பியிருந்தது. அவளைப் பார்த்ததும் இளங்கோ வழக்கம்போல திட்ட, அவளோ அதை கண்டுகொள்ளாமல் தன்னை இழுத்துக்கொண்டு வெளியில் நடக்கிறாள்.
இருவராலும் அவளைத் தடுக்க முடியவில்லை. பெரும் போராட்டத்துடன் ஒரு வேலையாள் மூலம் தன்னை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள்.
அதுவரை மட்டுமே அவளுக்கு இப்போது நினைவு இருந்தது. அப்படியென்றால் அன்று இளநீரில் போதை மருந்தை கலந்து கொடுத்தது செழியனா? என்னையும் இளங்கோவையும் பழி வாங்கத்தான் இதை செய்தானா? அதில் தாமரை சிக்கிக்கொண்டாளா? ஓ மை காட்.. ஓ மை காட்.. என்ன பண்ணி வச்சிருக்கோம் எல்லாரும்.. அய்யோ என்னையும் என் வாழ்க்கையையும் காப்பத்தி கொடுத்த பொண்ணை எல்லாரும் சேர்ந்து எவ்ளோ கொடுமை பண்ணிருக்கோம்..
என்னை அந்த கடவுள் கூட மன்னிக்க மாட்டார்.. என சத்தம் வராமல் கதறியவள், வந்த அடையாளமே தெரியாமல் மீண்டும் கிளம்பினாள்.
அவள் வண்டியை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டு ‘யாரோ’ என நினைத்து எட்டி பார்த்த செழியனின் பார்வையில் அது விழ, ‘ஓ எல்லாத்தையும் கேட்டுட்டா போல.’ என நினைத்தவனின் முகம் கோபத்தில் அகோரமாக மாறியது.
‘ஹான் போடி போ.. போன வேகத்துல என்னைத் தேடி வருவ.. வர வைப்பேன்..” என்றவன், அந்த விடியோவை ப்ரீத்தாவிற்கு அனுப்பி வைத்தான்.
ஆனால் காரில் சென்ற ப்ரீத்தா அந்த வீடியோவை உடனே பார்க்கவில்லை. அவள் வண்டியை ஓட்டிக்கொண்டே ஷ்யாமிற்கு அழைத்தாள்.
அவனோ தாமரையைப் பற்றி கேட்கத்தான் அழைக்கிறாள் என நினைத்து எடுக்காமல் விட, ப்ரீத்தாவோ விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்ட இருக்க, ஷ்யாமிற்கு சலிப்பும் கோபமும் வந்துவிட்டது.
‘என்ன பொண்ணு இவ..? ஒரு டைம் எடுக்கலன்னா பிசியா இருக்காங்கன்னு தெரிய வேண்டாமா?’ என கடுப்பில் புலம்ப, அதற்குள் மீண்டும் அழைத்திருந்தாள்.
இந்த முறை போனை எடுத்தவன் அவளை பேசவே விடாமல் “ஹேய் என்ந்தாண்டி பிரச்சினை உனக்கு. போன் எடுக்கலன்னா என்னனு கூட உன்னால புரிஞ்சிக்க முடியாதா? சும்மா கால் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருக்க.?” என கத்த,
ஆனால் அதெல்லாம் ப்ரீத்தாவின் காதில் விழவில்லை. “ஷ்யாம்… நான்.. நான் உங்களை உடனே பார்க்கணும்.. எந்த ரீசனும் சொல்லாம உங்க வீட்டுக்கு வாங்க.. ப்ளீஸ்.. சீக்கிரம் வாங்க.. நானும் வந்துட்டு இருக்கேன்.. சீக்கிரம் வந்துடுங்க ஷ்யாம்..” என மூச்சு வாங்க கூறவும்தான் ஷ்யாமிற்கு புரிந்தது, ப்ரீத்தா ஏதோ ஒரு பிரச்சினையில் இருக்கிறாள் என..
இளங்கோ, சீனி என அவளின் வீட்டாட்கள் அனைவரும் இங்கிருக்க, தன்னை ஏன் கூப்பிட்டாள் என யோசித்தபடியே இளங்கோவிடம் ‘இப்ப வந்துடுவேன்’ என சைகையில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
ப்ரீத்தா போனில் நெட் ஆன் பண்ணாமல் இருக்க, செழியன் அனுப்பிய வீடியோ அவளுக்கு வந்து சேரவில்லை.
அங்கு செழியனும் சிங்கிள் டிக்கில் இருக்கும் வீடியோவைப் பார்த்து யோசனையானான். பின் பதட்டமானான்.
இவள் சென்று அங்கு எல்லோரிடமும் சொல்லிவிட்டால் என்ன செய்ய என பயந்தவன் இப்போது ப்ரீத்தாவிற்கு அழைத்தான்.
அவன் அழைப்பை பார்த்ததுமே ப்ரீத்தாவிற்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அந்த நடுக்கத்தில் கார் சற்று தடுமாற அதை கவனித்து சரி செய்து ஓட்டும் முன் மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
அவன் தொடர்ந்து அழைப்பதிலேயே அந்த வீட்டிலிருந்து கிளம்பும் போது தன்னை பார்த்துவிட்டான் என ப்ரீத்தாவிற்கு புரிந்து போனது.
அவன் தன்னை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறானோ என்ற பயமும் சேர, ரிவர்வியூ மிரரில் பார்த்துக்கொண்டே தன் காரில் வேகத்தைக் கூட்டினாள்.
சரியாக அவள் ஷ்யாமின் வீட்டு முன் வண்டியை நிறுத்த, ஷ்யாமும் வந்துவிட்டான்.
அவ்வளவு வேகம் இருவரிடமும்.
முகமெல்லாம் வியர்த்து, உடலெல்லாம் நடுங்கிப் போய் காரில் இருந்து இறங்கியவளைப் பார்த்த ஷ்யாமும் பதறியபடி “என்னடி என்னாச்சு.? என்னாச்சுன்னு சொல்லு.?” என கேட்க,
“ஷ்யாம்.. ஷ்யாம் நான் தாமரையை.. தாமரையை தப்பா… அவங்க என்னை காப்பாத்த.. நான்தான் தப்பா.. செழியன்தான் எல்லாம்.. ஷ்யாம்..” என பயத்தில் அவனை இறுக கட்டிக்கொண்டு கோர்வையாக சொல்லாமல் விட்டு விட்டு பேச, ஷ்யாமிற்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனால் இவளுக்கு ஏதோ ஒரு உண்மை தெரிந்திருக்கிறது. அதை தெரிந்து பயந்து போய் வந்திருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.
“இங்க பார் குட்டிமா.. ஒன்னுமில்ல.. உனக்கு ஒன்னும் நடக்கல.. நான் இங்கதான் இருக்கேன். நீ எங்கிட்ட வந்துட்ட.. வா உள்ள வா.. ஒன்னுமில்ல வா..” என அவளை சமாதானம் செய்தபடியே வீட்டிற்குள் அழைத்து சென்று முதலில் தண்ணீரைக் கொடுத்தான்.
அப்போது மீண்டும் ப்ரீத்தாவின் போன் அலற, குடித்துக் கொண்டிருந்த பாட்டில், அவள் கை நடுக்கத்தில் தன்னால் கீழே விழ, அதை கவனித்தாலும் பரவாயில்லை என்று விட்டு, ப்ரீத்தாவை இறுக அனைத்தபடியே அந்த போனை அட்டென்ட் செய்தான்.
இவன் ஹலோ என்று சொல்வதற்கு முன்பே செழியன் “பொண்டாட்டி மேடம்.. என்ன வீட்டுக்கு வந்துட்டு வாசலோட போயிட்டீங்க. நாங்க பேசினதை எல்லாம் கேட்டுட்டீங்களா? ரொம்ப தப்பாச்சே.. இப்போ என்ன செய்யலாம். எப்படி போனீங்களோ.. அதே வேகத்துல திரும்பி வரீங்க. அப்படி வரலன்னா… ஹான் வருவீங்க பொண்டாட்டி மேடம். வர வைப்பேன். நீங்க எப்பவும் நெட் எல்லாம் ஆன் பண்ணி வைக்க மாட்டீங்களா? ரொம்ப நல்ல பொண்ணு மேடம் நீங்க. முதல்ல நெட் ஆன் பண்ணிட்டு, நான் உங்களுக்கு அனுப்பின வீடியோவை பாருங்க. பார்த்துட்டு உடனே இங்க கிளம்பி வந்துடுங்க. உங்களுக்கு ஒரு மணி நேரம் டைம். அப்படி வரலன்னா அடுத்த செகன்ட் இந்த வீடியோ வேர்ல்ட் வைடா ரிலீஸாகும் ஓக்கேவா.. பை பொண்டாட்டி.. சீக்கிரம் வந்துடுங்க.. உங்களுக்காக ஐம் வெய்ட்டிங்க்..” என கிண்டலாக சிரித்தபடி போனை வைக்க, ப்ரீத்தாவிற்கு சர்வமும் ஒடுங்கி விட்டது.
“என்ன வீடியோ குட்டிம்மா? அவன் வீட்டுல என்ன நடந்தது..? எதை சொல்லி மிரட்டிட்டு இருக்கான்..” என கேட்டுக்கொண்டே அவள் போனில் நெட்டை ஆன் செய்ய,
“அய்யோ ஷ்யாம்.. வேண்டாம். அது.. அதை பார்க்க வேண்டாம். அதை நீ பார்க்கவே கூடாது.. எல்லாம் என் தப்புத்தான். எல்லாம் என் தப்புத்தான்..” என தலையில் அடித்துக்கொண்டு அழ, ‘என்ன சொல்கிறாள் இவள்?’ என புரியாமல் பிரம்மை பிடித்தது போல் அதிர்ந்து நின்றான் ஷ்யாம்.