தாமரை - 61
“உங்க அப்பா மேல ஒன்னும் கோபம் இல்லையே?” என தயங்கித் தயங்கித்தான் கேட்டார் விமலா. மூவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தனர்.
“இதுவே பத்து நாளைக்கு முன்னாடி கேட்டிருந்தா என்ன பதில் சொல்லிருப்பேனோ தெரியல. அப்போ என்ன மனநிலையில் இருந்திருப்பேன்னும் தெரியல. ஆனா இப்போ எனக்கு கோபம், வருத்தம் இல்ல. அவரோட உணர்வுகள் எனக்கு புரிஞ்சிக்க முடிஞ்சது. என்னால அவர் எப்பவும் நிம்மதியாவோ சந்தோசமாவோ இருந்ததில்ல. அவரோட கடைசி நாட்கள்ல நீங்க ரெண்டு பேரும் அதை அவருக்கு கொடுத்திருக்கீங்க. அந்த வகையில நீங்க எனக்கு நிம்மதியை கொடுத்திருக்கீங்க. பாவம் பண்ணின எனக்கு பரிகாரம் பண்ண வாய்ப்பு கொடுத்துருக்கீங்க..” என்று வருத்தமாக கூறினான் செழியன்.
விமலா கணவரை இழந்து தம்பி வீட்டில் வசித்து வந்தவர், தம்பி மனைவியின் பேச்சில் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்வதற்காக, நடராஜின் காரின் முன் விழ, அவரைக் காப்பாற்றி தனக்கு தெரிந்தவரின் வீட்டில் இருக்க வைத்தார்.
அங்கு அவரை அடிக்கடி போய் பார்க்க வர, அப்படியே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. விமலாவை நண்பரின் உதவியொடு முறைப்படித்தான் திருமணம் செய்திருந்தார் நடராஜ்.
என்ன வீட்டில் யாருக்கும் சொல்லவில்லை. செழியனுக்கு திருமணம் முடிந்த பிறகு இதுபற்றி சொல்லிக் கொள்ளலாம் என்று பேசி முடிவு செய்திருந்தனர்.
அதனால் விமலாவிற்கும் சரி, நடராஜிற்கும் சரி இந்த திருமணத்தில் எந்த வருத்தமோ சங்கடமோ இருக்கவில்லை.
விமலா அந்த வீட்டிற்கு சென்றதில்லை என்றாலும், செழியனைப் பார்த்திருக்கிறார். அவனைப் பற்றித் தெரிந்தும் வைத்திருக்கிறார்.
அவன் மேல் கோபமோ, மாற்றாந்தாய் மகன் என்ற எண்ணமோ எப்போதும் வந்ததில்லை. நடராஜ் வர விட்டதுமில்லை. அவனைப் பற்றி நல்ல விதமாகவேத் தான் சொல்லி வைத்திருந்தார்.
அவர் காலத்திற்குப் பிறகு இவர்களை அவன்தானே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு விஷால் பிறந்த உடனே வந்திருந்தது.
என்னதான் பணம் சொத்து என அவர்களுக்கு ஒதுக்கியிருந்தாலும், சொந்தம் என்று செழியன் மட்டும் தானே இருக்கிறான். அவன்தானே பார்க்க வேண்டும் என்று நினைத்து அவனைப் பற்றி சொல்லியிருந்தார்.
விமலாவும் கூட செழியனை இப்போது வரை தவறான பார்வையில் பார்க்கவில்லை.
“போனதெல்லாம் போகட்டும் தம்பி. அடுத்து என்ன செய்யலாம்? நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம். இப்படியே எங்களை ஒதுக்கினா கூட எனக்கு வருத்தம் இல்ல. அவருக்கு நான் சத்தியம் செஞ்சி கொடுத்துருக்கேன். விஷாலை வச்சு உங்ககிட்ட பிரச்சினை செய்ய மாட்டேன்னு. அதனால பயப்பட வேண்டாம்..” என்றார் விமலா.
“இப்படி பேசி என்னை சங்கடப்படுத்தாதீங்க.. இவனை பார்க்கிற நிமிசம் முன்னாடி வரை செத்துடலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா இப்போ நாம மூனு பேரும் ஒன்னா ஒரே குடும்பமா வாழ்னும்னு ஆசைப்படுறேன். நமக்கு இந்த ஊரே வேண்டாம். ஏன் இந்த நாடே கூட வேண்டாம். எங்கையாவது போயிடலாம். அப்பா பணத்துக்கு பஞ்சமில்லாம சேர்த்து வச்சிருக்கார். எல்லாத்தையும் வித்துட்டு இங்க இருந்து போயிடலாம்.” என்றான் ஏதோ குரலில்.
“ஏன் ப்பா.. இங்க எங்கையோ இருந்து இதை பார்த்துட்டு இருக்குற உங்க அப்பாவோட ஆன்மா கூட வருத்தப்படும்..” என்றார்.
“அப்படி இல்ல விமலாம்மா..” என்றவன் நொடியில் அவரைப் பார்த்து “அப்படி கூப்பிடலாம்ல.. உங்களுக்கு வருத்தம் இல்லையே.?” என்றான் வேகமாக.
“அய்யோ தம்பி எனக்கு என்ன வருத்தம் இருக்கப் போகுது. சித்தின்னு கூப்பிடாம அம்மான்னு கூப்பிட்டீங்களே, அதுவே எனக்கு சந்தோசம் தான். நீங்க அப்படியே கூப்பிடுங்க..” என்றவருக்கு நிறைவில் விழிகள் கலங்கின.
அதை புடவை முந்தானையில் துடைத்து விட்டு செழியனைப் பார்த்து சிரித்தார்.
“ம்ம் அப்பாவுக்கு நான் இப்படி மாறினதே சந்தோசமாத்தான் இருக்கும். நான் எங்க இருக்கேன்னு முக்கியமில்ல. ஒழுக்கமா இருக்கேனா அதுதான் அவருக்கு முக்கியம். இங்க இருந்தா என்னோட பழைய வாழ்க்கை, பழைய ஃப்ரண்ட்ஸ் என்னை துரத்திட்டே இருக்கும். இது வேண்டாமே.. நாம சௌத் சைட் ஏதாவது வில்லேஜ் கூட போயிடலாம்..” என்றான் திட்டவட்டமாக.
“உன்னோட முடிவுதான் ப்பா எல்லாம். இங்க இருந்து எப்போ போவோம்..” என்றார் விமலா.
“எப்படியும் ரெண்டு மூனு நாள் ஆகிடும். பார்க்கலாம்..” என்றவன் தூக்கத்துக்கு தலையை ஆட்டிக் கொண்டிருந்த விஷாலைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் செழியன்.
இப்போது அந்த அறையிலிருந்து வெளியில் வரும் அளவிற்கு அவனுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. வீட்டைச் சுற்றி காவலிருக்க, அவனால் எங்கும் தப்பிக்க முடியாது.
தப்பிக்க அவனுக்கு துளியளவும் ஆசை இல்லை.
“பாஸ்.. ஓவர் சென்டியா போய்ட்டு இருக்கு.. இதை பார்த்து நீங்க மனசு மாறிடுவீங்களோன்னு எனக்கு பக்குனு இருக்கு..” என்றான் நவீன் அந்த சிசிடிவி கேமராவைப் பார்த்து.
“டேய்… என்னை கொல்லக்கூட்ட தலைவன் ரேஞ்சுக்கே எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டு இருக்க நீ.?” என சிரித்துக் கொன்டே அந்த வீட்டின் சிசிடிவியை ஆன் செய்தான் இளங்கோ..
“அப்போ இல்லையா பாஸ்..?” என பாவமாக கேட்டாலும் அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.
அப்போதுதான் தாமரை பின் கட்டு பக்கம் செல்வதை பார்த்தனர்.
“பாஸ் மேடம் ஒரு இடத்துல இருக்கவே மாட்டேங்குறாங்க..?” என்ற நவீனுக்கு “ம்ம் இந்த டைம்ல ஒரு குழந்தையே அந்த பாடு படுத்துமாம். தாராவுக்கு மூனு ரொம்ப கஷ்டமா இருக்கும்ல. வீட்டுல சொன்னா எல்லாரும் கஷ்டப்படுவாங்கன்னு சொல்லாம, இப்படி நடந்துட்டே இருக்க. ஹெல்த் ப்ரஷர் ஒரு பக்கம், மென்டல் ப்ரஷர் ஒரு பக்கம்னு அவளுக்கு தொந்தரவு தான..” என்ற நேரம் தான் சுத்தி சுத்தி பார்த்தபடி நாயகி தாமரையைப் பின் தொடர்வது தெரிந்தது.
அதைப் பார்த்ததும் நவீனுக்கு டென்சன் ஏற “பாஸ்.. இந்த குந்தாணி அடங்கவே அடங்காதா? கிடைக்கிற கேப்ல எல்லாம் எப்படி யோசிச்சு ப்ளான் பண்ணுது பாருங்க. இருங்க நான் போய் பார்க்கிறேன்..” என கிளம்ப போக,
“அட இருடா.. முழுசா பார்த்துட்டு போகலாம்..” என இளங்கோ பொறுமையாக பதில் கொடுக்க,
“அதுக்குள்ள அந்த குண்டம்மா ஏதாச்சும் பண்ணிடும்..” என வேகமாக அறையைக் கூட தாண்டிருக்க மாட்டான்.. ‘அய்யோ அம்மா’ என்ற அலறல் சத்தம் கேட்க பதறி ஓட ஆரம்பித்தான்.
அங்கே சென்று பார்த்த காட்சியில் சிரிப்பை அடக்க முடியாமல் பக்கென்று சிரித்து விட்டான்.
அங்கு பின் கட்டின் படிக்கட்டில் இருந்து உருண்டிருப்பார் போல, ஏடாகூடமாக விழுந்து கிடந்தார்.
ஆம்.. பின் கட்டிலிருந்து வீட்டுக்குள் வர இன்னொரு வழியும் இருக்கும், வெளியில் செல்லவும் வழி இருக்கும். தாமரை அந்த இன்னொரு வழியாக வீட்டுக்குள் வந்துவிட, அது தெரியாத நாயகி அவளைத் தேடிக் கொண்டே கீழே பார்க்காமல் படிக்கட்டில் கால் வைக்க, உருண்டு விட்டார்.
அடேய் பாவி பாயலே.. என்னைப் பார்த்து சிரிக்கிறியா, உன்னை கவனிச்சிக்கிறேன். தூக்கி விடுடா..” என அந்த வலியிலும் கத்த,
நவீனும் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான் நாயகியின் சத்தத்திற்கு கூட யாரும் வரவில்லை. அப்படியென்றால் இங்கு யாருமில்லை. நல்ல வேலையாக தாமரை இங்கு இல்லை. இருந்திருந்தால் இந்த குண்டம்மா என்ன செய்திருப்பாள்? நினைக்கவே கோபம் வந்துவிட்டது.
அதனால் “ஏய் குண்டாத்தா.. யாரை பார்த்து பாவி பயலேன்னு சொல்ற? உன்னை தூக்குறதுக்கு கிரேனைத் தான் கொண்டு வரனும். நான் தூக்கி என் கை உடையுறதுக்கா? பாவம் நாலு பேர கூப்பிட்டு தூக்கலாம்னு நினைச்சேன். உன் வாய்க்கு நீ இப்படியே கிட..” என அவன் அந்த இடத்தை விட்டு நகர போக,
“ஏய் ஏய்.. எய்யா ராசா.. கொஞ்சம் உதவி பண்ணுய்யா.. ரொம்ப வலிக்குது. என்னால அசைய முடியல. யாரையாவது கூப்பிடு சாமி..” என நொடியில் கெஞ்ச ஆரம்பித்துவிட..
“குண்டாத்தி.. பச்சோந்தி கூட தோத்து போயிடும்..” என்று முனங்கிக் கொண்டே திரும்ப, இவர்களைப் பார்த்தபடியே நின்றிருந்தாள் தாமரை.
“மேடம்.. நீங்க உள்ள போங்க. அப்படியே உங்க டாக்டர் ஃப்ரண்ட வரச் சொல்லுங்க. மறக்காம நூத்தியெட்டுக்கு கூப்பிட்டு சொல்லுங்க..” என்றதும்,
“அவனே இப்போதான் ஒரு லவ் செட்டாகி கேர்ள் ஃப்ரண்டோட போயிருக்கான். அவனை டிஸ்டர்ப் பண்ண சொல்றியா? உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது பார்த்துக்கோ.” என தாமரை கொதிக்க,
“மேடம் உங்க சொந்தக்காரங்கன்னு தான் சொன்னேன். அதுக்காக நீங்க என்னோட அடி மடியிலேயே கை வைக்கக் கூடாது. இப்போ என்ன உங்க ஃப்ரண்டா கூப்பிடக்கூடாது அவ்ளோதான. விடுங்க. இருங்க நான் வேற ஏற்பாடு பண்றேன்..” என்றவன் ஃபைர் செர்விஸ்க்கு அழைத்துவிட,
“டேய்.. என்னை வச்சு காமெடியா பண்ணிட்டு இருக்கீங்க? என்னைப் பத்தி தெரியாம விளையாடிட்டு இருக்கீங்க. நான் நினைச்சா நொடியில உங்களை இல்லாம பண்ணிடுவேன்..” என வலியில் தன் உண்மையான ரூபத்தைக் காட்ட ஆரம்பிக்க, அப்போது காற்று பலமாக வீச, அந்த படிக்கட்டின் மேலிருந்த ஓடு ஒன்று நாயகியின் தலையில் விழுந்தது.
“அய்யோ அம்மா..?” என அவர் கத்த, தலையில் இருந்து ரத்தம் வழிய, அதைப் பார்த்தபடியே பயத்தில் மயங்கி விட்டார் நாயகி.
“ஷப்பா.. எவ்ளோ அடி வாங்கினாலும் தாங்குவேன்ற மாதிரிதான் இந்த குண்டம்மா பண்ணுது..” என நவீன் புலம்பிக் கொண்டே இருக்க, வாக்கரை பிடித்தபடியே மெதுவாக அங்கு வந்திருந்தான் இளங்கோ.
“ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டேன்.. இப்போ வந்துடும். அந்த ரத்தம் வர்ர இடத்துல துணியைக் கட்டி, தண்ணியை தெளிச்சி விடுடா..” என்றான் இளங்கோ உனர்ச்சியற்ற குரலில்.
“இன்னும் எத்தன நாளைக்கு இந்த பொம்பளையை உயிரோட வச்சிருக்க போறீங்க. இதெல்லாம் பூமிக்கு பாரம். இது இருந்து இன்னும் எத்தனை உயிரை எடுக்கப் போகுதோ.. என் பிள்ளைங்க இந்த உலகத்தைப் பார்க்கும் போது இந்தம்மா இருக்கக்கூடாது. என் புருசனுக்கு அப்பா-அம்மா இல்லாம, என் குழந்தைகளுக்கு தாத்தா-பாட்டி இல்லாம ஆக்கின இந்த பொம்பளை இருக்கவே கூடாது என்றாள் ரௌத்திரம் நிறைந்த குரலில்.
அந்த ஆவேசத்தில் அவள் உடல் வெடவெடுக்க ஆரம்பிக்க, “அமைதியா இரு தாரா? உணர்ச்சி வசப்படக்கூடாதுன்னு சொல்லிருக்காங்கல்ல சுமதிம்மா.. நான்தான் எல்லாம் ப்ளான் பண்ணிட்டேன்ல. அதை யோசிக்காத..” என்று அவளை தன் கையனைப்பில் வைத்து சமாதானம் செய்ய, அதற்குள் நவீன் தண்ணீரைக் கொண்டு வந்து நீட்டியிருந்தான்.
“ஆடு தானா வந்து விழுந்துருக்கு” என நவீன் இளங்கோவை பார்க்க, அவனோ தாமரையைப் பார்த்தான்.
ஆம் வீட்டில் யாரும் இல்லை என்பதை கவனித்து சடனாக இவர்கள் மூவரும் போட்ட ப்ளான்தான் இது..
“சரி நீ உள்ள போ.. ஆம்புலன்ஸ் இப்போ வந்துடும்..” என மனைவியை உள்ளே அனுப்ப முயல, அவளோ அவன் அனைப்பில் இருந்து வெளியே வராமல் நவீனைப் பார்த்து முறைக்க,
“போறேன்.. போறேன்.. அதுக்கு ஏன் முறைக்கிறீங்க..” என படிக்கட்டில் இறங்கி ஓடி விட்டான்.
அதில் இளங்கோ வாய்விட்டு சிரித்தபடியே “அவனை ஏன்டி இப்படி ஓட விடுற..” என்று மேலும் சிரிக்க,
“உங்களை அப்படி ஓட விட முடியல. அதான் அவனை ஓட விடுறேன்..” என கோபமாக சொல்வது போல் சொன்னாலும், அந்த வார்த்தைகள் கொஞ்சி கொஞ்சிதான் வந்து விழுந்தது.
அதை ரசித்தபடியே அவளின் மூக்குத்தியை தடவிக் கொண்டிருந்தவனுக்கு தாமரையிடம் உண்மையை சொன்ன நாள் நினைவுக்கு வந்தது.