• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 62

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
557
113
Tirupur
தாமரை - 62

இளங்கோவின் ஆக்சிடென்டிற்கு பிறகு அவனை விட்டு இம்மியும் அகலாமல் இருந்த தாமரையைப் பார்க்க அனைவருக்குமே கவலையாக இருந்தது.

இப்போதிருக்கும் சூழலில் அவளின் உடல் நிலையும், மன நிலையையும் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டும். ஆனால் அவளோ அதைப்பற்றி கிஞ்சித்தும் யோசித்தது போல கூட தோன்றவில்லை.

அவள் கத்திவிட்டுச் சென்ற பிறகு அனைவரும் இளாவைத் தான் திட்டினார்கள்.

சுமதி அவனை அடிக்கவே செய்துவிட்டார். “இன்னும் உனக்கு சீரியஸ்னஸ் வரலன்னு நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தா நீ அவளை டென்சன் பண்ணிருக்க மாட்ட இளா..” என்று கத்தியிருந்தார்.

அந்த யோசனையிலேயே அன்றைய நாளைக் கழித்தவன், அடுத்தநாள் தாமரையை அந்த அறையில் பார்க்கவும் தான் நிம்மதியே வந்தது.

ஒரு பக்கம் அவளை அல்லாட விடுகிறோமே என்று வருத்தமாக இருந்தாலும், எங்கே நேற்று இருந்து கோபத்தில் வராமல் போயிடுவாளோ என்று பயமும் இருந்தது.

எதுவும் பேசாமல் அமைதியாக அவன் அருகில் தாமரை அமர்ந்திருக்க, எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் தவித்துப் போனான் இளங்கோ.

தவறு செய்யும் போது யோசிக்காமல், நிதானமில்லாமல் வார்த்தைகள் வில்லிலிருந்து பாயும் அம்பு போல் வேகமாக வந்து விழுந்து விடுகின்றது.

அதே அந்த தவறை நேர் செய்ய நினைக்கும் போது தொண்டைக்குள் வார்த்தைகள் முள்ளாய் சிக்கிக்கொண்டு தவித்து போகிறது.

ஒரு கை இடுப்பை பிடித்திருக்க, மற்றொரு கையோ அவள் வயிற்றை வருடியபடியே இருக்க, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை தாமரை.

ஆனால் அடிக்கடி தொண்டையை செறுமிக் கொண்டும், சிறு சிறு மூச்சுக்களாக மூச்சை வெளியிடுவது தெரிந்தும், அழுகையை கட்டுப் படுத்துகிறாள் என்று புரிந்தது.

இதற்கு மேல் தயங்கி நின்றால், மனைவியின் தன் மீதான இத்தனை வருட காதலுக்கு நியாயம் செய்யாமல் போவது போல் ஆகிவிடும் என்று உணர்ந்தவன் தன் வலியையும் மீறி, எட்டி அவள் வயிற்றை வருடிக் கொண்டிருந்த கை மீது தன் கையை வைத்தான்.

சட்டென நடந்த நிகழ்வால் திடுக்கிட்டு நிமிர்ந்தவளுக்கு அதுவரைக் கட்டுப்படுத்தியிருந்த கண்ணீரை அதன் பின்னர் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளின் விரிந்த விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

“ம்ச் தாரா..” என்றவன், தன் காலை ஆட்டாமல், நகர்ந்து அவளைத் தன் தோளோடு அனைத்துக் கொண்டான்.

அந்த அனைப்பிற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாலோ என்னவோ சிறு குழந்தைப் போல அவன் மார்பில் முட்டி முட்டி அழ ஆரம்பித்தாள் பெண்ணவள்.

சில நிமிடத்தில் அழுகை கேவலாக மாற, “ம்ச் தாரா.. போதும்.. ஏன் இப்படி அழுதுட்டே இருக்க. உன்னோட இந்த அழுகைக்கு நான் கொஞ்சமும் தகுதி இல்லாதவன். தகுதி இல்லாதவனுக்காக உன்னோட விலைமதிப்பான கண்ணீரை வேஸ்ட் பண்ணாத..” என்றான் குற்றவுணர்வு மேலிட,
அந்த பேச்சு அவளுக்கு ரசிக்கவில்லை என்று காட்டுவதற்காக, அவனைத் தள்ளிவிட முயற்சிக்க, அவனின் அனைப்பு மேலும் இறுகியிருந்தது. “இப்படியே இரு.. எனக்கு உன்னை ஃபீல் பண்ணனும்..” என்றவனுக்கும் என்ன முயன்றும் குரலில் அழுகை எட்டிப் பார்த்தது.

அந்த பேச்சில் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனைப் பார்க்க, ‘எங்க என்னை மாதிரியே என் குழந்தையும் அப்பா இல்லாம வளருவானோன்னு பயந்துட்டேன்..” என்றவன் மனைவியின் தலையில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு, அவளுக்கு முகத்தைக் காட்டவில்லை.

தாமரைக்கு அந்த நொடி உடல் திடுக்கிட்டுப் போனது. நடுக்கம் கூட எடுத்துப் போனது. கைகள் நடுங்க அவளுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவனை இறுக்கமாக அனைத்துக் கொண்டாள்.

“ம்ம் அப்படியெல்லாம் நடக்காது.. நடக்காது..” என மெல்ல வாய்க்குள் முனங்கிக் கொண்டே இருந்தாள்.

அப்படி ஒரு சம்பவத்தை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்படியிருக்க அது நடந்திருந்தால் என நினைத்து கணவன் பயப்படுவதை அவளால் ஏற்கவே முடியவில்லை.

சில நிமிட அமைதிக்கு பிறகு, அவளால் வசதியாக அமர முடியவில்லை என உணர்ந்தவன் பெல்லை அமர்த்தி அவனுக்கான நர்சை வர வைத்தான்.

“பெட்டை கொஞ்சம் கீழ இறக்கி, இவங்க உட்கார்ர மாதிரி செஞ்சு கொடுங்க. அப்படியே நான் சாஞ்சி உட்கார்ர மாதிரி இந்த உயரத்தையும் அட்ஜஸ்ட் பண்ணுங்க..” என்றான்.

அந்தப் பெண்ணும் செய்து முடிக்க “தேங்க்ஸ்.. யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் சொல்லுங்க.. உங்க மேம்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடுங்க ப்ளீஸ்..” என்றான் சிறு சிரிப்புடன்.

இளங்கோ இப்படி பேசுவான் என எதிர்பார்க்காத தாமரை, அதிர்ந்து அந்த பெண்ணைப் பார்த்து பின் சட்டென் குனிந்து கொண்டாள். அவள் முகம் குப்பென சிவந்து போனது.

கதவடைக்கும் சத்தம் கேட்டதும் ‘அந்த நர்ஸ் என்ன நினைக்கும்?’ என நினைத்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

“எதுக்கு இப்போ நீ இப்படி சிவக்குற? நான் உன்னை ஒன்னுமே பண்ணல.. பண்ணதும் நியாபகம் இல்ல. என்ன பண்ணேன்னும் நியாபகம் இல்ல. எல்லாமே பண்ணேன்னானும் தெரியல. ஃபெயிலாகிருக்க வாய்ப்பில்ல. அதுக்கு நம்ம குட்டீஸ் சாட்சியா இன்னும் கொஞ்ச நாள்ல வரப் போறாங்க.. ஆனா பார்டர் பாஸா, இல்ல ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸான்னு தான் தெரியல..” என கூச்சமே இல்லாமல் பேச, தாமரைக்கு அவனை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.

‘உடல் மொத்தமும் சிவக்குமா என்ன.? சிவந்து தான் போனது பெண்னவளுக்கு..

“ஹேய் என்னடி நீ?” என அவள் முகத்தை நிமிர்த்த, ‘ப்ளீஸ்’ என்றாள் முனங்கலாக.

“அன்னைக்கு நான் தான் நிதானமில்லாம இருந்தேன். நீ நிதானமாதானே இருந்த. நீ சொல்லு அய்யாவோட பெர்ஃபார்மன்ஸ் எப்படி..?” என கண்ணைச் சிமிட்ட,

“அம்மாடி.. என்ன இது?” என தாமரை வாயில் கை வைத்து கணவனை அதிர்ந்து பார்க்க,

‘என்ன நீ..?” என்றவன் வாயின் மீதிருந்த அவள் கையில் மின்னலென முத்தமிட்டு “மறுபடியும் எப்போ சான்ஸ் கிடைக்குமோ தெரியல.. நீ என் முன்னாடி இப்படி சிவந்து நிக்காதடி.. ஏற்கனவே காஞ்சு போய் கிடக்குறேன்..” என்றவனின் குரலில் ஏக்கமும் மோகமும் நிறைந்து வழிந்தது.

‘அச்சோ இது வேலைக்காகது?’ என நினைத்தவள், அவனிடமிருந்து நழுவ பார்க்க,

‘இப்போதான் பேசவே ஆரம்பிச்சிருக்கேன்.. அதுக்குள்ள எங்க ஓட பார்க்குற.. ஒழுங்கா உட்கார்..?” என அவள் வயிறு அழுந்தாமல் இறுக்கிக் கொண்டான்.

“விடுங்க.. யாராச்சும் வந்துடுவாங்க..” என முணுமுணுக்க,

“ம்ம் அதெல்லாம் யாரும் வரமாட்டாங்க. வந்தாலும் இப்போ என்ன? நம்ம பொசிஷன் பார்த்து கண்ணை மூடிட்டு போய்டுவாங்க..” என கூச்சமே இல்லாமல் பேச,

“என்ன பொசிஷனா?” என தாமரை அரண்டு போய் பார்க்க, மனைவியின் பார்வையில் வாய்விட்டு சிரித்தான் இளங்கோ..

“என்ன நீங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?” என்றவளுக்கு உடலே நடுக்கம் எடுத்து விட்டது.

“ம்ச். இப்போ என்னடி?” என அவளை அதட்டி, நடுக்கத்தைக் குறைத்தவன் “எப்படியும் ஆறு மாசத்துக்கு மேல ஆகிடும்லல. அதுக்கு முன்னாடி எப்படியும் உன் பக்கத்துல கூட விடமாட்டாங்க. என்னனு கூட தெரியாம அப்பா ஆகிருக்கேன். என்ன சொல்ல..” என அவன் பேச பேச தாமரைக்கு மயக்கமே வந்து விடும் போல் ஆனது.

“இதெல்லாம் ரகசியம். இப்படி பேசக்கூடாது..” என அதட்ட நினைத்தாலும், கிசுகிசுப்பாகவே வந்தது அவள் குரல்.

“நான் என்ன ஸ்டேஜ் போட்டு அனன்ஸ்மென்டா கொடுத்தேன். உங்கிட்டதான பேசுனேன்..” என்றவனின் கைகள் அவள் இடையை வருட,

“ம்ச் என்ன பண்றீங்க..?” என அதட்ட முடியாமல் அவனிடம் குழைந்தவளைத் திருப்பி, இதற்கு மேல் தாங்காது என புரிந்து, வேகமாக அவளின் செவ்விதழை தன்னிதழால் அனைத்துக் கொண்டான் இளங்கோ.

“ம்ம்.. விடு.. விடுங்க..” என்றவளின் ஆரம்பகட்ட திமிறல்கள் எல்லாம் அவன் உதட்டுக்குள்ளே முடிந்துவிட, அந்த முத்தத்தில் மொத்தமாய் அவனுக்குள் கரைந்து கொண்டிருந்தாள் இளங்கோவின் தாமரை.

நீண்ட நெடிய முத்தம். கற்று கற்பித்து, சுற்றம் மறந்து, தனக்குள் தொலைய வைத்து, அவளுக்குள் தொலைந்து என விடுபடவே முடியாத சுழலுக்குள் இழுத்துச் சென்றிருந்தான் மனைவியை.

பல நிமிடங்களுக்குப் பிறகு அவளை விட்டாலும், காந்தத்தை இழுக்கும் இரும்பை போல, மீண்டும் மீண்டும் அவள் இதழை நாடிக் கொண்டே இருந்தான்.

முத்தத்தின் பித்தம் அவள் தலைக்கேற, அவன் இடையை வாகாக வளைத்துக் கொண்டாள். அது அவனுக்கு இன்னும் வசதியாகப் போக அவளை இன்னும் வாகாக தனக்குள் சுருட்டிக் கொண்டான்.

ஒரு கட்டத்தில் பெண்ணவள் அவன் மீதே தொய்ந்து விழ, “ஹ்ம்ம்.. என்னடி நீ.. ஒரு முத்தத்துக்கே சோம்பி போய்ட்ட, இதுக்குத்தான் நல்லா சாப்பிடுன்னு சொல்றது. பார் எனர்ஜியே இல்ல. இனி எப்படி நீ நாலு பேரை சமாளிப்ப..” என மயக்கத்தி உளற, நல்ல வேலை அது தாமரையின் காதில் சரியாக விழவில்லை.

கேட்டிருந்தால் ‘என்ன நாலு பேரா?’ எனக் கேட்டு அவனை ஒரு வழி செய்திருப்பாள்.

“ம்ம் அதெல்லாம் சமாளிப்பேன்..” என்றவளுக்கு சத்தமே வரவில்லை.

“ஹ்ம்ம். உன் பக்கம் வர வரைக்கும் தான் நான் நல்லவன். இனி என்னால அப்படி இருக்க முடியாது. உன்கிட்ட லிமிட் மெயின்டன் பண்ண முடியும்னு தோணல..” என்றவன் மீண்டும் அவளை முத்தமிட்டு, “இப்படி உன்னை ஏதாவது செஞ்சிட்டே இருப்பேன். உன்னை ரொம்ப படுத்துவேன். உன்னால என்னை மேனேஜ் பண்ண முடியுமா தெரியல. ஆனா பண்ணனும். உனக்கு ஆப்சனும் இல்ல.” என பேசிக் கொண்டே செல்ல, தாமரைக்கு அனைத்தும் கனவுலகில் நடப்பது போல் இருந்தது.

அவளிடம் பதில் இல்லை என்றதும் “தாரா.. தாரா..” என்று அவள் காதில் உதடுரச, “ம்ச் அத்தான் ப்ளீஸ்.. இப்போ யாராச்சும் பார்த்தா மானம் போயிடும். இன்னைக்கோ நாளைக்கோ குழந்தை பிறப்ப வச்சிட்டு இதெல்லாம் ஓவர்..” என சினுங்க, வாய் விட்டு சிரித்து விட்டான் இளங்கோ.

“ம்ச் நிஜமாவே இதெல்லாம் என் லைஃப்ல நடக்குதா டி… நம்பவே முடியல. ஒரு தடவை அதுவும் நான் நிதானமா இல்லாதப்ப உன் பக்கத்துல வந்ததுக்கே நீ இப்படி இருக்க. இப்போ உன் மேல கொள்ள கொள்ளையா ஆசையோட உன்னை விட்டு பிரிய முடியாம உன்னையே ஒட்டிக்கிட்டு இருக்கப்போறேன். இனி உன் பக்கத்துல வந்தா.?” என்றவன் “நிஜமாவே பயமா இருக்கு டி.. இதோட ஃபேமிலி ப்ளான்னிங்க் பண்ணிக்கலாமா?” என்று கேட்டதும், இப்பொது தாமரைக்கு சிரிப்பு வர, அவளும் வாய் விட்டு சிரித்தாள்.

“எனக்கு நிறைய குழந்தைகள் பெத்துக்கனும், அப்படி இப்படினு எல்லாம் சீன் போட பிடிக்காது.. ஆனா நம்ம ரெண்டு வீட்டுலயும் நம்ம ரெண்டு பேர் மட்டும் தானே. கூடா விளையாடக்கூட யாரும் இல்லையா? அப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும். அதனால நான் ஒரு குழந்தையாவது பெத்துக்கனும்னு நினைப்பேன். இப்போ ரெண்டு குட்டீஸ் இருக்காங்களா? இன்னும் ஒன்னு மட்டும் பெத்துக்கலாம்..” என்றதும், இளங்கோவிற்கு மூச்சு திணறியது.

“மூனு ஓக்கே தான். ஆனா இன்னும் ஒன்னுனு நீ யோசிப்ப.. ஆனா அதுவும் டபுளா இருந்தா.?” என்றவனின் கிண்டலில் “இருக்கட்டுமே இப்போ என்ன?” என அவள் பதில் கொடுக்க,

“இருக்கட்டுமே.. இப்போ என்ன? மூனு தானே உன் கணக்கு.. மூனோட நாம நிறுத்துறோம்..” என்று கண் சிமிட்ட, தாமரைக்கும் சிரிப்பு வந்து விட்டது.
 
  • Like
Reactions: saru

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
390
8
28
Hosur
♥️♥️♥️🥰🥰🥰🥰