• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 63

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
557
113
Tirupur
தாமரை - 63

இருவரும் அவர்களுக்கான உலகில் இருந்த நேரம், இளங்கோவின் அலைபேசி தொடர்ந்து அழைக்கப்பட, “ம்ச் அந்த நவீனுக்கு என்ன தான் வேணுமாம்.?” என வெடுக்கென்று சொல்லி, அவனிடமிருந்து தள்ளி அமர்ந்தாள் தாமரை.

“ம்ம் அவன்கிட்ட கொஞ்சம் வொர்க் கொடுத்துட்டு வந்தேன்..” என்றவன் போனை எடுத்து மீண்டும் அழைத்தான்.

“பாஸ்.. நீங்க சொன்ன மாதிரி எல்லாமே பண்ணியாச்சு. லாயர்கிட்ட கொடுத்தா போதும்..” என்றான் நவீன்.

“இப்போ வேண்டாம். நான் சொல்லும் போது கொடு. அங்க எல்லாம் ஓகே வா..”

“எல்லாமே ஓகே பாஸ். இங்க எப்போ வரீங்க..?”

“நான் இப்போ ட்ராவல் பண்ண முடியாது. நீ பொட்டியைக் கட்டிட்டு இங்க வா.?”

“பாஸ்.. நான் எவ்ளோ பெரிய ப்ராஜக்ட்ல சைன் ஆகிருக்கேன்னு உங்களுக்கு தெரியலையா? கொஞ்சம் அசந்தாலும் அந்த செழியன் ஓடிப் போயிடுவான். அவனை விட்டுட்டு நான் எப்பை வர..”

“இல்ல எனக்கு புரியல.. நீ பாஸா இல்ல நான் பாஸா?”

“நீங்கதான் தெய்வமே… நீங்க தான் பாஸ். இதோ கிளம்பிட்டேன்..” என்று நவீன் போனை வைக்க, இளங்கோவைப் பார்த்து முறைத்தாள் தாமரை.

“இங்க எதுக்கு நவீன்?” என்றாள் கோபமாக.

“வேலையிருக்கு தாரா? அவன் இருந்தா தான் எனக்கு பெட்டரா இருக்கும்.” என்றான் இளங்கோவும்.

“ம்ச்..” சலிப்பைக் காட்டி அமர, “இன்னும் என்னடி?” என்றதும் அவள் முறைக்க,

“ஓக்கே ஓக்கே கூல் என்னாச்சு? என்ன பிரச்சினை?” என்றான் இளங்கோ.

என்னமோ கணவனின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆனாலும் ‘தெரியல.. என்னை சுத்தி என்ன நடக்குதுனே தெரியல, உங்ககிட்டயும் நிறைய சேஞ்சஸ். அப்பாவும் ஏதோ மறைக்கிறார். ஷ்யாமுக்கும் தெரியும் போல. ஆனா என்னனு எனக்குத் தெரியல. ஏன் என்கிட்ட மறைக்கிறீங்கன்னு கோபம் வருது. என் நல்லதுக்காகத்தான் இருக்கும்னு மனசு சொல்லுது. ஒரு வேளை… ஒரு வேளை அந்த வீடியோ அது லீக்காகிடுச்சோ… அதை எனக்கு மறைக்கனும் நினைக்கிறீங்களோ.. அதனாலத்தான் இங்க வந்துட்டமோ.” என்று முடிக்கும் முன்னே,

“பைத்தியமா டி நீ? எதையெல்லாம் யோசிக்கக்கூடாதோ? அதையெல்லாம் யோசிச்சு வச்சிருக்க. முதல்ல ஒன்னை நல்லா உன் மண்டைல ஏத்திக்கோ. அந்த வீடியோ இப்போ எங்கேயும் இல்ல. அது யாருக்கிட்டயும் இல்ல. அதை மொத்தமா அழிச்சாச்சு. அதை வச்சு எந்த பிரச்சினையும் வராது.. இது வேற.. உங்கிட்ட இப்போ என்னால சொல்ல முடியாது.. ஆனா கண்டிப்பா சொல்றேன். புரிஞ்சிக்கோ தாரா எனக்கு கொஞ்சம் டைம் கொடு ப்ளீஸ்..” என்றான் மன்றாடுதலாக.

“ஏன்? இப்படி சொல்றீங்க? பெரிய பிரச்சினையா? எங்கிட்ட சொல்லக்கூடாதா? நான் உங்களுக்கு யாருமே இல்லையா?” என்றவளுக்கு குரல் உடைந்து போனது.

“என்ன பேசுற நீ? கொஞ்ச நேரம் முன்ன நமக்குள்ள நடந்தது என்ன? நீ பேசுறது என்ன?” என்றான் கண்டிப்பான குரலில்.

“நீங்க சொல்லுங்க என்ன மறைக்கிறீங்க? என்ன பிரச்சினை எனக்கு சொல்லுங்க?” என்றவளின் குரல் மெல்ல மெல்ல உயர, அதுவே சொன்னது அவளின் ரத்த அழுத்தம் கூடிக் கொண்டிருக்கிறது என்று.

“இரு.. இரு.. கத்தாத. உனக்கு சொல்றேன். ஏன் இப்படி டென்சன் ஏத்திக்கிற..” என்றவனுக்கு, எதை எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

சில நொடி அமைதிக்குப் பிறகு அவனுக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் தாமரையிடம் சொல்லி விட்டான்.

“என்ன இது? நிஜமாவா? அவங்க இப்படியா?” என்றவளுக்கு தாறுமாறாக மூச்சு வாங்கியது.

அவளை இழுத்து அனைத்துக் கொண்டவன் “இங்க பார் தாரா.. எனக்கு தெரிஞ்சிடுச்சு. நான் பார்த்துக்குவேன். நீ இப்படி இருக்காத, இங்க பார் எனக்கு பயமா இருக்கு.” என வேகமாக அங்கிருந்த பெல்லை அலற விட்டான்.

அந்த பெல்லின் அலறலில் அடித்து பிடித்து வந்த நர்ஸ் தாமரையின் நிலையைப் பார்த்து உடனே முதலுதவி செய்தாள்.

சில நிமிடங்கள் கழித்து “போதுமா? இப்போ உனக்கு திருப்தியா? இதுக்கு பயந்து தான் சொல்லாம இருந்தேன். பெரிய இவளாட்டம் பேசுற? உன்கிட்ட சொல்லாம இருக்க இதுதான் காரணம் போதுமா?” என கத்தினான்.

“அப்போ அந்த பொம்பளைய ஒன்னும் செய்யலையா? போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம். எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாம எப்படி நம்ம வீட்டுல இருக்காங்க. என்னால இதை ஏத்துக்கவே முடியாது. முதல்ல போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுங்க..” என்று கிட்டத்தட்ட அவனைப் போலவே கத்தினாள் தாமரை.

எங்கே மீண்டும் பிபி கூடி விடுமோ என்று பயந்தவன், தன் கோபத்தை விட்டுவிட்டு மிகவும் பொறுமையாக “தாரா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. என்னை பார்க்கும் போது உனக்கு என்ன தோணுது. அவங்களை அப்படிய் விட்டுடுவேன்னா. இல்ல.. மாட்டேன். கண்டிப்பா விட மாட்டேன். நான் அவங்களை வச்சிருக்க ஒரு காரணம் இருக்கு. ப்ரீத்தாவுக்கு அவங்களைப் பத்தி தெரியாது. தெரிஞ்சா என்ன முடிவெடுப்பாளோ தெரியாது. ஷ்யாமையும் தூக்கி எரிஞ்சிட்டு போயிடுவா.. அவளுக்கு முதிர்ச்சி இல்ல. இன்னும் பக்குவம் வரல. அம்மா இப்படியான்னு வாழ்க்கையை வெறுத்து தப்பான முடிவெடுத்துட்டா என்ன செய்ய? ப்ரீத்தாவுக்கு அவங்களை கொஞ்சம் கொஞ்சமா புரிய வைக்கிறேன். அவளுக்கே அவங்க வேண்டாம்னு தோணும். அந்த நொடி அவங்க இந்த உலகத்துல இருக்க மாட்டாங்க..” என்றான் ஆக்ரோசமாக.

“ஹ்ம்ம்.. அது அவளுக்கு நாம எடுத்து சொல்லுவோம். புரிஞ்சிப்பா அத்தான். இத்தனை கொலை செஞ்ச அந்த பொம்பளை நம்ம வீட்டுல இருக்கிறதே எனக்கு பயமா இருக்கு. அவங்களால உங்களுக்கோ நம்ம குழந்தைகளுக்கோ எதாவது பிரச்சினை வந்தா நான் என்ன செய்வேன். எனக்கு பயமா இருக்கு அத்தான்..” என்றவளின் குரலிலேயே மனைவியின் பயம் புரியத்தான் செய்தது.

“தாரா.. நீ பேசுறது சரியில்ல.. என் மேல நம்பிக்கை இல்லாம பேசுறமாதிரி இருக்கு. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.. நீ நினைச்சது நடக்கும் ஆனா கொஞ்சம் லேட்டாகும். அதுக்கு காரணம் இருக்கு. நான் உனக்கு சொல்றேன். பொறுமையா இரு..” என்று சமாதானம் செய்ய,

“இன்னும் என்ன? இன்னும் என்ன மறைக்கிறீங்க?” என்றாள் தவிப்பாக.

“ஹேய்.. ஒன்னும் இல்ல டி.. இதை சொன்னா கண்டிப்பா நீ கோபப்படுவ.. அதுதான் யோசிச்சேன்..” என நிறுத்தி செழியனைப் பற்றி, அவனின் அப்பாவின் இன்னொரு குடும்பம் பற்றி என அனைத்தையும் சொல்லிவிட்டான்.

அதைக் கேட்டு தாமரையும் அமைதியாகி விட்டாள்.

“அந்த நடராஜை கொல்லும் போது எனக்கு அந்தாளுக்கு இன்னொரு குடும்பம் இருக்கும்னு நான் நினைக்கல. அந்தம்மா ஏற்கனவே ஒரு வாழ்க்கையில ரொம்ப மோசமா தோத்துப் போனவங்க. இவர்கிட்ட நல்லா இருந்தாங்க. இந்த வாழ்க்கையாவது நிலைக்கும்னு நம்பிட்டு இருந்தாங்க. அதை நான் கெடுத்துட்டேன். அதுக்கான பிராயச்சித்தமா தான் செழியனைத் திருத்தி அவங்களோட இருக்க வைக்க போறேன்.” என்றான் தீர்மானமாக.

“அப்போ.. அப்போ அவன் செஞ்சது?” என்றவளுக்கு முகம் கசங்கிப் போனது.

“தாரா.” என்றவன் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு ‘அவனை இனி நீ எப்பவும் பார்க்க மாட்ட. என் மேல் நம்பிக்கை இருக்குல்ல..” என்றான் தவிப்பாக.

“ஆனா.. அவன் என்னை.. அந்த வீடியோவை.. உங்களை எப்படி? அது எல்லாம் பார்த்து..” என்று கோர்வையாகக் கூட சொல்ல முடியாமல் கலங்கித் தவித்தாள் பெண்..

“அடியே தங்கம்..” என்றவனுக்கும் அவள் நிலை புரிய, அனைப்பில் நெருக்கத்தைக் கூட்டினான்.

“இப்போ நான் என்ன செய்யனும்? அவனையும் கொன்னுடட்டுமா? ஹ்ம்ம் ஏற்கனவே எங்க அப்பா செஞ்ச பாவம்தான் நம்ம வாழ்க்கை இப்படி இருக்க காரணமோன்னு எனக்கு அடிக்கடி தோனுது. இன்னும் இன்னும் பாவம் சேர்த்து, அது நம்ம குழந்தைங்க தலையில விடியனுமா சொல்லு? எனக்கு இங்க நீ நான் நம்ம குழந்தைங்க, அதம்மா மாமான்னு நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழனும் அம்மு… இன்னும் என் வாழ்க்கையைத் தொலைக்க நான் தயாரில்ல..” என்றான் முடிவாக.

கணவனின் முடிவான குரலுக்கு பிறகு தாமரை எதுவும் பேசவில்லை.

மனைவியின் அமைதி அவனை சுட, “தாரா..” என்றான் கைகளில் அழுத்தத்தைக் கூட்டி,

“ம்ச் எனக்கு புரியுது..” என்றாள் கசப்பாக.

“இப்படி இருக்காத அம்மு.. எல்லாம் கொஞ்ச நாள்தான். ஒரு ஒன் வீக். அவ்ளோ நாள் கூட ஆகாது. நம்ம பேபிஸ் இந்த உலகத்துக்கு வரும் போது, அவங்களைச் சுற்றி எப்பவும் நல்லவங்க மட்டும் தான் இருப்பாங்க. நம்பு ப்ளீஸ்..” என்றான் கெஞ்சுதலாக.

“ம்ம்.. அப்போ அந்த பொம்பளையை என்ன செய்ய போறீங்க.?” என்றவளின் குரல் இப்போது சற்று சீராகி இருந்தது.

“நான் ஒன்னும் பண்ண போறதில்ல. அதுக்கு ஒரு ஆளை அவங்களே வளர்த்து விட்டிருக்காங்க. அந்த ஆளே அவங்களுக்கான தண்டனையை கொடுக்கும். நாம வேடிக்கை மட்டும் பார்த்தா போதும்..” என்றான் வில்லத்தனமாக.

“ம்ம்.” என்றவள் அடுத்து பேசாமல் இருக்க, “அவங்க இருக்கும் போது நீ தனியா இருக்காத. எப்பவும் அத்தை கூடவே இரு. அப்புறம் வீட்டுக்கு போனதும் இனி தனி ரூம் எல்லாம் இல்ல. ரெண்டு பெருக்கும் ஒரே ரூம்தான். என் கண் முன்னாடியே உன்னை வச்சிக்கனும். அப்போதான் என்னால நிம்மதியா இருக்க முடியும்.” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரம் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஷ்யாம்.

அவர்கள் இருக்கும் நிலையைப் பார்த்து முறைக்க, அதை கண்டு கொள்ளாமல் பொறுமையாக மனைவியை விட்டு தள்ளி அமர்ந்தான் இளங்கோ.

“டேய்.. இருக்கிற கேப்மாரித்தனமெல்லாம் செஞ்ச உங்கிட்ட கூட பேசிட்டா.. என்கிட்ட ஏண்டா பேச மாட்டேங்கிறா..” என தாமரையைப் பார்த்து கடுகடுவென கத்த, சரியாக உள்ளே வந்தார் சுமதி.

மகனை முறைத்தவர் “அம்மு.. இன்னைக்கு ஸ்கேன் இருக்கு.. போலாமா?” என்றதும், தாமரை தலையசைக்க,

“சுமிம்மா… சடனா பிபி ரைஸ் ஆகிடுச்சு. அதை செக் பண்ணிடுங்க..” என்றான் இளங்கோ.

“என்ன பிபி ரைஸாச்சா எப்படி? ஏன்?” என ஷ்யாம பதற,

“இப்போ இல்லடா.. செழியன் பத்தி பேசும் போது..” என்று பட்டும் படாமலும் சொல்லிவிட,

“நான் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாதுன்ற முடிவில இருக்கீங்களா?” என ஷ்யாம் கத்தியது காற்றோடுதான் போனது.

அன்று நடந்ததை அசை போட்டுக் கொண்டிருந்த நேரம் மீண்டும் அவர்களை நோக்கி ஓடிவந்தான் நவீன்.

“பாஸ்.. ஆம்புலன்ஸ் வந்துடுச்சு? என்ன சொல்ல.?” என்றான் பதட்டமாக.

“ம்ச் வரட்டும் டா..” என்ற இளங்கோ “நீ உள்ள போ தாரா..” என மனைவியை உடனே அனுப்பிவிட்டான்.

அதற்குள் நவீன் நாயகியை பிடித்தபடி சோகமாக நிற்க, “டேய்.. டேய் ரொம்ப நடிக்காத, இதுக்கெல்லாம் ஆஸ்கார் கிடைக்காது..” என்று இளங்கோ திட்டிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்துவிட்டது ஆம்புலன்ஸ்.

பின் பக்கத்தில் இருந்து நவீன் சத்தம் கொடுக்க, அங்கே வந்தவர்கள் நாயகியைப் பார்த்து மலைத்தார்கள்.

“சார் இவங்களை எப்படி தூக்க?” என ஒருவன் வாய்விடே கேட்டுவிட, நவீனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“எப்படியாவது தூக்குங்க சார்.. அரை மணி நேரமா மயக்கத்துலயே இருக்காங்க. ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்தும் விழிக்கல..” என இளங்கோ சொல்ல, வேறு வழியில்லாமல் தட்டுத் தடுமாறி அவரை ஆம்புலன்சில் ஏற்றி கிளம்பினர்.

நவீன் அவர்களுக்கு பின்னே செல்ல, சீனிக்கு அழைத்து செல்ல, அவரும் மருத்துவமனைக்கே வந்துவிடுகிறேன் என்றான்.

மருத்துவமனைக்கு அனுப்புவது மட்டுமே இளங்கோவின் டாஸ்க். அதற்கடுத்த டாஸ்கை ஷ்யாம் பார்த்துக் கொள்வான்.

ஆக தாமரை நாயகியைப் பார்ப்பது இதுவே கடைசி முறை. அவள் குழந்தைகள் பிறக்கும் போது நாயகியின் மூச்சுக் காற்று கூட அந்த வீட்டிற்குள் இருக்காது.
 
  • Like
Reactions: saru

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
390
8
28
Hosur
♥️♥️♥️🥰🥰🥰🥰