• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

" தித்திக்கும் தேன்பாவை " பாகம் 10

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
" தித்திக்கும் தேன்பாவை "
பாகம் 10
IMG-20241119-WA0003.jpg


இதுதான் கடைசி எபிசோடு. கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லிக்கிறேன்.
இது கடைசி எபிசோடு மட்டும் இல்ல. இந்த எபிசோடில் உங்களுக்கு பயங்கரமான ட்விஸ்ட் இருக்கு. இது எத்தனை பேருக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியல. இந்த டிவிஸ்ட் பிடிக்காதவங்க என்னை மன்னிச்சிடுங்க. லாஜிக்கா வரணும் என்பதற்காக இந்த ட்விஸ்ட்டை ஏற்படுத்தி இருக்கேன். லாஜிக் வேணாம்னு நினைச்சீங்கன்னா போன எபிசோடையே கடைசி எபிசோடா நினைச்சுக்கோங்க. மறுபடியும் சொல்றேன் இந்த எபிசோடு படிச்சிட்டு என்னை திட்டாதீங்க மக்களே!🫣🫣🫣🫣




" நீ தப்பே பண்ணலையா நந்தினி? " என்றான் ஷியாம்.

அவனை ஆச்சரியமாக பார்த்தாள் நந்தினி.

"என்னடா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல? "
என்றாள் நந்தினி.

அமைதியாக இருந்தான் ஷியாம்.

" இந்த விஷயத்துக்காக என் கிட்ட பேச மாட்டியா? என் மேல கோபப்படுவியா? " என்று கெஞ்சுவது போல பேசினாள் நந்தினி.

" சரி அன்னைக்கு எதுக்கு நீ என்னை ஃபர்ஸ்ட் கிஸ் பண்ண வந்த? "

" ஏன்டா என்ன ஆச்சு? "

"சொல்லு, எதுக்கு? நம்ம ரெண்டு பேரும் பேசிகிட்டே தானே இருந்தோம். திடீர்னு எதுக்கு கிஸ் பண்ண கிட்ட வந்த?"

"கிஸ் பண்ணனும் தோணுச்சு"

"பொய் சொல்லாத டி, எனக்கு எல்லாம் தெரியும். கிஷோர் தான் எல்லாம் பண்ணான்னு தெரிஞ்சிடிச்சு"

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்,

"ஓ, விஷயம் தெரிஞ்சு தான் பேசறீயா?
அப்போ இதுக்கு மேல மறைச்சு பிரயோஜனம் இல்ல" என்று சொல்லி சிரித்தாள் நந்தினி.

" எந்த ஒரு பொண்ணும் பண்ண முடியாத, பண்ணக் கூடாத ஒரு விஷயத்தை எப்படி என் தங்கச்சி ஷிவானிக்கு நீ பண்ண? அவ உன் மேல உயிரையே வச்சிருந்தாளே? உன்னோட உயிர் தோழியா இல்ல அவ இருந்தா. அவளுக்கு எப்படி இப்படி ஒரு கொடுமைய பண்ணனும்னு உனக்கு தோணுச்சு? "

" இதே இடத்துல தான், போன மாசம், தேதி எனக்கு சரியா ஞாபகமில்லை உன்கிட்ட வந்து முதல்ல என்னோட காதலை சொன்னேனே ஞாபகம் இருக்கா? அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? "

என்ன என்பது போல அவளைப் பார்த்தான் ஷியாம்.

" ரோஹித்தும் ஷிவானியும் கிஸ் பண்ணிட்டாங்க. அதை நான் பார்த்துட்டேன். எனக்கு உயிரே போயிடுச்சு தெரியுமா? "

இடை மறிக்காமல் அமைதியாக நந்தினி பேசுவதையையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஷியாம்.

" இன்னும் கூட உனக்கு புரியலையா? நான் ஒரு வருஷமா ரோஹித்தை லவ் பண்றேன். ஒன் சைடு லவ் தான். எத்தனையோ முறை அவன்கிட்ட சொல்லனும்னு நெனச்சேன். ஆனா சொல்ல முடியல. என்னைக்கு நான் என் லவ்வ சொல்லலாம்னு போனேனோ. அன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் முத்தம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் தான் தெரிஞ்சது அவங்க ரெண்டு பேரும் ஒரு வருஷமா காதலிக்கிறார்கள் என்று. ஷிவானி ஒரு துரோகி. அவங்க ரெண்டு பேரையும் பிரிக்கணும்னு நினைச்சேன். ஷிவானியை பழிவாங்கணும்னு நினைச்சேன். அதுக்கான காலம் வரும்னு காத்துகிட்டு இருந்தேன். "

"அடிப்பாவி நீ இவ்வளவு பெரிய கொடுமக்காரியா? அப்புறம் ஏண்டி என்னை லவ் பண்றேன்னு சொன்ன?"

"நீ என்ன முட்டாளா? உன்னால அது கூடவா புரிஞ்சுக்க முடியல. உண்மையான காதல் எது நடிப்பு எதுன்னு?"

ஆத்திரமும் வெறுப்பும் நந்தினியின் மேல் அதிகமானது ஷியாமிற்கு.

" அவங்க ரெண்டு பேரும் கிஸ் பண்ணிக்கிட்ட அன்னைக்கு தான் நேரா வந்து உன்னை பார்த்து லவ் பண்றேன்னு சொன்னேன். எனக்கு உன் மேல எந்த பீலிங்க்ஸும் கிடையாது. ஆனா ஷிவானியை பத்தி நல்லா தெரிஞ்சுக்கறதுக்குக்காக உன்னோட நான் டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டியது அவசியம் ஆச்சு "

இந்த நேரத்துல தான் எனக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. உங்க அப்பா அம்மா ஊருக்கு போய்ட்டாங்கன்னு என்னோட அம்மா எனக்கு மெசேஜ் பண்ணாங்க. உங்க வீடு தனியா இருந்தது. அவ கத்தினாலே யாருக்கும் கேட்காது. அப்பதான் போன வாரம் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகி வந்த கிஷோரை பார்த்தேன். அவன் ஷிவானி மேல கடும் கோபத்தில் இருந்தது தெரியும். அவனுக்கு இன்னும் வெறியை ஏத்தி விட்டேன்.

அவன்கிட்ட உண்மை சொல்ல வேண்டியது அவசியமாச்சு. நான் அவளை பழி வாங்கினா அதனால உனக்கு என்ன லாபம் என்று கேட்டான். அப்புறம் தான் நான் ரோஹித்தை லவ் பண்ணதும் இப்ப அவ ரோஹித்தை லவ் பண்றதும் சொல்ல வேண்டியது ஆயிடுச்சு. அந்த நாய் தானே உங்ககிட்ட சொன்னான். இல்லன்னா உங்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லையே"

" நீயும் ஒரு பொண்ணு தானடி எப்படி உனக்கு இந்த மாதிரி பண்ண மனசு வந்தது? "

" எனக்கு ரோஹித் மேல இருந்த காதல் அப்படி. அவனை அடையனும் என்பதற்காக நான் எதை வேணும்னாலும் செய்ய தயாரா இருந்தேன்"

அதற்கான சரியான சந்தர்ப்பம் அன்னைக்கு கிடைத்தது.

ஷிவானி உங்க வீட்டுக்கு போன உடனே.

நான் டிரஸ் மாத்திட்டு வரேன்னு உன் கிட்ட சொல்லிட்டு போய் வெளியே வரும்போது தான் நீ ஷிவானி கிட்ட ஃபோன்ல பேசுவதை கேட்டேன். ஏற்கனவே அந்த கிஷோர் கிட்ட நான் கால் பண்ணி சொல்லி வச்சிருந்தேன். எப்படியாவது இன்னைக்கு நைட்டுக்குள்ள வேலையை முடித்து விடனும்னு. நீ ஃபோன் பேசினதும் அவ லேட்டா வருவான்னு தெரிஞ்சுக்கிட்டேன்

அப்போ கிஷோருக்கு கால் பண்ணினேன். அவன் இன்னும் 20 நிமிஷத்துல வந்துருவேன் என்று சொன்னான். ஐயோ அதுக்குள்ள இவ வேலைய முடிச்சுட்டு வந்துட்டா என்ன பண்றதுன்னு நான் பயந்துக்கிட்டே இருந்தேன். நான் பயந்த மாதிரியே அரை மணி நேரத்துல இவ வந்துட்டா.அவன் வரல.
அவள திருப்பி வீட்டுக்கு போக வைக்க எனக்கு வேற வழி தெரியல. அதனாலதான் நான் உனக்கு முத்தம் கொடுக்க கிட்ட வந்தேன்.

நான் கிட்ட வரவும் நீ ஆர்வத்துல எனக்கு முத்தம் கொடுத்துட்ட. அவ திரும்பி போற வரைக்கும் உன்னை விடாமல் நான் புடிச்சுக்கிட்டேன்.
நம்ம ரெண்டு பேரையும் பார்த்ததினால் அவ ஷாக் ஆகி திரும்பி போயிட்டா. அப்புறம் தான் உன்கிட்ட வெட்கப்படற மாதிரி சொல்லிட்டு திரும்பவும் என் ரூமுக்கு போய் அவனுக்கு கால் பண்ணேன். டிராபிக்ல மாட்டிக்கிட்டேன் இப்ப அவ வீட்டு பின்னாடி தான் இருக்கேன்னு சொன்னான். சரி சரி வேலையை சீக்கிரம் முடியல சொல்லி ஃபோனை வச்சுட்டேன்.
அவன் அடுத்த அரை மணி நேரத்துல வேலையை முடிச்சிட்டான்.

ஷிவானி ஃபோனை எடுக்கல நான் போய் பார்த்துட்டு வரேன்னு நீ சொன்னதும். அச்சச்சோ அவன் வேலையை முடிச்சுட்டு போனானோ இல்லையோ தெரியலையேன்னு நான் பயந்தேன். அதனாலதான் நான் தனியா இருக்க மாட்டேன்னு பயப்படுற மாதிரி நடிச்சு வேணும்னே லேட் பண்ணிக்கிட்டு என் அப்பாவுக்கு மிஸ்டு கால் கொடுத்தேன். அவர் திரும்ப கால் பண்ணினதும் அவர் கிட்ட கொஞ்ச நேரம் ஃபோன்ல பேசி டைம் வேஸ்ட் பண்ணேன். அண்ணன் கிட்ட ஃபோன்ல பேசுற மாதிரி கிஷோர் கிட்ட பேசிக்கிட்டே உன் கூட நடந்து வந்தேன். அவன் வேலையை முடிச்சுட்டேன். அங்கிருந்து கிளம்பிட்டேன்னு சொன்னான்"

" படுபாவி, நீ எல்லாம் மனுஷியே கிடையாது " என்றான் ஷியாம்.

" இவ்வளவு போதுமா? மீதி உண்மை எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா? " என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் நந்தினி.


" எப்படியாவது இவளுக்கு நடந்தததை ஊர் உலகத்துக்கு தெரியப்படுத்தி அவளை அசிங்கப்படுத்தனும்னு நினைச்சேன். அதனாலதான் வேணும்னே பக்கத்து வீட்டு உமா ஆண்ட்டி கேக்குற மாதிரி சத்தமா பேசினேன். ஆனா அவங்க யாருக்கும் தெரியப்படுத்தல யார்கிட்டயும் சொல்லல. அந்த பொம்பள கிட்ட ரகசியம் எப்படி நிக்குதுன்னு எனக்கு தெரியல. அவங்க புருஷன் கிட்டயாவது சொன்னாங்களா இல்லையான்னு தெரியல.

சரி அதான் ரோஹித் நேரா வீட்டுக்கு வந்தானே. அவன் கிட்ட உண்மையை சொல்லிட்டா ஷிவானியை வெறுத்து ஒதுக்கிடுவான்னு நினைச்சேன் . அவன் பதில் எதுவும் பேசாம போயிட்டான்." என்று பேசி முடித்தாள் நந்தினி.

அவள் பேச பேச ஆத்திரமும் கோபமும் ஷியாமின் மண்டைக்கு ஏறியது.

" அப்பாடா உனக்கு உண்மை தெரிஞ்சதிலும் எனக்கு ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு."

ஆத்திரத்தோடும் கோபத்துடனும் அவளையே முறைத்துக் கொண்டு இருந்தான் ஷியாம்.

" என்னன்னு பாக்குறியா?
உன் மேல எனக்கு லவ்வே கிடையாது. உன்னை நான் எப்படி கிஸ் பண்ணுவேன்னு நெனச்சு கடுப்பா இருந்தது. ஏற்கனவே முதல் முறையே ரோஹித்த மனசுல நினைச்சுகிட்டு உன்னை கிஸ் பண்ணேன். இப்ப நீ கேட்டியே அப்பவும் கூட அப்படித்தான். மனசுல ரோகித்த கிஸ் பண்றதா நினைச்சுகிட்டேன் . நீ வேற டெய்லி வாரத்துல ரெண்டு நாள் அப்படி எல்லாம் கேட்டதும் எனக்கு என்னடா பண்றதுன்னு யோசனை ஆயிடுச்சு. இப்ப இதுக்கு மேல என்கிட்ட கேக்க மாட்ட இல்ல?

ஆமாம், அதான் உனக்கு உண்மை எல்லாம் தெரியுமே அப்புறம் எதுக்கு என்னை இப்போ கிஸ் பண்ண சொன்ன? ஒருவேளை கடைசியா ஒரு வாட்டி வாங்கிக்கலாம்னு நினைச்சியா? " என்று சொல்லி மறுபடியும் சிரித்தாள் நந்தினி.

" நீ எல்லாம் ஒரு பொம்பளையா டி? "

"யார் சொன்னது. யாராவது அப்படி சொன்னா அவங்க வாயை ஒடச்சிடுவேன். கவலைப்படாதே ஒன் சைடு எக்ஸ் லவ்வர் நீ அதனால உன் வாயை உடைக்க மாட்டேன். ஏன்னா நான் பொம்பள கிடைக்காது. நான் சின்ன பொண்ணு " என்றாள் நந்தினி சிரித்து கொண்டே.

தன் வாட்ச்சில் டைம் பார்த்தான் ஷியாம்.

"என்னாச்சு டைம் ஆயிடுச்சா? ஓ, உன் தங்கச்சி அங்க ஹாஸ்பிடல்ல தனியா இருக்கிறா இல்ல? போகணுமா?" என்று சொல்லி சிரித்தாள்.

இன்னொரு விஷயம் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேனே ஷியாம்.

நம்ம ரெண்டு பேரும் அவளை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண அப்புறமா, நீ ஹாஸ்பிடல்ல இருந்து என்னை எங்க அண்ணனோட பார்ட்டி ஹால்ல விட்டுட்டு வீட்டுக்கு போன தெரியுமா? அப்ப அந்த கிஷோர் படுபாவி எனக்கு ஃபோன் பண்ணினான். என்னன்னு தெரியுமா. அவன் கையிலிருந்த பிரேஸ்லெட்டை காணுமாம். அதுல வேற கிட்டார் சிம்பல் போட்டு தொங்கவிட்டு இருப்பான். அதைப் பார்த்த உடனே யாரா இருந்தாலும் தெரிஞ்சிரும் அவன் தான்னு.
எனக்கு வாயில அசிங்க அசிங்கமா வந்துடுச்சு. நல்லா திட்டி விட்டுட்டேன். அப்புறம் உங்க வீட்டோட பின் சாவி அவன்கிட்ட கொடுத்திருந்தேன்.

ஓ அதை உன் கிட்ட சொல்லல இல்ல. உங்க வீட்டு பின் கதவோட சாவியை டூப்ளிகேட் பண்ணி அவன் கிட்ட போன வாரமே கொடுத்திட்டேன். அப்படி தான் உள்ள வந்தானாம். அவ கத்தக் கூடாதுன்னு அவ மண்டையில ஒண்ணு போட்டு இருக்கான். அதுக்கு அப்புறம் பாதுகாப்பா தன்னோட வேலையை முடிச்சிட்டு போயிட்டு இருக்கான்.
அதான் அன்னைக்கு நீ வந்து போன அப்புறம் பின் வாசல் வழியா வந்து அந்த பிரேஸ்லெட்டை தேடி எடுத்து கொண்டு போயிட்டான்"

தன் வாட்சை பார்த்தான் ஷியாம்.

"இரு, நான் பேச வேண்டியது எல்லாம் பேசி முடிச்சிடறேன், அதுக்கப்புறம் நீ கிளம்பி போ. சும்மா டைம் பார்த்துகிட்டே இருந்தன்னா எனக்கு எப்படி பேச தோணும்"

"இன்னொரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன். எப்படி கிஷோர் தான்னு கண்டுபிடிச்ச? உனக்கு அந்த அளவுக்கு மூளை இல்லையே? நான் பக்காவா அவனுக்கு பிளான் போட்டு கொடுத்தேன். திருடன் மாதிரி வந்து பீரோ உடைச்சி நகையெல்லாம் திருடன மாதிரி. அதுவும் இல்லாம கையில கிளௌஸ், வேற எந்த தடையமும் கிடைக்காத மாதிரி தான் பிளான் பண்ணேன். அப்புறம் எப்படி?" என்றாள்.

" ரோஹித் தான் கண்டுபிடிச்சான். ரோஹித் என்னை விட உன் மேல கோவத்துல இருக்கான். அவன் கிஷோரை எப்படி கொலை பண்ணான் தெரியுமா? "

" என்னது கிஷோரை கொலை பண்ணிட்டீங்களா?" என்று அதிர்ச்சியானாள் நந்தினி.

அங்கிருந்து செல்ல பார்த்தாள். ஸ்மைல் செய்தபடி அவளை தன் பக்கமாக இழுத்து
அவளை இறுக்கமாக பிடித்து அணைத்து அவள் இதழில் முத்தம் கொடுத்தான் ஷியாம்.


இதை சற்றும் எதிர்பார்க்காதவள் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள்,

முத்தம் கொடுத்துவிட்டு அவளைப் பார்த்தபடி அவளுடைய எதிரே நின்று கொண்டிருந்தான் ஷியாம்.

" என்னடா லூசா நீ? " என்றாள் நந்தினி.

"குட் பை நந்தினி " என்றான் ஸ்மைல் செய்தபடி.

ஒன்றும் புரியாமல் விழித்தாள் நந்தினி.

யாரோ ஒருவன் வேகமாக வீல் சேரில் வந்தான்.

வேகமாக வந்த அந்த ஆள் நந்தினியை இடித்தான். அவன் இடித்த வேகத்தில் ட்ராக்கில் விழுந்தால் நந்தினி. அந்த நேரம் சரியாக எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. டிராக் மீது நந்தினி விழுவதற்கும் ரயில் வருவதற்கும் சரியாக இருக்கவே தூக்கி எறியப்பட்டாள் நந்தினி .

_e374a4fd-91c9-452c-b758-8c9e25ad9461~2.jpeg


பிறகு அந்த வீல் சேரில் வந்தவன் பயந்தவாறு அங்கேயே நின்றான்.

நந்தினியை பார்த்து பயந்து அலறினான் ஷியாம்.

" நந்து" என்று கத்திக் கொண்டே மண்டியிட்டு அழுதான்.

_969e00f4-8647-45f2-828d-24915cfd2497.jpeg


இவை அனைத்துமே ரயில்வே ஸ்டேஷன் சிசிடிவியில் ரெக்கார்டு ஆனது.
மொத்தமுமே நந்தினி முகம் சிசிடிவியில் தெரியும் படி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
ஷியாம் கோபமாக முகத்தை வைத்தது அவளை திட்டியது எதுவுமே சிசிடிவியில் தெரியவில்லை.
அவனுடன் வெகு நேரமாக நந்தினி சிரித்துக் கொண்டு பேசியது. முதலில் அவளே அவனுக்கு முத்தம் கொடுத்தது என்று அனைத்துமே இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பது போல இருந்தது. கிஷோரைப் பற்றி தெரியும் போது அவள் முகம் மாறியதை மட்டும் ஷியாம் அவள் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தான். அதனால அதுவும் அதில் பதிவாகவில்லை.

கிளம்பும்போது பை சொல்லிவிட்டு அவள் எழுந்திருப்பது போல தெரிந்தது. அப்போது ஷியாம் அவளுக்கு முத்தம் கொடுப்பது போல பதிவாயிருந்தது. அதுவுமே அவன் வற்புறுத்தி கொடுத்ததாக தெரியவில்லை. ஏன் என்றால் நந்தினி அவனை தள்ளி விடவோ அவனை அடிக்கவோ செய்யாததால் இருவரும் காதலித்ததால் முத்தம் கொடுத்தது போல தெரிந்தது.

ஷியாம் மண்டி இட்டு அழுவதை பார்த்தும், அங்கு நடந்த ஆக்சிடென்ட் சத்தத்தினாலும்
ரயில்வே போலீசார் அங்கு விரைந்தனர்.

ஷியாம் மற்றும் அந்த ஆளை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் அமர வைத்து விசாரித்தனர்.

_b2241b2b-7808-423f-b7a8-613fc27270c7.jpeg


" என்ன ஆச்சு? என்ன நடந்தது?" என்றார் இன்ஸ்பெக்டர் ஷியாமை பார்த்து.

" சார், இந்த ஆள் வேகமா வீல் சேரில் வந்து என் நந்தினி தள்ளி விட்டுட்டான் சார்" என்று சொல்லி அழுதான் ஷியாம்.

" யார் நீ, எதுக்கு அந்த பொண்ணை இடிச்ச? "

" நான் வேணும்னு பண்ணல சார். எனக்கு கால் கிடையாது, இந்த வண்டியில தான் நான் தினமும் இங்க வருவேன் சார். இந்த வீல் சேர் பிரேக் பிடிக்கல சார். அந்த பொண்ணு மேல தெரியாம இடிச்சிட்டேன். அந்த பொண்ணு டிராக்ல விழுந்துடுச்சு. சரியா அந்த நேரம் ட்ரெயின் வரவும் அந்தப் பொண்ணு " என்று சொல்லி பயந்தவாறு பேசினான் அவன்.

" பிளான் பண்ணி பண்ணிட்டு பொய் சொல்றியா? "

" சார் அந்த பொண்ணு யாரு எவரேனு எனக்கு தெரியாது நான் ஏன் சார் அந்த பொண்ணை தள்ளி விடப் போறேன்? "

" நீ என்ன வேலை பண்ற? உன்னோட வீட்டு அட்ரஸ் எல்லாம் கொடு? " என்றார் இன்ஸ்பெக்டர்.

" என்னோட பேரு மகேஷ். நான் ஏவிஎம் டெக்னாலஜியில் வேலை செய்கிறேன். இந்த வீல் சேர்லே தான் போவேன். ட்ரெயின்ல போயிட்டு திருப்பி இந்த வீல் சேரிலே தான் வருவேன். நான் ஒரு வருஷமா இப்படித்தான் சார் போயிட்டு இருக்கேன் ." என்று பயந்தவாறு பேசினான் அவன்.

அவனிடம் அட்ரஸை மற்றும் கம்பெனி முகவரியை அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவனை வெளியே வெயிட் செய்ய சொன்னார்கள்.

அழுது கொண்டே இருந்தான் ஷியாம்.

" நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க? " என்று ஷியாமை பார்த்து கேட்டார் இன்ஸ்பெக்டர்.

" சார், நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ். நாங்க மாசம் மாசம் இங்க மீட் பண்ணிப்போம். இன்னைக்கு மீட் பண்ணி பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ இப்படி நடந்துருச்சு " என்று பேச முடியாமல் திக்கி திணறி அழுதான்.

" பேசிட்டு மட்டும் தான் இருந்தீங்களா?
சிசிடிவி ஃபுட்டேஜ் என்கிட்ட இருக்கு. "

" சாரி சார் அவ தான் முதல்ல "

" தெரியும் தெரியும் பார்த்துட்டேன் சிசிடிவி ல எல்லாத்தையும்."

" சார் என்னோட நந்து" என்று சொல்லி அழுதான்.

" இங்க பாரு பா, நீயே கண்கூட பார்த்த. இது ஒரு விபத்து தான். இதுக்கு அப்புறமும் உனக்கு அந்த கால் இல்லாதவர் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்னு தோணுச்சுன்னா கொடு. நாங்க ஆக்சன் எடுக்கிறோம் "

அமைதியாக இருந்தான் ஷியாம்.

" நீ ஓகேன்னு சொன்னினா இது ஆக்சிடென்ட்ன்னு சொல்லி க்ளோஸ் பண்ணிடுவோம் "

அதற்கும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தான்.

" கான்ஸ்டபிள் அவரை உள்ள கூப்பிடு" என்று இன்ஸ்பெக்டர் சொல்ல.

வீல் சேரில் உள்ளே வந்தான் மகேஷ்.

" நீங்க பேசணும்னா இவர்கிட்ட பேசிக்கோங்க " என்றார் இன்ஸ்பெக்டர்.

" சார், எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வயசுல ஒரு குழந்தையும் எல்கேஜி படிக்கிற ஒரு பையனும் இருக்காங்க. உண்மையிலேயே தெரியாம அவங்களை இடிச்சுட்டேன் சார். என்னை மன்னிச்சிடுங்க. நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்தீங்கன்னா. என்னோட வேலை போயிடும். என்னோட குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் " என்று அழுதபடி பேசினான் மகேஷ்.

அழுது கொண்டே இருந்த ஷியாம்.

"சார், இவர் மேல கேஸ் எதுவும் போட வேண்டாம். ஆனா தயவு செஞ்சு இவரை என் கண் முன்னால நிக்க வேண்டாம்னு சொல்லுங்க. பிளீஸ்" என்று சொல்லி அழுதான்.

ஏற்கனவே மகேஷை அடிக்கடி பார்த்து இருந்ததால் ரயில்வே அதிகாரிகளுக்கு அவன் மேல் எந்த சந்தேகமும் இல்லை. ஆகையால் அவனை வீட்டிற்கு போக சொல்லி விட்டார்கள்.
கோர்ட்டில் இயரிங் என்று வந்தால் அப்போது வந்தால் போதும் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

மகேஷ் வீட்டிற்கு சென்று ரோஹித்திற்கு கால் செய்தான்.

"தம்பி, வேலை முடிஞ்சிடிச்சு பா" என்றான் மகேஷ்.

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மகேஷ் அண்ணா. தேவையில்லாம எங்க பிரச்சனைக்கு உங்களை இழுத்திட்டோம்." என்றான் ரோஹித்.

"அப்படி எல்லாம் யோசிக்காத பா, என் தங்கச்சியை ரேப் பண்ணி கொலை செஞ்சிட்டானுங்க. அவனுங்களுக்கு இன்னைக்கு வரைக்கும் தண்டனை கிடைக்கல. ஆதாரம் இல்லன்னு வெளியே சுத்திக்கிட்டு இருக்காங்க. சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கனும் வெயிட் பண்ணினா நம்ம ஆயுளே முடிஞ்சிடும். நம்ம பண்ணினது நம்ம மனசாட்சி படி சரி." என்றான் மகேஷ்.

"ஓகே அண்ணா, மோஸ்ட்லி நந்தினி வீட்ல இருக்கிறவங்க யாரும் கேஸ் கொடுக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அப்படியே கொடுத்தாலும் நம்ம பார்த்துக்கலாம்"

"சரிப்பா, எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு"

"பை அண்ணா"

"பை ரோஹித்"

ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில்,

மகேஷ் சென்றதும், ஷியாமை பார்த்து,

" நீ நல்ல ஒரு வேலை பண்ணியிருக்க பா. அந்த மகேஷை எங்களுக்கு தெரியும். நல்லவன் தான். ஏதோ தெரியாமல் தான் இப்படி நடந்து இருக்கு "என்றார் கான்ஸ்டபிள்.

இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள் இடம்

"இந்த பையன் கிட்ட டீடைல்ஸ் வாங்கி, அந்த பொண்ணோட அப்பா அம்மாவுக்கு கால் பண்ணி சொல்லுங்க" என்றார் ரயில்வே இன்ஸ்பெக்டர்.

டீடைல்ஸ் கொடுத்த பிறகு, நந்தினியின் ஸ்கூட்டர் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் ஷியாம்.

ஹாஸ்பிடலுக்கு சென்ற பிறகு தன் பைக்கில் இருந்து ஃபோனை எடுத்து ரோஹித்திற்கு கால் செய்தான்.

" ரோஹித் "

" சொல்லு மச்சி"

" நம்ம பிளான் படி எல்லாம் முடிஞ்சிடுச்சு "

"சூப்பர் டா"

"ஒரே ஒரு வருத்தம் தான்"

"என்ன? "

"என் தங்கச்சிக்கு அப்படி ஒரு கொடுமையை பண்ணவளுக்கு என்னால ஒரு அடி கூட கொடுக்க முடியலையே என்பதுதான்."

"நீ எமோஷனல் ஆகி அடிச்சிருந்தா என்ன ஆகி இருக்கும் உனக்கே தெரியாதா?"

"நீயும் கிஷோரும் சொல்லும் போது கூட நம்பல, என் நந்து அப்படி பண்ணி இருக்கமாட்டா. நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க. கிஷோர் வீண் பழியை நந்தினி மேல போடுறான்னு நினைச்சேன். ஆனா அவளே ஒத்துக்கிட்டது மட்டும் இல்லாம அவ மேல தப்பே இல்லாதது போல பேசினாளே அதை என்னால மன்னிக்கவே முடியல. ரொம்ப கஷ்டப்பட்டு அமைதியா உட்கார்ந்து இருந்தேன்."

" விடு டா மச்சான். போனவளை பத்தி எதுக்கு பேசிகிட்டு. நாளை காலையில நான் வந்து ஷிவானியை பார்க்குறேன்" என்றான் ரோஹித்.

" வாடா மச்சான் " என்றான் ஷியாம்.





முற்றும்.
தேன் மிட்டாய்

###############


ஹாய் ஃபிரெண்ட்ஸ்,

இது குறுநாவல் என்பதால் இதோடு முடித்துக் கொள்கிறேன். மெயின் கான்செப்ட் எடுத்து முடித்து விட்டேன். கதை எப்படி இருந்தது?
உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக உங்களுடைய கமெண்ட்ஸை தெரியப்படுத்தவும்.

இதிலேயே உங்களுக்கு பல கேள்விகள் இருக்கும்.

*கிஷோர் எப்படி வந்தான்.?

*ஷிவானியின் வாக்குமூலம் என்ன?

*கிஷோர் தான் குற்றவாளி என்று ரோஹித் எப்படி கண்டுபிடித்தான்?

*கிஷோருடையது கொலையா ஆக்சிடென்ட் என்று போலீஸ் இன்வெஸ்டிகட் செய்தார்களா?

*யாராவது ஷியாம் மற்றும் ரோஹித்தை ஜவ்வாது மலையில் பார்த்திருப்பார்களா?

*ஷியாம் எப்படி ஷிவானி நிலைமை பற்றி தன் பெற்றோர்களிடம் கூறுவான்?.

*நந்தினி இறப்பு அவர்கள் வீட்டில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.?

*ரோஹித்துக்கு மகேஷை எப்படி தெரியும்?

*மகேஷுக்கு பின்னால் பிரச்சனை வருமா?

*நந்தினி வீட்டில் இருந்து மகேஷ் பெயரில் கேஸ் கொடுப்பார்களா?

பல கேள்விகள் உங்கள் மனதில் இருக்கும். நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுக்கு மனதில் என்ன கேள்வி இருக்கிறது என்று கேளுங்கள். போட்டி முடிவடைந்த பிறகு வைகை தளத்தில் இந்தக் கதையை தொடர்ந்து எழுதுகிறேன்.


நன்றி,
வணக்கம் அன்பு மக்களே🙏🏻.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
 

Radhapalani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
6
5
3
Chennai
கதை மிகவும் வித்தியாசமாக முடிவுற்றது.மொத்ததில் மிக மிக அருமை.எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
கதை மிகவும் வித்தியாசமாக முடிவுற்றது.மொத்ததில் மிக மிக அருமை.எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
Thank you so much🙏🏻😊
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
180
43
Tirupur
நினைத்தபடியே நந்தினியும் ஒரு குற்றவாளி 🤩

சூப்பர் 👌❤️
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
Awesome story 👏👏 I like this twist ❣️❣️ romba interesting ah irunthuchu ❤❤ neega sonna maadiri i have lot of questions so kadhi ya continue panniga na im so happy 😊😊 all the best
Thank you so much sister😊🙏🏻
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
Unexpected Twist super சகி, கூடவே இருந்து குழிப்பரிச்சுட்டாளே அதுக்கு மரணம் சரியான தண்டனை.சூப்பர் சூப்பர் சூப்பர் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
Unexpected Twist super சகி, கூடவே இருந்து குழிப்பரிச்சுட்டாளே அதுக்கு மரணம் சரியான தண்டனை.சூப்பர் சூப்பர் சூப்பர் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
Thank you so much sister🙏🏻😊