• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 37

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
வானம் ஏனோ போர்வை போர்த்தி கொண்டு இருளெனும் பாயை விரித்திட, தன் கைகடிகாரத்தை பார்த்த தீரன், "அடடா! மணி பத்தாகிடுச்சே.. பாப்பா சாப்பிட்டுருப்பாளா?" என்று யோசித்து கொண்டே அமுதனுக்கு போன் செய்தான்.

"அமுதன்! சாரி மீட்டிங் முடிய லேட் ஆகிடுச்சு. பாப்பா என்ன பண்றா? என்னை கேட்டு அழுதாளா? சாப்பிட்டாளா?" என்று படப்படப்பாய் கேள்விகளை அடுக்கி கொண்டே போக, எதிர்முனையில் கலகலவென்று சிரித்தான் அமுதன்.

"பொறுமை பொறுமை தீரா. ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறிங்க? உங்க பொண்ணு என் டார்லிங். அதை மறந்துறாதிங்க. உங்களை விட அவளை எப்படி ஹாண்டல் பண்றதுன்னு எனக்கு நல்லா தெரியும்." என்று புன்னகைத்தான்.

"அதுவும் கரெக்ட் தான்." தீரனும் சிரிக்க.

"திஷா இன்னைக்கு முழுக்க ரொம்ப நல்லா விளையாடினா, சாப்பிட்டா இப்போ தான் தூங்க வச்சேன். " என்றான்.

"சாரி அமுதா. உங்களுக்கு வேற எங்களால சிரமம்" என்றான் தீரன்.

"அட நீங்க வேற.. என் டார்லிங்கை பார்த்துகிறது எனக்கு சிரமமா? அவ அவங்க அம்மாகூட இருந்ததைவிட என்கூட தான் அதிகமா இருந்திருக்கா. " என்றான் அமுதன்.

"நான் இனி தான் கிளம்பனும். இன்னும் அரைமணி நேரம் ஆகும். " என்றான் தீரன்.

"சரி தீரா. நீங்க சாப்பிட்டிங்களா?" என்றான் சந்தேகமாய்.

"இல்ல இனி தான்" என்றான்.

"சரி. பார்த்து பத்திரம் வாங்க" என்று வைத்தான் அமுதன்.

கடையை பூட்டி கொண்டு இருசக்கர வண்டியில் வந்து கொண்டிருக்க, ஏற்கனவே இருளில் இருந்த வானம் பொத்துக்கொண்டு மழையை பொழிந்தது.

"அடடா! இன்னைக்குன்னு பார்த்து காரை நிறுத்திட்டு பைக்ல வந்தேன். இன்னைக்கு பார்த்து இந்த மழை பெய்யுதே? " என்று புலம்பியபடி மிருதியின் ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான்.

வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தவள் தீரன் தொப்பலாய் நனைந்து வருவதை பார்த்து மனம் பதற டவலுடன் ஓடி வந்தாள்.

அவளின் அக்கரையில் மனம் குளிர்ந்தாலும் அவளை சட்டை செய்யாது அவளை கடந்து சென்று டேபிளில் அமர்ந்தபடி, "ரெண்டு தோசை" என்றான் அருகிலிருந்த பணி பெண்ணிடம்.

"சரி சார்" என்று அந்த பெண் நகர்ந்துவிட.

'என்ன இவரு இப்படி நனைஞ்சுட்டு வந்துருக்கார்?' என்று தனக்குள் கேள்வி கேட்டபடி மீண்டும் அவனருகில் சென்று, "ஏன் இப்படி மழைல நனைஞ்சுருக்கிங்க? எங்கயாவது ஒரு ஓரமா நின்னு வந்துருக்கலாம் இல்ல. சளி பிடிக்க போகுது இந்தாங்க தொடைச்சுக்கோங்க" என்று டவலை நீட்டினாள்.

அவளை நிமிர்ந்து பாரத்து ஒரு அனல்பார்வை வீசியவன்.

"எக்ஸ்கியூஸ் மீ மேடம். யார் நீங்க? உங்க ஹோட்டலுக்கு சாப்பிட வந்துருக்க கஸ்டமர் நான். நான் மழைல நனைஞ்சு வந்தா உங்களுக்கு என்ன? இல்ல உங்க ஹோட்டலுக்கு யார் நனைஞ்சு வந்தாலும் இப்படி துடைக்க டவல் தருவிங்களா?" என்றான் மிக நக்கலாக.

அவனின் இந்த பதிலை எதிர்பாராதவள் ஒரு நொடி ஆடி போனாலும் எதுவும் பேசாமல் அவ்விடம் விட்டு நகர்ந்துவிட, தோசையை வேகமாக சாப்பிட்டு வெளியில் வந்தான்.

மழை விடாமல் பெய்து கொண்டிருக்க, 'பாப்பா திடீர்னு எழுந்தா கண்டிப்பா என்னை கேட்டு ரகளை பண்ணிருவா. ஏற்கனவே முழுசா நனைஞ்சுட்டோம். அதனால அப்படியே கிளம்பிடுவோம்.' என்று மீண்டும் அமுதனின் வீட்டை நோக்கி புறப்பட்டான்.

"என்ன இவரு என் மேல இருக்க கோவத்துல இப்படி நனைஞ்சுட்டே கிளம்பிட்டாரே?" என்று மீண்டும் புலம்பினாள் மிருதி.

'கடவுளே! இவங்க ரெண்டு பேரும் தூர இருக்கணும்னு தானே டைவஸ் வாங்கினேன். இப்போ எதிர்வீட்டிலேயே வந்து என் கண்ணு முன்னாடியே இப்படி கஷ்டப்பட்டா என்னால தாங்கமுடியலையே? நான் இப்போ என்ன பண்றது? இன்னும் கொஞ்ச நாள்ல கொஞ்சம் கொஞ்சமா தெரியவருமே.. என்ன செய்றது? எனக்கு எதுவுமே புரியலையே' என்று தலையில் கைகளை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் மிருதி.

"என்ன தீரா? இப்படியா நனைஞ்சுட்டு வருவாங்க?" என்று திட்டிக்கொண்டே டவலை எடுத்துக்கொடுத்தான் அமுதன்.

"பரவால்ல அமுதா. பாப்பா எங்க? கொஞ்சம் தூக்கிட்டு வந்து கார்ல படுக்க வைக்கிறீங்களா?" என்றான் தீரன்.

"எதுக்கு? மணி பதினொன்னு இதுக்கு மேல நீங்க போக வேண்டாம். நைட் இங்கயே ஸ்டே பண்ணிடுங்க தீரா" என்றான் அமுதன்.

"இருக்கட்டும் தீரா. நான் கிளம்புறேன். நாளைக்கு காலைலயே ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. இங்க தங்கிட்டா லேட் ஆகிடும்." என்று புன்னகைத்தான் தீரன்.

"அப்போ இப்படி செய்யலாம். திஷா இங்கயே இருக்கட்டும். நீங்க நாளைக்கு வேலை முடிஞ்ச பிறகு வந்து கூட்டிட்டு போங்க" என்றான் அமுதன்.

"இல்ல... அவ திடீர்னு எழுந்து அழுதா..." என்று தயங்கினான்.

"கம் ஆன் தீரன். அவ என்கூட இருப்பா. நோ ப்ராப்லம்." என்று கண்சிமிட்டினான்.

" சரி அமுதா. அப்போ நான் கிளம்புறேன். பாப்பா அழுதா எனக்கு கால் பண்ணுங்க. " என்று வீட்டிற்கு தன் காரில் கிளம்பினான்.

*****

விடிந்து இவ்வளவு நேரம் கடந்தும் தீரன் வெளியே வரவில்லை என்று நொடிக்கொரு முறை எதிர்வீட்டை பார்த்து கொண்டிருந்தாள் மிருதி.

அவளையும் எதிர்வீட்டையும் மாறி மாறி பார்த்த ஸ்ரீஷா.
'என்ன இன்னைக்கு மழை வரப்போகுதா? பூனை இங்கயும் அங்கேயும் நடக்கிற மாதிரி இருக்கே?' என்று தனக்குள் முணுமுணுத்தவள்.

"என்ன ஆச்சுக்கா? எதுக்கு அங்கயே பார்த்துட்டு இருக்கிங்க. மாமா எப்போ வருவார் நீங்க சைட் அடிக்கலாம்னு இருக்கீங்களா?" என்று குறும்புடன் கண்சிமிட்டினாள் ஸ்ரீஷா.

வெடுக்கென்று அவளை முறைத்த மிருதி "உனக்கு வாய் ரொம்ப அதிகமாகிடுச்சு. உதை வாங்க போற?" என்றாள்.

"என்னை அடிக்கிறது இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலை. எதுக்கு மாமா வீட்டையே டென்ஷனா பார்த்துட்டு இருக்கீங்க?" என்றாள் சீரியஸாக.

"ஹ்ம்ம் உங்க மாமா புதையல் எடுத்துட்டு வரராறான்னு பார்த்துட்டு இருக்கேன்." என்றாள் லேசாக சிரித்து.

"அக்கா. இப்போ நீங்க சொல்லல. எனக்கு தலை வெடிச்சிரும்." என்று சிணுங்கினாள்.

"அதில்ல ஸ்ரீ... நேத்து நைட் உங்க அவ்ளோ மழைல தொப்பலா நனைஞ்சிட்டு சாப்பிட வந்தார். திரும்பி நனைஞ்சிட்டே போய்ட்டார். எப்பவும் காலைல சீக்கிரம் எழுந்து ஜாகிங் போவார். இன்னைக்கு விடிந்து இவ்ளோ நேரம் ஆகுது. ஆனா இன்னும் வெளில வரலை. அதான் உடம்பெதும் சரியில்லையா தெரியலை. பாப்பாவையும் காணோம்." என்றாள் மிருதி.

திஷா அமுதனிடம் இருப்பது தெரிந்ததால் சொல்லலாம் என்று வாயெடுத்தவள்.

'ஹுஹும்... நான் சொல்ல மாட்டேன். மனசுல இவ்ளோ அன்பு வச்சுக்கிட்டு. சும்மா ஒன்னுத்துக்கும் உதவாத கோவதை தூக்கிட்டு சுத்துறீங்கள்ல? நீங்களே போய் பாருங்க' என்று தனக்குள் பேசி கொண்டிருந்தவளை மிருதியின் குரல் கலைத்தது.

"ஸ்ரீ! எனக்காக ஒரு ஹெல்ப். ப்ளீஸ் கொஞ்சம் போய் பார்த்துட்டு வரியா?" என்றதும் உஷாரான ஸ்ரீஷா.

"இல்லக்கா... எனக்கு ஹாஸ்ப்பிட்டல்ல மீட்டிங் இருக்கு இன்னும் கால் மணி நேரத்துல அங்க இருக்கணும். நேரமாச்சு வரேன்கா." நிற்காமல் வெளியே பறந்தாள்.

"அயோ! இந்த பொண்ணு ஓடிட்டாளே. இப்போ என்ன பண்றது?" என்று சோபாவில் குழப்பத்துடன் அமர்ந்தாள்.

மேலும் இருபது நிமிடங்கள் கடந்திருக்கும், தீரன் வெளியே வராததால் பதட்டமடைந்த மிருதி, "பேசாம நாமளே போய் பார்க்கலாமா? இந்த மழைல யாரு போய் நனைய சொன்னா? கடவுளே தூரமா இருந்தாக்கூட எதுவுமே தெரியாது. ஆனா இப்படி எதிர்வீட்ல வந்து அப்பாவும் பொண்ணும் என்னை படுத்துறாங்க." என்று அழாத குறையாக புலம்பினாள்.

*******