• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயை சுடும் என் நிலவு 22

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
தீயாய் சுடும் என் நிலவு 22

“அம்மா அப்பா வேதும்..” என்றது குழந்தை மீண்டும் மிருதியின் புடவையை லேசாக இழுத்தபடி.

மிருதி தீரனை முறைக்க, அவனோ ஒற்றை புருவம் உயர்த்தி கள்ள சிரிப்பு சிரித்தான்.

‘லேசா சிரிக்கும் போதுகூட எவ்ளோ அழகா இருக்கார்?’ என்று மனம் சொல்ல

‘தப்பு தப்பு இது மாதிரி நீ யோசிக்கவே கூடாது. அவனை தூரமா வைக்க தானே இத்தனை நாளா நீ கஷ்டபட்ற? அப்புறம் இப்படி சைட் அடிச்சா வெலங்குன மாதிரி தான்’ என்றது மூளை.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை... சரி.. தப்பு தான். ஆனாலும் என் புருஷன் அழகு தான்.’ என்றது மனம்.

‘மக்கு மனமே. மக்கு மனமே... உன்னை ... இப்போ கொல்ல போறேன் பாரு’ என்றது மூளை.

‘என்னை கொன்னா நீயும் செத்து போய்டுவ’ என்று சிரித்தது மனம்.

‘அய்யோ! உன்னை எல்லாம் கூட வச்கிக்கிட்டு ஒரு வேலையும் செய்யமுடியாது. நான் என்ன பண்ண போறேனோ?’ என்றது மூளை.

‘வேற வழியே இல்லை உனக்கு. நீ எனக்கு தான் வாழ்க்கை பட்ருக்க. அதனால என் கூட தான் இருக்கணும்.’ என்றது மனம்.

‘என்னது நான் உனக்கு வாழ்க்கை பட்ருகேனா? உன்னை’ என்று மனதை துரத்த.

‘புடிச்சிக்கோ முடிஞ்சா’ என்று சிறிது ஓடியது மனம்.

‘என்ன எதிர்ல இருக்கவனை நிக்க வச்சிக்கிட்டு இவங்க ரெண்டு பேரும் இப்படி ஓடிட்டு இருக்காங்க.’ என்று ‘போதும் நிறுத்துங்க உங்க சண்டைய. எதிர்ல இருக்கவர் உங்களையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கார். நீங்க என்னடான்னா ஓடி புடிச்சி விளையாடிட்டு இருக்கீங்க. உங்க பஞ்சாயத்த அப்புறம் வச்சிக்கோங்க’ என்றது மேனி.

‘இப்போ என்ன பண்றது? அவர்கிட்ட இருந்தா என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு தான் தூரமா இருந்தேன். இப்போ என்கூட ஒரே வீட்ல இருந்தா நிச்சயமா அவரை மன்னிச்சு வாழ எண்ணம் வரும்.’ என்றது மனம்.

‘அதுக்கு தான் திருப்பி அனுப்பிடுன்னு சொல்றேன்’ என்றது மூளை.

இவளுக்குள் இப்படி போராட்டம் நடக்க, எதிரில் நிற்கும் தீரனுக்கு

‘அப்படி அந்த சின்ன மூளைக்குள்ள என்ன தான் ஒடிட்டு இருக்கும்? ரொம்ப யோசிக்கிறா என்ன யோசிக்கிறான்னு தெரியலையே? இவளை யோசிக்க விடக்கூடாது அது நமக்கு ஆபத்தா முடியும். அதனால தீரா அவளுக்கு யோசிக்க இடம் கொடுக்காம உள்ள போய்டு’ என்று கூறியது அவனின் மனம்.

‘ஆமா ஆமா’ என்றது மூளை.

மீதிஷாவை பார்த்து சிரித்தவன்.

“மீஷாகுட்டி உங்க அம்மா ஏதோ கனவுலகத்துக்கு போயிட்டாங்க போல. நாம உள்ள போலாமா? எனக்கு உன்னோட ரூம் காட்றியா?” என்று மீஷாவை தூக்கி கொண்டு சட்டென வீட்டினுள் நுழைந்தான் தீரன்.

அவன் உள்ளே போவதை பார்த்த மிருதி அவன் பின்னே செல்ல போக, அவளின் கையை பிடித்து நிறுத்தி, ‘இவர் தான் மாமாவா? செம ஹான்ட்ஸமா இருக்கார்.’ என்று சிரித்தாள் ஸ்ரீ.

ஸ்ரீயை முறைத்த மிருதி, ‘ஆமா. ஆனா மாமா கீமான்னு அவர்கிட்ட சிரிச்சு பேசுன உன்னை தொலைச்சிருவேன்.” என்று உள்ளே சென்றாள்.

‘ஹிம்.. வர்க் அவுட் ஆகுது’ என்று உள்ளுக்குள் சிரித்தவள்.

“அக்கா இது மாமாகூட நான் பேசுறேன்னு போறாமையா? இல்ல அவர் மேல கோபமா இருக்கிங்கன்னு பேசக்கூடாதா?” என்று கேட்டுக்கொண்டே அவளின் பின்னால் சென்றாள் ஸ்ரீ.

நேராக அவளுக்கு முன்னாள் மிருதியின் நுழைந்தவள் மிகவும் மெதுவான குரலில், “மாமா சூப்பர்.” என்று ஹைபை அடித்துகொண்டு.

“அக்கா வரா.” என்று மெதுவாக முணுமுணுத்து, பின் அவனை முறைத்து, “இங்க பாருங்க. எங்க அக்காக்கு நீங்க இங்க இருக்கிறது பிடிக்கலை. அப்புறம் ஏன் இங்க தங்கறிங்க. இந்த மூணு வருஷம் உங்களால எங்க அக்கா எவ்ளோ கஷ்ட பட்டாங்க தெரியுமா? இப்போ திடீர்னு வந்து பொண்ணு பொண்டாட்டின்னு இருக்கீங்க?’ என்று திட்டிக்கொண்டே விழிகளால் மன்னித்து விடும்படி கெஞ்சினாள்.

அவளை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன்.

‘இந்த புள்ள சும்மா மிருதி முன்னாடி திட்றாளா? இல்ல உண்மையாவே இவ மனசுல இருக்கிறதை இப்படி திட்றாளா?’ என்று யோசித்தான்.

அவளின் பின்னே வந்த மிருதி ஸ்ரீ தீரணை திட்டுவதை கண்டு மனம் கலங்க, ‘என்னாலயே அவரை திட்ட முடியலை அதனால தான் கண்காணாத இடத்துல வந்து இருக்கேன். இவ இப்படி திட்றாளே’ என்று அவர்களின் அருகே சென்று.

“மிருதி விடு. அவர் ஒண்ணும் என்னை பார்க்க வரலை. அவர் பொண்ணுகூட இருக்க தானே வந்துருக்கார். இருந்துட்டு போகட்டும். முடிஞ்சத பத்தி பேசி இப்போ எதுவும் நடக்க போறதில்லை.” என்றாள் வேதனையாக.

அந்த வார்த்தைகளில் அவளின் வலி இருந்தாலும் அவள் தனக்காக ஸ்ரீயிடம் பரிந்து பேசுகிறாள் என்பதில் மிகுந்த மகிழ்ச்கி அடைந்த தீரனுக்கு அவளுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசையோடு முடியும் என்ற நம்பிக்கையும் வந்தது.

“நீ சும்மா இருக்கா. இந்த மூணு வருஷமா நீ எவ்ளோ கஷ்ட பட்ருக்க. மெண்டல் ஹாஸ்பிட்டல்ல கொண்டு போயி சேர்க்கலை அது மட்டும் தான். எவ்ளோ உடைஞ்சு போயிருந்த.. உன்னை திருப்பி கொண்டு வரதுக்குள்ள நாங்க எவ்ளோ பாடுபட்டோம். அவ்ளோ ஏன் உன் முகத்தில சிரிப்புங்கறதே மிதிஷா உன் வாழ்க்கைல வந்தப்புறம் தானே? இவரை இன்னும் நாலு வார்த்தை நல்லா கேட்டா தான் என் ஆத்திரம் அடங்கும்.” என்றாள் ஸ்ரீ.

வார்த்தை எழாமல் மிருதியையே பார்த்து கொண்டிருந்தான் தீரன்.

“ஸ்ரீ. நான் தான் சொல்றேன்ல இதைபத்தி பேசி எந்த பிரயோஜணுமும் இல்ல. நானே எதுவும் கேக்கலை. நீ எதுக்கு அதைபத்தி பேசிட்டு இருக்க.” என்றாள் மிருதி.

ஸ்ரீ விழிகளால் தீரனை பார்த்து சிரித்து கொண்டே, “சரிக்கா. நீ சொல்றதால நான் அமைதியா போறேன்” என்று வெளியேறினாள்.

“மிரு..” என்று ஆரம்பிக்க அவனை ஒரு முறை பார்த்தவள் வெளியேறினாள்.

உடைந்து போய் அமர்ந்தவன் ‘கடவுளே! நானே அறியாம என் மிருவை ரொம்ப கஷ்ட படுத்திருக்கேன். இதை நானே தான் சரி பண்ணனும். அவகூட சேர்ந்து வாழனும். தொலைஞ்சு போன இந்த மூணு வருஷத்தை அவளுக்கு என் அன்பால சந்தோஷத்தை திருப்பி தரணும்.

மிருதியும் மிஷாவும் மெத்தையில் உறங்க, தீரனோ தரையினில் படுத்திருந்தான்.

ஒரே அறையில் தன்னவளுடன் இருந்துகொண்டே அவள் சுவாசிக்கும் காற்றை தானும் சுவாசிக்கிறோம் என்ற சுகமே போதுமானதாக இருந்தது தீரனுக்கு அந்த நிலையில்.

இரண்டு நாட்கள் கழிந்தது.

“அக்கா ஆபிஸ்ல நாளைக்கு டூர் போறோம். ஒன் வீக். பத்திரமா இருங்க” என்றாள் ஸ்ரீ.

“என்னடி திடீர்னு டூர்னு வந்து சொல்ற?’ என்றாள் மிருதி.

“ரெண்டு நாள் முன்னாடியே சொல்லிட்டாங்க அக்கா. நான் டென்ஷன்ல மறந்துட்டேன்.” என்றாள் ஸ்ரீ.

“சரி எங்க?” என்றாள்மிருதி.

“மூணார்” என்றாள் ஸ்ரீ.

“அமுதன் கிட்ட சொல்லிட்டியா?’ என்றாள் மிருதி.

“சொல்லிட்டேன். அவன்தான் உங்கக்காகிட்ட சொல்லிட்டு பெர்மிஷன் வாங்கிட்டு போன்னு சொல்லிட்டான்.” என்றாள் ஸ்ரீ.

“ஸ்ரீ பார்த்து பத்திரமா போகணும். புது இடம் யாரையும் நம்பக்கூடாது. தினமும் ரெண்டு தடவை போன் பண்ணனும். சரியா?” என்றாள் மிருதி.

“சரிக்கா.. உங்களை தனியா விட்டுட்டு போக முதல்ல யோசனையா இருந்தது. ஆனா இப்போ நீங்க தனியா இல்லை. கூட ஒரு ஆள் துணைக்கு இருக்கிறதால தான் போறேன்” என்றாள் ஸ்ரீ.

“நான் பார்தூக்குறேன் ஸ்ரீ. நீ போய்ட்டு வா.” என்றாள் மிருதி.

“சரிக்கா” என்று மிருதியை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள் ஸ்ரீ.

எதிரில் மிஷாவுடன் விளையாடிக்கொண்டிருந்த தீரனுடம் வந்தவள்.

“நான் ஒரு வாரம் இருக்க மாட்டேன். உங்களால அக்காவ பார்த்துக்க முடியுமா? இல்லை அமுதனை வர சொல்லடா?” என்றாள் ஸ்ரீ.

“நான் பார்த்துக்குறேன். இப்போ எனக்கு அதை விட முக்கியம் எதுவுமில்லை” என்றான் மிருதியை பார்த்துகொண்டே.

மிருதி உள்ளே சென்றுவிட, “மாமா அக்காவை பத்திரமா பார்த்துகோங்க. உங்க ரெண்டு பேருக்கும் பேசுறதுக்கு இப்போ தனிமை தேவை அதான் நான் வெளிய போறேன். உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்றாள் மெதுவாக.

‘சரி’ என்று தலையாட்டி சிரித்தான் தீரன்.
 
Top