பகுதி - 22.
சர்வஜித்தும், வைஷாலியும் சென்னையில் இருக்கும் அவனது வீட்டுக்குத் திரும்பினார்கள். அது வீடு எனச் சொல்வதை விட, பங்களா என்று சொல்வதுதான் மிகவும் சரியாக இருக்கும். விமான நிலையத்தில் இருந்து, வீட்டுக்கு காரில் வந்தார்கள், ஹரீஷ் அவர்களது காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.
“வாழ்த்துக்கள் சார், வாழ்த்துக்கள் மேடம்...” அவன் சொல்ல, சர்வஜித் அதை ஒரு தலையசைப்போடு ஏற்றுக் கொண்டான்.
“தேங்க்ஸ் ஹரீஷ்... பட் அந்த மேடம் வேண்டாமே. என்னை வைஷாலின்னே கூப்பிடுங்க” வேகமாகச் சொன்னாள்.
அவள் அவ்வாறு சொல்லவே, ஹரீஷ் ரிவர்வியூ கண்ணாடி வழியாக சர்வஜித்தைத்தான் பார்த்தான். அவனிடமிருந்து தனக்குத் தேவையான பதில்மொழி கிடைக்கவே, “ஓகேங்க... ஆனா பேர் சொல்லி கூப்பிட முடியாது... வாங்க போங்கன்னு வேணா சொல்லிக்கறேன்” அவன் சொல்ல, அவள் தன் கணவனைத்தான் திரும்பிப் பார்த்தாள்.
ஹரீஷ் பார்த்ததையும், சர்வஜித் அதற்கு எதுவும் சொல்லாததும் கூட அவளுக்குத் தெரிந்தது. ஆனால் ‘சர்வஜித்தின் கண்களை சந்திக்காமலேயே அவன் எதைப் புரிந்துகொண்டான்?’ எனப் புரியாமல் குழம்பினாள்.
‘இந்த கண்ணாடியை எதுக்குத்தான் போட்டிருக்காரோ?’ சற்று கடுப்பாக வந்தது. ‘இப்போ எங்கே போறோம்?’ என அவளுக்கும் கேட்க ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் அவனிடம் எதையும் கேட்டுக்கொள்ளும் மனநிலையில் அவள் இருக்கவில்லை.
மிகப்பெரிய சேசிங், ஃபயிட்... தன் மாமனின் அடியாட்களின் அடாவடி, இவனது அதிரடி... என அவள் என்னென்னவோ கற்பனை செய்து வைத்திருந்தாள். இவனை அடித்து துவம்சம் செய்துவிட்டு, முத்துப்பாண்டி வெற்றிகொள்வது போல் கூட கற்பனைகள் விரிந்தது.
ஆனால் தான் எதிர்பார்த்ததற்கு மாறாக, அத்தனை கெத்தாக, தன் மாமன், மாமன் மகன்களின் ஒரு சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாதபடி செய்த சர்வஜித்தின் அதிரடி கண்டு மலைத்தாள்.
‘எப்படிடா?’ எனத்தான் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அவள் தன் யோசனையிலேயே இருக்க, பங்களாவுக்கு வந்து சேர்ந்து இருந்தார்கள். கார் நின்ற பிறகுதான் சுற்றுப்புறம் உறைக்க, வேகமாக பார்வையைச் சுழற்றினாள்.
சர்வஜித் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு காரில் இருந்து இறங்க, அவளும் மறு பக்கம் இருந்து இறங்கினாள். அவர்கள் இருவரும் இறங்கிய மறு நிமிடம், சீருடை அணிந்த பணியாளர்கள் வரிசையாக வந்து நின்றார்கள்.
அவர்களுக்கு நடுவில், விசாலாட்சியும், கையில் ஆரத்தி தட்டோடு ரூபியும் அங்கே வந்தார்கள்.
“அத்த...” அவள் ஆச்சரியமாக அழைக்க, அவரோ இமைகளை அழுத்தமாக மூடித் திறந்தார்.
“ரூபி... நீ எப்படிடி இங்கே...?” குதூகலமானாள். அவளது அந்த கொண்டாட்டத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சமாக புருவம் நெரித்தவன், பெரிதாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ரூபி அவளுக்கு எத்தனை நெருக்கமானவள் என்பதை அவன் அந்த நொடி உணர்ந்து கொண்டான்.
“எல்லாம் வீட்டுக்குள் வந்து பேசிக்கலாம்... நீ ஆரத்தி எடும்மா” விசாலாட்சி சொல்ல, ரூபி அவர் சொன்னதைச் செய்தாள்.
“வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாம்மா, வந்து பூஜை ரூமில் விளக்கேற்று” விசாலாட்சி சொல்ல, அவள் உள்ளே வந்தாள். சர்வஜித் அங்கிருந்து அகன்றுவிடலாம் என நினைக்க, விசாலாட்சி அவனைத் தடுத்தார்.
“நீ எங்கேப்பா போற? அவ கூடவே இரு” தாய் சொல்ல, அதை அவன் மறுக்கவே இல்லை. அவளுடனே சென்று விளக்கேற்றிவிட்டு, பூஜை ரூமில் அவள் விழுந்து வணங்க, அவனோ அப்படியே நின்று இருந்தான். பூஜை அறைக்கு வெளியே விசாலாட்சி நிற்க, அவன் கரத்தைப் பற்றி அவர் அருகே அழைத்துச் சென்றவள், அவர் காலில் விழ, அவனும் விழுந்தான்.
“நல்லா இருங்க... நல்லா இருங்க... ஒத்துமையா, சந்தோஷமா வாழணும்” அதீதமாக உணர்ச்சி வசப்பட்டார். அவள் கன்னம் தொட்டு முத்தமிட்டவர், மகன் நெற்றியில் முத்தம் வைத்தார்.
“அம்மாவுக்கு இது மட்டும் போதாதுப்பா. இவளை நீ நல்லா வச்சுக்கணும். இவளுக்காகவும் இனிமேல் நீ யோசிக்கணும். இவளோட உணர்வுகளுக்கும் நீ மதிப்பு கொடுக்கணும். இவளை இனிமேல் காயப்படுத்தவே கூடாது” தாய் சொல்ல, அவரையே பார்த்தான்.
“நீங்க சொன்னால் சரிதான்ம்மா” இப்படிச் சொன்னவனை அதிர்வும், ஆச்சரியமும் கலக்க திரும்பிப் பார்த்தாள் வைஷாலி.
‘இந்த அளவுக்கு அம்மா புள்ளையாடா நீயி?’ ஹரீஷின் மைண்ட் வாய்ஸ் இப்பொழுது வைஷாலிக்குள் இடம் மாறி இருந்தது.
வார்த்தைகளுக்குள் கத்தி வைப்பவனாகவே இவனைப் பார்த்துவிட்டு, இப்பொழுது இப்படி தாயின் முன்னால் அடங்கி நிற்பவனைப் பார்க்க வியப்பாக இருந்தது. அதுவும் அந்த உடல்மொழி, ‘நீங்க சொன்னால் செய்வேன்’ என்பதுபோல் குழைந்து கிடக்க, வைஷாலி அவர்களை வெறித்தாள்.
“யாரும்மா அங்க...?” விசாலாட்சி குரல் கொடுக்கவே, கையில் பால், பழம் ஏந்திய ட்ரேயோடு ஒரு பணிப்பெண் அங்கே வந்தாள்.
“இப்படி வந்து உட்காருங்கப்பா...” தாய் சொல்ல, அங்கே கிடந்த உயர்தர சோபாவில் சென்று அமர்ந்தார்கள். ஆளை விழுங்கிக் கொள்ளும் அதன் மென்மையை உணர்ந்தாலும், அதை ரசிக்கும் மனநிலையில் அவள் அப்பொழுது இருக்கவில்லை.
தாய் சொன்னவற்றை எல்லாம் மறுக்காமல் செய்தவன், “நீ இப்போ உன் ரூமுக்கு போப்பா...” தாய் சொல்லவே ஹரீஷை ஒரு பார்வை பார்த்தவன், மாடிப் படிகளில் விரைந்தான். அவன் பின்னாலேயே ஹரீஷும் செல்ல, வைஷாலியின் அருகே வந்தாள் ரூபி.
“ரூபி...” என்றவாறு தோழியின் கரத்தை அவள் பற்றிக் கொள்ள, “நீங்க அந்த ரூமில் இருந்து பேசுங்க... நான் மதியத்துக்கு வேண்டியதை எல்லாம் என்னன்னு கொஞ்சம் பார்க்கறேன்” என்றவாறு தோழிகளுக்கு தனிமை கொடுத்து ஒதுங்கிக் கொண்டார்.
“உன் மாமியார் சூப்பர்டி... நான் வந்ததில் இருந்து என்னை அவங்க பொண்ணு மாதிரி பார்த்துகிட்டாங்க” ரூபி தோழியிடம் சொன்னவாறு அவர் காட்டிய அறைக்கு நடந்தாள்.
அறைக்குள் வந்து கதவடைத்துக் கொண்டவள், “ரூபி... என்னைக் கொஞ்சம் கிள்ளேன்” என்றாள்.
“என்னடி சொல்ற? எதுக்கு?” என்றாள்.
“என்னைக் கிள்ளுன்னு சொன்னேன்... நடந்ததை எல்லாம் என்னால் நம்பவே முடியலை. எங்க கல்யாணம் எப்படி நடந்தது தெரியுமா? என் மாமா எல்லாம் கையைக் கட்டிக்கிட்டு நின்னதை நீ பார்த்திருக்கணும்.
“ஹப்பா... ஊருக்குள்ளே என்ன ஆட்டம் போடுவாங்க தெரியுமா? ஆனா இன்னைக்கு எதுவுமே செய்ய முடியாமல் அவங்க நின்னதைப் பார்க்க கண் கோடி வேணும். இங்கே பார்... இங்கே பார்... சொல்லும் போதே எனக்கு எப்படி புல்லரிக்குதுன்னு பாரேன்” அவள் சொல்லிக் கொண்டே போக, ரூபி அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டாள்.
“என்னடி? நான் சொல்லிட்டே இருக்கேன், நீ பேசாமல் இருக்க?” அவளைப் பிடித்து உலுக்கினாள்.
“ஊருக்குப் போயிட்டு எனக்கு ஒரு ஃபோன் கூட பண்ணலை நீ” ரூபி குறை பட்டாள்.
“ஊருக்கு போன உடனேயே என் ஃபோனை பறிமுதல் பண்ணிட்டாங்க. இப்போ கூட என் ஃபோன் என்கிட்டே கிடையாது. அப்படி இருக்கும்போது நான் யாருக்கு ஃபோன் பண்றதாம்? சொல்லப் போனால் நேற்று நைட் வரைக்குமே இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு பெரிய டென்ஷன்.
“இப்போ இந்த நிமிஷம், நான் போட்டிருக்கும் இந்த ஒரு ட்ரஸ் தான் என்கிட்டே இருக்கும் ஒரே சொத்தே” என்றவளுக்கு இன்னுமே நடந்ததை எல்லாம் நம்ப முடியாத திகைப்பு.
சில பல நிமிடங்கள் அமைதியில் கழிய, அவர்கள் இருந்த அறைக்கதவைத் தட்டும் ஓசையில் கலைந்தார்கள். கூடவே “மேடம்...” என்ற அழைப்பு அவர்களை எட்ட, “உள்ளே வாங்க...” ரூபிதான் குரல் கொடுத்தாள்.
உள்ளே வந்த பெண்ணோ, “சார் இதை உங்ககிட்டே கொடுத்துட்டு வரச் சொன்னாங்க” என்றவாறு அவளது அலைபேசியை அவளிடம் கொடுத்தாள்.
“ஷாலு... உன் ஃபோன்டி...” ரூபி சொல்ல, “ஆமா... இது என் அம்மாகிட்டல்ல இருந்தது” என்ற ஆச்சரியத்தோடு அவள் கரத்தில் இருந்து வாங்கிக் கொண்டாள்.
“அங்கே இருந்து உன்னையே தூக்கி இருக்கார். இந்த ஃபோன் என்ன பிரம்மாதம்?” ரூபி சொல்ல, அதை ஏற்றுத்தான் ஆக வேண்டி இருந்தது.
“உங்களுக்கு வேண்டிய ட்ரஸ் எல்லாம் கப்போர்ட்ல கொஞ்சம் இருக்குன்னு சொல்லச் சொன்னாங்க” என்றவாறு அங்கிருந்து அகன்றாள்.
“மிஸ்டர் ஃபெர்ஃபெக்ட் தான்...” ரூபி சிலாகிக்க, அங்கே இருந்த கப்போர்ட்களைத் திறந்தாள். அதில் அனைத்துமே காலியாக இருக்க, ஒன்றில் மட்டும் சில இரவு உடைகளும், அவள் வழக்கமாக அணியும் அவளது உடைகளும் அங்கே இருந்தது.
“இதெல்லாம்... இங்கே சென்னை வீட்டில் இருந்தது ரூபி...” என்றாள்.
“உங்க அம்மாகிட்டே இருந்து ஃபோனையே தூக்கினவருக்கு, இது எம்மாத்திரம்? ஆனாலும் எல்லாத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கறார் தான். நல்லது...” என்றாள் ரூபி.
“சரி... நீ எப்படி இங்கே வந்த? யார் கூட்டி வந்தா?” தோழியிடம் கேட்டாள்.
“வேற யார்...? எல்லாம் ஹரீஷ் தான்... உங்க மேரேஜ் முடிஞ்சதுன்னும், உங்களை வரவேற்க நான் இருந்தால் நல்லா இருக்கும்னும் எங்க அப்பாகிட்டே வந்து பேசினார். அப்பா எதுவும் சொல்லலை... அவரோட அனுப்பி வச்சுட்டார்” என்றவாறு தோளைக் குலுக்கினாள்.
“என்னடி சிம்பிளா சொல்லிட்ட. அவரைப் பார்த்துட்டு உங்க அப்பா எதுவும் சொல்லலையா? பேசாமல் அனுப்பி வச்சுட்டாரா? இது நம்பற மாதிரி இல்லையே...” தோழியைச் சீண்டினாள்.
“உனக்கு எங்க கதையைப்பற்றி பிறகு சொல்றேன். இப்போ நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, நான் கிளம்பறேன். இன்னைக்கு நான் ஆபீஸ்க்கு லீவா? இல்லன்னா ODயா? எதுவும் தெரியலை போ...” என்றவாறு கண்ணடித்தாள்.
“உனக்கு ஓவர் குசும்புதான்... இன்னைக்கு மட்டும் என் கூடவே இரேன். எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்” கெஞ்சலாக கேட்டாள்.
“இன்னைக்கு மட்டும்... ம்ஹும்... அப்போ நாளைக்கு இருந்தால் விரட்டி விட்டுடுவ?” கேலி செய்தாள்.
“ரூபி... அவரைத் தனியா ஃபேஸ் பண்றதை நினைச்சாலே எனக்கு கொஞ்சம் உதறலாத்தான் இருக்கு. இதில் நீ வேற இம்சை பண்ணாதே” என்றவளின் உள்ளங்கை எல்லாம் வியர்த்துப் போயிருந்தது.
“அதெல்லாம் நீ சமாளிச்சிடுவ... சரி... உன் மாமா மகன், முத்துப்பாண்டி என்னதான் ஆனான்?” அவள் கேட்க, அப்பொழுதுதான் வைஷாலிக்கு அவன் நினைவே வந்தது.
“அதானே... என்ன ஆனான்?” அவளிடமே திருப்பிக் கேட்டாள்.
“என்கிட்டேயே திருப்பிக் கேட்கறியா? நல்லா வருவடி. சரி... ட்ரஸ் மாத்திட்டு கொஞ்சம் படு...” அவள் சொல்ல, தலை அலங்காரங்களை எல்லாம் கலைத்துவிட்டு, ஒரு இலகுவான புடவையை அணிந்துகொண்டு படுத்துவிட்டாள்.
சில நாட்களாகவே சரியான உறக்கம் இல்லை என்பதால், படுத்த உடனேயே உறங்கியும் போனாள். அதே நேரம், சர்வஜித் அதே கேள்வியைத்தான் ஹரீஷிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
“அந்த முத்துப்பாண்டி என்ன ஆனான்?”.
“நீங்க சொன்ன மாதிரியே கண்டெயினர்ல போட்டு கப்பல்ல அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம் சார்” அவன் சொல்ல, தலையை அசைத்து கேட்டுக் கொண்டான். அந்த நேரம் அவர்கள் இருந்த அலுவலக அறைக்கதவு தட்டப்பட, ஹரீஷ் வேகமாக கதவை நோக்கிச் சென்றான்.
வந்திருப்பது சர்வஜித்தின் தாய்தான் என அவனுக்குப் புரிந்தது. ஏனென்றால் அவர்கள் அழைக்காமல், அவர்கள் எதையும் கேட்காமல் யாரும் அங்கே வர மாட்டார்கள் என அவர்களுக்குத் தெரியும்.
“வாங்கம்மா...” என்றவாறு அவன் விலகி வழிவிட,
“இன்னைக்கு கூட அப்படி என்னப்பா வேலை? இன்னைக்கு ஒரு நாள் அவனை ஃப்ரீயா விடக் கூடாதா?” விசாலாட்சி கேட்க அவனோ விழித்தான்.
‘நானா அவருக்கு வேலை வைக்கறேன்? எல்லாம் என் நேரம்?’ என நொந்தவாறு அவரையே பார்த்திருந்தான்.
“ஹரீஷ்...” சர்வஜித் அழைக்க, அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகிச் சென்றான். தாய் தன்னிடம் தனிமையில் பேச விரும்புவது அவனுக்குப் புரிந்தது.
“சொல்லுங்கம்மா...” என்றவாறு தன் குளிர் கண்ணாடியை கழட்டி மேஜைமேல் வைத்தான். அதென்னவோ... தாயின் முன்னால் எப்பொழுதுமே அவன் அவரது மகன் மட்டுமே. சர்வஜித் என்ற அடையாளமோ, ‘உஸ்தாத்’ என்ற நிழல் உலக மனிதனோ, எதுவாகவும் இல்லாமல் அவனாக இருந்தான்.
அவனுக்கு முன்னால் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவர், சில பல நிமிடங்களை எடுத்து அவனிடம் பேசினார். அவர் பேசுவதை எல்லாம் மிகவும் நிதானமாக, கேட்டுக் கொண்டானே தவிர பதில் வார்த்தை எதுவும் பேசவில்லை.
“என் மகனுக்கு பதினாலு வயசுக்கு மேலே நான் எதையுமே சொல்லிக் கொடுத்தது இல்லை. நீயே உன் வாழ்க்கையை வடிவமைச்சுகிட்ட, ஆனா ஒரு பெண்ணுக்கு உரியவனா நீ மாற வேண்டிய கட்டாயம் உனக்கு இருக்குப்பா.