• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தென்றல் - 10

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். சாரி பார் த டிலே. கொஞ்சம் ஹெல்த் இஷ்யூ. இனி ரெகுலரா அப்டேட் போடுறேன் ஃப்ரெண்ட்ஸ். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.

தென்றல் - 10


தென்றல் முகம் வாடி நின்றவள், தன் பார்வையை மட்டும் அவனிடம் இருந்து விலக்கவில்லை.


பார்வையை விலக்க வேண்டும் என்று எண்ணம் கூட இல்லாமல் தனக்குள் யோசித்துக் கொண்டு அப்படியே இருந்தாள்.


அப்போது தான் அவளது பார்வை ஒரே இடத்தில் இருப்பதை பார்த்த அவளது தோழிகள், அவளது விழி வழியில் கவனத்தை செலுத்த, அங்கோ அசரடிக்கும் அழகுடன் கற்சிலைப் போல எந்த உணர்வையும் காட்டாமல் தென்றலைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.


தென்றலின் தோளிலே ஒரு அடி வைத்த கவிலயா, " அடிப்பாவி… உன்னை போய் அப்பாவி என்று நினைச்சுட்டு இருக்கோம் பார்த்தியா? யாருடி அவரு? இப்படி வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துட்டு இருக்க. அவர் வேற நீ பார்க்குறதை பார்த்துட்டாரு. கொஞ்சமாவது பயம் இருக்கா?" என்று உலுக்க.


தன் நினைவுக்கு வந்த தென்றல், " ஹேய் சும்மா இருங்க டி." என்று அவர்களை அடக்கப் பார்த்தாள்.


" ஹேய் காத்து… நாங்க ஒன்னும் பண்ணலையே. பண்ணதெல்லாம் நீதான் டி." என்று கோரசாக கத்த.


" ஷ்… சும்மா இருங்க டி. அவர் பார்க்குறாறு." என்று தலையை குனிந்தவாறு, மெதுவாக படபடத்தாள்.


" ஹேய் அவராம் டி." என்ற அனு, தென்றலைப் போல குரலின் டெசிபலைக் குறைத்துக் கொண்டு கிசுகிசுத்தாள்.


ஆனால் பாம்புச்செவித்திறன் கொண்ட ருத்ரனுக்கோ எல்லாமே காதில் விழுந்து, முகத்தில் புன்னகை வரப் பார்த்தது. அதை அடக்கிக்கொண்டு இன்னும் எந்த எல்லை வரை போகிறார்கள்னு பார்ப்போம் என்று காத்திருந்தான்.


" ப்ளீஸ் டி. அவர் எங்க அண்ணியோட தம்பி. கொஞ்சம் அடக்கி வாசிங்க டி… மீதியெல்லாம் அப்புறம் பேசலாம்." என்று கெஞ்ச.


அவளுடைய பேச்சைக் கேட்பதற்கு தான் அவர்கள் யாரும் அங்கு நிற்கவில்லை.


அண்ணியுடைய தம்பி என்ற வார்த்தை அவளது வாயிலிருந்து உதித்த அடுத்த நொடியே அவர்கள் எல்லோரும் ருத்ரனுக்கு முன்பு ஆஜரானர்.


" ஹாய் சார்… நாங்க தென்றலோட ஃப்ரெண்ட்ஸ். தேங்க்ஸ் ஃபார் ஃபேவர். எங்களுக்கு பிடிச்ச மாதிரி, அமைஞ்சிருச்சு." என்று ஆளாளுக்கு ஏதேதோ கூற.


" இட்ஸ் ஓகே. இது ஜஸ்ட் ஒரு சின்ன உதவி தானே. அதுவும் நான்…" என்று இழுத்தவன், "தென்றலுக்காகத் தான் செய்தேன்." என்று அவளைப் பார்த்துக் கொண்டே மெதுவாக வார்த்தைகளை உதிர்த்தான்.


தோழிகள் அவன் முன்னே சென்று நிற்கவும், தென்றலுக்கு எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல் தோன்றியது. ஆனால் அதற்கு வழியில்லாமல் தன் கையிலே தலையை சாய்த்துக் கொண்டவளுக்கு ருத்ரன் கூறிய அமுத மொழி அவளை நிமிர்ந்து பார்க்க செய்தது.


அவள் கண்களில் அதிர்ச்சியோடு ருத்ரனை பார்க்க. ருத்ரனோ, " ஐ மீன் தென்றல் எங்க அக்காவுக்கு முக்கியமானவள். அதான்." என்று விட்டு அவளை அழுத்தமாக பார்த்தான்.


" ஊப்‌." என்று பெருமூச்சு விட்டாள், அவனருகே சென்றாள்.


அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவள் முழிக்க.


" ஓகே… யூ கேன் என்ஜாய்.வீ வில் மீட் அனதர் டைம்." என்று அவர்களிடம் இருந்து விடைபெற பார்க்க.


அவர்களோ, " சார் ப்ளீஸ் … நீங்களும் எங்களோட ஜாயின் பண்ணிக்கோங்க சார். இது எங்களுக்கு செய்த பேவருக்காக ஒரு சின்ன ட்ரீட்." என்று வற்புறுத்தி அவனை அங்கேயே இருக்க செய்தனர்.


அரட்டையும் கச்சேரியுமாக அங்கே களைகட்ட… தென்றலோ அந்த பொக்கிஷ நினைவுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டாள்.


அவளது முகத்தில் வந்துபோன பாவனையில் மயங்கி தான் போனான் ருத்ரன்.


'முதலில் வீட்டிற்குச் சென்றவுடன் அம்மாவை அக்கா வீட்டிற்கு பெண் கேட்க அனுப்ப வேண்டும்.' என்று முடிவு செய்தவன், வெளியே வழக்கம் போல முகத்தில் எதையும் காட்டாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.


சங்கீதாவோ, ருத்ரனுக்கு முன்பு பிறந்தவள் அல்லவா, அவனுக்கு முன்பே தென்றலுக்கு பெண் பார்க்க சொல்ல வேண்டும் என்று தன் கணவனுக்கு அழைத்திருந்தாள்.

பின்னே தென்றலின் அதிகப்படியான ஆர்வமும், ருத்ரனின் எதிர்வினையும் அவளை அந்த முடிவை எடுக்கச் செய்தது.


" சங்கீதா… என்னாச்சு நல்லா இருக்கீயா? என்ன திடீர்னு இப்போ ஃபோன் பண்ணியிருக்க." என்று கதிரவன் பதட்ட பட.


" ஹான் நான் நல்லா இருக்கேன் கதிர். சாரி… ஆஃபீஸ் டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா." என்றாள் சங்கீதா.


" கீத்… உனக்கு என்னாச்சு? இன்னைக்கு சண்டே. அதுவே மறந்திடுச்சா. இரு நான் நேர்ல வரேன்." என்றவன் சங்கீதா கூறிய சமாளிப்புகளை காதிலே வாங்காமல், அவன் எப்போதும் எடுக்கும் ஞாயிறு மதிய ஓய்வை தியாகம் செய்து விட்டு காதல் மனைவியை காண விரைந்தான்.


ஃபோனை வைத்த சங்கீதாவோ அவனது ஓய்வு நேரத்தில் தொந்தரவு செய்த மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்துக் கொண்டாள். ஞாயிறன்று மதிய உணவைக் கூட தியாகம் செய்து ஆனந்த சயனத்தில் அல்லவா இருப்பான்.


அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் சற்று நேரத்திலே வந்தான் கதிரவன்.


அவனைப் பார்த்து ஆச்சரியத்துடன் வரவேற்ற மாமியாரிடம் சிறு தலையசைப்பை மட்டும் செலுத்தி விட்டு, மனைவியை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தான்.


" என்ன கீத்… ஒன்னும் பிரச்சனை இல்லையே. நெக்ஸ்ட் வீக் தானே ஹாஸ்பிடல் போகணும்." என்று வினவ.


" ஏண்டி கீதா… மாப்பிளைக்கு கூட ஹாஸ்பிடல் போனதை சொல்லி களேபர படித்திருக்க… ஆனா இந்த அம்மாவுக்கு சொல்லணும்னு உனக்குத் தோணலைல…" என்று மீண்டும் சாரதா புலம்ப.


சங்கீதாவோ தலையில் கைவைத்துக் கொண்டாள்.


" என்னது ஹாஸ்பிடலுக்கு போனீயா? என்னாச்சு? ஏன் எனக்கு கால் பண்ணலை." என்ற கதிரவனின் மறுமொழி அங்கு ஒலித்தது.


தன் அம்மாவை முறைத்தவள், கதிரவனிடம் திரும்பி, " ஒன்னுமில்லை கதிர். லேசா பெயினா இருந்தது. டாக்டர் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்க. நவ் ஐயம் ஆல்ரைட்."


" ஓ…" என்ற கதிரவனின் முகமோ இறுகிப் போயிருந்தது.


" ஓகே டேக் கேர்." என்ற கதிரவன் அங்கிருந்து கிளம்ப பார்க்க.


கலங்கிய முகத்துடன் சங்கீதா அவனது கையைப் பிடித்தாள். அவள் முகத்தை பார்த்துவிட்டு அப்படியே போக முடியாமல் மீண்டும் அவளருகே அமர்ந்தவன், கண்களை மூடி நன்கு சோபாவில் சாய்ந்தான்.


சாரதாவோ, ' என்ன பிரச்சனையோ தெரியவில்லையே.' என்று தனக்குள் குழம்பி போய், மகளையும் மருமகனையும் பார்த்தார்.


சங்கீதா, " மா… அவருக்கு ஜூஸ் போட்டு குடுத்து விடுங்க." என்று விட்டு, கதிரவனை அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.


அறைக்குள் சென்ற பிறகும் கூட மௌனத்தையே கடைப்பிடித்தான் கதிரவன்.


" கதிர்…ஏன் அமைதியா இருக்கீங்க என் மேல கோபமா? நீங்க பயந்துடுவீங்கனு தான் சொல்லல. டாக்டர் கிட்ட போயிட்டு வந்து சொல்லலாம்னு இருந்தேன். சாரி கதிர்." என்று கண்கலங்க கூற.


" ப்ச்… இப்போ எதுக்கு அழற. எதுவா இருந்தாலும் என் கிட்ட இனி மேல் சொல்லணும். " என்று கண்டிப்புடன் கூறியவன், மென்மையாக அவளது கன்னத்தை துடைத்தவனின் கரங்கள், மெல்ல அவளது முகத்தில் விளையாடியது.


" ஷ்… சும்மா இருங்க கதிர்." என்றவளின் முகத்தில் நாண புன்னகை மலர்ந்தது. அதைப் பார்த்த கதிரவன் அடக்கமாட்டாமல் நகைத்தான். அவனது முகத்தில் மலர்ந்த புன்னகைக்கு ஆயுசு இன்னும் சில நிமிடங்களே என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அதை தடை செய்வது போல் வேலையாள் வந்து கதவைத் தட்ட… சங்கீதா ஜுஸை வாங்கி வந்து கதிரவனிடம் நீட்டினாள்.


அதை ஒரு வாய் அருந்தியவனுக்கு, அப்போது தான் தான் இங்கே எதற்காக வந்தோம் என்பது நினைவு வர,

" ஆமாம்… எதுக்கு கீத் கால் பண்ண?" என்று கதிரவன் வினவினான்.


" சொல்றேன் கதிர். முதல்ல ஜூஸை குடிங்க. " என்றாள் சங்கீதா.


குடித்து முடித்தவன், அமைதியாக அவளைப் பார்க்க.


அவளோ, " அது வந்து… " என்று இழுத்தாள்.


கதிரவன் கூர்மையாக அவளைப் பார்க்க.


ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து, " நம்ம தென்றலுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமா?" என்று வினவினாள்.


" கீத்… ஆர் யூ க்ரேசி. இது அம்மா, அப்பா முடிவு பண்ண வேண்டிய விஷயம். அதுவும் இல்லாமல் இப்போ என்ன அவசரம் அண்ட் அவசியம்?" என்றவன் அவளை ஆராய்ச்சியாக பார்க்க.


" அது வந்துங்க… எனக்கு தெரிஞ்சவங்க, நம்ம தென்றலோட ஜாதகம் கேட்குறாங்க. அதுவுமில்லாமல் நல்ல குடும்பம் அதான்." என்று படபடப்பை அடக்கிக் கொண்டு, கூறினாள்.


" ஓ…" என்றவன் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டான்.


" லுக் சங்கீதா. எதுவா இருந்தாலும் உன் டெலிவரி ஆகட்டும். நல்லபடியாக நீயும், குழந்தையும் நம்ம வீட்டுக்கு வாங்க. அப்புறம் பார்க்கலாம்."


" கதிர்… நல்ல வரன் கைவிட்டு போய்டும். " என்று மீண்டும் வற்புறுத்தினாள்‌.


" ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா? அமுதன் கல்யாணத்துலேயே அம்மாவால சமாளிக்க முடியலை. நீ மசக்கைனு இருந்துட்ட… ஏதோ தென்றல் உதவிக்கு இருந்ததால சமாளிக்க முடிந்தது."


" ஏன் கதிர்… வேணும்னா வேலை செய்யாமல் இருந்தேன்." என்று சங்கீதா வினவ.


" உன்ன குறை சொல்லலை. தென்றல் விஷயத்திலையும் இப்படி எதுவும் நடக்கக் கூடாது. எல்லாத்தையும் நம்ம ரெண்டு பேரும் தான் முன்ன நின்னு செய்யணும். புரியுதா? இனி இந்த பேச்சு வேண்டாம். நான் வரேன்." என்று கூறியவனின் முகமோ சிரிப்பைத் தொலைத்திருந்தது.


அறையை விட்டு செல்லும் கணவன் பின்னே வந்த சங்கீதாவோ, அவனை வழியனுப்ப செல்லாமல் ஹாலிலே அமர்ந்துக் கொண்டாள்.


சங்கீதா எவ்வளவு நேரம் அப்படியே சோகமாக அமர்ந்திருந்தாலோ தெரியவில்லை. அதற்கு மாறாக விசில் அடித்துக் கொண்டு உற்சாகமாக வந்தான் ருத்ரன்.


" என்ன கா. தனியா இங்கே உட்கார்ந்து இருக்க. அதுவும் நல்லதுக்கு தான்." என்றவாறே அவளுக்கருகே அமர்ந்தான்.


அதற்கு எந்த மறுமொழியும் கூறாமல், தன் தம்பியையே ஆராய்ச்சியாக பார்த்தாள் சங்கீதா.


" என்ன கா. வாட் ஹாப்பண்ட்." என்றான் ருத்ரன்.


" நீ தான் சரியில்லை. சம்திங் டிஃபரண்டா இருக்க. நான் எப்பயும் போல தான் இருக்கேன். சரி அதை விடு. நீ எதுக்காக என்னை தேடுன. என்ன விஷயம் சொல்லு. " என்றாள் சங்கீதா.


" அது…" என்றவன் ஹாலை சுற்றி பார்வையிட்டபடி, " அக்கா… ரூம்க்கு போயிடலாம்." என்று விட்டு வேக நடை போட்டு மாடி ஏறினான்.


வழக்கமாக இருக்கும் கம்பீரத்துடன் துள்ளலும் தெரிய யோசனையுடனே, மெதுவாக சங்கீதாவும் படியேறினாள்.


" என்னடா… முஸ்தீபு எல்லாம் பலமா இருக்கு." என்று சங்கீதா வினவ.


" அது கா…" என்றவனின் தடுமாற்றத்தை சங்கீதா கண்டுக்கொண்டாள்.


தென்றலை பற்றி தான் பேசப் போகிறான் என்று எதிர்பார்த்தாள்‌.


அதே போலே அவன், " கா… எனக்கு தென்றலை பிடிச்சிருக்கு. மாமா கிட்ட சொல்லி பொண்ணு கேளுக்கா." என்றான்.


" சரிடா… ஆனா இப்போ இல்லை. எனக்கு குழந்தை பிறக்குற வரைக்கும் அவளுக்கு வரன் பார்க்கிற மாதிரி இல்லை." என்று அவள் முடிக்கக் கூட இல்லை. ‌


அதற்குள் ருத்ரனோ, "அதுக்கு என்ன கா. இப்ப பேச்சுவார்த்தை ஆரம்பிச்சா, குழந்தை பிறந்து கல்யாணம் வச்சுக்கலாம்." என்று படபடத்தான்.


" ருத்ரா எனக்கு தெரியாதா? நான் ஏற்கனவே அவளுக்கு பெண் பார்க்க சொன்னதுக்கு உங்க மாமா ஒரு ருத்ர தாண்டவம் ஆடி விட்டார். கொஞ்சம் பொறு டா. குழந்தை பிறக்கட்டும் அதுக்கப்புறம் நான் மெல்ல பேச்செடுக்குறேன்.என் மேல் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்க.


" ஏன் கா பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற. நான் வெயிட் பண்றேன்." என்றான்.


ஆனால் குழந்தை பிறந்து அவள் புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகும், அவனது கல்யாண பேச்சை எடுக்கவே இல்லை. அவள் வீட்டில் பேசி கல்யாண ஏற்பாடு பண்ணுவாள் என்று இவன் காத்திருக்க…


அவளோ தென்றலுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக இவனிடம் தகவல் தெரிவித்தாள்.'


திடீரென்று கார் முன்னால் சென்ற லாரி மேல் மோத போய், அனிச்சை செயலாக ப்ரேக் போட‌.


பழைய நினைவுகளிலிருந்து ருத்ரன் வெளி வந்தான்.


இப்போது கடைக்குச் செல்லும் மனநிலையில் இல்லை. பழைய காயத்திற்கு உடனே மருந்து போட வேண்டும் என்று தோன்றியது. அதுவுமில்லாமல் தென்றலை காயப்படுத்தியதை எண்ணி வருந்தினான்.


முதலில் அவளை தனது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தெவன் இந்த முறை யாரையும் நம்பாமல் அவனே பெண் கேட்பதற்காக தென்றலின் வீட்டை நோக்கி காரை திருப்பினான்.



' அதுவும் தென்றல் வீட்டில் இல்லாத நேரத்திலே பேசி முடிக்க வேண்டும்.எப்படியும் அவள் இன்னும் பீச்சிலிருந்து கிளம்பி இருக்க மாட்டாள். புயல் கரை கடந்து வீட்டை நோக்கி வீசுவதற்குள், நான் முந்திக் கொள்ள வேண்டும்.' என்று எண்ணியவனின் முகத்தில் லேசான புன்னகை எட்டிப் பார்த்தது.

தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,135
679
113
Ariyalur
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️இப்போ தான் ருத்ரனுக்கு தானா தன் வாழ்க்கைக்கு முடிவு எடுக்கணும்னு தோணிருக்கு சூப்பர் 😍😍😍
 
  • Love
Reactions: Viswadevi