• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் -06

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
6

'மித்து' என்ற அழைப்புடன் அவள் கீழே விழவும் இருவரும் சென்று தாங்கி பிடித்தனர். விவேக் அவளை கைகளில் ஏந்தி கொண்டு அருகிலிருக்கும் அறைக்குள் சொன்றான். "கரண் டாக்டர் கூப்பிடு இம்மீடியட் ஆ..." அவனை அவசரப்படுத்தினான்.

"ஹனி எழுந்திரு டி... ஹனி என்னாச்சுமா உனக்கு... " அவளை புதுப்பெயர் வைத்து அழைத்ததையும் அறியாதவனாய் தவித்துக் கொண்டிருந்தான். அவன் அவளை அழைத்துக் கொண்டிருக்கும் பொழுதே டாக்டரை அழைத்து கொண்டு கரண் வந்தான்.

அவர்கள் வெளியே இருக்கவும் ரிஷி விவேக்கின் அருகில் வந்து "ஷி ஈஸ் ஆல்ரைட் சார்... அளவுக்கு மீறின அதிர்ச்சி தான் அவங்களை பலவீனமாயிருக்கு... இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவாங்க.." என்று அவனிடம் தலையசைப்புடன் விடை பெற்றான்.

கரணின் அருகில் வந்த விவேக் "என்னோட தங்கச்சி பேர் சொன்னது ஏன் அவ இப்படி ஆனா... எனக்கு புரியல கரண்.. எந்தங்கச்சிக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்.. எனக்கு உண்மையை சொல்லு கரண்.. என்ன நடக்குது இங்கே... அவளோட பார்வை என்னை ஏதோ கேள்வி கேட்குது.. என்னால பதில் சொல்ல முடியலைன்னு சொல்றத விட தெரியல... ப்ளிஸ் நீயாவது சொல்லு கரண்..." யாரிடமும் இதுவரை தலை வணங்காதவன் இன்று அவளுக்காய் கெஞ்சி கொண்டிருந்தான்.

" நீங்க கேட்கலைனாலும் சொல்ல வேண்டிய அவசியம் வந்துடுச்சி விவேக்.. இப்போ நீங்க அவள எப்படி கூப்பிட்டிங்கன்னு ஞாபகம் இருக்கா.." என்று பதில் கேள்வி கேட்டான்.

விவேக் யோசித்து 'ஹனி' ன்னு கூப்பிட்டேன். ஹனி அந்த பெயரில் அதிர்ந்தவன் அப்படியே அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டான். கரணை நிமிர்ந்து பார்த்து பார்வையில் கேள்வி கேட்டான். அவனின் கேள்விக்கு தலையசைத்தவன் "ஆமா விவேக் அவ தான் உங்க ஹனி.. நீங்க உயிரா நேசிச்ச உங்க ஹனி எங்களோட வாஹினி நம்ம எல்லோரோட ரூபவாஹினி.." என்றான் வலியுடன்.

"என்ன அவளுக்கு தெரியுமா கரண்..."

" ம்ம் தெரியும்... நேத்து தான்... நீங்க அவளை பாக்க வந்தீங்க இல்லையா.. அதோட அதிர்ச்சி தான் நேத்து அப்படி ஆனதுக்கு காரணம்.."

"ஏன்டா நேத்தே சொல்லல.. இன்னைக்கு வந்தீங்களே அப்பவாது சொல்லிருக்கலாம் இல்லை டா... நான் அவளை தேடாத இடம் இல்லைடா... அவப்பேர தவிர எனக்கு வேறு எதுவும் அவளை பத்தி தெரியாது.. அதுவும் முழுப்பேரு தெரியாது.. ஆனாலும் முடிஞ்ச வரைக்கும் தேடின... நான் ஒவ்வொரு எடத்துல தேடனா ஆனா பக்கத்திலே இருந்திருக்கா எனக்கு தெரியல... நான் என்னடா பாவம் செஞ்சேன் இவளை நேசிச்சித தவிர.. ஏன்டா என்னை இப்படி தவிக்க விட்டு தேட வச்சா.." என்று அவனின் தேடுதலின் வலிகளை வார்த்தையில் வெளிப்படுத்தினான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நர்ஸ் ஓடிவந்து

"சார் அவங்க முழிச்சிட்டாங்க.. ஆனா எழுந்ததுல இருந்து அழுதுட்டு இருக்காங்க சார்..." என்று கூறினாள்.

இருவரும் உள்ளே நுழையவும் அவள் கரணிடம் ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டு "கரண் என் மித்து இல்லையாம்டா.. இதுக்காகவாட இவ்வளவு தூரம் அவளை விட்டு விலகின.. அவ எங்கேயிருந்தாலும் உயிரோட இருந்தா போதும்னு நெனைச்சு தானடா விட்டுட்டு போனேன்... ஆனா அவளை என்னால உயிரோட பாக்க முடியலையே.. அந்த பாவி தான்டா அவளை கொன்னிருப்பான்.." அவள் தன் மனதில் உள்ள வார்த்தைகளை கொட்டவும் 'ஹனி' என்று குரல் அவளின் பேச்சை நிறுத்தியது. குரல் கேட்ட திசையில் பார்த்தவள் அங்கே விவேக் இருகைகளையும் விரித்து அவளை அழைத்தான். அவன் இரு கைகளிலும் ஓடிவந்து தஞ்சமானாள் அவனின் ஹனி.

"என்னை இன்னும் நீங்க மறக்கலையா.. ஏன் நினைப்பு இன்னும் இருக்கா.."

"உன்னை மறக்கனும்னா அது என்னோட மரணத்துல தாண்டி நடக்கும் இந்த ஜென்மத்துல நான் நேசிச்ச ஓரே பொண்ணு நீதாண்டி... என் உயிரு இருக்கற வரைக்கும் உன் நெனப்பு இருக்கும்டி... "

"சாரிங்க...என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு வேற வழி தெரியலங்க.. எனக்கு நம்ம மித்து உயிரோட வேணும்னு நெனச்சேங்க.. அது நான் உங்க எல்லாரையும் விட்டு விலகி போனேன்.."

" விடுடி நடந்தத மாத்த முடியாது.. ஆனா உனக்கு கடைசி வரைக்கும் நான் ஒருத்தன் இருக்கேன்னு தோனலை இல்லை அது தாண்டி வலிக்குது.."

"விடுங்க நடந்து முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்.. ஆனா மித்துக்கு என்னாச்சி ஏன் நேது குட்டி அப்பா எங்க... நீங்க ஏன் இங்க தனியா இருக்கீங்க.. உங்க குடும்பம் எங்க ப்ளிஸ் பதில் சொல்லுங்க.."

"நீ போனதுக்கப்புறம் நிறைய நடந்துருச்சிடி... நான் பன்ன தப்பு இன்னைக்கு மித்துவ நம்மைகிட்ட இருந்து பிரிச்சிடுச்சி டி.."

"என்னை சொல்றீங்க... என்னாச்சி எனக்கு புரியல... நான் இங்கேயிருந்து போனதுக்கு காரணம் மித்து தான்.. எனக்கு அவளோட உயிர் தான் பெருசா தெரிஞ்சுது.. அது தான் போனேன்.. ஆனா இப்படி அவ என்னை விட்டு ஒரேடியா போவான்னு தெரிஞ்சிருந்தா நான் போயிருக்க மாட்டேன்ங்க..." அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.


"போதும் என்ன நடந்துச்சின்னு முழுசா சொல்லு... எனக்கு என்ன நடந்துச்சின்னு இன்னும் முழுசா தெரியலை.. ஆனா மித்து இன்னைக்கு இல்லாதது என்னோட கவனக்குறைவு தான் காரணம்.. ஆனா உனக்கு எல்லாமே தெரியும்.. உன்னை நான் தேடாத இடம் இல்லைடி.. உன்னை கண்டுபிடிச்சா என்னோட எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.. அதுமட்டுமில்லாமல் நீயும் எனக்கு வேணும்.. சொல்லுடி நீ என்னை விட்டு பிரிஞ்சதுக்கும் மித்து நம்மள விட்டு போனதுக்கும் யாரு காரணம்.. சொல்லு ஹனி.."

"சொல்றேங்க கண்டிப்பா சொல்றேன்... இதுக்கு முழுக்காரணமும் அந்த ரஞ்சித் தாங்க.." என்று ஆத்திரத்துடனே கூறினாள்.

" என்னடி சொல்ற...அவனா..? அவனுக்கும் உங்களுக்கும் என்னடி சம்பந்தம்.."

" ஆமாங்க அவன் தான்... அவனோட பொறுக்கித்தனம் தான் இன்னைக்கு நாம மித்துவ இழக்க காரணம்... அவன் எங்களோட சீனியர்..." பழைய நினைவலைகளுக்கு சென்றாள்.

அந்த கலைக்கல்லூரி புதிய மாணவர்களை வரவேற்க தயாராகியது. பள்ளி பருவத்தை முடித்த டீன்ஏஜ் பருவத்தில் கல்லூரி வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கிறோம்... கல்லூரி வாழ்க்கை எல்லோராலும் மறக்க முடியாத ஒன்று. பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் வயது. பாரபட்சம் இல்லாமல் பழகும் வயது.எங்கே பிறந்து எங்கே வளர்ந்து பதின்ம பருவத்தில் ஒன்றாய் இணைந்து நட்பு கொள்ளும் காலம். அப்படி உயிர்த் தோழிகளானவர்கள் தான் ரூபவாஹினியும் மித்ரா யாழினியும்.


முதல் நாள் கல்லூரியில் நுழைந்ததும் தன்னுடைய பிளாக் தேடிக்கொண்டிருந்தாள் ரூபவாஹினி. அறையை மட்டுமே கவனித்து கொண்டு வந்தவள் எதிரில் வந்தவளை கவனிக்கவில்லை. எதிரில் வந்தவரும் கவனிக்கவில்லை. விளைவு இருவரும் மோதிக்கொண்டனர். மோதலில் முடிவது காதல் மட்டுமல்ல நட்பும் தான்.

"சாரி.. சாரி மேடம்.. நான் கவனிக்கவில்லை.." இருவரும் ஒரே நேரத்தில் மன்னிப்பு கேட்டனர்.

இருவருக்குள்ளும் இயல்பான புன்னகை அரும்பியது. "எக்ஸ்கியூஸ் மீ.. ஒன் ஹெல்ப்..." என்றாள் ரூபவாஹினி.

"சொல்லுங்க" என்றாள் எதிரில் வந்தவள்

" இங்கே ஏ பிளாக் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா..."

"ம்ம்... நீங்க எந்த டிபார்ட்மெண்ட்..."

"பிகாம் சீ ஏ..."

"ஹேய் நானும் அதுதான் வாங்க போலாம்..."என்று கூட்டிச் சென்றாள்.

"பை த வே ஐ ஆம் மித்ரா யாழினி.."

"ஐ ஆம் ரூபவாஹினி"

" வாவ் நைஸ் நேம்.. நான் இனிமே உங்கள வாஹினின்னு கூப்பிடறேன்.."

"ஓகே...பட் இனிமே நீ வா போதும் மித்து.."

"ஓ... என் பேரு மித்துவா... நைஸ்.. வா வாஹி போலாம்..." என்று இயல்பாகவே ஒட்டிக் கொண்டனர். பின்பு இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒன்றாகவே திரிந்தனர். வாஹினியின் தைரியமும் மித்ராவின் மென்மையும் ஒன்றாகவே இருந்தது. தங்களை பற்றியும் தங்கள் குடும்பத்தை பற்றியும் இயல்பாக பகிர்ந்து கொண்டனர்.

ரூபவாஹினிக்கு தந்தை இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வீட்டு பொருளாதாரத்தை அடகு வைத்த நாட்டின் உண்மையான குடிமகன். குடித்து குடித்து தன்னையும் அழித்து மனைவியையும் மகளையும் காமூகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த உத்தமன். தந்தை இறந்ததும் ஓய்வற்ற உழைப்பால் தாயின் உடல்நிலையும் குன்றியது. பதினேழு வயது பெண் தனது படிப்பையும் பார்த்துக் கொண்டு தாயையும் கவனித்துக் கொண்டு வீட்டில் இருந்த தையல் மிஷினில் கேட்பவர்களுக்கு துணிகளை தைத்துக் கொடுத்து அதில் வரும் வருமானத்தில் தாயும் மகளும் வாழ்ந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவள் பணிரெண்டாம் வகுப்பு மாநில அளவில் முதலிடம் பெற்றாள். அதனால் அவளுக்கு கல்லூரியில் இலவசமாக இடம் கிடைத்தது. அவளின் கனவு ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வகிக்கும் பதவியான மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது கனவு. அவள் கனவை நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கிறாள். எத்துனை கடினமான பாதையிலும் போட்டியிட்டு வெற்றி பெரும் திறன்மிக்கவள்.

கல்லூரியில் சேரும் நாள் நெருங்க தாயும் மடிந்து போனாள். அந்த நேரம் தூரத்து சொந்தம் மாமா என்று அவளின் வாழ்வில் வந்தான் ஒருவன்.. அவளின் இளமை அழகுக்காக... அவனின் பார்வை அவளின் மேல் வக்கிரத்துடனே பதியும்.. அந்த பார்வையில் உடல் கூசிப்போனாள் பெண்ணவள். தனது தைரியத்தை துணையாக்கி அவனின் வக்கிர பார்வையிலிருந்து தனது கனவின் முதல் படியை எடுத்து வைத்தாள்.


மித்ரா யாழினி பெரிய குடும்பத்தில் பிறந்த ஒரே செல்ல(வ) மகள்.. தாயின் இளவரசி... தந்தையின் மற்றொரு தாய்.. அண்ணனின் செல்லத் தங்கை. மனதாலும் உடலாலும் மென்மையானவள். யாரையும் எளிதில் நம்பிவிடுவாள். அதே போல் அவளின் குடும்பத்தில் கட்டுப்பாடுகளும் அதிகம். மொத்தத்தில் அக்குடும்பத்தின் இளவரசி. இரக்க குணம் அதிகம் உள்ளவள். அவளின் முன் சில துளி கண்ணீர் விட்டால் போதும் அவர்கள் எது கேட்டாலும் செய்து விடுவாள். உண்மையில் மெல்லிய மனம் படைத்த தேவதை அவள்.

எதிர்ரெதிர் துருவம் ஒன்றையொன்று ஈர்ப்பது இயல்பான ஒன்று. காதல் மட்டுமல்ல நட்பும் விதிவிலக்கல்ல. அதே போல் தான் இவர்கள் இணைந்ததும். மிகவும் குறுகிய காலத்தில் உறவுடனே பழகி விட்டனர். இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்ததாள் இன்னும் நெருக்கமாயினர். இதில் விவேக்கின் பெயரை வி கே என்று வாஹினியின் மனதிலும் வாஹினி என்று விவேக் மனதிலும் அவள் அறியாமலே பதியவிட்டாள். அவர்களுக்குள்ளான பார்க்காத சொல்லாத காதல் வளர்ந்தது. மித்து அவளறியாமலே இருவரின் மனதிலும் ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பேசி நேசம் எனும் விதை தூவி அது அவளாலே மரமாகி நின்றது. ஆனால் இருவரும் நேரில் சந்திக்கவில்லை. அதற்கு விதியும் விடவில்லை. மித்ரா அறியாமலே அவனின் கேள்விக்கு பதிலளித்துவிடுவாள். அதுதான் வி கே என்றும் ஹனி என்றும் அவர்களை நெருங்க வைத்தது. இதில் ஒன்றும் அறியாத மித்து இருவருக்கும் தூது புறாவானாள். இல்லை அவர்கள் இருவரும் அவளை அப்படி ஆக்கிவிட்டனர்.


மூன்று வருடம் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் தான் சென்றது. மீண்டும் அதே கல்லூரியில் தங்களது மாஸ்டர் டிகிரியும் பண்ண முடிவு பண்ணினர். முதல் ஆண்டு முதல் ஆறுமாதம் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் சென்றது அவன் கண்களில் மித்ரா விழும் வரை. அதன் பின்பு அவர்களின் வாழ்வு அந்த அரக்கனின் வரவால் திசைக்கொரு பறவையாய் மாறினர்.


பாராமல் பார்க்கும் நெஞ்சத்தில்
நேசம் எனும் விதை தூவியது...
அந்த நேசம் மரமாகி
விருட்சத்துடன் வளரத்
துவங்கிய நேரம் அரக்கன்
கண்பட்டு பறவைகள்
திசைக்கொன்றாய் பறந்தது.....


தேடல் தொடரும்...✍️
 
Last edited:

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
149
43
Theni
ரஞ்சித் ஏதோ பெருசா பண்ணிருக்கான்
 
  • Like
Reactions: ரமா