ஏறு மயிலேறி விளையாடும்
முகமொன்று
ஈசருடன் ஞானமொழி பேசும்
முகமொன்று
கூறும் அடியார்கள் வினைதீர்க்கும்
முகமொன்று
குன்றுருவ வில்வாங்கி நின்ற
முகமொன்று..
கோவையின் அந்த அதிநவீன மாடர்ன் வில்லாவிற்கு சற்றும் பொருந்தாமல் முருகன் பாடல் மெல்லிய குரலில் பாட.... சாம்பிராணி மணமும் அதன் புகையுமென அந்த இடமே கமகமத்தது...
"சக்தி கண்ணு எந்திரிமா...."
அங்கிருந்த அலாரம் பல வித குரலில் இவனை கொஞ்சி கெஞ்சி எழுப்ப...மூடியிருந்த போர்வையிலிருந்து நீண்ட கை அடித்து அணைத்த வேகத்தில் அந்த அலாரமே ஆட்டம் கண்டது...
"ம்ம்மா.....மிஸ் யூமா....."
சொல்லியவன் மீண்டும் தூங்க அடுத்த அரைமணியில் அடுத்த அலாரம்....வேறு குரலில்...
"சக்தி கண்ணு எந்திரிடா...."
இப்போதும் ஓரே அடியில் அடித்து அணைத்தவன்....
"ப்ப்பா...உன்னையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்பா..."
வார்த்தை என்னவோ மென்மையாய் இருக்க..அதை சொன்னவனோ ஆளும் அப்படி இல்லை..குரலும் அப்படி இல்லை...
ஆம்....போர்வை விலக... உள்ளிருந்த வந்த உருவமோ.... எதிரிலிருப்பவனை பயத்தில் எச்சில் விழுங்க வைக்கும்படி கரடுமுரடாய் இருந்தது...
சில நொடி பொறுத்து மெதுவாய் எழுந்தவன் அழுத்தமான காலடி சென்று நின்ற இடம்…அங்கிருந்த நிலைக்கண்ணாடி..
மேலும் கீழுமாய் தன் பிம்பத்தை பார்த்தவன் முகமோ இறுகியிருந்தாலும்.... உள்ளுக்குள் ஏதோ ஒரு மூலையில் சிறு மகிழ்ச்சி...
"இப்ப வாங்கடா எவனா இருந்தாலும்.... தட்டி தூக்கறேன்.... யாரு தெரியும்ல... சக்திடா.... சக்திவேல்..."
சக
கத்தை மீசையின் நுனியை திருகியவன் தோற்றம் கம்பீரமாய் இருந்தாலும் புதிதாய் பார்ப்பவர்களுக்கு உள்ளுக்குள் கிலியடிப்பது உறுதி..
ஆம் சக்தி உண்மையில் அப்படித்தான் இருந்தான்... ஆறடி உயரம்...இரும்பு போல் உறுதியான உடலோடு... ஆஜானுபாகுவான தோற்றம்...
காரணம் அவன் வேலை.... ஆம்...பெரிய பெரிய செலிபிரிட்டிகள்... அரசியல்வாதிகளின் செல்ல பாடிகார்ட் இவன்.... எவ்வளவு பெரிய கூட்டமோ... ஆரவாரமோ....ஆர்பாட்டமோ... இவனைத் தாண்டி அவன் பொறுப்பில் வந்தவர்கள் நிழலை கூட தொட முடியாது....
பக்காவான வேலைக்காரன்.... ஆரம்பத்தில் என்ன இவன் இப்படி இருக்கிறான் என தோற்றத்தை வைத்து யோசித்தவர்கள் கூட..."சக்தி இருந்தா ஓகே....நாங்க பங்கஷன்கு வர்றோம்" என நம்பி சொல்லுமளவு வளர்ந்திருக்கும் அக்மார்க் தொழில்காரன்...ஆட்கள் பழக்கவழக்கமெல்லாம் பெரிய இடமாய் இருந்தாலும் தன் வேரினை மறக்காத கிராமத்துக்காரன்...
ஆர்ம்ஸை நீட்டி மடக்கி பார்த்து கொண்டான்...
"ஹஹ..பரவால்லடா சக்தி நல்லாவே உடம்ப மெயிண்டெயின் பண்ற...கீப் இட் அப்..."
அவனுக்கவனே சிரித்தபடி பாராட்டு பத்திரம் வாசித்து முடித்தவன்... அடுத்த நொடி பல்லை கடித்தான்...
"ஆனா...இப்படியே இருடா....உடம்ப இப்படியே மெயிண்டெயின் பண்ணு.... எவனும் உன்கிட்ட வரக்கூடாது....சக்திய எவனும் தொடக் கூடாது...புரியுதா...."
கேள்வி கேட்டவன் கண்கள் பளபளக்க...ஒரு வெறியுடன் தலையாட்டி கொண்டான்..
ஆம் வெறிதான்....அந்த வெறிதான் சக்தியின் ஆதாரமே....அவன் ஒன்றும் மற்ற வசதியான வீட்டு கன்றுகள் போல.... ஆடம்பரத்திற்காய் உடல் வளர்க்கவில்லை...இறுக்கி முறுக்கி திரியும் அவனுக்குள் அவ்வளவு அவ்வளவு வெறி...எவனும் தன்னை தீண்ட கூடாதென்ற வெறி....என் அனுமதியின்றி என் விரல் நகத்தை கூட எவனும் தொட கூடாதென்ற திமிர்....இது எல்லாம் கலந்த கலவைதான் சக்தி....காலமும் சில மனிதர்களும் இவனுக்குள் வலிக்க வலிக்க அந்த வெறியை அடைத்து வைத்திருந்தனர்….
கண்ணுக்குள் ஏதேதோ காட்சிகள் ஓடியது.... தலையை உலுக்கி சமன் செய்தவன் காதுக்குள் இப்போது பெற்றவர்களின் வார்த்தை ஒலிக்க..... தன்னால் சிரிப்பு வந்தது...
"கண்ணு உடம்ப கொஞ்சம் மெல்லிசாக்கேன்பா...உன்கிட்ட நின்னா எல்லோரும் என்னை எங்கேன்னு தேட வேண்டியதா இருக்கு..."
அவன் அம்மா ஈசு எனும் ஈஸ்வரி இவனிடம் குறைபடும் வார்த்தையிது...
"ஏங்கண்ணு... இந்த ஜிம்முக்கெல்லாம் போகாம இருந்தா கொஞ்ச நாள்ள உடம்பு தளர்ந்திரும் சொல்றாங்களே..அப்படி எதும் உனக்கு ஆயிடுமா கண்ணு..."
இது அவனின் அப்பா சண்முகத்தின் கவலை... இருவரை எப்போது நினைத்தாலும் அவன் முறுக்கேறிய முகமட்டுமல்ல மொத்த அகமுமே மலர்ந்துவிடும்...அந்தளவு கணவனும் மனைவியும் சுத்தமான மனதுள்ள அப்பாவி வெள்ளந்தி மனிதர்கள்..பக்கா கிராமத்து ஆட்கள்.... அடுத்தவரை நம்பி நம்பியே இருந்ததையெல்லாம் இழந்தாலும்...இன்னுமின்னும் உலகத்தில் மனிதத்தை தேடும் உண்மையான ஜூவன்கள்.... சக்தியின் உயிர்நாடி....பலம் பலவீனம் எல்லாமே…
ஏதேதோ எண்ணிக்கொண்டே நின்றவன்...ஒரு பெருமூச்சுடன் கிளம்பி வர..அதுவரை முருகன் பாடல் தனித்து ஒலித்தது....
இது சக்தியின் பழக்கம்... வேலைக்கென ஊரை விட்டு வந்தாலும் இன்னுமே அவனுக்கு அழகர் முருகரும்...அவருக்கான சாம்பிராணி மணமும் தினமும் வேண்டும்....அதற்காகவே அதிகாலையில் எழுந்து எல்லாம் செய்துவிட்டு மறுபடி தூங்க போவான்..
பாடலை நிறுத்தி எல்லாம் ஒருமுறை செக் செய்தவன்.. அவசரமாய் கதவை திறக்க...வாசல் படியில் இருந்த உருவங்களை பார்த்து அதிர்ந்தே விட்டான்...
"ப்ப்பா...ம்ம்மா...."
அங்கிருந்த நிலைப் படியில் அவன் அம்மா தூங்க... வாசலில் இருந்த செடிக்கு நீர்விட்டுக் கொண்டிருந்த சண்முகம் மகனை கண்டதும் ஓடி வந்தார்...
"ஏய் ஈசும்மா எந்திரியா... பையன் முழிச்சிட்டான் பாரு...எந்திரிமா.."
மெல்லிய குரலில் எழுப்பியவரை பார்த்து பதறிப்போனான் மகன்...
"ப்ப்பா எப்ப வந்தீங்க..ஏன் சத்தம் போடல..."
மகனின் கேள்விக்கு ஒரு சிரிப்பை கொடுத்தவர்..
"அது கண்ணு...நாங்க மூணு மணிக்கே வந்துட்டோம்...நா சத்தம் போடலாம்தான் சொன்னேன்.. உங்கம்மாதான் பையன் ராவுல லேட்டா வந்திருப்பான்... தூங்கட்டும்… அதில்லாம உனக்கு தூக்கத்துல எழுப்பினா தலைவலி வேற வந்திரும்னு சொல்லி இங்கயே படுத்துட்டா… எனக்கு நேரத்துல முழிப்பு தட்டிட்டு..அதான் செடிக்கு தண்ணி விடலாம்னு..."
பெற்றவரின் வாய்மொழியில் இவனுக்கு இங்கு தொண்டை அடைத்தது..."ஆறடி வளர்ந்த தடிமாடுன்னாலும்...எங்கம்மா அப்பாக்கு நா எப்பவுமே அடிமாடுதான்டா"...சந்தோஷமாய் நினைத்து கொண்டான்...
"ம்ம்மா எழுந்துக்க..கண்ண தொறமா...."
அவன் உயரத்திற்கு...எப்படி வளைந்து நெளிந்தும் அம்மாவை எட்டி தொட கஷ்டமாயிருக்க...உட்கார்ந்தே விட்டான்.
"ம்மா.."
வேகமாய் உலுக்கவும் விசுக்கென முழித்தவர் முகம்….சக்தியை கண்டதும் பூவாய் மலர்ந்து போனது...
"அய்யா சத்தி...எப்படியா இருக்க...ஏய்யா இளைச்ச போல இருக்க..."
அம்மாவின் கேள்வியில் அப்படி ஒரு சிரிப்பு சக்திக்கு...கரகரத்த குரலை செருமியவன்...
"ம்மா.நீங்க முதல்ல உள்ள வாங்க....தரை பாருங்க எவ்ளோ ஜில்லுன்னு இருக்கு..அப்புறம் கால் வலிதான் அதிகமாகும் வாங்க போலாம்.."
உள்ளே அழைத்து போய் அவர்கள் அறையில் விட்டவன்....பிரண்ட் சரணிற்கு அழைத்து வர லேட்டாகும் என சொல்லி நிமிர....அதற்குள் இருவருமே அவசரமாய் ரெடியாகி அரக்க பறக்க வெளியே வந்தனர்...
சக்திக்கு எதுவோ எங்கோ இடித்தது...எதுவாயினும் பெற்றவர்கள் வாயிலிருந்தே வார்த்தை வரட்டுமென அமைதியாய் இருந்தவன்... ஸ்விக்கியில் ஆர்டர் செய்து இருவரையும் சாப்பிட வைத்து..."அவசரமா ஆபீஸ் வர போய்ட்டு வர்றேன்மா".. என்றவனை அருகில் பிடித்து வைத்து கொண்டார் ஈஸ்வரியம்மா...
"என்னம்மா எதுனா சொல்லனுமா..."
"ஆமாங்கண்ணு...அது ஒன்னு சொல்லணும்..ஆனா எப்படி சொல்ல...நீ எதுனா கோச்சுப்பியோன்னு ஒரே ரோசனை...அதான்... ஏங்கண்ணு நா சொல்லட்டா.."
பயந்து பேசும் அம்மாவை விடுத்து கேள்வியாய் அப்பாவை பார்க்க... அவர் முன்னெச்சரிக்கையாய் முகத்தில் எதுவும் காட்டாமல் இயல்பாய் இருந்தார்..
"சொல்லுங்கம்மா.."
"இல்ல கண்ணு...ஒரு பொண்ணு...நல்ல இடம்...உனக்கு பார்க்கலாம்னு...உனக்கு பிடிச்சா.."
வார்த்தைகள் உண்மைக்கும் ஈஸ்வரியம்மாவிற்கு அப்படித்தான் வந்தது...ஊரில் அடிமட்டத்தில் இறங்கியிருந்த குடும்பத்தையும் மானத்தையும் நிமிர வைத்த தலைமகன்....அதில் பாசத்தை விட அதிகமாய் மரியாதை பல மடங்குண்டு சக்தியிடம்... அதனாலேயே எதுவானாலும் சற்று தயங்கியேதான் சொல்வார்… அதிலும் இது அவனின் திருமண விஷயம் எனும்போது தானாய் ஒரு பயம் வந்து ஒட்டி கொண்டது மனதில்..
சக்தி சட்டென அமைதியாகிவிட்டான்.. காரணம்..இதுவரை அந்த ஒரு நிகழ்வை மட்டும் அவன் அதிகம் யோசிக்கவேயில்லை.. அதிலும் இப்போது இந்த வேலை விஷயமாய் போகுமிடத்தில் அவன் காணும் பலதரப்பட்ட பெண்களை கண்டவனுக்கு அம்....ம்மாடி எனத்தான் இருந்தது..
பப்பில் ஆண்களுக்கு இணையாய் சரக்கடித்துவிட்டு... ஆடி தீர்க்கும்பெண்களோடு..."ஹேய் பேப்...ஆர் யூ ரெடி பார் ஒன் நைட் ஸ்டாண்ட்"..என பப்ளிக்காய் இவனிடமே கேட்டு அறை வாங்கி சென்ற பெண்களையும் இவனுக்கு தெரியுமே...தலையை உலுக்கி கொண்டான்..
பதறிபோனார் ஈஸ்வரியம்மா..
"அய்யோ கண்ணு தலையை ஆட்டுறியே...ஏம்பா...தலை வலிக்குதா...நா இதுக்குதான் இந்த மனுசன்ட்ட வேணாம் வேணாம்னேன்...கேட்டாரா...யாரோ என்னமோ சொன்னாங்கன்னு...
பையனுக்கு உடனே கல்யாணம் காட்சின்னு..."
படபடவென பேசியவர் சக்தியின் கூரிய பார்வையில் அமைதியாக...
"யாருமா....யாரு என்ன சொன்னாங்க.."
சக்தியின் குரலே மாறிவிட... அவ்வளவுதான் ஈஸ்வரிம்மாவிற்கு வாய் ஒட்டிக்கொண்டது.. இனி என்ன சொன்னாலும் கேட்டாலும் அம்மாவிடம் எதுவும் வராது என புரிந்தவன் அப்பாவை பார்க்க...
அவர் தலைகுனிந்தாலும் வார்த்தை வந்து விழுந்தது..
"இல்ல சத்தி...எந்தங்கச்சி பொண்ணு கல்யாணத்துக்கு பத்திரிக்க வைக்க வந்தப்ப... உங்கம்மா சும்மா இருக்காம... ஏம்மதினி வெளில பார்த்தீங்க...நானே எம்மவனுக்கு எடுத்துருப்பேன்லன்னு கேட்க...அதுக்கு அவ..அவ…அடியாளு வேல பார்க்கறவனுக்கெல்லாம் எம்மவள கட்டி...."
அவ்வளவேதான்... அதற்குமேல் என்னெல்லாம் சொல்லி தன் தந்தையை நோகடித்திருப்பர் என புரிந்தவன்…
"அதுக்கு.."
"இல்ல கண்ணு..இது நானா போகல...அவங்களாத்தான் நீ வேணும்னு கேட்டு வந்திருக்காங்க.. நானும் உந்தொழிலு உன்ன பத்தி எல்லாமே சுத்தமா சொல்லிட்டேன்.. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் புடிச்சும் போச்சு...அதான் நானும் சரின்னு.."
விட்ட இடத்தை வார்த்தையால் இவனுக்குள் நிரப்பி கொண்டவன் ஒரு பெருமூச்சுடன்...
-----------------------------------------------------
S.S.Security Agency
"டேய் சரண்....இன்னைக்கு நம்ம லிஸ்ட்ல எவனயாவது அடி பிரிக்கனும்னு மாதிரி வேல இருக்கா...இருந்தா சொல்லு நா போறேன்... இருக்கற வெறிக்கு எவனாயவது வச்சு வெளுத்தெடுக்கணும்.... சொல்லுடா... அப்படி எதும் இருக்கா..."
சக்தி வந்ததே கோவத்தில்..இதில் பல்லை கடித்தபடி அவன் கேட்டவிதத்தில் சரணிற்கு இங்கு வேர்த்து வந்தது..
"அடேய் ஏண்டா..இன்னைக்கு வரும் போதே புல் பார்ம்ல வந்திருக்க...என்னாச்சுடா...யாரு வேப்பிலை அடிச்சா இன்னைக்கு"
"ம்ம்ம்...ஊர்ல எல்லாரும் என்னைய அடியாளுன்னு சொல்றானுங்களாம்...
இதுவரை அப்படி இல்லல்ல.. அதான் இன்னைக்கு ஒருநாள் அப்படி இருந்து பார்த்திரலாம்னு..."
"ஏண்டா டேய்...நாம சினி ஸ்டாருங்க...பொலிட்டிசியன் ஆளுங்க இவங்களுக்கு பாடி கார்ட் மட்டும்தான்...யார் கையும் அவங்கமேல படாதமாதிரி வேணா பார்த்துக்கலாம்..ஆனா நாமளே யார் மேலயும் கை வைக்க கூடாதுடா.. தெரியும்ல.."
"தெரியும் நீ மூடு" ..என சைகை செய்தவன் உண்மைக்கும் உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்தான்..
எத்தனை கடினத்தில்... எத்தனையெத்தனை உடல் உழைப்பில் இவன் மேலே ஏறி வந்திருக்க...அடியாள் என்ற வார்த்தை உண்மைக்கும் சூடேற்றியது...சற்று பொறுத்தவன்...
"டேய் நிஜமாவே எவனயுமே நாம அடிக்க வேணாமா.... நல்லா பார்த்து சொல்லு... எங்க கொண்டா நா பார்க்கறேன்...."
ஆபிஸில் மற்றவர்கள் இன்னும் வராமலிருக்க... முன்னால் வந்தவனோ சரணின் உயிரை வாங்கி கொண்டிருந்தான்..
இந்த ஏஜென்ஸி சக்தி மற்றும் சரண் இருவரின் முழு உழைப்பு...நீண்டநாள் கனவு.. மற்ற நண்பர்களெல்லாம்
வேலையை வைத்து இணைந்திருந்தாலும் சக்திக்கு சரண் என்றுமே சற்று அல்ல அதிக நெருக்கமே...
"யப்பா டேய்...சத்யமா என் லிஸ்ட்ல எதும் இல்ல...வேணா நம்ம அச்சுகிட்ட கேளு..."
அச்சு எனும் அஸ்வின்.."போங்கடா டால்டாங்களா" ..என நக்கல் பார்வையை கொடுக்க... "ஏய் என்னடா திமிரா"... அங்கிருந்து சக்தி வீசிய நேம்போர்டு அச்சுவின் ஒரு நொடி விலகலில் சுவரில் பட்டு தெறித்தது...
"ஜஸ்ட் மிஸ்ஸூ...ஆத்தாடி உசுரு பத்திரம் பிகிலு"...அவனுக்கு அவனே கைகாட்டி எச்சரித்தவன் எழுந்து ஓடியே போய்விட்டான்..
"ண்ணா.."
சன்னமாய் கேட்ட சத்தத்தில் யாரென சக்தி தேட..குரல் பின்னால் இருந்து வந்தது...இவர்கள் ஆபிஸ் அருகிலிருக்கும் டீக்கடைக்கார பையன்... காலை மாலை என டீ வைக்க வருபவன் இவர்களின் அலும்பலில் தேங்கி நின்றான்..
"ன்னாடா...ன்னா..."
"ண்ணோவ்...எனக்கு ஒரு ஆள அடிக்கணும்..நா காட்டறேன்...நீ அடிச்சுடறியா.."
"அடிங்க...அவனே ஏதோ காண்டுல வாய விட்டா...வந்திருவீங்களே உடனே வாய்க்கா தோண்ட... போடாங்க அங்கிட்டு...அடிச்சு சாவடிச்சுடுவேன்.."
சரண் அடிக்க வந்த எகிறலில் பயந்து குனிந்தவன் அவசரமாய் வார்த்தையை விட்டான்...
"ண்ணோவ்...இல்லண்ணா... நிசம்மாத்தான்...எந்தங்கச்சி அம்மாக்கு ஒத்தாசையா அது வேல செய்யற வூட்டுக்கு போகும்...அது அப்படி போனப்ப அந்த வூட்டுக்காரம்மா பைய அதுகிட்ட ஏதோ அசிங்கமா பேசி...மேல கையவச்சு..."
தட்டென மேஜையில் அடித்தபடி சக்தி எழுந்துவிட... சரணிற்கு இங்கு அபாய மணியடித்தது..
"சக்தி டேய்..நீ பேசாம இரு.. இதுல்லாம் நமக்கு..."
அடுத்த வார்த்தை பேச
அவனுக்கு வாய் வரவில்லை...சக்தியின் பார்வையில் வார்த்தை தன்னால் அடங்கியது..
"டேய்...உந்தங்கச்சிக்கு என்ன வயசு...
சக்தியின் கேள்விக்கு
"அது ஒரு பன்னெண்டு வயசிருக்கும்ணே..."
"அவனுக்கு..?"
"அவன் வயசெல்லாம் தெர்லண்ணே...ஆளு ஏதோ லாயரா இருக்கானாம்ணே... நம்ம பஸாரு ரோட்லதான் ஆபிசாம்..."
"பார்த்தேல்ல....அந்த நாயி வயசுக்கு அது போயி என்ன வேலய..."
சக்தி மேலே பேசும்முன் சரண் தடுத்தவன்....
"சரி வா போலாம்.. இன்னைக்கு அவனுக்கு நம்ம கையால வெடி வெடிக்கணும்னு இருக்கு... நல்லா நாலு கலர் வெடியா ஏத்திட்டு வரலாம்...வா.."
சரணின் வார்த்தைக்கு "ம்ஹூம்"..என தலையாட்டியபடி நகராமல் நின்றவன்...
"டேய் பொடியா நீ வா"....
இருந்த இடத்திலிருந்தே கையாட்டி அழைக்க...சிறுவன் திருதிருத்தான்..
"அவன் எதுக்குடா சின்னப்பய.. வேணா நாம மட்டும் போலாம் வா..."
சரணின் கேள்விக்கு தீர்க்கமாய் பார்த்தவன்...
"இந்த மாதிரி பொடியனுங்க மனசுலதான் எதுவுமே ஆறாம தீயா எரிஞ்சுட்டு இருக்கும்".. சற்று பொறுத்தவன்.... "என்னை மாதிரி"...என முடிக்க...சரணோ புரிந்ததாய் தலையசைத்தான்..
"வேணாண்டா... இன்னொரு சக்தி உருவாக வேணாம்...அந்த வலியும் அவமானமும் இன்னொருத்தன் அனுபவிக்கவும் வேண்டாம்... டேய் சிறுசு உந்தங்கச்சிய வம்பிளுத்தவன் கையில கிடைச்சா என்ன பண்ணுவ..."
அதுவரை பயந்தவன் சக்தியின் பேச்சில் தைரியம் வர...
"சாவடி அடிப்பேண்ணே....கைய முறிச்சு வாய உடைப்பேண்ணே...
எட்டி உதைப்பேண்ணே..."
இவர்களின் இடுப்பளவு இருந்தவன் குதித்து குதித்து பேச....
"அதுசரி...இதே காண்டோட வா... போய் அவன நல்லா பத்த வச்சி வெடிச்சு வுட்டு வருவோம்....ஆனா இப்ப இல்ல...ராத்திரி போலாம் சரியா..."
ஒருவனை அடித்து பிரிக்க சென்றவனை...விதியும் அழகாய் பிரித்து பிரித்து அடித்தது..
--------------------------------------------
"ஹேய் செல்லா....இந்த பேப்பரா பாரு..."
அந்த இருட்டறையில் இரு உருவங்கள் அங்குமிங்கும் அசைய குரலோ கிசுகிசுத்தது...
"இல்லடா...அது லெட்டரே ஒரு மாதிரி ஆரஞ்ச் கலரா இருக்கும்... இதில்ல....நல்லா அங்க தேடு..நா இதுல பார்க்கறேன்.."
"அடிப்போடி...நானும் வந்ததுல இருந்து.. அதுவா இதுவா கேட்டு கேட்டு தேடி இங்க பாரு என் ரேகையே பாதி தேஞ்சு போச்சு..."..
கண்முன்னால் கையாட்டிய இளையவனை முறைத்தவள்..
"தேஞ்ச ரேகைய இன்னும் தேச்சுட்டு குஷ்டம் வந்தவனா மாறிடாத....தள்ளு நானே தேடிக்கறேன்.."
"ஆ...ஆஆமா....தெரியாமத்தான் கேக்கறேன்...அந்த அரை டிக்கெட்டு பண்ண வேலைக்கு நாம இந்த வேலைய பார்த்தே ஆகணுமா..பேசாம அவள அப்பாங்ககிட்ட போட்டு விட்டரலாமா.."
"நீ மூடிக்கோ".. என வாயை இழுத்து காட்டியவள்... கண்ணுக்கு பழகிய முழு இருட்டில் போன் டார்ச்சை வைத்து அவசரமாய் தேடிக்கொண்டிருக்க.... யாரோ அறையை நெருங்கும் சத்தம் அருகில் கேட்டதில்... திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்....
அதிர்ச்சியில் முகமெல்லாம் வேர்த்து வழிய...என்னடா பண்றது...என்பது போல் பார்த்தவர்கள்...அவசரமாய் கண்களை சுழற்ற...சற்று தள்ளி மூடியிருந்த வார்ட்ரோப் கண்ணில் பட்டதும்..ஒரு ஹைபையுடன் ஓடிப்போய் குஜாலாய் ஒளிந்து கொண்டார்கள்...
"ஹப்பாடா..."
நீண்ட ஒரு பெருமூச்சு இருவரிடமும்..ஆனால் அதன் ஆயுள் குறைவு என்பதை போல...உள்ளே வந்தது இவர்களின் வில்லன் பசுபதி
"அய்யய்யோ...பசு வந்துடுச்சுடி..."
பயத்தில் தோளை சுரண்டியவனை தட்டி விட்டவள்..
"அடச்சீ...வாயமூடு..இவனா பசு...சரியான கொசு...அடிச்சு காத்துல ஊதறேன் பாரு இவன..."
"அதுசரி இப்ப அந்த கொசு நம்மள கண்டுபுடிச்சு கடிக்கபோகுதே...என்ன பண்ண..."
"இருடா எதுனா யோசிக்கலாம்..."
உண்மையில் அவளுக்கும் என்ன செய்ய என பயத்தில் ஒன்றும் தோன்றாமல்... இருந்த ஓட்டையில் பசுபதியை பார்த்து கொண்டிருக்க... இவர்களின் குசு குசுவென்ற சத்தத்தில்...அறைக்குள் வந்தவன் சட்டென நின்று..இவர்கள் இருந்த வார்ட்ரோப் பக்கம் வர...பயத்தில் இவர்களுக்கு இதயம் நின்று துடித்தது..
"சோலி முடிஞ்சது..."
இளையவன் செந்திலை
திரும்பி முறைத்தவளுக்கும் பயத்தில் வேர்த்து வழிய... சரியாய் இவர்களை நெருங்கும் நேரம்.... பின்னிருந்து யாரோ அவன் முகத்தை சட்டென துணியால் மூடினர்..
"வ்வ்வ்வா..ஆஆஆ....வ்வ்வ்வ்..."
செந்தில் ஆரவாரமாய் ஆர்பாட்டமாய் மெதுவாய் சத்தமிட...அதற்கு நிகராய் இங்கு பசுபதியை அடி வெளுத்து கொண்டிருந்தனர் சக்தியும் சரணும்.... முக்கியமாய் அந்த பொடியனும்..
ஆம்...சக்தி வந்ததும் விட்ட அறையிலேயே பசுபதிக்கு கண்ணும் கன்னமும் வீங்கி விட.."நீ அடிடா "என சிறியவனையே அடிக்க வைத்தவன்...சரணையும் அடிக்க விடவில்லை....
"விடுறா அவன் அடிச்சு பழகட்டும்".. என்றவன்..... மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க..."அய்யோ என்னால முடியலண்ணே"...என இடுப்பில் கைவைத்து சிறுவன் சொல்லுமட்டும் அடி அடியென அடிக்க வைத்தான்...
"வாவ்...செல்லா...ஆளு பார்த்தியா செம்ம சூப்பர்ல...அவரு ஆர்ம்ஸ பார்த்தியா...உய்ய்யோ... ஆளும் கையும் ப்ப்பா....லுக்க பாரேன்....யம்மா.... மிடியல.... எனக்கு அவர பார்த்து முடிக்க இந்த ஓட்டை பத்தலையே.... என்ன பண்ண...என்ன பண்ண..."
"டேய் அடங்குடா...சும்மா அய்யோ புய்யோன்னுட்டு.... என்ன அவர பார்த்து இப்படி வழியுற...ஓ....நீ அவனா...."
"நான் அவனில்லை...நான் அவனில்லை...பேச்சை குறை பேச்சை குறை"... பதறிப் போனான் இளையவன்....
ஆனால் செந்தில் சொல்லுமுன்னமே இளையவளின் பார்வை முழுக்க முழுக்க சக்தியிடமே...அவன் தோற்றத்தில் முதலில் பயந்து வந்தாலும்....பலமிருந்தும்.. தான் அடிக்காமல் அந்த சின்னவனை அடிக்க வைத்த அவனின் செயலும் முகமும் ஏனோ கட்டியிழுக்க... அங்குமிங்கும் அசையாது அவனையே பார்த்திருந்தாள்.. அவனை பார்க்கவும் வைத்தாள்...
ஆம்...ஆறடி ஆண்மகன் அவனுக்கு நன்றாகவே உணர முடிந்தது...யாரோ எங்கோ இவனை பார்க்கும் ஆளை துளைக்கும் பார்வை… அதை முழுதாய் உணர்ந்தவன்… சுற்றுமுற்றும் பார்க்க... செல்லாவோ சக்தியின் எச்சரிக்கையில்
சட்டென அனிச்சையாய் உள்ளே நகர்ந்ததில்… அங்கிருந்த ஹேங்கர்ஸ் ஒன்றாய் உரச....சலசலவென சத்தம்..
"ஷிட்...சரண் அங்க யாரோ...ம்ம்ம்.."
பார்வையை அங்கு வைத்து தலையை மட்டும் ஆட்ட...சரண் மெதுவாய் அடி வைத்து
நெருங்கியவன்.....அதன் கதவில் கை வைக்க போக....விருட்டென கதவை இழுத்து திறந்தவள் இளையவனோடு வெளியே பாய்ந்திருந்தாள்...
"சக்திஈஈஈ.....புடிடா....."
சரணின் கத்தலில் சக்தி என்னவென யோசிக்கும் முன்பே… கைக்கெட்டிய உருவத்தை வளைத்து பிடித்திருக்க....அதன் திமிறலில் கோவம் வந்தது..
"ஏய் யாரு நீங்க...இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...."
கண்ணை மட்டும் விடுத்து ஏதோ ஒரு துணியில் கன்னாபின்னாவென முகத்தை மறைத்திருக்க.... அந்த துணியை விலக்க நீண்ட கை சட்டென அந்தரத்தில் நின்று..குப்பென வேர்த்து வந்தது சக்திக்கு…
ஆம்..நன்றாய் உணர்ந்தான் சக்தி...கிட்டத்தட்ட தான் அணைத்த நிலையில் பிடித்திருப்பது ஒரு பெண்ணையென...தனது பெருத்த கையில் வளைந்து குழையும் உடல் ஒரு பாவையுடையது என்று அறிந்தவன் அதிர்ந்துதான் போனான் பாவம்... கையெல்லாம் வேர்த்து…நடுங்கி வந்தது…
விவரமறிந்து முதல் தொடுகை ஒரு பெண்ணிடம்.. அதிலும் இந்த அணைத்த நிலை...அதிர்ச்சியில் அவனுக்கங்கு ஸ்தம்பித்த நிலை..
"க்க்கா....அங்க பாரு அந்த லெட்டர்.."
சரணிடம் சிக்கிய இளையவன் குரலில் சட்டென எல்லோர் பார்வையும் ஒன்றாய் அங்கு விழுந்தது....ஆம் ஆண்கள் பசுபதியை அடித்து வெளுக்கும் போது நடந்த போராட்டத்தில் இவர்கள் தேடிய அந்த லெட்டர் அடங்கிய பைலும் தாறுமாறாய் விரிந்து பறந்திருக்க...அந்த ஆர்ஞ்சு கலர் லெட்டரோ சக்தி செல்லா காலுக்கருகிலேயே கிடந்தது...
ஒரு பெண்ணையா அணைத்து பிடித்தோம் என்ற அதிர்வில் இருந்தவனை.... சட்டென கை முட்டியால் ஒரு எத்து விட்டவள்....அவன் சுதாரிக்கும் முன் பாய்ந்து போய் அதை எடுத்திருந்தாள்..
"ஏய்....மேலயா கை வைக்குற".....சுதாரித்தவன் மறுபடி அவளை எட்டி பிடிக்கும் நேரம்...
செல்லா அருகிலிருந்த ஒரு பேனாவோடு அந்த லெட்டரை இணைத்தவள்....பின்புறமாய் எப்போதும் வைத்திருக்கும் கவணை எடுத்து குறி பார்த்து அடிக்க....அது துல்லியமாய்…மிக மிகத்துல்லியமாய் அந்த ஜன்னலில் இருந்த சிறு பிளவு வழி வெளியே சென்று விழுந்தது...
நொடியில் யாரும் என்ன நிகழ்ந்தது என கணிக்கும் முன் எல்லாமே நடந்து முடிந்திருக்க…
"இப்ப இந்த பொண்ணு அத எப்படி வெளில தூக்கி வீசுனா??...அது எப்படி கரெக்டா போய் விழுந்துச்சு…"
அக்கா தம்பி இருவரை தவிர மற்றவர்கள் அசைவற்று போயினர்...
"அடேய் மவனே செதிலு...அப்படியே தலைகீழா குதிச்சு போய்...அந்த பேப்பர எடுத்துட்டு ஓடுடா...ஓடு..."
செல்லாவின் குரலில் சரண் சுதாரிக்கும் முன்னமே சிறியவன் பறந்திருக்க சரணும் பொடியனும் அவனை துரத்தி ஓடினர்.... அடுத்து செல்லாவும் ஓடும் முன் சக்தியின் இரும்பு பிடியில் மறுபடி சிக்கியிருந்தாள்..
"ஏய் யாருடி நீ...இங்க என்ன பண்ணிட்டு இருக்க..."
இந்த முறை தெளிவாய் பின்னால் இருந்து பிடித்து கொண்டவன் எப்படி முயன்றும் முதுகை திருப்ப முடியாமல் போக...
"ஆளுதான் குச்சி ஆனால் சரியான வலுதான் போல..."
சக்தி கோவமாய் நினைத்தாலும் எப்படியாவது அவளை பார்க்க வேண்டுமென உள்ளுக்குள் எதுவோ தள்ளியது...
தியிறியவளின் முகத்துணியில் கை வைத்து பலமாய் இழுத்த நேரம்... செல்லா அனிச்சையாய் கையை தட்டி விட... துணியோடு நீண்ட கை... சரியாய் அவள் மார்பில் சென்று உரசியதில்.... எதிரேயிருந்த கண்ணாடியில் தெரிந்த செல்லாவின் பிம்பத்தோடு...சக்தியின் உருவமும் வந்து விழ .... இருவரும் ஒன்றாய் கத்தினர் தொண்டை நரம்பு தெறிக்க....
"ம்ம்மாஆ......ஆஆஆஆஆ....."
தெறிக்கும்....

"சரிங்கப்பா..உங்களுக்கு பிடிச்சாஎனக்கும் சரிதான்...நீங்க தகவல் சொல்லிடுங்க...இப்ப நா அர்ஜெண்டா ஒரு இடத்துக்கு போகணும்...போய்ட்டு சாயந்திரம் வர்றேன்...சரியா..."
அவன் சம்மதம் சொன்னதிலேயே வாயெல்லாம் பல்லாக ..இருவருமே சந்தோஷமாய் தலையாட்டினர்..-----------------------------------------------------