• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் - 20

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
191
201
43
Salem

ஆதவன் தன் அழகை வெளிக்கொணர்ந்து பிரகாசமாய் சுடர் விடும் அந்த காலை வேலையில் அந்த வீடே பரபரப்பாய் காட்சியளித்தது.. கரணின் தாய் எல்லோரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கி கொண்டிருந்தார்.. யாரையும் நிற்க விடாமல் வேலை வைத்துக் கொண்டிருந்தனர் அந்த பாட்டியும் பேத்தியும்.. வேலைக்காரர்கள் முதல் கொண்டு விகே வரையிலுமே அது நடந்தது.


அதுமட்டுமல்லாமல் கல்யாணத்திற்கென்று அவளுக்காக நெய்யப்பட்ட உடையில் எல்லோரையும் வசிகரித்தாள் அந்த குட்டி தேவதை.. அவள் மட்டுமல்லாமல் மணப்பெண்ணும் தான் வானுலக தேவதை மண்ணில் வந்ததோ என்று எல்லாரும் ஆச்சரியத்துடனே பார்த்தனர். விகேவும் வெள்ளை பட்டு வேட்டிச் சட்டையில் கம்பீரமாக இருந்தான்.. மூவரையும் இணைந்து பார்த்த கங்கா யாரின் கண்படவும் கூடாது என்று வேண்டிக் கொண்டார். எல்லோரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.

அங்கே ஏற்கனவே கரணும் குருவும் இணைந்து வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக கரணின் காதலி மேக்னாவும் , உதயாவும் இருந்தார்கள்.. ஆண்கள் இருவரும் வேட்டிச் சட்டையில் கம்பீரமாகவே இருந்தனர். பெண்களும் தாங்கள் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என்று பட்டு புடவையில் அழகாகவே இருந்தனர். இருஜோடிகளும் ஒருவர் அறியாமல் பார்வைகளால் ஸ்பரிசித்தனர்.

பொண்ணும் மாப்பிள்ளையும் மணவறையில் அமர்ந்ததும் அவர்களின் நடுவே நேத்ரா அமர்ந்தாள்.. இருவரும் சிரித்துக்கொண்டே அவளை அணைத்துக் கொண்டனர்.. அதை அப்படியே புகைப்படம் எடுக்கும் வேலைகளும் நடந்தது.

அதே நேரம் அவ்விடத்திற்கு விகே வின் பெற்றோரும் வந்தனர்.. அவர்கள் வந்ததும் கோபத்துடன் எழப்போனவனை தடுத்தாள் ரூபி.. திரும்பி அவளை முறைத்தவன்,

"இது உன்னோட வேலையாடி.. அவங்ககிட்ட எதுக்குடி சொன்ன.. பெத்த புள்ளைங்க சந்தோஷம் எதுனே தெரியாம இருந்து இன்னைக்கு என்னோட தங்கச்சியை இழக்க காரணமான இவங்க எனக்கு தேவையில்லை.. நீ எதுக்குடி சொன்ன.." என்று பெரிதும் சத்தமில்லாமல் ஆனால் வார்த்தையில் அழுத்தத்துடன் வினவினான்.

அவனின் கோபம் புரிந்தவளும் அமைதியாக அவனின் கைகளில் அழுத்தம் கொடுத்து "வேணாம் மாமூ.. யாரோட கண்ணீர்லையும் நம்ப வாழ்க்கை அமைய கூடாது மாம.. இது அவங்களோட உரிமை மாமூ.. அவங்களும் தான் இன்னைக்கு எல்லாரையும் இழந்துட்டு அனாதை மாறி இருக்காங்க மாமூ.. நம்ம கூடவே அவங்களை இருக்க சொல்லல.. ஆனா இந்த கல்யாணம் மட்டும் பாத்துட்டு போகட்டும் மாமூ.. " தன் மன்னவனிடம் கெஞ்சினாள் பெண்பாவை.

"ஏன்டி அவங்க உன்னை பேசனதுலாம் மறந்துட்டியா.. நீ மறக்கலாம் என்னால மறக்கவும் முடியாது.. மன்னிக்கவும் முடியாது.. அந்தளவுக்கு தியாகி நான் இல்லை.. " என்றான் கோபத்துடன்.

"முதல்ல கோபப்படாத மாமூ.. நானும் அவங்களை மன்னிக்க சொல்லலை.. மறந்துடலாம் மாமூ.. அவங்க இல்லைன்னா எனக்கு நீங்க இல்லை.. எனக்காக மாமூ ப்ளிஸ் மாமூ.." அவனிடம் கெஞ்சும் தன்னவளுக்காக அனுமதித்தான்.

அவர்கள் அவளிடம் கைகூப்பி வணங்கி விட்டு ஒரு ஓரத்தில் நின்றனர்.. அய்யர் மந்திரம் ஓதி தாலியை எடுத்துக்கொடுக்க அதை வாங்கி தன்னவள் கண்களை பார்த்து சம்மதமா என்று விழிகளில் வினவினான்.. அவளும் தன் இமைமூடி சம்மதம் சொன்ன நொடியில் அவளின் சங்கு கழுத்தில் நாண்பூட்டினான்.. அவனின் விரல்கள் அவளின் மேனியில் உரசிட அதில் சிலிர்த்தாள் பெண்ணவள்.. அவளின் சிலிர்ப்பை அறிந்தவனும் அவளின் கைகளை பிடித்து ஏழுமுறை அக்னி தேவனை வலம் வந்து தன்னின் சரிபாதியாக தன்னவளை ஏற்றுக்கொண்டான்.

எல்லோரின் ஆசிகளுடன் அவர்களின் திருமணம் இனிதே நிறைவு பெற்றது.. கங்கா வின் கால்களில் மட்டும் விழுந்து ஆசி வாங்கியவன் தன் பெற்றவர்களின் காலில் விழவில்லை.. அவள் மட்டுமே ஆசிவாங்கினாள்.. அவளும் அவனை அழைக்கவில்லை.. அவன் இதுவரை அமைதியாய் இருப்பதே பெரிது என்று விட்டுவிட்டாள்.


அலுவலகத்திற்கு உள்ளவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சின்ன ரிசப்ஷன் ஒரு பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தான்.. அது இரவு நேரம் தான் அதுவரை சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு மனைவியையும் மகளையும் நேத்ரன் வளர்ந்த இல்லத்திற்கு அழைத்து சென்று அங்கிருப்பவர் எல்லோருக்கும் மனைவி மகள் கைகளாலே உணவை பரிமாறவிட்டு அவர்களுக்கு உடையும் தன் தேவதைகளின் கைகளிலே வழங்கச்சொன்னான்.

அந்திமாலையில் அழகான இளஞ்சிவப்பு லெஹங்காவில் நிலவுக்கு போட்டியிடும் மங்கையாய் ரூபியை மாற்றியிருந்தார்கள் பார்லர் பெண்கள்.. நேத்ரா விற்கும் அதே கலரில் குட்டி லெஹங்கா என்று தயாரானாள். விகேவும் அவர்களைத் தொடர்ந்தே சிவப்பு கலர் ஷெர்வானி அணிந்திருந்தான். உதயா குரு ஜோடிக்கு நீலநிற உடையும் கரண் மேக்னாவிற்கு வய்லட் கலரிலும் எடுத்திருந்தான். அவர்களும் அதில் தேவன் தேவதைகளாக ஜொலித்தனர். ரிஷப்ஷன் ஆரம்பமாக ஒவ்வொருவரும் வந்து வாழ்த்தினர்.. எல்லோரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் போது எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டது.. அங்கே ஒரு இடத்தில் மட்டும் வெளிச்சம் நின்றது.. அதில் கரண் மேக்னா மற்றும் குரு உதயா ஜோடியினர் தெரிந்தனர்.. அப்பொழுது ஸ்பீக்கரில்


மல்லிகையில் ஒரு மாலை..
தங்க சரிகையில் ஒரு சேலை..

ஆ.. மல்லிகையில் ஒரு மாலை..
தங்க சரிகையில் ஒரு சேலை..

பூவொன்றை பூட்டி வைக்கத்தான்.. ஓ
கல்யாணம் கண்டுபிடித்தான்..

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா..
பின்பு ஜீவிதம் துந்தனானேனா..

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா..
பின்பு ஜீவிதம் துந்தனானேனா..

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா..
பின்பு ஜீவிதம் துந்தனானேனா..

அட்டா நீயும் அழகி என்று ஆர்பரிப்பான் உன்கணவன்..

வெட்கத்தில் நீயும் கேட்பாய் நிஜமா என்று..

ஓ... கதை கொஞ்சம் மாறும் போதும்
வார்த்தைகளெள்ளாம் பாழாகும்..

வாழ்வே ஒர் போர்க்களமாகும்..
ஹே..ஹே.. நீ மோதிட வேண்டும்..

தாலி உன் தாலி
அது உன்னை கட்டும் வேலி

கூடைக்குள்ளே மூச்சு முட்டும்
கல்யாணக் கோழி..

தோழா என் தோழா நான் ஆகாயத்தின் மேலே..

பறந்துகொண்டே தேன்குடிப்பேன் தேன்சிட்டு போலே..

ஆ.. அம்மி மிதிக்கிற வாழ்க்கையெல்லாம் நினைப்பது போல் இருப்பதில்லை..

சிறிகினை அடகு வைத்தால் பறவையின் வாழ்வில் சுகமில்லை..

அ.. அணைப்பதும் அடங்கி நின்று தவிப்பதும் ஓர் மயக்கம்தானே..

நினைத்ததும் இனிப்பதென்ன ஓர் சொர்க்கம்...

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா..
பின்பு ஜீவிதம் துந்தனானேனா..

மல்லிகையில் ஒரு மாலை..
தங்க சரிகையில் ஒரு சேலை..

ஆ.. மல்லிகையில் ஒரு மாலை..
தங்க சரிகையில் ஒரு சேலை..

பூவொன்றை பூட்டி வைக்கத்தான்.. ஓ
கல்யாணம் கண்டுபிடித்தான்..

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா..
பின்பு ஜீவிதம் துந்தனானேனா..

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா..
பின்பு ஜீவிதம் துந்தனானேனா..

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா..
பின்பு ஜீவிதம் துந்தனானேனா..

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா..
பின்பு ஜீவிதம் துந்தனானேனா..


இருஜோடிகளின் நடனமும் அருமையாய் இருந்தது.. கடைசியில் விகேவையும் ரூபியையும் ஆட வைத்து விட்டனர். நேத்ராவும் அவர்களுடன் இணைந்து அந்த சந்தோஷத்தை கொண்டாடினாள். எல்லாம் முடிந்து இல்லம் வந்தனர்.. அவர்களை வாசலிலே நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார் கங்கா.. உள்ளே சென்ற இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்திருந்தார் கங்கா.. அதனால் நேத்ராவை தன்னுடன் தங்க வைக்க நினைத்தார்.. ஆனால் இருவருமே தங்கள் மகள் இல்லாமல் இருக்க முடியாதென கூறிவிட்டு அவளையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.


அங்கே பெருசாக எந்த அலங்காரமும் இல்லை.. இருவருமே வேண்டாம் என்று விட்டனர். நேத்ரா இன்று முழுவதும் நன்றாக சுற்றியதால் அவள் விழிகள் உறக்கத்திற்கு சென்றது.. உள்ளே வந்த ரூபி அவளின் உடையை மாற்றி விட்டு பால்கொடுத்து தூங்க வைத்தாள்.. அவள் உறங்கியதும் ரூபியை இருகைகள் அள்ளி எடுத்தது.. அந்த கைகளுக்கு சொந்தக்காரன் மார்பிலே முகம் புதைத்தவள்,

"அய்யோ மாமூ என்னை பன்றீங்க.. பாப்பு எழுந்திட போறா.."

"அவளுக்கு நைட்ல எழுந்திருக்கும் பழிக்கம் இல்லை ஹனி.. சோ கீப் கொய்ட்.. ஓகே.." என்று அங்கிருந்த மறு அறைக்குள் அவளை அழைத்து சென்றான்.. அதன் உள்ளே படுக்கையுடன் இரவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.. அதனை விழி விரிய பார்த்தவள் தன்னவனிடம் திரும்பி,

" பிராடு மாமூ நீங்க.. இங்க எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு தான் அங்க எதுவும் வேணாம்னீங்களா.." என்றாள் வெட்கத்துடன்.

அவளின் வெட்கம் படர்ந்த முகம் அவனுக்குள் இத்தனை நாட்களாக உறங்கி கொண்டிருந்த ஆண்மை விழித்து அவன் கண்களில் தாபம் எழுந்தது.. அவன் கண்களில் இருந்த தாபத்தீ அவளையும் தொற்றிக்கொண்டது.. அவளை கட்டியணைத்து அவளை ஆளத் துவங்கும் நேரம் அவளிடம் விழிகளால் சம்மதம் வேண்டி நின்றான்.. பெண்ணவளும் அவனின் விருப்பத்தை பூர்த்தி செய்ய தொடங்கினாள்.. அவளை மெதுமெதுவாக ஆளத் துவங்கினான்... அவன் கைகளில் மெழுகாய் உருகிப்போனாள் பெண்ணவள்... அன்பினால் நேசத்தினாள் கூடிய இல்லறம் இனிதே துவங்கியது.

வாழ்க்கை என்பது ஒரு தேடல்
ஒன்றின் முடிவில் மற்றது தொடங்கும்
எல்லா தேடலுக்கும் வினாவுடன் கூடிய விடை இருக்கும்..
இல்லை விடை கிடைக்கும் வரை தேடலிலே வாழ்வு முடியும்..



தேடல் முடிந்தது....✍️
 

Abinaya abi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 28, 2023
5
1
3
Cuddalore
உண்மை தான் ஒரு முடிவின் தொடக்கத்தில் தேடல் இருக்கும் என்பது 100 சதவீதம் உண்மை கதை தோய்வின்றி ரசிக்கும் படி இருந்தது வாழ்த்துக்கள் அடுத்த படைப்புக்கு காத்திருக்கும் வாசகி
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
253
155
43
Theni
Mikavum Arumaiyana mudivu ma..
Manamarntha valthukkal ppa🥳🥳