• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேன்-11

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
170
56
28
Tiruppur
அத்தியாயம்-11

“நான் வர மாட்டேன்.” மேசையில் அமர்ந்து கொண்டு தலையை இடவலமாக மஞ்சள் வரியோடிய வெள்ளி விழிகளை அகல விரித்தப்படி தலையை ஆட்டினாள்.

“ஏன் வர மாட்ட?”

“அந்தப் பாட்டி இருப்பாங்க.”

“எனக்கே பயப்படலை. அவங்களுக்குப் பயமா?” ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவன் கேள்வியாய் பார்க்க, ஜஸ்ரா அவனை முறைத்தாள்.
“உனக்கு இந்த பொம்பளைங்களைப் பத்தி சரியாத் தெரியலை. அதிலும் உன்னோட பாட்டி பூமர் வன்மக் கொடேன் இரண்டும் சேர்ந்த கலவை. உன்னை விட டாக்சிக்.”

“அதெல்லாம் ஒன்னுமில்லை. நீ இந்த தனுர் விஜய பாண்டியன் பொண்டாட்டி. உனக்கென்ன பயம்?”

“ஏதே? எனக்குப் பயமா? அதோட நீதான் இந்த மஹா ஜஸ்ராவோட டெம்பரவரி புருஷன் புரியுதா?”

“என்னோட பதவியை விட நீ கொடுத்த போஸ்டிங்க் நல்லாருக்கே. நிரந்தர பதவியாக மாத்திக்கோ. சரி இன்னிக்குக் காலேஜ் லீவ் சொல்லியாச்சு. நீ குளிச்சுட்டுக் கிளம்பு. மதிய பூசைக்கு அங்க இருக்கனும்.”

“மாட்டேன். உன்னையே நான் ஹஸ்பண்டா நினைக்காத போது, எதுக்கு உங்க குல தெய்வக் கோயிலுக்கு வரனும்? கல்யாணம் ஆனால் கடவுளும் மாறிடுமோ? இதுவரைக்கும் நான் கும்பிட்ட சாமி எல்லாம் எங்க போறது? அப்படி எல்லாம் வர முடியாது. இன்னிக்கு எனக்கு சாமி கும்பிடற மூட் இல்லை.” ஜஸ்ராவின் முகபாவனை முற்றிலும் மாற பழைய அவதராம் எடுத்தாள்.

லேசாக விஜயனின் நெற்றி சுருங்கியது. அவளை நோக்கிக் கோணலாகப் புன்னகைத்தவன் அமைதியாகப் பார்த்தான். அவன் முன் இதுவரை யாரும் கேட்டிராத கேள்வி. அதானே எப்படிக் கடவுளைக் கூட மாற்ற முடியும்? பல வருடங்கள் இதுதான் உன் தெய்வம் எனக் காட்டி வளர்க்கப்பட்ட பெண்களை எப்படி தீடிரென்று உன் தெய்வம் இதுதான் என மாற்றிக் கொள்ள வைக்கிறோம்.’ என அவன் மனதிலும் சிந்தனை ஓடியது.

அவன் மனைவி வித்தியாசமானவள் என்று தெரியும். ஆனால் அவள் கேட்கும் எந்தக் கேள்வியும் தவறில்லை என்று தோன்றுகிறது. அவள் ஒரு கடவுளை வணங்கும் தாயாருக்கும், பல கடவுளரைக் கொண்ட தந்தைக்கும் பிறந்தவள்.
இரண்டையும் அவள் பின்பற்றுகிறாள். நேற்று வரை அவள் வணங்கிய கடவுள் வேறு. இன்று அவளைத் தீடிரென மாறச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றே கேள்வி எழுந்தது. சில விநாடிகள் யோசித்தவன், அவளுக்குப் பதிலைக் கூறினான்.

“ஜஸ்ரா உன்னை எந்த சாமியையும் ஏத்துக்க சொல்லலை. என் கூட கோயிலுக்கு வானு கூப்பிட்டேன். நீ எந்த சாமியை வேணாலும் கும்பிடு.”

அவனிடம் இந்தப் பதிலை எதிர்பாராத ஜஸ்ரா சில நொடிகள் அதிர்ந்தவள், “அப்பவும் நோதான். இன்னிக்கு சாமி கும்புடற மூட் இல்லை.” என்றாள்.

“நீ பொறுமையாக சொன்னாள் கேட்க மாட்ட.” என்றவன் அமர்ந்திருந்த தன் மனைவியை மீண்டும் தூக்க அவள் இந்த முறை அவன் தோளை அடிக்க ஆரம்பித்தாள்.

“விடுடா.. விடுடா.. நான் என்ன சாக்கு மூட்டையா? ஆவுண்ணா தூக்கிட்டு கிளம்புற?”

அதற்குள் அவளைக் குளியலறையில் விட்டவன், நீர்த்தெளிப்பானைத் திறந்து விட்டான்.
நீர் பட்டதும் பெருமூச்சு விட்டவள், அதை நிறுத்தச் செல்ல, அவள் கையை அப்படியே பிடித்தான் விஜயன்.

“நீ கிளம்பி மட்டும் வரலை. இரண்டு பேரும் ஒன்னாதான் குளிக்கனும் புரியுதா?”

“டே சைக்கோ. ஏன் இப்படி செய்யற?”

“ஜஸ்ரா நீ பொண்டாட்டிதான். இந்த ரூமுக்குள்ள, இந்த வீட்டுக்குள்ள நீ எது வேணாலும் என்னை செஞ்சுக்கலாம். ஆனால் சில விஷயங்களில் நீ என்னை வெறுப்பேத்த என்ன வேணாலும் செய்யலாம் அப்படிங்கறதுக்கு நான் விட மாட்டேன். குளிச்சுட்டு கிளம்பி வா. மொழி, மாமா எல்லாரும் சேர்ந்துதான் போறோம்.” என உத்தரவிட்டுக் கிளம்ப ஜஸ்ரா வேறு வழியின்றி அவன் பின்னாலேயே சென்று குளியலறைக் கதவை அடைத்து குளிக்க ஆரம்பித்தாள்.
நீரோடு நீராக அவனைச் சேர்த்தும் கழுவி ஊற்றத் தவறவில்லை.

***

ஹேமவள்ளிக்கு ராகவன் அருகில் வந்து அமர்ந்ததும் உடல் முழுக்க வியர்க்க ஆரம்பித்தது. அவள் ஏதோ ஓர் உலகத்தில் இருப்பதை உணர்ந்த ராகவன் அவள் விழிகள் முன்பு சொடக்கிட, வள்ளி நிகழ்வுக்கு வந்து 'பேபே'வென விழித்தாள்.

“என்னாச்சு வள்ளி?”

“ஹான்.. ஒன்னுமில்லை.”

“டைம் ஆகுது. வொர்க் ஆரம்பிக்கலாமா?”
மேசையின் மேல் வைக்கப்பட்டிருந்த மாத்திரை எடுத்து விழுங்கியவள், ‘அதானே அயன்பாக்ஸை விழுங்குன மாதிரி மூஞ்சி வச்சிக்கற ஆள் எல்லாம் கனவுலதான் கிஸ் பண்ண முடியும். நிஜத்தில் செய்ய முடியாது. கனவு எப்படி வேணாலும் வரும். அதை நாம கட்டுப்படுத்த முடியாது.’ என மனதில் நினைத்துக் கொண்டவள் தன் வேலையை ஆரம்பித்தாள்.
ஒரு மணி நேரம் கழித்ததும், அவள் போட்ட மாத்திரைக்கு லேசாக தூக்கம் சொக்க ஆரம்பித்தது. விழிகளை சிமிட்டி தூக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றாள் வள்ளி.

வேலையிலும் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்க, தூக்கத்தைக் கட்டுப்படுத்தியவாறு பேச ஆரம்பித்தாள்.

“நீங்க போய் தூங்குங்க வள்ளி.” ராகவனின் குரல் மென்மையாக ஒலித்தது.

“இல்லை. நான் முடிச்சுட்டே போறேன்.”

“இட்ஸ் ஓகே.”
இருவரும் மீண்டும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

வேலையை முடித்து மடிக்கணினியை வைத்துவிட்டு வள்ளி எழ, அவளை கையை இழுத்து தன் மேல் சுண்டி விழ வைத்தான் ராகவன்.

“ரா..க..” பேசவிடாமல் முகத்தைப் பிடித்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன், கன்னத்திலும் கொடுத்தான். விழிகளை மூடிக் கொண்ட ஹேமவள்ளிக்கு இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது. லேசாக அவள் மூக்கைக் கடிக்கவும், விழிகளைத் திறந்து பார்த்தாள் அவள். அதற்குப் பின்பு அவன் இதழ்களுக்குத் தாவ, இந்த முறை தவறிய நிமிடங்களை அவள் கண்திறந்து பார்க்கவில்லை. அவன் இஷ்டப்படியே விட்டுவிட்டாள். அவனும் கள்ளுண்ணும் வண்டாக இதழ்களை ஆக்கிரமித்தான்.
***

வெளியில் பசுமைக் கம்பளங்களாய் விரிந்து கிடந்த தேயிலைத் தோட்டங்களைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் மயூரா. அவள் முகத்திலோ நிம்மதி என்பது கிஞ்சித்தும் இல்லை. எறும்புப் புற்றில் புகுந்த நாகமாய், அவள் வாழ்க்கையின் அதிர்ச்சிகள் அவள் நிம்மதியை மனதில் இருந்து பறித்துச் சென்றிருக்க, விழிகளில் கருவளையம் ஆக்கிரமித்திருந்தது.

மகள் காணொலித் தொடர்பின் மூலம் அழைத்துப் பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்க, மயூராவின் மனமோ குற்ற உணர்வில் குன்றிப் போயிருந்தது. மொழியின் மகிழ்ச்சி அவளைப் பலமாகத் தாக்கி இருந்தது. அவளும் தன் சகோதர உறவுக்காக ஆர்வமாகக் காத்திருந்தாள்.
அந்த டைரி மட்டும் கிடைக்காமல் இருந்தால், தன் வாழ்வு இந்நேரம் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்திருக்கும்? மனம் நடக்காத ஒன்றைத்தானே எண்ணி ஏங்கும். அவளும் ஏங்கிக் கொண்டிருந்தாள். அந்தப் பறவையின் கூட்டை பிய்த்துப் போடப்பட்டிருக்க, மனதில் நரக வேதனை சூழ்ந்திருந்தது.

அவள் கழுத்தைப் பிடித்தவாறு அணைத்தான் சிவ சேகரன். அவன் கரத்தின் வெம்மை குளிருக்கு இதமாக இருந்தாலும், மறுகணமே உண்மை சுட்டது. அவன் கரத்தை விலக்கி விட்டாள்.

“பாப்பா உங்களுக்கு சூப் கொண்டு வந்திருக்கேன். குடிங்க.” என தங்கம்மாள் மேசையில் வைக்க, மயூரா அதை வெறித்தாள்.

அவள் விலகலில் மனம் சுட்டாலும், மெல்ல அவள் அருகில் மண்டியிட்டுத் தரையில் அமர்ந்து அவள் மடி மீது தலை வைத்துக் கொண்டான்.

அவன் சட்டென்று தலை வைத்ததும் மயூராவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் ஒரு நாளும் இப்படி நடந்து கொண்டதில்லை.

“ஏன் மயூரா என்னைப் புரிஞ்சுக்க மாட்டீங்கற? நான் தப்புப் பண்ணிட்டேன். எப்படி மன்னிப்புக் கேட்டாலும் அதுக்கு மன்னிப்பு இல்லைனு தெரியும். ஆனால் கூட இருந்து தண்டனை குடு. நீ மொத்தமாகப் போக சொல்லிட்டால், நான் எங்க போறது? எங்காவது நார்த்துக்கு போஸ்டிங்க் வாங்கிட்டு உன் கண்ல படாத மாதிரி போகனுமா? நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்? எனக்கு ஒரு வாய்ப்புக் கொடும்மா.” என உயிரை உருக்கும் குரலில் பேச, மயூராவின் விழிகளில் இருந்து நீர் தளும்பி அவன் தலைமேல் விழுந்தது.

உடனே அவள் மடியில் இருந்து எழுந்து, அவள் விழி நீரைத் துடைத்துவிட்டவன், “அழாத மயூ. இத்தனை நாள் நீ எனக்கு எல்லாம் செஞ்ச. இனி வாழ்நாள் முழுக்க நான் உனக்குச் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. நம்ம குழந்தைக்காக. எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் இப்ப எந்த சம்பந்தமும் இல்லை. ஆபிஸூக்கு ஒரு கேஸ் விஷயமாக வந்திருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஃபேம்லி இருக்கு. அப்ப பேசுனதுதான். இல்லைன்னா உன் முன்னாடியே கால் பேசுவனா?”

அமைதியாக மயூரி தன் கணவனை ஏறிட்டவள், “ இந்தக் குழந்தை பிறக்கற வரைக்கும் என்னோட நீங்க இருக்கலாம். அதுக்கப்பறம் நீங்க என்னோட இருக்கனுமா? வேண்டாமா? அதை நான் முடிவு பண்ணுவேன். அப்ப நான் சொல்றதை நீங்க கேட்கனும்.” என்றாள்.
ஒரு துளி நம்பிக்கையை அவன் எதிர்ப்பார்த்திருக்க, அதுவும் கானல் நீராய் போய் விடும் என எதிர்பார்த்திருக்க, பாலைவனச் சோலையாய் பத்து மாதங்கள் கிடைத்திருக்க, விடுவானா? அந்தக் காவலன். இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். தன் மனைவியின் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தவன் நிம்மதி பெருமூச்சு அவள் முகத்தின் மீதே வெளியிட, மேலும் அவள் விழிகளில் நீர்.

“இனி நீ எதுக்காகவும் அழக் கூடாது மயூரா. நான் தப்பு செஞ்சுட்டேன். அது நடந்த கொஞ்ச நாளில் இருந்து என் மனசு முழுசா உங்கிட்ட மட்டும்தான். நீ என் பொண்டாட்டிடி.”

மயூராவிடமிருந்து எந்த ஒரு காதல் பார்வையும் இல்லை. அவன் கூறுவதை அப்படியே பார்த்தாள்.

“சி தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க இந்தக் குழந்தைக்கு அப்பாவாகிட்டீங்க. பொறக்கும் போதே என் குழந்தைக்கு அந்த அவப்பெயர் கூடாது. வயித்துல வளரும் போதே அதுக்கு என்னோட சோகம் பாதிச்சற கூடாது. தனக்கு அப்பாவோட கேர் கிடைச்சுதுனு இருக்கனும். அதுக்குத்தான் இந்த முடிவு. நீங்க இந்த குழந்தையோட ஹெல்த்துக்காக மட்டும்தான் என் கூட இருக்கப் போறீங்க. சரகசி மதர் மாதிரி நீங்க சரகசி பாதர். உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்கப் போறது இல்லை. உங்க காதல் வார்த்தையில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.”

மயூராவின் குரல் உறுதியாக ஒலித்தது. சிவ சேகரனின் இதயத்தில் யாரோ நூறு ஆணிகளை ஒன்றாக வைத்து அடித்தது போல் வலி பரவியது.

மெலிந்த குரலில், “சரி. இப்படி கூட உன்னோட டைம் ஸ்பெண்ட் பண்ணறது எனக்கு சந்தோஷம்தான்.” என்றான்.

“இப்ப நீங்க கிளம்பி ஊருக்குப் போலாம். நான் இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு வரேன்.”
சிவசேகரன் தயங்க, “கமிட்மெண்ட் கொடுத்துட்டு அதை மீறுன பழக்கம் எனக்கு இல்லை. கிளம்புங்க.” என்றாள் மயூரா.

மயூரா மெல்ல எதிரில் இருக்கும் உணவை சாப்பிட ஆரம்பிக்க, அவளின் முதுகைப் பார்த்தப்படி சிவ சேகரன் வீட்டினுள் சென்றான். அவளுடைய பாராமுகத்தை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

குழந்தையை வைத்துக் கொள்ளவும், அதனுடன் தன்னைப் பத்து மாதங்கள் வைத்துக் கொள்ளவும் அவள் எடுத்த முடிவில் அவனுக்கு மகிழ்ச்சியே. எப்படியும் அவளை இந்தப் பத்து மாதத்திற்குள் ஒப்புக் கொள்ள வைத்து தன்னுடன் வாழ வைக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டான்.

வீட்டினுள் அமர்ந்தவனுக்கு, அலைபேசி ஒலிக்க எடுத்துப் பேசினான். அழைத்தது வேறு யாருமில்லை. அவனுடைய மச்சான் தனுர் விஜய பாண்டியன்.

“ஹலோ சொல்லுங்க.”

“என்ன சிவா மச்சான்? என் தங்கச்சி என்ன சொல்றா?”

“அண்ணன் தங்கச்சி எதில் ஒற்றுமையோ பிடிவாதத்தில் அப்படியே இருக்கீங்க.”

மறுமுனையில் தனுர் விஜய பாண்டியனிடமிருந்து சிரிப்பு எழுந்தது.

“பெருமைக்காக இல்லை மச்சான். ஆனால் பரம்பரை புத்தி. ஒன்னும் செய்ய முடியாது.”

“டைவர்ஸ் பேப்பரில் சைன் போட்டுட்டீங்களா?”

“இல்லை மச்சான். பத்து மாசம் குழந்தை பிறக்கற வர டைம் கொடுத்துருக்காள் மயூ.”

“பரவால்லை. முன்னாடி இருந்தே இந்த எஃபர்ட் போட்டுருக்கனும். அப்படி செஞ்சு இருந்தால் இந்த ராட்சசியைக் கட்டற நிலைமை எனக்கு வந்துருக்காது.”

“எங்கிட்ட கூட சொல்லாமல் அப்படி நீங்க செஞ்சதில் எனக்கு கோபம் மச்சான்.”

“அவசரத்துக்கு கட்டிகிட்டேன். இல்லைனா நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சு போயிட்டால் என்ன செய்யறது? என்னோட குணம் தெரிஞ்ச என்னோட மயூ எப்படியும் ஜஸ்ராவுக்காக யோசிப்பாள்.”

“இல்லை மச்சான். மயூவை நான் இப்படி பார்த்ததே இல்லை. மூணாவது ஆள்கிட்ட பேசற மாதிரி பேசறாள்.”

“மச்சான் நீங்க அந்தத் தப்பை செஞ்சுருக்கக் கூடாது. உங்களை கார்னர் செஞ்சு கல்யாணம் செஞ்சு வச்சது என்னோட தப்பு. அது மயூவுக்குத் தெரியாது. முழுக்க முழுக்க என்னோட தப்பு. இப்ப செஞ்சு இருக்கேன் பாருங்க. இதுவும் அவளுக்காகத்தான்.”

“மச்சான் மகாவை நீங்க நல்லாப் பார்த்துக்குவீங்கனு தெரியும். ஆனாலும் அவ படிக்கற பொண்ணு. அவளுக்குனு கனவு இருக்கு.”

“நீங்க சட்டையைப் பிடிச்சு சண்டை கட்டுவீங்கனு நினைச்சேன்.”

“கட்டிருக்கனும். ஆனால் உங்க அரசியல் முகம் வேற. குடும்பத்துகிட்ட இருக்கற முகம் வேற. ஜஸ்ராவுக்கு நீங்க நிறைய மாப்பிள்ளை பார்த்ததும் தெரியும். அப்படி பார்த்த சிலர் உங்ககிட்டேயே பணம் கேட்டதும் தெரியும்.”

“உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சுருக்கு.”

“தெரியும் மச்சான். ஒரே ஒரு ரெக்குவஸ்ட். ஜஸ்ரா என்ன செஞ்சாலும் பொறுத்துக்குங்க. அவ உங்களை ஏத்துக்க மாட்டாள். சுத்தமாக இதில் அவளுக்கு விருப்பமில்லைனு தெரியும். கஷ்டப்படுவீங்க. ரொம்ப வாலுதான். ஆனால் நல்ல மனசு மச்சான்.”

“ஓகே மச்சான். ஆயிரம் இருந்தாலும் அவதான் என் பொண்டாட்டி. அவளை விட்டுப் பிரியவோ கஷ்டப்படுத்தவோ எனக்கு ஐடியா இல்லை. தாலி கட்டுனதுக்குப் அப்புறம் அவதான் இனி எனக்கு எல்லாமே.”

“ரொம்ப சந்தோஷம் மச்சான். அவ உங்களை விட வேற யாருகிட்டேயும் ரொம்ப பாதுகாப்பாக இருக்க முடியாது. அவளுக்காக நீங்க இன்னும் என்ன செஞ்சுருக்கீங்கனு அவளுக்குத் தெரியாது. அது தெரிஞ்சால் உங்கிட்ட ரூடா நடந்துக்க மாட்டாள்.”

“மச்சான் அப்ப குளோஸ் ரிலேட்டிவ்னு செஞ்சது. இப்ப என்னோட முதல் சொந்தமே மகாஜஸ்ரா மட்டும்தான். நான் உனக்கு இதெல்லாம் செஞ்சேனு சொல்லிதான் அவளுக்கு என்னைப் பிடிக்கனும் கிடையாது. எதுவுமே இல்லாமல் என்னை அவளுக்குப் பிடிக்கனும். அது கொஞ்ச நாளில் நடந்திரும். நீங்க எப்படியாவது மயூ கூட சேர்ந்தால் மட்டும் போதும். இன்னிக்கு குல தெய்வக் கோயிலுக்குப் போறோம். டைம் ஆச்சு.”

சிவ சேகரனும் விடை கொடுக்க அழைப்புத் துண்டிக்கப்பட்டது. உடனே வேகமாக மகிழுந்தில் ஏறினான் விஜயன்.
அவன் அருகே அமைதியாக கண்களை மூடியபடி அமர்ந்திருந்தாள் மகாஜஸ்ரா. அவள் மூடிய விழிகளை ரசித்துப் பார்த்தான்.

‘பேரழகிதான்.’ என மனதுக்குள் தோன்றாமல் இல்லை.
சொந்த ஊரை நோக்கி தன் பயணத்தை தம்பதிகள் இருவரும் ஆரம்பித்தனர். புயலுக்கு முன் அமைதி போல் ஜஸ்ரா மிகவும் அமைதியாக வந்தாள்.
***
“வள்ளி.. வள்ளி..”
சத்தத்தில் விழிகளைத் திறந்தாள் ஹேமவள்ளி. எதிரில் நின்று கொண்டிருந்தாள் மித்ரவிந்தா.

விழிகளைத் தேய்த்தப்படி எழ முயன்றாள் வள்ளி.
“ரொம்ப நேரமாகியும் நீ எழுந்துக்கவே இல்லைனு சொன்னாங்க. அதான் மாஸ்டர் கீ போட்டு ஓப்பன் செஞ்சேன். எனக்கு ஒரு ஃபைல் எங்க இருக்குனு தெரியனும்.”

மணியைப் பார்க்க அது ஏழைத் தாண்டி இருந்தது.

“சாரி பாஸ்.”

“இட்ஸ் ஓகே. இன்னிக்கு சண்டேதான். நோ பிராபளம். நீ ஃபைல் இருக்கற இடத்தை மட்டும் சொல்லிட்டு ரெஸ்ட் எடு.”
கோப்பு இருக்கும் இடத்தைக் கூறியவள், தயங்கி நின்றாள்.

“என்ன வள்ளி சொல்லு?”

“மேம் இன்னும் டிவண்டி எய்ட் டேஸில் உங்க வெட்டிங்க வருது. அதுக்கு..”

“ம்ம்ம்.. அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆரம்பிச்சுடுங்க.”

எதிரில் இருக்கும் இறைவன் நந்த கோபலனின் புகைப்படத்தைப் பார்த்தாள் மித்ரா. அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் யசோதை மைந்தனின் புகைப்படங்கள் இருக்கும்.
1000267042.jpg

மித்ராவிந்தாவின் திருமணம் நடக்குமா? இல்லை அவளுடைய எதிரி அதை நிறுத்துவானா? இது மித்ராவுக்கு பிடித்த கடவுளான கண்ணனின் விளையாட்டுதான் என்ன?