• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேன்-6

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
170
56
28
Tiruppur
அத்தியாயம்-6

மதியம் மணி பதினொன்று என மித்ராவின் அறையில் இருந்த கடிகாரம் காட்ட, சரியாக ஒலித்தது அவளது அலைபேசி.
திரையில் அவள் தோள் சாய்ந்திருந்த ஒரு பெண்மணி ஒளிர்ந்தார்.

“ஹலோ.”

“மித்து சாப்பிட்டியா?”

“சாப்பிட்டேன்ம்மா. நீங்க?”

“நானும் சாப்பிட்டேன். இன்னிக்கு மறக்காமல் மீட்டிங்க் போயிடுமா. உன்னை மாலதி பார்க்கனும் சொன்னாங்க. அப்படியே மாப்பிள்ளையும் வருவார்.”

“ம்மா..”

“எனக்குப் புரியுதுடா. உனக்கு அந்த ஃபேம்லியைப் பிடிக்காது. ஆனால் நமக்கு இப்போதைக்கு வேற வழி இல்லை. இந்த மெர்ஜர் ரொம்ப முக்கியம்.”

“அம்மா அந்தக் குடும்பம் இல்லாமையும் இதை நாம சரி செய்ய முடியும்.”

“சரி செய்ய முடியும். ஆனால் இவங்க இன்புளுயன்ஸ் இப்ப நமக்குத் தேவைப்படுதே.”

“அம்மா மாலதி ஆண்ட்டியைப் பத்தி பிரச்சினை இல்லை. ஆனால் அவங்க அரைவேக்காட்டுப் பையனை நினைச்சால்தான் பிரச்சினையே. எப்பப் பார்த்தாலும், மித்ரா மித்ரானு வழிசல். எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை.”

“மித்ரா இந்த எங்கேஜ்மெண்ட்க்குக் காரணமே யதுல்க்கு உன்னை ரொம்ப பிடிச்சதுதான். சில சமயம் நம்மளை நேசிக்கறவங்களைக் கல்யாணம் செஞ்சாலும் வாழ்க்கை நல்லா இருக்கும். அவனுக்கு உன் மேல் ரொம்ப பாசம் இருக்கு. சின்ன வயசில் இருந்தே உன்னைப் பிடிக்குமாம். மாலதிக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்.”

மித்ராவுக்கு இந்தத் திருமணத்தில் சிறிதளவும் ஒப்புதல் இல்லை. தொழில் மற்றும் குடும்பச் சூழலுக்காக சம்மதித்து இருந்தாலும் அது அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. பிடிக்காத ஒருவனுடன் அவளுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்கவிருக்கிறது.

எவ்வளவோ செய்யும் மித்ராவுக்கு இந்தத் திருமணத்தில் இருந்து தப்பிக்கும் வழி மட்டும் கிடைக்கவில்லை. எப்படி வாழ நினைத்திருந்தவளின் வாழ்க்கை, இப்படி ஒரு நிலையில் இருக்கிறது.

யதுல் நல்லவன்தான். ஆனால் மித்ராவுக்கு அவன் மேல் காதலில்லை. ஈர்ப்பில்லை. அவள் திருமணம் செய்ய நினைக்கும் வகையறா ஆணும் இல்லை. பிடிக்காத திருமணத்தில் கழுத்தை நீட்ட வேண்டிய சூழல் அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்தது.

“சரி மாம்.”

“கவலைப்படாத மித்ரா. யதுல் உன்னை நல்லா பார்த்துப்பான். நானும் உன்னோட அப்பாவை விரும்பியாக் கல்யாணம் செஞ்சுகிட்டேன். அவரும் நானும் நல்லாதான் வாழ்ந்தோம். அதே மாதிரிதான். நம்மளை மாதிரி வீட்டுப் பொண்ணுங்களுக்கு வாழ்க்கையில் சில சமயம் சாய்ஸ் கிடையாது. இதை மனசார ஏத்துக்கோ. நம்ம குடும்பத்துக்காக இதை நீ செஞ்சே ஆகனும்.”

“ம்ம்ம்ம். ஓகே. எனக்கு இப்ப ஒரு மீட்டிங்க் இருக்கு.”

“சரிடா. அம்மா வைக்கிறேன்.”

அப்போது கதவைத் தட்டியபடி உள்ளே வந்த ராகவனின் கையில் கசப்பான கொட்டை வடி நீர் பானம் அழகான பீங்கான் குவளையில் ஆவியுடன் அந்த அறையில் நறுமணத்தைப் பரப்ப, அது மித்ராவின் நாசிகளில் நுழைந்து, நிம்மதியைக் கொடுத்தது.

“தேங்க்ஸ் ராகவன். எனக்கு வர தலைவலியை இதைக் குடிச்சுதான் போக்க முடியும்.”

“ஹேமவள்ளிதான் இன்ஃபார்ம் செஞ்சாங்க. உங்களுக்கு கரக்டா இதை எடுத்துட்டுப் போக சொல்லி.”

“வள்ளி எப்போதும் வேலையில் கில்லிதான்.” என்றபடி கோப்பையில் இருப்பதை எடுத்துப் பருக ஆரம்பித்தாள்.
ராகவன் எதுவும் பேசவில்லை.

“உட்காருங்க ராகவன்.”
ராகவன் அவள் கூறியபடி அமர்ந்து கேள்வியாய் அவளை நோக்கினான்.

“ராகவன் ஹேமவள்ளி என்ன சொல்றாங்க?”

“இதை நான் எந்த மீனிங்கில் எடுத்துக்கறது மேடம்?”

மித்ரவிந்தாவின் முகத்தில் ஒரு புன்னகை உதித்தது.

“காற்றுள்ள போதே தூற்றிக்கனும் ராகவன். சொல்றது புரியும்னு நினைக்கிறேன்.”

ராகவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

“நீங்க காஃபி குடிச்சு முடிச்சால் நாம கிளம்பலாம் மேம்.”

“ஓகே.”

ஐந்து நட்சத்திர விடுதியில் பட்டுப் புடவையிலும் அமர்ந்திருந்த முதிய பெண்மணி அருகே அமர்ந்திருந்தான் யதுல்.
பார்ப்போர் திரும்பிப் பார்க்கும் அழகு. அவன் பார்த்துக் கொண்டிருந்தது மித்ராவின் புகைப்படம்தான்.

“அம்மா மித்ரா எப்ப வருவா? எப்பப் பார்ப்போம்னு இருக்கு.”

யதுல் பணக்கார வீட்டுப் பையன் என்றாலும் அம்மா சொல் தட்டாத பிள்ளை. அன்னை சொல்வதை அப்படியே செய்யும் மாம்மா பாய். அவன் அன்னை மாலதியும் அதற்குச் சளைத்தவர் இல்லை. யதுல் கண்ணைக் காட்டினால் காலில் கொண்டு வந்து போட்டுவிடுவார். தன் ஒரே மகனின் மீது உயிரையே வைத்திருப்பவர். அவர் சொல்படிதான் கணவரும் கேட்பார்.

மித்ராவின் குடும்பத்தை முன்பே பழக்கம் என்பதாலும், யதுல் மித்ராதான் தன் மனைவியாக வேண்டும் எனக் கூறியதாலும் இப்போது அவர்கள் எதிரில் போலியாகச் சிரித்தப்படி அமர்ந்திருந்தாள் அவள்.

“மித்ரா அம்மா எப்படி இருக்காங்க?”

“நல்லாருக்காங்க ஆண்ட்டி.”
எதிரில் அவளைப் பார்த்து ரசித்தப்படி அமர்ந்திருந்தான் யதுல்.

மித்ராவுக்கு உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தாலும், வெளியில் காட்டிக் கொள்ள இயலாத சூழல்.

“மித்ரா எப்போதும் என் பையனை நினைச்சுக் கவலை உண்டு. யதுலைக் கைக்குள்ள வச்சே வளர்த்திட்டேன். உன்னளவுக்கு புத்திசாலியும் அவன் இல்லை. அதனால்தான் என்னை மாதிரியே இருக்க நீ அவனுக்கு வைஃபா வரதில், எனக்கு மருமகளாக வரதில் ரொம்ப சந்தோஷம். நீங்க இரண்டு பேரும் பேசி புரிஞ்சுக்கோங்க. நான் கிளம்புறேன்.”

அழகாக தன் மகனின் பாரத்தை தன்மேலும் சுமத்திச் செல்லும் மாலதியை மனதில் மட்டும் கரித்துக் கொட்டினாள் மித்ரா.

‘என் அண்ணன் மட்டும் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை எனக்கு வந்திருக்காது.’ என எண்ணியும் கொண்டாள்.

இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாத நிலை அவளை விரக்தி அடையச் செய்தது. அவர் எழுந்து சென்றதும் யதுல் அவளை நோக்கி வீச்சும் காதல் அம்புகளை சளைக்காமல் எதிர் கொள்ள வேண்டி இருந்தது.

ஒரு வழியாக அவனைச் சமாளித்தவள் அடுத்து நடக்கவிருந்த சந்திப்புக்குச் சென்றாள்.
இதை எல்லாம் நினைத்து இரவில் உலாத்திக் கொண்டிருந்தவளின் புகைப்படங்கள் அவன் கைப்பேசியைச் சென்றடைந்தது. அவன் இரவுகளிலும், விழிகளுக்குள்ளும் நிறைந்திருப்பவன் அவளே. மதியம் மித்ரா சந்தித்தவனின் புகைப்படங்கள் அனைத்தும் அவன் எதிரே வீற்றிருக்க, அவனைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே படித்து முடித்திருந்தவனின் மனம் முழுக்க இந்தத் திருமணத்தை நிறுத்தும் வழி முறைகள் ஓடிக் கொண்டிருந்தது.

மித்ராவின் முகத்திலேயே இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாமல் பணத்திற்காக செய்து கொள்வது அப்பட்டமாக எழுதி ஒட்டி இருந்தது.

அவளின் ஒவ்வொரு முகபாவனையும் அத்துபடி என்பதால் மித்ராவின் போலிப்புன்னகை அவனுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. அவன் மனதில் புதிதாக உருவாகி இருந்திருந்த திட்டம் வன்மத்துடன் கூடிய புன்னகையை முகத்தில் உருவாக்கி இருந்தது.


***

மஹா ஜஸ்ரா மெல்ல படியேறி விஜயனின் அறைக்குச் சென்றாள். இந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் சில முறைகள் அவன் அறைக்கு சென்றது உண்டு. இப்போது நுழையும் போது மனதில் கொஞ்சம் வெறுப்பு மண்டி இருந்தது. விஜயனின் முரட்டுக் குணம் வெளியில் காட்டாவிட்டாலும் அறிந்தே இருந்தாள் மஹா.
இன்னும் புடவையில் இருந்தவள் எப்போதும் போல் தன்னுடைய இரவு உடைக்கு மாற மனம் கெஞ்ச அவளுடைய பெட்டிகள் அங்கு அடுக்கப்பட்டிருந்தது. உடனே அதைச் சென்று திறந்தவளுக்கு விஜயன் இன்னும் அறைக்கு வரவில்லை என்பதே நிம்மதியாக இருந்தது.

பெட்டியைத் திறந்தவளுக்கு ஆசுவாசுமாய் அவளுடைய டீசர்ட்டும், பைஜாமாவும் காட்சி அளிக்க, ஒரு நிம்மதி பெருமூச்சு அவளிடம் இருந்து எழுந்தது. விரைவாக அதை எடுத்துக் கொண்டவள், தன் நகைகளைக் கழற்றி அங்கிருந்த மேசையில் வைத்தாள்.

ஒட்டியாணத்தையும் கழற்றியவளுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. முன்புறம் இருந்த புடவையை உதறியபடி இடையை நீவியபடி உடை மாற்றும் அறைக்குச் சென்றவள் புடவை கலையாமல் காப்பாற்றும் ஆபத்துதவிகளான பின்னூக்குகளைக் கழற்ற ஆரம்பித்தவள் மாராப்பைக் கழற்றித் தரையில் போட்டாள்.

“இந்த பிளவுசில் மூச்சே விட முடியவில்லை.” என நினைத்தப்படி அதைக் கழற்றும் முன்னே இடையில் ஒரு பூத்துவாலையும், கழுத்தில் இருக்கும் பூத்தூவாலையில் தலையைத் துவட்டியபடி அந்த அறைக்குள் நுழைந்தான் விஜயன்.

அவன் கருத்த தலை முடியில் இருந்து நீர் துளித் துளியாகச் சொட்டிக் கொண்டிருந்தது. அவனுடைய படிக்கட்டுத் தேகத்தில் நீர்த்துளிகள் தாமரை இலை நீராய் ஓட்டிக் கொண்டிருக்க, கிரேக்கச் சிற்பம் போல் வந்து கொண்டிருந்தவன், சட்டென தன்னுடைய அறையில் வந்த நறுமணத்தில் தலையை நிமிர்த்தியவனுக்கு தன் மனைவி நின்றிருந்த கோலம் விழிகளில் விழத் தானாக விழிகள் விரிந்தது.
அப்போது ஜஸ்ராவும் சரியாக அவனைப் பார்த்துவிட இருவருமே திகைத்து நின்று விட்டனர். முதலில் தெளிந்தது விஜயன்தான்.

“சீக்கிரம் மாத்திட்டு வா ஜஸ்ரா.” அவன் பாட்டுக்கு இயல்பாய்க் கூறிச் சென்றுவிட ஜஸ்ராவால் அதில் இருந்து மீளவே முடியவில்லை.

அவன் வெளியே சென்றதும் சட்டென உடையை மாற்ற ஆரம்பித்தாள். ஆரம்பித்தவள் தயங்கியபடியே மீண்டும் படுக்கை அறைக்குள் நுழைய, டிராக் பேண்ட், டீசர்ட்டில் கைப்பேசியைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் விஜயன்.

“வா ஜஸ்ரா. பால் இருக்கு எடுத்துக் குடி.”

அவள் அப்படியே நின்றுவிட, “எனக்கு இது எதுவும் வேண்டாம்.” என்றாள். கைப்பேசியை விட்டு நிமிர்ந்தவள் அவள் அருகில் எழுந்து வந்து அவள் தாடையை லேசாகா ஒரு விரலால் நிமிர்த்தியவன், “எது வேணாம் ஜஸ்ரா?” என்றான்.

“எதுவுமே வேண்டாம். குறிப்பா நீங்க.”

“அதுதான் தெரியுமே. ஆனால் எனக்கு என்னோட வைஃபைத் தவிர யாரையுமே வேண்டாம்.”


சட்டென இதுவரை அவனைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்வையைத் தவிர்த்திருந்தவள், சட்டென அந்தக் காரியத்தைச் செய்திருந்தாள். தனுர் விஜயனே அவள் செய்த காரியத்தில் அதிர்ந்து நின்றிருந்தான்.

இறங்குவாள்...