"நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேல் ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா"
இந்தப் பாடல் ஞாபகம் வந்ததும் குழந்தையின் கண்கள் பனித்தது. அம்மா நிலாவைக் காட்டி இந்தப் பாட்டுத்தான் பாடிக்காட்டுவாங்க. அதனாலோ என்னவோ குழந்தைக்கு அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அப்போலாம் இவ்ளோ பெரிய வீடு இல்ல. ரொம்பக் குட்டியா ஒரு ஓட்டுவீடு. ஆனாலும் எவ்வளவு நெருக்கமா இருந்திச்சு அவங்களோட உறவு. இப்போ ஏதோ அந்நியமான மாதிரி.... முற்றத்தில் அம்மாவின் மடியில் இருந்து, நிலாவைப் பார்த்தபடி, அம்மா ஊட்டிவிடும் சாதத்தில் தான் எத்தனை ஆனந்தம்? அச் சிறுவீட்டில் வாழ்ந்த எத்தனை எத்தனையோ நினைவுகள் இன்று வெறும் கனவுகளாய்.....
அன்றொருநாள்.....
குழந்தையை அறையில் தூங்க வைத்துவிட்டு சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள் பூர்விகா. தனது வேலை முடித்ததும், சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் ஞாபகம் வந்தது; அன்று பௌர்ணமி. அவர்கள் வீடு நேர்த்தியாக இருக்கவில்லை. சுவர்களிலும், ஓடுகளில் ஆங்காங்கேயும் சிறுசிறு ஓட்டைகள் இருந்தன. எது எவ்வாறாயினும், குழந்தை நித்திரை கொள்ளும் அறையில் எந்தப் பூச்சிபூரானும் உட்புகாது கவனமாக வைத்திருப்பாள் பூர்விகா. பௌர்ணமி நிலவின் ஔி ஓட்டினூடே புகுந்து குழந்தையின் முகத்தில் விழும் போது அதன் முகம் ஜொலிக்கும். அந்த நேரத்தில் குழந்தை துயில் கொள்ளும் அழகைப் பார்க்க வேண்டுமே.... அதைக் காணக் கண் கோடி வேண்டும். அதைக் கண்ட பூர்விகாவின் தாய்மை உள்ளம் பித்தம் கொள்ளும். அவ்வழகைக் காண விரைந்தோடினாள், குழந்தையைத் துயில் கொள்ள வைத்த அறைக்கு. சென்றவளுக்கு அதிர்ச்சி. அங்கே பௌர்ணமி நிலவின் கதிர் உள்ளே நுழைந்து குழந்தையின் இடத்தை ஆக்கிரமித்திருக்க, தூங்கியிருந்த குழந்தையைக் காணவில்லை. பூர்விகாவுக்கு ஒருமுறை இதயம் நின்று துடித்தது. "ரிஷ்வி ரிஷ்வி" எனச் சத்தமாக அழைத்தபடி வீட்டை அலசியவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. வீட்டில் எங்கும் குழந்தையைக் காணாது திகைத்தவள், முற்றத்திற்கு ஓடினாள். அங்கே திரும்பி நின்றிருந்தபடி நிலவை ரசித்துக் கொண்டிருந்தது குழந்தை. சேயைக் காணாது தவித்துப் போயிருந்தவளுக்கு குழந்தை அவ்வாறு நின்றிருந்தது நிம்மதியையும், ஒருசேரக் கோபத்தையும் தர "ரிஷ்விகா ஆஆஆ" எனக் குரலை உயர்த்தி அதட்ட, திடுக்கிட்டுத் திரும்பினாள் ரிஷ்வி. திரும்பியவள் தனது பிஞ்சு விரலை வான் மதியை நோக்கி நீட்டிக்காட்ட... அவளின் வதனத்தைப் பார்த்த பூர்விகா மதி மயங்கித் தான் போனாள். ஊரெல்லாம் நிசப்தமாக மயான அமைதியைத் தழுவி இருக்க, நிலவு வெளிச்சத்தில் அக்கம்பக்கம் தெள்ளத்தெளிவாகத் தெரிய, அதில் ஒரு குட்டித் தங்கப் பெட்டகம் மினுங்குவதைப் போல் நின்றிருந்தது குழந்தை.
குழந்தையைத் திட்டி வீட்டினுள் அனுப்ப நினைத்து வந்தவள், அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டு, சட்டெனத் தாவி அணைத்துக் கொண்டாள். 'சாரிடா கண்ணா. அம்மா பிள்ளையைத் திட்டுவனோனு பயந்திட்டியா? நீ என்னோட உயிர்டா. அம்மா இருக்கிறதே உனக்காகத் தான்டா; உனக்காக மட்டும் தான். அறைல உன்னக் காணாததும் அம்மாக்கு ஒண்ணுமே புரியல. ரொம்பப் பயந்து போய்ட்டன். நீ இல்லனா நானே வெறுமை தான்டா. சாரி செல்லம். சாரி குட்டிம்மா.'
அவள் கூறும் அத்தனையையும் விளங்கிக் கொள்ளும் வயதில்லை குழந்தைக்கு. ஆனாலும் தாயின் கலக்கத்தைப் புரிந்துகாெண்டு அவள் முதுகை ஆதரவாக வருடிவிட்டது. குழந்தையை மேலும் தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டாள் பூர்விகா.
காலம் எவ்வளவு வேகமாகப் போய்விட்டது. 'அன்று என்னைக் காணவில்லை என வேதனையில் கலங்கிய அம்மா.... இன்று நான் கண்ணில் படவில்லையென்றால் சந்தோசமாக....' நினைக்க நினைக்க வலித்தது ரிஷ்விக்கு. 'முன்ஜென்ம ஞாபகம் வரலனாலும், என்னோட பாசம் புரியலயாமா உங்களுக்கு? நீங்க கஸ்டப்படனும்னு நினைச்சு நான் ஒண்ணு செய்வனா? என்னோட தப்புத்தான்மா. உங்களுக்கும் அகரன் மாமாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க விட்டிருக்கக் கூடாது. உங்களுக்கு லவ் இல்லாததால நீங்க நிச்சயதார்த்தத்துக்கு ஓகே சொல்ல மாட்டீங்கனு நினைச்சிட்டன். ஆனா இது இப்பிடிப் போகும்னு நினைக்கல. அதோட நீங்க அவரை விரும்பி.... சேராமப் போனதுக்கும் காரணம் இருக்கு. எத்தனையோ பேருக்கு நன்மை பயக்குற காரணம். ஒருநாள் புரிஞ்சுப்பீங்க.
நான் தூங்குற இடம்னு சொன்னதுக்காக நான் இருந்த மாமரத்தையே வெட்ட சொன்னீங்கல? எவ்ளோ வலிச்சுது தெரியுமா எனக்கு? இன்னொரு தடவ சாகலாம் போல இருந்திச்சு. இதே நீங்கதான், நான் நோகாமத் தூங்கணும்னு உங்க சேலையெல்லாம் அடுக்கடுக்காப்போட்டு மெத்தை மாதிரிச் செஞ்சு அதில என்னைப் படுக்க வைப்பீங்க. உங்களுக்கு அதெல்லாம் நினைவே இல்லல. உங்க மேல தப்பில்லமா. எனக்கும் வேற வழியில்லை. ஐ லவ்யூமா. ஐ லவ் யூ சோ மச். நீங்களாக் கேக்காத வரை உங்க முன்னாடி நான் வரமாட்டன்.'
விடிந்து கொண்டிருந்தது. அதுவரை அங்கு உருவமாக நின்றிருந்த குழந்தை தேய்பிறையாய்த் தேய்ந்து அருவமாகவும், மித்ரன்,ஆதிரா,இனியன் மற்றும் கலைவாணி கேட்டைத் (gate) திறந்துகொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.
'ஓரளவு பெரிய வீடாத்தான் கட்டிட்டு இருக்கோம்மா. தொடர்ந்து இங்க இருப்பமோ என்னவோ தெரியல. கட்டுற வீட்டை ஒழுங்காக் கட்டினா பிரச்சினை இல்லல. கொஞ்சம் விடிஞ்சாத்தான் முழு இடமும் சுத்திப் பாக்க முடியும். நீங்க வேளைக்குக் கிளம்பணும்னு சொன்னதால தான் வேளைக்கு வர வேண்டியதாப் போச்சு.' - மித்ரன்.
'அதில என்னப்பா. இன்னொருநாள் ஆறுதலா வந்து பாத்தாப் போச்சு. நீங்க சந்தோசமா இருந்தாலே போதும். திடீர்னு இனியன் உங்களைப் பாக்க வரணும்னு கேட்டதால அடுக்கா வரல. அங்கயும் எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கு. சோ வேளைக்குப் போகணும். அடுத்த தடவை வரும் போது ஒரு வாரமோ பத்து நாளோ தங்குற மாதிரி வர்றோம்.'
'சரிம்மா'
அனைவரும் வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தபடி நிற்க, அங்கு விஸ்தாரமாய் நின்றிருந்த மாமரத்தனருகே சென்றார் கலைவாணி. மெதுவாகத் தன் மென்விரல்களால் அதை வருடியவருக்குக் கண்கள் பனித்தது. 'எங்கம்மா போய்ட்ட? இப்போ இருந்திருந்தா என் பொண்ணோட வயசிருக்குமே உனக்கு? சின்ன வயசிலேயே எவ்வளவு வலிகள அனுபவிச்சிட்ட? இனிமே நீ சந்தோசமா இருக்கணும்மா. உன்னோட ஆத்மா சாந்தியடைய என்ன வேணாலும் செய்ய நான் தயாரா இருக்கன்டா. ஆனா என்னதான் செய்யணும்? அதை என்கிட்டச் சொல்லலாமே. என்னோட பூர்வி தான் இப்போ என் பொண்ணு ஆதிராவா? என் பூர்வியோட.... என் பொண்ணோட பொண்ணா நீ? ஏன்டா இப்போல்லாம் முன்னாலயே வரமாட்டியாம்? பாக்கணும் போல இருக்கு உன்னை...', மெல்லிய குரலில் குமிறிக் கொண்டார் கலைவாணி.
அவரது தொடுகை, அருவமாக நின்றிருந்த ரிஷ்விக்குப் பெரும் ஆனந்தத்தை அளித்தது.
ஆனால் தூரத்தில் நின்று இதைப் பார்த்த ஆதிராவுக்கு நெஞ்சு குமுறியது. அவளுக்குத் தாய் பேசிய எதுவும் கேட்கவில்லை. குழந்தையையும் காணவில்லை. ஆனால் தாய் அந்த மரத்தை ஆதரவாக வருடியது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் அந்த மரத்தையே வெட்டி எறிய நினைத்தவளல்லவா?
'இத்தனை காலத்தில் அம்மா மாறியிருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன். அப்படி என்னத்தைத்தான் கண்டார்கள் அந்தக் குழந்தையிடம்? என்னை விட அதுதான் முக்கியமா அவர்களுக்கு? காதலின் வலியை உணர்ந்தால் தானே?' என்றெண்ணியவள் அதற்குமேல் அங்கு நிற்கப் பிடிக்காமல் அவ்விடம் விட்டு அகன்றாள்.
சிறிது நேரம் கழித்துக் கலைவாணி வந்து நின்றது ஆதிராவினிடத்தில்தான். 'ஆராமா! நீ இப்போதான் எங்க கூடவே பேச ஆரம்பிச்சிருக்க. அதுக்குள்ள நான் புத்திமதி அது இதுனு சொல்ல வெளிக்கிட்டா கோபம் வரத்தான் செய்யும். ஆனாலும் என் பொண்ணோட கோபத்தை விட அவளோட வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்னு நினைக்கிறதால சொல்றன். உனக்குக் கடவுளாப் பாத்து அனுப்பி வச்சது மித்ரனைத் தான்மா. அதனால நீ அந்த வாழ்க்கையை ஏற்று வாழப்பழகுறது தான் நல்லம். மித்ரனைப் பற்றி ஆரம்பத்தில அவ்ளோ தெரியாது எனக்கு. ஆனா இப்போ நல்லாப் புரிஞ்சுக்கிட்டன். அவனை மாதிரி ஒருத்தன் புருஷனா வரக் குடுத்து வச்சிருக்கணும்மா. அகரனை நாங்க கைவிட்டிட மாட்டோம். அவனுக்குனு நல்லவொரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேண்டியது எங்க பொறுப்பு. உன்னோட வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்க வேண்டியது உன்னோட பொறுப்பும்மா.'
'அந்த மாமரத்துக்குக் கிட்டப் போய்க் கொஞ்சிக்கிட்டு நின்னீங்களே அந்தப் பிசாசு ஏதாவது சொல்லிச்சா? அகரனை யாரும் தூக்கி விடணும்னு இல்ல. உண்மையான காதல்ல தோத்துப்போன யாருமே உடனே மாறிட மாட்டாங்க. அதுக்குக் காலம் தான் மருந்து. என்னோட அக..... சாரி அகரனும் ஒருநாள் மாறுவார். கல்யாணம் பண்ணிப்பார். அப்போகூட எனக்குக் கொஞ்சம் பொசெஸ் (possess) ஆகத்தான் செய்யும். ஏன்னா, என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில எனக்கு மட்டுமே சொந்தம்னு அவரை நினைச்சிட்டிருந்தவள் நான். அப்பிடிப்பட்டவரை அவ்ளோ ஈசியா (easy) இன்னொருத்தங்களுக்கு விட்டுக் குடுக்க முடியாதில்ல. ஆனா என்னோட மனசும் மாறும்னு நம்புறன். மித்ரன் விருப்பம்னா என் கூட இருக்கலாம். இல்லனா அவருக்கு.... (சொல்லும் போதே அன்றொருநாளின் வாக்குவாதம் நினைவுக்குவர அந்தக் கதையை அப்படியே விட்டு விட்டாள்.) பாக்கலாம்மா. காலம் மாறும்னு நம்புவோம்.
'குழந்தையைப் பிசாசுனு சொல்லாத ஆரா. அப்புறம் என்னை மனுஷியாப் பாக்க மாட்ட. காதலோட வலி..... காதலோட வலினு சொல்றியே. அப்பிடி எவ்ளோ காலம்தான் லவ் பண்ணீங்க? ஒத்துக்குறேன். என்னதான் கொஞ்சக்காலம் வாழ்ந்திருந்தாலும் காதல் காதல்தான். ஆனாலும் அவ்ளோ காலத்தில எத்தனை மெமரீஸ் உங்களுக்குள்ள இருந்திச்சோ.... அதை விட அதிகமான மெமரீஸ் இருக்கு எனக்கு; உங்கப்பா கூட. உங்கப்பா நம்மள விட்டுப் போகும்போது நீங்க ரெண்டு பேரும் சின்னப் பிள்ளைங்க. எங்க உங்களுக்கு முன்னால அழுது என்னோட வேதனையை உங்களையும் கஷ்டப்படுத்துமோனு நினைச்சு..... தனியாத்தான் அழுவன். எவ்ளோ பெரிய வலி தெரியுமா நம்ம கஷ்டத்தில நமக்குனு ஒரு உறவு இல்லாம இருக்கிறது? காதலோட வலியை எனக்குச் சொல்லித் தாறியா நீ? லவ் மரேஜ்ல தான் லவ் இருக்கணும்னு இல்ல. அரேஞ் மரேஜ்லயும் லவ் இருக்கும். உங்கப்பாவும் நானும் எப்பிடி இருந்தோம் தெரியுமா? உனக்கு ஒரு பிரச்சினை. உன்னோட லவ் சேரல. உன்னோட வலியப் பகிர்ந்துக்க நாங்க எத்தனை பேர் இருக்கோம்? நான், இனியன், அபி, உன்னைப் பிள்ளையாவே பாக்குற அபியோட அம்மா, போதாக்குறைக்கு இப்போ பூரணி, சந்திரன் அண்ணா.... எனக்கெல்லாம் என்னோட வேதனையை சொல்றதுக்குக் கூட யாரும் இருக்கல. நீங்க சின்னப் பிள்ளைங்க எண்டதால உங்கக் கிட்ட சந்தோசமாக இருக்கிற மாதிரி வேற நடிக்கணும்;
எல்லாத்துக்கும் மேல உன் புருஷன் இருக்கான் உனக்கு. அவனை விட ஒரு சப்போட் வேணுமா? அவன மாதிரி ஒருத்தன் எத்தனை பேருக்குக் கிடைப்பான்? உங்க கல்யாணம் முடிஞ்சப்போ எனக்கு அப்பிடிப் பயமா இருந்திச்சு. முன்ன பின்ன தெரியாத ஒருத்தனுக்கு என் பொண்ணக் குடுத்திட்டனே; அவளோட வாழ்க்கை எப்பிடி இருக்குமோனு. யாருமறியாம வந்து என் கையைப் பிடிச்சு சொன்னான்; 'உங்க பொண்ணுக்கு நான் இருக்கன். அவளோட சந்தோசம் தான் என்னோட சந்தோசம். என்னைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னா அகரன்ட கேளுங்க. அவன் சொல்லுவான். ஆரா, அகரனுக்கு கிடைக்காத வேதனையையும் தாண்டி அவனோட முகத்தில ஒரு நிம்மதி தெரியுதுன்னா.... அதுக்குக் காரணம், அவ இன்னொருத்தனுக்கு மனைவியானாலும், அந்த இன்னொருத்தன் நானா இருக்கிறது தான்மா. நீங்க என்னை நம்பலாம். உங்க பொண்ணோட சந்தோசத்தை நான் உங்களுக்கு கண்ணுல காட்டுவன்; என்னோட மனைவியா.' என்று சொல்லித்தான் வந்தான். அதுக்காகக் கஷ்டப்பட்டிட்டும் இருக்கான். உன்னால புரிஞ்சுக்க முடியுதோ தெரில. ஆனா எனக்கு நல்லாப் புரிஞ்சுக்க முடியுது; உன்னைப் பாக்கும்போது அவனோட கண்ணுல இருக்கிற ஏக்கம் இருக்கே...... ஒரு வேள நீ அவனை விரும்பினா... அவன் எவ்வளவு குடுத்து வச்சிருப்பானோ தெரில. ஆனா நீ ரொம்பக் குடுத்து வச்சிருப்ப. அப்பிடி ஒருத்தனோட வாழுறதுக்கு.
அந்தக் குழந்தையோட அம்மாவ நினைச்சுப் பார். உன்னோட அகரனை நீ சேரலனு கவலைப் பட்ற. ஆனா அவ? அவளோட புருஷன இழந்து.... அந்த வலிய யாருக்கிட்டவும் பகிர்ந்துக்க முடியாம.... ஒரு குழந்தைய வேற வச்சுக்கிட்டு எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா? கடைசியா, எந்தப் பொண்ணும் தன்னோட மானத்தை இழக்க விரும்ப மாட்டா. அவ தன்னோட மானத்தையும் இழந்து.... அப்பிடி ஒரு சாவு நம்ம எதிரிக்குக் கூட வரக்கூடாது. அந்த சாவ கண்ணால பாத்த அந்தக் குழந்தைய யோசிச்சுப் பார். என்ன காரணம்னு எனக்குத் தெரியல. ஆனா அந்தப் பொண்ணு செய்ற எல்லாத்துக்கும் காரணம் இருக்கும். உன்னோட வாழ்க்க உன்னோட கைல'.... வாணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தனர் இனியனும் மித்ரனும்.
பின் அனைவரும் சேர்ந்து பூரணி வீட்டை அடைந்து.... காலை உணவை முடித்தபின், இனியனும் வாணியும் தமது ஊருக்குப் புறப்பட்ட..... மித்ரனை அர்த்தமாகப் பார்த்துக் காெண்டாள் ஆதிரா.