• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்பியல் பாகம் 1

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
194
78
28
Maduravoyal
தொடர்பியல்.... பாகம் -1
கேஸ் -1 (சங்கவி - கிஷோர்)
சங்கவி..... என்று அவனுடைய குரல் கேட்டதும் அலறி அடித்து கொண்டு பாத்ரூமுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டாள். வேகமாக மூச்சு இரைத்தது.... பயந்தவாறே பாத்ரூம் கதவருகில் நின்று கொண்டு இருந்தாள்.
சங்கவி.... இப்போது அவனுடைய குரலில் சற்று கோபம் அதிகமானது.
எவ்வளவு நேரம் ..... என்றான்.
கிஷோர்.... இருங்க இதோ வரேன்........ என்று சொல்லி மூச்சை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு.... என்னடா இது புருஷன் ஒரு வாரம் கழிச்சு ஊர்ல இருந்து வந்திருக்கானே.... அவனை சந்தோஷ படுத்துவோம்னு இருக்கா....
இப்போ வேண்டாம் கிஷோர்.... பிளீஸ்....
ஏன்.... பீரியட்ஸா....
இல்ல இல்ல.... அதெல்லாம் இல்ல.... இப்போ வேண்டாமே........ என்றாள்.
அவளை பின்புறமாக இறுக்கமாக அணைத்து கொண்டு கட்டிலில் தள்ளி அவளுடைய கைகளை பின்னால் முறுக்கி.... அவளுடைய பின் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
என்னடி...என்ன ஆச்சு உனக்கு.... நான் ஊருக்கு போகும் போது.... என்னம்மா பேசுன.... ஏங்க என்னை விட்டு விட்டு போகாதீங்க.... எப்படி ஒரு வாரம் நீங்க இல்லாம நான் இருப்பேன்.... நீங்க வர வரைக்கும் எனக்கு இந்த ஊரே நரகம் போல இருக்கும்னு.... எல்லாம் சொன்ன....
கிஷோர்.... கையை விடுங்க வலிக்குது.... பிளீஸ் விடுங்க....
சரி கையை விட்டுட்டேன்.... இப்போ சொல்லு போன வாரம் வரைக்கும் நல்லா தான இருந்த.... இப்போ என்னாச்சு உனக்கு.... எதுக்காக என் கிட்ட இருந்து விலகி போற....
ஒண்ணும் இல்ல.... அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல....
அப்போ இந்த ஒரு வாரத்தில வேற எவனையாவது புடிச்சிட்டியா.... ஹூம்.... சொல்லுடி.... என்று சொல்லி மறுபடியும் அவளுடைய கையை பிடித்து முறுக்கினான். ரெண்டு நாளாக உனக்கு கால் பண்றேன்.... கட் பண்ற.... மெஸேஜ் பண்ணா ரிப்ளை பண்ணல.... எவன் கூடவாவது படுத்து கொண்டு இருந்தியா?.....
கிஷோர்...கோபமாக கத்தினாள் சங்கவி..... என் மேல அபாண்டமா பழி போடாதீங்க.... நீங்க பண்ற தப்பை மறைக்க என் மேல வீண் பழி போடறீங்களா?
ஓ.... இப்போ புரிஞ்சிடிச்சு.... என்று சொல்லி அவளை திருப்பி அவளை சுவற்றில் சாய்த்து நிற்கவைத்து.... அவளுடைய கழுத்தை பிடித்து கொண்டு....
என்னை பத்தி எல்லாமே தெரிஞ்சிடிச்சா.... என்று சொல்லி அவள் முகத்தருகில் சென்று கேட்டான்.
அமைதியாக இருந்தாள்.
அப்போ.... எல்லாமே தெரிஞ்சிடிச்சு.... இல்ல....
ஆமாம்.... நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே என் சொத்துக்காக தான.... உங்க காதலி ரோஸி போட்டு கொடுத்த பிளான் தான இது. அது மட்டுமில்ல நீங்க இப்போ போனது பிஸினஸ் டிரிப் இல்லை.... ரோஸியும் நீங்களும் ஒண்ணா.... என்று சொல்லும் போதே அவளுடைய வார்த்தை திக்கியது.... அழுகை வந்தது.....
ஓ.... என் ரோஸி பத்தி கூட தெரிஞ்சிக்கிட்டியா?.... செம ஸ்மார்ட் தான் டி நீ.....
பிளீஸ் கிஷோர் என்னை விட்டிடுங்க.... நான் போயிடறேன்..... நீங்க உங்க ரோஸி கூட சந்தோஷமா இருங்க..... என்றாள் சங்கவி.
சொத்தை எல்லாம் என் பேர்ல எழுதி வச்சிடு.... நானே உன்னை அனுப்பிடறேன்.
இல்ல கிஷோர்.... எந்த சொத்தும் என் பேர்ல இல்ல.....
பின்ன யார் பேர்ல எழுதி வச்சிட்டு போயிருக்கான் உன்னோட அப்பன்..... என்றான் கோபமாக.
அது எனக்கு தெரியாது.....
என்னது தெரியாதா?..... என்று சொல்லி அவள் கழுத்தை நெறித்தான்....
வலி தாங்கமுடியாமல்.... கிஷோர்...... விடு.... என்று அலறினாள்.
பிறகு அவளை மறுபடியும் கட்டிலில் தள்ளி அவளுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அடித்து விட்டான்..... ஒழுங்கா உங்க அப்பனோட லாயருக்கு ஃபோன் பண்ணி கேளு..... இல்ல அவ்வளவுதான்.... என்று சொல்லி விட்டு சிகரெட் பாக்கெட்டையும் , ஃபோனையும் எடுத்து கொண்டு வெளியே சென்றான்.
கன்னத்தில் அவன் அடித்த வலியை விட அவள் ஒராண்டு காலமாக அதுவும் போன வாரம் வரை யாரை உயிராக நினைத்தாளோ.... யாரை தன் உலகமாக நினைத்தாளோ அவனே இன்று அவளை ஏமாற்றிய வலி தான் அவளால் தாங்க முடியவில்லை. இது அனைத்தும் கெட்ட கனவாக இருக்க கூடாதா என்று நினைத்து கொண்டாள் சங்கவி.
லாயருக்கு கால் செய்தாள். தன் அப்பாவின் உயிலை பற்றி கேட்டாள்.
சங்கவி.... உன்னோட அப்பா உனக்கும் கிஷோருக்கும் பிறக்க போகும் குழந்தைக்கு சொத்தை எழுதி வைத்திருக்கிறார் மா.... லீகல் டாகுமெண்ட்ஸ் உன்னோட மெயில் ஐடிக்கு அனுப்பி இருக்கேன்.... பார்த்துக்கோ....என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் லாயர்.
தன் மொபைலை ஓப்பன் செய்து மெயிலில் படித்தாள். அதில் சங்கவிக்கோ கிஷோருக்கோ குழந்தை பிறக்கும் முன்பே விவாகரத்தோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அனைத்து சொத்துக்களையும் சில்ட்ரன் டிரஸ்ட்க்கு போகும் படி எழுதி வைத்திருந்தார் அவளுடைய அப்பா.
அச்சச்சோ.... இது மட்டும் கிஷோருக்கு தெரிஞ்சா.... அவ்வளவுதான்.... அவன் கூட சேர்ந்து வாழவே பிடிக்கல.... இப்போ குழந்தை வேற பெத்துக்கனுமா?.... நாம உயிரோடு இருந்தால் தான குழந்தை பிறக்கும்.... சொத்திற்காக பெற்ற குழந்தையை கூட கொலை செய்ய துணிவான் இந்த கிஷோர். அது நடக்கக் கூடாது என்று நினைத்து கொண்டே கத்தியை எடுத்து தன் கை நரம்பை அறுத்து கொண்டாள். சாரி ராகினி.... நான் உன்னை அப்போ நம்பல.... இப்போ நம்பறேன்..... ரத்த வெள்ளத்தில் சங்கவி தரையில் விழுந்தாள் .
அலறி அடித்து கொண்டு எழுந்தாள் ராகினி. தன் பக்கத்தில் இருக்கும் டேபிளில் மேல் வைத்து இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள். தன் மொபைலை எடுத்து டைம் பார்த்தாள் மணி 3.30. கனவா?.... யாரு இந்த சங்கவி? யாரு இந்த கிஷோர்?.... இவங்க ரெண்டு பேரையும் நாம பார்த்தது கூட இல்லையே.... நிஜமாகவே நடந்தது போல இருக்கே.... என் கிட்ட ஏன் சாரி சொல்றாங்க சங்கவி.... ஒண்ணுமே புரியலையே.... என்று தலையில் கையை வைத்து யோசித்து கொண்டே இருந்தாள். மணி 5 ஆகிவிட்டது.... தூக்கம் வரவில்லை மாறாக தலைவலி வந்துவிட்டது.
பொதுவாக கனவு வந்தால் மறுநாள் அதை பற்றி நமக்கு மறந்து போகும். ஆனால் இந்த சங்கவி கிஷோரின் முகம் ராகினிக்கு நன்றாகவே நினைவில் இருந்தது.
நம் கதாநாயகி ராகினி 25 வயது பெண். ஃபாரின்சிக் டிபார்ட்மெண்டில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறாள். தன்னுடன் காலேஜில் படித்த மாதவனும் இவளும் மூன்று வருடங்களாக காதலிக்கிறார்கள். மாதவன் போலீஸ் டிபார்ட்மெண்டில் சர்க்கில் இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறான். அவன் சிபாரிசு செய்து தான் இவளுக்கு இந்த வேலை கிடைத்தது.
இன்னும் நம்ம ஒரு கேஸ் கூட பார்க்கல.... அதுக்குள்ள இப்படி எல்லாம் கனவு வருதே.... யாரு இந்த சங்கவி?.... என்று யோசித்து கொண்டே ஃபேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் சங்கவி என்று பெயரை டைப் செய்து தேடினாள். எதிலேயும் அவளுடைய முகம் இல்லை. பின்னர் சோர்வடைந்து விட்டாள். மாதவனுக்கு கால் செய்தாள்.
ராகினி.... சாரி.... சாரி....லேட் ஆயிடுச்சு இல்ல.....நான் ஒரு பத்து நிமிஷத்துல இருப்பேன்.... என்று சொல்லி விட்டு அவளுடைய பதிலுக்கு காத்திராமல் ஃபோனை வைத்து விட்டான் மாதவன்.
அவன் சொல்லித்தான் மணியை பார்த்தாள். காலை 8.20.....
அச்சச்சோ..... ஃபர்ஸ்ட் டே வேலைக்கு போகனும்.... கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போக சொல்லி மாதவனிடம் கேட்டிருந்தாள். 9.30 க்கு அவள் ஃபாரன்சிக் லேபில் இருக்க வேண்டும். ஃபோனை வைத்து விட்டு அவசரமாக சென்று குளித்து விட்டு ரெடியாகினாள் ராகினி.
மாதவன் வீட்டு வாசலில் வந்து நிற்கும் முன்னர் வேகமாக ரெடியாகி வீட்டை பூட்டிக் கொண்டு வாசலில் வந்து நின்றாள்.
பைக்கை நிறுத்தி விட்டு மறுபடியும்
சாரி டி செல்லம்.....
இதே வேலையா போச்சு டா உனக்கு.... என்று சொல்லி கோபமாக இருப்பதுபோல் நடித்தாள் ராகினி.
அந்த யெல்லோ குர்த்தியிலும் புளூ ஜீன்ஸிலும் அவளை பார்த்த மாதவன் அவள் காதருகில் சென்று....
செமயா இருக்க டி.... உன்னோட ரூம் மேட் ரம்யா தான் வீட்ல இல்லையே பத்து நிமிஷம் உள்ளே போகலாமா?
ஏய்.... உதை வேணுமா.... எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்....
அடியேய் கிஸ் தான் டி கேட்டேன்.... நான் நல்ல பையன்.... நீ என்ன நினைச்ச?.... அடிப்பாவி.... நான் அப்பாவி டி....
ஏய், உன்னை.... என்று விளையாட்டுக்கு அடித்து விட்டு....அதுக்கு எதுக்கு டா பத்து நிமிஷம்?.... என்றாள்.
கிஸ்ஸூக்கு தான் டி பத்து நிமிஷம்.... மத்ததிற்கு எல்லாம் அது பத்தாது.... என்று சொல்லி கண்ணடித்தான் மாதவன்.
சீ போடா.... என்று சொல்லி சிரித்தாள் ராகினி.
கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிளம்பினார்கள். ராகினிக்கு சங்கவி ஞாபகமாகவே இருந்தது. மாதவனிடம் அதை சொல்ல வாயெடுத்தாள். அப்போது அவனுக்கு ஒரு கால் வந்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பேசினான்.
ஓ.... அப்படியா.... இன்னொரு அரைமணி நேரத்தில அங்கே இருப்பேன் சார்.... என்று சொல்லி விட்டு ராகினியை பார்த்து.... சாரி டி ஒரு ஆட்டோ புக் பண்ணி போயிக்கிறீயா?.... அர்ஜன்ட்டா வரச் சொல்லி கால் வந்துச்சு.

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.