• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 01

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
தீரா நதி நீதானடி.!

1
“வேலைக்கு வர்ரதே லேட்டு, வந்ததும் வேலையைப் பார்க்காம கொட்டிக்க வந்தாச்சு, சீக்கிரம் போய் எம்டியைப் பாரு. நீ வந்ததும் உன்னை வந்து பார்க்க சொன்னார்.” என்று தனக்குப் பின்னே கேட்ட சூப்பர்வைசர் அமுதாவின் குரலில் அபிராமிக்கு உடல் தன்னால் இறுகியது.

தன் கையில் இருந்த உணவு டப்பாவை பாதியோடு மூடி வைத்துவிட்டு எம்டி என்ற எம்டன் அல்லது எமன் எப்படியும் வைத்துக் கொள்ளலாம், அவனைப் பார்க்க வேக எட்டுக்களோடு நடந்தாள். இல்லை இல்லை கிட்டத்தட்ட ஓடினாள் என்று சொல்ல வேண்டும்.

அவளது அவசரத்தைப் பார்த்த அமுதா, “எப்படித்தான் இந்த ஆம்பளைங்கள வளைச்சு போடுறாங்களோ தெரியல, முன்னாடி அந்த பெரியவர், இப்போ அவர் பேரன். ச்சீ இந்த பொழப்புக்கு தெருவுல நின்னு பிச்சையெடுக்கலாம், என்ன ஜென்மங்களோ?” என அபிராமியின் காது படவே பேச, அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை அபிராமி.

அவள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவளுக்கான வேலைப்பளுக் கூடிக்கொண்டே இருக்கும். இதில் இந்த அமுதாவிடம் பேசி, நேரத்தைக் கடத்த அவள் என்ன முட்டாளா.? அதோடு அந்தப் பெண் புதிதாக இன்று நேற்றாகவா பேசுகிறாள்.

இந்த சூப்பர் மார்க்கெட்டில் பெரியவர் சிவனேசனின் சிபாரிசின் பேரில் என்று வேலைக்குச் சேர்ந்தாளோ அன்றில் இருந்தே தான் இந்தப் பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் கேட்கிறாள். அதனால் அது ஒன்றும் பெரிதாக வலிக்கவில்லை அபிராமிக்கு.

இப்போதைய அவளது பயம் எம்டி என்ற பெயரில் இருக்கும் அவன்தான். வேகவேகமாக வந்தவள் அந்த மேனேஜிங்க் டைரக்டர் என்ற அறையின் கதவை நாசூக்காகத் தட்டிக்கொண்டு வெளியில் நிற்க, அவளின் முகம் வியர்வையில் குளித்திருந்தது.
தன் முந்தானையால் அதைத் துடைத்துவிட்டு புடவையை சரிசெய்தபடி அவன் பதிலுக்காகக் காத்திருக்க அவன் அழைக்கவே இல்லை.

இதுவும் பழகிப்போன ஒன்றுதான் அவளுக்கு. அபிராமி எப்போதெல்லாம் சாப்பாட்டை கையில் எடுக்கிறாளோ அப்போதெல்லாம் மூக்கு வேர்த்தது போல அவனுக்கு பல வேலைகள் ஞாபகம் வரும். உடனே அழைத்து விடுபவன் அந்த அறைக்குள் மட்டும் உடனே அனுமதிக்காமல் பல நிமிடங்கள் காக்க வைத்தே அழைப்பான்.

அவனுக்கு வேறு ஏதேனும் கோபங்கள் இருந்தாலும், அதையும் அவளிடம் காட்டி, பல நிமிடங்கள் என்பது சில மணி நேரங்கள் என்று கூட நீண்டுவிடும்.. அது அவளின் பசி என்ற உணர்வை மொத்தமாக மரக்க வைத்துவிடும்.

அதுதான் அவனுக்கும் தேவையோ.? இதோ இப்போதும் கூட அவள் உணவை வீணாக்கி தன் அறையின் வெளியே பதட்டத்துடன் நிற்க வைத்திருக்கிறான்.

சிந்தனைகளும் எண்ணப்போக்குகள் அனைத்தும் அவளின் மனதுக்குள்தான். தப்பித்தவறி முகத்தில் அதைக் காட்டமாட்டாள். அப்படியொரு சிறு உணர்வை முகத்தில் காட்டிவிட்டால், அதையும் அவன் பார்த்துவிட்டால் போதும், அன்று முழுவதும் அவளுக்கு நரகத்தைக் காட்டிவிடுவான்.

அபியின் இந்த நிலையை உடன் வேலை செய்பவர்கள் அத்தனை பேரும் பரிதாபமாகவும், பாவமாகவும் பார்ப்பார்களேத் தவிர அவளிடம் சென்று பேசமாட்டார்கள். அப்படி பேசினால் அதற்கும் அவளைத்தான் வதைப்பான். அதை பலமுறை பார்த்தவர்கள், அந்த பரிதாப பார்வையோடு நிறுத்திக் கொள்வார்கள்.

தினம் தினம் நரகத்தைப் பார்ப்பவர்களுக்கு இன்று மட்டும் என்ன புதிதாக நடக்கப் போகிறது என்ற எண்ணம்தான். அதை வெளியில் காட்டாமல், வலித்த காலைத் தடவிக் கொள்ளக்கூட முடியாமல் அவன் அழைப்பதற்காக காத்திருந்தாள் பேதை.

“யெஸ்..” என்ற கம்பீரமான குரலில் வேகமாக உள்ளே வந்தவள் “மார்னிங்க் சார்..” என, அதற்கு அவளைப் பார்க்கவும் இல்லை, ஏன் தலையைக் கூட அசைக்கவில்லை. அந்த வாழ்த்தெல்லாம் அவனுக்குத் தேவையும் இல்லை. அதுவும் அவளிடமிருந்து.

சரி அவனுக்குத்தான் பிடிக்கவில்லையே என்று ஒரு நாள் சொல்லாமல் விட்டாலும், “ஏன் மகாராணிக்கு ஒரு குட்மார்னிங்க் சொல்லக்கூட தெரியாதா.? இதுதான் மேனர்சா, ஒரு முதலாளியைப் பார்க்கும் போது மரியாதைக்காச்சும் விஷ் பண்ணனும் தெரியாது, இப்படித்தான் உன் அப்பன் உனக்கு சொல்லிக் கொடுத்தானா.?” என ஏகத்துக்கும் பேச, அதிலிருந்து ஒருநாள் கூட அவனுக்கு விஷ் செய்யாமல் இருந்தது இல்லை. அவன் கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல, ஏன் நக்கலாக, கிண்டலாக சிரித்தாலும் கூட அவள் நிறுத்துவதில்லை.

“அந்த கடலூர் ப்ராஞ்ச் அக்கவுன்ட் டேலியாகலன்னு ராகவ் கால் பண்ணிருந்தாராமே, போன் எடுக்கலையா.?..” என்றக் கேள்வியில்,

“பஸ்ல வந்துட்டு இருந்தேன் சார், கவனிக்கல. இப்போ பார்த்துடுறேன்.” என மென்று விழுங்கியவளிடம்.

“ஏன் இன்னைக்கும் எவனாச்சும் ரோசையும், க்ரீட்டிங்க் கார்டையும் வச்சிட்டு உனக்காக பஸ்ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணிட்டு இருந்தானா.? அவன் கூட பேசிட்டு வர லேட்டாகிடுச்சா..” என நக்கலாகக் கேட்க, பதிலே சொல்லவில்லை அவள். அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஆனால் விழியில் வழியும் நீரை என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை.

அதைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ அடுத்து ஒன்றும் சொல்லாமல் “மகாராணி இன்னும் இங்கதான் நின்னுட்டு இருக்கப் போறீங்களா இல்ல, போய் வேலையைப் பார்க்க போறீங்களா.. அந்த அக்கவுன்ட் டேலி பண்ணிட்டா அடுத்த வேலையைப் பார்க்கலாம். அப்புறம் ஈவ்னிங்க் நாகர்ல ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்கு. ஸ்டாப்ஸ் எல்லாரும் வருவாங்க.. நீ வருவியா..? என்றான் கிண்டலாக.

“இல்ல.. இல்ல சார் வீட்டுல..” என முடிக்கும் முன்னே “யெஸ் அதுதான் சொல்றேன். அங்கேயும் வந்து என் முன்னாடி நின்னு டென்சன் பண்ணாத. வந்துடாத..” எனச் சீற்றமாகச் சொன்னவன், “அவுட்” என எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் வேகமாக தன் இடத்திற்கு வந்தவள் அவன் கொடுத்த வேலையை வேகமாக முடித்தாள்.

அதோடு அந்த ராகவ் சரியான இம்சை. இவளிடம் பேச்சை வளர்க்கவே தேவையில்லாத வேலையைப் பார்ப்பதாக அடிக்கடி தோன்றும் இன்றும் அப்படித்தான் எதையோ சொதப்பி வைத்திருக்கிறான். அவனிடம் பேசி அந்த வேலையை நேர் செய்து, மற்ற ப்ராஞ்ச் கணக்குகளையும் முடிக்கவே மதியத்தைக் கடந்திருந்தது.

அதன்பிறகு அவளது இங்குள்ள அன்றாட வேலைகளை முடித்து, ஸ்டோர் ரூம் சென்று அனைத்தையும் மீண்டும் தன் இடத்திற்கு வர மணி ஐந்தைத் தொட பசியென்ற உணர்வே இல்லை. சிறிது நேரம் ஒரே இடத்தில் இருந்தாலும் கேமராவில் பார்த்துவிட்டு, உடனே அழைத்து காதில் ரத்தம் வருமளவிற்குப் பேசுவான். அதெல்லாம் கேட்கும் தெம்பு இல்லாதவள் தன் வேலையை வேகமாக முடித்தாள்.

அப்போது அவளுக்கு அருகில் ஒரு காபி டம்ப்ளர் வைக்கப்பட, அதன் நறுமனம் மறுத்துப்போன பசியுணர்வைத் தூண்டினாலும், உடனே அதை எடுத்துக் குடித்துவிடவில்லை அபி. அதை யோசனையாகப் பார்த்தபடியே கொண்டு வந்தவனைப் பார்க்க, “அதுவந்து சார் வெளியேப் போயிட்டாரு அபிம்மா, அதான். தப்பா எடுத்துக்காத. நீ காலைல இருந்து எதுவும் சாப்பிடல, தண்ணிய மட்டும்தான் குடிச்சிட்டு இருந்தியா. மனசு கேட்கல. என்னைய என்ன வேனா சொல்லிட்டுப் போகட்டும். வேலைய விட்டு கூட அனுப்பட்டும். நான் என்ன தப்பா செஞ்சேன். நீ குடி அபிமா..” என்றவனைப் பார்க்க கண்ணில் நீர் திரண்டது அபிக்கு.

முரளி.. என அவள் உதடுகள் தன்னால் முனுமுனுத்தது. தலையைக் குனிந்து அதை மறைத்தவள் “ரொம்ப நன்றி முருகண்ணே. நான் குடிக்குறேன், நீங்க போய் வேலையைப் பாருங்க..” என்றவள் அந்தக் காபியைத் தன் அண்ணன் முரளி கொடுத்ததாகவே நினைத்து உள்ளம் இனிக்க பருக ஆரம்பித்தாள்.

இனிப்பான காபி உள்ளே இறங்க, இறங்க அவளுக்குள் புதைந்து கிடந்த இனிமையான நினைவுகள் மெல்ல மேலெழுந்தது. அன்று அவளுக்கு பிறந்தநாள். எப்போதும் தன் அண்ணன் முரளிதான் அவளை கல்லூரி பேருந்தில் ஏற்றிவிட வருவான். ஆனால் அன்று அவனுக்கு மிகவும் முக்கியமான வேலை என்றாகிவிட, அவளாகவே பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தாள் அதிலும் மஞ்சள் கலர் சல்வாரில்.

அப்போது அங்கிருந்த இளைஞர் கூட்டம், இவளைப் பார்ப்பதும் தங்களுக்குள் பேசுவதும் என இருக்க, ஒருக்கட்டத்தில் பெண்களும் அதையே செய்ய, அப்போதுதான் அது நடந்தது. அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்து ஒருவன் கையில் ஒரு சிவப்பு நிற ரோஜாவை எடுத்து அவளை நோக்கி வர, அங்கிருந்த அனைவரும் அவளையேப் பார்க்க, அப்போதுதான் அவளுக்கும் நிதர்சனம் புரிய, ‘அய்யோ இன்னைக்குப் பார்த்தா இந்த கலர் ட்ரெஸ் போடனும், அம்மா உங்களை’ எனப் பல்லைக் கடித்தவள் வேகம் வேகமாக சுற்றும் முற்றும் பார்க்க, அதற்குள் அவன் அருகே வந்திருந்தான்.

“ஹாய் மிஸ்..” என்றவனை பயத்துடன் பார்த்தவள், “ப்ளீஸ் அண்ணா இன்னைக்கு என்னோட பர்த்டே, அம்மா தெரியாம யெல்லோ கலர்ல ட்ரெஸ் எடுத்துட்டாங்க, ப்ளீஸ் ப்ளீஸ் ப்ரோபோஸ் பண்ணிடாதீங்கண்ணா” என பாவமாகக் கெஞ்ச ஆரம்பித்தவளை வந்தவன் ‘எதே’ என அதிர்ச்சியாகப் பார்க்க, அவளுக்கு அடுத்தப் பக்கத்தில் இருந்து ஒரு ஆணின் சிரிப்பு சத்தம் கேட்டது.

“மிஸ்..” என்ற அந்த ஆண் சிரித்தபடியே அவளிடம் வர, “அண்னா நீங்களுமா..” என மீண்டும் அபி அதிர,

“ஆசைதான் போல” என அவளை நக்கலடித்தவன், “எப்பவு உன்னை ட்ராப் பண்ண ஒருத்தன் வருவானே அவன் எங்க, இன்னைக்கு எப்படி உன்னைத் தனியா விட்டான்” என எகிற,

“முரளி.. முரளியை உங்களுக்குத் தெரியுமா.? என் அண்ணண்தான், அவனுக்கு ஒரு முக்கியமான வேலை அதான்.” என இழுக்க, அதற்குள் ரோஜாவுடன் வந்த இளைஞன் இவளை அம்பி போல் பார்த்துவிட்டு கிளம்பிவிட, அவளது கல்லூரி பேருந்தும் வந்துவிட “தேங்க்ஸ்..” என்றதோடு அவளும் கிளம்பிவிட்டாள். அன்றுதான் அவனை முதன்முதலாகப் பார்த்தாள். ஆனால் அவன் அபியை தினமும் பார்ப்பதாகக் கூறியிருக்கிறான்.

“என்ன பகல் கனவா.?” எனத் தனக்கு அருகில் கேட்ட அந்த இறுகியக் குரலில், அபியின் மேனி ஒருமுறை பயத்தில் குலுங்கியது.

“இல்ல, இல்ல..” என்றவள் வேகமாக எழப்போக, அந்த டேபிளின் காலில் சரியாக அபியின் காலும் இடித்துக் கொல்ல, “அம்மா” என்றவள் அப்படியே அமர்ந்துவிட, அதைப் பார்த்தவன், என்ன என்று கூட கேட்காமல் “வேலை நேரத்துல கவனம் இங்க இருக்கனும், அதைவிட்டுட்டு விட்டதை மறுபடியும் பிடிக்க முடியுமான்னு பகல் கனவு கண்டா இப்படித்தான்.” என அவலை நக்கலடித்துவிட்டு சென்றுவிட, அடிப்பட்ட காலில் கூட அவ்வலவு வலி தெரியவில்லை. ஆனால் அவன் பேசி சென்ற ஒவ்வொரு வார்த்தையும் வலி என்ற சொல்லுக்கும் மேலான ஒரு உணர்வைக் கொடுத்தது.

‘இன்னும் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள கடவுளே’ என வழக்கம்போல கடவுளிடம் முறையிட்டவளின் போன் அடிக்க ஆரம்பிக்க, அதை வேகமாக எடுத்துப் பார்க்க ‘மனோ காலிங்க்’ என வீடியோ கால் அழைப்பு இருக்க, சுற்றிமுற்றி பார்த்து யாரும் இல்லையென்று, முக்கியமாக அவன் இல்லையென்று உறுதிப்படுத்திய பின்னரே தன் போனை எடுத்துக்கொண்டு, வலித்த காலையும் பொருட்படுத்தாது ரெஸ்ட் ரூம் சென்று ஆன் செய்ய, “ஆப்பி பத்துடே ம்மி” என்ற குரலில் தன் கஷ்டம், கவலை மொத்தமும் தொலைத்து விழியில் நீருடனும், இதழ்களில் மலர்ந்த புன்னகையுடனும் “தேங்க்யூ குட்டிப்பா..” என்றாள் அபிராமி.

“நீ வர்ல.. நீ வர்ல..” என்ற மகனை கொஞ்சி, கெஞ்சி ஒருவழியாகச் சமாதானம் செய்து, தன் அண்ணியான மனோகரியிடம் “ஏன் அண்ணி இந்த டைம்..” என மென்று விழுங்க,

“நான் என்ன பண்ணட்டும் அபி, குட்டிப்பா ஒரே அழுகை உன்னைப் பார்க்கனும், பேசனும்னு. சமாளிக்க முடியாம வேறவழியில்லாமத்தான், உங்க அண்ணா கால் பண்ண சொன்னார்.” என்ற மனோகரியிடம்.

“பரவாயில்ல அண்ணி, தேங்க்ஸ் அண்ணி. நான்தான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்.” என்ற அபியின் விசும்பலில்

“அபி ப்ளீஸ். நீ எங்க குற்ற உணர்ச்சியை அதிகப்படுத்தாத. உன்னோட இந்த நிலைக்கு நாங்களும் ஒரு காரணம். அதை எப்படி காம்பென்சேட் செய்றதுன்னு தெரியாமத்தான் நீ கேட்டதும் குட்டிப்பாவை நாங்க வளர்க்க சரின்னு சொன்னோம். நீ கண்டதையும் யோசிக்காத. ஏற்கனவே உன்னை நரக்த்துல தள்ளிவிட்டுட்டோமேனு உன் அண்ணா வருந்தாத நாள் இல்லை. இதூவ்ம் தெரிஞ்சா மொத்தமா உடைஞ்சி போய்டுவார். அதெல்லாம் விடு. யோசிக்காத. இன்னைக்கு இல்லைன்னாலும் பின்னாடி எல்லாம் ஒருநாள் மாறும். சரியா. கோவிலுக்கு போனியா..” என்ற மனோகரியிடம்,

இல்லையென்று தலையசைத்துவிட்டு, “பார்த்துகோங்க அண்ணி, வைக்கிறேன்” என வைத்துவிட்டவளுக்கு உள்ளம் சூறாவளியாக சுழன்றடித்தது. எங்கே என்ன தவறு நடந்தது. மனம் கனக்க, தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியில் நடந்தாள். சூழ்ந்திருந்த இருளைப் பார்த்தவளுக்கு, தன் வாழ்க்கையும் இப்படித்தானே இருண்டு கிடக்கிறது என எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அப்படி என்னதான் நடந்தது அபிராமியின் வாழ்வில்.?
பதில் சொல்ல வருவானா அவளவன்.?

 

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
"Adhathaan ka naanum kekuran.."en manasukulla 😁😁 ..ennadhaan nadanchu idhu rendukullaum...aaalum ivan indha alavuku musuda irika pada..too bad
 
  • Love
  • Haha
Reactions: Vathani and Sampavi

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
"Adhathaan ka naanum kekuran.."en manasukulla 😁😁 ..ennadhaan nadanchu idhu rendukullaum...aaalum ivan indha alavuku musuda irika pada..too bad
இரண்டு பேரையும் நம்பாதீங்கப்பா
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
இவன் என்ன மேக்குன்னு தெரிலையே
மேக்கா, பேக்கா
இவன் எதுக்கு இந்த ஆட்டம் ஆடுறான்.
அபிக்கு ஏன் இவ்வளவு கஷ்டம். முரளிக்கு என்னாச்சு/
அவளொட ஃபேமிலி எங்க
 
  • Haha
Reactions: Vathani

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
சீஸ்....
இது என்ன இந்த மாங்கா இவ்வளவு எரிஞ்சி விழறான். இதுல ஆன்டி ஹீரோ இல்லன்னு வேற மென்ஷன் செய்துருக்கீங்க
இவனை எந்த கணக்குல சேர்க்க
 
  • Haha
Reactions: Vathani

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
மிகவும் அருமை க்கா..
இவனுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு அபி மேல
 
  • Love
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
இவன் என்ன மேக்குன்னு தெரிலையே
மேக்கா, பேக்கா
இவன் எதுக்கு இந்த ஆட்டம் ஆடுறான்.
அபிக்கு ஏன் இவ்வளவு கஷ்டம். முரளிக்கு என்னாச்சு/
அவளொட ஃபேமிலி எங்க

மேக்கு, பேக்கு ஹாஹா
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
சீஸ்....
இது என்ன இந்த மாங்கா இவ்வளவு எரிஞ்சி விழறான். இதுல ஆன்டி ஹீரோ இல்லன்னு வேற மென்ஷன் செய்துருக்கீங்க
இவனை எந்த கணக்குல சேர்க்க
ஆயா சத்தியமா இது ஆன்டிஹீரோ இல்லப்பா
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
225
6
28
Hosur
Hi vani nalla thodakam