நதி - 05
“ஹலோ கார்த்தி எங்கடா இருக்க, உன் போன் என்னாச்சு, எல்லாரும் மாத்தி மாத்தி கால் பண்ணிட்டே இருக்கோம், எடுத்து பதில் சொல்ல என்ன கஷ்டம் உனக்கு.. நீ எங்கதான் இருக்க.?” எனக் கோபத்தின் உச்சத்தில் கத்திக் கொண்டிருந்தார் ஜெகதீஸ்வரன்.
அன்று வீட்டில் இருந்து கோபமாகக் கிளம்பியவன்தான், இரண்டு நாட்களாக வீட்டுக்கும் வரவில்லை, எங்கே சென்றான் என்றும் தெரியவில்லை. போன் செய்த யாருக்குமே பதிலும் அளிக்கவில்லை. மனைவி வேறு நச்சு நச்சென்று அழுதுகொண்டே இருக்க, கடுப்பில்தான் இப்போது கத்தியது.
“என்ன வேனும் உங்களுக்கு, நான் இங்க எஸ்டேட்ல இருக்கேன். கொஞ்சநாள் நிம்மதியா இருக்கலாம்னு வந்தா, அதுக்குள்ள ஆயிரத்தெட்டு போன்..” என அவனும் எரிச்சலில் கத்த,
“ஏன்டா எங்கேயாச்சும் போய் தொலைஞ்சா சொல்லிட்டு போகமாட்டியா.? வீட்டுல இருக்குற பொம்பளைங்களுக்கு யார் பதில் சொல்றது. கார்த்தி நீ செய்ற ஒன்னும் சரியில்ல..” எனக் கோபம் குறையாமல் பேச,
“என்னைப்பத்தி கவலைப்பட அங்க யார் இருக்கா.? நான் எதுக்கு யாருக்கும் சொல்லனும், என்னை விட்டுட்டு எல்லாருக்கும் அவதானே முக்கியமா போய்ட்டா.? அவளையேத் தாங்குங்க, என்னை எந்தக் கேள்வியும் கேட்காதீங்க. இனி எனக்கு போனும் பண்ணாதீங்க, நான் இனி கொஞ்ச நாள் அங்க வரமாட்டேன்..” என்றவன், அவர் பதில் பேசும் முன்னமே போனை ஸ்விட்ச் ஆப் செய்து டேஷ் போர்டில் போட்டு காரின் வேகத்தைக் கூட்டினான்.
இங்கு “என்னங்க சொன்னான், எங்க இருக்கானாம்?” என அழுதுகொண்டே பேசிய மனைவியை முறைத்தவர், “எல்லாம் நல்லாத்தான் இருக்கானாம், கழுதை கெட்டா குட்டிச்சுவரு, அவன் கெட்டொழியனும்னே ஒரு எஸ்டேட்டை வாங்கி கொடுத்திருக்கார் இல்ல, அங்கதான் இருக்கானாம். அவனைப்பத்தி தெரிஞ்சும் பேசின என்னை..” எனப் பல்லைக் கடித்தவர், “போய் எல்லாரும் வேலையைப் பாருங்க.. கழுதை ஊரைச் சுத்திட்டு எப்போ வருமோ, அப்போ வரும்..” என்று எல்லோரையுமே போற போக்கில் திட்டிவிட்டு போக,
“பவிக்கா.. இந்த கார்த்தி அத்தான் நல்லவரா, இல்ல கெட்டவரா.? நான் கூட இங்க இருந்து அபியை பழிவாங்குறேன்னு எதாச்சும் சீன் போடுவாருன்னு நினைச்சா, அவர் பாட்டுக்கு கிளம்பி போயிட்டார்.” என சாம்பவி வழக்கம்போல பார்கவியின் காதைக் கடிக்க,
“க்கும்.. அவன் என்னமோ பழியே வாங்காத மாதிரி பேசாத, மொத்தமா அவ வாழ்க்கையை சிதைச்சிட்டு போயிருக்கான், அதுல இருந்து மீளவே அவளுக்கு எவ்ளோ நாளாகுமோ, இதுல இனி இவன் புதுசா வேற பழிவாங்கனுமா.. ஏன்டீ.” என பார்கவியும் பதிலுக்கு பேச, ஆனால் பைரவி மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.
“என்ன பையூ அமைதியா இருக்க, சின்னத்த மட்டும் ஹாஸ்பிடல்ல தனியா இருப்பாங்க, வா கிளம்பலாம். உனக்கு செக்கப் முடிஞ்சதும் அத்தையோட வந்திடு.” எனவும்,
“ம்ம்.. போலாம், அவரும் அப்படியே வரேன்னு சொன்னார். இன்னைக்கு ஸ்கேன் இருக்கு..” என்ற பைரவியின் முகத்தில் கொஞ்சமும் தெளிவில்லை.
அதைக் கவனித்தவர்கள், எதையோ யோசிக்கிறாள் என்று புரிய, “என்ன பவி2..” என சாம்பவி அவளை சகஜமாக்கும் பொருட்டு பட்டப்பெயர் வைத்து கேட்க,
“ஏதோ தப்பா தோனுது பவி3.. கார்த்தி அத்தான் இப்படியெல்லாம் அமைதியா போற ஆளே இல்லை. எங்கேயோ தப்பு நடக்குது..” என யோசனையாகவே சொல்ல,
“ம்ச், அப்படி இருந்தா இருக்கட்டும், இனி அவர் அபி பக்கம் வராம நாம பார்த்துக்கலாம். முதல்ல அவளை இந்த வீட்டுக்கு கூப்பிட்டு வரனும். அதுக்குப்பிறகு மத்த ப்ளானை யோசிக்கலாம்.” என சாம்பவியும் சீரியசாகச் சொல்ல,
“அது இந்த அத்தைங்க இருக்குறவரை நடக்காது..” என்று முணுமுணுத்த பார்கவி, “அத்தை.. நைட் நான் வந்து டிஃபன் செஞ்சிடுறேன், நீங்க கிச்சன்ல போய் நிக்காதீங்க. பைரவி செக்கப் முடிஞ்சதும், சாம்பவியை விட்டுட்டு வந்துடுறோம்..” என்று தன் மாமியாரிடம் சொல்லிவிட்டு கிளம்ப,
“ம்ம்ம்.. சரி பார்த்து போயிட்டு வாங்க” என்று மூவரையும் அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தவர், தன் மாமியார் தனியாக அமர்ந்திருக்க, அவரிடம் போய் “ஏன் அத்த அதுதான் கார்த்தி அந்த பொண்ணை வேண்டாம்னு உறுதியா சொல்றானே, அப்புறமும் ஏன் அவனைக் கட்டாயப்படுத்தனும். கட்டாயப்படுத்தி ஒரு வாழ்க்கையை வாழ வைக்க முடியுமா.? பிடிக்கலன்னா போகட்டும், அவங்கவங்க வாழ்க்கையைப் பார்த்துட்டு போகட்டுமே.. ஏன் பிடிச்சு வைக்கனும்” என்ற அம்பிகாவை தீர்க்கமாகப் பார்த்தார் பார்வதி.
“நீ சொல்றதும் சரிதான். கட்டாயப்படுத்தி ஒரு வாழ்க்கையை வாழ வைக்க முடியாதுதான். ஆனா நீ ஏன் உன் பெரிய மகனுக்கு அதே மாதிரியான வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்த, உன் அண்ணன் பொண்ணு மட்டும் உனக்கு உசத்தி. மத்த வீட்டு பொண்ணுன்னா இளப்பமா.?” எனக் காட்டமாகக் கேட்க,
“அத்த..” என அதிர்ந்த அம்பிகாவிடம்,
“அந்த பொண்ணு இந்த வீட்டுல இருந்தது மூனே மாசம்தான். ஆன அவ பேச்சுல, நடத்தைல எங்கேயுமே நான் தப்பை பார்த்தது இல்ல. அவளுக்கும் தப்புக்கும் சம்மந்தமே இருக்காதுனு என் மனசு சொல்லிட்டே இருக்கு, உன் மகன்தான் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு அவளை வீட்டை விட்டு அனுப்பியிருக்கான், அதை தெரிஞ்சி அவனை சரி பண்றதை விட்டுட்டு, அவன் இஷ்டத்துக்கு விடுங்கன்னு சொல்ற..” என மீண்டும் பேச,
“அத்த நான் அந்த பொண்ணுக்காகவும் தான் சொல்றேன், அவ தப்பு செஞ்சாளோ இல்லையோ. ஆனா வீட்டை விட்டு போயிருக்கக்கூடாது இல்லையா.? வீட்டுல நாம ஆறு பேர் இருக்கோம். நம்மக்கிட்ட சொல்லாம, கலந்து பேசாம அப்படி என்ன கோபம் வீட்டைவிட்டு போற அளவுக்கு” எனத் தன்னை மதிக்கவில்லை என்ற கோபத்தை இத்தனை நாட்கள் கழித்து வெளியில் சொல்ல,
“என்ன அம்பிகா.. எப்போ இருந்து நீ இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்ச, வசதி இல்லாத வீட்டுப் பொண்ணுனு உனக்கும், உன் மாமா மாதிரி, மட்டமா தோன ஆரம்பிச்சிருச்சா. என்ன கோபம்னு உன் மகன்கிட்ட கேளு. அவனுக்கும் இதுல பங்கு இருக்குல்ல, அதென்ன அந்த பொண்ணையே குறை சொல்றது.” என அதிர்ச்சியாகக் கேட்க,
“அதுல ஒன்னும் தப்பு இல்லையே அத்தை, என் பையன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்கிறது தப்பா.? கார்த்தி அந்த பொண்ணை மறுபடியும் ஏத்துக்கிட்டு இந்த வீட்டுக்கு கூப்பிட்டு வந்தா எனக்கு எந்த வருத்தமும் இல்லத்த, ஆனா எல்லாரும் சேர்ந்து அவனைக் கட்டாயப்படுத்துறது தான் எனக்குப் பிடிக்கல..” என மாமியாரின் முகத்திற்கு நேராகவே பேச, இப்போது பார்வதியின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
அமைதியாகப் பார்த்தவர் பின் “தப்பே செய்திருந்தாலும் அவனை விட முடியாமத்தான், அபி அவனைத் தேடி வந்திருக்கா.? நாளைக்கு உன் பையன் மனசும் மாறும், அப்போ உன் முகத்தை எங்கே கொண்டு போய் வச்சுப்ப..” என்றவர் ஏதோ சொல்ல வந்து பின் அமைதியாகித் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
பார்வதியின் இந்த செய்கையில் அம்பிகாவுக்கு கோபம்தான், இன்னும் தன் மாமியார்தனத்தைக் காட்டுகிறாரே என்று. ஆனால் வெளியில் காட்ட முடியாதே. ‘என் பையனுங்க வாழ்க்கையை நான் தீர்மானிக்கக்கூடாதா.?’ என்ற கோபம் அவரை நல்லவிதமாக யோசிக்கவிடவில்லை.
இங்கு அப்போதுதான் போன் பேசிவிட்டு அறைக்கு வந்தார் பவானி. வந்தவர் படுக்கையில் அபி இல்லை என்றதும், எங்கே போனாள் ஒருவேளை பாத்ரூம் சென்றிருப்பாளோ, தன்னை அழைத்திருப்பாளோ, போன் பேசியதில் கேட்கவில்லையோ என்று யோசித்துக்கொண்டே கழிவறைக் கதவைத் தட்டினார். அங்கிருந்து எந்த சத்தமும் வராமல் போகவே, விழுந்துவிட்டாளோ என்ற பதட்டத்துடன் வேகமாகக் கதவைத் தள்ள, அது வெளிப்பக்கமிருந்தே திறக்க, அதிர்ந்தவர் வேகமாக புவனுக்கு அழைத்து சொல்ல, அவனுக்கும் இது அதிர்ச்சிதான்.
எங்கே போனாள். யாரிடமும் சொல்லாமல் போகக்கூடியவள் இல்லையே. என்று யோசனையோடே அவனும் ஹாஸ்பிடலுக்கு வர, பெண்கள் எல்லோரும் மருத்துவரின் தனிப்பட்ட அறையில் வாக்குவாதத்தில் இருக்க, பைரவி மட்டும் “நான் நினைச்சது சரிதான், நம்மளை எல்லாம் திசை திருப்பிட்டு அபியை கார்த்தி அத்தான் தான் தூக்கிட்டு போயிருக்காங்க..” எனச் சொல்ல, அங்கு குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கான நிசப்தம். எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி.
இங்கு கார்த்தியின் கார் தேக்கடியை நோக்கி பறந்து கொண்டிருக்க, அவனுக்குப் பின் இருக்கையில் கைகளும், வாயும் கட்டப்பட்டு மயக்கத்தில் இருந்தாள் அபிராமி.
-
அபிராமியின் அப்பா பாலுசாமிக்கு சொந்த ஊர் கடலூர். அவர் மனைவி சந்திரா, ஆசைக்கு அபிராமி. ஆஸ்திக்கு முரளி என இரண்டே பிள்ளைகள். பாலுசாமிக்கு LIC-யில் நிரந்தரமல்லாத வேலை. அடிக்கடி வெளியூர் பயணம் போக வேண்டிய சூழல். அதோடு கொஞ்சம் தற்பெருமையும் பிடித்தவர், வேலைக்குச் சென்றாலும் சரியான சம்பளத்தை வீட்டில் கொடுக்கமாட்டார்.
இதனால் வீட்டில் பிரச்சினை ஆரம்பிக்க, முதலில் சொல்லிப் பார்த்த சந்திராவும், அவர் கேட்பதாக இல்லை என்றுத் தெரியவும், குழந்தைகளோடு தன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கும் சமாளிக்க முடியாமல் போக, வேறுவழியில்லாமல் சந்திராவும் வேலைக்குச் செல்ல வேண்டியக் கட்டாயம்.
சந்திராவுக்கு சொந்த ஊர் தேனி என்பதால், அங்கு தெரிந்த ஆட்களை வைத்து, தன் நகைகளை விற்று ஓரளவிற்கு பணத்தைக் கொடுத்து, அதே ஊரில் சத்துணவு டீச்சராக பணியில் சேர்ந்தார்.
பிள்ளைகளும் பெற்றவர்களின் கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்ததால் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொண்டதில்லை, இது வேண்டும், அது வேண்டும் என அவர்களைத் தொந்தரவும் செய்ததில்லை. பிள்ளைகள் இருவருக்கும் தாய் சொல்வது தான் வேதவாக்கு.
பாலுசாமி மகனை இஞ்சினியரிங் சேர்க்கலாம் என்ற போது, வேண்டவே வேண்டாம் என்று ஒரே மூச்சாகத் தடுத்து, B.com CA-வில் சேர்த்து விட்டார் சந்திரா. பின் அபிராமியையும் அதையே எடுக்க வைத்தவர், இருவரையும் வங்கித் தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டே இருந்தார்.
சந்திராவின் ஊக்கமும் முரளியின் விடாமுயற்சியும் சேர, அதற்கான பலனாக மலேசியாவில் உள்ள ஒரு இன்டர்னேசனல் வங்கியில் வேலை அவனுக்கு கிடைத்தது. அடுத்து அந்த குடும்பத்தில் அனைத்தும் ஏறுமுகம்தான்.
ஆனால் பாலுசாமிக்கு அப்படி இல்லை. இதுவரை வேலைக்குப் போகவேண்டுமே என்ற கட்டாயத்தில் இருந்தவர், மகன் தலையெடுத்தப் பிறகு, வெள்ளை வேட்டி சட்டையுடன் பந்தாவாக கிளம்பி, தினம் ஒரு தொழில் செய்யப் போவதாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஜம்பமாக திரிவார்.
ஒருநாள் ரியல் எஸ்டேட் ஆட்களுடன் இருப்பார், மற்றொரு நாள் லாட்டரி விற்கும் கேரளா ஆட்களுடன் சுற்றுவார். இவரது பொறுப்பில்லாதத் தன்மையைப் பார்த்து வெறுத்துப்போன மூவரும், அவரிடம் அதிகம் கேள்விகளைக் கேட்பதை, ஏன் பேசுவதைக் கூட நிறுத்திவிட்டனர்.
முரளியின் சம்பளம் சந்திராவை சற்று சீராக மூச்சு விட வைத்தது என்றே சொல்லலாம்.. முதலில் வீட்டை இடித்துக் கட்டினார், பிறகு மகளுக்குத் தேவையான நகைகளை எடுக்க ஆரம்பித்தார். அவளது கல்யாண செலவுகளுக்கு பணம் ஒதுக்க ஆரம்பித்தனர். இதெல்லாம் அபிராமியின் கல்லூரி படிப்பின் கடைசி ஆண்டில் நடக்க, இனி யாரேனும் பெண் கேட்டு வந்தால் திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார் சந்திரா.
“ஏன்மா, இப்போதான் காலேஜ் முடிக்கப்போறா, ரெண்டு வருஷம் வேலைக்குப் போகட்டும், அவளும் லைப்ல கொஞ்சம் ஜாலியா இருக்கட்டுமே, அப்புறம் பார்க்கலாம். இப்பவே ஏன்.?” என்ற மகனிடம்,
“எல்லாம் காரணமாத்தான் முரளி, உங்க அப்பா எந்த நேரம், என்ன ஏழரையைக் கூட்டிட்டு வருவாரோன்னு பயந்துக்கிட்டே இவளை வச்சிருக்க முடியுமா.? வீட்டுல இருக்குற நகை, பணத்தை எல்லாம் எத்தனை நாள் பாதுகாக்க முடியும். அவர் பாட்டுக்கு பிசினஸ் பன்றேன்னு சொல்லாம எடுத்துட்டு போய் நாசம் பண்ணிட்டா என்ன செய்ய.? அவரை நம்பி பொருளை வைக்க முடியாது முரளி. இப்போ எல்லாம் அவரோட சேர்க்கையும் சரியில்ல, எனக்கும் சரியா படல, அதோட நீயும் அங்க போய் மூனு வருஷம் ஆச்சு, உனக்கும் தனியா இருக்க கஷ்டம் இல்லையா, கையோட பொண்ணு பார்த்தா.? அவளைக் கூப்பிட்டு நீயும் அங்க போய்டுவ.? நானும் நிம்மதியா இருப்பேன்” என நீண்ட விளக்கம் கொடுக்க, அதற்குப் பிறகு பிள்ளைகளுக்கும் மறுக்க மனம் வரவில்லை.
அதனால் அபிராமிக்கு மாப்பிள்ளைப் பார்க்கும் படலம் வேகமெடுக்கத் தொடங்கியது. அதைத் தொட்டு சந் திரா பயந்தது போல் கணவரால் அபிராமியின் வாழ்க்கையில் பேரிடியும் விழுந்தது.