• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 10

"இங்கே எதுக்கு வந்திருக்கோம்?" திக்ஷிதா கேட்க,

"நீ தானே நைட்டு நானே சமைச்சுப்பேன்னு சொன்ன? அதுக்கான திங்ஸ் வாங்க வேணாமா?" என்று வாசு கேட்டு இறங்க,

"ஓஹ்! ஆமால்ல!" என்றவளும் இறங்கினாள்.

"சமைக்க தெரியும் தானே? இல்ல நூடுல்ஸ், பாஸ்தா செய்ய தெரிஞ்சுட்டு சமைக்க தெரியும்னு சொன்னியா?" என்று மேலும் கேட்டான்.

"என்ன ஓவரா பேசுறான்!" என்பதை போல பார்த்தவள்,

"ரொம்ப இல்லைனாலும் ஓரளவு நல்லா தான் சமைப்பேன்" என்றவள் தேவை என தோன்றியவற்றை எல்லாம் எடுக்க, அமைதியாய் பார்த்தபடி இருந்தான் வாசு.

"வெஜிடபிள்ஸ் கூட வாங்கிடலாம்.. நாளைக்கு மார்னிங் நான் லஞ்ச் ரெடி பண்ணிடுறேன்.. நீங்க எடுத்துட்டு போய்டலாம்" என்று திக்ஷிதா கூற,

"ஓகே!" என்று தோள்களை குலுக்கியவனுடன் அருகில் இருந்த கடைக்கு நடந்து சென்றாள்.

"ஒரு போன் பேசிட்டு வர்றேன்!" என அவன் வெளியில் நின்று கொள்ள, தனது மொபைலை எடுத்து சிவகாமிக்கு அழைத்தாள் திக்ஷிதா.

"சொல்லு அம்மு! எங்க இருக்க? வீட்டுக்கு வந்தாச்சா?" சிவகாமி கேட்க,

"மாமி! இங்க கடைக்கு வந்தோம்.. உங்க பையனுக்கு என்ன புடிக்கும் சமையல்லனு சொல்லுங்களேன்" என்று கேட்க,

"நீ சமைப்பியா டி?" என ஆச்சர்யம் காட்டினார் அவரும்.

"அம்மாக்கும் புள்ளைக்கும் கொஞ்சம் ஓவர் தான் நக்கலு.. என்னை பார்த்தா எப்படி தெரியுதாம்?" என்று பேசியபடி காய்களை தேர்வு செய்தாள்.

"வேலைக்கு போற பசங்களே சமைக்குறது இல்ல.. நீ காலேஜ்.. அதுவும் ஹாஸ்டல் வேற.. அது தான்" என்று சிவகாமி சிரித்தபடி கூற,

"மாமியாரே! இப்படி திடீர்னு கல்யாணம் நடக்கும்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே என் அம்மாக்கு தெரிஞ்சிருக்கும் போல.. அதான் ஸ்கூல் முடிச்சி லீவ் விடவும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பழக்கி விட்ருக்காங்க.. பாத்திங்களா உங்க பையனுக்கு எவ்வளவு யூஸ் ஆகுதுன்னு.. திக்ஷி மாதிரி ஒரு பொண்ணு உங்களுக்கு மருமகளாவும் உங்க பையனுக்கு பொண்டாட்டியாவும்...." என்றவள் பேச்சு அந்தரத்தில் தொங்க,

"உன் பெருமை பேச்சுக்கு அளவே இல்லாம போச்சு.. என் புள்ள என்ன பாடு படுறானோ உன்னை வச்சு!" என்று சிவகாமி அவர் போக்கில் பேசிக் கொண்டிருக்க, திக்ஷிதாவிற்கு முன் நின்று அவளை முறைத்துக் கொண்டிருந்தான் வாசு.

"தனியா.. போர் அடிச்சது.. அதான் சும்மா மாமியார்.. அத்... அத்தைகிட்ட பேசிட்டு இருக்கலாமேன்னு.." என்று இழுக்க,

"வந்துட்டானா அவன்?" என்றவர்,

"காய்னா அவனுக்கு முள்ளங்கி சாம்பார் புடிக்கும்.. மத்தபடி எல்லாமே சாப்பிடுவான்.. எதையும் வேஸ்ட் பண்ண மாட்டான்" என்று சிவகாமி கூற,

"நான் அவங்ககிட்ட தர்றேன் மாமி.. இல்ல அத்தை" என்றவள் அவர் சிரிக்கும் சத்தம் கேட்கும் பொழுதே அவன் கையில் கொடுத்திருந்தாள்.

"ம்மா! நான் அப்புறம் பேசுறேன்!" என்றவன் உடனே வைத்துவிட்டான்.

"நான் அஞ்சு நிமிஷம் போன் பேசிட்டு வர்ற வரை உன்னால பேசாம இதை வாங்க முடியாதா?" என திக்ஷிதாவிடம் கேட்க,

"போன் பேசுறதுக்கு முன்னாடி மட்டும் தேன் பாயுற மாதிரி பேசிட்டா இருந்தாரு?" மனம் கேட்க, அதை அடக்கி வைத்தவள்,

"இல்ல உங்களுக்கு என்ன புடிக்கும்னு கேட்க தான் பண்ணினேன்!" என்றாள்.

"நம்பிட்டேன்.." என்றவன்,

"வாங்கியாச்சுன்னா போலாம்" என்று கூற,

"போலாம்! போலாம்! போலாம்! இதை தவிர எதுவும் பேசுறது இல்ல.. அந்த பக்கம் போற கேப்புல யாருகிட்டயும் பேசிட்டா முறைச்சிட்டு வந்து நின்னுடுறது!" என முணுமுணுத்து செல்ல,

"எனக்கு புரியுது!" என்றவன் குரலில் வாயில் கைவைத்துக் கொண்டாள்.

"ஹாஸ்டல்ல இருந்து தான் இப்படி பேச கத்துட்டு வந்தியா?" என்று கேட்டபடி காரை ஸ்டார்ட் செய்ய,

"அதெல்லாம் இல்லை.. நான் எப்பவும் இப்படி தான்.. எப்பவும்னா ரொம்ப சின்ன வயசுல இருந்தே! பேசாதவங்களை பார்த்தாலே எனக்கு ஆகாது!" ஓரக் கண்ணால் அவனைப் பார்த்து கூற,

"ஆஹான்! பிரண்ட்ஸ் சர்க்கள் அதிகமா?" என்று வாசுவே பேச்சை வளர்த்தான்.

"ம்ம் ஆமா! என்னை சுத்தி நாலு பேர் எப்பவும் இருக்கனும்.. இல்லைனா எனக்கு பைத்தியம் புடிச்சிடும்!" என்றவளை அவன் திரும்பிப் பார்க்க,

"அதுக்காக நானா எல்லாம் குரூப் சேர்த்துட்டு இருக்க மாட்டேன்.. திக்ஷினா தானா வருவாங்க!" கல்லூரி வழக்கத்தில் அவனிடம் கதையளந்து வந்தாள்.

"ஹ்ம்! கிளாஸ்ல ஸ்டேடிஸ் எல்லாம்?"

"அது அவரேஜ் தான்.. ஓவர் படிப்ஸ் இல்லை.. அதுக்காக மக்கும் இல்லை.. ஓரளவு டீசண்டா கிளியர் பண்ணிடுவேன்.."

"அரியர் எல்லாம் வாய்ப்பே இல்லை..இது லாஸ்ட் செம் இல்ல.. சோ ரெண்டு பேப்பர் தான்.. அண்ட் ப்ராஜெக்ட் ஒர்க்.. அதோட எல்லாம் பினிஷ்!" என்று கூற கேட்டுக் கொண்டான்.

"நான் காலேஜ் முடிச்சு அல்மோஸ்ட் சிக்ஸ் இயர்ஸ் ஆச்சு.." வாசு கூற,

"ம்ம் சொன்னாங்க!" என்றாள்.

"எனக்கும் உனக்கும் எவ்ளோ ஏஜ் டிஃப்பரென்ட் தெரியுமா?" வாசு கேட்க,

"மூணு.. அஞ்சு.. ஆறு.." என விரல்விட்டு எண்ணியவள் பின் குறும்பு தலைதூக்க,

"ஒன்பது... பதின்னொன்னு..." என்று எண்ணிக் கொண்டே இருக்க,

"ம்ம் இருப்பத்து ஒன்னு... ஐம்பத்து ஒன்னு.. இன்னும் சொல்லேன்!" என்றவன் முகத்திலும் அத்தனை இலகுவான புன்னகை.

"அப்ப இல்லையா?" என்றாள் அப்போதும் விடாமல்.

"தெரியலைன்றதை ஒத்துக்கோ!" என்று வாசு கூற,

"அக்டோபர் ஒன்பது" என்றவள் வருடத்தையும் கூறி,

"அஞ்சு வருஷம் ஏழு மாசம் டிஃப்பரென்ட்.. ரைட்டா?" என்று கேட்க,

"ம்ம்ம்!" என்று மெச்சுத்தலாய் தலையசைத்து, "பக்கா!" என்றான்.

"அம்மா நான் ஹாஸ்டல்ல இருக்கும் போது எனக்கு அனுப்பினாங்க உங்க டீடெயில்ஸ் எல்லாம்.. சரி நம்ம வீட்டுக்கு வர போற மாப்பிள்ளை ஆச்சேன்னு கொஞ்சம் கவனிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.. இப்ப எனக்கே..."

"ம்ம்ம் உனக்கே..."

"அது இருக்கட்டும்.. என்னோட பர்த்டே டேட் சொல்லுங்க பார்க்கலாம்" என்றவளுக்கு இப்போது இருக்கும் வாசு புதிது.

அதுவும் ஊரில் இருந்து வந்த பின் அவனில் பெரிதாய் மாற்றம் தான். அதுவும் சட்டையின் முழுக் கையை பாதி வரை மடித்து விட்டு டிரைவ் செய்தபடி அவளிடம் அவனே சாதாரணமாய் பேசியபடி வர, இவளும் மற்றதை மறந்து அவளின் சுபாவத்தால் எளிதாய் ஒட்டிக் கொண்டாள் அவன் பேச்சினில்.

"எனக்கு யாரும் சொல்லலையே?" என்றான் உண்மையாய்.

"வேஸ்ட்!" சட்டென்று வந்துவிட, கூறிவிட்ட பின் வாயை மூடி எதற்கு.

"ஆமாமா! பெரிய குற்றம் தான்.." என்றான் அதுவும் மிக சாதாரணமாய்.

"இன்னைக்கு மழை கீழ இருந்து மேலாக்க கொட்ட போகுது" என்றவள் குறிப்பு புரிய,

"பேசலைனா மைண்ட் வாய்ஸ்ல திட்டுற.. பேசினா டைரக்டா கேட்டுடுற.. ஆனாலும் உன்னை மாதிரி எல்லாம் பேச தெரியாது" என்றுவிட்டான்.

"இவ்வளவு பேசினாலே போதும்.. மீதி நான் ஃபில் பண்ணிக்குறேன்!" அடக்கமாய் திக்ஷிதா கூற,

"அது சரி!" என்றுவிட்டான்.

வீட்டிற்கு வந்ததும் வாசு குளித்து முடித்து வெளியே வர, அவனுக்கு முன் தயாராகி சமையலறையில் நின்றிருந்தாள் திக்ஷிதா.

"முடிஞ்சதா?" வாசு கேட்க,

"ஓஹ் எஸ்! தி ஸ்பெஷல் திக்ஷிஸ் சட்னி அண்ட் ஊத்தப்பம்" என்றவள் எடுத்துக் கொண்டு டைனிங் டேபிள் வர,

"இது என்ன?" என்றவனுக்கு,

"ஸ்பைசி சில்லி சட்னி! என்னோட பாவ்ரைட்.. காரம் சாப்பிடுவிங்கன்னா ட்ரை பண்ணுங்க.. இல்லைனா வேணாம்!" என்று கூற, அதை எடுத்துக் கொண்டான் அவன்.

"நாட் பேட்!" என்றும் கூற,

"இவ்வளவு தானா?" என்றவள் முகம் மாற,

"ஏன் நல்லா பண்ணிருக்கணு தானே சொன்னேன்?" என்றான் சாப்பிட்டபடி.

"விளக்கம் குடுக்க உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.. நீங்க நடத்துங்க!" என்றவள் பேச்சில் தலைசைத்தவன் சாப்பிட்டபடி,

"பைனல் எக்ஸாம் எப்ப?" என்றான்.

"டெய்லி கேட்டுட்டு தான் தூங்கணும்ணு இருக்காங்க போல!" என்று மண்டைக்குள் ஓட,

"மைண்ட் வாய்ஸ்ஸா?" என்றவன் பேச்சில் வேகமாய் இல்லை என தலையாட்டி,

"நேத்து சொன்ன அதே டேட் தான்!" என்று அவள் கூற,

"அது காலேஜ் லாஸ்ட் டேட்.. நான் கேட்டது பைனல் எக்ஸாம் டேட்!" என்றவன் விளக்கத்தில் எங்கே முட்டிக் கொள்ள என பார்த்தவள்,

"எல்லாம் ஒன்னு தான்.. லாஸ்ட் டேட் தான் பைனல் எக்ஸாம் டேட்!" என்று கூற,

"ஓஹ்!" என்று கொண்டவன் சிந்தனையில் இருக்க,

"என்ன?" என்றாள்.

"இல்ல! ஆபீஸ்ல எல்லாருக்கும் உன்னை இன்ட்ரோ பண்ணனும்.. உனக்கு டைம் இருக்கணுமே! அதான் என்ன பண்ணலாம்.ல, எப்ப பண்ணலாம்ணு யோசிக்குறேன்" என்றான்.

"இதுல என்ன இருக்கு? நெக்ஸ்ட் வீக்கு அப்புறம் எப்படில்ல வேணா எனக்கு ஓகே!" என்றவளை, அப்படியா என அவன் பார்க்க,

"ஆமா! எப்படியும் காலேஜ் டெய்லி எல்லாம் இருக்காது.. இன்னும் ஒரு டென் டேஸ் அப்புறம் ப்ராஜெக்ட் ஒர்க், எக்ஸாம்னு வந்திடும்.. ஸ்டடி லீவ் கூட ப்ராஜெக்ட் ஒர்க்கும் லீவ் இருக்கும்" என்று கூறினாள்.

"ஸ்டடி லீவ் எதுக்கு? படிக்கறதுக்கு தானே?" என்றவன் கேள்வியில் விழித்தவள்,

"தேவையா? ஏன் வாயை குடுத்து வாங்கி கட்டிக்குற?" என நினைத்து நிற்க,

"எனிவே ஈவ்னிங் ஒரு டூ டு த்ரீ ஹௌர்ஸ் சின்ன பார்ட்டி மாதிரி வச்சுக்கலாம்.. எப்பனு மட்டும் நாளைக்கு கன்ஃபார்ம் பண்ணிடலாம்" என்று ஒரு முடிவுக்கு வர, சம்மதமாய் ஜாக்கிரதையாய் தலையை மட்டும் அசைத்தாள்.

"அப்போ..." என்று எதுவோ கூற வந்தவன்

"ம்ம்ம்!" என்று கைகளை அழுத்தமாய் மூடி நேற்றியில் குத்திக் கொண்டவன், எதுவும் கூறாமல்

"இல்ல.. ஒன்னும் இல்ல!" என்று விட்டு அறைக்கு செல்ல,

"ஆத்தாடி! திக்ஷி! என்னவோ பிளான் பன்றாப்ள! சீக்கிடாத!" என புரிந்தவள் கிட்சனுள் சென்று முடிந்த வேலையையும் முடியாத வேலையாக்கி நேரத்தை கடத்தி ஒன்றரை மணி நேரம் கழித்து தான் அறைக்கு சென்றாள்.

விளக்கு எரிந்து கொண்டிருக்க, அன்று போலவே கண்களை மூடி கண்களை மறைத்தபடி கைகளை வைத்திருந்தான்.

"தூங்கி இருக்க மாட்டான்.. இன்னைக்கு நீ பேசாம இருந்தா தான் பொழைப்பு ஓடும்!" என தனக்குள் கூறிக் கொண்டவள்,

சத்தம் இல்லாமல் விளக்கை அணைத்து படுக்கையில் விழ, உடனே அவளை சுற்றிக் கொண்டது ஒரு வலிய கரம்.

மூச்சடக்கிக் கொண்டவள் விரிந்த கண்களோடு அசையாமல் அப்படியே இருக்க,

"திக்ஷி!" என்றவன் குரலை இதுவரை அப்படி கேட்டிறாதவளுக்கு சட்டென புன்னகை வந்தாலும் உள்ளம் ரயிலை விட வேகமாய் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.

"தூங்... கலையா..?" என்றவள் சத்தம் அவனுக்கு கேட்டதும் அதிசயம் தான்.

"ஹ்ம்ம்! நாலு நாள் ஆச்சு!" என்றவனின் அதே குரலும் பதிலும் உடலில் ஒரு நடுக்கத்தைக் கொண்டு வந்திருந்தது.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
பேச்சு மட்டும் தான் ஸ்ட்ராங்
பேஸ் மட்டம் வீக் 😂😂😂😂
 
Top