• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 11

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 11

எப்பொழுதும் பேசிக் கொண்டிருக்கும் மனமும் விழித்துக் கொண்டிருக்கும் மூளையும் சற்றே ஓய்வு கிடைத்ததைப் போல அனைத்தும் வேலை நிறுத்தம் செய்திருக்க, தவித்து போயிருந்தாள் திக்ஷிதா.

பேசி இருக்கிறான் தான்.. அவளுக்கு புரியும் அளவுக்கு தெளிவாய் இதை பேசி இருக்கிறான் தான். இப்படி இன்று திடீரென என சேர்ந்து அவளை திணற செய்ய, அசையவே நடுக்கம் பிறந்தது.

"நான் தள்ளி இருக்கனும் தான் நினைக்குறேன்.. பட் ஐ காண்ட்!" அவள் உடல்மொழிக்கு இவன் விளக்கம் கொடுத்தான்.

"முதல் நாளே என்னை தேட வச்சுட்ட!" என்றவன் பேச்சில் நெளியாமல் இருக்க முடியவில்லை.

"நீ சொன்ன ரெண்டு எக்ஸாம், ப்ராஜெக்ட்.. எல்லாம் பண்ணிடலாம் தானே?" பின்னிருந்து அணைத்தவன் உதடுகள் காதோடு சேர்த்து கழுத்தினில் பதிய அவன் கேட்க, அவன் கேள்வி கேள்வியாய் நுழையவில்லை அவன் செய்கை செய்த மாயத்தால்.

அதற்கு மேல் கேள்வி கேட்டால் மறுத்து விடுவாளோ என்ற எண்ணம் இருந்தோ என்னவோ எதுவும் கேட்கவில்லை வாசு.

நடுக்கங்கள் குறையும் அளவுக்கு அவன் விரல்களா உதடா என பிரித்தறிய முடியா தொடுகைகள் அவளை நெகிழச் செய்திருக்க, வாய் மொழி எல்லாம் இரவு அவளிடம் விடுமுறை எடுத்திருந்தது.

தன் கைகளுக்குள் முழுதாய் அவளை கொண்டு வந்தவன், கண்களை மூடி இருந்தவளை விழி இமைக்காமல் பார்த்திருந்தான்.

"திக்ஷி!" என்ற அவனின் அதே மெல்லிய அழைப்பு மீண்டும் அவளுள் சிறு நடுக்கத்தை கொண்டு வர,

தன் கைகளுக்குள் துவண்ட பெண்ணைக் கொண்டு தானுமே உருகி நின்றான் வாசு.

"அத்துமீற தோணுது திக்ஷி!" என்றவன் பேச்சுக்கள் செவியை தீண்டி ஆழ் மனதில் தேங்கிவிட திண்டாடிவிட்டாள் வார்த்தைகளோடு இசை மீட்டல்களுக்கும்.

வாழ்வில் சேர காரணங்கள் இருந்த போதிலும் மனங்கள் சேர பிடித்தம் மட்டும் போதுமானதாய் இருக்கிறது.

எக்கணம் என அறியாமல் மனைவி என்ற உரிமையிலேயே திக்ஷிதாவை நெருங்க சொல்லி உள்ளம் கூற, அதை அணை போட்டு தடுத்திருந்தவனுக்கு அடுத்தடுத்த நாட்களில் பெரும் சோதனைகளை பேச்சின் மூலம் கொடுத்திருந்தாள் திக்ஷிதா.

அவள் படிப்பை காரணமாய் நினைத்தவன் அவளிடம் கேட்கும் பொருட்டு தனக்குத் தானே 'இத்தனை நாட்கள்' என சொல்லி சொல்லி மனதில் உரு போட்டு வைத்திருக்க, அது நான்கு நாட்கள் கூட தாக்குப் பிடிக்கவில்லை என்பதே உண்மையாகிப் போனது.

மென்மையாய் அணைப்பை கொடுத்து அவளுக்கு ஆறுதலை கொடுத்தவன் அரவணைப்பில் சுத்தமாய் தன்னை மறந்திருந்தாள் பெண்.

அத்தனை பேச்சு பேசியவள் என்ற எண்ணத்தில் ஒரு புன்னகை அவனில் உதயமாக, அழுத்தமாய் ஒரு இதழ் பதிப்பு கொடுத்தவன் தொடர்ந்திருக்க, அது முடிவுருவதாய் இல்லை.

இன்னும் இன்னுமாய் அவளில் தேடி அவன் ஆழ்ந்து போக, தேடலில் தானுமாய் தொலைந்து போனாள் அவனின் மனைவி.

**************

தலை பாரமாய் இருக்க விழிகள் திறக்கவே முடியவில்லை திக்ஷிதாவிற்கு.

உடலும் தன் பேச்சுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அசைய முடியாத நிலையில் சட்டென இரவு நடந்தது மனக்கண்ணில் வர, விருட்டென எழுந்து அமர்ந்தாள் திக்ஷிதா.

நன்றாய் விடிந்திருந்த வானத்திற்கு விடுப்பு கொடுப்பதை போல திரையை இழுத்து ஜன்னலை எல்லாம் மூடி இருந்தான் வாசு.

"உண்மை தானா?!" தனக்கு தானே கேட்டுக் கொண்டவள் மீண்டிருக்க,

"அடேய் ஊமைகொட்டான்! ஒரே நாள்ல நான் போட்டு வச்சிருந்த மொத்த கோட்டையும் அழிச்சுட்டியே டா" என்றவளுக்கு இன்னும் தன் நிலை குறித்து அத்தனை அத்தனை வெட்கப் பூரிப்புகள் இருக்க, முகம் செம்மையை பூசியிருந்தது தான்.

அறையில் அவன் இல்லை என்பதை உறுதி செய்தவள் மணியைப் பார்க்க எட்டைக் கடந்திருந்தது.

"காலேஜும் போச்சா!" நினைத்தைபடி குளித்து முடித்து அறைக்கு வந்தவளுக்கு வெளியில் சென்று அவனைப் பார்ப்பதை நினைக்கவே வெட்கமும் கூடவே புன்னகையும் வர, அறையை திறக்கவும் சமையல் வாசம் அவளை இழுத்தது.

நன்றாய் விழி மூடி அதை உணர்ந்தவள் சமையலறை செல்ல, தான் பார்த்த காட்சியில் மீண்டுமாய் ஒரு உறை நிலை.

வாசு தேவன் சமையலறையில் கரண்டியுடன் பார்க்க மனம் திக்கென்று ஒரு கணம் நின்றது.

இதுவும் அடுத்த அதிர்ச்சி தான் திக்ஷிதாவிற்கு.

முதல் நாள் திருமணத்தன்று கதவை திறக்கும் பொழுது தான் பார்த்த வாசு தேவன் முகத்தோடு இப்பொழுது கரண்டியுடன் போராடிய வாசு தேவனை ஒப்பிட்டு சிரிப்பு பொத்துக் கொண்டு வர, கைகளால் வாயை மூடிக் கொண்டவள் அவனை நோக்கி சென்றாள்.

"போதும்! கையை எடுத்துட்டு நல்லாவே சிரி!" என்றவன் திரும்பாமலே சொல்ல, கைகளை எடுத்தவளுக்கு சிரிப்பு நின்றிருந்தது.

"என்ன பண்றீங்க நீங்க?" திக்ஷிதா கேட்க,

"பார்த்தா தெரியல!" என்ற பதிலில்,

"வின்டேஜ் வாசுதேவன்!" நினைத்துக் கொண்டாள்.

"தூங்கிட்டு இருந்த.. அதான்!" என்றவன் செய்தவற்றை எடுத்து டேபிளில் வைக்க,

"என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல?" என்றவள் குரல் உள்ளே சென்றிருந்தது.

அதில் மெலிதாய் புன்னகைத்தவன், "இட்ஸ் ஓகே! இன்னைக்கு காலேஜ் போறது உன் இஷ்டம்.. அண்ட் சாரி டூ" என்று அவள் முகம் பார்த்து கூற, அவனை பார்க்க முடியாமல் தவித்தவள் முகம் சிவந்துவிட்டது.

"ஏதோ எனக்கு தெரிஞ்சதை செஞ்சிருக்கேன்.. சாப்பிட்டு பாரு!" என்றவன் இருவருக்குமாய் எடுத்து வைக்க,

"சாம்பார் நீங்க பண்ணிங்களா?" என்றாள் ருசித்துவிட்டு ஆச்சர்யமாய்.

"எனக்கும் ஓரளவுக்கு உன்னை மாதிரி சமைக்க வரும்.. தனியா இருக்கேன்ல.. சோ அம்மா கத்து தந்தது.." என்றவன் சட்னியை இருவருக்குமாய் பரிமாற,

அங்கே தன்னுடைய சமையல் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆனது திக்ஷிதாவிற்கு.

"இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு.. அப்படியே போக மனசு வர்ல.. அதான் இதை செஞ்சதும் எழுப்பலாம்னு இருந்தேன்.." என்றவன் கைகழுவி விட்டு,

"நல்லா சாப்பிடு.. முடிஞ்சா ரெஸ்ட் எடு.. பை!" என்று கன்னம் தட்டிவிட்டு செல்ல,

அவன் சென்ற சில நிமிடங்களுக்கும் அப்படியே அமர்ந்திருந்தவள் மொபைல் அழைப்பில் நினைவுக்கு வந்தாள்.

"இவங்க உர்ருனே இருக்கலாம்.. அடிக்கடி பிரீஸ் பண்ணிடறாங்க!" ஏன நினைத்து தலையை உலுக்கி மொபைலை எடுக்க, உமா தான் அழைத்திருந்தார்.

"ம்மா!" என்றவள் அன்னையிடம் பேச ஆரம்பிக்க,

"அம்மு! அவ போன் பண்ணினா" என்றார் உமா எடுத்ததும்.

"அவ?" என்றவளுக்கு சகோதரி நினைவு வர,

"அக்காவா?" என்றாள்.

"அவளே தான்! என்னவோ நீ கோபமா பேசினன்னு சொன்னா.. நான் என்னனு கேட்கவே இல்லை.. அவ பண்ணினத்துக்கு நீ கொஞ்சவா செய்யுவ? முதல்ல அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும் எனக்கு போன் பண்ணி சென்னைல நல்லா இருக்கேன்னு சொல்ல?" என்று கோபமாய் பேச,

"விடுங்க ம்மா! எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்!" என்றாள் அந்த பேச்சை முடிக்கும் விதமாய்.

"ம்ம் ஆமா ஆமா! நல்லாருக்கட்டும்.. நல்லவேளை அப்பா அந்த நேரம் வீட்டுல இல்லை" என்று கூற,

"இருந்திருந்தா அப்பாவும் நாலு வார்த்தை பேசியிருப்பாங்க.. ச்ச! மிஸ் பண்ணிட்டாங்களே!" என வருத்தம் போல கூற,

"அம்மு!" என்று முறைப்பாய் அன்னை கூறினார் மகள் கிண்டலில்.

"ஆமா உனக்கு போன் பண்ணி இருக்கா.. அவருக்கு தெரியுமா? சொன்னியா நீ?" என்று உமா கேட்க,

"அய்யயோ! சொல்லுவேன்னு நினச்சு கூட பார்க்காதீங்க ம்மா.. செம்ம கோபத்துல இருக்கார்.." என்றாள் திக்ஷிதாவும்.

"அந்த பயம் தான் எனக்கும்.. அதனால தான் உடனே போன் பண்ணினேன்" என்றார் அன்னையும்.

"இப்ப எதுவும் அக்காவைப் பத்தி பேசிக்க வேண்டாம் ம்மா.. கொஞ்ச நாள் போகட்டும்" என்று கூறவும் அன்னையும் அதை பற்றி இப்போது யோசிக்க வேண்டாம் என்று சொல்லிவிட,

அன்னையும் மகளுமாய் பேசிக் கொண்டிருக்கையிலேயே வாசுவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்ததற்கான அறிகுறி தெரிய,

"சரிம்மா! அப்புறமா பண்றேன்!" என வைத்தவள், செய்தியை திறக்க, மீண்டுமாய் ஒரு மன்னிப்பு கோரிக்கை.

"என் படிப்புக்காக ரொம்ப கவலைப்படுறாறாமாம்.." என்று குறும்பாய் சிரித்தவள், விளையாடலாம் என நினைத்து பின் வேண்டாம் என முடிவு செய்து புன்னகையை மட்டுமாய் அனுப்ப, பார்த்தவன் முகத்திலும் அதன் எதிரொலி.

இறுக்கமும் அழுத்தமுமாயே இருந்து பழகியவனுக்கு சொல்ல தெரியாத புது உணர்வு ஒன்று மனதில் பிரவாகம் எடுக்க, அது மனைவியினால் வந்தது என்பதையும் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

தொட்டு தாலி கட்டிய அடுத்த நொடி அந்த சங்கிலியோடு அவள் பேச்சு வார்த்தை நடத்த, அங்கே ஆரம்பித்தது தான் வாசுவின் திக்ஷிதா மீதான கவனிப்பு.

அன்னையை மாமி என அழைத்ததில் இவன் புருவம் சுருக்கி பார்த்திருக்க, அதை கவனியாமல் இருவரும் கலகலக்க ஆரம்பித்து, எளிதாய் இந்த பந்தத்தில் அவள் தன்னை பொருத்திக் கொண்டதே அவளின் மீதான ஈர்ப்பைக் கொண்டு வந்திருந்தது.

முணுமுணுவென அவள் பேசிக் கொண்டே இருக்க, எத்தனை தடுக்க பார்த்தும் பயம் இருந்த போதும் அவளால் அதை விட முடியவில்லை என்பதோடு அவனுமே சில இடங்களில் ரசிக்க ஆரம்பித்து இருந்தான்.

இப்படி அவன் அறிந்தும் அறியாமலும் இருக்கையிலேயே நேற்று காரில் அவள் அவனுடன் வயதினை வைத்து விளையாடிய விளையாட்டிலும் அதன் பின்னான பேச்சிலும் என முதல் நாளை விட அதிகமாய் தேடி தவித்து அடக்கி என பார்த்து பார்த்து இறுதியில் முடியாமல் அவளிடமே சரணடைந்துவிட்டான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
அவமானத்தில் நின்று
ஆத்திரத்தில் இணைந்து
ஆச்சர்யத்தில் திகைத்து
அம்சமாய் குடும்பத்தில் பொருந்த
அணு அணுவாய் ரசித்து _ அவனின்
அளவான பேச்சை
அடித்து போடும் அவள் பேச்சில்
ஆழ புதைந்து
அதற்கு மேல் முடியவில்லை அன்பே.
ஆழ் கடலில் முத்து குளிக்க
அழகான தாம்பத்தியம்
அரங்கேறியது....