• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 12

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 12

விழிகள் அங்கும் இங்குமாய் தவிப்புடன் அலைபாய திக்ஷிதா அமர்ந்திருக்க, அருகில் ஐஸ்வர்யாவுடன் அமர்ந்திருந்தான் விஷ்வா.

"சும்மா இரு விஷ்வா! ஏன் அவங்களை பயமுறுத்துற?" என்று ஐஸ்வர்யா கேட்க,

"ஹேய்! நான் நடந்ததை நடக்குறதை தான் சொல்றேன் ஐஷு!" என்றான் விஷ்வா.

"அதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம்.. அண்ணி! உங்களுக்கு உங்க ஹஸ் மேல நம்பிக்கை இருக்கு இல்ல?" என்று ஐஸ்வர்யா கேட்க,

"இருக்கு..." என்று இழுத்தாள் திக்ஷிதா.

"என்ன லென்ந்தா இழுக்குது?" விஷ்வா கிண்டல் செய்ய,

"நிஜமாவே இன்னும் அந்த பொண்ணு நம்ம ஆபீஸ்ல தான் இருக்கா?" என்று கேட்டாள் திக்ஷிதா அவனிடம்.

கல்லூரி முடிந்து திக்ஷி வீட்டிற்கு வந்த சில நிமிடங்களில் ஐஸ்வர்யாவுடன் அங்கே வந்திருந்தான் விஷ்வா.

காலிங் பெல் சத்தத்தில் கதவை திறந்தவள் அங்கே இருவரையும் பார்த்ததும் புருவம் உயர்த்த,

"உள்ளே கூப்பிட மாட்டிங்களா சிஸ்டர்?" என்றான் விஷ்வா.

"இருந்தாலும் உங்களுக்கு தைரியம் தான்.. அவர் கோபமா இருக்குறது தெரிஞ்சும் அவர் வீட்டுக்கே அழைச்சுட்டு வர்றிங்க பார்த்திங்களா?" என்று கிண்டல் செய்து திக்ஷிதா அவர்களை உள்ளே அழைத்து வர,

"என்ன பண்றது? எனக்கு அம்மாவை விட்டா பாஸ் தான்.. வேற யாரும் தெரியாதே!" என்ற விஷ்வாவை கொஞ்சம் கனிவாய் திக்ஷிதா பார்க்க,

"நாளைக்கே நான் ஓடி போறதா இருந்தா கூட நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்" என்றான்.

"அதானே! நீங்க கல்யாணம் பண்றதுக்கு எனக்கு டிவோர்ஸ் வாங்கி தர்றதா சொல்றிங்க.." என்றாள் திக்ஷிதாவும் பாலை அடுப்பில் ஏற்றியபடி.

"பாஸ் அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை.. நிச்சயமா அவர் தான் எங்களை சேர்த்து வைப்பார் பாருங்க" என்றான் விஷ்வாவும்.

"எப்போ?" என்றவள் பார்வை ஐஸ்வர்யாவிடம் இருக்க,

"ஏன் இப்படி பார்க்குறீங்கன்னு தெரியுது.. அந்த நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்காது.. நான் நடக்க விட மாட்டேன்.." என்றாள் ஐஸ்வர்யாவும்.

"சரி தான்.. ரெண்டு பேரோட கான்ஃபிடன்ட் லெவல் குட்.. அப்படியே மெயின்டைன் பண்ணுங்க." என்றவள் காபி கொடுத்து தானும் எடுத்துக் கொண்டு அமர,

"நானுமே அவங்க வீட்டுல பேசணும் சிஸ்டர்.. எல்லாம் முரடனுங்களா இருக்கானுங்க" என்றான் விஷ்வா ஐஸ்வர்யாவை முறைத்து.

"அப்படி ஒன்னும் நீ பேசி என்னை கல்யாணம் பண்ண வேண்டாம் போ டா!" என உடனே ஐஸ்வர்யா சிலிர்த்துக் கொள்ள,

"உண்மையை சொன்னா கோபம் வர தான் செய்யும்.." என்றவன்,

"நானும் ஒவ்வொரு முறையும் பேச தான் ட்ரை பண்றேன்.. எங்க விடுறாங்க.. இவ அப்பா தான் அந்த காலத்து ஆள்னா அண்ணனுங்க அதுக்கும் மேல.. பணத்துக்காக என்னவோ இவ பின்ன நான் சுத்துறதா நினைப்பு.. அம்மாவையே மிரட்டிட்டு போயிருக்கானுங்க" என்று கோபமாய் சொல்ல, ஐஸ்வர்யாவிடம் அமைதி.

"இப்ப நீங்க சண்டை போட்டு என்ன ஆக போகுது? பேசணும்னு நினச்சா எப்படியும் வழி கிடைக்கும்" என்று விஷ்வாவிடம் திக்ஷிதா கூற,

"ஆமா ஆமா! ப்ரீத்தாக்கு கூட கிடைக்க வாய்ப்பு இருக்கு" என்று குறுஞ்சிரிப்புடன் விஷ்வா கூற,

"அது யாரு ப்ரீத்தா?" என்றாள் திக்ஷிதா.. எங்கோ யாரோ என்று நினைத்து.

"என்ன சிஸ்டர் இப்படி கேட்குறீங்க? மூணு வருஷமா பாஸ்க்கு ப்ரொபோஸ் பண்ணி சுத்தி வந்து அவர் ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்து என்னென்ன வேலை எல்லாம் பார்த்தா தெரியுமா? இப்படி பொசுக்குன்னு நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க?" என்று கேட்க,

"பாஸ்.. ப்ரொபோஸ்.. என்ன சொல்றிங்க?" என்ற திக்ஷிதா தடுமாற ஆரம்பித்தாள்.

ஐஸ்வர்யா வேண்டாம் என கூற, கூறுவேன் என விஷ்வா நிற்க, முழுதாய் கேட்கும் முன் மயக்கம் வரும் போல ஆனது திக்ஷிதாவிற்கு.

"நிஜமாவே நம்ம ஆபீஸ்ல தான் இன்னும் அந்த பொண்ணு ஒர்க் பண்ணுதா?" திக்ஷிதா கேட்க,

"ஆமா! அதுவும் பாஸ்க்கு டைரக்ட் அண்டர்ல ஒர்க் பண்ணுது.." என்று கூறி ஐஸ்வர்யாவை பார்த்து கண் அடிக்க,

"உதை வாங்காதே!" என வாயசைத்தாள் ஐஸ்வர்யா.

"இதை ஏன் அவர் என்கிட்ட சொல்லவே இல்ல?" எப்போதும் போல மனதில் நினைப்பதாய் நினைத்து திக்ஷி சத்தமாய் கூற,

"ஓஹ்! சொல்லவே இல்லையா?" என இன்னுமாய் பற்ற வைத்தான் விஷ்வா.

"ஷட்டப் விஷ்வா! நீ சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்பு" என்று ஐஸ்வர்யா கூற,

"அதான் சொல்லியாச்சே!" என சிரித்தவன்,

"சிஸ்டர்! தலைவலினு சொல்லி பாஸ்கிட்ட ரெண்டு மணி நேரம் பெர்மிஸ்ஸன் வாங்கினேன்.. பாஸ் வந்ததும் எனக்கு தலைவலினு நீங்க அடிச்சு சொல்லணும்.. அதை அவர் நம்பனும்.. சரியா?" என்று கேட்க,

"என்னையும் போட்டு குடுத்துடாதீங்க அண்ணி.. எனக்கு எப்பவுமே வாசுண்ணானாலே பயம்" என்று ஐஸ்வர்யாவும் கூற,

மற்ற நேரம் என்றால் கலாய்த்து தள்ளி இருப்பவள் இன்று தற்போது மூளை வண்டாய் ப்ரீத்தாவை சுற்ற, சரி என்று தன்னைப் போல ஆடியது தலை.

"அப்ப வந்த வேலை முடிஞ்சது.. நாங்க அம்மாவை பார்த்துட்டு அப்படியே கிளம்புறோம்.. பாஸ் வந்தா மறக்காமல் தலைவலியை சொல்லிடுங்க.. அப்படியே ப்ரீத்தாவையும் கேளுங்க" என்று கூறி, இல்லாத தலைவலியை உண்டு பண்ணிவிட்டு சென்றான் விஷ்வா.

ஏழு மணிக்கு கால் செய்த வாசு வர தாமதமாகும் என சொல்லி இருக்க, புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.

கண்கள் களைத்து அசதியில் உறக்கத்தை தழுவும் நேரம் தனக்கு வெகு அருகில் வெப்பக் காற்றின் மோதலில் சட்டென திரும்பியவள் இறுக்கமாய் அணைத்திருக்க,

"ஹேய் திக்ஷி!" என்றவனுக்கு இன்ப அதிர்வு தான்.

தானும் வாகாய் தன்னோடு அவளை இணைத்துக் கொண்டவன்,

"பயந்துட்டியா என்ன?" என்று கேட்க, நிமிரவே இல்லை.

"திக்ஷி பயப்படறது நம்புற மாதிரி இல்லை" என்றவன் பேச்சு கேட்டாலும் அவள் எதிர்வினை ஆற்றாமல் இருக்க,

"என்னை தேடின தானே?" என்று புன்னகையாய் கேட்க, அவன் குரலோடு அதில் ஒலித்த கிண்டல் புன்னகையுமே அவளை இளக்கி இருக்க, கைகள் கொஞ்சம் தளர்ந்தது வெட்கத்தில்.

அவனே அவள் கைகளை எடுத்து தன் மேல் மீண்டுமாய் போட்டுக் கொண்டவன், "அன்னைக்கும் கூட இப்படி தான் சைலன்ட்டா இருந்த" என்றவன்,

"இந்த நேரத்துல!" என்று காதுக்குள் கூற,

"அச்சச்சோ!" என்றவள் கைகளை எடுத்த வேகத்தில் திரும்பியும் கொண்டாள்.

"சொல்லு! எதுக்காக தேடின?" என விடாமல் பின்னணைத்து அவன் கேட்க, அதில் தெளிந்தவள் நியாபகம் வந்தவளாய் அவன் புறம் திரும்பினாள்.

"நீங்க உடனே ஒருத்தரை ஆபீஸ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணனும்" என்று வேகமாய் அவள் கூறிவிட,

"என்ன?" என்றவனுக்கு சுத்தமாய் புரியவில்லை.

"இல்ல இல்ல.. நான் முதல்ல ஆபீஸ் வர்றேன்" என்றவளுக்கு ப்ரீத்தாவை பார்க்கும் எண்ணம்.

"என்ன டி உளர்ற?" என்றவன் அவள் மூக்கை உரச,

"நாளைக்கு நான் ஆபீஸ் வர்றேனே!" என்றாள் அவனை தன்னில் இருந்து பிரித்து.

"வரலாம் வரலாம்!" என்றவன் அவன் வேலையில் காரியமாய் இருக்க அவள் உளறலை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

அவளை முக்குளித்து எழ வைக்கும் வாசுவின் அந்த அந்தரங்கப் பேச்சுக்கள் அவளை கரைந்து போக வைக்க திக்ஷிதா அவனுள் உறைந்துவிட்டாள்.

காலை வாசு எழும் பொழுது திக்ஷிதா அருகில் இல்லை. எழுந்ததும் குளித்து முடித்து ஆபீஸ் செல்ல தயாராகி வெளியே வர, சமையல் வேலையை முடித்திருந்த திக்ஷிதா கிளம்பியும் இருந்தாள்.

"என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பி இருக்க.. சரி நானே ட்ரோப் பண்ணிடுறேன்!" வாசு கூறி அமர,

"ட்ரோப்பா? நான் உங்களோட தான் வர்ரேன்!" என்றாள் அவன் முன் வந்து.

"என்னோடவா?" என்றவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

"ஆபீஸ்க்கா?" என்று கேட்க, ஆம் என தலையசைத்தவள்,

"நீ வேணாம்னு மட்டும் சொல்லிப் பாரு!" என நினைத்து நிற்க,

"ம்ம்! ஓகே!" என தோள்களை குலுக்கிக் கொண்டு தட்டினை எடுத்து வைக்க, திக்ஷிதா பரிமாறினாள்.

"துளசிம்மாவை பார்க்க போனியா?" என்று கேட்க,

"இல்லையே!" என்றவள்,

"நேத்து விச்சு அண்ட் ஐஸ்வர்யா வந்தாங்க!" என்று சொல்லி முடித்து சட்டென நாக்கை கடித்துக் கொள்ள, கவனித்துவிட்டான் வாசு.

"போச்சு! விச்சு உன்னை இன்னைக்கு வாசு பிச்சு!" மனதுக்குள் சொல்லிக் கொள்ள, வாசு திக்ஷிதாவை முறைத்தவன் எதுவும் கூறாமல் சாப்பிட்டு முடித்து எழுந்தான்.

"பாவம் அவங்களை எதுவும் சொல்லாதீங்க!" திக்ஷிதா கூற,

"அந்த பொண்ணுக்கு நிச்சயம் மட்டும் நடக்கட்டும் அப்புறம் இருக்கு இவனுக்கு" என்றவன் பேச்சை மாற்றும் விதமாய்,

"காலேஜ் லீவ்வா?" என்று கேட்க,

"ஆமா! ப்ராஜெக்ட் சாரை மீட் பண்ண போகணும்.. லேட்டாவே போகலாம்.." என்றவள்,

"நாளைக்கு அம்மா வர்ராங்க.." என்று முடிக்க,

"ம்ம் கால் பண்ணினாங்க.." என்று எழுந்து கொள்ள,

"அதான் இன்னும் ரெண்டு நாள்ல எல்லாரையும் இன்வைட் பண்ணி இருக்கோமே! இப்ப என்ன?" என்றான் கார் கதவை திறந்து கொண்டே.

"ஏன் இப்ப நான் வந்தா உங்களுக்கு என்ன கெட்டு போச்சு?" என்று முணுமுணுக்க,

"நல்லா கேட்டுச்சு!" என்றவன்,

"எனக்கு எதுவும் கெட்டு போகல.. சீக்கிரம் காலேஜ் முடிக்கலைனா நீ தான் கஷ்டப்படணும்!" என்றவன் வார்த்தைகளில் ஜிவுஜிவு என கன்னம் சிவந்தது.

"சீக்கிரம் காலேஜ் முடிச்சிடு திக்ஷி! இல்லைனா அடுத்த வருஷம் இங்க என்னோட ஏஞ்சல் வந்துடுவா!" என வயிற்றில் குறுகுறுப்பு காட்டி அடிக்கடி கூறும் நியாபகத்தில் திக்ஷிதா சிவந்த முகத்தை மறைக்கும் பொருட்டு திரும்பிக் கொள்ள,

"எல்லாமே உனக்கு எக்ஸ்ட்ரீம் தான்!" என்று சிரித்து வண்டியை கிளப்பினான் வாசு.

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் வாசுவின் தனி அறையில் காதுகளை பிடித்துக் கொண்டு திக்ஷிதா தோப்புக் கரணம் இட, தன் சீட்டில் கைகட்டி அமர்ந்திருந்தவன் பார்வை முழுதும் கோபமாய் அவளிடம் மட்டுமே.

தொடரும்..