• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 13

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
நதி - 13

அடுத்தநாள் மனோகரியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்க, மனோவும் அபியும் மட்டும்தான் அந்த அறையில் இருந்தனர்.

“முரளிக்கு சொல்லிட்டியா மனோ.? ஏன் அவன்கிட்ட சொன்ன, ரொம்ப பயந்து போயிருப்பான்..” என்ற அபியின் முகத்தை நிமிர்த்திய மனோகரி,

“இன்னும் எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் அபி, இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரனும்ல, நீ எதையும் யோசிக்காத அபி. மாமா வரட்டும். அவருக்கும் எல்லாம் தெரியனும். அதுக்குப் பிறகுதான் உங்க அப்பாவை அடக்க முடியும். இதை ஏத்துக்க கஷ்டமாதான் இருக்கும். ஆனா நமக்கும் வேறவழி இல்லையேடா.?” என்றதும்,

“அவரை அப்பான்னு சொல்லக்கூட எனக்கு பிடிக்கல மனோ.?” என அபி கசப்பாக கூறும்போதே,

“அப்படியெல்லாம் சொல்லாத ராசாத்தி, அப்பாவை மன்னிச்சிடுமா.. நேத்து என் மண்டைக்குள்ள எந்த சனியன் வந்து உக்காந்துச்சோ தெரியல, அந்த ராஜா பையன் வாங்கி கொடுத்து குடிக்க வச்சிட்டான். நானும் முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன். அப்பாவை மன்னிச்சிடுமா.?” என அறைக்குள் வேகமாக வந்த கதிரவன் அபியின் கையைப் பிடித்துக்கொண்டு அழ, பெண்கள் இருவரும் குழம்பி போயினர்.

“நான் இனிமேல் உங்கிட்ட எதையும் கேட்கமாட்டேன் கண்ணு. நீ என்ன சொன்னாலும் கேட்குறேன். இந்த அப்பாவை தப்பா நினைச்சிடாதம்மா.? நான் செஞ்சது தப்புதான், அதுக்காக என்னை வெறுத்து தனியா விட்டுட்டு போயிடாதம்மா.? உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா சொல்லு.?” என மேலும் அழ,

அபிராமியின் முகம் குழப்பத்திலேயே இருக்க, மனோகரியின் முகம் இப்போது தெளிவடைந்திருந்தது.

“அபி ஹாஸ்பிடல்ல இருக்குறது உங்களுக்கு யார் சொன்னா.?” என கடுப்பாக மனோகரி கேட்க,

“யார் சொன்னா என்ன.? என் ராசாத்தி மனசை கெடுக்குறதே நீங்க எல்லாரும்தான். என்னைப்பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவளை எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்க.” என கதிரவன் மனோகரியிடம் கத்த,

“போதும் நிறுத்துங்க. உங்களைப்பத்தி எனக்கே தெரியும். அவங்க சொல்லி தெரிய நான் என்ன சின்ன பொண்ணா.?” என அபிராமியும் ஆத்திரத்தில் கத்த

“இல்ல இல்ல கண்ணு. உன்னை தப்பு சொல்லல கண்ணு. ஆனா இவங்க சரியில்ல கண்ணு. அது உனக்கு புரியல, உன்னை பார்த்துகுற மாதிரி நடிச்சி முரளியை கைக்குள்ள போட்டு இவளை அவனுக்கு கட்டி வைக்க போறாங்க. அது தெரியாம நீ இன்னும் அவங்களை நம்புறியே, இனி நீ குறை சொல்றமாதிரி நான் நடந்துக்கவே மாட்டேன் கண்ணு. என்னை நம்பு. இது உன் அம்மா மேல சத்தியம்..” என அபிராமியின் கையைப் பிடித்தபடியே அழுது தன் வழக்கமான நாடகத்தை தொடங்கினார் கதிரவன்.

மனோகரியால் இதை நம்பமுடியவில்லை. ஒரே நாள் இரவில் அப்படி என்ன நடந்திருக்கும்? அதோடு தன் குடும்பத்தைப்பற்றி பேசவும் கோபம் தலைக்கு ஏறியது.

“போதும் நிறுத்துங்க.. என்ன விட்டா பேசிட்டே போறீங்க. என் குடும்பத்தைப்பத்தி பேச என்ன அருகதை இருக்கு உங்களுக்கு. இதுக்கு மேல ஒருவார்த்தை தப்பா பேசினா, நான் மனுசியா இருக்கமாட்டேன்.” என மனோகரி கோபத்தில் ஆத்திரமாக கேட்க,

“மனோ கொஞ்சம் அமைதியா இரு..” என்ற அபிராமியின் பேச்சில் மனோவுக்கு வருத்தமாக போனது. அவளைப்பற்றி, அவள் வீட்டைப்பற்றி அசிங்கமாக பேசியதை கேட்காமல் தன்னை அடக்குகிறாளே, என எரிச்சலும் கோபமும் வர,

“என்னை ஏண்டி அடக்குற, அவர்கிட்ட பேசு. அந்தாள் வாயை திறந்தாலே பொய். பெத்த பொண்ணை என்ன வார்த்தை பேசினார், கேட்ட இல்ல. கேட்டும் உனக்கு புத்தி வரலன்னா, உன்னை மாதிரி ஒரு முட்டாளை திருத்தவே முடியாது.” என மனோகரி அப்போதும் கதிரவனை நம்பாமல் பேச,

ஆனால் அபிராமி நம்பினாள். பெற்ற தந்தை அல்லவா!

தன் தாய் மேல் சத்தியம் என்றால், எந்த பெண்ணும் நம்பாமல் இருக்கமாட்டாள். அபியும் நம்பினாள். கதிரவனை முழுவதுமாக நம்பினாள்.

“மனோ அவர் அம்மா மேல சத்தியம் பன்றார்.” என்று தோழியை சமாதானம் செய்ய,

“அதனால அவரை நம்புறியா? அதெல்லாம் பொய் சத்தியம் அபி. உன்னோட வீக்னஸ புரிஞ்சு வச்சிட்டு பேசுறார், அது உனக்கு புரியுதா இல்லையா.?” என்ற மனோ அபியின் முகத்தில் தெரிந்த உணர்வில் ‘இதெல்லாம் திருந்தவே திருந்தாது’ என நினைத்து அமைதியாகிவிட்டாள்.

மகளின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் கதிரவன்.

அதனால் “சரி கண்ணு நீ என்னை நம்பவேண்டாம், இந்த பொண்ணு சொல்றதையே நம்பிக்கோ, உன் அண்ணன் இங்க வர வரைக்கும் நீ இவங்க வீட்டுலயே இரு.. உனக்கு எப்போ என்மேல நம்பிக்கை வருதோ அப்போ நம்ம வீட்டுக்கு வந்தா போதும்.” என்றவர், வேறேதுவும் பேசாமல் வெளியில் கிளம்பிவிட, இப்போது மனோகரிக்கே இவர் திருந்திவிட்டாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

அன்று மாலையே அபியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். முரளியும் அவளிடம் பேசியிருக்க, அபியும் தெளிவாகவே இருந்தாள்.

அபியை பார்க்க வேண்டும் என்ற பார்கவியை, கார்த்தி வேண்டாம் என தடுத்திருக்க, அபியை பார்க்கும் சந்தர்ப்பம் பார்கவிக்கு அப்போது அமையவில்லை.

கதிரவன் அதன்பிறகு அபியை வந்து பார்க்கவில்லை. ஏதோ ஒரு வேலைக்கு போகிறார் என்று மட்டும் மனோவின் அப்பா மூலம் தெரிந்து கொண்டாள் அபிராமி.

இரவு மட்டும்தான் வீட்டிற்கு வருகிறார். அதுவும் முன்னைப்போல் குடித்துவிட்டு வீதியில் சத்தம் போடுவதும் இல்லை. கதிரவனின் இருப்பே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை. மேலும் கதிரவனின் செயல்பாடுகள் அனைத்தையும் கவனித்த மனோகரியின் பெற்றோருக்கே அபியின் தற்கொலை முடிவு அவரை மாற்றி திருத்திவிட்டது என்றுதான் தோன்றியது.

இந்த இடைப்பட்ட நாட்களில் கார்த்தியைப்பற்றி அபி யோசிக்கக்கூட இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவளுக்கு யோசிக்கவே பயமாக இருந்தது. அதற்கு காரணம் அன்று அவன் நடந்து கொண்ட முறை. அதோடு அவளை அவன் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டுவந்த விதம். அப்போது அவன் முகத்தில் தெரிந்த உணர்வுகளை அவளால் பார்க்க முடியவில்லை என்றாலும், அவன் உடல் நடுக்கத்தை அபியால் உணர முடிந்தது.

இது சரியில்லை என்று அவளுக்கு புரிய, அவனைப்பற்றி யோசிக்கவே தோன்றவில்லை. இதைப்பற்றி யாரிடமும் பேச முடியாமல், அழுத்தம் அதிகமாக மேலும் மேலும் தனக்குள் ஒடுங்கிப் போனாள் அபிராமி.

அந்த வார கடைசியில் அபிராமியும் மனோகரியும் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் கதிரவனும் கார்த்திக்கும் நின்று பேசிக் கொண்டிருந்ததை கவனித்தனர்.

இதை முதலில் கவனித்தது மனோகரி தான். அவள் தான் அபிராமியை அழைத்து “அபி அங்க பாரு உங்க அப்பா” என்றவள் “கூட இருக்கிறது அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்த கார்த்திக் சார்தானே,” என்றதும் வேகமாக திரும்பி அவர்களைப் பார்த்தாள் அபிராமி.

இருவரும் நண்பர்களைப் போலவே நின்று பேசிக் கொண்டிருந்ததை கவனித்த மனோகரிக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

அன்று இதே கார்த்திக்தானே கதிரவனை போட்டு அடித்து உதைத்தது எல்லாம். இப்போது அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்களே, ஏதோ தவறாக படுகிறதே என மனோகரியின் யோசனை எங்கெங்கோ சென்றது.

ஆனால் அபிராமிக்கோ அவனைப் பார்த்ததும் உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

இந்த இடைப்பட்ட நாட்களில், கார்த்திக்கை அவள் மறந்து விட்டாள் என்று எல்லாம் சொல்ல முடியாது, ஏனென்றால் மறக்க முடியாத அளவிற்கு அவளை மிரட்டியிருந்தானே.

ஆண்கள் இருவரும், பேச்சு சுவாரஸ்யத்தில் இவர்களை கவனிக்காமல் இருக்க, அதை உணர்ந்த அபிராமி “மனோ! போலாம் மனோ. அவங்க பாக்குறதுக்கு முன்னாடி நம்ம போயிடலாம்” என பதட்டமாக கூப்பிட,

தோழியின் பதட்டமும், கார்த்தியின் இந்த புது அவதாரமும் மனோகரியை மேலும் யோசிக்க வைத்தது.

அடுத்த சில நிமிடங்களில் கதிரவனிடமிருந்து கார்த்தி விடைபெற கதிரவனும் சிரித்துக்கொண்டே நின்றிருந்தார்.

கார்த்திக்கின் கார் சென்ற அடுத்த நிமிடம், கதிரவனின் முகம் சிரிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கோபத்திற்கு மாறியது.

அவர் முகத்தில் வந்துபோன உணர்வுகளுக்கு என்ன பெயர் வைப்பதென்றே தெரியவில்லை மனோகரிக்கு.

இப்போது கோபத்தையும் தாண்டி பழிவெறி அவர் கண்களில் உருவாவதை அவளால் பார்க்க முடிந்தது.

அவள் நினைத்தது போல கதிரவன் திருந்தவில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக மகளிடம் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று மனோகரிக்கு தெளிவாக புரிந்தது.

இதில் கார்த்தி எங்கு வந்தான் என்பது தான் அவளுக்கு புரியவில்லை, மனோகரி இந்த யோசனையில் இருக்க அபிராமியோ “வா மனோ போகலாம், வா மனோ..” என சிறுபிள்ளை போல, முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.

“ம்ச் அபி, நீ என்ன சின்ன குழந்தையா? எப்போ தான் உனக்கு விவரம் வரும், உன்ன சுத்தி ஏதோ தப்பா நடக்குது, அது உனக்கு புரியுதா இல்லையா?” என கோபமாக கத்த,

“ஏன் மனோ நீயும் என் மேல கோபப்படுற? எனக்கு அவங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே பயம்.” என மிரண்டு போய் சொல்ல, அதற்குமேல் அபிராமியிடம் மனோகரியால் கோபப்படக் கூட முடியவில்லை.

“ம்ச் போ அபி, உன்னை வச்சுட்டு என்னதான் செய்றதோ” என சலித்தபடியே மனோகரி நடக்க, அபியும் அவளுடன் நடந்தாள்.

அன்று வீட்டிற்கு வந்த கார்த்தியின் முகம் மிகவும் யோசனையில் இருந்தது.

அதை கவனித்த சிவநேசன் “கார்த்தி என்ன நடக்குது ஆபீஸ்ல, அந்த ஆளை எதுக்கு வேலைக்கு சேர்த்துருக்க, அவன பத்தி விசாரிச்சா, யாரும் நல்ல மாதிரியே சொல்ல மாட்டேங்கிறாங்க, பணத்துக்காக எந்த எல்லைக்கு வேணும்னாலும் போகக்கூடிய ஆள்னு சொல்றாங்க, ஏன் அது உனக்கே தெரியும், அப்படி இருக்கும்போது அவனுக்கு நம்ம ஆபீஸ்ல என்ன வேலை?” என சற்று குரலை உயர்த்தி கேட்க,

“தாத்தா இப்ப என்கிட்ட எதுவும் கேட்காதீங்க, ஆனா நான் காரணமில்லாமல் அந்த ஆளை உள்ளே விடல, கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டிடறேன்” என்றவனின் குரலில் இருந்த இறுக்கம் அவரை மேலே பேச விடவில்லை.

ஆனலும் அவனை அப்படியே விட மனமில்லை. “என்னமோ பண்ணு ஆனால் நம்ம குடும்பத்துக்கோ பிசினஸ்க்கோ அந்தாளை வச்சு எந்த கெட்ட பெயரும் வந்துடக்கூடாது, அதை மனசுல வச்சுட்டு எந்த வேலையும் செய்” என கண்டிப்பாக கூற,

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் தாத்தா, அப்படி எந்த பிரச்சனையும் வராது என்னை நம்புங்க” என்றவன் எழுந்து சென்று விட்டான்.

கார்த்தி அங்கிருந்து நகரவும், பார்வதி அருகில் அமர்ந்தவாறே “என்னவாம் உங்க பேரனுக்கு, உர்ருன்னு இருக்கான்..” எனவும்,

“அவனை குறை சொல்லலன்னா உனக்கு பொழுதே போகாதா?” என்றவர் மனைவி முறைக்கவும், “அவன் ஏதோ பண்றான்.. தேவையில்லாம பிரச்சினையில மாட்டிக்கக்கூடாதேன்னு யோசிக்கிறேன்.” என்றவர் அவருக்கு தெரிந்ததை சொல்ல,

“ம்ம் அந்த பொண்ணை காப்பாத்த தான் ஏதோ பண்றான், நல்ல விசயம்தானே அதுக்கு ஏன் அவனை கண்டிக்கிறீங்க, அவனை விடுங்க. அப்படியே மாட்டினாலும் எப்படி வெளிய வரனும்னு அவனுக்கு தெரியும்..” என்ற பார்வதியை முறைத்தார் சிவநேசன்.

“என்னை முறைச்சு ஒரு பயனும் இல்ல, அவனை இப்படி வளர்த்ததே நீங்கதான். இருங்க உங்களுக்கு பிபி அதிகமாகிடுச்சு போல மாத்திரை எடுத்துட்டு வரேன்..” என கணவனை கிண்டலடித்தவாறு அங்கிருந்து நகர்ந்துவிட்டார் பார்வதி.

 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
306
115
43
Tanjur
வந்துட்டீங்களா தெய்வமே.. ஒருவழியா இவனை கண்ணுல காமிச்சிட்டீங்க.
மனோகரி யோசிக்குறது சரிதான். நாய் வாலை நிமிர்த்த முடியாது தான, அதஏ மாதிரிதான் இந்த கதிரவனையும் திருத்த முடியாது.
கார்த்தி ஏதோ ப்ளான் பண்ணிட்டான் போல.......
 
  • Love
  • Haha
Reactions: Vimala and Vathani

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
நீங்க எப்படித்தான் கம்பி கட்டினாலும் அவனை நல்லவன்னு ஒத்துக்க முடியாது ஜி..
வேஸ்ட் ஃபெல்லோ
 
  • Like
  • Love
Reactions: Vathani and Vimala

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
கதிரு எப்படி நடிக்கிற, அதை கூட இந்த அபியால கண்டுபிடிக்க முடியல இது நிஜமாவே லூசுதான் போல. இப்படி இருந்தா கார்த்தி வச்சுதான் செய்வான்.
அவன் மேல தப்பு இருக்குறமாதிரி தெரியலயே
 
  • Like
  • Love
Reactions: Vathani and Vimala

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
அக்கா
இதை நான் சொல்லனும்னு ரொம்ப நாளாவே நினைச்சிட்டு இருந்தேன். இன்னைக்கு fbல உங்க போஸ்ட் பார்த்து கஷ்டமா போச்சு. யாருக்காகவும் எதுக்காகவும் நீங்க எழுதுரதை நிப்பாட்டாதீங்க. இது ஒரு சுயநல உலகம். நீங்க சொன்ன மாதிரியே ஒரு ஜிகினா உலகம். யாரையும் வளரவிடாது. நீங்க வளர்ந்துட்டீங்கன்னு பொறமைதான் காரணம்.
எதையும் மனசுல போட்டு குழப்பாதீங்க. உங்க கதையை படிக்க நாங்க இருக்கோம். நீங்க எழுதுங்க க்கா. முடிஞ்சா கார்த்தியும் தினம் ஒரு எபி கொடுங்க.
அவங்க எல்லாம் படிச்சு காண்டாகட்டும்.
நாம ஃபன் பண்ணுவோம்.
டேக் கேர் க்கா..
 
  • Love
Reactions: Vathani and Vimala

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
வந்துட்டீங்களா தெய்வமே.. ஒருவழியா இவனை கண்ணுல காமிச்சிட்டீங்க.
மனோகரி யோசிக்குறது சரிதான். நாய் வாலை நிமிர்த்த முடியாது தான, அதஏ மாதிரிதான் இந்த கதிரவனையும் திருத்த முடியாது.
கார்த்தி ஏதோ ப்ளான் பண்ணிட்டான் போல.......
கதிருக்கு ஆப்பு ஆன்தி வே போல
 
  • Haha
Reactions: Vathani

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
ரொம்ப நாளா வெய்யிட் பண்ணிட்டு இருந்தேன் இந்த எபிக்கு..
தேங்க்ஸ் சிஸ்..
அடுத்த எபி சீக்கிரம் கொடுங்க
 
  • Wow
Reactions: Vathani

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
அக்கா
இதை நான் சொல்லனும்னு ரொம்ப நாளாவே நினைச்சிட்டு இருந்தேன். இன்னைக்கு fbல உங்க போஸ்ட் பார்த்து கஷ்டமா போச்சு. யாருக்காகவும் எதுக்காகவும் நீங்க எழுதுரதை நிப்பாட்டாதீங்க. இது ஒரு சுயநல உலகம். நீங்க சொன்ன மாதிரியே ஒரு ஜிகினா உலகம். யாரையும் வளரவிடாது. நீங்க வளர்ந்துட்டீங்கன்னு பொறமைதான் காரணம்.
எதையும் மனசுல போட்டு குழப்பாதீங்க. உங்க கதையை படிக்க நாங்க இருக்கோம். நீங்க எழுதுங்க க்கா. முடிஞ்சா கார்த்தியும் தினம் ஒரு எபி கொடுங்க.
அவங்க எல்லாம் படிச்சு காண்டாகட்டும்.
நாம ஃபன் பண்ணுவோம்.
டேக் கேர் க்கா..
எக்சாட்லி சாம்பூ..
சரியா சொன்ன.. யாருக்காக நீங்க எழுதுறதை நிறுத்த போறீங்க. அவங்க என்னமோ சொல்லிட்டு போகட்டும். உங்க வளர்ச்சியை பிடிக்காதவங்க சொன்னா நீங்க அதை ஏன் மண்டைல ஏத்தனும். விட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருங்க. அடுத்த ஃபர்னிசர் கிடைச்சிருக்கு. இதை பங்கம் பண்ணுவோம்.
டேக் கேர் க்க்கா
 
  • Love
Reactions: Vathani

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ரெம்ப நாளா இந்த கதை என்ன ஆச்சுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் வந்தாச்சு சூப்பர் 😍சகி