அத்தியாயம் 15
அறைக்குள் வந்தவன் சாப்பாட்டை அவளருகில் வைக்க,
"அக்கா லவ் பண்ணினது நிஜமா எனக்கு தெரியாது!" என்றாள் தவிப்பாய் அவனை நோக்கி.
தன் எண்ணத்தில் இருந்தவளுக்கு வாசு உள்ளே வந்ததே தெரியாமல் இருக்க, அருகில் வந்து தட்டை வைக்கவும் சுயம் வந்தவள் அவன் முகம் பார்த்து கூற,
"தெரியாமலா அனுப்பி வச்ச?" என்றான் நடந்தபடி.
"அய்யோ இல்லைங்க.. மண்டபத்துல வச்சு என்கிட்ட சாக போறதா சொன்னா?" அவனருகே வேகமாய் வந்து கூற,
"ஓஹ்! அப்புறம்?"
"நிஜமா தான்! அப்ப அந்த இடத்துல தான் அவ விரும்புறதே எனக்கு தெரியும்.. அதுவும் நான் அந்த ரூம்குள்ள போகும் போது கையில ஒரு பாட்டிலோட நின்னுட்டு இருந்தா.."
"சோ நீ அனுப்பி வச்சுட்ட?" என்றதற்கு என்ன பதில் கூற ஆம் என்பதை தவிர.
வேறு என்ன செய்திருக்க முடியும் என்று திருப்பிக் கேட்டால் தேவை இல்லாமல் கோபம் அதிகமாக தான் செய்யும் என அமைதியாய் நிற்க,
"சரி கல்யாணத்துக்கு அப்புறம் நீ பேசவே இல்லையா அவங்களோட?" என்று அடுத்து அவன் கேட்க,
"இல்லை.. நான் பேசினேன்.. ஆனால் அப்ப அவ எங்க இருக்கான்னு தான்..." என்று கூறும் முன்,
"இவ்வளவு நாளும் உன்கூட உன் பக்கத்துல இங்க இந்த வீட்டுல தானே இருந்தேன்? சொல்லணும்னு நினைச்சா சொல்லி இருக்கலாம் தானே?" என்றவன் என்ன நினைக்கிறான் என்ன கேட்க வருகிறான் என புரியாமல் பார்த்தாள் திக்ஷிதா.
"அவ விட்டுட்டு போனா.. சோ நீ பாவம் பார்த்து என்னை கல்யாணம் பண்ணி இருக்க?" என்று கேட்க,
"என்னை பேசுறீங்க நீங்க? இதுக்கு நான் அப்பவே உங்ககிட்ட பதில் சொல்லி இருக்கேன்!" என்றாள் வேகமாய்.
கோபத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என அவளுக்கும் கோபம் வர.
"ஆமா சொல்லி இருக்க.. பதிலா தான் சொல்லி இருக்க.. காரணம் சொல்லலை இல்ல? இப்ப தான் தெரியுது.."
"என்ன காரணம்? நீங்களா கற்பனை பண்ணாதீங்க?"
"நான் கற்பனை பன்றேனா? ஆக மொத்தம் குடும்பமா சேர்ந்து தான் அந்த கல்யாணத்தை நிறுத்தி இந்த கல்யாணத்தை பண்ணி வச்சிருக்கீங்க.. இப்ப உன் சிஸ்டர் வீட்டுக்கும் வந்தாச்சு.. அப்படி தானே?" என்று கேட்கவும் முணுக்கென கண்ணீர் வந்துவிட்டது திக்ஷிதாவிற்கு.
"நான் முதல் நாளே நினச்சேன்..எப்படி இவ்வளவு ஈசியா என்னோட என் பேமிலியோட அடப்ட் ஆக முடிஞ்சதுன்னு" வாசு கூற,
"நீங்க பேசுறது தப்பான மீனிங் வருது!" என்றவள் குரல் கமர, கண்ணீர் நிறுத்தாமல் வந்து கொண்டிருந்தது.
வாசு அதற்கு எதிர்ப்பு கூறவில்லை. அவன் மௌனமும் அவளுக்கு பிடித்தமில்லை.
"தாலி கட்டறதுக்கு முன்னாடி ஓடிப் போறது தான் இப்ப பஷன் இல்ல? இவ்வளவு நாள்ல எல்லாம் மறந்து நீங்க எல்லாம் ஒன்னா சேர்ந்தாச்சு.. என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?"
"உங்களுக்குன்னா? என்னை பேசுனா என்னை மட்டும் தான் பேசணும்.. என் அப்பா அம்மா என்ன பண்ணினாங்க?" என்று திக்ஷிதா கேட்க,
"நீ தெரியாத மாதிரி பேசுறதுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.."
"இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு? அவ போனதா இல்ல நான் உங்க வாழ்க்கைக்குள்ள வந்ததா? ரெண்டுமே நான் எதிர்பார்க்காமல் நடந்தது தான்.." என்று கூற,
"எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்லை!" என்றான் வாசு.
"என்ன தேவை இல்ல? நான் சொல்லுவேன்.. நீங்க கேட்டு தான் ஆகணும்.. உண்மை என்னனு தெரியாமல் என்னை கேட்க கூடாத கேள்வி கேட்டீங்க இல்ல.. இப்ப தெரிஞ்சுக்கோங்க.. தெரிஞ்சு தான் ஆகணும்.." என்றவள்,
"ஆமா நான் தான் அனுப்பி வச்சேன்.. உங்களுக்கு அவ யாரோ தான் இப்பவும்.. எனக்கு அக்கா.. இருபது வயசு வரை ஒன்னா இருந்திருக்கோம்.. அவ சாக போறேன்னு சொன்னா.. என்னால இருக்குற ரெண்டு வழில ஒன்னு தான் சரினு சொல்ல முடிஞ்சது.. செத்து போன்னு சொல்ல முடியாது அதான் போய்டுன்னு அனுப்பினேன்.." என்று கூற, இன்னும் தீயாய் தான் அவன் முறைத்து நின்றான்.
"அய்யா சாமி! அவளை நீங்க விரும்பி அவ ஓடி போய் தெரியாத் தனமா நான் உங்க வாழ்க்கைல வந்திருந்தா..." என்றவள் பெரிதாய் கையெடுத்து கும்பிடு வைக்க,
"என்ன பேசுற நீ?" என்றான் இன்னும் ஏறிய கோபத்துடன்,
"இல்லைனா இன்னும் நீங்க அதையே புடிச்சுட்டு தொங்க வேண்டிய அவசியம் இல்லை இல்ல! அப்படி நினைப்பு இருந்தா தான் சொன்னேன்" என்று சிவந்த முகத்துடன் கூற, முகம் சுழித்தான் அந்த நினைப்பிற்கே.
"நான் அக்காவை அனுப்பினது உங்களுக்கு எப்படி தெரியும்? அவ அம்மா வீட்டுக்கு வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்? எல்லாமே நான் விஷ்வா பேசினதை கேட்டதனால இல்ல?" என்றவள் முழு கோபத்திற்கு சென்றிருந்தாள்.
"அந்த இடத்துலயே வந்து என்னை நாலு ஆடி அடிச்சு நீங்க கேட்டிருந்தா இன்னும் சந்தோசப்பட்டிருப்பேன்.. சும்மா அரைகுறையா கேட்டதுக்கு நான் பழி ஆகணுமா? அவ வீட்டுக்கு வந்தது உண்மை.. ஆனால் அவளை என் அப்பா சேர்த்துகிட்டாங்கன்னு உங்களுக்கு யார் சொன்னா?" என்று கேட்க, பதில் இல்லை அவனிடம்.
"துரத்தி விட்ருக்காங்க.. வீட்டு பக்கமே வராதன்னு துரத்தி விட்ருக்காங்க.. போதுமா.. இப்ப மனசுக்கு திருப்தியா இருக்குதா? உண்மை தெரியாம என் அம்மா அப்பாவை இன்னொரு வார்த்தை சொன்னிங்க" என்றவள் பேசிய பேச்சில் வாசுவின் பொங்கிய கோபம் தணிந்து கொண்டிருக்க,
"எனக்கு போன் பண்ணினான்னு சொன்னேன்.. என்ன பேசினேன்னு கேட்டிங்களா? குதிக்குறிங்க? எனக்கு இனி பண்ணாத.. விதி இருந்தா பார்க்கலாம்னு சொன்னேன்.. ஆனால் அந்த விதி எனக்கு இனி தேவையே இல்லை" என்று கூற, அவசரப்பட்டது புரிந்தது வாசுவிற்கு.
"என் வயசுக்கு என்னால யோசிக்க முடிஞ்சது அவ்வளவு தான்.. அது அந்த ப்ரீத்தா விஷயத்திலயும் சரி சங்கமித்ரா விஷயத்திலயும் சரி.. தப்பு பண்ணினத்துக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்.. என் அம்மா அப்பாவை பேச யாருக்கும் எந்த உரிமையும் நான் குடுக்க மாட்டேன்.. பொண்ணை பெத்து வளத்து உங்க கையில கொடுத்துட்டா உங்க இஷ்டத்துக்கு பேசலாம்னு நினைப்பா.." என்றவளுக்கு கோபம் எல்லாம் அன்னை தந்தையை அவன் எப்படி பேசலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தது.
"எதுக்கு கோபம்னு ஒரு அளவு இருக்கு.. நான் என் அக்காகிட்ட பேசினா உங்களுக்கு என்ன? அது தப்புனா பேசாதனு சொல்லனும்.. அவளை அனுப்பி வச்சேன்னா அதுக்கு என்ன காரணம்னு கேட்கணும்.. அதுவும் தப்புனா சொல்றது தானே? எதுக்கு தாம்தூம்னு குதிக்கணும்?" என்று கேட்க, தன் கோபம் அர்த்தம் அற்றதோ என்று சந்தேகமே வந்துவிட்டது வாசுவிற்கு.
"இப்ப என்ன? இதுக்காக என்னை டைவர்ஸ் பண்ண போறிங்களா? சரி போங்க பண்ணிக்கோங்க" என்றவள் பேச்சாலேயே அரண்டு விழிக்க வைத்துவிட்டாள் வாசுவை.
"போங்க.. போய் நிம்மதியா தூங்குங்க.. ஆளைப் பாரு.." என்றவள் அறையை விட்டு வெளியே செல்ல,
"ப்ச்!" என்றவன் தன் நடு நெற்றியில் ஐவிரல்களையும் மடக்கி குத்திக் கொண்டான்.
இப்பொழுது சர்வ நிச்சயமாய் தன் கோபம் தேவை இல்லாதது என்று தான் தோன்றியது வாசுவிற்கு.
இந்த பேச்சு பேசுவாளா என்று தலை சுற்றிப் போனவனுக்கு அவளைத் தேடி செல்ல அத்தனை தயக்கமாய் இருக்க அவள் வருகைக்காக காத்திருந்தான்.
"என்ன அம்மு?" தன் அருகில் வந்து வேகமாய் படுத்துக் கொண்டவளைப் பார்த்து சிவகாமி கேட்க,
"மாமி! இன்னைக்கு உங்களோட படுத்துக்குறேனே! அம்மாவைப் பாக்கணும்னு இருக்கு!" என்ற வார்த்தை அதற்கு மேல் மறுக்கவிடவில்லை.
"தலைவலி சரியா போச்சா? சாப்பாடு கொண்டு வந்தானே சாப்டியா?" என்று அவளின் சிவந்த விழி பார்த்து கேட்க,
"நான் தூங்குறேன் மாமி.. காலையில பதில் சொல்லவா?" என்று திக்ஷிதா கேட்கவும், மெலிதாய் சிரித்தவருக்கு பாவமாயும் இருந்தது அவளை குழந்தையாய் நினைத்து.
"ஆமா நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டவளுக்கு வீட்டிற்கு வந்தவர்களை கவனிக்காமல் விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியும் மேலிட,
"நீ தரலை அதான் நானே எடுத்து போட்டு சாப்பிட்டுட்டேன்.." என்றவர் பதில் நிம்மதியை தர,
"சோ ஸ்வீட் மாமியார் நீங்க.. உங்க பையனும் உங்களை மாதிரி இருந்திருக்கலாம்" என்றாள் திக்ஷிதா.
"உண்மையை சொல்லு டி.. அவன்கூட சண்டை போட்டு இங்க வந்து படுத்துட்டு இருக்கியா?" என்று கேட்க,
"ம்ம்க்கும்ம்.. நீங்க வேற! அவரே என் தொல்லை தாங்காமல் தான் தள்ளி விட்டார்.. நாங்களாவது சண்டை போடுறதாவது" என்றவள் பேச்சில் சண்டைக்கான அடையாளம் எதுவும் இல்லாமல் போக,
"அம்மு! பேசாமல் அடுத்த வாரம் சனிக் கிழமை ஊருக்கு கிளம்பி வந்துடுங்க.. குலதெய்வ கோவிலுக்கு ஒரு பொங்கலைப் போட்டு வேண்டிக்கலாம்.. என்னவோ மனசுக்கு நெருடலா இருக்கு.." என்று கூற,
"சமத்து மாமியார் நீங்க.. தான் ஆடா விட்டாலும் தசை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க?" என்றவள் பேச்சில் சிவகாமி விழிக்க,
"பொங்கல் தானே மாமி போட்டுடுவோம்.. கூடவே உங்க பையனுக்கும் ஒரு பாயசத்தை போட்டுடுவோம்" என்று கூற,
"வாய் டி உனக்கு.. உன்கிட்ட எல்லாம் அவனுக்கு சண்டை போட மனசு வருமா? நான் தான் தேவை இல்லாமல் குழம்பிக்குறேன்!" என்றார்.
"சனிக்கிழமை அவர் ஆபீஸ் ஸ்டாப்க்கு எல்லாம் பொங்கல் போடணும்னு சொன்னார்.. அதனால நாம செவ்வாய் கிழமை பொங்கல் போடலாம்.. சரியா?" என்று கேட்க,
"ஆபீஸ்ல போங்கலா?" என்று சிவகாமி விழிக்க,
"அதான் மாமி! மேரேஜ் பார்ட்டி!" என்று கூறி கண் சிமிட்ட,
"உன்னை!" என்றவர் வலிக்காமல் அடிக்க, அவருடன் கதையளந்த படியே தூங்கிப் போனாள்.
நீண்ட நேரமாகியும் வராமல் போன மனைவியை தேடி வாசு வெளியே வர, ஹாலில் விஷ்வா நல்ல உறக்கத்தில் இருந்தான்.
எங்கே என்று நினைத்தவன் இருந்த மற்றொரு அறைக்குள் சத்தம் இன்றி எட்டிப் பார்க்க, தன் அன்னை அருகே தூக்கத்தில் குழந்தையாய் தன் மனைவி.
'அம்மாகிட்ட என்னத்த சொல்லி வச்சாளோ!' என்ற எண்ணம் வர,
"ம்ம்ஹும் இனி இவகிட்ட சத்தமா கூட பேசிட கூடாது' என்றொரு முடிவிற்கும் வந்துவிட்டான் ஆண் சிங்கம்.
தொடரும்..