• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 15

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
நதி - 15

அதே நேரம் இங்கு முரளியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் மனோகரி. முரளியால் இப்போது வர முடியாமல் போக, அதற்கான காரணத்தை அவன் கூறியதும் அபிராமி அமைதியாகிவிட, மனோதான் அவனிடம் கத்திக் கொண்டிருந்தாள்.

“உங்க அப்பாவை நம்பி அவளை இங்க வைக்க முடியாது மாமா, நீங்க வர வேண்டாம், அபி அங்க வரட்டும்..” என மனோ விடாமல் முரளியிடம் பேச,

“மனோ என்னோட சிச்சுவேசனே சரியில்ல, நானே பசங்க கூடத்தான் ரூம் ஷேர் பண்ணியிருக்கேன், இப்போ அபியை கூட்டிட்டு வந்தா, சரியா இருக்காது. இன்னும் ஒரே மாசம்தான். இந்த பசங்க ரூம் வெக்கேட் பண்ணிடுவாங்க, நான் அபியை கூப்பிட்டுக்கிறேன். அதுவரை எப்படியாவது மேனேஜ் பண்ணு ப்ளீஸ்..” என முரளி அவளிடம் கெஞ்ச,

“உங்களுக்குத்தான் மாமா இங்க அபியோட சிச்சுவேசன் புரியல. இதுக்கு மேல உங்களுக்கு புரிய வைக்கவும் என்னால முடியல. என்னமோ செய்ங்க. ஆனா என்ன நடந்தாலும் நாளைக்கு எங்க வீட்டாட்களை நீங்க கொஸ்டீன் பண்ணக்கூடாது.” என மனோகரியும் திட்டவட்டமாக சொல்லிவிட்டாள்.

முரளிக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் அவன் சூழ்நிலையும் அப்படித்தான். அவன் கம்பெனியில் இருந்து இரண்டு வாரத்திற்கு அவனை ஜெர்மனிக்கு அனுப்ப இருந்தனர். மிக முக்கியமான ப்ராஜக்ட். அவனால் முடியாது என்றும் சொல்லமுடியாது. இரண்டு வாரம் என்று அனுப்பி மேலும் நாட்களை கூட்டுவார்கள்.

அது மாதக்கணக்கில் கூட முடிந்து விடும். அந்த நேரம் அபியை இங்கு வர வைக்கவும் முடியாது. நண்பர்கள் தான் என்றாலும் யாரையும் நம்பும் நிலையிலும் அவன் இல்லை. கதிரவனை நம்பி தங்கையை விடவும் பயம். அங்கு தனியாக அழைத்துக் கொள்ளவும் பயம். அதனால்தான் மனோகரியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான்.

ஒருவழியாக மனோகரியை சமாதானம் செய்தவன் “நான் இந்த முறை வந்து மாமாக்கிட்ட பேசிடுவேன் மனோ. நீ எந்த வீம்பும் செய்யக்கூடாது. ஒழுங்கா விசாவுக்கு அப்ளை பண்ணிடு. அபிக்கு செஞ்சிட்டு நாம செய்யலாம்னு எல்லாம் யோசிக்காத. நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் அபிக்கு எல்லாம் செய்யனும்..” எனவும்,

“அதெல்லாம் வேண்டாம் மாமா, சும்மாவே உங்க அப்பா நான்தான் உங்களை மயக்கி வச்சிருக்கேன், அபியை நாங்க கன்ட்ரோல் பண்ணி வச்சிருக்கோம்ன்னு ரொம்ப அசிங்கமா பேசுறார். இதுல அவர் சொல்ற மாதிரியே எல்லாம் நடந்தா ஊரே கேவலப்படுற மாதிரி எதுவும் செஞ்சிடுவார்.” என குரலடக்கி சொல்ல,

“அவர் பேசுறதை எல்லாம் நீ யோசிக்காத. நான் முக்கியமா இல்லையான்னு மட்டும் யோசி. எங்களை பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை. தகுதியில்லாத ஒருத்தர் பேசுறதுக்குத்தான் நீ முக்கியத்துவம் கொடுப்பியா.?” என்றதும்,

“அவர் பேசுறதை கேட்டா உங்களுக்கே தெரியும்..” என மனோகரியும் விடாமல் பேச,

“நம்ம வாழ்க்கையை விட, அவரோட பேச்சுக்குத்தான் நீ முக்கியத்துவம் கொடுப்பியா? அப்போ நீ என்ன நினைக்கிறியோ அப்படியே செய்..” என கோபமாக போனை வைத்துவிட்டான்.

இங்கு மனோவிற்கும் கோபம்தான். இருக்கும் சூழல் புரியாமல் பேசும் முரளியின் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது. ஆனாலும் இப்போதைக்கு அதைக்காட்ட முடியாத நிலை. அமைதியாக அபியின் அருகில் வந்து அமர்ந்தாள்.

அபிக்கு மனதில் பெரும் குழப்பமும், பயமும் வந்தது. அண்ணன் வந்துவிடுவான், அவனுடன் சென்று விடலாம் என நினைத்திருக்க, இப்போது மேலும் ஒருமாதம் எனும்போது கதிரவன் என்ன செய்வாரோ என்ற பயம் மனதை பிசைந்தது.

மனோகரிக்கும் அதே பயம்தான். ஆனால் அதை அபியிடம் கூறி அவளை பயமுறுத்த நினைக்கவில்லை. அன்றைய நாள் இருவருக்கும் உறக்கமில்லாமல் கழிய, அடுத்த நாள் இருவரும் பயந்தது போலவே வந்து நின்றார் கதிரவன்.

“ராசாத்தி..” என வெளியில் இருந்து கதிரவன் அழைக்க, பயமும் பதட்டமுமாக வந்து நின்றவள் அவரை பார்த்து அதிர்ந்தாள்.

இடது காலிலும், கையிலும் கட்டுப்போட்டிருக்க, நெற்றியிலும் சிறிய அளவில் ஒரு பேண்டேஜ் ஒட்டப்பட்டிருந்தது.

“நேத்து நைட் கடைல இருந்து வரும்போது ஆக்சிடென்ட் ஆகிடுச்சு க்கா, மயக்கமாகிட்டார். நைட் ஹாஸ்பிடல் கூப்பிட்டு போய்ட்டோம், காலையில்தான் மயக்கம் தெளிஞ்சது. அதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். உங்களுக்கு நைட்டே சொல்லலாம்னு யோசிச்சோம், அண்ணன்தான் வேண்டாம்னு சொல்லிட்டார்..” என வந்தவன் கார்த்திக்கை மனதில் வைத்து சொல்ல, அபியோ தன் தந்தையைத்தான் அண்ணன் என்கிறான் என்று புரிந்து கொண்டாள்.

‘சரி’ என்பது போல் தலையசைத்தவள், மனோகரியின் வீட்டிலிருந்து தன் வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டை திறந்து கதிரவனுக்கு அறையைத் திறந்துவிட்டு, பெட்டையும் தட்டிவிட்டாள் அமைதியாக.

கதிரவனின் கூட வந்தவன் அவரை வசதியாக படுக்க வைத்துவிட்டு மருந்து சீட்டையும், மாத்திரை பையையும் அபியிடம் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

கதிரவனுக்கு உடலெல்லாம் நல்ல வலி. அவரால் அசையக்கூட முடியவில்லை. அதனால எதுவும் பேசாமல் அமைதியாக படுத்துக்கொண்டார்.

அபிக்கு பின்னாடியே மனோகரியும் வந்திருந்தாள். அவளுக்கு கதிரவனை நம்ப முடியவில்லை. ஒருவேளை நடிக்கிறாரோ என அவரையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை அபியும் உணரத்தான் செய்தாள். அந்த சந்தேகம் அவளுக்கே இருக்கும் போது என்ன பேசுவாள்.

பல நாட்கள் கழித்து அடுப்படிக்கு சென்றவள், கதிரவனுக்கு சமைக்க ஆரம்பித்தாள். இருவரிடமு எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.

“மாமாவுக்கு சொல்லு அபி..” என்ற மனோகரியிடம்,

“வேண்டாம் மனோ. அவனாவது நிம்மதியா இருக்கட்டும். இவரைப்பத்தி தெரிஞ்சா அவனும் பயந்துட்டே இருப்பான். விடு என்ன நடக்கனுமோ நடக்கட்டும்.” என்று விட்டாள் அபி.

மனோகரிக்கும் அதுவே சரியெனப்பட அமைதியாகிவிட்டாள். இரண்டு நாட்கள் மிகவும் அமைதியாகத்தான் போனது. அபிக்கு மிகவும் குழப்பம். இவர் இப்படி இருக்கும் ஆளே இல்லையே என்ற யோசனையோடே இருக்க, அன்று கதிரவனை பார்க்க வீட்டிற்கு வந்திருந்தான் கார்த்தி.

அவனைப் பார்த்ததும் சட்டென்று அபியின் உடல் பயத்தில் தூக்கிப்போட்டது. முகம் வியர்க்க அவனை வா என்றும் அழைக்காமல் அதிர்ந்து நின்றிருந்தாள்.

அதை உள்வாங்கியபடியே உள்ளே வந்தவன், அவளைக் கடக்கும் போது “பரவாயில்லையே இன்னும் பயம் அப்படியே இருக்கு” என நக்கலாக கூறியபடி செல்ல, அபிக்கு நெஞ்சில் நீர் வற்றி, கால்கள் வலுவிழந்து விட்டது.

சில நிமிடத்தில் கதிரவனின் ‘ராசாத்தி’ என்ற அழைப்பு வர, ‘அய்யோ இந்த மனோ இல்லாம போயிட்டாளே’ என மனதுக்குள் புலம்பிக்கொண்டே இருக்கின்ற தெய்வங்கள் அனைத்தையும் துணைக்கழைத்தபடி கதிரவனின் அறைக்குள் சென்றாள்.

“என்னம்மா சார் வந்துருக்கார், அவரை வான்னு கூட கூப்பிடாம அப்படியே நிக்கிற, நமக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கார். உன் உயிரையும் காப்பாத்தி கொடுத்திருக்கார். இப்படி அவரை அவமானப்படுத்தக்கூடாதுமா.” என மிகவும் நல்லவன் போல இருவரின் முன்னும் பேச, கார்த்தி உதடு வளைத்து சிரிக்க, அபியோ கார்த்தியிடம் என்ன பேசுவது என்று கூடத் தெரியாமல் பயத்தில் பாவமாக நின்றிருந்தாள்.

அவள் அப்படி நிற்பது கார்த்திக்கு எரிச்சலாக இருந்தது, ‘என்ன இது எப்போது பார்த்தாலும் பேயை பார்த்தது போல பயந்து சாவது’ எனக் கடுப்பானவன், “வீட்டுக்கு வந்தவங்களுக்கு நல்ல மரியாதை” என எள்ளலாக சொல்ல,

“ஸாரி ஸாரி.. நான் கொஞ்சம் பயம், இல்ல இல்ல பதட்டத்துல அப்படி, சாரி..” என விட்டால் அழுதுவிடுவேன் என்ற நிலையில் நின்றவளைப் பார்க்க அவனுக்கும் பாவமாகத்தான் போனது.

“தண்ணி கிடைக்குமா.?” என்றான் இப்போது குரலில் சற்று மாற்றத்தை கொண்டுவந்து.

“ஹான் இதோ கொண்டு வரேன்..” என ஓடியவள், செம்பில் நீரை எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கியவன் “காஃபி கிடைக்குமா.?” என்றான் அடுத்து.
“ஹான் தரேன்..” என ஓடியவளைப் பார்த்து இதழ் பிரியாமல் சிரித்துக்கொண்டான். அது ஒரு நொடிதான். கதிரவன் தன்னைப் பார்த்து விடுவான் என்பதால் உடனே அச்சிறு சிரிப்பையும் மறைத்து, கதிரவனைப் பார்த்து “என்ன இன்னும் அவக்கிட்ட சொல்லலயா.?” என்றான் காட்டமாக.

“இல்ல.. இன்னும் சொல்லல. இன்னைக்கு சொல்றேன். ஆனா அவ சம்மதிப்பாளான்னு எனக்குத் தெரியல.?” என்றார் கதிரவன் பயத்துடன்.

“அது என்னோட பிரச்சினை இல்லை. உன்னோட பிரச்சினை. எங்கிட்ட கை வைக்கும்போது யோசிச்சு வச்சிருக்கனும். உன்னை மண்டை கழுவி கூடயே வச்சிருந்தது எதுக்கு. இப்படி நினைச்ச நேரமெல்லாம் ஊறுகா போடத்தான்.” என்றவன்,

பின் குரலில் மேலும் கடினத்தைக் கூட்டி “ரெண்டு நாள் டைம். திங்கள் கிழமை அவ எங்கிட்ட வந்துருக்கனும். இல்லைன்னா ஒன்னு நீ ஜெயில்ல இருப்ப, இல்ல மேல போயிருப்ப. எது உனக்கு வசதியோ அதை நீயே முடிவு பண்ணு” என்றதும், கதிரவனின் உடல் நடுங்கிப் போனது.

‘இவனைப்பற்றி தெரியாமல் போய் சிக்கிக் கொண்டோமே’ என நூறாவது முறையாக மனதில் புலம்பி நொந்து கொண்டார்.

அப்போது அபிராமி காஃபியுடன் வர, அதைப் பார்த்தவன் “ஆனாலும் உனக்கு இப்படியொரு பொண்ணுன்னா என்னால நம்பத்தான் முடியல” என கதிரவனுக்கு மட்டும் கேட்கும்படி கார்த்தி கூற, சிரிக்கவும் முடியாமல், முறைக்கவும் முடியாமல் திணறிப்போனார் மனிதர்.

அபி கொடுத்த காஃபியை குடித்தவன், அவளிடம் எந்த வம்பையும் வளர்க்காமல் நல்ல முறையிலேயே விடைபெற்று சென்றுவிட்டான். ஆனால் அவன் கிளம்பும் போது பார்த்த பார்வையும், ‘சீக்கிரம் பார்க்கலாம்’ என்ற வார்த்தையும் உள்ளுக்குள் குளிரைப் பரப்பியது.

கண்ணை மூடி அதைக் கடக்க நினைக்க, “அய்யோ அய்யோ” என கதிரவனின் சத்தம் கேட்க, தன் யோசனையை விட்டுவிட்டு வேகமாக அறைக்குள் நுழைந்தாள் அபி.

அங்கு அவர் தலையில் அடித்துக்கொண்டு அழ, அபிக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன என்னாச்சு.. ரொம்ப முடியலையா? ஆஸ்பத்திரிக்கு போவோமா?” என அபி பதட்டமாக கேட்க,

“அய்யோ ராசாத்தி நானே உன் வாழ்க்கை அழிய காரணமாகிட்டேனே, என்னை மன்னிச்சிடு சாமி..” என அவளின் கையைப் பிடித்து அழ,

“என்ன.. என்ன சொல்றீங்க? புரியல?” என பெண்ணவளும் அரண்டு போய் கேட்க,

“அன்னைக்கு கடையை அடைச்சிட்டு, வரும் போது ஒரு வேன் வந்து மோதிடுச்சு. நான் என்னன்னு எழுந்து பார்க்குறதுக்குள்ள நான் வச்சிருந்த பணப்பையை காணோம். யாரோ எடுத்துட்டு போயிட்டாங்க. நான் அந்த அதிர்ச்சியிலயும், வலியிலயும் மயங்கிட்டேன். கடைக்கு பக்கமே ஆக்சிடென்ட் நடந்ததால எல்லோரும் பார்த்து உடனே ஹாஸ்பிடல் சேர்த்துட்டாங்க. அடுத்த நாள் கார்த்தி வந்து கேட்கும் போதுதான் பணம் பத்தியே தெரிஞ்சது.” எனவும் அபி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“பணமா?” என்றவள், வேகமாக தன் உறைந்த முகத்தை துடைத்து, “எவ்வளவு பணம்?” என்றாள் அதிர்வு நீங்காமலே.

“நாற்பது லட்சம்..” என்றார் சின்ன குரலில்.

“என்ன நாற்பது லட்சமா? அவ்ளோ பணம் உங்களுக்கு எப்படி வந்தது? உங்களை நம்பி எப்படி கொடுத்தாங்க.?” என்றவளுக்கு மேலும் மேலும் அதிர்வாகி போனது கேட்ட செய்தியில்.

“நான்தான் அந்த கடையை முழுசா பார்த்துக்குறேன், அன்னைக்கு ஒரு க்ளைன்ட் அட்வான்ஸ் கொடுத்துட்டு போயிருந்தாங்க. அதுவும் அன்னைக்கு வருமானமும் சேர்த்து வீட்டுல போய் பெரியவர்க்கிட்ட கொடுத்துட்டு போக சொன்னார் கார்த்தி. ஆனா அதுக்குள்ள இப்படி?” என மேலும் முகத்தை மூடி அழ ஆரம்பிக்க, இதற்கு என்ன சொல்வது என்று கூட அபிக்கு தெரியவில்லை.

ஒரு சிறுபெண் எவ்வளவு அதிர்வைதான் தாங்குவாள். தலையைப் பிடித்தபடி சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவள், “இப்போ என்ன செய்ய சொல்றாங்க.?” என்றாள் காற்று போனக்குரலில்.

கார்த்தி வந்துவிட்டு போனதில் இருந்தே ஏதோ உறுத்திக்கொண்டே தான் இருந்தது அபிக்கு. இதோ இப்போது அதற்கான காரணம் தெரிந்துவிட்டதே.

“அந்த பணத்தை நான்தான் ஆள் செட் பண்ணி திருடிட்டேன்னு சொல்றான், பணத்தை உடனே திருப்பிக் கொடுக்கனுமாம், இல்லைன்னா போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு சொல்றான்.?” என்றவருக்கு மகள் நம்பவேண்டுமே என்ற வேண்டுதல் பெருமளவில் இருந்தது.

“அவங்க சொல்றது உண்மையா? நீங்கதான் அந்த பணத்தை எடுத்தீங்களா?” என்றவளுக்கு கதிரவனை நம்ப முடியவில்லை. அவர் பணத்திற்காக எந்தளவிற்கு தரம் தாழ்ந்து போவார் என்று தெரியுமே.

“அய்யோ இல்ல இல்ல ராசாத்தி.. நான் முன்னாடி எப்படியோ இருந்துட்டேன். ஆனா இப்போ அந்த மாதிரி இல்ல ராசாத்தி. நிஜாமாவே பணம் திருடுதான் போயிடுச்சு..” என கலங்கிப் போய் சொல்ல, அதை அபியால் நம்பத்தான் முடியவில்லை.

ஆனால் உண்மைக்கு கதிரவன் அப்படியொரு திட்டத்தை வைத்திருந்தார்தான். ஆனால் நடந்தது அவரே எதிர்பார்க்காதது. இப்போது எப்படி அவனிடமிருந்து தப்பிப்பது என்பதுதான் தெரியவில்லை.

கார்த்திக் கேட்டதை அவர் செய்துவிடுவார். அவருக்கு அதில் விருப்பம் என்றாலும் அதற்கு மகள் ஒத்துக்கொள்ள வேண்டுமே. கேட்டால் என்ன சொல்லுவாளோ என்ற பதட்டத்திலேயே மகளைப் பார்த்தார்.

“முரளிக்கிட்ட கேட்டு பார்க்கலாமா?” என்றாள் அபி. அவனிடம் இவ்வளவு பணம் இருக்க வாய்ப்பில்லை என்று அவருக்கும் தெரியும், அபிக்கும் தெரியும்.

“அவனே இப்போதானம்மா சம்பாதிக்க ஆரம்பிச்சான். அவன்கிட்ட எப்படி இருக்கும்..” என்றவரிடம்,

“நான் அவர்கிட்ட பேசி பார்க்கட்டுமா.?” என தயங்கி தயங்கி கேட்க,

“நீயாம்மா? நீ ஏற்கனவே போய், அவன் அசிங்கப்படுத்திட்டானேமா. மறுபடியும் போனா சும்மா இருப்பானா? உன்னை கேவலமா பேசுவான் மா..” என்றார் அழுகுரலில்.

“ஆனா இப்போ நமக்கு வேற என்ன செய்ய முடியும். நான் ஒருதடவை போய் பேசி பார்க்குறேன். என்ன சொல்வாரோ பார்க்கலாம். அவர் முடியாதுன்னு சொன்னா வேற யோசிக்கலாம்.” என அபியும் கூற

“ஆனாலும் எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்குமா? அவன் உன்னை எதுவும் செஞ்சிட்டா?” என இழுக்க, அந்த வார்த்தையில் அபி உறைந்து அவரைப் பார்க்க,

“அப்படி எல்லாம் நடக்காது, ஆனா இருந்தாலும் நாம கவனமா இருக்கனுமில்ல..” என பூசி மொழுக, அபிக்கு நிச்சயம் இவரிடம் ஏதோ தவறு இருக்கிறது என புரிந்தது.

இவர் தன்னிடம் உண்மையை சொல்லப் போவதில்லை. ஒருவேளை கார்த்தி சொல்லலாம். நிச்சயம் கோபப்படுவான். கோபத்தில் என்றாலும் உண்மையைச் சொல்வான். அப்போது தெரிந்து கொள்வோம் என யோசிக்க, அங்கு கார்த்தியோ கதிரவனை சிக்க வைத்த மகிழ்ச்சியில் இருந்தான்.

என் வீட்டு பொண்ணை அசிங்கப்படுத்தினா, உன் வீட்டு பொண்ணை சும்மா விடுவேனா? என நக்கலாக நினைத்து அபியை என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தான்.

ஆம் கார்த்தி கேட்டது அபியைத்தான்.



 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
என்னடா நடக்குது? அதிசயமா சீக்கிரம் சீக்கிரம் எபி கொடுக்குறீங்க
 
  • Haha
Reactions: Kameswari

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
225
6
28
Hosur
Nice update vani