நதி - 17
வெளியில் சென்ற சில நொடிகளில் மீண்டும் வேகமாக அறைக்குள் வந்தான் கார்த்தி.
அப்போதும் அவள் அதே அதிர்ந்த பாவத்துடன் நின்றிருக்க, “இப்போ இங்க நடந்ததை நீ வெளிய சொல்லனும்னு நினைச்சாலோ, இல்ல எங்க வீட்டுல போய் யாருக்கிட்டயும் பேசனும்னு நினைச்சாலோ இந்த வீடியோவை கமிஷனருக்கு அனுப்பிடுவேன், கமிஷ்னர் என்னோட மாமாதான். அடுத்து அப்பனும் பொண்ணும் ஜெயில்லதான் இருக்கனும்..” என்றான் சற்றும் இரக்கம் இல்லாமல்.
பின் “இப்படி அசிங்கப்படுறதுக்கு ஜெயிலுக்கே போயிடலாம்னு கூட உனக்கு தோனும். ஆனா என்னை ஏமாத்தின உன் அப்பனை அப்படியே விட்டுடுவேனா? மாமியார் வீட்டுல ஜாலியா போய் உக்காந்துட்டு வான்னு அவனை அப்படியே விட்டுடுவேனா? அப்படி ஒரு சூழல் வந்தா அரை உயிராதான் உன் அப்பன் உள்ள போவான். அப்புறம் நீ..?” என நிறுத்த, அபியின் விழிகளில் பயத்தின் அளவு கூடிக்கொண்டே போனது.
“அப்புறம் நீ.. ஹா ஹா உனக்கு இன்னும் ப்ளான் பண்ணல. பட் எட்டு மணிக்குள்ள தரமா பண்ணிடுவேன். நீ நடந்துக்கிறதை பொருத்துதான் என்னோட ப்ளான் அமையும். எப்படியும் தப்பிச்சிடலாம்னு மட்டும் நினைச்சிடாத, அதுக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பே இல்ல.” என்றான் அரக்கத்தனமாய்.
அதிர்ச்சிக்கு மேல் வேறெந்த உணர்வும் இல்லையே, இருந்தால் இப்போது அப்படித்தான் இருந்திருப்பாள் அபி. “போ.. போய் என் பணத்துக்கு ஏற்பாடு பண்ணு. உன் அப்பன் அந்த கதிரவன் கால்ல விழுந்தாச்சும் வாங்கிட்டு வா.. ஹாஹா கண்டிப்பா கொடுத்துடுவான்.” என சிரித்தவன், “இல்லையோ ஜெயிலுக்கு போ..” என்றுவிட்டு வெளியேறிவிட, எப்படி எந்த சேதாரமும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தாளோ தெரியாது. வந்துவிட்டாள்.!
வீட்டிற்கு வந்துவிட்டாள்தான்.!! ஆனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், புரியாத குழந்தை போல் அமர்ந்திருந்தாள்.
இதை யாரிடம் சொல்வது என்று கூட அவளுக்கு தெரியவில்லை. வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு மணி ஒன்றென கடிகாரம் ஒலித்துக்காட்ட, ‘கடவுளே.. இன்னும் எட்டு மணி நேரம்தானே இருக்கிறது, யாரிடம் கேட்பது. அப்பா.. அவர் எங்கே..? ஏன் இவ்வளவு நேரமும் சத்தமே இல்லாமல் இருக்கிறார்.?’ என வேகமாக அறைக்குள் செல்ல, அங்கு கதிரவன் இருந்த அடையாளமே தெரியவில்லை.
எங்கே போனார்? என குழப்பமாக வீடு முழுவதும் தேடிவிட்டு, வெளியில் தேட வந்தவளை யோசனையாக பார்த்தார் மனோகரி.
அபியின் பதட்டம் அவருக்கு புதிதாக இருக்க, “என்ன அபி? ஏன் பதட்டமா இருக்க.? உன் அப்பாவுக்கு ஒன்னுமில்லயே? டாக்டர் என்ன சொன்னாங்க.?” என வரிசையாக கேள்வி கேட்க,
“என்ன அத்தை? அப்பாவுக்கு என்ன?” என மேலும் குழப்பமாக அபி கேட்க,
“ம்ச் காலையிலேயே அவருக்கு ரொம்ப முடியலன்னு கார்ல கூட்டிட்டு போனீங்களே,” என யோசனையானவர், “அதான் அபி, நைட் அவருக்கு வலி அதிகமாகிடுச்சுன்னு, நீ நேரமே ஹாஸ்பிடல் போய் டோக்கன் போட்டதாகவும், அங்க இருந்து அவரை கூட்டிட்டு வரச்சொல்லி கார் அனுப்பினதாகவும் எங்கிட்ட சொல்லிட்டு போனாரே.’ என சந்தேகமாக இழுக்க,
‘என்ன..’ என அதிர்ந்தவள், “என்னனு தெளிவா சொல்லுங்க அத்தை” என பயமும் அழுகையுமாக கேட்டவளிடம்,
“நான் பார்க்கும்போது உங்க வீட்டு முன்னாடி கார் நின்னுட்டு இருந்தது அபி. என்னனு விசாரிக்கும்போது உன் அப்பாதான் இதெல்லாம் சொன்னார்.” என்றவர் அபியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை உள்வாங்கியபடியே “என்ன அபி எதுவும் பிரச்சினையா? என்னம்மா.?” என அவரும் பதட்டமாக விசாரிக்க,
“அது அத்தை.. அத்தை..” என்றவளுக்கு சட்டென்று கார்த்தி கூறிய வார்த்தைகள் ஈட்டியாய் உள்ளுக்குள் பாய்ந்து ஞாபகத்தைக் கொடுக்க,
“இல்ல இல்ல ஒன்னுமில்லத்த.. நான் ஏதோ ஒரு ஞாபகத்துல அப்படியே வீட்டுக்கு வந்துட்டேன். அப்பா, அவர் அவரை போய் நான் கூட்டிட்டு வரேன்..” என முகத்தை வேகமாக துடைத்துக்கொண்டே அதைவிட வேகமாக ஓடினாள் பெண்.
அபியின் பயமும், பதட்டமும், அழுகையும் பெரியவருக்கு யோசனையை கொடுக்க, கணவருக்கு அழைத்து உடனே விவரத்தை சொன்னார்.
இங்கு அபிக்கோ ‘ஒருவேளை கதிரவனை கார்த்திதான் கடத்தியிருப்பானோ’ என்று யோசனை வர, அதோடு அவனை அரை உயிராகத்தான் அனுப்புவேன் என்ற கார்த்தி அவளிடம் பேசிய வசனமும் நினைவு வர, மீண்டும் அவனின் ஆபிஸிற்கே ஓடினாள் பேதைப்பெண்.
அவள் உள்ளே நுழையும் முன்பே அவளின் தோற்றத்தை பார்த்த செக்கியூரிடி “யாருமா நீ.? இங்க இப்படியெல்லாம் வரக்கூடாது.” என தெளிவாக அதேநேரம் அதட்டலாக கூற,
“அண்ணா ப்ளீஸ்.. நான் நான் அபி, அபிராமி. கார்த்தி சாரை பார்க்கனும். காலையில் கூட இங்க வந்திருந்தேன். ப்ளீஸ்அண்ணா. அவர்கிட்ட சொல்லுங்க..” தவிப்பாக கேட்க,
“ஓ.. திருட்டு கேஸ் கதிரவன் பொண்ணா நீ. உங்க வீட்டுல இருந்து யார் வந்தாலும் உள்ள விடக்கூடாதுனு கார்த்தி சார் சொல்லிருக்கார்மா.”என நக்கலாக கூற,
அபிக்கு அவமானத்தில் உடலெல்லாம் கூசிப்போனது. தலையை குனிந்து தன் கன்றிய முகத்தை மறைக்க பெரும்பாடு பட்டுப்போனாள் பெண்.
அபியின் அவஸ்தையை உணர்ந்த அந்த பெரியவர் என்ன நினைத்தாரோ “கார்த்தி சார் இப்போ இங்க இல்லையேமா. அவர் கெஸ்ட்டவுஸ் போயிட்டார். வழக்கமா சனிக்கிழமை போயிட்டு திங்கள் கிழமை காலையிலத்தான் வருவார்..” என்றதும் அபிக்கு மூளை வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
அப்படியென்றால் ‘அப்பாவை அங்குதான் கொண்டு சென்றிருப்பான்’ என நினைத்தவள், அவரிடம் திரும்பி “குமரன் இல்லையா சார். அவனை பார்க்கலாமா.?” என்றதும்,
“குமரனும் ஊருக்கு போய்ட்டானேமா. அவனும் திங்கள்கிழமைதான் வருவான்..” என்றுவிட, அபிக்கு அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட உணர்வு.
யாரிடம் சென்று எப்படி உதவி கேட்பது என்று தெரியாமல், குழப்பமும், பயமுமாக வழுவிழந்த தன் கால்களை கட்டாயமாக நகர்த்தி, அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள் அபி.
அழுகை முற்றிலும் நின்றுவிட்டது. இனி அழுது புலம்பி எந்த பயனும் இல்லை என்று தெளிவாக புரிந்தது. மனோகரியின் அப்பா மூலம் எதாவது செய்யலாம் என நினைத்தபடியே நகர ஆரம்பித்தாள்.
அப்போது சரியாக அதேநேரம் அந்த செக்கியூரிடியின் மொபைல் அடிக்க, கார்த்திதான் அழைத்துக் கொண்டிருந்தான்.
அதை வேகமாக அட்டென் செய்தவர், “தம்பி..” என்று முடிக்கும் முன்னே, “சரிங்க தம்பி, சரிங்க தம்பி, இதோ இப்போ கொடுக்குறேன்..” என முன்னே சென்று கொண்டிருந்த அபிக்கு முன்னே வேகமாக போய் நின்றார்.
அவரைப் பார்த்ததும் புரியாமல் நின்றவளிடம், “ஏம்மா உங்களுக்குத்தான் போன், கார்த்தி சார் பேசுறார்.” என நீட்ட, வெளிறிய முகத்துடன், தன் நடுங்கிய கை கொண்டு அதை வாங்கி தன் காதில் வைத்தாள்.
‘ஹலோ’ என அவள் சொல்லி முடிக்கும் முன்னே “நான் உனக்கு கொடுத்த டைம் நைட் எட்டுமணி. எட்டு மணிக்கு இன்னும் நேரம் இருக்கே,” என வார்த்தைகளில் எள்ளலை தூவி கேட்க,
‘இங்க என்ன வேலை, யாரை பார்க்க வந்த’ என கேட்காமல் கேட்கிறான் என்று புரிந்தவள், “அப்பா.. அவர் அவரை காணோம்.. நீங்க, நீங்களா சார்..” என அடுத்து எப்படி கேட்பது என்று தெரியாமல் திக்கி திணறியவளிடம்,
“ஹோ.. உன் அப்பன காணோமா.? அப்போ உனக்கும் கம்பி நீட்டிட்டானா.? இல்ல அவனை ஒழிச்சு வச்சிட்டு வந்து எங்கிட்ட நாடகம் ஆடுறியா..?” என ஆத்திரமாக கேட்க,
“அய்யோ இல்ல சார், இல்ல… நான்… நான் வீட்டுக்கு போகும்போது அவரை காணோம். யாரோ, யாரோ கார்ல கூட்டிட்டு போனாங்கன்னு சொல்றாங்க. எனக்கு தெரியல சார்..” என கதறியவளை, ஒரு மனுஷியாகக்கூட அவன் மதிக்கவில்லை.
“அட அட என்ன நடிப்பு.. பேசாம உனக்கு ட்ராமா குயின்னு பேர் வச்சிருக்கலாம். ஏண்டி.. காலையில நீ வரும்போது இருந்த உன் அப்பன், நீ வீட்டுக்கு போகும்போது இல்லைன்னா நம்ப நான் என்ன முட்டாளா.? ஹான் சொல்லுடி நான் என்ன முட்டாளா.?” என அகங்காரமாக கேட்க,
“இல்ல அப்படியெல்லாம் இல்ல சார். ஆனா அவரை காணோம்..” என்றவளுக்கு உயிருடன் இருக்கும் ஆசை மொத்தமாக வடிந்தே போனது.
“அவனை காணோம்னா உடனே என்னை வந்து கேள்வி கேட்பியா.? ஹான் உங்க பணத்துக்காக என் பொண்ணை வச்சுக்கோன்னு அனுப்பி வச்சவனுக்காக நீ இந்தளவுக்கு உருகுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இதை பாசம்னு எப்படி நம்புறது. ஒருவேளை உனக்கு ஆள்பிடிச்சி கொடுக்குறவன் காணாம போயிட்டான், இனி என்ன செய்ய முடியும்னு கவலையில தேடுறியோ..?” என அவன் அந்த வார்த்தையை முடிக்க கூட இல்லை, போனை ஆஃப் செய்தவள், அதை செகியுரிட்டியின் கையில் தினித்துவிட்டு வேகம் வேகமாக நடந்தாள்.
கிட்டத்தட்ட ஓடினாள் என்றுதான் சொல்லவேண்டும். இங்கிருந்து தூரமாக, வெகுதூரமாக, முடிந்தால் இந்த உலகைவிட்டே போகவேண்டும் என வேகமாக ஓடினாள்.
ஏன் இப்படி? என்னைப்பற்றி அவனுக்கு என்ன தெரியும்? எதற்காக இவ்வளவு வன்மத்தை தன்மேல் கொட்ட வேண்டும்.? என் ஒழுக்கத்தை அளவெடுக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது. வேண்டாம்.. இது வேண்டாம். என்னால் தாங்கவே முடியவில்லை. அவன் பேசிய வார்த்தைகளை கேட்ட காதுகலெல்லாம் கூசி, உடலெல்லாம் எரிகிறது.
‘இவருக்கு மகளாக பிறந்தது என் தவறா.? நான் அப்படியில்லையே, என் அம்மா அப்படி வளர்க்கவில்லையே? அவரைப்போலவே நான் இருப்பேன் என்று எப்படி நினைத்தான்.’ என மனதுக்குள் அழுது, கதறி துடித்தவள் பைத்தியம் போல அந்த ரோட்டில் ஓடினாள்.
எல்லோரும் தன்னை பைத்தியம் போல் பார்க்கிறார்கள் என்பதை கூட உணராமல் ஓடிக்கொண்டிருந்தவள், சிக்னல் விழுந்ததையும் கவனிக்காமல் நடுரோட்டில் ஓட, அப்போது பார்த்து அவளுக்கு பின்னே வந்த கார் அபியை அடித்து தூக்கியது.
“ம்மா நான் உங்ககிட்ட வந்துட்டேன், என்னால இங்க இருக்க முடியல. உங்ககிட்ட வந்துட்டேன்” என தன் தாயிடம் மனதோடு பேசியபடியே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள் அபிராமி.