• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 18

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 18

"சிஸ்டர்! என்ன இருந்தாலும் பாஸ்க்கு என்னை ரொம்ப பிடிக்கும் போல இல்ல?" நின்ற படி சாப்பிட்டுக் கொண்டிருந்த விஷ்வா வராத கண்ணீரை துடைக்க,

"என்னவாம்? ஆனந்த கண்ணீரோ?" என்றாள் திக்ஷிதா அவளும் கையில் சாப்பாடு தட்டுடன்.

"பின்ன! என் லவ் சக்ஸஸ் ஆனதுக்கு பாருங்க ஆபீஸ்க்கே பார்ட்டி வச்சு அசத்தி இருக்கார் மனுஷன்.. என்கிட்ட காமிச்சுக்கலைனாலும் என் மேல அவ்வளவு பாசம்" விஷ்வா கூற,

"ஓஹ்! அப்போ ஏன் விச்சு நம்ம ஐஷுவை கூப்பிடல?" திக்ஷி கேட்டப்படி சாப்பிட,

"அதானே?" என்று யோசித்தவன்,

"ப்ச்! இன்னுமா உங்களுக்கு புரியல.. எனக்காக சர்பிரைசா அவளை வர வச்சிருப்பார்.. வேணா பாருங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல எங்களுக்கு சின்னதா ரிங் ப்ரெசென்ட் பண்ணி மினி எங்கேஜ்மென்ட்னு சொன்னா கூட நீங்க அதிர்ச்சி ஆகாதீங்க.. அதெல்லாம் என் மேல இருக்குற பாசத்துல தான்" என்றான் விஷ்வா வெட்கத்தில் கையில் இருந்த தட்டில் விரலால் கோலமிட்டு.

"இதுக்கு பேரு தான் ட்ரீம் பாய்ன்றது போல!" திக்ஷி கூற,

"இங்க என்ன பண்ணுற திக்ஷி.. அங்கே வா!" என அழைத்து சென்று வாசு யாருக்கோ அறிமுகப்படுத்த, அவளும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள்.

வாசு அலுவலகத்தின் மொட்டை மாடியில் தான் விழா நடைபெற்றது.. திக்ஷிதாவை அறிமுகம் செய்து அதற்கான பார்ட்டி என மிக எளிதாய் அங்கே அவன் எல்லாம் ஏற்பாடு செய்திருக்க, திக்ஷிதா கணவனை மெச்சிக் கொண்டாள்.

ஐஸ்வர்யா வீட்டில் வாசு பேசி பின் அவர்களும் சம்மதம் தெரிவித்து துளசியிடம் வந்து பேசி சென்றிருக்க அத்துடன் விடுப்பு எடுத்த விஷ்வா, மூன்று நாட்கள் கழித்து இன்று தான் அலுவலகம் வந்து எதற்காக இந்த பார்ட்டி என்றே தெரியாமல் திக்ஷிதாவிடம் உளறிக் கொண்டிருந்தான்.

"காங்கிரட்ஸ் மிஸ்ஸஸ் வாசு!" என்று ப்ரீத்தா கை கொடுக்க, புன்னகையுடன் தன் கைகளை நீட்டி இருந்தாள் திக்ஷிதா.

ப்ரீத்தாவுடன் பொதுவாய் அவள் பேசியபடி இருக்க, வாசு சுற்றிலும் அனைவரிடமும் பேசியபடி இருந்தான்.

"வாசு உங்ககிட்ட சொல்லி இருப்பாங்க.. அதையெல்லாம் மைண்ட்ல வச்சுக்காதீங்க ப்ளீஸ்! என்னவோ அப்ப சைல்டிஷா பிகேவ் பண்ணிருக்கேன்.." என்று ப்ரீத்தா கூற, திக்ஷிதாவிற்கு அதற்கு என்ன கூறுவதென தெரியவில்லை.

"என்னோட ஹஸ் கூட வாசுக்கு நல்லா தெரியும்.. பிரண்ட்ஸ் தான்.. என்னோட மாமா பையன்" என்று கூற,

"ஓஹ்!" என்று திக்ஷிதா கூறும் பொழுதே வாசு வந்துவிட்டான் அவளருகில்.

மீண்டும் ஒருமுறை வாழ்த்து கூறி அவள் செல்ல, விஷ்வா இவர்கள் அருவே வந்தான்.

"இவன் ஏன் மூஞ்சை தொங்க விட்டுட்டு இருக்கான்?" திக்ஷிதா கேட்க,

"அதுவா! ஐஸ்வர்யா அப்பா எனக்கு கால் பண்ணினாங்க.. கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்னு கேட்டாங்க" என்றதும்,

"நீங்க என்ன சொன்னிங்க?" என ஆர்வமாய் திக்ஷிதா கேட்க,

"ஒரு மூணு மாசத்துல வச்சுக்கலாமான்னு தான் ஐஸ்வர்யா அப்பா கேட்டார்.. நான் தான் இன்னும் வளர வேண்டிய பையன்.. ஒரு வருஷம் போகட்டும்.. இப்ப வேணும்னா பேசி வச்சுக்கலாம்னு சொன்னேன்" என்றதும் திக்ஷிதா பொங்கி வந்த சிரிப்பை அடக்க, வாசு முன் முறைக்கவும் முடியாமல் நடிக்கவும் முடியாமல் நின்றான் விஷ்வா.

"விஷ்வா அம்மாகிட்ட பேசினாங்களா? நீங்களே முடிவெடுத்துட்டிங்களா?" திக்ஷிதா கேட்க,

"நான் சொன்னா துளசி ம்மா சரின்னு தான் சொல்லுவாங்க.. இதுல என்ன சந்தேகம்?" எனும் பொழுதே வாசுவை யாரோ அழைக்க, அவனும் சொல்லிக் கொண்டு சென்றான்.

"முற்பகல் பிற்பகல்னு ஒரு பழமொழி உண்டு விஷ்வா.. உன் கல்யாணத்தை நீ மறக்க முடியாதபடி நான் சிறப்பா எதாவது செய்யனும் நினச்சேன்.. ஆனா ஆண்டவன் எனக்கு அந்த வேலையும் இல்லாம சுலபமா பண்ணி வச்சுட்டான்.. நீ இன்னும் வளரணுமாமே! உன் பாஸ் உசரத்துக்கு சீக்கிரம் வளந்து வந்து உன் ஐஷுவை கட்டிக்கோ"என்று கூறி அவனைப் பார்த்து பார்த்து சிரிக்க,

"உங்க புருஷனை எவ்வளவு பெரிய இடத்துல வச்சிருந்தேன் தெரியுமா? இப்படி சின்ன புள்ளத் தனமா லவ் பர்ட்ஸ பிரிச்சி விட்டு சந்தோஷப்படுறார்.. அதுவும் பார்ட்டி எனக்காகனு நினச்சா கல்யாணம் முடிஞ்சி ஒரு மாசம் ஆன பின்னாடியும் அவர் மேரேஜை அவரே செலிப்ரேட் பன்றார்.. நாங்க மட்டும் சிங்கிளா சுத்தணும்.. எவ்வளவு நல்ல எண்ணம்!" என்று பொருமி தள்ளினான்.

"இவரு பெரிய அப்பாடாக்கரு! பெரிய இடத்துல வச்சு நாங்க அந்த இடத்துக்கு தகுதி இல்லாம போய்ட்டோம்.. உன்னால அன்னைக்கு நான் வாங்கினேன்ல? அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு போ!" என்றாள் திக்ஷிதா.

"நல்லா பழி வாங்குறீங்க புருஷனும் பொண்டாட்டியும்.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்" என்று கூறி செல்ல, அவனை நினைத்து சிரித்தபடியே வாசுவிடம் வந்தாள் திக்ஷிதா.

"சாப்டியா திக்ஷி?" என்றவன் அவ்வளவு சந்தோஷமாய் இருந்தான்.

அத்தனை பேரின் முன்பும் அவளைத் தன் மனைவி என அறிமுகப்படுத்தி வாழ்த்துக்களை குவித்து வந்திருக்க, அத்தனையிலும் மனைவியிடம் மட்டுமே அந்த இலகுவான முகமும் தென்பட்டது.

"இப்படியே எப்பவும் சிரிச்சுட்டு இருந்தா என்னவாம்?" திக்ஷிதா கேட்டுவிட,

"இப்பலாம் மைண்ட் வாய்ஸ் சத்தமாவே வருது உனக்கு" என்று சிரித்தான் வாசு.

"உங்க ஃபேஸ் ரியாக்சன் மாறும் போது என் மைண்ட் ரியாக்சனும் மாறிடுது பா" என்றாள் அவளும் புன்னகைத்து.

"ஹ்ம்! சரி தான்!" என்றவன்,

"நீ வேணா கிளம்புறியா? நான் வர ஈவினிங் ஆகிடும்.. விஷ்வாவை ட்ரோப் பண்ண சொல்லவா?" வாசு கேட்க,

"அவன் நம்ம மேல இருக்குற கொலவெறிக்கு என்னை ட்ரோப் பண்ண சொன்னா எங்கேயாச்சும் கொண்டு விட்டிடுவான்.. நீங்களே வாங்க.. நான் வெயிட் பண்றேன்" என்றுவிட்டாள்.

"என்னவாம் அவனுக்கு? இப்பவே கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறான்?" என்று வாசு கேட்க,

"ஏன் தெரியாதா உங்களுக்கு?" என்று சீண்டிவிட,

"ஆஃபீஸ் திக்ஷி!" என்றவன் கன்னத்தில் போட்டுக் கொள்ளாத குறையாக உள்ளே ஓட, புன்னகையுடன் அமர்ந்துவிட்டாள் திக்ஷிதா.

அங்கேயே அமர்ந்திருந்தவள் அன்னையும் வாசுவின் அன்னைக்கும் அழைத்து நாளை கிளம்பி வருவதாக கூறி கதை அளந்து நேரத்தை போக்கி இருக்க, மாலை ஆனது வாசுவுடன் அன்றைய அழகான நாளை கடந்து வீடு வந்து சேர.

"சோ டையார்ட் திக்ஷி! காபி ப்ளீஸ்!" என்றவன் சோஃபாவில் அமர்ந்து கழுத்தை அசைத்து கொடுத்து சோம்பல் முறிக்க, திக்ஷிதா காபி எடுத்து வருவதற்குள் அங்கேயே உறங்கி இருந்தான் வாசு.

திக்ஷிதா குரல் கொடுத்தும் அவன் எழும்பாமல் இருக்க, அவனைத் தொட்டதுமே உடலின் சூடு தெரிந்தது.

"அப்பவே கேட்டேன் கண்ணு ஏன் ரெட்டிஷா இருக்குன்னு.. சமாளிச்சாச்சு.. இன்னைக்கு பார்ட்டி வச்சா தான் ஆச்சா? யாருக்கு கஷ்டம்?" என புலம்பியபடி அவனை வலுக்கட்டாயமாய் எழுப்பி மாத்திரை கொடுத்து அறைக்குள் கூட்டி சென்று படுக்க வைத்தாள்.

"உங்க பையன் இருக்காரே!" என சிவகாமிக்கு அழைத்து சொல்லிவிட, கேட்டுக் கொண்டிருந்தாலும் வாசுவிற்கு அப்படி ஒரு அசதி எழுந்து கொள்ள முடியாதபடி.

"நீங்க வந்தா மட்டும் உடனே குணமாகிடுவாறா மாமி?" என சிவகாமியை கேட்க, அவர் பதிலுக்கு நொடித்துக் கொண்டவள்,

"பூஜை நாளன்னைக்கு தானே? அன்னைக்கே வர்றோம்!" என்று கூறி வைத்துவிட்டாள்.

வெள்ளை துணியை நீரில் நனைத்து வந்து நெற்றியில் வைக்க, அவள் கையையும் சேர்த்து பிடித்துக் கொண்டான் வாசு.

"இதெல்லாம் மட்டும் நல்லா தெரியும்.. என்ன பிடிவாதமோ!" என்றவளும் அவனை விட்டு நகராமல் இருக்க, உறங்கியவன் அருகிலேயே அமர்ந்து வெப்பநிலையை பறிசோதித்தபடி இருந்தாள்.

"ரெண்டு நாள் ஊரு பக்கம் போய் நிம்மதியா இருக்கலாம்னா முடியுதா உங்களோட" என புலம்பியபடியே தான் இருந்தாள்.

இரவு வாசு கண் விழிக்கும் போது காய்ச்சல் மட்டுப்பட்டிருக்க, திக்ஷிதாவிற்கு தான் இன்னும் படபடப்பு அடங்காமல் விழியோரம் நின்ற நீர் இரங்கவும் செய்யாமல் புலம்பல்கள் தொடர்ந்தபடி இருந்தது.

"திக்ஷி!" என்ற மெதுவான வாசுவின் அழைப்பிற்கே அவனருகில் வந்து அமர்ந்துவிட,

"சொல்லுங்க! இப்ப எப்படி இருக்கு? கஞ்சி வச்சுட்டேன்.. சாப்பிடலாமா?" என்று அவன் நெற்றி, கன்னம், கழுத்து என தொட்டுப் பார்க்க,

"பதறாத திஷி! ஒன்னும் இல்லை.. இப்ப எனக்கு ஓகே தான்" என்றான்.

"காலையிலே டேப்லெட் போட்ருக்கலாம் இல்ல? என்கிட்ட சொல்லவும் இல்ல!" என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

"சொன்னா இப்படி தான் பண்ணுவ.. இன்னைக்கு ஃபுல்லா நின்னுட்டு தானே இருந்த? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கலாம் இல்ல?" என்றவனை முறைத்துவிட்டு,

"நினைச்சதை முடிச்சிடணும்.. அதானே உங்களுக்கு?" என்றவள்,

"எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? அசைய கூட இல்லை நீங்க.. அவ்வளவு ஃபீவர் வச்சுட்டு எப்படி நாள் முழுக்க நிக்க முடிஞ்சதோ? அப்படி என்ன அடம்!"

"சரி! மறுபடியும் ஆரம்பிக்காத திக்ஷி! னே திட்டினது எல்லாம் கேட்டுச்சு" என்றவன் புன்னகையில், கோபம் தான் வந்தது.

இரவு உணவை அவனுக்கு தந்துவிட்டு மீண்டுமொரு மாத்திரையை கொடுத்து அவனை உறங்க சொல்லி அருகே அமர்ந்துவிட, மனைவி உர்ரென செய்யும் பணிவிடைகளைப் பார்த்து சிரிப்பாய் வந்தது வாசுவிற்கு.

"சிரிக்காதிங்க! ஊருக்கு போலாம்னு இருந்த ஆசைல மண்ணைப் போட்டு மூடிட்டு சிரிக்கவா செய்யுறிங்க?" என்றவளுக்கு அதுவும் ஒரு கவலை.

"இல்ல! இப்ப நீ புலம்புறதை எல்லாம் கேட்க நல்லா இருக்கு.. இதுவே இன்னும் வருஷம் கழிச்சு நம்ம பசங்க எல்லாம் வந்த அப்புறம் காதுல பஞ்சு வச்சுப்பேனோனு நினச்சேன்.. சிரிச்சுட்டேன்!" என்று உண்மையை சொல்லியவனை என்ன செய்தால் தகும் என பார்த்தவள் அவன் உடல்நிலை கருதி விட்டுவிட,

கணவன் கைகளுக்குள் இருந்தபடி அவனைப் பார்திருந்தவள் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பின்பே தானும் உறங்கலானாள்.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஒரு வருஷம் கழித்து கல்யாணம் பண்ணட்டும்னு விஷ்வாவுக்கு ஆப்பு வச்சுட்டானே வாசு 😄😄😄😄😄😄