அத்தியாயம் 25
இரவு ஒன்பது மணி ஆகி இருந்தது திக்ஷிதாவை வாசு வீட்டிற்கு அழைத்து வந்திருந்த போது.
சிவகாமி எவ்வளவோ சொல்லியும் அவர்களோடு மனைவியை அனுப்பி வைக்க சம்மதிக்காதவன் ரத்தினம் கூறியதற்காக ஓட்டுநரை மட்டும் வைத்துக் கொண்டு திருச்சியில் இருந்து ஆறு மணி அளவில் கிளம்பி இருந்தான்.
வீடு வந்து சேரும் வரை திக்ஷிதா அமைதியாய் வர, வாசுவும் அவளை கவனித்துக் கொண்டவன் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
வண்டியில் இருந்து இறங்கி திக்ஷிதா அமர்ந்திருந்த பக்கமாய் வருவதற்குள் அவள் கதவை திறந்து எழ முயற்சிக்க,
"ப்ச்! வர்றேன்ல திக்ஷி!" என்றவன் அவள் ஒற்றை காலை வெளியே நீட்டி இருக்கவும் அவள் கைகளைப் பிடித்தவனை இரங்குவதற்காய் அவள் பிடிக்க, வாகாய் தூக்கி இருந்தான்.
எதிர்பாராத திக்ஷிதா விழி விரித்தவள் சுற்றமும் பார்க்க, அதிகம் இல்லை என்றாலும் போய் கொண்டும் வந்து கொண்டும் அந்த வீட்டை கடந்த இரண்டு பேர் அப்படியே நின்றதில் அவன் நெஞ்சோடு தலையை சேர்த்து மறைத்துக் கொண்டாள்.
இதழ் திறக்காமல் புன்னகைத்தவன் மெதுவாய் வந்து வீட்டினை திறந்து கட்டிலில் இட்டவன்,
"மூணு நாள்க்கு அப்புறம் தான் நீ அசைக்கவே ட்ரை பண்ணனும் திக்ஷி.. டாக்டர் சொல்லி இருக்காங்க இல்ல?" என்று கேட்க, பதில் கூறவில்லை அவள்.
"துளசிம்மா வர்றேன்னு சொன்னாங்க.. அவங்களே சப்பாடும் கொண்டு வந்திருவாங்க" என்று கூறும் பொழுதே வெளியே பைக் சத்தம் கேட்க,
"விஷ்வா தான்!" என்று வெளியே சென்றான் வாசு.
மருத்துவமனையில் இருந்து இவ்வளவு நேரமும் அவள் இன்னமும் வாசுவிடம் பேசாமல் இருக்க, வாசுவும் அதை பற்றி கேட்காமல் தான் இருந்தான்.
"ஏன் டா?" என்பதை போன்ற பார்வை உள்ளே வந்த துளசி பார்க்க, அவரைப் பார்த்து கண் சிமிட்டினாள் திக்ஷிதா.
"பார்த்து வந்திருக்கலாமே சிஸ்டர்!" என விஷ்வாவும் பாவமாய் கேட்க, அதற்கும் புன்னகை தான்.
"ம்மா! சப்பாட்டை எடுத்து வையுங்க!" என்று விஷ்வா கூற,
"குடுங்க துளசி ம்மா!" என வாங்கிக் கொண்டு சமையலறை சென்ற வாசுவின் பின்னால் சென்றார் துளசி.
"என்ன சிஸ்டர் இப்படி ஆகி போச்சு!" என வாசு சென்றதும் பாவமாய் முகம் வைத்து கூறிய விஷ்வா,
"ப்ச்! இனி உங்களை யார் பார்த்துப்பா.. கவலையேப் படாதீங்க.. நாளைக்கே நான் ஐஷுவை கூட்டிட்டு வந்துடுரேன்.. மெடிக்கல் லீவ் நான் போட்டுடுறேன்.. ரெண்டு பேரும் உங்களை எப்படி பார்த்துக்குறோம்னு மட்டும் பாருங்க!" என்று கூற,
"ஐஷு எதுக்கு?" என்றாள் ஒற்றை புருவத்தை உயர்த்தி சந்தேகமாய் திக்ஷிதா.
"உங்களைப் பார்த்துக்க!" விஷ்வா கூற,
"ஓஹ்! அப்ப நீ எதுக்கு? ஐஷுவைப் பார்த்துக்கவா? உதை விழும் வீட்டு பக்கம் உங்களுக்கு ரெண்டு பேர் தலை தெரிஞ்சதுன்னா" என கூறும் பொழுதே வாசு ழ்வும் துளசியும் தட்டில் வைத்த உனவோடு வர,
"நீ சாப்டியா?" என்றான் வாசு விஷ்வாவிடம்.
"ஆச்சு பாஸ்!" என்ற விஷ்வா,
"நான் வேணா நாளையில இருந்து சிஸ்டர் கூட இருந்து பார்த்துக்கவா?" என வாசுவிடமே கேட்க,
"எப்படியும் பகல்ல ஒருத்தர் இருக்கணுமே! அவனுக்கு லீவு குடு.. நாங்க பார்த்துக்குறோம்" என சைகையில் கூறினார் துளசி.
"அதெல்லாம் வேண்டாம் துளசிம்மா! அவன் ஆபீஸ் போகட்டும்.. நானே வீட்டுல இருந்து பாருத்துக்குறேன்!" என்ற வாசுவை திக்ஷிதா நிமிர்ந்து பார்த்த நேரம் சப்பாத்தியை பிட்டு அவளுக்கு ஊட்டுவதற்காய் அவள் முன் நீட்டி இருந்தான் வாசு.
"காலுல தானே அடி? ரொம்பத்தான்!" என முணுமுணுத்த விஷ்வா வாசுவின் தலை திரும்பவும் திரும்பிக் கொண்டான்.
தட்டை வாங்குவதற்காக அவள் கைகளை நீட்ட,
"சாப்பிடு திக்ஷி!" என்றவன் அழுத்தத்தில் வாயை திறக்கவும் அவளுக்கு ஊட்டியபடி தானுமே சாப்பிட்டு முடித்தான்.
"மார்னிங் ஃபைல்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடு.. ஒர்க் எல்லாம் எப்படி போகுதுன்னு கொஞ்சம் பார்த்துக்கோ.. நான் இங்க இருந்தே மெயிண்டைன் பண்ணிக்குறேன்" என்று கூற, விஷ்வாவிற்கு வாசு அறியாமல் அழகு காட்டினாள் திக்ஷிதா.
திக்ஷிதாவை முறைத்தபடி, "அம்மா காலையில சமைச்சு கொண்டு வர்ராங்களாம்!" துளசி கூற வந்ததை விஷ்வா கூற,
"அதெல்லாம் வேண்டாம் துளசி ம்மா.. நான் பார்த்துக்கறேன்.. எனக்கு தான் ஓரளவு தெரியுமே.. நீங்க அலைய வேண்டாம்.." என்று விட்டான் வாசு.
துளசி விஷ்வாவை அனுப்பி வைத்துவிட்டு பாலை அடுப்பில் ஏற்றி சூடு செய்தவன் திக்ஷிதாவிற்கும் தனக்கும் எடுத்து கொண்டு அறைக்கு வந்தான்.
"மாத்திரை போட்டு இதை குடிச்சிட்டு படுத்துக்கோ! நான் வர்றேன்!" என்றவன் மாத் mதிரிகளை பிரித்து வைத்துவிட்டு குளியலறை செல்ல, திக்ஷிதா பார்த்தபடி இருந்தாள்.
குளித்து முடித்து வரும் பொழுதும் திக்ஷிதா பாலை அப்படியே வாத்திருக்க,
"குடி திக்ஷி!" என எடுத்து கொண்டு வந்து அவள் கைகளில் தர மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் மாத்திரைகளை போட்டு குடித்துவிட்டு அமர, தானும் குடித்துவிட்டு அவளருகே அமர்ந்தவன்,
"இப்ப சொல்லு என்ன கோபம்?" என்றான்.
வேண்டுமென்றே கவனியாததை போல திக்ஷிதா அமர,
"சொல்லு திக்ஷி!" என்றவன் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.
"நான் தான் கோபமா இருக்கனும்.. உனக்கு என்ன? நான் திட்டினதுக்கு கோபமா?" என்று அவள் உச்சிதனில் கைவைக்க, இல்லை என்ற தலையசைப்பு.
"அடிச்சது தப்பு தான் சாரி!" என்றவன் அடித்த இடத்தில் மருந்தாய் முத்தமிட, தடுக்கவில்லை அவள்.
"திக்ஷி! கோபத்துல பேசினதை மனசுல வச்சுக்காத.. என்னனு சொல்லும்மா" என்றான் அவள் அசையாமல் இருந்ததில்.
"கோபத்துல என்ன வேணாலும் பேசலாமா?" இன்று அவள் அவனிடம் பேசிய முதல் பேச்சு இதுவாய் இருக்க, அவ்வளவு தவறாய் எதுவும் பேசியதாய் தெரியவில்லை வாசுவிற்கு.
யோசித்து பார்த்த போதும் கூட அவளுக்கு எதுவுமோ என்ற பயத்தில் பேசிய வார்த்தை எதுவும் நியாபகம் இல்லாமல் போக,
"எனக்கு இப்பவுமே கோபம் தான்.. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையயேனு.. ஐ அண்டர்ஸ்டாண்ட்! ஸர்ப்ரைஸ் பண்ண நினைச்சதெல்லாம் ஓகே.. நீ என்கிட்ட வந்து சேர்ந்திருந்தா நானும் சந்தோசப்பட்டிருப்பேன் தான்.. ஆனா நடந்தது..." என்றவன் கண்களை மூடி தலையை பின்னால் சாய்த்து இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்பதாய் பார்த்தான்.
"நான் உங்களுக்கு தேவை இல்லாத தலைவலி தானே?" என்று திக்ஷிதா அடுத்ததாய் வாய் திறக்க,
"வாட்?" என்று கண் திறந்து அவளைப் பார்த்தவனுக்கு, அவள் கூறியது புரியவே இல்லை.
"நீங்க தான் சொன்னிங்க.." அவள் கூற, அவனுக்கு கூறியது நியாபகமே இல்லை.
"என்ன திக்ஷி உளர்ற?" என மெதுவாய் கூறியவன்,
"நான் கோபத்துல பேசினேன் தான்.. அதெல்லாம் உனக்கு எதாவது ஆகி இருந்தா அப்படின்ற பயத்துல டென்ஷன்ல சொன்னது மட்டும் தான்.. உன்னை போய் நான்.. என்ன மீனிங்ல சொல்ற நீ? இதை மனசுல வச்சிட் தான் இவ்வளவு நேரமும் கோபமா இருந்தியா?" என்றவன்,
"பைத்தியம்!" என்று தலையில் தட்ட,
"என்னை கல்யாணம் பண்ணினதுல இருந்து உங்களுக்கு டென்சன் தான் இல்ல?" என்றாள் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல்.
"திக்ஷி!" என்றவன் அழுத்தமான அழைப்பில்,
"மனசுல இருக்குறது தான் கோபத்துலயும் வெளில வரும்" என்றாள்.
"ப்ச்! இன்னும் என்னவெல்லாம் நினைச்சுட்டு இப்படி இருக்க? மொத்தமா சொல்லிடு!" என்று கோபமாய் வாசு கூற, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அதில் பெருமூச்சுடன் அவள் தலையை தாங்கிக் கொள்ள,
"கஷ்டமா இருக்கு.. எனக்கு தோணவும் கிளம்பிட்டேன்.. ரொம்ப ஆசையா தான் கிளம்பினேன்.. இப்படி ஆகும்னு நினைக்கல" என்றவள் பேச பேச அவன் தலைகோத,
"வலிக்குது.. ஆனா நீங்க சொன்னது தான் ரொம்ப வலிக்குது" என்றவளிடம் சிறு விசும்பலும் வர,
"ஹேய்!" என்றவன் அவள் முகம் நிமிர்த்தி பார்த்தான்.
"திக்ஷி! என்ன இது?" என்றான் கலங்கிய முகம் பார்த்து.
"எனக்கு பயமா இருக்கு.. நம்ம கல்யாணமும் நல்ல விதமா நடந்திருந்தா எனக்கு இதெல்லாம் தோணிருக்காது இல்ல?" என்று கேட்க, அவள் அதிகப்படியாய் சிந்திப்பது புரிந்தது.
"இப்ப மட்டும் எப்படி நடந்துச்சாம் நம்ம கல்யாணம்? என்ன இல்ல சொல்லு?" என்று சமாதானம் செய்ய,
"எல்லாம் இருந்துச்சு.. ஆனா உங்களுக்கு தான் மனசில்ல" என்றாள் முறைத்து.
"தெரிஞ்சே இப்படி பேசினா நான் என்ன பதில் சொல்ல திக்ஷி?" என்றவனுக்கு அவளின் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை.
"ம்ம்ஹும்ம்.. இது இன்னும் எவ்வளோ நாளைக்கு இப்படினு தோணுது.. பயமா இருக்கு" திக்ஷிதா கூற,
"டேய்! என்ன நீ? என்னென்னவோ பேசிட்டு இருக்குற? மண்டைல எங்கவும் அடி பட்டுடுச்சா?" என சிரிப்புடன் வாசு கேட்க, திக்ஷிதா முறைக்க,
"பின்ன! கோபத்துல பேசுறதுக்கெல்லாம் அர்த்தம் கேட்டு இவ்வளோ யோசிப்பியா நீ?" என நெற்றி முட்டினான்.
"இன்னும் பயமா தான் இருக்கு!" அவள் கூற,
"இனி உனக்கு அந்த பயம் வராத மாதிரி பார்த்துக்குறேன் போதுமா? நெக்ஸ்ட் உனக்கு ஏதாச்சும் அச்சிடேன்ட் ஆகட்டும்.. அப்ப எப்படி சிரிச்சிட்டே நிக்குறேன் பாரு!" என்று வாசு சிரிக்காமல் கூற, அவனை முறைக்க நினைத்தவளுக்கு புன்னகை வந்தது.
"ம்ம்! குட் கேர்ள்! டேப்லெட் போட்டாச்சு இல்ல.. தூங்கி எழுந்தா சரியா போகும்!" என்றவன் எழுந்து விளக்கனைத்து வந்து அவள் கால் அருகே ஒரு தலையணை வைத்துவிட்டு அவளருகேயே படுத்துக் கொண்டான்.
"என்ன சரியா போகும்?" திக்ஷிதா கேட்க,
"உனக்குள்ள இருக்குற பேய் பிசாசு தான்.. அதானே இவ்வளவு யோசிக்க வைக்குது உன்னை?" என்று கூற,
"நிஜமா நீங்க வீட்டுல இருக்க போறிங்களா?" என்றாள் ஆச்சர்யமாய்.
"ஆமா ஆமா!" என்றவன்,
"அதுக்காக ரொமான்ஸ் எல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணாத.. நீ படிக்குற.. நான் லேப்டாப்ல ஒர்க்கை பாக்குறேன்.. இந்த செம் நீ இப்ப முடிச்சே ஆகணும்" என்றவனை வெட்டவா குத்தவா என பார்க்க,
"இல்லைனா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. நீ தான் புக் பேக்கோட பேபி கேர்ரி பேக்கும் தூக்கிட்டு சுமக்கணும்" என்றவனை தாராளமாய் அவள் அடிக்க,
"டேய் டேய்! திஷி!" என சிரித்தபடி அவள் கைகளைப் பிடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டவன் அவள் கால்கள் அசையாதவாறும் பார்த்துக் கொண்டான்.
"கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கனும் திக்ஷி!" ரொம்ப ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா? " என்று அவள் கைகளில் அழுத்தம் கொடுக்க,
"அட்வைஸா?" என விழித்தவள்,
"நான் தூங்கிட்டேன்!" என கண்களை மூட,
"கேடி!" என்றவனும் அவளைப் பார்த்தபடி தூங்கிப் போனான்.
தொடரும்..