நதி - 25
“நீ எழுப்புறியா? இல்ல நாங்க வரட்டுமா.?” என்ற அதிகாரக் குரலில் அரண்டு போன அபி, “ஏங்க.. ஏங்க” என கார்த்தியை போட்டு உழுக்கியெடுக்க,
“ம்ச் என்னதாண்டி வேணும்… எதுக்கு இப்போ தூங்கிட்டு இருக்கிறவனைப் போட்டு சொரிஞ்சிட்டு இருக்க..” என எரிச்சலாக கண்ணைத் திறந்து அவளைப் பார்க்க, ஆனால் அவள் பார்வையோ வாசலில் இருந்தது.
‘யாரை இப்படி அரண்டு போய் பார்த்துட்டு இருக்கா?’ என மனதுக்குள் யோசித்தபடியே அவனும் வாசலைப் பார்க்க, இவர்கள் இருவரையும் பல்லைக் கடித்து முறைத்தபடி நின்றிருந்தது புவனனும் பார்கவியும்.
“வந்ததே லேட்.. இதுல எதுக்கு முறைப்பு.?” என்றவன் இப்போது நன்றாக எழுந்து அமர்ந்தான்.
“என்னடா பண்ணி வச்சிருக்க..?” முறைப்புக் குறையாமலே புவனன் கேட்டுக்கொண்டே அருகில் வர, அவர்களைப் பார்த்து பயத்தில் நெளிந்தவாரே கார்த்தியை தன்னிடமிருந்து விளக்கிக் கொண்டிருந்தாள் அபி.
அதை உணர்ந்தவன் “ம்ச் இப்போ என்னடி?” என அவளை முறைக்க, சட்டென அமைதியானவள் இப்போது வந்திருந்தவர்களை ‘எப்படியாவது இவனிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்’ என்பது போல் பாவமாக பார்க்க, அவளைப் பார்த்து சிரிப்புதான் வந்தது பார்கவிக்கு.
அதனால் “கார்த்தி அவளை தனியா விடு? ரெஸ்ட் ரூம் போகனும்போல.” என பார்கவி அபியைக் காப்பாற்ற,
‘அப்படியா?’ என பார்த்தவனிடம், அபி வேகமாக ‘ஆமாம்’ என தலையை ஆட்ட,
“அதை வாயைத் தொறந்து சொல்றதுக்கு என்ன..?” என கடுப்பானவன், “நீ போய்டுவியா, இல்ல நான் வரனுமா?” என்றதும், அபி அதிர்ச்சியில் வாயில் கைவைக்க, இவர்கள் இருவரின் உரையாடலைப் பார்த்த மற்ற இருவரும் பக்கென சிரித்துவிட்டனர்.
“டேய் உனக்கு ரொம்ப தெரியுமா? சின்ன பொண்ணை போட்டு மிரட்டிட்டு இருக்க. நீ வா அந்த வைபவ் வந்து வெய்ட் பண்ணிட்டு இருக்கான். கவி நீ அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணு..” என இருவரிடமும் கூறி கார்த்தியை இழுத்துக்கொண்டு வெளியில் சென்றான்.
கொஞ்சமும் பயம் விலகாமல் தன்னைப் பார்த்த அபியிடம் “ஹாய் நான் பார்கவி. கார்த்தியோட அண்ணி. நீ அபிராமிதான..” என பார்கவியே ஆரம்பிக்க
“ம்ம்.. சாரி மேடம்.. அவர்தான்..” என என்ன சொல்வதென்று தெரியாமல் கலங்க,
“ஹேய் எதுக்கு இப்போ ஃபீல் பண்ற, எங்களுக்கு கார்த்தியை நல்லாத் தெரியும். அதனால உன்னைத் தப்பா நினைப்போம்னு எல்லாம் யோசிக்காத. இப்போ உனக்கு ஓக்கேவா. ரெஸ்ட் ரூம் போகனுமா?” என மிகவும் சாதாரணமாகவே கேட்க,
“இல்ல.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. இவர் என்னை லவ் பண்ணுவாருன்னு நான் யோசிச்சதே இல்ல. பார்க்கும் போதெல்லாம் என்னைத் திட்டிட்டேதான் இருப்பார். திடீர்னு எல்லாம் மாறின போல இருக்கு. எனக்கு பயமா இருக்கு. எனக்கு முரளியைப் பார்க்கணும்.. மனோ ரொம்ப பயந்திருப்பா..” என அழுகையோடு அபிராமி பேச,
அவளை அனைத்துக்கொண்ட பார்கவி “முதல்ல அழுகையை நிறுத்து அபி. எல்லாரையும் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி உங்கிட்ட பேசனும். கார்த்தியை தப்பா நினைச்சிடாத. அவன் பார்க்கத்தான் முரடன். குணமும் கொஞ்சம் அப்படித்தான். ஆனா ரொம்ப நல்லவன். எங்க குடும்பத்துலயே அவன் கொஞ்சம் டிஃபரண்டா இருப்பான். ‘நான் இப்படித்தா இருப்பேன்’ என்ற திமிர் கொஞ்சம் கூடவே இருக்கும். அதுக்கு காரணம் எங்க தாத்தா. அதைத்தவிர தப்பு சொல்ல அவன்கிட்ட எந்த கெட்ட குணமும் இல்லம்மா..” என சிறு குழந்தைக்கு சொல்லி புரிய வைப்பது போல பொறுமையாக எடுத்துக்கூற,
“இல்ல இல்ல நான் தப்பு சொல்லல.. ஆனா இப்படியே வாழ்க்கை முழுவதும்னா எனக்கு சொல்லத் தெரியல. ரொம்ப பயமா இருக்கு. நான் வேண்டாம்னு சொன்னாலும் விடமாட்டார்னு புரியுது. இவரை எனக்கு பிடிக்குமா பிடிக்காதான்னே இன்னும் எனக்கு தெரியல.. அதுக்குள்ள அவர் அதிகமா உரிமை எடுத்துக்குற மாதிரி இருக்கு. இதெல்லாம் எனக்கு பயமா, கொஞ்சம் அனீசியா இருக்கு.. நான் சொல்றதை உங்களால புரிஞ்சிக்க முடியுதா.?” என்றாள் தவிப்புடன்.
“நல்லாவே புரியுது. கார்த்தியை பொறுத்தவரைக்கும் அவன் எடுத்த முடிவுல பின் வாங்கமாட்டான். நீ சொன்ன மாதிரி நீ வேண்டாம்னு சொன்னாலும் விடமாட்டான். நீ என்ன முடிவு எடுக்கப்போற..” என்றாள் பார்கவி.
“தெரில.. நான் என்ன செய்ய? முரளிக்கிட்ட கேட்கனும்.. அப்பா இல்ல இல்ல அந்தாளு..” என அடுத்து என்ன சொல்லியிருப்பாளோ கதவைத் திறந்து உள்ளே வந்தனர் மனோவும் முரளியும்.
இருவரையும் பார்த்து அப்படியொரு அழுகை அபிராமிக்கு. பார்கவியே பயந்துவிட்டாள். ‘ஹேய் அபிமா ஒன்னுமில்ல ஒன்னுமில்லடா..’ என்ற முரளியின் எந்த சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை.
அவர்கள் மூவரின் முன் தான் அதிகப்படி என நினைத்த பார்கவி வெளியில் செல்ல, அப்போதுதான் மனோகரிக்கு மூச்சே வந்தது.
“அபி இப்போ போனாங்களே அவங்ககிட்ட உன் அப்பாவைப்பத்தி எதுவும் உளரலையே..” என பதட்டமாக கேட்க,
‘இல்லை’ என்று கண்ணீருடன் தலையை அசைத்தவள், “அப்போதான் சொல்ல ஆரம்பிச்சேன்” என்றாள் அழுகையோடு.
“நல்லவேளை.. எங்க உளரிட்டீயோன்னு பயந்துட்டேன். உன்னை சரியாத்தான் புரிஞ்சு வச்சிருக்கார் கார்த்தி சார். நீ இப்படி அவங்ககிட்ட தேவையில்லாம உளரிடுவியோன்னு பயந்துதான் என்னை உடனே போக சொன்னார்..” என்றாள் மனோகரி ஒரு பெருமூச்சோடு.
“எனக்கு இங்க இருக்க முடியாதுண்ணா.. அந்தாளு என்னை பணத்துக்காக, பணத்துக்காக… எனக்கு செத்துடனும்போல இருக்குண்ணா.. யாரையும் பார்க்க முடியல. எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்க..” என முரளியைக் கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.
முரளிக்கும் அதே எண்ணம்தான். ஆனால் அவனுக்கு இப்போது தங்கையை தேற்ற வேண்டிய கட்டாயம் இருக்க, “என்ன பாப்பா இது. இங்க பாரு.. அப்படியெல்லாம் நடந்திருக்காது. கார்த்தி விட்டுருக்கமாட்டார். இப்படி அழுதுட்டே இருந்தா மறுபடியும் உடம்புக்கு எதும் வந்துடும். எத்தனை மணி நேரமா நீ மயக்கத்துல இருந்துருக்க தெரியுமா? நீ இப்படி அழுது மறுபடியும் எதுவும் காம்ப்ளீகேட் ஆகிட போகுது. அமைதியா இரு. அழாத பாப்பா. மத்தது எல்லாம் நாம வீட்டுக்கு போய் பேசிக்கலாம். நீ தைரியமா இரு..” என்றான்.
“வீட்டுக்கு போலாமா.? போலாம்.. எனக்கு இங்க வேண்டாம்.. அவர்.. அவர் எங்க..? அவர்கிட்ட சொல்லனுமா?” என பயத்தில் ஏதேதோ பேசினாள்.
அபியின் பயம் மற்ற இருவருக்கும் புரிய, “கண்டிப்பா போகலாம். டாக்டர்கிட்ட கேட்டுட்டு வரேன். அப்படியே கார்த்திக்கிட்டயும் சொல்லிட்டு வரேன்.” என முரளி போக, அதற்காகவே காத்திருந்தது போல கையில் ஃப்ளாஸ்கோடு வந்தாள் பார்கவி.
“எல்லாமே சாப்பிடலாமாம். இப்போ பால் குடிக்கலாம் சொன்னாங்க. கொஞ்சம் கழிச்சு சாப்பிடுவியாம்..” என பாலை டம்ப்ளரில் விட்டு கொடுக்க, வாங்குவதா வேண்டாமா என மனோகரியைப் பார்த்தாள் அபி.
“அட வாங்கு அபி..” என அவள் கையைப் பிடித்து பார்கவி கொடுக்க, மனோ அதை குடிக்க வைத்தாள்.
“ரெஸ்ட் ரூம் போறீயா அபி..” என்ற மனோவிடம், ‘சரி’ என்பது போல் தலையாட்ட, மனோ அவளை அழைத்துப்போக, பார்கவிக்கு அபியை நினைத்து பாவமாக இருந்தது.
இப்படி தொட்டதெற்கெல்லாம் பயப்படும் பெண் எப்படி தன் வீட்டில் வந்து இருப்பாள் என யோசித்தபடியே அமர்ந்திருந்தாள்.
இங்கு வைபவ் கூறியதை கேட்டு அதிர்ந்து போயிருந்தனர் புவனனும் கார்த்தியும்.
அந்த அதிர்விலிருந்து முதலில் வெளியில் வந்தது கார்த்திதான்.
“என்ன சொல்ற வைபவ், நீ யோசிச்சுதான் பேசுறியா? இது சாதாரண முடிவு இல்லை. ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம் பின் வாங்கக்கூடாது.” என்று இறுக்கமாக கூற,
“இல்ல.. நான் நல்லா யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்திருக்கேன். ஸ்கூல் டேஸ்ல இருந்து எனக்கு மதிய ரொம்ப பிடிக்கும். அப்போ அது லவ்வுன்னு எனக்கு புரியல. ஆனா இந்த ஒன் மந்தா அவ படுற கஷ்டங்களை பார்க்கும்போது, நான் கூட இருந்தும் எப்படி விட்டுட்டேன்னு என் மேலேயே எனக்கு கோபம். ஏன் நான் மத்தவங்க மாதிரி இதை கடந்து போகலன்னு யோசிக்கும் போதுதான், எனக்கு புரிஞ்சது ‘ஐ லவ் ஹெர்’, மதியை இனி என்னால விடமுடியாது.. அவளை என்கிட்ட கொடுத்துடுங்க, நான் பத்திரமா பாத்துக்குறேன்.” என மிகவும் பொறுமையாகவே பேசினான் வைபவ்.
“வைபவ் இது நீ நினைக்கிற மாதிரி இல்ல, ஒருவேளை அவ மேல இருக்கிற சிம்பதியில வந்த லவ்வா கூட இருக்கலாம். இதை லவ்ன்னு கூட சொல்ல முடியாது, இன்பாக்சுவேஷன். மதி மேல பரிதாபத்தில் வந்த ஒரு ஈர்ப்பு. இந்த ஈர்ப்பு கூடிய சீக்கிரமே காணாமல் போய்விடும். அதுக்கப்புறம் உங்க லைப் யோசிச்சு பாரு கொடுமையா இருக்கும்.” என புவனன் கூற,
“உங்க டவுட்ஸ் எல்லாம் சரிதான், அதை கிளியர் பண்ண வேண்டியதும் என் பொறுப்புதான். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை வரவரைக்கும், நான் வெயிட் பண்ண முடியாது. மதியை இதிலிருந்து வெளியே கொண்டு வரணும். இப்படியே விட்டா அவ மெண்டலி அஃபெக்ட் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு. எனக்கு ஜெர்மனில இருக்குற ஒரு கம்பெனிக்கு கேம்பஸ்ல பிளேஸ்மென்ட் ஆகியிருக்கு. டூ மந்த்ஸ்ல நான் ஜெர்மனி போகணும். மதியையும் கூடவே கூட்டிட்டு போகணும். மதியை இங்க விட்டுட்டு என்னால அங்க தனியா இருக்க முடியாது. உங்க முடிவு தெரியாம எங்க வீட்ல என்னால பேச முடியாது. உங்க அளவுக்கு இல்லனாலும் நாங்களும் ஓரளவுக்கு வசதியான பேமிலிதான். நாளைக்கு ஈவினிங்குள்ள எனக்கு முடிவு சொல்லுங்க. அதுக்கு பிறகு தான் நான் என் வீட்டில பேச முடியும்.” என நீளமாக தன் வாதத்தை எடுத்து வைத்தான் வைபவ்.
“இதில் நாங்கள் தனிப்பட்ட எந்த முடிவும் எடுக்க முடியாது வைபவ். வீட்டில பேசிட்டு சொல்றேன். முதல்ல தாத்தா கிட்ட பேசுறேன். அவர் என்ன சொல்றாரோ அதை பொருத்து நீங்க உங்க வீட்டில பேசுங்க. நாங்களும் சரி எங்க வீட்டிலயும் சரி வசதி வாய்ப்புகளை பெருசா நினைக்கிறதில்ல வைபவ். அதை ஒரு காரணமாக காட்டி இந்த பேச்சை மறுக்க மாட்டாங்க. ஆனா மதியோட விருப்பத்தை பொறுத்து மாறலாம்..” என நிதர்சனத்தை புவனன் எடுத்துக்கூற, கார்த்தியும் அதேதான் யோசித்தான்.
“மதிகிட்ட என்னால பேச முடியும், ஆனா அவளுக்கு இருக்கிற குற்ற உணர்ச்சியில கண்டிப்பா ஒத்துக்கமாட்டாள். முடியவே முடியாதுன்னு அடம் பிடிப்பா. அவ வேண்டாம்னு சொல்லிட்டு அதுக்குபிறகு என்னால ப்ரொசீட் பண்ண முடியாது. அதனாலதான் உங்ககிட்ட வந்தேன். நான் லவ் பண்ணதோ, உங்க கிட்ட வந்து பேசினதோ எதுவும் மதிக்கு தெரிய வேண்டாம். வீட்டுல அரேஞ்ச் பண்ற மாப்பிள்ளைன்னே நினைக்கட்டும். அப்போதான் அவளால நார்மலா இருக்க முடியும்.” என்ற வைபவின் பேச்சை இருவரும் ஏற்றுக் கொண்டனர்.
“சரி வைபவ்! நாங்க தாத்தாகிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்றோம். மதி ஹாஸ்பிடல் இருக்கா, நீங்க ஒரு தடவை பார்த்துட்டு போயிருங்க..” என்ற கார்த்தியின் பேச்சை மறுக்க முடியாமல் வைபவ் கிளம்பினான்.
வைபவ் கிளம்பியதும் அண்ணன் தம்பி இருவருக்குள்ளும் பெரும் யோசனை.
கார்த்திதான் முதலில், தனக்கும் தாத்தாவிற்கும் நடந்த உரையாடலை கூறி, “தாத்தாகிட்ட நான் இதைப்பத்தி பேசினா கண்டிப்பா நம்பமாட்டார். முரளியை காப்பாத்துவதற்காக நானே வைபவை பேசி கூட்டிட்டு வந்தேன்னு நினைப்பார்.” என்றான் எரிச்சலில் தலையை அழுந்த கோதி.
‘இது என்ன புது குழப்பம்’ என்றுதான் தோன்றியது.
“ம்ம்ம்..” என்ற புவனனுக்கும் அவர் கண்டிப்பாக அப்படித்தான் யோசிப்பார் என்று தெரியும்.
“சரி அதை அப்புறம் பார்ப்போம். நீ என்ன முடிவு எடுத்திருக்க? அந்தாளை என்ன பண்ணா.?” என்றான் தமையனாய்.
“அவனை இன்னும் ஒன்னும் போடல. இப்போதான் ஊற போட்டுருக்கேன். பொறுமையாதான் ஊறுகா போடனும்..” என்றவன், “என்னோட முடிவை உங்கிட்ட சொல்லித்தான் உன்னை வரச்சொன்னதா ஞாபகம்..” என்றான் கடுப்பாக.
“ம்ச்.. கார்த்தி கோபப்படக்கூடாது. இது விளையாட்டில்ல. அந்த பொண்ணைப் பார்த்தா பாவமா இருக்குடா. நம்ம குடும்பத்துல வந்து அவளால பேலன்ஸ் பண்ண முடியுமான்னு யோசிச்சு பாரு. ஏன்னா நம்ம வீட்டுக்கு வந்த மூனு மருமகளும் பெரியவங்களோட சாய்ஸ்தான். அவங்களோட ப்ரெஸ்டீஜுக்கு ஏத்தமாதிரி பொண்ணு கொண்டு வந்துருக்காங்க. ஆனா அபி அப்படி இல்லை. பாட்டியை விடு. ஆனா அம்மாவும் சித்தியும் சும்மா இருக்கமாட்டாங்க..” என நடக்கப் போவதை தெளிவாக எடுத்து சொல்ல,
“ம்ச் இதெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா? ஆனா அதுக்காக எல்லாம் அபியை விட முடியாது..” என்றான் பட்டென.
“டேய் இப்போ எதுக்கு கத்துற.. இப்படியும் நடக்கலாம்னுதான் சொன்னேன். இது வாழ்க்கை கார்த்தி சூழலைப் புரிஞ்சு, அதுக்குள்ள சாதக பாதகங்களை யோசிச்சுத்தான் முடிவு எடுக்கனும். உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. யார் மனசையும் கஷ்டப்படுத்தாம முடிவு பண்ணு.” என்றுவிட்டான் புவனன்.
கார்த்தியின் முகத்தில் யோசனை சாயல் தெரியவும், ‘சரி யோசிக்கட்டும்’ என நினைத்தவன், “சரி வா. கவி அங்க தனியா இருப்பா.. என்னாச்சுன்னு பார்த்துட்டு நாங்க மதியைப் பார்க்க போகனும். இப்போவே அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க.” என கார்த்தியை அழைத்துக்கொண்டு அபியின் அறைக்கு வந்தவன், அங்கு பார்த்த காட்சியில் வேகமாக திரும்பி தம்பியை பார்த்தான்.
அவனும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறான் என்பதற்கு சான்றாக உடல் இறுகி, முகம் கோபத்தில் சிவந்து போய் நின்றிருக்க, தன் கோபத்தை அடக்க முடியாமல் கைமுஷ்டியை மடக்கி சுவற்றில் ஓங்கி குத்தினான்.