• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 3

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 3

வாசு திக்ஷிதாவிடம் பேசலாமா என நினைக்கும் போதே அவன் மொபைலில் அழைப்பு வர, படுக்கையில் அவனருகில் சத்தம் வர திரும்பி பார்த்தாள் திக்ஷிதாவும்.

"அம்மா!" என்ற அழைப்பில் இவள் வாசுவை பார்க்க,

"சொல்லுங்க ம்மா!" என்றான் எடுத்ததும்.

"ஓஹ்! ம்ம் சரி!" என்று கேட்டுக் கொண்டவன்,

"உன் அப்பா எங்கே?" என்றான்.

"கீழே தான் இருக்காங்க.. வர சொல்லவா?" என்று கேட்க,

"நானே வர்றேன்!" என எழுந்து நின்றவன் தலைமுடியை கைகளால் கோதிக் கொள்ள, அவனை நிமிர்ந்து தான் பார்க்க வேண்டி இருந்தது திக்ஷிதாவிற்கு.

"என்ன ஹைட்டு! என்னை அப்படியே டபிள் ஆக்கினா தான் இவங்க தலையை நான் நேரா தொட முடியும் போல!" வாய் கொள்ளாமல் சொல்லிவிட, முடித்தபின் தான் சத்தமாய் கூறியதும் நினைவு வந்தது.

"வாய் தான் டி! உன் வாயால தான் நீ கெட போற.. இவன் வேற பார்ப்பானே!" என நினைத்தபடி நிமிர, அவளை தான் பார்த்து நின்றான் கைகட்டி.

"ப்ரோமிஸா இனி பேசவே மாட்டேன்" என்று அவள் கூற,

"யார் மேல ப்ரோமிஸ்?" என்றான். அதில் திருத்திருவென அவள் விழிக்க,

"தூங்கும் போதும் ஸ்டாப் பண்ண முடியாது போல!" என்று கூறி அவன் அவளை தாண்டி செல்ல, ஒரு நொடி புரியாமல் நின்றாள்.

"வாயை சொன்னேன்!" என திரும்ப வந்து கூறிவிட்டு முன்னே செல்ல, "ஓஹ்!" என்றுவிட்டு பின்னோடே ஓடினாள்.

கதிர் முன் சென்று வாசு நிற்கவும்,

"ப்பா! உங்களை தான் பார்க்கணும் சொன்னாங்க" என்று திக்ஷிதா வர,

"நான் பார்த்துட்டேன்.. நானே சொல்லிப்பேன்!" என்றவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் இருக்க, கதிரும் என்ன என்று புரியாமல் பார்க்க,

"இனி நீ கூப்பிடாம உன் பக்கத்துல வர்றேனா பாரு!" என முணுமுணுத்து சென்றாள் அவள்.

"என்ன டா அண்ணனை வளத்து வச்சிருக்கீங்க? பனைமரம் உசரத்துல போய் கண்ணு காது மூக்கு எல்லாம் வச்ச மாதிரி.. ஒரு ரெண்டு வார்த்தை நிம்மதியா பேச முடியுதா?" என விஷ்வா அருகே வந்திருந்தாள் திக்ஷிதா.

"என்ன ஆச்சு அண்ணி?" விஷ்வா கேட்க,

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எங்கேயோ இடிக்குது.. இது சரியே இல்ல.. மாமி எனக்கு ஆப்பு வச்ச மாதிரியே பீலிங்கு!" என்று புலம்ப,

"அண்ணா எதாவது சொல்லிட்டாங்களா? இல்லையே அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்களே!"

"என்ன பண்ண மாட்டாங்களே! பண்ணிட்டார்ன்றேன்!" என்றவள்,

"இரு! இன்னைக்கே அங்கே வந்து மாமியார் மருமக பஞ்சாயத்தை ஆரம்பிக்குறேன்.. சங்கு! நீ எஸ்ஸாகிட்ட.. இப்ப எனக்கு தான் டி சங்கு" என புலம்பின படி இருந்தாள்.

"சொல்லுங்க தம்பி!" கதிர் கேட்க,

"மாமா! எங்களோட கோவில் வீட்டுக்கு போற வழியில இருக்கு.. அங்கே போய்ட்டு வீட்டுக்கு வர சொல்றாங்க அம்மா.. சோ கொஞ்சம் முன்னாடி கிளம்பலாமா?" என்று கேட்க,

"தாராளமா போகலாம்.. நான் போய் எல்லாரையும் ரெடியாக சொல்லிட்டு வர்றேன்.. நீங்க உட்காருங்க" என்று கூறி செல்லவும் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து மீண்டும் சுற்றிப் பார்த்தான் வாசு.

"இங்க என்ன பண்ற திக்ஷி? மாப்பிள்ளை தனியா உட்கார்ந்து இருக்கார் பார்.
என்ன வேணும்னு கேளு!" என்று கூறிவிட்டு கதிர் சொல்ல,

"உங்க மாப்பிள்ளை சத்தம் வராம கைத்தட்ட சொல்லுவார்.. நான் இங்கேயே இருந்துக்குறேன்" என்றவள்,

"நீ வேணும்னா உன் அண்ணாகிட்ட போ!" என்று கூற,

"டென்ஷன் ஆகாதீங்க அண்ணி! இப்ப தானே பாக்குறீங்க.. அதான் கஷ்டமா இருக்கும்" என்றான் விஷ்வா.

"அப்போ போக போக பழகிடும்ன்றியா?" என முறைப்புடன் கேட்க,

"நீங்க சீரியஸா பேசினாலும் எனக்கு சிரிப்பு தான் வருது.." என்று சிரித்தான் அவன்.

"அவன் பேசினாலே கண்டுக்க மாட்றான். இவன் கோபமா பேசினாலும் சிரிக்குறான்.. ஹே என்னங்க டா!" என்றவள் அருகே பையுடன் வந்தார் உமா.

"இதுல உனக்கு இப்ப வேண்டிய டிரஸ் எல்லாம் வச்சிருக்கேன் திக்ஷி!" என்று உமா கூற,

"ம்மா! என்ன ஒரு பேக் மட்டும் இருக்கு.. அப்ப என்னோட புக்ஸ்?" என்றாள்.

"எல்லாத்தையும் முதல் நாளே கொண்டு போய்டணும்னு இல்ல.. அதெல்லாம் இருக்கட்டும்.. மறுவீடு வரும் போது கொஞ்சம் எடுத்துக்கோ.. நாங்க உன்னை அழைக்க வரும் போது கொஞ்சம் எடுத்துட்டு வர்றோம்" என்று கூறவும் சரி என்றுவிட்டாள்.

"இப்ப ஏன் மா இங்கே கொண்டு வந்திங்க? ஒரு ஓரமா வைக்கலாம் இல்ல.
இன்னும் தான் நேரம் இருக்கே?" என்று கேட்க, கதிர் கூறியதை கூறினார் உமா.

"கோவிலுக்கு போகணுமா?" என்றவள்,

"இதை சொல்ல தான் அப்பாவை தேடினாரா.. ஏன் என்கிட்ட சொல்ல கூடாதாமா? இந்த வாசுவை!" என்றவள் அவனை தேட விஷ்வாவுடன் பேசியபடி இருந்தான்.

அவள் அருகே வரவும் திரும்பியவன் "கிளம்பலாமா?" என்று கேட்க,

"ம்ம்!" என்ற குரல் மட்டும் இதழ் திறக்காமல் வர, கூடுதலாய் மண்டையும் ஆடியது. அதில் விஷ்வா சத்தமாய் சிரித்து,

"ண்ணா! ரொம்ப அண்ணியை பயம் காட்டாதிங்க.. பாருங்க! உங்ககிட்ட பேச மாட்டேன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க" என்று கூற,

"டைரக்டாவே சொல்லுவேன்.. ஏன் டா புதுப் பொண்ணு மாதிரியா நடத்துரிங்க என்னைய?" என தோன்ற, வார்த்தையாய் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தலையை உலுக்கிக் கொண்டாள்.

"பேச மாட்டாளா! ஏன்? நான் என்ன பண்ணினேன்?" என கேட்டானே ஒரு கேள்வி. நெஞ்சில் டப்பென்ற சத்தம் வர அவள் வாசுவைப் பார்க்க,

"ம்ம்ஹ்ம்ம்! நான் வர்ல உங்களுக்கு இடையில!" என்று கூறி சென்றுவிட்டான் விஷ்வா.

"ஆமா நீ என்ன படிச்சிருக்க?" என்று கேட்கவும்,

"வண்டி ரெடி தம்பி போகலாம்" என கதிர் வரவும் சரியாய் இருந்தது.

"ம்மா! இங்க பாருங்க! சும்மா அப்பா கூட சண்டை போட கூடாது.. சங்கு... ப்ச்! அவ போனதை எல்லாம் நினச்சு உங்க ஹெல்த்தை பார்க்காம விட்டுடாதீங்க.. அப்பா உங்களுக்கும் தான்.." என்று மிக தீவிர முகத்துடன் தாய் தந்தைக்கு திக்ஷிதா அறிவுரை வழங்க, அது கேட்க கூடிய தூரத்தில் தான் நின்றிருந்தான் வாசுவும்.

"நாங்க பார்த்துக்குறோம் அம்மு!.. நீயும் கொஞ்சம் பொறுப்பா இருக்கனும்.. இங்க இருந்த மாதிரியே விளையாட்டுத்தனமா இருக்க கூடாது.. புரியுது தானே?" என்று அன்னை கூற, அவரை அணைத்துக் கொண்டாள் திக்ஷிதா.

"மிஸ் யூ ம்மா!" என்றவள் கண்கள் கலங்க, அதை அன்னைக்கு காட்டாமல் துடைத்துக் கொண்டாள்.

தான் வீட்டில் இல்லை என்றாலும் சங்கமித்ரா எப்போதும் வீட்டில் தான் இருப்பாள். பெரிதாய் அன்னை தந்தைக்கு இதுவரை தனிமை இருந்ததில்லை. விடுமுறை நாட்களில் திக்ஷிதா வரும் பொழுது வீடு அத்தனை கலகலப்பாய் இருக்கும்.

இப்பொழுது ஒரே நேரத்தில் இருவரும் இல்லாமல் வீடு அமைதியாய் தாய் தந்தை மட்டும் என அவர்களுக்கு எப்படி இருக்கும்? தங்களை நினைத்து எவ்வளவு கலங்குவார்கள் என தோன்றவே மனதில் கலக்கம் உண்டானது.

"உன்னால தான் இன்னைக்கு நாங்க கொஞ்சமாவது மரியாதையோட இருக்கோம் திக்ஷிம்மா.. அந்த சந்தோசம் போதும் எங்களுக்கு.. நான் உன் அம்மாவை பார்த்துக்குறேன்.. நீ கவலைப்படாம போய்ட்டு வா டா" என கதிர் கூற,

"உன் அத்தை ரொம்ப நல்ல மாதிரி தான்.. நீ குடுத்து வச்சவ டா.. உனக்கு நாங்க சொல்ல வேண்டியது இல்லை.. நாங்க பார்த்துப்போம்..ம்ம்ம்" என்று அன்னை அவள் முகம் தாங்கி கூற, சரி என்று தலையசைத்துக் கொண்டாள் திக்ஷிதா.

"என்ன அண்ணி! செண்டிமெண்ட்டா?" என விஷ்வா வர, கண்களை துடைத்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

"நாங்க அண்ணியை நல்லா பார்த்துப்போம் அத்தை.. நீங்க கவலைப்படாதீங்க" விஷ்வா கூற, திக்ஷிதா திரும்பிப் பார்த்த போது இன்னும் அருகில் தான் நின்றிருந்தான் வாசு.

"சரி நேரமாகிடுச்சு.. போலாம்!" என்று உமா கூறவும், கடவுளின் முன் நின்று வாசுவுடன் திக்ஷிதாவும் கைகூப்பி நின்று வணங்கிவிட்டு காரில் ஏறினர்.

**************

"வா வா அம்மு! வா வாசு! சரியான நேரத்துல தான் வந்திருக்கிங்க" என்ற சிவகாமி,

"சாமி கும்பிட்டு வீட்டுக்கு போனா நல்லதுன்னு பெரிய தாத்தா சொன்னாரு.. அதான் சரினு இங்க வர வச்சுட்டோம்" என்று உமாவிடம் கூற,

"எதுவா இருந்தாலும் முதல்லயே பிளான் பண்ணுங்க ம்மா.. அந்தந்த நேரத்துக்கு சொல்றிங்க.. அவங்க வேற பிளான் வச்சிருந்தா என்ன பண்ணுவீங்க?" என தாயிடம் தனியாய் வாசு கடிய,

"சரி டா! திடிர்னு தெரியவும் சொல்லியாச்சு.. அதுவும் கல்யாணம் இப்படின்னதும் இன்னும் மனசுக்கு கஷ்டமா போச்சு.." என்றார் சிவகாமி.

"இப்ப என்ன? எல்லாம் நல்லபடியா தானே நடந்துச்சு.. அதான் நடத்திட்டீங்க இல்ல? பின்ன ஏன் முடிஞ்சதை பேசணும்.. இனி யாரும் அதை பத்தி வாயே திறக்க கூடாது" என்று கூறி செல்ல,

"என்ன சொல்லிட்டு போறான் இவன்?" என்றார் ரத்தினம்.

"அவன் நல்லதை சொன்னா கூட சிரிச்ச மாதிரி சொல்லுவானா? இந்த பொண்ணு என்னனு இவனை புரிஞ்சிக்க போராளோ!" என்று அவர் வருத்தம் கொண்டார்.

"மாமி! இங்க வாங்க!" என தூரமாய் நின்று திக்ஷி அழைக்க,

"இவ ஒருத்தி! மாமி சாமின்னு" என்று அருகே செல்ல, இன்று காலையில் இருந்து மாலைக்குள் ஏன அங்கே அவர் மகன் படுத்தியதை எல்லாம் பேப்பரில் எழுதாத குறையாய் அவரிடம் குற்றபத்திரிக்கை வாசித்தாள் திக்ஷிதா.

"நான் வாயை திறந்து பேசி ரெண்டு மணி நேரம் ஆச்சு மாமியார்.. உங்க மகன் நான் பேசினாலே முறைக்கிறார்.. நான் பாவம் தானே?" என்று திக்ஷி முடிக்க,

"அதான் ரெண்டு மணி நேரத்துக்கும் சேர்த்து இப்ப பேசிட்டியே டி ம்மா! நீ பாவம்னு இப்ப தான் உன் மாமாகிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. இப்ப யார் பாவம்னு எனக்கே சந்தேகம் வருது.. தலையே சுத்த வச்சுட்டியே டி" என்று சிவகாமி புலம்ப,

"இன்னும் இருக்கு கேளுங்க மாமி!" என்று ஓட வைத்தாள் அத்தையை.

தொடரும்..