அத்தியாயம் 5
"கைய விடுங்க! என்ன பண்றிங்க?" என திக்ஷிதா கேட்க கேட்க அவள் கைகளைப் பிடித்து கீழே இழுத்து வந்திருந்தான் வாசு.
அன்னையின் அறை கதவை தட்ட, "என்ன பண்றீங்க நீங்க?" என்றவளுக்கு ஏன் இவ்வளவு கோபம் அவனுக்கு என்று தான் புரியவில்லை.
"என்ன வாசு என்னாச்சு? எதாவது ப்ரோப்லேமா?" யார் கதவை தட்டுவது என்ற கேள்வியோடு எழுந்து வந்த அன்னை மகனைப் பார்த்ததும் பதறி கேட்க,
"என்ன வேலை மா பார்த்து வச்சிருக்கீங்க?" என்று அடிக்குரலில் சீறினான்.
"என்ன டா சொல்ற? திக்ஷி! என்ன ஆச்சு?" என மருமகளிடம் கேட்க,
"என்னை கேளுங்க!" என்று அவன் புறம் அன்னையை திருப்பியவன்,
"திக்ஷி என்ன பன்றானு உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்க, அன்னை மாட்டிக் கொண்டதாய் விழிக்க,
'என்ன கொலை குத்தமா பண்ணினேன்.. அர்த்த ராத்திரில அள்ளுவிட வைக்குறானே!' என அவளும் சிவகாமியைப் பார்த்தாள்.
உன்னை பத்தி சொல்லு என்று வாசு கூறியதும் பெயரை கூறியவள் அடுத்ததாய் அவள் படித்துக் கொண்டிருக்கும் படிப்பையும் கல்லூரி பெயரையும் கூற, அப்போது கோபமாய் எழுந்தவன் தான் இங்கே வந்து நிற்கிறான்.
"இல்ல வாசு! அவளும்... அதே ஊர்ல... உன் ஆபீஸ் பக்கத்துல இருக்குற காலேஜ்ல தான்..... படிக்குறா!" என்று கூறினார்.
"தெரிஞ்சும் என்ன ம்மா பண்ணி வச்சிருக்கீங்க? படிக்குற பொண்ணை போய்..." என்றவன் அவ்வளவு கோபமாய் இருக்க,
"ஷ்ஷ்! சத்தம் போடாத டா.. சொந்தக்காரங்க கொஞ்ச பேர் தங்கி இருக்காங்க.. எதுனாலும் அப்புறமா பேசிக்கலாம்" என்று சிவகாமி சமாதானம் செய்ய,
"ஹெலோ ஹெலோ மாமி! எனக்கு புரியல.. என்ன நடக்குது இங்கே? ஏன் நான் படிகுறது உங்களுக்கு தெரியாதா?" என்று திக்ஷிதா நேராய் கேட்க,
"அதான் சொல்லலன்னு சொல்றேன்ல!" என்றான் கடுப்பாய்.
அவனிடம் பேசவே பயம் கொள்ளும் அளவும் இருந்தாலும் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் திக்ஷி.
"ஏன் இப்ப நான் படிக்குறதுனால என்ன?" என்று கேட்க,
"ப்ச்! என்ன பேசுற நீ? படிக்குற பொண்ணை கல்யாணம் பண்ணினா ஊர்ல என்னை என்னனு பேசுவாங்க" என அவளுக்கு மேல் எகிறினான் வாசு.
"சத்தம் போடாத டா.. அப்பா வேற மாத்திரை போட்டுட்டு தூங்கி இருக்கார்.. அதான் கல்யாணம் முடிச்சிடுச்சு இல்ல.. இனி பேசி என்ன ஆக போகுது.. இல்ல எல்லாரும் கிளம்பின பின்னாடி நாளைக்கு பேசிக்கலாம்.. உள்ள போ டா!" என்று கெஞ்சவே செய்தார் சிவகாமி.
"உங்களை நம்பிக்கை வந்ததுக்கு..." என்றவன்,
"என்னை சொல்லணும்" என தன் அறை நோக்கி அவன் செல்ல,
"மாமி! உங்க மகன் ரொம்ப ஓவரா போறார்" என்றாள் திக்ஷி.
"உனக்கு வேற தனியா சொல்லனுமா? போ டி!" என்று அழாத குறையாய் சொல்ல,
"உங்களுக்கு இருக்கு காலையில!" என்று அவளும் சென்றாள்.
"சங்கு! நீ தப்பிச்சு நிம்மதியா போய்ட்ட.. மனுஷன் என்னை பாடா படுத்துறான்.. ஏன் படிக்குற பொண்ணுன்னா இளக்காரமா இவங்களுக்கு" சத்தமாய் முணுமுணுத்தபடி தான் படியேறி மேலே வந்திருந்தாள்.
வாசு அறைக்குள் வந்து குறுக்கும் நெடுக்குமாய் நடக்க, வாயை மூடிக் கொண்டவள் அவனை தாண்டி சென்று படுக்க போக,
"எந்த இயர் சொன்ன?" என்றான் நடையை நிறுத்தாமல்.
"பைனல் இயர்!" என மெதுவாய் கூறியவள் போர்வையை வைத்து கட்டிலில் இருந்த
பூக்களை உதறி தள்ள, பார்த்தாலும் வாசு கேட்டுக் கொள்ளவில்லை.
"எப்ப காலேஜ் முடியும்? இப்ப லீவ்ல இருக்கியா?" என அமைதியாய் தான் ஒவ்வொரு கேள்வியையும் கேட்டான்.
"ஏன் என்கிட்ட சொல்லல?" ஆற்றாமையாய் மீண்டும் கேட்க,
"என்ன சொல்லல? சங்கு...ப்ச் அக்காவை பார்க்க வந்தப்பவே சொல்லி இருப்பாங்க தானே ரெண்டாவது பொண்ணு படிச்சுட்டு இருக்குன்னு? நீங்க வரும்போது எல்லாம் நான் எக்ஸாம் அது இதுன்னு ஹாஸ்டல்ல மாட்டிக்கிட்டேன்" என்று கூற,
அன்னை கூறிய "உன் ஆபீஸ் அருகே உள்ள கல்லூரி" என்ற வார்த்தை நியாபகம் வந்தது.
"அப்ப நீயும் விருது நகர்ல தான் படிக்குறியா?" வாசு கேட்க,
"ஆமா! அக்கா கல்யாணம் ஆகி வந்துடுவா.. அப்புறம் நீ ஹாஸ்டல்ல தங்க வேண்டாம்.. அக்கா வீட்டுல தங்கியே காலேஜ் போகலாம்னு சொன்னாங்க.." என புலம்பியவள்,
"என் கிரகம்!" என்ற வார்த்தையை மெதுவாய் கூறினாலும் அவன் காதுகளை அடைய தவறவில்லை.
"ப்ச்!" என்று தலையை தாங்கியவன் கட்டிலில் அமர்ந்துவிட, பாவமாயும் கோபமாயும் இருந்தது ஒரே நேரத்தில் திக்ஷிதாவிற்கு.
"என்ன தான் பிரச்சனைனு கேட்கவும் பயமா இருக்கு.. சொல்லுவாங்களோ மாட்டாங்களோ.." என நினைத்தபடி அவள் நிற்க,
"இனி வேற யாரை பத்தின பேச்சும் இந்த ரூம்குள்ள வர கூடாது" வாசு கூற,
"புரியல!" என்றவளுக்கு அது சத்தமாய் புரிந்திருக்கவில்லை.
"இது நம்ம ரூம்.. நீ நான்.. தேவை இல்லாம பழசை பேச வேண்டாம்.. பேச கூடாதுன்னு சொல்றேன்" என்று கூற,
"ஓஹ்! இது சங்குக்கான குறிப்பு போல!" என தலையாட்டியவள்,
"இன்னும் படிப்பு பிரச்சனையே ஏன் என்னனு தெரியல.. இதுல அடுத்த பிரச்சனையை வேற தலைக்கு தூக்கி போட்டுக்குறார்!" என நினைத்தவள்,
"ஆத்தி! அப்ப அவ போனது எனக்கு தெரியும்னு தெரிஞ்சா இந்த சந்திரமூக்கன் என்ன பண்ணுமோ?" என யோசிக்க, தலை கழண்டிடும் போல இருந்தது.
"அக்கா.. அக்கா மேல உங்களுக்கு கோபமா?" என்று தெரிந்து கொள்ள தான் கேட்டாள். ஏனடா கேட்டோம் என்ற அளவிற்கு பேசிவிட்டான்.
"இப்ப தானே சொன்னேன்?" என்றவன்,
"கோபம் இல்ல கொலவெறில இருக்கேன்.. என் கண்ணுல படாத வரை நல்லது.. அவங்கவங்க பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுகுறது தப்பு இல்ல.. அதுக்காக என் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்குறது எப்படி நியாயம் சொல்ல முடியும்? என்ன ரைட்ஸ் இருக்கு?" என்று அவன் கேட்க,
"இப்ப என்ன கேள்விக்குறி ஆகி போச்சாம் சாருக்கு?" என வாய் வரை வந்துவிட்டது.
"மண்டபத்துல ஒவ்வொருத்தனும் என்னை பார்த்ததை இப்ப நினைச்சாலும்..." என்றவன் கை முஷ்டிகள் இறுக,
"இல்ல இல்ல நான் சும்மா தான் கேட்டேன்.. ப்ளீஸ்!" என்றாள் அவன் கோபத்தைக் கண்டு.
"பெத்தவங்களை கன்வின்ஸ் பண்ண முடியாதவங்க எதுக்கு காதலிக்கணும்? அதுவும் கல்யாணத்தன்னைக்கு ஓடி போறதுலாம் இவங்களுக்கு பஷன் ஆகிட்டு போல.. இதெல்லாம் ஒரு லவ்வு" என்று விடாமல் அவன் பேச,
"விட்டா லவ்வுக்கு புது டெஃபினிஷன் எழுதுவார் போலயே" என்றவளுக்கு அவன் கோபத்தில் பயம் வந்தது என்னவோ உண்மை தான்.
"நீ என்ன? வீட்டுல சொன்னதும் உடனே தலையாட்டிட்டியா? கொஞ்சமும் யோசிக்க வேணாம்.. படிக்குறேன்னு சொல்ல வேண்டியது தானே?" என்று அமைதியாய் ஆரம்பித்தவன் குரல் கரமாய் மாற,
"தோ டா!" என்ற வார்த்தை அவளையும் அறியாமல் வாய்விட்டு வந்திருந்தது அவன் குரலில் அதில் உதித்த தொணியில்.
"என்ன?" என்றவன் எழுந்து நின்றுவிட,
"ப்ச்! சாரி! நானே எக்ஸ்பெக்ட் பண்ணல.. நீங்க பேசினது அப்படி" என்றவள் அவன் முகம் பார்த்து கண்ணைப் பார்த்து கூற, அவனும் அவளைப் பார்த்து நின்றான்.
"யோசிச்சதனால தான் சரினு சொன்னேன்.. ரெண்டு பொண்ணுங்க.. ரெண்டு பேருமே வீட்டுல அவ்வளவு செல்லம்.. அக்கா அப்படி பண்ணினது தப்பு தான்.. உங்களுக்கு எவ்வளவு மரியாதை குறைச்சலோ அதைவிட பல மடங்கு என் அம்மா அப்பாக்கு.. உங்க அம்மா வந்து கேட்டதும் என் அம்மா முதல்ல என்னை பார்த்த பார்வை இருக்கே! ஜென்மத்துக்கும் மறக்காது" என்றவள் கண்மூடி அந்த நொடிக்கு செல்ல, வாசு அமைதியாகி விட்டான் அவள் குரலில் ஒலித்த கவலையில்.
"படிச்சு என்ன பண்ண போறேன்? என் அப்பா அம்மாக்கு பெருமை சேர்க்குற மாதிரி ஒரு லைஃப்.. அவ்வளவு தான் சிம்பிள் அம்பிஷன் என்னோடது.. அதை இப்பவே செய்னு கடவுள் சொல்ற மாதிரி சிடுவேஷன்.. இப்ப அவங்க நிம்மதியா இருப்பாங்க இல்ல? ஒரு பொண்ணு கைவிட்டாலும் இன்னொரு பொண்ணால அவங்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைச்சிருக்கும் இல்ல?" என்று கேட்க,
"நான் சாதாரணமா தான் கேட்டேன்.." என்றவன் அவள் குரலில் வேதனையை உணர்ந்திருந்தான்.
"நானும் சாதாரணமா தான் சொல்றேன்.. என்னால மனசுல ஒன்னு வெளில ஒன்னுன்னு எல்லாம் பேச முடியாது.." என்றவள் இவ்வளவு நேரமும் விளையாட்டுத் தனமாய் இருந்த அதே திக்ஷிதா தான்.
"உங்களால என்னை ஏத்துக்க முடியலைனா அது உங்க ப்ரோப்லேம்.. அதுக்கான சொல்யூஷன் என்னனு நீங்க தான் பார்க்கணும்.. நான் என் அம்மா அப்பா சொல்றதை செஞ்சேன்.. நான் பண்ணினதுல எந்த தப்பும் இல்ல.. ஆனா காலேஜ் பைனல் இயர்ல கல்யாணம் பண்ண கூடாதுன்னு நீங்க ஏன் நினைக்கிறீங்கன்னு எனக்கு இன்னும் புரியல" என்றவள் ஒரு வேகத்தில் அவன் பேசியதில் தோன்றியதை எல்லாம் பேசி இருந்தாள்.
"நான் அப்படி மீன் பண்ணல.. படிக்கும் போது டிஸ்டர்ப்பா இப்ப இது உனக்கு எதுக்குன்னு தான் நினச்சேன்.. கான்சென்ட்ரேஷன் மஸ்ட் இல்ல?" என்றவன்,
"இப்ப நீ ஸ்டடிஸ் கான்சென்ட்ரேட் பண்ணுவியா.. இல்ல.... என்கிட்ட கான்சென்ட்ரேட் பண்ணுவியா?" என்று கேட்க, திருதிருவென விழித்தாள் திக்ஷிதா.
"அது அதுக்குன்னு ஒரு நேரம் இருக்கு.. இப்ப யாரால யாருக்கு கஷ்டம்? உனக்காக நான் வெயிட் பண்ணனுமா?" என்றவன் முகம் சாதாரணமாய் இருக்க அந்த வார்த்தையில் கிண்டல் பரவி இருப்பதாய் தோன்றியது திக்ஷிதாவிற்கு.
"ரோபோ என்னவோ சொல்ல வருது.. நாம புரிஞ்சிக்குறது சரி தானா?" என அவள் சிந்திக்க,
"எனிவே நீ ஸ்டுடென்ட்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல.. அதனால கொஞ்சம் டெம்பர்.. அவ்வளவு தான்.." என்று வாசு கூற, அதற்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை அவளுக்கு.
"அப்போ சண்டே ஊருக்கு போய்டலாம்.. லீவ் முடிஞ்சிடும் தானே உனக்கு?" என்றவன் படுக்கைக்கு செல்ல,
"ம்ம்ம்!" என தலையாட்டியவள் அவன் பக்கமாய் யோசிக்க,
"ஓகே குட் நைட்!" என்று படுத்து உறங்கியும் விட,
"இவன் பேசினதுலாம் நார்மலா இருந்த மாதிரியும் இருக்கு.. இல்லாத மாதிரியும் இருக்கே!" என்று யோசித்து குழம்பி கண்ணசந்தாள் திக்ஷிதா.
தொடரும்..