அத்தியாயம் 6
பெட்டியும் கையுமாய் திக்ஷிதா படிகளில் இறங்கி வர,
"வந்த மூணாம் நாளே என்கிட்ட இருந்து என் பையனை கூட்டிட்டு போற இல்ல டி?" என்றார் சிவகாமி மருமகளிடம்.
"நீங்களும் வாங்க! உங்களையும் வேணா கூட்டிட்டு போறேன்!" அலட்டல் இல்லாமல் அவள் கூற,
"டேய்! உனக்கு வேலை இருந்தா நீ மட்டும் கிளம்பு! புதுசா கல்யாணம் ஆகி வந்த பொண்ணை பார்க்க அக்கம் பக்கத்துல இருந்தெல்லாம் வருவாங்க.. நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்ல?" என்று மகனிடம் கேட்டார்.
"காலேஜ் படிக்கறது நான் இல்ல.. உங்க மருமக.. அவளை விட்டுட்டு நான் போய்?" என்றவன் பெட்டியை இழுத்துக் கொண்டு காருக்கு சென்றான்.
"பேசாம நீ படிக்குறதை அப்படியே மண்ணை போட்டு மூடி மறைச்சுருக்கலாம் போல.. ஆனாவூன்னா படிப்புன்றான்" சிவகாமி பொறும,
"மாமி! எனக்கு புரியுது.. ஆனா என்ன பண்றதுன்னு தான் தெரியல.. லாஸ்ட் செமஸ்டர்.. ப்ராஜெக்ட் ஒர்க், லேப்னு நிறைய இருக்கு.. இதெல்லாம் சொல்லாமலே உங்க மகன் இப்படி பன்றார்.. சொல்லி இருந்தா கல்யாணம் முடியவும் ஹாஸ்டல்ல கொண்டு விட்ருப்பாரோ என்னவோ!" என்றவள் சோர்வாய் உணர்ந்தாள்.
"இன்னைக்கு மறுவீடு! உன் அம்மாகிட்ட அங்கே போனதும் ஊருக்கு போறதை பத்தி சொல்லாத.. கிளம்புற நேரம் சொல்லிக்கலாம்.. இல்லைனா வருத்தப்பட போறாங்க!" என்று திக்ஷிதாவின் வாடிய முகம் கண்டு இறங்கி வர வேண்டியதானது சிவகாமிக்கு.
"ஆமா மாமி! மூணு மணி வரை தான் அங்கே இருக்கணுமாம்.. ஷார்ப்ப்பா கிளம்பிடணுமாம் மூணு மணிக்கு.. டைம் சொல்லி இருக்கார் உங்க மகன்!" திக்ஷிதா கூற,
"வாய் மட்டும் தான் உங்க மகன்னு சொல்லுது.. அவன் பண்றது முழுக்க பொண்டாட்டிக்கு தான்" போலியாய் குறைபட,
"அவ்வளவு நல்லவரெல்லாம் இல்லை உங்க மகன்" என மீண்டும் அவள் கூறவும்,
"இவ்வளவு நாளும் இருந்தது வேற! இப்ப உன்கூட ஒரு பொண்ணு உன்னை நம்பி வர்றா.. நீ தான் பார்த்துக்கணும் டா!" என்று மகனுக்கு சொல்லியபடி வெளியில் இருந்து வந்தார் ரத்தினம்.
"நீங்களும் வந்து ஒரு வாரம் எங்களோட இருக்கலாமே மாமியாரே!" திக்ஷிதா அழைக்க,
"எதுக்கு? அவன் ஆபிஸே கதினு இருப்பான்.. நீ காலேஜ் போய்டுவ.. நாங்க வீட்டை காவல் காக்கணுமா? மரியாதையா லீவ் நேரத்துல எல்லாம் இங்க வந்துடனும் நீங்க! புரியுது தானே?" என்று கூறி அனுப்பி வைத்தார் சிவகாமி.
திருமணத்திற்கு பின் முதன்முதலாய் தனி ஒரு பயணம் இருவருக்கும்.
எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வாசு அமைதி தான் என்ற பெயரில் சென்றுவிடும். தான் பேச ஆரம்பித்தாள் எங்கே சென்று நிற்குமோ என நினைத்து அமைதியாய் வர, நினைவு முழுதும் தன் வீட்டை நோக்கி திரும்பி இருந்தது திக்ஷிதாவிற்கு.
ஏற்கனவே விடுதியில் தங்கி படித்ததால் அனுபவம் இருந்த போதும் இப்படி திருமணத்திற்கு பின் எனும் போது கொஞ்சம் கனமாய் இருந்தது அவளுக்கு.
"என்ன அமைதியா வர்ற?" வாசுவின் குரலில் சிந்தனை அறுபட, அவன் புறம் திரும்பினாள்.
'பேசினா மட்டும் நான் ஸ்டாப்பா பேசிட்டே வருவாரு...' என்று நினைத்தப்படியே அவனைப் பார்த்திருக்க, முறைத்தவன்,
"உன்னை என்ன பண்றது?" என்றான் முறைத்து.
"மைண்ட் வாய்ஸ் தானே! எப்படி இவனுக்கு கேட்டுச்சு.. சத்தமா பேசிட்டோமோ?" என அவள் பதறி பார்க்க,
"இப்ப என்னவோ நினச்ச தானே?" என்று அதே முறைப்புடன் கேட்க,
"என்ன நினைச்சேன்னு தெரியாமலே தான் இந்த லுக்கா?" என்றாள் விழித்து.
"அமைதியா இருக்கவே முடியாது இல்ல உன்னால?" வாசு.
"இப்ப அமைதியா வந்த என்னை நீங்க தான் வம்படியா இழுத்து விட்டிங்க!" என்றவள் அவன் பார்வையில் அமைதியாய் திரும்பிக் கொள்ள,
"எப்பவுமே இப்படி தானா நீ?" என்றான்.
"இப்படி தானான்னா? எப்படி?" என்றவள் சந்தேகமாய் பார்க்க,
"அதான்! பேசிட்டே.. வாயாடிட்டே.. வம்பு பண்ணிட்டே.." என்று கூறவும்,
"போதும்! எல்லாத்துக்கும் மீனிங் ஒன்னு தான்" என்றாள் முறைத்து. ஆனால் நிமிர்ந்து அவனைப் பார்த்து மட்டும் பேசிடவில்லை.
என்னவோ அவன் முகத்தில் இருக்கும் அழுத்தம் மட்டும் ஒரு வித பயத்தை அவளுக்கு கொடுத்திருக்க, வம்பாய் பேசி பேச வைக்கையில் மட்டும் தான் அவன் முகம் பார்த்து பேசுவது பதில் கூறுவது எல்லாம்.
'கொஞ்சம் இலகுவாய் இவன் இருந்தால் தான் என்ன' என்று மூன்று நாட்களில் பல முறை நினைத்து விட்டாள்.
அரைமணி நேர பயணத்தின் முடிவில் திக்ஷிதாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.
அன்னையை விட்டு அகலவே இல்லை பெண். அன்னையை வால் பிடித்து சுற்றும் மனைவியை வாசுவும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
"போய் அவர் பக்கத்துல கொஞ்ச நேரம் உட்காரு திக்ஷி! என்ன நினைப்பாங்க!" என்று அன்னை கடிய,
"பரவால்ல! ஒரு நாள் தானே நினைச்சா நினைச்சுட்டு போகட்டும்.." என்றவள்,
"ம்மா! இந்த வடகம் பார்சல் பண்ணுங்க ம்மா!" என்றாள் வாயில் கொஞ்சமாய் எடுத்து போட்டுவிட்டு.
"உனக்கு இல்லாததா? உன் அத்தை மாமாக்கும் சேர்த்து பெரிய டப்பாலயே போட்டு தர்றேன்!" என்று உமா கூற,
"நாங்க ஊருக்கு..." என்றவள் நியாபகம் வந்தவளாய் கப்சிப் என வாயை மூடிக் கொண்டு ஹாலுக்கு வந்துவிட்டாள் வாசு அருகே.
"சொல்ல வேண்டியது தானே? எப்படியும் சொல்லிட்டு தானே கிளம்பனும்?" அருகே வந்து அமர்ந்ததும் வாசு கூற,
"காதை அந்த பக்கமா கடன் குடுத்து வச்சிருந்திங்களா?" என்றவள் நாக்கைக் கடித்துக் கொள்ள,
"அதான் சொல்லிட்டியே!" என்றவன்,
"அமைதியா பேசனும்.. உன் வாய்ஸ்க்கு நான் ரோட்ல நின்னுருந்தாலும் கேட்ருக்கும்" என்று கூறிவிட்டு அவளிடம் கூறிக் கொள்ளாமலே அவளறைக்கு சென்றுவிட, விழித்தவள் எதை எதையெல்லாம் எப்போது கேட்டு வைத்தானோ என்று தான் நினைத்தாள்.
"திக்ஷி! தயவு செஞ்சு வாய்க்கு பூட்டை போட்டு சாவியை தூக்கி எரிஞ்சுடு இந்த மனுசனை வச்சுட்டு நினைக்கவும் முடியல.. பேசவும் முடியல.." என தனக்குள் புலம்பி தவிக்க,
"சாப்பாடு ரெடி திக்ஷி! சாப்பிட கூட்டிட்டு வா!" என்றார் அன்னை.
"அப்பா இலை வாங்க போனாங்க ம்மா!" திக்ஷிதா கூற,
"வந்துட்டேன் அம்மு!" என்று உள்ளே நுழைந்தார் கதிர்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே முழுதாய் அனைத்தையும் சொல்லி இருந்தான் வாசு.
"இன்னைக்கேவா?" என்ற உமா வேண்டாம் என மகளைப் பார்த்து தலையசைக்க,
"திக்ஷி எப்படினாலும் காலேஜ் போகணும் தானே? அதனால இன்னைக்கு கிளம்புறது தான் பெட்டர்" என்றவன் முகத்தை பார்த்து அதற்கு மேல் பேசிட முடியவில்லை மற்றவர்களுக்கு.
'கொஞ்சம் தன்மையா தான் சொன்னா என்னவாம்? நிம்மதியா இருந்திட கூடாது" என முணுமுணுத்தவள்,
"அங்கே போயும் நாள் பூரா இவரோட என்ன பண்ண போறியா திக்ஷி! இருந்து இருந்து உனக்கு போய் இப்படி ஒருத்தன்னா உன் தலையில எழுதணும்" என்று கூறிக் கொண்டு கைகழுவி வர,
"நீ தான் சொன்னியா லீவ் இல்ல போகணும்னு? உன் அத்தை என்ன நினைப்பாங்க? ஒரு வாரமாச்சும் இங்கே உன் அத்தை வீட்டுல இருக்க வேண்டாமா நீ?" என்று மகளிடம் தனியாய் கேட்க,
"அட நீ வேற ம்மா! அவங்க அம்மாவும் எவ்வளவோ சொன்னாங்க.. கேட்காம அவர் தான் குதிச்சிட்டு நிக்கிறாரு.. காலேஜ்லையும் எதுவும் லீவ் அப்ளை பண்ணல இல்ல.. அதனால தான் நானும் பேசாம இருக்கேன்" என்றாள் மகள்.
"அப்ப போய் தான் ஆகணுமா?" உமா கவலையாய் கேட்க,
"ம்மா! அழுது எதுவும் வச்சுடாத.. நிஜமா நான் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்.. என்னவோ அழுகை தான் வருது எனக்கும்.. ப்ளீஸ்!" என்றபடி அன்னை முதுகில் சாய்ந்து கொள்ள,
"உன் அக்கா கால் பண்ணினா டி!" என்று பேச்சை மாற்றினார் உமா.
"என்ன சொன்னா ம்மா? எங்க இருக்காங்களாம்? நல்லா இருக்கா தானே?" என்று தொடர்ந்து கேட்க,
"ம்ம்ஹும்ம் நான் பேசலை டி.. உன் அப்பா வேற இருந்தார்.. பேசணும்னு தோணினாலும் அப்பா இருக்கவும் பயமா இருந்துச்சு.. அதான் வச்சுட்டேன்.." என்றார்.
"எனக்கு ஏன் பண்ணல அவ?" என்று கேட்க,
"நல்லதுன்னு நினைச்சுக்கோ! உன் வீட்டுக்காரர் எப்படியும் கோபமா தான் இருப்பார் அவ மேல.. கொஞ்ச நாள் போகட்டும் பார்த்துக்கலாம்.. இப்ப எதுவும் பேசி அவர் கோபத்தை வாங்கிக்காத! ஆமா உன்கிட்ட நல்லா இருக்காங்க தானே?" என்று கேட்க,
"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை ம்மா.. செலக்ட் பண்ணினது யாரு என் அப்பால்ல!" என்றவள் பேச்சைக் கேட்டு சிரித்தவர்,
"பார்த்துக்கோ அம்மு! நல்லா படி.. அதை விட இங்கேயும் நல்லா கவனமா இரு.." என்று பேசிவிட்டு வர, கதிர் வாசுவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
"போகலாமா திக்ஷி?" வாசு கேட்க, மணியைப் பார்த்தாள்,
"மூணாக இன்னும் பத்து நிமிஷம் இருக்கே!" என நினைத்து அவனைப் பார்க்க, அது அவனுக்கும் புரிந்தது.
"இப்பவே கிளம்பிடுங்க அம்மு! முதல் முதலா போகும் போதும் இருட்டிட வேண்டாம்" என்று தந்தை வேறு எடுத்து கொடுத்தார்.
உமா மகள் கேட்டபடி வடகத்துடன் அவளுக்கு தேவை என சிலவற்றையும் எடுத்து வைத்திருக்க,
"ஏன் நீங்க யாரையும் கூப்பிட மாட்றிங்க வீட்டுக்கு?" என்றாள் வாசுவிடம் திக்ஷிதா.
"ஏன் நான் கூப்பிட்டா தானா? உனக்கும் இனி அது தானே வீடு? நீ கூப்பிட வேண்டியது தானே?" என்றுவிட,
"இவன்கிட்ட வாய குடுத்து வாங்கி கட்டுறதே உனக்கு வேலையா போச்சு திக்ஷி!" என்ற நினைப்புடன்,
"நீங்களும் என்னோட வரலாம்ல ம்மா!" என்று கேட்க,
"வர்றோம் டா.. முதல்ல நீ போய் எல்லாம் சரி ஆகட்டும்.. பின்னாடி நாங்க வர்றோம்.. நீ எங்களை நினச்சு எல்லாம் கவலைப்படக் கூடாது.. சந்தோசமா இருக்கனும்" என்றுவிட்டார்.
மீண்டும் மூன்றரை மணி நேரப் பயணம் வாசுவும் திக்ஷியும் மட்டுமாய்.
வாசு முகத்தினில் எதுவும் திக்ஷியால் கண்டு கொள்ள முடியவில்லை என்றாலும் திக்ஷிதா முகம் வைத்து ஓரளவில் அவள் மனதை கண்டு கொள்ள படித்திருந்தான் வாசு.
அந்த அளவுக்கு தன்னை அவன் கவனிக்கின்றான் என கவனிக்க மறந்திருந்த திக்ஷிதா தானுண்டு தன் நினைவில் நிறைந்தவை உண்டு என்று இருக்க,
ஊருக்கு வந்து சேர்ந்த அடுத்த நாளில் அவள் கல்லூரிக்கு கிளம்பவும் வாசுவும் அலுவலகத்திற்கு கிளம்பி இருந்தான்.
தொடரும்..