அத்தியாயம் 7
வாசு திக்ஷிதாவுடன் வந்து இறங்கும் முன் அங்கே "வெல்கம் பாஸ்!" என வந்து நின்றிருந்தான் ஒருவன்.
யார் அது என்று கேள்வியுடன் திக்ஷிதா கணவனைப் பார்க்க,
"நம்ம ஆபீஸ்ல தான் ஒர்க் பன்றான்.. விஷ்வா!" என்று கூறினான்.
"நீ என்ன டா பண்ற இங்க?" வாசு கேட்க,
"சும்மா தான்.. நீங்க வர்றேன்னு சொன்னிங்களே! அதான்.." என்று விஷ்வா நெளிந்தான்.
"இவனை மாதிரியே நெடு நெடுன்னு வளந்து வச்சிருக்கான்.. சேர்க்கை எல்லாம் இப்படி தான் போல!" என நினைத்தபடி திக்ஷிதா முன்னே வர,
"இது தான் நம்ம வீடு!" என காட்டி, உள்ளே வா என்பதாய் வாசு கை நீட்ட,
"ஒரு நிமிஷம் பாஸ்!" என தடுத்தான் அந்த விஷ்வா.
"ஒரே நிமிஷம் சிஸ்டர்!" என்று திக்ஷிதாவிடமும் கூற, சுவற்றிற்கு அந்த பக்கம் இருந்து ஆரத்தியுடன் வந்தாள் ஒரு பெண்.
"சீக்கிரம் வா!" என்று விஷ்வா கூற, வேகமாய் வந்து அவர்கள் முன் நின்றாள் அந்த பெண்.
வாசு விஷ்வாவை முறைத்துக் கொண்டிருக்க, ஏன் என புரிந்தவன்,
"கல்யாணம் பண்ணி சிஸ்டரோட முதல்ல வர்றிங்க.. அதான்.. ப்ளீஸ் பாஸ்!" என்று கூறவும் எதுவும் பேசாமல் அமைதியாய் வாசு நிற்க,
"தமிழ் தான் பேசுறீங்க! ஒரு மண்ணும் புரியல!" என்று திக்ஷிதா முணுமுணுத்தாள்.
"கேட்டுச்சு! உள்ள வா பதில் சொல்றேன்!" என்ற வாசு குரலில் வெளிப்படையாய் தலையில் அடித்துக் கொண்டாள் தன்னை நினைத்தே திக்ஷிதா.
"அதை கொட்டிட்டு உள்ள வா ஐஷு!" என்று விஷ்வா உள்ளே செல்ல போக,
"நோ! நோ! நான் வர்ல.. எனக்கு பயமா இருக்கு" என்றாள் ஐஸ்வர்யா.
"ப்ச்! உள்ள வான்னு சொல்லுறேன்ல!" என்றவன் பின்னே அவளும் சென்றாள்.
"அம்மா எப்பவாச்சும் வருவாங்க.. தங்குறதும் ரேர் தான்.. மத்தபடி இவ்வளவு நாளும் நான் மட்டும் தான் இருந்தேன்.." என்று திக்ஷிதாவிடம் கூறிக் கொண்டிருந்தான் வாசு.
"ஒருத்தருக்கு இவ்வளவு பெரிய வீடு.. ரொம்ப தேவை தான்!" என திக்ஷி நினைத்துக் கொள்ள,
"பாஸ்! டின்னர் அம்மா செஞ்சுட்டு இருக்காங்க.. நான் எடுத்துட்டு வந்து தர்றேன்.. பால் வாங்கி வச்சுட்டேன்" என்று விஷ்வா கூற,
"நான் கேட்டேனா டா உன்கிட்ட?" என்றான் வாசு சட்டென கோபமாய்.
அதில் விஷ்வா கவலை கொள்வானே என திக்ஷி கவலையாய் திரும்ப,
"எட்டு மணிக்கு வந்திடும்.. நான் போய் இவளை ட்ரோப் பண்ணிட்டு வர்றேன்!" என்றான் ஐஸ்வர்யாவைக் காட்டி.
"வராத! அப்படியே போய்டு!" வாசு கூறிவிட்டு அறைக்குள் செல்ல,
"சிஸ்டர்! இது ஐஸ்வர்யா!" என ஹஸ்கி வாய்ஸ்ஸில் அவளை அறிமுகம் செய்துவிட்டு விஷ்வா செல்ல,
"பை அண்ணி!" என்று கூறிவிட்டு ஓடி விட்டாள் ஐஸ்வர்யா.
"ஏது அண்ணியா?" என திக்ஷி அதிர்ந்தவள் திரும்பிப் பார்க்க, வாசு அங்கே இல்லை.
"அச்சோ பாவம்.. இப்படியா பேசுவீங்க?" வாசு சென்ற அறைக்குள் சென்று சுற்றிப் பார்த்தபடி திக்ஷிதா கூற,
"அவனை இதோட விட்டதே தப்பு.. எல்லாம் உன் அத்தை குடுக்குற தைரியம்!" என்றவன் குளியலறை புகுந்து கொண்டான்.
"அத்தையா?" என ஒரு நொடி புரியாமல் நின்றவள்,
"ஓஹ்! மாமியாரா?" என்று தனக்குள் கேட்டுக் கொண்டு சிவகாமிக்கு அழைத்தாள்.
"சொல்லு அம்மு! விச்சு வந்தானா? நல்ல நேரத்துல போயாச்சு தானே?" என்று சிவகாமி கேட்க,
"மாமி! விச்சுனா விஷ்வாவா? விஷ்வா அவங்க வந்தது உங்களுக்கு தெரியுமா?" என்றாள் திக்ஷிதா.
"நான் தான் அவனை வர சொன்னதே! ஆரத்தி எடுக்காம வீட்டுக்குள்ள எப்படி போவீங்க.. பக்கத்துல யாரும் அவ்வளவு பேச்சு இல்ல.. அதான் அவனை வர சொன்னேன்.. விஷ்வா அம்மா வந்தாங்க தானே?" என்று கேட்க,
"இல்ல மாமி! கூட ஒரு பொண்ணு வந்துச்சு.. அந்த பொண்ணை பார்த்து உங்க மகன் மூஞ்சி ஒரு முழத்துக்கு போச்சு.." என்றவள் அந்த பெண் பெயரையும் கூற,
"அவளை கூட்டிட்டு வந்தானா?" என திக்ஷிதாவிற்கு மேல் வாய் பிளந்தார் சிவகாமி.
"விஷ்வா உசுரோட தான் இருக்கானா?" என்று வேறு கேட்கவும்,
"உங்க மகன் இருக்குற இடத்துல உசுர கையில புடுச்சுட்டு தான் வாழணும்னுறிங்க இல்ல?" என்று கிண்டல் செய்தாள்
திக்ஷிதா.
"சத்தமா பேசாத டி.. விஷ்வா வாசு ஆபீஸ்ல தான் வேலை பாக்குறான்.. ஆனா வாசுக்கு தம்பி மாதிரி.. சொல்லிக்க மாட்டான்.. ஆனா அவன் மேல பாசம் தான்.. அப்பா இல்லாத பையன்.. அம்மாக்கும் பேச்சு வராது" என்று கூற,
"ஓஹ்!" என கேட்டுக் கொண்டவள்,
"அந்த பொண்ணு விஷ்வாக்கு புடிச்ச பொண்ணு.. விரும்புறான்.. அந்த பொண்ணும் தான்.. ஆனா பொண்ணு வீடு விஷ்வாவை விட கொஞ்சம் பெரிய இடம்.. ஏற்கனவே ஒரு முறை அவங்க வீட்டுக்கு தெரிஞ்சி விஷ்வா அம்மாவை வந்து மிரட்டிட்டு போயிருக்காங்க.. அப்ப இருந்து விஷ்வாகிட்டு கோபமா மட்டும் தான் பேசுவான் இவன்.. அந்த பொண்ணு வாசு கண்ணு முன்னாடி வரவே செய்யாது.. அவ்வளவு பயம்.. என்கிட்ட எல்லாம் நல்லா தான் பேசும்" என்று கூறி முடிக்க,
"குட்டி பகை தாய் உறவா?" என மீண்டும் கிண்டல் மட்டுமே திக்ஷிதாவிடம்.
"எம்புட்டு நீளமா பேசி முடிச்சிருக்கேன்.. உனக்கு நக்கலா போச்சுன.. இந்த வாய் அங்கே தனியா என்ன பண்ண போகுதோ! சுவத்துகிட்ட பேசினா கூட பதில் சொல்லிடும்.. ஆனா உன் புருஷன்கிட்ட வேலைக்கு ஆகாது" என்று மருமகளை கிண்டல் செய்து சிவகாமி சிரிக்க,
"மூணு நாள் முன்னாடி இதை சொல்லி இருந்தா பிச்சுக்கோ டி திக்ஷினு ஓடி இருப்பேன்.. இப்படி ஓடவும் முடியாம ஒழியவும் முடியாம கோர்த்து விட்டுட்டு நக்கல் வேற மாமி உங்களுக்கு.. ஆனாலும் கைவசம் ஒரு ஐடியா வச்சிருக்கேன்" என்று திக்ஷிதா சிரிக்க,
"என்ன டி அது?" என்றார் சிவகாமி.
"நாலு நாள்.. நாளே நாள் தான் பார்ப்பேன்.. உங்க மகன் மட்டும் சரி இல்லைனு வச்சுக்கோங்களேன்... ஹாஸ்டல்க்கு பெட்டியை பேக் பண்ணிடுவேன்" தோள் குலுக்கி திக்ஷிதா கூற,
"ம்ம்க்கும்ம்! உன்னைய போக விட்டு பொர மண்டையில அடிக்க போறான்" என்றார் மகனை அறிந்த தாயாய்.
"அதெல்லாம் நிறைய டெக்னிக் இருக்கு மாமியாரே! காலேஜ் முடிக்க ஆறு மாசம் இருக்கு.. இந்த ஆறு மாசமும் திக்ஷியை யாரும் அசைக்க முடியாது.." என்று கூற,
"இப்படியே இரு டி ராஜாத்தி! ரொம்ப மிரட்டினா அவனை நீயே நாலு தட்டு தட்டி சரி பண்ணு.. அதை விட்டுட்டு ஹாஸ்டல்னு எல்லாம் ஓடாத!" மருமகளுடன் மல்லுக்கு நின்றது போதும் என்று மனதிலிருந்து அவர் கூற,
"ரோபோ கூட இப்பல்லாம் சிரிக்குதாம்.. எங்க இருந்து இப்படி ஒரு பத்தேட்டிக் ரோபோவை பெத்திங்களோ போங்க!" என்று அலுத்துக் கொண்டாள் திக்ஷிதா.
"போதும் டி.. போய் அவனை கவனி.. போனா உடனே காலேஜ்க்கு போனும்னு அவசியம் இல்ல.. முடிஞ்சா கூட ரெண்டு நாள் லீவ் போடுங்க" என்றும் சிவகாமி கூற,
"ஆத்தாடி ஆத்தா! இது வரை நான் வாங்கினது பத்ததா! ரெண்டு நாள் லீவ் போட்டு வேற இந்த பேசாத பொம்மையை பாக்கணுமா?" என்று கேட்க, அவள் கேட்ட விதத்தில் அப்படி ஒரு புன்னகை சிவகாமிக்கு.
"ரொம்ப சிரிக்காதிங்க! உங்க மகனை தான் டேமேஜ் பண்றேன்.. அவங்க நல்லா பேசி சிரிக்க பழகுற வரைக்கும் நான் எக்ஸ்ட்ரா கிளாஸ் எல்லாம் போய்ட்டு நைட்டு பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன்.." என்றாள்.
"என்ன வேணா பண்ணிக்கோ! வீட்டுக்கு வந்துட்டா போதும் எனக்கு.. போ! போ! போய் அவனை கவனி!" என்று கூறி வைத்துவிட,
"நான் போய் கவனிக்கலைனு தான் சார் கவலைல இருக்காரு!" அத்தையிடம் பேசிய குஷியில் கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டு திக்ஷிதா எழுந்து கொள்ள, பாத்ரூம் வாசலை விட்டு இறங்கி கைகட்டி நின்றிருந்தான் வாசு தேவன்.
"திக்ஷி! எப்போ இருந்து டி இவ்வளவு கூமுட்டை ஆன? ரூம்க்கு வெளில போய் பேசி இருக்கலாம் இல்ல.. கேட்டுட்டான்! கேட்டுட்டான்! எல்லாத்தையும் கேட்டுட்டான்!" அவன் நின்ற விதத்தில் மீண்டும் மனதுக்குள் இப்படி தோன்ற,
"ஆமா! இப்ப நீ என்ன தப்பா பேசிட்ட? அவனை பத்தி எதாவது பேசினியா?" என்று யோசித்தவளுக்கு முழுதும் அவனைப் பற்றி மட்டுமே பேசியது நியாபகம் வர,
"போச்சு! சிரிக்க தெரியாதவனை சிரிக்க வைக்க ட்ரை பண்ணலாம்னு நினச்சா முறைக்கிரவனை இன்னும்ல முறைக்க வைக்குற?" என்று முழுதும் முழுதுமாய் மனதுக்குள் தான் பேசிக் கொண்டிருந்தாள்.
பயம் அவனிடம் இல்லாமல் இல்லை.. ஆனாலும் மனதுக்குள் தோன்றுவதை தடுக்கவும் முடியவில்லை.
'கொஞ்ச நேரம் பேசாதயேன்' என தனக்குள் கூறிக் கொண்டாலும் மாற்றிக் கொள்ள மட்டும் அவளுக்கு வரவே இல்லை.
"நீ பேசினதை கூட மன்னிச்சுடலாம்.. என்னை பார்த்த அப்புறமும் மைண்ட்ல என்னை திட்டி வாய்ஸ் குடுத்துட்டு இருக்குற பார்த்தியா... அதை எப்ப தான் நிறுத்த போற?" வேகமாய் அருகில் வந்து வாசு கேட்க,
அவன் வந்த வேகத்தில் இவள் பின்னே சென்றாலும் மனதில் "நீ நிறுத்துற வரைக்கும்!" என்று தோன்றாமல் இல்லை.
"இப்ப கூட இங்க வேற என்னவோ தான் ஓடுது.. முதல்ல பக்கத்துல இருக்குறவங்களை கவனிக்க பழகு.. மைண்ட்டை அதுக்கு ட்ரெயின் பண்ணு!" என்று அவன் பேச,
"திட்டுறானா கிளாஸ் எடுக்குறானா" என்று அவள் புரியாமல் பார்த்தாள்.
"எவ்ளோ பேசுற நீ? கேட்குறவங்களுக்கு தான் மூச்சு வாங்கும் போல! அரை மணி நேரமா கேட்டுட்டு இருக்கேன்" என்று கூற,
"ஆத்தி!" என்று நினைத்தவள் அமைதியாய் நிற்க,
அவள் பார்த்த விதத்தில் சில நொடிகள் அமைதியாய் நின்றவன், "யூஃப்!" என காற்றை ஊதித் தள்ளி,
"ரொம்ப இரிடேட் பன்றேனா நான் உன்னை?" என்று கேட்க, வேகமாய் இல்லை என தலையாட்டியவள், அவன் சிந்தித்தபடி திரும்பிக் கொள்ளவும் ஆமாம் என தலையசைத்தாள்.
மீண்டும் அவள் புறம் திரும்பியவன் அதையும் பார்த்துவிட, விரித்த விழிகளோடு திக்ஷிதா நிற்க, முறைக்க ஆரம்பித்தவன் இதழ்களில் கீற்றாய் சிறு புன்னகை.
இதுவரை அவள் காணாத அவன் காட்டிடாத புன்னகை.
தொடரும்..