• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 8

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 8

"வாவ்! விச்சு! அம்மா சமையல் ஃபர்ஸ்ட் கிளாஸ்! யம்மி!" என்று விஷ்வாவுடன் பேசியபடி திக்ஷிதா உணவு உண்ண,

"உனக்கு தனியா சொல்லனுமா? போட்டு சாப்பிடு டா" என்றான் வாசு விஷ்வாவிடம்.

"ஆமா! ஆமா! அப்புறம் நானே காலி பண்ணிட்டேன்னு சொல்ல கூடாது" திக்ஷிதா.

"அதெல்லாம் இல்ல! அம்மா நான் போனா தான் சாப்பிடுவாங்க.. அவங்களோடவே நானும் சாப்பிடுறேன்" என்று அவன் மறுக்க,

"ஆண்ட்டி ஏன் வர்ல?" என்றான் சட்னியை ஊற்றியபடி வாசு.

"மார்னிங் வருவாங்க பாஸ்!" என்ற விஷ்வா,

"இதை சாப்பிட்டுப் பாருங்க.." என்று ஒன்றை திக்ஷிதா புறம் நகர்த்தி வைக்க, வாயில் இருந்த உணவை மென்றுக் கொண்டே திரும்பி விஸ்வாவைப் பார்த்த வாசு, மீண்டும் சாப்பிட,

"என்னவாம்?" என்றாள் திக்ஷிதா சைகையில் விஷ்வாவிடம். விஷ்வா தோள்களை குலுக்கிக் கொள்ள,

"உங்க அம்மா சமையலுக்கு நான் அடிக்ட் ஆகிட்டேன்" என்றாள் சுவைத்தபடி.

"டெய்லி கொண்டு வந்துட்டா போச்சு!" விஷ்வா கூற,

"ஏன் அம்மா வர மாட்டாங்களா? இல்ல நான் தான் உங்க வீட்டுக்கு வர மாட்டேனா?" என்று கேட்க,

"வரலாம் தெய்வமே! முதல்ல சாப்பிட்டு முடிங்க!" என்றான் வாசுவின் முறைப்பில் விஷ்வா.

"சாப்பிடும் போது என்ன பேச்சு? முடிச்சுட்டு பேச வேண்டியது தானே?" என்று வாசு கேட்க,

"ஆமா அப்ப மட்டும் நீ பேசு நானும் பேசுறேன்னு பக்கத்துல உட்கார்ந்துடுவாரு!" என்று நினைத்து திக்ஷிதா அவனைப் பார்க்க,

மனக் குரல் அறிந்ததைப் போல, உதட்டருகே சென்ற உணவுடன் திரும்பி அவளைப் பார்த்தான் வாசு.

"மம்மி!" என்றவள் அடுத்து நிமிரவே இல்லை சாப்பிட்டு முடிக்கும் வரை.

"ம்மா!" என்று விஷ்வா எழுந்து செல்ல, திக்ஷிதாவுடன் வாசுவும் திரும்ப, உள்ளே வந்து கொண்டிருந்தார் விஷ்வாவின் அன்னை.

"உங்களை மார்னிங் கூட்டிட்டு வர்றேன் சொன்னேன் இல்ல? எப்படி வந்திங்க?" என்று முறைப்புடன் விஷ்வா கேட்க, அதற்கு அவன் அன்னையும் சைகையாய் பதில் கூறிக் கொண்டிருந்தார்.

"நீ என்னவோ திருட்டு தனம் பண்ணி இருக்க.. அதை மறைக்க தானே அம்மாவை வர விடல?" என்று வாசு கேட்க,

"அதே தான்!" என்பதை போல சைகை செய்தார் விஷ்வா அன்னை துளசி.

"என்ன டா பண்ணின?" என்று வாசு கேட்க,

"ஷ்ஷ்! வந்தவங்களை வாங்கனு சொல்லாம என்ன இது மிரட்டல்?" என்ற திக்ஷிதா துளசி அருகே செல்ல,

"இது அவங்க வீடுனு நான் நினைக்குறேன்.. நாம என்ன வரவேற்குறது?" என்றவனின் கேள்வியா பதிலா என்ற பாவனையில் திக்ஷிதா பேந்த பேந்த முழிக்க, துளசி என்னவோ கூறினார்.

அவள் புரியாமல் வாசுவைப் பார்க்க, இல்லை என அவருக்கு தலையசைத்தவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

"அம்மா என்ன கேட்டாங்க?" திக்ஷிதா கேட்க,

"கேட்கல! சொன்னாங்க.. நீங்க அழகா இருக்குறதா சொன்னாங்க.. அதுக்கு தான் பாஸ்..." என்று விஷ்வா இழுக்க,

"என்ன?" என்று வாசுவை முறைக்க போக, அவன் பார்த்த பார்வையில் இவள் தான் திரும்பிக் கொள்ள வேண்டி இருந்தது.

"அம்மா கூட பேச பேச உங்களுக்கே புரிஞ்சிடும்" என்ற விஷ்வா,

"ம்மா! கிளம்பலாம்.. மார்னிங் வரலாம்" என்று கூற,

"மார்னிங் நாங்க வர்றோம் துளசி ம்மா!" என்றுவிட்டான் வாசு.

துளசியும் தலையசைக்க, விடைபெற்று கிளம்பவும், தக்ஷிதா மொபைல் அழைக்க,

"அம்மாவா தான் இருக்கும்!" என்று கூறி அறைக்குள் ஓடினாள்.

சங்கமித்ராவின் எண் திரையில் வர ஒரு நொடி அதிர்ந்தவள் எட்டிப் பார்க்க, அவன் அறைக்கு வரவில்லை. ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தான்.

"சங்கு!" என்று மிக மிக மெதுவாய் அழைக்க,

"திக்ஷி! எப்படி இருக்க டி? இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லை.. என் பிரண்ட்டு தான் மண்டபத்துல நடந்ததை சொன்னா.. நீ எப்படி டி சம்மதிச்ச? எனக்கு கஷ்டமா இருக்கு.. சாரி டி திக்ஷி! நீ வேண்டாம்னு சொல்லி இருக்கலாம் இல்ல? எனக்கு கஷ்டமா இருக்கு.. என்னால தான உனக்கு இப்படி?" என்று கூறிக் கொண்டே போக, நிறுத்தாமல் பேசுபவளை நினைத்து தலையில் அடித்துக் கொண்டவள் நொடிக்கு ஒரு முறை வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திருமணம் முடிந்த உடன் திக்ஷிதா செய்த முதல் வேலையே சங்கமித்ரா எண்ணை மொபைலில் இருந்து அழித்தது தான். அதுவும் வாசுவின் கோபம் அறிந்து.

"சங்கு! எனக்கு சங்கு ஊதிடாத! நானே உனக்கு போன் பண்றேன்.. அதுவரை எனக்கு நீ கூப்பிடாத!" என்று திக்ஷிதா இன்னும் மெல்லிய குரலில் கூற,

"ஏன் டி! என்கிட்ட பேச கூடாதுன்னு அந்த ஆள் சொன்னாரா? நீ குடு நான் கேட்குறேன்!" என்றாள் அத்தனை கோபமாய் சங்கமித்ரா.

"அய்யோ! நான் நாளைக்கு காலேஜ் போய்ட்டு உனக்கு கூப்பிடுறேன்.. நீ வை!" என்றவள் கட் செய்து கீழே வைக்க சென்றவள்,

"ம்ம்ஹும்ம்! திரும்ப கூப்பிட்டா!" என நினைத்து சுவிட்ச் ஆப் செய்து கீழே வைத்துவிட்டாள்.

"ஆளாளுக்கு என் உசுரை பனையம் வச்சே விளையாடுறாங்க பா!" என நினைத்து மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தாள் வாசு எதையும் கேட்டிருக்க கூடாதே என்ற பயத்தில்.

இன்னும் அதே இடத்தில் தான் அமர்ந்து டிவியைப் பார்த்திருந்தான். கண்கள் டிவியில் இருக்க, மனம் அங்கு இல்லை என்பதை புரிந்து கொண்டவள் எதுவும் பேசாமல் சமையலறை சென்று பாலை எடுத்து காய்ச்ச ஆரம்பித்தாள்.

பாலை எடுத்து வந்து அவன் முன் நீட்டும் வரையிலுமே அவன் அதே நிலையில் இருக்க,

"பாஸ்!" என்று சத்தமாய் அழைக்க, அவளை திரும்பிப் பார்த்தவன் அவள் அழைத்த விதத்தில் முறைத்தான்.

"இல்ல.. பால்.. சூடா இருக்கு.. அதான்.." எதற்கு இந்த முறைப்பு என்று தடுமாறி அவள் கூற, வாங்கி கீழே வைத்துவிட்டு மீண்டும் டிவியில் கவனம் பதிக்க,

"மாமி! உங்க மகன் பாஷைக்கு தனி டிக்ஷனரி இருந்தா குடுங்களேன்!" என வேண்டி அவள் நிற்க,

"நீ பால் எடுத்துக்கலையா?" என்றான் அவளைப் பாராமலே.

"ம்ம்ஹும்ம்.. எனக்கு வேண்டாம்!" அவள் கூற,

"சரி போய் தூங்கு!" என்றதும், வேக வேகமாய் தலையாட்டி உள்ளே செல்ல போனவள்,

"நீங்க?" என்றாள் நேரமானதை உணர்ந்து.

"ம்ம்?" என்று நிமிர்ந்து அவளைப் பார்த்து கேட்க,

"ஹான்! அதான்.. நீங்க தூங்கலையா? நேரமாச்சே!" என்றாள்.

"தூங்கணும்..!" என்றவன் பேசாமல் இருக்க,

"தேவையா? அவன் தான் ஒத்த வார்த்தைக்கு மேல பேச மாட்டானே! அவன்கிட்ட உசுர குடுத்து பேசணுமா நீ?" என தனக்கு தானே கூறி அவள் திரும்ப,

"நாளைக்கு காலேஜ் தானே?" என்றான்.

"அதுக்கு தானே டா விரட்டி விரட்டி கூட்டிட்டு வந்த?" என்று நினைத்தபடி தலையை மட்டும் அவள் ஆட்ட,

"இன்னும் எவ்வளவு நாள்?" என்றான்.

"இதே கேள்விய தான் ரெண்டு நாள் முன்னாடி கேட்டிங்க!" சட்டென கூறிவிட்டு அய்யயோ என பதறி பார்க்க,

"ஏன் இப்ப மறுபடியும் கேட்டா என்ன?" என்றான் சாதாரணமாய்.

"எனக்கு போரடிக்குது டா!" நினைத்தவள்,

"கேட்கலாமே! இன்னும் ஆறு மாசம்.. ஆறே மாசம்!" என்றாள் சிரித்து.

"ஆறு மாசம்!" புருவம் தூக்கி இழுத்து அவன் கூற,

"என்ன இழுக்குறான்.. என்னவா இருக்கும்?" என நினைத்தவள்,

"ம்ம் சிக்ஸ் மந்த்ஸ் ஒன்லி!" என்று சேர்த்து கூற, அதில் மீண்டும் அவன் முறைக்க,

"இப்ப என்ன தப்பா சொல்லிட்டோம்!" என்று விழித்தாள் திக்ஷிதா.

"நெக்ஸ்ட் என்ன ப்ளன்?" என்று கேட்கவும்,

"பிஜி பண்றேன்னு சொல்லுவோமா? என்ன பண்றான்னு பார்க்கலாம்?" என நினைத்தவளுக்கு சிரிப்பு பொங்கி வர,

"கேட்கவே மாட்ட இல்ல!" என்றான் எழுந்து அருகில் வந்து.

"என்ன இது? இங்க நான் பேசும் போது.. நீ தனியா பேசிக்குறது? அப்புறம் எப்படி காலேஜ்ல கான்சென்ட்ரேட் வரும்?" என்று ஆரம்பித்து விட்டான் வாசு.

"இல்ல இல்ல! திடிர்னு ஒரு ஜோக் நியாபகம் வந்துச்சு.. அதான்!" என்றவள் இன்னும் தான் நினைத்ததில் இருந்து வெளிவராமல் சிறு புன்னகையோடு கூற,

"வரும் வரும்! கல்யாணத்துக்கு பின்னாடியும் சும்மா விட்டு வச்சா எல்லாம் நியாபகத்துக்கு வர தான் செய்யும்!" என்று முணுமுணுத்து அறைக்குள் செல்ல, அது புரியவே சில நொடிகள் எடுத்தது திக்ஷிதாவிற்கு.

"ஆத்தாடி! அடேய் இவ்வளவு நேரமும் நீ விட்டத்தைப் பார்த்து ஆயிஞ்சது இதை தானா?" என வாய் பிளந்து நின்றுவிட்டாள் திக்ஷிதா.

"வாய் மட்டும் தான் கம்மி! நினைப்பு எல்லாம் அதிகம் தான்!" நினைத்தவள் சத்தமே இல்லாமல் வந்து படுத்துவிட,

"நான் கேட்டதுக்கு பதில்?" என்றான் விடாமல்.

எதை கேட்டான் ஏன் மீண்டும் யோசிக்கும் நிலை வந்து விட்டது அவன் பேசி சென்ற வார்த்தைகளின் திணறலில்.

நியாபகத்திற்கு கொண்டு வந்தவள், "ஆறு மாசம் இருக்கே! முடியட்டும்.. இப்ப வேற எதுவும் பிளான் இல்லை" என்று விட்டாள்.

"ஓஹ்!" என்றவன் அறைக்குள் நடந்து கொண்டிருக்க, வெகு சில நொடிகளிலேயே உறங்கிப் போனாள் திக்ஷிதா.

வாசு உறங்கும் தன் மனைவியின் அருகே வந்து நீண்ட நேரமாய் பார்த்திருந்தவன், இந்த மூன்று நாட்களில் பல முறை தன்னிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் அவள் கண்களின் பாஷையை நினைத்து சிரித்துக் கொண்டான்.

மனைவியாய் மனம் அவளை நாடியது என்னவோ உண்மை தான். அதை காட்டிக் கொள்ளவும் தெரியவில்லை. காட்டாமல் இருக்கவும் முடியவில்லை.

இதனை நினைத்தபடி தான் அமர்ந்திருந்தவனை வெகுவாய் சீண்டவும் செய்திருந்தாள் திக்ஷிதா.

"எவ்வளவு பேசுற!" என்று அவளை நோக்கி நீண்டிருந்த கையை இழுத்துக் கொண்டான்.

சகோதரி சென்றதன் பெயரில் ஏற்படுத்திக் கொண்ட பந்தம் என்ற பெயர் அறவே இல்லை திக்ஷிதாவை பொறுத்தமட்டிலும்.

வெகு சதாரணமாய் அவள் இந்த திருமணத்தை ஏற்று அதில் விரும்பியே இணைந்திருக்க, அவளின் இந்த நேர்மறை குணம் கொஞ்சம் கொஞ்சமாய் வாசுவையும் அசைத்துப் பார்த்திருந்தது.

அடுத்த நாள் காலை விஷ்வா வீட்டிற்கு சென்று துளசியிடம் ஆசியும் வாங்கிக் கொண்டனர் இருவரும்.

முதல் நாள் தானே மனைவியை கல்லூரியில் அழைத்து சென்று விட்டவன் தன் அலுவலகம் நோக்கி சென்று விட, காலை பத்து மணிக்கெல்லாம் அழைத்துவிட்ட சங்கமித்ராவை தன் வாய் ஓயும் மட்டும் திட்டி தீர்த்துவிட்டாள் திக்ஷிதா.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
மைண்ட் வாய்ஸ்ல பேசி
மன்னாரு கிட்ட அடிக்கடி
மாட்டிக்கிட்டு முழிக்க
முடியல டா சாமி... 😂😂😂😂😂
 
  • Haha
Reactions: Rithi