• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி final 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 27 final 1

திக்ஷிதாவை நான் நடக்க வைக்கிறேன் என்ற வாசுவிற்கே நடை தள்ளாட, கட்டிலில் அமர்ந்துவிட்டான் மனைவி கூறிய செய்தி கேட்டு.

"எப்படி திக்ஷி?" என்றவனுக்கு தன் மகிழ்ச்சியை தான் காட்ட தெரியாமல் இருக்க, கண்கள் அழகாய் காட்டி கொடுத்தது மனையாளுக்கு.

"எப்படின்னா? உங்களுக்கா தெரியாது?" என்று கிண்டல் செய்தவளை உணரும் நிலையில் இல்லை வாசு.

"திக்ஷி! நான் ஏதோ விளையாட்டா தான் நீ காலேஜ் சீக்கிரம் முடிக்கனும்னு சொல்லிட்டு இருந்தேன்.. பட்.." என்றவனுக்கு புன்னகை அள்ளிக் கொண்டு தான் வந்தது.

"என்ன பட்'டு? வாசு ப்பா! நிஜமா நீங்க என்னை கலாய்க்கனும் கிண்டல் செய்யணும்.. நான் தான் இப்படி வெட்கப்பட்டு உட்கார்ந்து இருக்கனும்.. ஷாப்பா! உங்களோட.." என்று திக்ஷிதா ஒரு அடி நகர,

"ஸ்ஸ் ஆஹ்!" என்று விட்டாள் கால்களின் வலியில்.

"ஏய் ஏய்! பார்த்து திக்ஷி!" என பிடித்து அருகே அமர வைத்தவன்,

"தயவு செஞ்சு இனி இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்காத.. நம்ம பேபி வேற இருக்கு இல்ல" என்று அவள் வயிற்றைப் பார்க்க,

"என்ன லுக்கு? இப்பவே எல்லாம் தெரியாது" என்றாள்.

"ஆமா ஆமால்ல!" என்றவன் தான் அப்பாவா என்ற நினைவில் புன்னகை பூத்து அமர்ந்திருக்க, அதிலிருந்து வெளிவரவே விரும்பவில்லை அவன்.

"அப்ப நான் மட்டும் விழுந்து வாரி வச்சா உங்களுக்கு பிரச்சனை இல்ல? உங்க பேபிக்காக தான் நான் கேர்ஃபுல்லா இருக்கனும் இல்ல?" என்று கேட்க,

"ம்ம்ஹும்! அது அப்படி இல்ல.. இவ்வளவு நாளும் திக்ஷிக்கு மட்டும் இருந்த இடத்துல இப்ப திக்ஷியோட பேபியும் வந்துடுச்சி இல்ல.. அப்ப ரெண்டுமே வாசுக்கு முக்கியம் தானே?" என நெஞ்சை சுட்டிக் காட்டி சொல்ல,

"ச்சோ! இந்த வாசு தேவன் பேசுற பேச்செல்லாம் வெளில இருக்குற சிவகாமி மாமிக்கிட்ட சொன்னாலும் நம்ப மாட்டாங்களே!" என வம்பிழுத்தாள் திக்ஷி.

"அம்மாக்கு தெரியுமா திக்ஷி?" என்று கேட்கவும்,

"முதல்ல உங்ககிட்ட சொல்லனும்னு தான் வெயிட் பண்ணினேன்.. இனி தான் மாமிக்கு சொல்லனும்" திக்ஷிதா கூற,

"என்னனு?" என்றவனுக்கு புன்னகை நின்றபாடில்லை.

"ம்ம்! உங்க பையன் பண்ணின வேலையை பாருங்கன்னு தான்" என்றாள் அவள்.

"நீ ஒன்னும் சொல்ல வேணாம்.." என எழுந்தவன் காப்போர்டை திறந்து வெளியே எடுத்ததை அவளிடம் கொண்டு வந்து தந்தான்.

"வா! குளிச்சுட்டு இதை மாத்திட்டு வா.. அப்புறம் போய் சொல்லலாம்" என்று கூற,

"வாவ்! வாசு ப்பா செலக்ட்ஷனா சாரீ? கலக்குறேள்" என்றவளுக்கு அவன் தனக்காக தன்னுடைய பிறந்தநாளுக்காக என வாங்கி தந்ததில் என்பதில் என வேறெதுவும் நினைவில் இல்லாது அதை பார்த்துக் கொண்டிருக்க,

வாசுவிற்கோ அவளின் ஒவ்வொரு முறையும் ஆன வாசு ப்பா என்ற அழைப்பில் எதுவோ வானத்தை வசப்படுத்திய மகிழ்ச்சி தான்.

திக்ஷிதா வெளியே வரவும் அவளை அழைத்துக் கொண்டு வாசு அறைக்கு வெளியே வர, விஷ்வா, ஐஸ்வர்யா உபயத்தில் எல்லாம் தயாராய் இருந்தது பிறந்தநாள் விழாவிற்கு.

"ஹேய்! இதெல்லாம் எப்ப பிளான் பண்ணீங்க? சொல்லவே இல்லை?" என்ற திக்ஷிதாவிற்கு குதூகலமாய் இருந்தது.

"என்கிட்ட சொல்லவே இல்லையே அம்மு! பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்னைக்கு மாதிரி என்னைக்கும் சந்தோசமா இருக்கனும்" என்று பிறந்த நாளை சொல்லாததற்கு அன்னை முறைத்துவிட்டு வாழ்த்திட,

"ம்மா!" என்று அழைத்து விட்டவனுக்கு என்ன எப்படி என்று சொல்ல தெரியாமல் இருக்க, திரும்பி திக்ஷிதாவைப் பார்த்தான்.

தன்னவனிடம் சொல்லி விட்டவனுக்கும் மற்றவர்களிடம் சொல்ல வெட்கம் முன் வர,

"என்ன டா ஆச்சு ரெண்டு பேருக்கும்?" என்றார் சிவகாமி.

"அண்ணி!" என்று அழைத்த ஐஸ்வர்யா திக்ஷிதாவை குறுகுறுவென பார்க்க, ம்ம்ம் என திக்ஷிதா தலையசைத்தது தான் தாமதம்.

"ஹே! நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பா வர போறாங்க!" என்று ஐஸ்வர்யா கைத்தட்ட,

"என்ன!" என்ற விஷ்வா பின் புரிந்தவனாய்,

"அப்படியா?" என்று கேட்டு,

"சிவகாமி மம்மி! உங்க வாழ்த்து உடனே உண்மையாகி போச்சு பாருங்க" என்ற விஷ்வா வாசு கைகளைப் பிடித்து குலுக்க, சிரிப்புடன் அன்னையைப் பார்த்தான் வாசு.

"என்ன டா இவ்வளவு பெரிய சந்தோசத்தை சட்டுன்னு கொண்டு வந்து கையில தரிங்க? இப்ப நான் என்ன பண்ணுவேன்?" என்ற சிவகாமிக்கு கையும் காலும் ஓடவில்லை.

"அம்மு!" என திக்ஷிதா அருகே சென்று நெட்டி முறிக்க,

"இரு இரு சர்க்கரை முதல்ல எடுத்துட்டு வர்றேன்" என உள்ளே செல்ல இருந்தவரை,

"சந்தோஷத்துல மம்மிக்கு எல்லாம் மறந்து போச்சு போல!" என்ற விஷ்வா,

"மம்மி! இதுவும் ஸ்வீட் தான்.. ரெண்டு பேரும் சேர்ந்து கட் பண்ணி ஊட்டிக்கட்டும்" என்று விஷ்வா கூற,

"அட ஆமால்ல!" என்றவர்,

"வா வா வாசு! வந்து கட் பண்ணுங்க!" என்றவர் திக்ஷிதா கேக்கை வெட்டி முதலில் வாசுவிற்கு கொடுத்துவிட்டு சிவகாமிக்கு கொடுக்க, வாங்கிக் கொண்டவர் மருமகளுக்கும் ஊட்டிவிட்டு,

"இந்தா வந்துடுறேன்!" என்று விட்டு மொபைலோடு செல்ல, புரிந்த விதமாய் பார்த்து நின்றனர் இருவரும்.

அடுத்த அரை மணி நேரத்தில் அத்தனை அழைப்பும் வாழ்த்தும் என படு பிஸியாகிப் போனாள் திக்ஷிதா.

"மறக்க முடியாத முதல் பர்த்டே உங்களோட! எவர் ஸ்பெஷல் இல்ல?" என்ற திக்ஷிதாவிற்கு வாசு கண் சிமிட்ட, அங்கே அதீத மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர் அனைவரும்.

ஏழு மாதங்களுக்கு பின்பு:

"திக்ஷி! இதை குடிச்சுட்டு வெய்ட் பண்ணு.. நான்..." என்று வாசு சொல்லிக் கொண்டு இருக்க,

"அய்யோ படுத்தாதீங்க வாசு ப்பா.. எனக்கு ஒன்னும் இல்ல.. நல்லா தானே இருக்கேன்.. முடியலைன்னா நானே வந்து ஒரு ஓரமா சாஞ்சுக்குறேன்.." என்ற திக்ஷிதா முறைத்தாள் கணவனை.

"ப்ச்! சொல்றதை கேளு திக்ஷி.. அங்க ஒரே புகை.. பேபிக்கு ஒத்துக்கலைனா உனக்கு தான் மயக்கம் வரும்" என்றான் வாசு.

"புகை... மண்டபத்துல..?" என்று திக்ஷிதா அதற்கும் முறைக்க,

"ஆமா டி! அக்னி குண்டத்துல.." என்றவனை என்ன செய்ய என அவள் பார்க்க,

"திக்ஷி! இப்ப ஓகே வா?" என்று வந்தார் சிவகாமி.

"அய்யோ! என்னை முதல்ல இவர்கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போங்க மாமியாரே! மேடையில வர்ற புகைக்கு எல்லாம் மண்டபத்துல இருக்க விடாம ரூமுக்குள்ள அடைச்சு போட்டுருக்கார்.." என்று புகார் வாசிக்க,

"விடு டா! முடியலைன்னா அவளே சொல்லிட போறா!" என்று கூறி அழைத்து செல்ல,

"இங்க பாரு! ஏதாச்சும் பண்ணிச்சுன்னா உடனே சொல்லிடனும்.." என அவள் பின்னோடே வந்தான் வாசு.

"அம்மாடி! என்ன தான் டி பண்ணின அவனை.. இம்புட்டு பேசுறான்" என சிவகாமி மருமகளிடம் கேட்க,

"அவரு உங்களுக்கு தான் டெரர்.. எனக்கெல்லாம்... " என்றவள் வாயை மூடியவர்,

"என்ன இருந்தாலும் என் பையன்.. எதுவும் சொல்லிடாத" என்று கூறிட,

"ம்மா! அண்ணியோட அம்மா அப்பா வந்துட்டாங்க" என்று வந்தான் விஷ்வா.

"எங்க விஷ்வா!" என்று கேட்கவும் அவர்களும் வந்து மகள் அருகே அமர்ந்து கொண்டனர்.

விஷ்வா ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று. இன்னும் நான்கு நாட்களில் திக்ஷிதாவிற்கும் வளைகாப்பு.

அதனால் திருமணம் முடிந்து இருந்து அவளை அழைத்து செல்வது தான் அனைவரின் திட்டமே!

சத்தமே இல்லாமல் சரி என்று வளைகாப்பிற்கு சம்மதம் கூறி இருந்த வாசு மேல் திக்ஷிதாவிற்கு நம்பிக்கை இப்போதும் இல்லை.

நான்காம் மாதம் முதலே காலில் வீக்கம் கண்டு விட, ஒருவழியாய் கல்லூரியை அதற்கு முன் முடித்து விட்டாள் திக்ஷிதா.

காலில் அடிப்பட்ட அன்று விருதுநகர் அழைத்து வந்த வாசு அதன்பின் இன்னும் அவளை ஊருக்கு ஒரு நாளும் அனுப்பி வைக்கவில்லை.

"அவ அம்மா அப்பாக்கு கூட வச்சு பார்த்துக்கணும்னு இருக்கும் இல்ல வாசு.. ஒரு வாரம் கொண்டு வந்து விடு ப்பா" என்று சிவகாமி மகனிடம் கெஞ்ச,

"ம்மா! புரியாம பேசாதீங்க.. இங்கேயே ஒழுங்கா சாப்பிட மாட்றா.. அங்க வந்தாலும் நிச்சயமா நான் இல்லாம இருக்க மாட்டா.. வேணும்னே இப்ப உங்களை சீண்டி விட்டு எனக்கு போன் பண்ண சொன்னது உங்க மருமகள் தானே? நானே சரின்னு சொன்னாலும் அவ வரமாட்டா மா" என்று வாசு கூறிவிட,

"புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் இதே விளையாட்டா போச்சு!" என்றவர் அதன்பின் அழைக்கவே இல்லை.

ஆனால் திக்ஷிதாவின் பெற்றோர் விருப்பத்திற்காக ஏழாம் மாதம் வளைகாப்பிறகு கூட்டி சென்று பின் குழந்தை பேறு முடித்து அனுப்பி விடுவதாய் கூற, சரி என்ற சிவகாமியும் முடிவாய் வாசுவிடம் கூறிவிட்டார். அவனும் சம்மதம் என்றது தான் அவருக்கு ஆச்சர்யமே!.

துளசியும் அவர்கள் அருகே வந்துவிட, வாசு தான் அங்கே விஷ்வாவின் சகோதரனாய் சகலத்தையும் செய்து கொண்டிருந்தது.

நொடிக்கொரு முறை திக்ஷியையும் அவன் பார்த்துக் கொண்டிருக்க,

"இம்புட்டு பேர் இருந்தும் உன்னை காக்கா தூக்கிட்டு போயிருமாக்கும்.. அலம்பல் பண்ணுறான்" என்ற சிவகாமிக்கு,

"மாமி..!" என்று திக்ஷிதா ஆரம்பிக்க,

"வேண்டாம் தாயே! என் வாய் தான் கேட்க மாட்டுது.. இனி எதுவும் சொல்ல மாட்டேன்.. நீயும் என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்" என்று கூறவும் திக்ஷிதா சிரிக்க,

"பிரஷர் எல்லாம் நார்மல் தானே?" என்று கேட்டார் அங்கிருந்த ஒருவர்.

"இவளால அது மத்தவங்களுக்கு வந்தா போதாதாக்கும்?" என்று சிவகாமி கேட்க,

"மாமி! தெறி பதில்!" என்றாள் கண்ணடித்து திக்ஷிதா.

திருமணம் முடியவும் வாசு திஷிதாவுடன் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் அங்கிருந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டே வீடு வந்து சேர்ந்தான்.

தொடரும்..