அத்தியாயம் 28 final
விஷ்வா ஐஸ்வர்யா திருமணம் முடிந்த இரண்டாம் நாள் கிளம்பி சிவகாமி வீட்டிற்கு கிளம்பி இருந்தாள் திக்ஷிதா.
வாசு வளைகாப்பு அன்று வருவதாய் கூறிவிட,
"ஏதோ பிளான் பண்றீங்க தானே? அப்படி எல்லாம் என்னை தனியா.. அதுவும் ஏழாம் மாசமே அனுப்புற ஆள் இல்லையே நீங்க?" என்று இருவருக்குமான தனிமையில் திக்ஷிதா கேட்க,
அவளின் மேடிட்ட வயிற்றை பார்த்துக் கொண்டே, "இப்ப எந்த பிளானும் இல்லை திக்ஷி ம்மா! ஆபீஸ்ல கொஞ்சம் டைட் ஒர்க்.. விஷ்வாக்கு வேற டென் டேஸ் லீவ் குடுத்துருக்கேன்.. சோ எல்லாம் பார்த்துக்கணும்.. அதனால உன்னை பார்த்துக்காம விட்ர கூடாது இல்ல? அதான்.. சரினு சொன்னேன்.. அங்கேன்னா அம்மா அத்தைனு எல்லாரும் பார்த்துப்பாங்க தானே?" என்றதும் அவள் முறைக்க,
"என்னவாம்?" என்றவன்,
"வீக்கென்டுக்கு வந்துடுவேன் திக்ஷி.. இப்ப நான் பார்த்து ஓரளவு செட் பண்ணிட்டா பேபி பொறந்ததும் நான் லீவ் போட்டுக்கலாம்.. அதுக்குள்ள விஷ்வாவும் டெலிவரி லீவ்ல இருக்கிற ப்ரீத்தாவும் ஜாயின் பண்ணிடுவாங்க.. நானும் உன்னோடயும் பேபியோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம் இல்ல.. அதான் சரினு சொன்னேன்" என்றான் அவளின் பின்னின்று அணைத்து குழந்தையை பிடித்தபடி.
"ம்ம்ம்!" என்றவளுக்கு தான் எப்படி அவன் இல்லாமல் என்ற எண்ணத்தோடு அவன் எப்படி தான் இல்லாமல் என்ற எண்ணமும்.
"என்னவாம் முகம் தெளிஞ்ச மாதிரி இல்ல?" வாசு கேட்க,
"என்னவோ போ ப்பா! விட்டுட்டு போகவே மனசில்ல!" மறையாமல் உண்மையை கூறினாள்.
"எங்கடா போக போறோம்.. விட்டுட்டெல்லாம் இல்ல.. ஜஸ்ட் ஸ்மால் கேப்.. எல்லாம் சரி ஆகிடும்.. வீக்லி அட்டாண்டன்ஸ் உண்டு.. ஓகே!" சமாதானம் செய்தான் வாசு.
"நான் ஒன்னும் எனக்காக சொல்லல.. உங்களுக்காக தான் சொன்னேன்.. என்னனு இப்ப இருந்தே இங்க தனியா இருப்பிங்க? ஒன்பதாம் மாசத்துல வச்சிருக்கலாம் இந்த ஃபங்ஸன.." திக்ஷிதா கூற, உருகி தான் போனான் வாசு.
அவனின் கவலைகளை மறைத்து அவளை சமாதானம் செய்ய நினைக்க அவனுக்காகவே அவள் தயங்கி நிற்க என புரிந்தவனுக்கு அவளின் மேல் மேலும் மேலுமாய் அன்பு அள்ளிக் கொள்ள சொல்லியது.
"இப்படி எல்லாம் நினைக்காத திக்ஷி ம்மா.. பேபிக்காக தானே? அதோட மாமாவும் உன்னை அங்க வச்சு பார்த்துக்க ஆசைனு அம்மாகிட்ட பேசி இருப்பாங்க போல.. அவங்க ஆசைக்குன்னு வச்சுக்கோயேன்" என்றவன் அவள் கருத்தை இல்லை என்று கூறாமல் தவிர்ப்பதிலேயே திக்ஷிதாவிற்கு புரிந்தாலும் என்ன பேசி என்ன ஆக போகிறது என்று எண்ணாமலும் இல்லை.
"சரி! செக்கப் ஃபைல் எல்லாம் எடுத்தாச்சா? எதுவும் மிஸ் பண்ணல தானே?" என அவளை விலகி இருந்தான் வாசு.
அதற்கு மேல் அப்படியே நின்று இருந்தால் என தன் மேலேயே நம்பிக்கை இல்லாமல் சென்றிருந்தது.
"இன்னும் இடையில ஒரு நாள் தான்.. நாளை மறுநாள் நான் அங்கேயே இருப்பேன்.. ஹ்ம்! எதுவும் மிஸ் பண்ணிட்டா சொல்லு நான் எடுத்துட்டு வந்துடுறேன்.." என்று கூறி அவளை வெளியே அழைத்து வர,
"சரியா போச்சு போ! இந்தா அந்தான்னு அலம்பல் பண்ணி அவனே இப்ப தான் உன்னை அனுப்ப சம்மதிச்சி வச்சிருக்கான்.. நீ இப்படி உர்ருனு வந்தன்னா எங்க பாடு தான் சங்கடம்.. கொஞ்சம் சிரிச்சா மாதிரி வாடா அம்மு!" என்று திக்ஷிதா முகம் பார்த்து கூறினார் சிவகாமி.
விஷ்வாவும் வந்திருக்க, அனைவருடனும் திக்ஷிதாவை அனுப்பி வைத்து வந்த வாசு ஹாலிலேயே அமர்ந்துவிட்டான் உள்ளுக்குள் இருந்து மேலேறிக் கொண்டிருந்த உணர்வுகளுடன்.
"உமா! எதுக்கும் இனிமே உங்க போனை அடிக்கடி சுவிட்ச் ஆப் ஆகாம இருக்குதான்னு செக் பண்ணிக்கோங்க.. இதுங்க சண்டை போட்டுக்குங்க.. அப்புறம் அவன் உங்களுக்கு தான் கூப்பிடுவான்.. அதுவும் நிமிசத்துக்கு நிமிசம்.. எல்லாத்துக்கும் நாம தயாரா இருக்கனும்.. நம்மகிட்ட தான் அவன் பிடிவாதம் அடத்தை எல்லாம் காட்டுவான்" என சிவகாமி வழியில் கிண்டல் செய்ய,
"மாமி!" என முறைத்தாள் திக்ஷிதா.
"மேடம்க்கு இப்பவே பசலை நோய் வந்துடும் போலயே!" என கிண்டல் பேசி சிரித்து வர, திக்ஷிதாவுமே இலகுவாகி இருந்தாள்.
அடுத்த இரண்டாம் நாள் வாசுவுடன் துளசி, விஸ்வா, ஐஸ்வர்யா என அனைவரும் வந்து சேர, ரத்தினமும் விஷ்வாவும் எல்லா வேலைகளையும் முடித்து தயாராய் இருந்தது வளைகாப்பு வைபவம்.
"திக்ஷி! வாசு வந்தாச்சு..." என்ற குரலுக்கு வேகமாய் வந்தவள் கதவை திறக்க, கதவில் கைவைத்து இருந்தான் வாசுவும்.
"மெதுவா மெதுவா திஷி! இங்க தானே வர்றேன்!" என்றவன் அவளைப் பிடித்து அழைத்து வர,
"இதை காட்டலாம்னு தான்!" என்றவளை அப்போது தான் நன்றாய் பார்த்தவன் விசிலடித்து அவளை சுற்றி ரசித்துப் பார்க்க,
"ச்சோ! ரொம்பத்தான்!" என்று சிவந்த கண்ணங்களுடன் சென்று கட்டிலில் அமர்ந்தாள்.
"கல்யாணத்தன்னைக்கு சரியா பார்க்கல தான்.. ஆனா இப்ப குண்டு குண்டுன்னு.." என்றதும் திக்ஷி முறைக்க,
"கன்னத்தை சொன்னேன் திஷி!" என்று கிண்டல் செய்து,
"இந்த பட்டுப் புடவைல ரொம்ப ரொம்ப அழகா இருக்குற.." என்று கூறி நெற்றியில் முத்தமிட, அது தேவையாய் இருந்தது திக்ஷிதாவிற்குமே.
இதோ சிறப்பாய் வளைகாப்பு முடிந்து திக்ஷிதாவை அன்னை வீட்டிற்கு அழைத்து வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது.
வாரவாராம் வரும் வாசு அன்றும் வந்து ஞாயிறு மாலை தான் கிளம்பி இருக்க, திங்கள் காலையில் கதிர் வாசுவிற்கு அழைத்துவிட்டார் திக்ஷிதாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கூறி.
வாசு வந்து சேரும் முன்பே அவனின் மகள் இந்த உலகை காண ஆவலாய் வந்து சேர்ந்திருக்க, செய்தியை கேட்டவன் தன்னிரு உயிர்களை தேடி ஓடி வந்திருந்தான் மருத்துவமனைக்கு.
"வாசு! வந்துட்டியா டா!" என்ற சிவகாமிக்கு ஆனந்த கண்ணீர் தான்.
"நான் தான் என் பேத்தியை முதல்ல கையில வாங்கினேன் தெரியுமா! உனக்கு மாதிரியே பெரிய காது டா.. வா வா!" என்று பெருமையாய் கூறி குழந்தையாய் அழைத்து செல்ல,
"ம்மா! திக்ஷி?" என்றான் கேள்வியாய்.
"வலி வந்துமே ஆபரேஷன் பண்ண வேண்டியதா போச்சு தம்பி.. இன்னும் மயக்கம் நல்லா தெளியல.. அப்பப்ப எழுந்து பார்த்து தூங்கிடுறா" என்றார் உமா.
அறைக்குள் சென்றதும் திக்ஷிதா அருகே வாசு செல்ல, ஓரமாய் தொட்டிலில் இருந்த குழந்தையை கைகளில் ஏந்தி வாசுவிடம் கொண்டு வந்திருந்தார் சிவகாமி.
"திக்ஷி ம்மா!" என்றவன் வருடலில் லேசாய் அசைந்தவள் முகசுருக்கி அவள் வலியை வெளிப்படுத்த, வாசுவும் அதில் கவலை கொண்டான்.
"வலி எவ்வளவு நாள் இருக்கும் ம்மா?" வாசு அன்னையிடம் கேட்டபின் தான் அவர் கைகளில் இருந்த தன் மகவையைக் கண்டு, புன்னகையோடு கைகள் நடுங்க வாங்கியவன் நெஞ்சில் அத்தனை அத்தனை மகிழ்ச்சி குவியல்கள்.
"ஆபரேஷன்னாலே வலி இருக்க தான் செய்யும் வாசு.. இனி தான் அவளுக்கு ஒன்னொன்னும் பார்த்து பார்த்து செய்யணும்" என்று பேசியபடி இருக்க, அந்த பேச்சு சத்தத்தில் மெதுவாய் கண் விழித்தாள் திக்ஷிதா.
"திக்ஷி!" என அவளருகில் குழந்தையோடு அமர,
"பாப்பா பார்த்தியா டா.. வலிக்குதா?" என்றவன் கேள்விக்கு தலையசைத்தவள் குழந்தையையும் கணவனைமாய் பார்க்க,
"என்னால தானே?" அவள் வலியில் முகம் மீண்டும் சுருங்கக் கண்டு பாவமாய் வாசு கேட்க,
"இல்லனுவீங்களா?" என்றாள் வலியோடே மெல்லிய குரலில்.
எபிலாக்:
"வர்ஷி ம்மா!" என்ற குரலுக்கு, "ப்பா!" என்று இரண்டு வயது குழந்தை தளிர் நடையிட்டு வர, அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றியவன்,
"அம்மா எங்கே டா?" என்றான்.
குழந்தை கை காட்டிய திசையில் முகத்தை தூக்கிக் கொண்டு நின்றிருந்தாள் திக்ஷிதா.
"அண்ணி! இன்னைக்குமா?" என்று சிரித்தபடி கடந்து சென்றாள் ஐஸ்வர்யா.
"போலாமா திக்ஷி?" என்று வேறு எதுவும் தெரியாதவனாய் கேட்க,
"இருந்தாலும் ஓவர் தான் அப்பாவும் பொண்ணும்.. எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. மறந்தா மாதிரியே தினமும் பண்றீங்க.." என ஆரம்பிக்க,
"என்னவாம் திக்ஷிக்கு?" என்றான் அவள் தோளில் கைபோட்டு.
"கையை எடுங்க.. உள்ள வரும் போது அவ பேரோட தான் வருவீங்களா? அவளும் நீங்க வர்ற வரை செல்லம் கொஞ்சிட்டு நீங்க வந்ததும் என்னை யாரோன்ற மாதிரி பாக்குறா.." என்று மகளுடனே உரிமைப் போராட்டம் நடத்த, அப்படி சிரித்தான் வாசு.
"என்னவோ வேற ஒரு பொண்ணை நான் கூப்பிட்ட மாதிரி தான்.. நம்ம பொண்ணு டி!" என்றவன் குழந்தை வர்ஷிதாவோடு நெற்றி முட்ட,
"பார்த்திங்களா பார்த்திங்களா! இதெல்லாம் தான்.. இதெல்லாம் எனக்கு நீங்க தந்தது?" என குற்றப் பத்திரிக்கை நீட்ட,
"இதுக்கு தான் இவ்வளவு அக்கப்போரா? சரி விடு இன்னைக்கு நைட் பார்த்துக்கலாம்.." என்று கூறி மகள் அறியாமல் கண்ணடித்தவனை திக்ஷிதா முறைக்க,
"பூஜைக்கு கிளம்பி இருக்கோம்.. இல்லைனா கூட.." என வாசு இழுக்க,
"கிளம்புங்க ராசா! அடியேய்! உனக்கு இருக்கு டி" என மகளையும் கூறிவிட்டு முன் நடக்க, மனைவியை கிண்டல் செய்து பின் தொடர்ந்தான் வாசு.
ரத்தினம் கதிர் உடன் விஷ்வா நின்று பேசிக் கொண்டிருக்க, "இன்னைக்கும் லேட்டா தான் வருவியா டா?" என்ற சிவகாமி அனைத்தையும் தயார் செய்து வை,த்திருக்க, வர்ஷிதாவிற்கு காதணி விழா ஆரம்பம் ஆனது குலதெய்வ கோவிலில்.
துளசி விஷ்வா ஐஸ்வர்யா என அனைவரும் திக்ஷிதாவுடன் முந்தைய நாள் வந்திருக்க, வாசு இன்று காலையில் தான் ஊரில் இருந்து வந்ததே.
"எப்படி சிஸ்டர் அரியர் இல்லாம கிளியர் பண்ணனீங்க? நானெல்லாம் காலேஜ் முடிக்கவே ஒரு யுகம் ஆச்சு!" விஷ்வா கூற,
"காலேஜ்க்கு படிக்க போயிருந்தா அது அது அந்தந்த காலகட்டத்துல நடந்திருக்கும்.. நீ சைட் அடிக்கல்ல போயிருக்க.." என்று திக்ஷிதா பதில் கொடுக்க,
"கழுதை வயசாச்சு.. இன்னும் எதிர்த்து பேசுறதை மட்டும் நிறுத்த மாட்டுற திக்ஷி!" என உமா கண்டிக்க,
"அட அவளை அவ போக்குல விடுங்க நீங்க!" என வக்காலத்திற்கு வருவார் சிவகாமி.
"உன்னை காலேஜ்க்கு பேபி பேக்கோட அனுப்ப முடியாமலே போச்சே திக்ஷி!" என்று கவலையாய் ஆரம்பித்த வாசு,
"நீ வேணா பிஜி கோர்ஸ் பண்றியா?" என்று கேட்க,
"எதுக்கு? அங்க நீங்க சொல்லிக் குடுக்குறதெல்லாம் இருக்காது.. ஆளை விடுங்க.." என்பாள்.
அன்னைக்கும் மகளுக்கும் வாசு என்று வந்து விட்டால் அத்தனை போட்டி நடக்கும். அதில் பெரும்பாலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என ஜெயிப்பது என்னவோ திக்ஷிதாவாய் தான் இருக்கும்.
"நம்ம பொண்ணு டி!" என்றவனையும் முறைக்க தான் செய்வாள்.
குழந்தையுடன் வாசு திக்ஷி என குடும்பமாய் மனதில் வேண்டுதல் வைக்க, அவர்களுக்கான ஆசிகள் மேலிருந்து மழையாய் தூறல்களைப் பொழிந்தது.
***** சுபம்.. *****