அத்தியாயம் 26 pre final
"இப்படி தான் நேத்து முழுக்க இருந்தானா?" சிவகாமி மருமகளிடம் கேட்க,
"இன்னைக்கு கொஞ்சம் கம்மி தான் மாமி!" என்றவளை முறைத்தான் வாசு.
"இதுக்கு தான் நான் பார்த்துக்குறேன்னு கூட்டிட்டு வந்தியா வாசு?" என்று மகனிடம் பாய்ந்தார்.
"அவ சொல்றானு நீங்களும் கேட்டுட்டு இருக்கீங்களே ம்மா! நேத்தெல்லாம் நான் லேப்டாப் எடுக்கவே இல்லை.. அவகிட்ட வேணா கேளுங்க!" என்று வாசு கூற,
"உனக்கு எத்தனை நாள் ஆசை டி.. என் புள்ளய நான் திட்டனும்னு ஆபீஸ் வேலையை விட்டுட்டு உன்னை கவனிச்சிருக்கான்.. நான் வந்ததும் வராததுமா அவனையே புகார் வாசிக்குற?" என திக்ஷிதாவிடம் திரும்பி இருந்தார்.
"மாமி! லேப்டாப் எடுக்கலை தான்.. ஆபீஸ் போகல தான்.. ஆனாலும் உங்க பையன் பியூர் சாம்பிராணி!" என்றவளை,
"அடி! உன்னை!" என்று முதுகில் போட்டார்.
"இன்னும் நல்லா போடுங்க.. மாத்திரை போட அடம்.. சாப்பிட அடம்.. ஒரே நாள்ல என்னை உண்டு இல்லைனு பண்ணிட்டா" என்றவன் லாப்டாப்பில் இருந்து எழுந்து கிட்சனுள் சென்றான்.
வாசு திக்ஷிதாவுடன் வந்த முதல் நாள் விட்டு இரண்டாம் நாள் காலையே வந்துவிட்டார் சிவகாமி திக்ஷிதாவை பார்த்துக் கொள்ள என.
உமா தானும் வருவதாய் சொல்ல, "நான் ரெண்டு நாள் தங்கி பார்த்துக்குறேன்.. அப்புறம் நீங்க ரெண்டு நாள் தங்கிட்டு வாங்க.. அப்ப தான் நாம நம்ம வீட்டுக்காரங்களை பார்த்துக்கவும் வசதியா இருக்கும்" என்று சிவகாமி சொல்ல, அதுவும் சரி என்றே தோன்றியதால் இப்போது சிவகாமி மட்டும் வந்திருந்தார்.
"நீ வேணா ஆபீஸ் போயேன் வாசு!" என சமையலறை வந்து சிவகாமி கூற,
"இருக்கட்டும் ம்மா.. பார்த்துக்கலாம்" என்றவன் மனதில் இருப்பதை என்று தான் கூறி இருக்கிறான் என நினைத்து விட்டு விட்டார்.
"காலை அசைக்க முடியுதா அம்மு?" என மருமகளிடம் அவர் கேட்க,
"அதான் மூணு நாளைக்கு அசைக்கவே வேண்டாம்னு டாக்டர் சொன்னாங்களே! அதான் அசைக்க விடல.. நாளைக்கு ட்ரெயினிங் குடுத்துக்கலாம்" என்றான் வாசு.
"ட்ரெயினிங் யாரு நீங்க குடுக்க போறிங்களா?" திக்ஷிதா கேட்க, வில்லங்கமாக தான் எதாவது கூறுவாள் என நினைத்ததை பொய்ப்பிக்காது பல்லைக் கடிக்க வைத்தாள்.
"வேற நல்ல கோச் வந்தா பெட்டெரா இருக்கும்" என்றவளை அன்னை முன் வைத்து எதுவும் கூற முடியாமல் லேப்டாப்பின்னுள் நுழைந்தான்.
"அவனை ரொம்ப தான் படுத்துற டி" என்றவர் அவளுடன் பேசியபடி காய்களை எடுத்து வந்து அவளருகே வைத்து நறுக்கினார்.
வாசுவின் சிந்தனை முழுதும் மறுநாளில் தான் நின்றது. மூன்று நாட்கள் ஏற்கனவே நினைத்தபடி அவளைப் பார்த்து கொள்ளும் வேலையை செயல்படுத்த தான் இப்போதும் வீட்டில் இருந்தான்.
அன்னை வருவார் என தெரிந்தாலும் எதிர்பார்த்தது என்னவோ நாளை தான்.
நாளை என்ன செய்யலாம் எப்படி அவளை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தபடி வாசு இருக்க, திக்ஷிதா எண்ணமும் அவளின் அடுத்த நாளில் தான் நின்றது.
நிச்சயம் இரண்டுமே அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை என நினைத்தவள் அவனிடம் எப்படி கூற என யோசித்தபடி என்றாலும் சிவகாமி உடன் வளவளத்தபடி இருந்தாள்.
இரு நாட்களுக்கு முன் அவள் விபத்தில் மாட்டிக் கொண்ட அன்று தான் பேசினான் இந்த படிப்பை முடிப்பதை பற்றி.
அப்போதெல்லாம் அதை மறந்திருந்தவளுக்கு இன்று காலையில் தான் அதுவும் காலை நனைக்கவே கூடாது நானும் வருகிறேன் என குளிக்க வைக்க நின்றவனின் அக்கப்போரில் தான் திடீரென ஏதோ தோன்ற நாட்களும் சமமாய் வந்திருந்தது.
அவனிடம் பேச நினைப்பதற்குள் சிவகாமியும் வந்து சேர்ந்துவிட, முதலில் அவன் தான் அறிய வேண்டும் என்ற எண்ணம்.
அவனுக்கு கூறிவிட்டு அவன் முகத்தின் பாவனைகளை அறிந்து கொள்ள மனம் துடிக்க, எண்ணிக்கைக்கு தேதி பார்த்தவளுக்கு தான் அடுத்த நாள் தன்னுடைய பிறந்தநாள் என்பதும் நியாபகம் வந்தது.
படிப்பு என்று பேசுபவனிடம் அதற்குள் இதை கூறினாள் என நினைக்கையில் சிரித்தவள் மனம் பொங்கினாலும் முடிவெடுத்துவிட்டாள் அடுத்த நாள் தானே வீட்டில் பார்த்துவிட்டு அவனிடமே முதலில் கூறுவது என்று.
உறுதியாய் தோன்றினாலும் கையில் ஆதாரம் என்று வேண்டுமே! என நினைத்தவள் ஐஸ்வர்யா மூலம் அதை சாதித்துக் கொண்டாள்.
மாலை ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு வந்த விஷ்வாவை வாசு முறைக்க,
"சத்தியமா உங்க மனைவி மிஸ்ஸஸ் வாசு தேவன் தான் இவளை பார்க்கணும்னு சொன்னாங்க!" என்று கற்பூரம் இல்லாத குறையாக விஷ்வா கூற,
"அவளை சும்மா சொல்லிட்டு இருக்காத.. உன்னை எனக்கு தெரியும்" என்றான் வாசு.
"சத்திய சோதனை டா விஷ்வா.. உண்மையை சொன்னாலும் நம்ப மாட்டுறாங்களே!" என்று விஷ்வா புலம்ப, வாசு முன் பவ்யமாய் நின்ற ஐஸ்வர்யா அவனை தாண்டிக் கொண்டு உள்ளே செல்லவும் மகிழ்ச்சியாய்
"அண்ணி!" என்று வர,
"ஷ்ஷ்!" என்று வாயில் விரல் வைத்து காட்டிய திக்ஷிதா "அவன்கிட்ட உளறல தானே? முதல்ல நான் கண்ஃபார்ம் பண்ணிக்குறேன்" என்று கூற,
"நான் யாருக்கும் சொல்லல.. சீக்கிரம் குட் நியூஸ் சொல்லுங்க" என்று கூறி வாங்கி வந்ததை திக்ஷிதாவிடம் கொடுத்தாள் ஐஸ்வர்யா.
"வா டா விஷ்வா! எப்ப வந்த? அம்மா எப்படி இருக்காங்க?" என்ற சிவகாமி அப்போது தான் திக்ஷிதா அருகே இருந்த பெண்ணை கவனித்தார்.
"வணக்கம் அத்தை.. இல்ல அம்மா!" என்று அவள் உளற,
"நீ தானா ம்மா அது!" என்று சிரித்தவர்,
"உனக்கு தைரியம் தான் டா.. வாசு சொன்னான்" என்று கூற,
"ஏதோ என்னால முடிஞ்சது!" என்று நெளிந்தவண் தலையில் கொட்டியவர்,
"உனக்கு சேட்டை அதிகம்னு சொன்னான்.. கற்பனை பண்ணிக்காத" என்று கூற,
"பல்பு குடுக்கிறதே மொத்த குடும்பத்துக்கும் வேலையா போச்சு!" என்று அமர்ந்தான் திக்ஷிதா ஐஸ்வர்யா அருகே.
பேச்சுக்கள் மூவருக்கும் பொதுவானதாய் மாறிவிட சில நிமிடங்களில் எல்லாம் வாசு அழைத்துவிட்டான் விஷ்வாவை.
"ஐஸ்வர்யாவை வீட்டுல விட்டுட்டு வா.. நேரம் இருட்ட போகுது.." வாசு கூற,
"யார் வீட்டுல பாஸ்?" என்றவனை தீயாய் வாசு முறைக்க,
"கிளம்பிடு டா!" என்று விஷ்வா ஐஸ்வர்யாவுடன் வெளியே வர,
"ஒரு நிமிஷம்!" என்று பின்னோடே வந்தவன்,
"நாளைக்கு திக்ஷிக்கு பர்த்டே.. மார்னிங் வீட்டுல சொல்லிட்டு வா" என்று ஐஸ்வர்யாவிடம் கூற,
"ஓஹ்! அதுவும் நாளைக்கு தானா?" என்றாள் ஐஸ்வர்யா ஆர்வ மிகுதியில்.
"என்ன?" வாசு புரியாமல் கேட்க,
"இல்ல இல்ல.. ஒன்னும் இல்லை அண்..ணா" என திக்கியவள் "நான் கிளம்புறேன்" என்று விஷ்வா வண்டியில் ஏறி இருக்க, தோள்களை குலுக்கிக் கொண்டான் வாசு.
"விடு வாசு நான் பன்றேன்!" சிவகாமி கேட்க,
"மாமி! நானே பண்ணிக்குவேன்.. என் கை நல்லா தானே இருக்கு?" என திக்ஷிதா கூற,
"ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க!" என்றவன்,
"கட்டு போட்டிருக்கறதை எடுத்துட்டு அந்த இடத்துல லைட்டா துணிய வச்சு ஒத்தணும் மறுபடியும் கட்டு போடணும்.. இதுக்கு ஏன் ஆளாளுக்கு நான் நான்னு குதிக்குறிங்க.. ம்மா நீங்க போய் தூங்குங்க.. நேரமாச்சு.. நாளைக்கு ஒரு நாள் நான் வீட்டுல இருந்து பார்த்துப்பேன்.. அடுத்து அவளுக்கு சரியாகுற வரை நீங்களும் அத்தையும் தான் பார்த்துக்கணும்" என்ற வாசுவின் நீளமான பேச்சில் வாய் மூடி சென்றுவிட்டார் சிவகாமி
"உனக்கு என்ன? உனக்கு நீயே செஞ்சு சரியா செய்யாம விட்டா அதுவும் ப்ரோப்லேம் தான்.. உனக்கு சரியாகுற வரை சொல்றதை கொஞ்சம் கேளு திக்ஷி!" என்றவன் பாதி வேலையை முடித்திருந்தான்.
"ஹ்ம்! முடிஞ்சது!" என்று அவள் முகம் பார்க்க, தலையணையில் கை ஊன்றி முகத்தில் வைத்து அவனைப் பார்த்து சிரித்திருந்தாள்.
"என்ன ஒரு மார்க்கமா சிரிக்குற. எதுவும் பண்ண முடியாதுன்னு தானே?" என்றவன் அவள் அதிகமாய் சிரிக்கவும்,
"நானே சரண்டர் ஆகி ரெண்டு நாளுல கூட்டிட்டு வந்திருப்பேன்.. சர்ப்ரைஸ்னு கிளம்பி வந்து இப்படி ஷாக் குடுத்து உத்து பார்த்துட்டு இருக்க வேண்டியதா இருக்கு" என்று முறைப்பும் ஆதங்கமுமாய் கூற,
"இங்க வாங்களேன்!" என்று அவள் அழைக்க,
"என்ன?" என அவள் அருகில் அமர்ந்தான்.
"காலுல தான் அடி!" ரகசியம் போல அவன் காதில் கூற,
"அடிங்.. உன்னை.. வெறுப்பேத்தரியா.. மொத்தமா வாங்குவ.." என்றவன் தலையணையை காலுக்கு அருகே வைத்து அவளருகே அணைத்தபடி படுத்துக் கொள்ள, சிரித்துக் கொண்டே இருந்தாள் திக்ஷிதா.
"உசுப்பேத்தாம தூங்கு டி!" என்றவன் கவிழ்ந்து படுத்து இறுக்கமாய் அணைத்துக் கொள்ள, அவனை சீண்டியபடியே விளையாடி உறங்கி இருந்தாள்.
"ஹாப்பி பர்த்டே திக்ஷிதா வாசு தேவன்!" என்று வாசு கூறி எழுப்ப, உடனே கண் விழித்தவளுக்கு அத்தனை புத்துணர்ச்சி.
"ஓய்! உங்களுக்கு எப்படி தெரியும்? அன்னைக்கு கேட்டப்ப தெரியாதுன்னு சொன்னிங்க தானே?" என மலர்ச்சியாய் கேட்க,
அவளை எழுப்பி அமர வைத்தவன், "அதுக்காக தெரியாமலே இருந்துடுவாங்களா மக்கு!" என்று கூற, அவளுக்கும் இப்பொழுதே கூறும் ஆவல் வந்தது.
தானே எழ இருந்தவளை அவன் கைப்பிடிக்க,
"இனி நடக்க ட்ரை பண்ணலாம் திக்ஷி.." என்று காலை ஊன்ற வைத்தான்.
வலித்த போதுமே வேகமாய் அவள் நடக்க, "பொறுமை திக்ஷி!" என்றவன் பல் துலக்கவென நிற்க,
"இல்ல இல்ல.. நான் பார்த்துக்கறேன்!" என்றாள்.
"சரி டோர் லாக் பண்ணாத!" என்று கூறியவன் உள்ளே விட்டு வெளியே நிற்க,
"வெளில போயிடாதிங்க!" என்று சத்தமாய் கூற,
"போகலம்மா!" என்றான் சிரித்து.
நினைத்தது சரி தான் என்பதில் அத்தனை மகிழ்ந்து போனவள் கதவில் கைவைக்க, வாசு திரும்பவும்,
"வாசு ப்பா!" என தாவி விட்டாள் அவன் மேலேயே!
"ஹேய் பார்த்து திக்ஷி! கவனிக்காம விட்ருந்தேன்னா.." என்று அவளைப் பிடித்திருந்தவன் அவள் அழைப்பை கவனிக்கவில்லை..
"அவன் இலகுவாய் அவளை விட, வாசுவை இன்னும் இறுக்கமாய் அணைத்து இருந்தவள் செயலில்,
"திக்ஷி!" என்று அவன் விலகப் பார்க்க,
"வாசு ப்பாக்கு பொண்ணு புடிக்குமா பையன் புடிக்குமா?" என்றாள் அதே நிலையில் இருந்து.
கவனித்து விட்டான் நொடியில் கணித்தும் விட்டான். சட்டென பேசிட முடியாமல் அதிர்ந்தும் மகிழ்ந்தும் என வாசு நிற்க,
"சொல்லுங்க வாசு ப்பா!" என்றவள் சிணுங்களில்,
"திக்ஷி!" என அவள் முகம் பார்த்தவன் கைகளில் அதை தர, பேச்சே இல்லை அவனிடம்.
தொடரும்..